Thursday, October 4, 2012

குளுமணாலி- பனியில் விளையாட்டு-படம்+வீடியோ



ணாலி செல்வோர் அவசியம் செல்லும் இடம் -ரோடங் பாஸ். குளிர் பிரதேசம் என்பதை தாண்டி பனி இருப்பதை காணவே பலரும் மணாலி செல்கின்றனர். பனியை நேரில் காண, விளையாட இங்கு தான் முடியும்.



ரோடங் பாஸ் குளிர் காலத்தில் மூடி விடுவார்கள். ரோடு முழுதும் பனி இருப்பதால். கோடையில் தான் திறப்பார்கள். அப்போதும் சில நேரம் பனி அதிகம் இருந்தால் ரோடங் பாஸ்க்கு சற்று முன் வரை தான் அனுமதிப்பார்கள் எங்களுக்கும் அப்படி தான் நிகழ்ந்தது


மடி என்கிற இடத்துடன் எங்களை நிறுத்தி விட்டனர். அதன் பின் ஐஸ் கட்டிகள் தரையில் இருக்கும் என்பதால் வாகனங்கள் வழுக்கி பள்ள தாக்கில் விழும் அபாயம் உண்டு. சில வாகன ஓட்டிகள் அதிக பணம் வாங்கி கொண்டு செல்ல தயார் எனினும் ரிஸ்க் வேண்டாம் என நாங்கள் ரோடங் பாஸ் வரை செல்ல வில்லை.அதனால் என்ன அங்கு சென்றும் ஐஸ் கட்டி தானே பார்க்க போகிறோம்? அதை இங்கேயே பார்த்தோம்


செல்லும் முன்னரே சென்னையில் இருந்து சென்று வந்த நண்பர்கள் அதிகாலை எழுந்து சென்று விடுங்கள் இல்லா விடில் கூட்டம் ஆகிடும் என்றனர். போலவே எங்கள் டிரைவர்களும் அதுவே கூறினர்.

நாங்கள் ஐந்து மணிக்கு காரில் கிளம்பினோம் அடுத்த ஒன்னரை மணி நேர பயணத்துக்கு பின் பனி கட்டிகள் இருக்கும் மடி &  ஸ்னோ பாயிண்ட்டை அடைந்தோம்

பனியில் நாம் போட்டு கொள்ள ஓவர் கோட், ஷூ போன்றவை வாடகைக்கு விற்கிறார்கள். இது இல்லாமல் நாம் அங்கு போகவே முடியாது. எங்கள் நண்பர் ஜோஷி இங்கு நன்கு பார்கெயின் செய்து வாடகைக்கு வாங்கினார். மணாலியில் மிக குறைவான உயரம் உள்ள இடத்திலேயே எவ்வளவு பனி என்று இந்த வீடியோவில் தெரியும்.



ஹவுஸ் பாஸ்/ பூக்கள் கார்னர்




மடி என்கிற இடம் முதலில் அடைந்தோம் செம குளிர். சிகெரெட் குடிக்காதோர் கூட சிகரெட் அடிக்கலாமா என நினைக்க வைக்கும் அளவு குளிர் (எப்படியோ கொஞ்சம் சூடு கிடைத்தால் போதும் என்று இருக்கிறது)

மடியில் எடுத்த வீடியோ இது :





பின் அங்கிருந்து இறங்கி ஸ்னோ பாயின்ட் வந்தோம். இங்கு தான் பனிக்கட்டி சார்ந்த விளையாட்டுகள் உண்டு. உங்களை அமர்த்தி அவர்கள் இழுத்து செல்லும் Sledging , டியூபில் நாம் வழுக்கி கொண்டு வந்து விழும் விளையாட்டு இப்படி நிறைய விளையாட்டுகள் !


மணாலி போக எண்ணுவோரும், பனிக்கட்டி விளையாட்டு பற்றி கொஞ்சம் அறியவும் அவசியம் காண வேண்டிய வீடியோ இது:






இங்கு ஒன்னரை மணி நேரம் செமையாக விளையாடினோம். உயரத்தில் இருப்பதால் மூச்சு விட சற்று சிரமம் ஆக உள்ளது. ஆனால் சிறு குழந்தைகள் உட்பட யாருக்கும் ஜலதோஷம் பிடிக்க வில்லை.

ஸ்னோ பாயிண்டில் மிக குளிர்கிறதே என சோளம் விற்பவரிடம் கையை காட்டி குளிர் காய்கிறோம்
செல்லும் போது ஒண்ணரை மணி நேரத்தில் சென்ற நாங்கள், அதே இடத்திலிருந்து திரும்பும் போது நான்கு மணி நேரத்துக்கு மேல் ஆனது. காரணம் வாகனங்கள் அதிகம் ஆகி விடுகிறது. பலர் தங்கள் வண்டிகளை ரோடில் விட்டு விட்டு போய் விடுகிறார்கள். ஒரு புறம் வரும் வண்டிகள் இன்னொரு புறம் கீழே இறங்கும் வண்டிகள் என செம டிராபிக் ஆகி விடுகிறது. இதற்கு தான் அதிகாலை சென்று விட்டு ஒன்பது மணிக்குள் கீழே இறங்கிடணும்


பல வண்டிகள் பாதியில் நிறுத்துவதால் மலை ஏற முடியாமல் குதிரை வண்டிகளை நாடுகிறார்கள் மக்கள் அவர்களோ ஒரு ஆளுக்கு ரெண்டாயிரம் ரூபாய் சென்று வர வாங்குகிறார்கள் ! பஸ்காரர்களுக்கும் இவர்களுக்கும் அண்டர் ஸ்டாண்டிங் உண்டு என்கிறார்கள் !
இறங்க காத்திருக்கும் வண்டிகள்

நெடு நேரம் காத்திருக்க நேரிட்டால் நேரமாகிறதே என வருந்தாமல் பனி படர்ந்த அந்த மலைகளையும் அந்த சூழலையும் ரசிப்பதே நலம்  




மணாலி செல்வோர் கண்டிப்பாக, கண்டிப்பாக செல்லவேண்டிய இடம் இது. இங்கு செல்லா விடில் மணாலி சென்றது வேஸ்ட்.

பனிக்கட்டியில் விளையாட்டு

பனிக்கட்டி விளையாட்டை காண, மீண்டும் அனுபவிக்க எழும் ஏக்கத்தோடு இப்பதிவை நிறைவு செய்கிறேன் !

44 comments:

  1. வணக்கம்...குளு குளு குல்லா பயணம்...

    ReplyDelete
  2. நானும் ஓசியில் குளு, மனாலி போய்ட்டு வந்துட்டேன் :-) நன்றி!

    ReplyDelete
  3. படங்கள் ரசித்தேன் :-)))

    ReplyDelete
  4. ஆமினா said...

    நானும் ஓசியில் குளு, மனாலி போய்ட்டு வந்துட்டேன் :-) நன்றி!
    >>
    ஆமி, உனக்கு கமெண்ட் போடவே தெரியலை. ஐ இந்த இடத்துக்குலாம் எங்க மோகன் அண்ணா ஓசில டூர் கூட்டி போகப் போறார், அதுக்கு அண்ணனுக்கு நன்றின்னு சொல்லனும்ப்பா

    ReplyDelete
  5. அண்ணே! நீங்க தெலுங்கு ஆக்டர்சுக்கு ட்ரெஸ் வடிவமைக்க போகலாம்ண்ணே

    ReplyDelete
  6. அருமையான காட்சிகள்.சுவாரஸ்யமான வீட்டீயோபடங்கள்.நேரில் பார்த்து விட்டு வந்தது போல் உணர்வை ஏற்படுத்தி விட்டன.

    ReplyDelete
  7. அருமையான படங்கள், உங்கள் மகிழ்ச்சி எங்களுக்கும் ஒட்டி கொண்டது....போக வேண்டும் ஒரு நாள் !!

    ReplyDelete
  8. ஸ்ஸ்.. அப்ப்பா.. குளிரடிக்குது!!!!!!!!

    ReplyDelete
  9. அருமையான பகிர்வு...நல்ல தகவல்கள்.

    ReplyDelete
  10. இங்கே அடிக்கும் வெயிலுக்கு படங்கள் இதமாக உள்ளது... தகவல்களுக்கு நன்றி...

    ReplyDelete
  11. படங்கள் எல்லாம் நல்லாருக்கு மோகன் சார் முதல் படத்தை பார்க்கும் போது வெள்ளி பனி மலையின் மீதுலவுவோம் என்று சொல்ல தோன்றுகிறது

    ReplyDelete
  12. ரொம்ப அருமையா இருக்கு.. எங்கும் வெள்ளை நிழல் படிந்தது போல பார்க்க பார்க்க தெவிட்டவில்லை... படங்களுடன் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி சார்

    ReplyDelete
  13. பார்த்தலே குளிருது!சுற்ரிக்காட்டியமைக்கு நன்றி

    ReplyDelete
  14. படங்களைப் பார்த்தாலே நல்லா எஞ்சாய் செஞ்சுருப்பீங்கன்னு தோணுது :-))

    ReplyDelete
  15. SSShhhh.... ஜில்லுனு இருக்கு,,,

    ReplyDelete
  16. அருமையான இடம். பார்க்கக் கிடைத்தது. நன்றி.

    ReplyDelete
  17. குளுமனாளிக்கே போயிட்டு வந்த மாதிரி இருக்கு. ஐஸ் ஏன் பழுப்பு கலர்ல இருக்கு? ரோஜா படத்துல காட்டினா மாதிரி உஜாலா வெள்ளை எங்கே இருக்கும்?

    ReplyDelete
  18. குளு மணாலி செல்ல எங்களுக்கும் ஆசை வந்துவிட்டது.

    ReplyDelete
  19. பனி (snow) யாருக்குதான் பிடிக்காது?

    எல்லோரும் அஞ்சி நடுங்கும், அமெரிக்காவின் Refrigerator என்று சொல்லப்படும் மினசோட்டா மாகாணத்தில் மூன்று ஆண்டுகள் முழுதும் பணியுடனே(snow) வாழ்ந்திருந்தும் தங்கள் பதிவு மீண்டும் அங்கு செல்ல மாட்டோமா என்ற ஏக்கத்தை ஏற்படுத்தி விட்டது.

    ReplyDelete
  20. ஓசியிலே குளுமணாலி போய் வந்தாச்சு
    எங்களை எல்லாம் வீட்டில் இருந்து கொண்டே குளு மனாலி போய் வந்த அனுபவம் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  21. இந்த இடங்களைக் காணும்போது சிலபல இந்திபடப் பாடல் காட்சிகளின் லொகேஷன்கள் நினைவுக்கு வருகின்றன!

    ReplyDelete
  22. அருமையான வீடியோ காட்சிகள்! தங்கள் பதிவு என்னையும் பார்கத்தூண்டின! ஆனால் இயலுமா ? என்பதுதான் கேள்வி!

    ReplyDelete
  23. கோவை நேரம்: உலகம் சுற்றும் வாலிபரே: நீங்க இந்த இடம் நிச்சயம் போவீங்க என நினைக்கிறேன்

    ReplyDelete
  24. ஆமினா: நன்றிங்க. ராஜி கூட சேராதீங்க :)

    ReplyDelete

  25. நன்றி ஜெய்

    ReplyDelete

  26. ராஜி said...

    அண்ணே! நீங்க தெலுங்கு ஆக்டர்சுக்கு ட்ரெஸ் வடிவமைக்க போகலாம்ண்ணே
    ****
    அலோ ! இப்படி வித்தியாச கலர் போட்டதால தான் எங்க குருப் ஆளுங்க எல்லாரும் கூட்டத்தில் நம்ம டிரஸ் கலர் வச்சு ஈசியா தேடி வந்துட்டாங்க தெரிமா?

    ReplyDelete
  27. நன்றிங்க ஸாதிகா

    ReplyDelete
  28. சுரேஷ் குமார்: வாங்க நன்றி

    ReplyDelete

  29. உமா: வீடியோ பார்த்தீங்க போல :)

    ReplyDelete
  30. நன்றி கோவை டு தில்லி

    ReplyDelete

  31. தனபாலன் : நன்றி

    ReplyDelete

  32. சரவணன் சார் நன்றி

    ReplyDelete


  33. வாங்க சமீரா நன்றி

    ReplyDelete

  34. குட்டன்: வணக்கம் நன்றி

    ReplyDelete
  35. அமைதி சாரல்: ஆமாங்க. மிக என்ஜாய் செய்த சில இடங்களில் இந்த ஸ்னோ பாயின்ட்டும் ஒன்று

    ReplyDelete
  36. தொழிற்களம் : மிக நன்றி நண்பா

    ReplyDelete
  37. மாதேவி: நன்றிங்க

    ReplyDelete
  38. Jayadev Das said...

    ஐஸ் ஏன் பழுப்பு கலர்ல இருக்கு?

    **
    இதுக்கு எதோ ஒரு காரணம் சொன்னாங்க. மறந்துட்டேன். போயிட்டு வந்து ரெண்டு மூணு மாசம் ஆகிடுச்சு இல்ல?

    ReplyDelete
  39. ரைட்டு முரளி சார்; பிளான் பண்ணி போயிட்டு வாங்க

    ReplyDelete
  40. நல்ல பின்னூட்டம் நன்றி ஆதிமனிதன்

    ReplyDelete
  41. வாங்க அசீம் பாஷா நன்றி

    ReplyDelete
  42. ஸ்ரீராம்: சரியா சொன்னீங்க. காஷ்மீர் என்று சொல்லிவிட்டு காட்டும் பல படங்கள் இங்கு எடுப்பவை தான். ரோஜா உட்பட

    ReplyDelete
  43. ராமானுசம் ஐயா : நன்றி. நல்ல துணை இருந்தால் சென்று வரலாம் ஐயா

    ReplyDelete
  44. நல்ல படங்கள்/காணொளிகள்....

    விவரங்களும் அருமை....

    தொடரட்டும் பயணக் கட்டுரைகள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...