Friday, October 26, 2012

காலேஜ் காமெடி போஸ்டர்கள் +சட்ட ஆலோசனை

முதலில் சில ஜாலியான புகைப்படங்கள் பார்த்து என்ஜாய் செய்யுங்க. அப்புறமா சட்ட கேள்வி பதில் காத்திருக்கு.

நிற்க. இப்படி காமெடி படங்களுடன் சட்ட ஆலோசனை தருவதால் சொல்ல வேண்டிய செய்தி சற்று டைல்யூட் ஆகி விடுவதாக ஒரு கருத்து நிலவுவதால் இத்துடன் சட்ட ஆலோசனையில் காமெடி படங்களுக்கு டாட்டா பை பை.

இனி  சட்ட ஆலோசனை இரு கேள்வி-பதில்களாக , இத்தகைய படங்கள் இன்றி வெளிவரும். 












சட்ட ஆலோசனை

கேள்வி: ரவிச்சந்திரன் சென்னை

வணக்கம். எனது தந்தையின் தந்தை (தாத்தா)வின் பெயரில் ஒரு வீடு உள்ளது. அதில் எனது அண்ணன் தற்காலிகமாக குடிஇருந்தார். அப்போது அவர் வீட்டு வரி கட்டினார். அதில் வரி கட்டியவர் என அவர் பெயர் போட்டு, பின்பு அவர் பெயர் மட்டும் வருவது போல் செய்து இருக்கிறார். தற்போது அந்த வீட்டை தனக்கே உரிமை என்றும் அவருக்கே தர வேண்டும் அனைவரையும் கட்டாயப்படுத்துகிறார்.

நாங்கள் நான்கு சகோதரர்கள். என்ன செய்வது?

பதில்:

உங்கள் தாத்தா சொத்தில் உங்கள் அண்ணன் இருந்து கொண்டு அவர் பெயரில் வரி கட்டுவதாக கூறி உள்ளீர்கள். உங்கள் தந்தை பற்றி ஏதும் சொல்லவில்லை. உங்கள் தாத்தா உயில் ஏதும் எழுதி வைக்கவில்லை என கருதுகிறேன்.

மற்ற சகோதரர்கள் அனைவரும் சேர்ந்து சொத்தை பாகப்பிரிவினை செய்து தரச் சொல்லி அவர் மேல் வழக்கு தொடர்வது தான் இதற்கு சிறந்த வழி. இப்படி வழக்கு தொடர்ந்தாலே அவர் இறங்கி வர வாய்ப்புண்டு.

வழக்கு நடக்கும் போது அவர், தான் தான் வரி கட்டுவதாகக் கூறினால். அவர் தான் மூத்த மகன் எனில் வரி அவர் பெயரில் கட்ட நீங்கள் தற்காலிக அனுமதி தந்ததாகக் கூறலாம்.

நீங்கள் அவசியம் உங்களுக்கு தெரிந்த நல்ல வழக்கறிஞரை நாடி உடனே வழக்கு தொடர ஏற்பாடு செய்யுங்கள்.

*******
சட்ட ஆலோசனை வல்லமை  அக்டோபர் 12,2012 இதழில் வெளியானது  

11 comments:

  1. படங்கள் அனைத்தையும் ரசித்தேன்.

    சட்ட ஆலோசனைகள் தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட்

      Delete
  2. அசத்துது படங்கள்.. :-)

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி அமைதி சாரல்

      Delete
  3. படங்கள் கலக்கல்...

    சட்ட ஆலோசனைக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தனபாலன்: நன்றி

      Delete
  4. காமெடி படங்க்கள்! கலக்கல் ஆலோசனை!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுரேஷ் : நன்றி

      Delete
  5. முதல்படம்தான் செம கலக்கல். இதுதானே இப்போது வீட்டுக்கு வீடுவாசல்படி:)))) சாப்பாடுதயாரிக்க ஒரு ரொபோ இருந்தால் சரியாக இருக்கும் அதுவும் பெட்டிக்கு முன்னால் இருக்காமல் இருக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாதேவி தொடர் வாசிப்புக்கும், ஆதரவுக்கும்

      Delete
  6. படங்கள் மற்றும் சட்ட ஆலோசனைகள் சூப்பர் சார்!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...