Monday, April 9, 2012

" 3" படத்தை பலரும் எதிர்ப்பது ஏன்?

"3 "ல் கொஞ்சமாய் இருக்கும் நல்ல விஷயங்களை முதலில் பார்த்து விடலாம்.

தனுஷ் மற்றும் ஸ்ருதி பள்ளி மாணவர்களாகவும், அதன் பிறகும் கூட அந்த பாத்திரத்துக்கு சரியான தேர்வு. இருவரின் நடிப்பும் மிக அருமை. நண்பனாக வரும் சுந்தர் பாத்திரமும் அவர் நடிப்பும் கூட இரண்டாம் பாதியில் ஜொலிக்கிறது.

தனுஷ் நிச்சயம் மிக நன்றாக நடித்துள்ளார். "எத்தனை முறை தான் பைத்தியமாக நடிப்பார்" என்று கூற்று உண்மை தான் எனினும் தனுஷின் நடிப்பில் எந்த குறையும் இல்லை.

இசை அமைப்பாளர் அனிருத் ஒரு பாடல் வொண்டர் அல்ல ! இது "கள்ளழகா" பாடலிலும் பின்னணி இசையில் சில இடங்களிலும் தெரிகிறது.

முதல் பாதியில் சிவகார்த்திகேயன் காமெடி தமிழுக்கு இன்னொரு சந்தானம் கிடைக்க வாய்ப்புண்டு என்று சொல்கிறது.

மளிகை கடை லிஸ்ட் போல நீளும் மைனஸ்களுக்கு வருவோம்

பாரதிராஜா என்கிற இயக்குனர் 16 வயதினிலே, முதல் மரியாதை என்ற காவியங்களை எடுத்திருந்தாலும், விடலைகளின் காதலை வைத்து "அலைகள் ஓய்வதில்லை " எடுத்தவர் என்பதால் அவர் மீதான மரியாதை பெரிதும் குறைகிறது . பத்தாவது படிக்கும் பள்ளி மாணவர்கள் காதலித்து, பின் ஓடி போய் கல்யாணம் செய்வதை காண்பித்து நூற்றுகணக்கான இளைஞர்களை அந்த படம் கெடுத்தது. அதே பணியை தான் இந்த படத்தின் முதல் பகுதியும் செய்கிறது.

கல்லூரி காதலையாவது ஓரளவுக்கு ஏற்று கொள்ளலாம். பள்ளி காதலை சினிமாவில் பார்க்கும் போதெல்லாம் எனக்கு பற்றி கொண்டு வரும் !

பள்ளி காலத்தில் காதல் வருவதே இல்லை என்று சொல்லவில்லை. அது "Calf love " ! காதல் என்றே தெரியாமல் ஒரு அலை அடித்து விட்டு போய் விடும். அவ்வளவு தான் !

பள்ளி பருவ காதல் திருமணம் வரை செல்வது ஒரு சதவீதத்துக்கும் குறைவே. இந்த படம் எடுத்த ஜோடிகளான ஐஸ்வர்யாவுக்கும் சரி தனுஷுக்கும் சரி பள்ளி பருவ காதலா திருமணத்துக்கு இட்டு சென்றது? இருவரும் பள்ளி பருவ காதலுக்கு டாட்டா சொல்லி விட்டு தானே, வளர்ந்த பின் தன் ரசனைக்கேற்ற ஜோடி தேர்ந்தெடுத்தனர்?

சரி .. பள்ளி பருவ காதல் திருமணம் வரை செல்லாது என்பதையும் கூட விட்டு விடுவோம். நாம் சொல்ல வரும் விஷயம் அதை விட கனமானது

சினிமா என்பது எவ்வளவு பெரிய மீடியா ! அதை எவ்வளவு நல்ல விதத்தில் பயன்படுத்தலாம் ! அதை விட்டு விட்டு, பள்ளி பருவ காதலை பெருமை படுத்தி காட்டுவதெல்லாம், பள்ளி மாணவர்களுக்கு அந்த உணர்வுகளை தூண்டும் வேலையை மட்டுமே கச்சிதமாய் செய்யும் !

சற்று குற்ற உணர்வோடு காதலிக்கும் பள்ளி மாணவனுக்கும் " இது தவறல்ல; ஜமாய் !" என்று சொல்கிறார்கள் சினிமா நடிகர்கள். அவர்களுக்கு சினிமா மூலம் கோடிக்கணக்கான பணம் கிடைத்தால் போதும் ! படம் ஓடினால் சரி ! படத்தை பார்த்து சமூகம் எக்கேடு கேட்டால் தான் என்ன !

இந்த உணர்வுகள் தான் முதல் பகுதி முழுதும் மனதை ஆக்கிரமித்தது.

அடுத்த பகுதிக்கு வருவோம். இது தனுஷுக்கு இருக்கும் மன வியாதி பற்றியும் அவர் தற்கொலை செய்வது பற்றியும் விரிவாக பேசியது.

மனிதன் ஏற்கனவே எத்தனையோ துன்பத்தில் வாடுகிறான். அதிலிருந்து மறக்க தான் அவன் சினிமா, பாடல் இவற்றை நாடுகிறான். அங்கு வந்து இப்படி ஓவர் டோஸில் சோகம் பிழிந்தால் என்ன ஆவது ?

ஸ்ருதி இடைவேளைக்கு பின் தொடர்ந்து அழுகிறார். படம் இழுக்கிறது. தனுஷ் கழுத்தை அறுத்து கொள்ள நெடு நேரம் எடுக்கிறார் போன்ற குறைகளை எல்லாம் விட்டு விடுவோம். மீண்டும் நான் பேச போகும் காரணமே வேறு.

தற்கொலை எண்ணம் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எப்போதோ ஒரு முறை எட்டி பார்க்கவே செய்யும். சில குறிப்பிட இடங்களிலும் குறிப்பிட்ட தருணங்களிலும் அந்த எண்ணம் ஒவ்வொரு மனிதனுக்கும் வரவே செய்கிறது. ஆனால் அந்த இடங்கள் அல்லது கணங்கள் என்ன என்பதை கூட நான் இங்கு எழுத கூடாதென நினைக்கிறேன். காரணம் இதை படிக்கும் யாரோ ஒரு மனிதர், அதே போன்ற தருணத்தில் இருக்கும் போது நான் எழுதிய வரிகளும் தற்கொலை எண்ணம் தந்து விட வாய்ப்பு உண்டு என்பதால் தான்.

நமது ப்ளாகில் விமர்சனத்தை அதிகபட்சம் ஆயிரம் பேர் வாசிக்கலாம். இத்தகைய ஒரு ப்ளாகருக்கு இருக்கும் இந்த சமூக அக்கறை, லட்சகணக்கான பேர் பார்க்கும் படம் இயக்குவோருக்கு எங்கு போனது?

தனுஷின் தற்கொலை எண்ணம் பற்றி இவ்வளவு விரிவாய் பேசியது வீக்கான மனநிலை கொண்டோரை தற்கொலை எண்ணத்துக்கு அவ்வப்போது தூண்ட நிச்சயம் வாய்ப்பு உண்டு. என்ன தான் அதனால் குடும்பம் எவ்வளவு கஷ்டபடுகிறது என்று காட்டினாலும் மனம், தனக்கு தேவையானதை மட்டுமே எடுத்து கொள்ளும்.

தற்கொலை பற்றிய செய்திகள் அடிக்கடி பத்திரிக்கைகளில் வருகிறது. இதுவே வீக்கான மனதில் உள்ள பலருக்கு அந்த எண்ணத்தை தூண்ட வாய்ப்பு உண்டு என்பதால், அத்தகைய செய்திகளை அதிகம் வெளியாடாதீர்கள் என சில தின செய்தி தாள்களுக்கு கடிதம் கூட முன்பு அனுப்பியதை இங்கு பகிர்ந்திருந்தேன்.

இத்தகைய விஷுவல் மீடியாவில் தற்கொலையை இவ்வளவு விரிவாய் காட்டுவது நிச்சயம் தவறே !

இந்த படத்தின் முதல் பாதி நன்றாய் இருந்தது. அடுத்த பாதி தான் கொடுமை என்று பலர் கூறினர் ! இது தவறு !

3 - முதல் பாதி - பள்ளி மாணவர்களை சீரழிக்கிறது. அடுத்த பாதி - தற்கொலைக்கு தூண்டுகிறது இத்தகைய படத்தை முழுவதுமாய் புறக்கணிப்பதே நல்லது !

46 comments:

  1. புறங்கணிக்கனுமா? சரி நான் இன்னும் பார்க்கலை....

    ReplyDelete
  2. இத்தகைய படங்களுக்கு 'விமர்சனம்' (அது நெகடிவாக இருந்தால் கூட) போடுவதையே கூட தவிர்க்க வேண்டும் என்பதே என் பணிவான வேண்டுகோள்.

    ReplyDelete
  3. hello boss,, cinema just for entertainment thats all, ungalukku thevaiyana mathiri real ah kaata mudiyathu,, 3hrs nalla parunga pothum, oru chinna kurmpadam edunga paakalam.,

    ReplyDelete
  4. oru film ellarukum pudikanum nu artham illaiye,,!! ovvorutharukum oru oru thought irukum,,,

    ReplyDelete
  5. திரு ஸ்மார்ட் :

    முதல் முறை கமன்ட் போட்டதற்கு நன்றி நண்பரே!

    மதன், விகடன், குமுதம் எல்லாரும் தான் விமர்சனம் செய்கிறார்கள். அவர்களை போய் படம் எடுக்க சொல்ல முடியுமா? என் வேலை விமர்சனம் செய்வது தான். இதற்கு நான் உண்மையாய் இருந்தால் போதும். படம் எடுப்பவர்கள் மட்டும் தான் விமர்சனம் செய்ய வேண்டும் என சொல்ல முடியமா? காசு தந்து படம் பார்க்கும் எவரும் விமர்சனம் செய்யலாம். அதற்கு தைரியம் இருந்தால் தான் படத்தை வெளியிட வேண்டும்.

    படம் எடுப்பவர்கள் தன் படத்தை பார்த்து பள்ளி மாணவர்கள் கெட்டு போவார்கள் என்று கூட யோசிக்க மாட்டார்களா?இத்தனைக்கும் கொலைவெறி பாடலால் மாணவர் கூட்டமே இந்த படத்தை ஆவலாய் எதிர் பார்த்தது. தியேட்டருக்கு வந்த பெற்றோர் "ஏன் தான் இந்த படத்துக்கு கூட்டி வந்தோமோ " என புலம்பியதை நேரில் பார்த்தேன் !

    இங்கு உள்ளது என் கருத்து. இந்த படம் அருமை என நினைத்தால் நீங்கள் தனியாய் பாராட்டி எழுதலாம்.

    ReplyDelete
  6. மிக மிக அருமையான, சமூகப் பொறுப்புடன் கூடிய விமர்சனம்...

    ReplyDelete
  7. சரியான கருத்துக்கள்...!

    ReplyDelete
  8. // சினிமா என்பது எவ்வளவு பெரிய மீடியா ! அதை எவ்வளவு நல்ல விதத்தில் பயன்படுத்தலாம் ! //

    திருட்டுப் பசங்க....
    எவன் சீரழிஞ்சு போனா எனக்கென்ன..
    கல்லா கட்டுவதே எனது நோக்கம்னு இருக்கறவங்க காதுல இது எங்க விழப் போகுது..

    கடைசி வரிகள்.. செம..
    இந்த வரிய போல்ட் லெட்டர்ல தலைப்பா எழுதலாம் இந்தப் போஸ்டுக்கு..

    ReplyDelete
  9. @SmArt....

    ஒரு படம் எல்லோருக்கும் பிடித்த மாதிரி இருக்கும் என்று சொல்ல முடியாதுதான், ஆனால் எல்லோரும் ஏன்டா இந்தப் படத்துக்கு வந்தோம் என்று நினைக்குமாறு இருக்கிறதே, என்ன செய்வது?

    ReplyDelete
  10. நானும் படம் பார்க்கவில்லை,, பார்க்கபோவதாகவும் இல்லை.
    @ஆதிமனிதன். விமர்சனத்தை பார்த்துதான் என்னைப்போன்றவர்கள் படம் பார்க்கலாமா, வேண்டாமா என முடிவெடுக்கிறோம்
    @SmArt.. கொஞ்சம் சக்திவாய்ந்த மீடியாவான திரைப்படங்கள் முடிந்தவரை எதிமறையான தாக்கத்தை தவிர்ப்பது நல்லதல்லவா? குழந்தைகளின் வாழ்க்கையல்லவா? (நான் ஒரு பள்ளி சென்று கொண்டிருக்கும் மாணவியின் தாய்)

    படத்தை தியேட்டருக்கு சென்று பார்ப்பதை தவிர்த்தாலும் கொஞசநாளிலேயே தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக என வீட்டிக்குள் வந்துவிடுகிறது எனவே மற்றவர்களை குறைசொல்லி பிரயோஜனமில்லை. நம் குழ்ந்தைகளை பக்குவபடுத்தவேண்டியதுள்ளது.
    நன்றி மோகன் குமார்.

    ReplyDelete
  11. புதிய படங்கள் பெரும்பாலும் பார்ப்பது இல்லை. ஆனாலும் நீங்கள் சொல்லியுள்ளவற்றை ஏற்கிறேன். சினிமாவோ, கதைகளோ நல்லவைகளை விட நெகட்டிவ் சமாச்சாரங்கள்தான் மனசில் பச் என ஓட்டும். அதுவும் டீனேஜ் காரர்களுக்கு. 'எதையும் ஒருமுறை' முயற்சிக்கும் வயது அது. படங்கள் பண்ணி விட்டு சேனல் சேனலாக சேரில் அமர்ந்து நேயர்களுடன் விவாதிக்கும் புதிய கலாச்சாரம் கூட எரிச்சலைத் தருகிறது.

    ReplyDelete
  12. படத்தில் ஒரு பிரச்சனையை (தன்னை மீறிய தற்கொலை எண்ணம்) முன்வைக்கிறார்கள். அதில் ஒரு தப்பும் இல்லை. ஆனால், நமக்கே அல்லது நமக்கு வேண்டியவர்களில் ஒருவருக்கே அப்படி ஒரு பிரச்சனை வந்து கூடுகையில் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு அவர்கள் தீர்வு என்ன?

    அந்த நோய் உள்ளவன் தன்னைத் தானே அழித்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் (மருத்துவத் தீர்வு இருந்தும் கூட).

    பள்ளிக் காதல் இயல்பானதுதான். அதைக் காட்டுவதிலும் தப்பில்லை ("பன்னீர் புஷ்பங்கள்" என்னும் படத்தை நாம் பழித்துப் பேச மாட்டோம்). ஆனால் "3" நாயகி சொல்கிறாள், "என் வீட்டில் அப்பா அம்மா இல்லை; இராத் தங்கலாம் வா" என்று.

    யோக்கிய வேசம் கட்டும் வணிக நடிகர் ரஜினிகாந்தின் மகளும் அப்படியே இருந்தாக வேண்டிய அவசியம் இல்லை. அது ஒரு பக்கம். வளர்ப்பையும் கணக்கில் கொள்ள வேண்டும். ஐஸ்வர்யா, செல்வராகவனின் உதவியாளர் என்று சொல்கிறார்கள். செல்வராகவனுக்கும் இந்தக் கிறுக்கு உண்டு. ஏடாகூடமாக ஏதாவது சொன்னால்/ காட்டினால்தான் தற்காலத்திய சமுதாயத்தைப் பிரதிபலிப்பதாக அர்த்தமாம்.

    தானும் தோற்று, சமூகத்துக்கும் ஒரு குப்பையைத் தருகிற இவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று நான் கருதவில்லை. இரக்கப்பட வேண்டியவர்கள்.

    ReplyDelete
  13. பார்க்கவே வேண்டாம்.....எனத் தெரிந்து கொண்டேன். நன்றி சார்.

    ReplyDelete
  14. //3 - முதல் பாதி - பள்ளி மாணவர்களை சீரழிக்கிறது. அடுத்த பாதி - தற்கொலைக்கு தூண்டுகிறது இத்தகைய படத்தை முழுவதுமாய் புறக்கணிப்பதே நல்லது !//

    நல்ல அறிவுரை! பொதுவாகவே படம் பார்ப்பதில்லை. இப்படி படம் வந்தால் பார்க்காமல் இருப்பதே மேல்.

    நல்ல விமர்சனத்திற்கு நன்றி மோகன்.

    ReplyDelete
  15. ஒரு புதிய கோணத்தில் பேசியிருக்கிறீர்கள். உங்கள் கட்டுரையைப் படித்த பின்தான் எனக்கும் உறைத்தது. நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?. இந்தப் படத்தைப் பார்க்க இள வயதினர் எவ்வளவு ஆர்வமாக இருந்தார்கள். தற்கொலை முடிவுகளும் சில கணங்களில் தான் மனதில் தோன்றி மறைகிறது.
    //சற்று குற்ற உணர்வோடு காதலிக்கும் பள்ளி மாணவனுக்கும் " இது தவறல்ல; ஜமாய் !" என்று சொல்கிறார்கள் சினிமா நடிகர்கள். அவர்களுக்கு சினிமா மூலம் கோடிக்கணக்கான பணம் கிடைத்தால் போதும் ! படம் ஓடினால் சரி //

    நான் இன்னும் படம் பார்க்கவில்லை. பார்க்கப் போவதுமில்லை.. நன்றிகள்..

    ReplyDelete
  16. எனக்கொன்றும் பிரச்னையில்லை. நான் படம் பார்ப்பதைவிட்டு ரொம்ப நாளாச்சி!

    தங்களுடைய சமூக அக்கறையை மனதாரப் பாராட்டுகிறேன். தொடரட்டும்..!

    ReplyDelete
  17. மோகன்குமார்,

    படம் எப்படி இருக்குன்னு பார்க்க தான் நீங்க தியேட்டர் போயிருக்கிங்க ,இப்படி நிறைய பேர் தியேட்டர் போறதால படம் ஹிட்டு அப்போ இது நல்ல படம் தான்னு சொல்லிக்கிறாங்க படம் எடுத்தவங்க :-)) ஒரு வாரம் ஓடினாலே ஹிட்டு தானே ,இனிமே இதே போல வரிசையா ஒரு டஜன் படம் வரும் பாருங்க :-))

    அதுக்கு தான் டிவிடில பார்க்கணும் :-))

    சில பிரபல திரை விமர்சன பதிவர்கள் உங்கள் பதிவை படிக்கணும் அப்போ தான் சினிமாவை எந்த அளவுகோளில் விமர்சிக்கனும்,விமர்சிப்பவர்களுக்கான சமூக பொறுப்பு என்ன என தெரியும் அவங்களுக்கு, ஸ்கிரின் பிரசன்ஸ் அருமை ,பாடல் ஓ.கே,. காமெடி சூப்பர், ஆனால் ஒரு காட்சில பெருசா இருக்கு அடுத்த காட்சில சிருசா இருக்குனு நுண்ணறிவோட விமர்சனம் எழுதுறாங்க. இந்த படம் தான் இந்த ஆண்டின் சிறந்த தமிழ் படம் ,குறையே சொல்ல முடியாதுனு வேற விமர்சனம் எழுதுறாங்க :-))

    ReplyDelete
  18. நான் படம் பார்க்கவில்லை. ஆனால் நீங்கள் எழுதியதில் இருந்தே படம் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை உணர முடிகிறது.

    //மனிதன் ஏற்கனவே எத்தனையோ துன்பத்தில் வாடுகிறான். அதிலிருந்து மறக்க தான் அவன் சினிமா, பாடல் இவற்றை நாடுகிறான். அங்கு வந்து இப்படி ஓவர் டோஸில் சோகம் பிழிந்தால் என்ன ஆவது ? //

    இதற்காகவே பல திரைப்படங்களை நான் பார்க்காமல் இருந்திருக்கிறேன். வெளியே சொன்னால் 'நீ கொஞ்சம் கூட ரசனை இல்லாதவன்' என்று சொல்வார்கள். ஆனால் டைம் பாசுக்காக தியேட்டருக்கு போய், சோகத்தை மூட்டை அளவு வாங்கி வருவதில் எனக்கு விருப்பமில்லை.

    //SmArt said...

    hello boss,, cinema just for entertainment thats all, ungalukku thevaiyana mathiri real ah kaata mudiyathu,, 3hrs nalla parunga pothum, oru chinna kurmpadam edunga paakalam.,//

    பாஸ், ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன். ஒரு பஸ் ட்ரைவர், ஆக்சிடென்ட் பண்ணிடுறார். காயமடைந்த பயணி, ஏன் இப்படி பண்ணீங்க, மெதுவா ஒட்டிருக்கலாம்ல என்று ட்ரைவரை கேட்கிறார். அதற்கு அந்த ட்ரைவர் "முடிஞ்சா நீ ஓட்டு" என்று சொன்னால், அதை நீங்கள் ஏற்றுகொள்வீர்களா?

    ReplyDelete
  19. தமிழ் மணம் 0 திரை மணத்தில் முதல் இடத்தில இந்த இடுகை


    சூடான சினிமா இடுகைகள்
    " 3" படத்தை பலரும் எதிர்ப்பது ஏன்?
    மோகன் குமார்

    ReplyDelete
  20. வீடு சுரேஸ்குமார் said...

    நான் இன்னும் பார்க்கலை....

    **
    உங்களை போன்றோருக்காக தான் இந்த விமர்சனமே நன்றி சுரேஷ்

    ReplyDelete
  21. ஆதி மனிதன் said...

    இத்தகைய படங்களுக்கு 'விமர்சனம்' (அது நெகடிவாக இருந்தால் கூட) போடுவதையே கூட தவிர்க்க வேண்டும் என்பதே என் பணிவான வேண்டுகோள்.

    ஆதி: உங்களுக்கு சொல்ல விரும்பியதை உமா உள்ளிட்ட சிலர் சொல்லி விட்டனர். நான் சொல்ல நினைத்தும் இது தான். நம் நண்பர்கள் வரையாவது நான் பெற்ற எரிச்சலை அடையாமல் இருக்கட்டுமே என்று தான் பகிர்கிறேன்

    ReplyDelete
  22. BalHanuman said...

    மிக மிக அருமையான, சமூகப் பொறுப்புடன் கூடிய விமர்சனம்...

    நன்றி பாலஹனுமான்

    ReplyDelete
  23. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    சரியான கருத்துக்கள்...!

    நன்றி ராமசாமி அண்ணாச்சி

    ReplyDelete
  24. Madhavan Srinivasagopalan said...

    திருட்டுப் பசங்க....எவன் சீரழிஞ்சு போனா எனக்கென்ன..
    கல்லா கட்டுவதே எனது நோக்கம்னு இருக்கறவங்க காதுல இது எங்க விழப் போகுது..
    **********

    நன்றி மாதவா. உனக்கு சினிமாவே பிடிக்காது (என நினைக்கிறேன்). சரியா? . எனக்கு இத்தகைய படங்கள் மட்டுமே பிடிக்காது

    ReplyDelete
  25. ஜெய தேவ் தாஸ்: நன்றி

    ReplyDelete
  26. உமா: விரிவான கருத்துக்கு மிக நன்றி.

    ReplyDelete
  27. ஸ்ரீராம்: நன்றி உங்கள் கருத்தோடு நானும் ஒத்து போகிறேன்

    ReplyDelete
  28. ராஜ சுந்தர்ராஜன் சார் ; தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. தங்களை போல அனலைஸ் செய்து எழுதுவோர் மிக குறைவே

    ReplyDelete
  29. கோவை டு தில்லி: நன்றி மேடம்

    ReplyDelete
  30. வெங்கட் : நன்றி

    ReplyDelete
  31. இளங்கோ: சரியான பார்வையில் பேசி உள்ளீர்கள் நன்றி

    ReplyDelete
  32. அமைதி அப்பா: உங்களை போன்ற பெற்றோர் பார்த்தால் இன்னும் டென்ஷன் ஆவீர்கள்

    ReplyDelete
  33. வவ்வால்: எனது இந்த பதிவை பாராட்டி விட்டு மற்ற பதிவர் விமர்சனத்தை கிண்டல் செய்து விட்டீர்கள். ஏஏஏன் ? எல்லோரும் நண்பர்களாகவே இருப்போமே !

    ReplyDelete
  34. ரகு: பஸ் ட்ரைவர், ஆக்சிடென்ட் பயணி என நீங்கள் சொன்ன உதாரணம் செம apt . நன்றி

    ReplyDelete
  35. இவ்வளவு நல்ல படத்திற்கு ‘A' தரச்சான்றிதழாவது கொடுத்திருக்கிறார்களா அல்லது அது கூட இல்லையா?

    நடுநிசி நாய்கள் என்ற படத்தை விஜய் தொலைகாட்சியில் ஞாயிறு மதியம் 11 மணிக்கு ஒளிபரப்பினார்கள். இதுவும் ஏதோ ஒரு பண்டிகை நாளில் வீட்டில் நன்கு சத்தமாக ஓடும் என்று நம்பலாம்.

    ReplyDelete
  36. மோகன் குமார்,

    // எனது இந்த பதிவை பாராட்டி விட்டு மற்ற பதிவர் விமர்சனத்தை கிண்டல் செய்து விட்டீர்கள். ஏஏஏன் //

    அவங்களும் பார்த்தாங்க,நீங்களும் பார்த்தீங்க, ஆனால் உங்களுக்கு மட்டும் தானே உண்மையை சொல்ல தோன்றியது.

    பிரபல சினிமா விமர்சனப்பதிவர்கள்னு சொல்லிக்கிட்டு பூசி மெழுகி ஏமாற்றுகிறார்களே என்பதால் அப்படி சொன்னேன். மற்றபடி எல்லாருமே நண்பர்கள்னு நினைப்பவன், பின்னூட்டமும் போடுவேன். எனக்கு பின்னூட்டம் போடுறவங்களுக்கு தான் பின்னூட்டம் என கொள்கை எல்லாம் எனக்கு கிடையாது :-))

    ReplyDelete
  37. வேங்கட ஸ்ரீனிவாசன் said...//இவ்வளவு நல்ல படத்திற்கு ‘A' தரச்சான்றிதழாவது கொடுத்திருக்கிறார்களா //

    மிக நல்ல கேள்வி. இல்லை என்பதே சோகமான பதில். UA கூட கொடுக்க வில்லை. U தான் தந்துள்ளனர். சென்சாரில் எவ்வளவு அரசியல் உள்ளது என்பது இதிலேயே தெரிகிறது.


    //நடுநிசி நாய்கள் என்ற படத்தை விஜய் தொலைகாட்சியில் ஞாயிறு மதியம் 11 மணிக்கு ஒளிபரப்பினார்கள். இதுவும் ஏதோ ஒரு பண்டிகை நாளில் வீட்டில் நன்கு சத்தமாக ஓடும் //


    மிக சரியாய் சொன்னீர்கள் ! நன்றி !

    ReplyDelete
  38. வவ்வால் said...
    //மற்றபடி எல்லாருமே நண்பர்கள்னு நினைப்பவன், பின்னூட்டமும் போடுவேன்.//

    இந்த வரிகள் படித்து மகிழ்ந்தேன் நண்பரே நன்றி

    ReplyDelete
  39. Hello sir how are you
    very good comments

    ReplyDelete
  40. hello sir palli kathal kalyanam varai pohathunu eppadi solvinga. naanum enathu wifeum 12th padikum pothe lovers.8years love panni kudumba sammathathoda kalyanam pannikitom. ippothum romba happy a thane irukom. eppadi 1% kooda serathunu solvinga.

    ReplyDelete
  41. ரீனா: பள்ளி காலத்தில் காதலித்து, அவரையே மணந்து மகிழ்வான வாழ்க்கை வாழும் உங்களுக்கு வாழ்த்துகள் !

    நான் இப்படி மணப்போர் 1% க்கு குறைவு என்று தான் கூறி உள்ளேன். ஒருவர் கூட இல்லை என்று அல்ல ! நீங்கள் உங்களின் ஒரு உதாரணத்தை சொல்கிறீர்கள். உங்களோடு சில நூறு பேராவது பள்ளியில் படித்திருப்பார்கள். உங்கள் வகுப்பு தோழர்களாகவே குறைந்தது பல்வேறு ஆண்டுகளில் சில நூறு பேர் இருந்திருப்பார்கள். அவர்களில் ஐந்து அல்லது பத்து பேராவது காதலித்தவரை மணந்தார்களா? இல்லையே ? இன்னொன்றும் சொல்ல வேண்டும். பள்ளி பருவத்தில் காதல் அலை அடிக்காமல் போவது அநேகமாய் யாருக்குமே இல்லை. அவர்களில் எத்தனை பேர் திருமணம் வரை செல்கின்றனர் என்பதே கேள்வி.

    Calf love-ஐ பெருமைபடுதுவதை என்னால் ஏற்று கொள்ளவே முடிய வில்லை. சினிமாவில் இப்படி செய்வது சிறுவர்களை சீரழிக்கிறது. இதே பதிவில் மேலே உள்ள காமன்டுகளில் எத்தனை பேர் இந்த கருத்துடன் உடன்படுகிறார்கள் என பாருங்கள் !

    தனிப்பட்ட முறையிலும் மிக அதிகம் பேர் நான் எழுதிய ஒரு பதிவுக்கு பாராட்டினார்கள் என்றால் அது இந்த பதிவுக்கு தான். இதை பெருமைக்காக சொல்ல வில்லை. பலரின் கருத்தும் இந்த கட்டுரையில் சொல்ல பட்டதும் ஒன்றே என்பது தான்.

    எல்லோரும் ஒரே கருத்தை கொள்ள முடியாது அல்லவா? இந்த கட்டுரையும் சிலருக்கு பிடிக்காது தான். ஆனால் அது ஒரு சிறு பிரிவனரே என்று நினைக்கிறேன்.. பள்ளி பருவத்தில் திருமணம் செய்பவர்களை போல !

    மீண்டும் சொல்கிறேன்: உங்களை போல தெளிவாக இருந்து வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டு திருமணம் செய்யும் பள்ளி மாணவர்கள் மிக குறைவு !

    ReplyDelete
  42. இந்த மாதிரி டுபாகூர் டைரக்டர் படங்கள தவிர்க்குறது உடம்புக்கும், மனசுக்கும், பணத்துக்கும் ரொம்ப நல்லது.

    ReplyDelete
  43. nee ellam 100 varusam munnadi poranthirukkanum.. 2 Rs News paper la varaatha seithigala padathula kaaturaanga??? Samuthaayatha thiruthara maathiri neenga than oru padam edungalen...

    ReplyDelete
  44. KK : உங்கள் கேள்விக்கான பதில் பின்னூட்டங்களின் துவக்கத்திலேயே ஒருவருக்கு சொல்லி விட்டேன்.

    அவருக்கு சொன்னதை அப்படியே மீண்டும் எழுதுகிறேன் :

    மதன், விகடன், குமுதம் எல்லாரும் தான் விமர்சனம் செய்கிறார்கள். அவர்களை போய் படம் எடுக்க சொல்ல முடியுமா? என் வேலை விமர்சனம் செய்வது தான். இதற்கு நான் உண்மையாய் இருந்தால் போதும். படம் எடுப்பவர்கள் மட்டும் தான் விமர்சனம் செய்ய வேண்டும் என சொல்ல முடியமா? காசு தந்து படம் பார்க்கும் எவரும் விமர்சனம் செய்யலாம். அதற்கு தைரியம் இருந்தால் தான் படத்தை வெளியிட வேண்டும்.

    படம் பார்த்து விட்டு நல்லா இல்லை என்று சொன்னால், நீ படம் எடு பார்ப்போம் என்பது சின்ன பிள்ளை தனமா இல்ல இருக்கு. நானும் உங்களை சொல்கிறேன்: நீங்க ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு எழுதுங்க பார்ப்போம் :)

    படம் எடுப்பவர்கள் தன் படத்தை பார்த்து பள்ளி மாணவர்கள் கெட்டு போவார்கள் என்று கூட யோசிக்க மாட்டார்களா?இத்தனைக்கும் கொலைவெறி பாடலால் மாணவர் கூட்டமே இந்த படத்தை ஆவலாய் எதிர் பார்த்தது. தியேட்டருக்கு வந்த பெற்றோர் "ஏன் தான் இந்த படத்துக்கு கூட்டி வந்தோமோ " என புலம்பியதை நேரில் பார்த்தேன் !

    இங்கு உள்ளது என் கருத்து. இந்த படம் அருமை என நினைத்தால் நீங்கள் தனியாய் பாராட்டி எழுதலாம்.
    ***
    புது profile கிரியேட் செய்து திட்டி உள்ளீர்களோ ? இங்கு என் கருத்தோடு ஒத்த கருத்தை கொண்ட எத்தனையோ பேர் பின்னூட்டத்தில் பேசி உள்ளனரே? அவர்களை எங்கே, எப்படி போய் திட்டுவீர்கள்?

    சினிமா துறையில் உதவி இயக்குனரா இருக்கீங்களா? பட குழுவினருக்கு நீங்கள் ஆற்றுவது நல்ல சேவை !

    நன்றி !

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...