Saturday, October 6, 2012

அனுஷ்காவின் தாண்டவம்- எப்புடி?

தாண்டவம் பார்க்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். சீயான் விக்ரம் படத்துக்கு படம் வித்யாசமா நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பில் சிலர் செல்லலாம். சந்தானம் காமெடியில் நிச்சயம் சிரிக்கலாம் என பலர் போகலாம். நாம் பார்க்க ஒரே காரணம் .. தலைவி .. தலைவி .. தலைவி தான் !



நம்ம பதிவின் தலைப்புக்கேற்ப தலைவி பற்றி பேசிட்டு அப்புறம் மற்ற விஷயங்கள் !

படத்தில் ஹீரோவுக்கு கூட ரொம்ப சாதாரண அறிமுகம் தான். ரோடில் நிற்பவர் ஒரு காரில் ஏறுகிறார். அவ்ளோ தான். ஆனா தலைவி பற்றி என்னா பில்ட் அப் குடுக்குறாங்க தெரியுமா? இதோ வர்றார் வர்றார்னு சொல்லிட்டு கடைசியா அவரை காட்டும் போது மழை பிச்சிகிட்டு கொட்டுது. தன்னோட குடையில் நாய் குட்டிகளை நனையாமல் உள்ளே வச்சிட்டு தலைவி நனைஞ்சு கிட்டு உட்கார்ந்திருக்கார். தலைவி நிமிர்ந்து வானத்தை பார்க்க மழையெல்லாம் தலைவி முகத்தை வந்து முத்தமிடுதுன்னா பார்த்துக்குங்க !

பொண்ணையே பார்த்து கல்யாணம் வேண்டாம்னு சொல்றேன்னு போகிற ஹீரோ தலைவியை பார்த்தோன கிளீன் போல்ட் ஆகிடுராறு (ஆகாட்டி தானே ஆச்சரியம்?)

அப்புறம் கல்யாணம் ஆகுது. ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேரும் "முதல்ல பழகுவோம். பிரன்ஸ் ஆவோம், லவ்வர்ஸ் ஆவோம் அப்புறமா தான் மத்தது எல்லாம்"னு சொல்லிட்டு "அப்படியே இருக்காங்க".

நமக்கு மனசே கேட்கலைங்க. படத்தை எடுத்த டைரக்டர் விஜய்க்கு இன்னும் கல்யாணம் ஆகலை ...அதான் முன் அனுபவம் இல்லாம இப்படி வச்சிட்டாப்புல போலருக்கு.

இந்த விஷயத்திலே நாங்கல்லாம் (நண்பர்கள்) ஏராளமா ஆராய்ச்சி பண்ணிருக்கோம். கல்யாணம் ஆகி அதிகபட்சம் நாலு, அஞ்சு நாள் வேண்ணா தள்ளி இருக்கலாம் ( அதுவே சிலர் மட்டும் தான் சார் !) அப்புறமும் தள்ளி இருந்தா வேற மாதிரி பேசிடுவாங்க சார். பேசுறதென்ன.. அதான் நிஜமும் கூட.

அனுஷ்கா மாதிரி பெண்ணை பக்கத்தில் வச்சிக்கிட்டு மாசக்கணக்கா ஒரு புருஷன் தினம் குறட்டை விட்டு தூங்குறாரு என்கிற மேட்டர் தான் விஜய் விட்ட லாஜிக் மீறல்களில் மிக பெரிய மீறல் !

விஜய் சார். உங்களுக்கு கல்யாணம் ஆனவுடனே " காதலிக்கிறேன். நண்பன் ஆகிறேன். அப்புறம் மத்ததெல்லாம் " அப்படின்னு இருந்துடாதீங்க. எதோ அனுபவ சாலி சொல்றேன். அப்புறம் உங்க இஷ்டம் !

சரி தலைவிக்கு வருவோம்

தலைவி வருவது பத்து காட்சி என்றாலும் புடவை, சுடிதார், ஜீன்ஸ், நைட் டிரஸ் என பலவிதமான உடைகளில் வந்து நம் மனதை குளிர்வித்து விட்டார். சில காட்சிகளில் மட்டும் கொஞ்சம் வயசான மாதிரி காட்டிட்டாங்க. அதுனால ஒளிப்பதிவாளர் மேலே செம காண்டா இருக்கேன் நானு !

அநியாயமா பாதியிலேயே தலைவி கதையை முடிச்சாங்க. ஆனா கூட பாருங்க தலைவிக்காக கடைசியிலே வச்சாங்க ஒரு பாட்டு . லாஜிக், எந்த டைமிங்க்ல பாட்டு வைக்கிறது போன்ற விஷயம் எல்லாம் விட்டுட்டு நல்லா ரசிங்க சார் அந்த கடைசி பாட்டை !

இப்போ மத்த விஷயத்துக்கு வருவோம்.

விக்ரம் எப்பவும் போல் தன் வேலையை அருமையா செய்திருக்கார். குறிப்பா சட்டை இல்லாம சண்டை போடும்போது அவர் உடலை பார்த்தால் செம வியப்பா இருக்கு. தோற்கும் படத்துக்கும் அதே மாதிரி உழைப்பை கொடுக்கும் விக்ரம் படங்களை தேர்ந்தெடுப்பதில் சூர்யா போல கவனமா இருந்தா நல்லாருக்கும் !

சந்தானம் வெகு சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறார். எதிர்பார்த்த அளவு அவர் பங்களிப்பு இல்லை.

எமி ஜாக்சன் : கொடுமையா இருக்கார். கையெல்லாம் குச்சி குச்சியா செம ஒல்லியா இருக்கு ! ஒரு வேளையாவது வயித்துக்கு சாப்பிடுவாரான்னு தெரியலை.

பாடல்கள் சில மட்டுமே நல்லாருக்கு. பின்னணி இசையில் அடிக்கடி அதிகாலை பூக்கள் இசை தான் வருது. ஆனா அந்த பாட்டு மிக சின்ன பாட்டா இருந்துடுச்சு.

டில்லி மற்றும் லண்டன் பார்க்க ரொம்ப நல்லாருக்கு.

விக்ரம் நண்பர் தான் வில்லனா இருப்பார் என சின்ன குழந்தை கூட சொல்லிடுது.

த்ரில்லர் என சொல்லிட்டு அடுத்துடுத்து என்ன நடக்கும் என எளிதாய் ஊகிக்க முடிவதும், மிக மெதுவாய் படம் நகர்வதும் பெரிய மைனஸ். போலவே லாஜிக் ஓட்டைகள் பற்றி எழுதினால் ரெண்டு பதிவு எழுதலாம்..அவ்ளோ இருக்கு !

மொத்தத்தில்:

நேரம் நிறைய இருக்குன்னா மட்டும், ஒரே ஒரு முறை பார்க்கலாம் இந்த தாண்டவத்தை !

12 comments:

  1. தலைவி...? நீங்க நண்பேன்டா!

    ReplyDelete
  2. தலைவி புராணம் வாழ்க...

    ReplyDelete
  3. ம்...ம்...இருக்கட்டும்.

    ReplyDelete
  4. நான் பார்த்துட்டேன் மோகன் சார் நீங்க அனுஷ்கா ரசிகரா சொல்லவேயில்லை ஹா ஹா நானும் தான்

    ReplyDelete
  5. நீங்க போட்டிருக்கற படத்துல விக்ரம் ரொம்ப யூத் -ஆ இருக்கார்..
    தலைவி பத்தி ரொம்ப எழுதிடீங்க .. உங்க ஹவுஸ் பாஸ் பாத்தா உங்க வீட்ல ருத்ர தாண்டவம் தான் . ஹிஹிஹி... நல்ல இருக்கு சார் விமர்சனம்...

    ReplyDelete
  6. //சில காட்சிகளில் மட்டும் கொஞ்சம் வயசான மாதிரி காட்டிட்டாங்க//

    இருக்கட்டுமே....ஆண்ட்டி ஹீரோவா இருந்துட்டு போவோம் :))

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. //"விஜய் சார். உங்களுக்கு கல்யாணம் ஆனவுடனே " காதலிக்கிறேன். நண்பன் ஆகிறேன். அப்புறம் மத்ததெல்லாம் " அப்படின்னு இருந்துடாதீங்க"//

    நல்ல அறிவுரை. சிறந்த பதிவு நண்பரே நானும் இதைத்தான் என் பாணியில் சொல்லியிருக்குறேன். நேரமிருந்தால் சற்று உலாவி வாருங்கள்.
    http://4tamil.blogspot.com/

    நான் Blogger க்கு பழயவன் என்றாலும் பதிவுலகத்திற்கு புதியவன். நன்றி.

    ReplyDelete
  9. //நமக்கு மனசே கேட்கலைங்க. படத்தை எடுத்த டைரக்டர் விஜய்க்கு இன்னும் கல்யாணம் ஆகலை ...அதான் முன் அனுபவம் இல்லாம இப்படி வச்சிட்டாப்புல போலருக்கு. //

    மௌன ராகம் படம் பார்த்த அனுபவங்கோ

    நம்ம தலைவியும் அனுஸ்கா தான்

    ReplyDelete
  10. விமர்சனம் வித்தியாசமா எழுதி இருக்கீங்க

    ReplyDelete
  11. \\அப்புறம் கல்யாணம் ஆகுது. ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேரும் "முதல்ல பழகுவோம். பிரன்ஸ் ஆவோம், லவ்வர்ஸ் ஆவோம் அப்புறமா தான் மத்தது எல்லாம்"னு சொல்லிட்டு "அப்படியே இருக்காங்க".\\ இப்போ நடக்கிறதே வேற. எடுத்ததுமே 'மத்தது'க்கு நேரடியா போய்விடுவோம், கல்யாணமும் வேணாம் ஒன்னும் வேணாம், கூடி வாசிப்போம், [living together], டேஸ்டு புடிச்சிருந்தா முடிஞ்ச வரைக்கும் அப்படியே தொடர்வோம், பிடிக்கலைன்னா நீ உன் வழியில போ எனக்கு ஏன் வழி. அடுத்த ஆளைப் பாரு. இந்த மாதிரி அமேரிக்கா ரேஞ்சுக்கு ஐ.டி காரனுங்க போய்கிட்டு இருக்கும் போது இப்படி ஒரு படம். ஆச்சரியமா இருக்கு.

    \\தலைவி நிமிர்ந்து வானத்தை பார்க்க மழையெல்லாம் தலைவி முகத்தை வந்து முத்தமிடுதுன்னா பார்த்துக்குங்க ! \\ மழை நீர் முகத்துல விழறதுக்குப் பேரு............!! உங்க மனசுல இருக்கிறது வார்த்தையில வருது மோகன்.

    ReplyDelete
  12. அவ்வளவு ஆராதனை செய்து விட்டு ஒரு படத்துடன் நிறுத்திக் கொண்டதற்கு என் அன்பான கண்டனங்கள்! விக்ரம் பாவம். இந்தப் படமும் ஊத்திடுச்சா? 'ஐ' ஆவது காப்பாற்றுமா?

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...