Saturday, October 27, 2012

சூப்பர் சிங்கர் ஜூனியர் பைனல் : ஒரு பார்வை

சூப்பர் சிங்கர் ஜூனியர் கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து ஓரளவு பார்த்தோம். குழந்தையின் படிப்பு , சமையல் எல்லாம் முடிந்து ஒன்றாய் சாப்பிடும், டிவி பார்க்கும் நேரம் அது. சீரியல் அழுகைக்கு இது பரவாயில்லை என்கிற காரணம் தான் !

பட்டம் வென்ற ஆஜித் 
 பைனல் நிகழ்ச்சி நேற்று நடக்கும் வரை சுகன்யாவிற்கு தான் நான் சப்போர்ட் செய்து கொண்டிருந்தேன். ஆனால் நேற்று சுகன்யா பாடியது ரொம்ப சுமார். ஆஜித் மற்றும் பிரகதி இடையே தான் போட்டி என்பது தெளிவாய் அனைவருக்கும் தெரிந்து விட்டது.

வென்றவர்கள் விபரம் (கடைசி இடத்திலிருந்து):

கெளதம்

பாட்டும் நானே முதல் ரவுண்டில் பாடினான். ஆனால் ரகுமான் முன்பு பாடும் போது " விடுகதையா இந்த வாழ்க்கை?" பாட்டு மிக தவறான பாட்டு செலக்ஷன். மக்கள் ஓட்டு போடும் இத்தகைய இடங்களில் இவ்வளவு சுமாரான சோக பாட்டு பாடுவது ஈர்க்கவே ஈர்க்காது. அதே படத்தில் ஒருவன் ஒருவன் முதலாளி போன்ற துள்ளல் பாட்டு தான் மக்களிடம், கூட்டத்திடம், டிவி பார்ப்போரிடம் எடுபடும்.

இவர் நான்காவதா ஐந்தாவது என தெரியாமல் - சுகன்யா மற்றும் கெளதம் நான்கு ஐந்தாம் இடங்கள் என முடித்து விட்டனர் (விரைவில் அது சரியே தெரியலாம்)

சுகன்யா

நேற்று முதல் பாட்டு நன்கு பாடினாள். ஆனால் இரண்டாவது ரவுண்டில் அஞ்சலி அஞ்சலி பாட்டு சொதப்பல். மேலே சொன்னது போல் கூட்டத்தில் எடுபடும் பாட்டே இல்லை. இப்பாட்டு பாடியதுமே சுகன்யாவிற்கு முதல் இரண்டு இடங்களில் சான்சே இல்லை என புரிந்தது.

யாழினி

பலருக்கும் பிடித்த சிறுமி. செம எனர்ஜி. ஏற்கனவே சாதக பறவைகள் ஆர்கெஸ்ட்ராவில் பாடுகிறாள். கொஞ்சம் நிலவு பாட்டை மிக நன்கு பாடினாள். இவளுக்கு மூன்றாம் இடம் கிடைத்ததில் எந்த சர்ச்சையும் இல்லை.

நிச்சயம் நல்ல பாடகியாய் வருவாள் யாழினி. எந்த சந்தேகமும் இல்லை !

பிரகதி

டைட்டில் ஜெயிப்பார் என பலரால் எதிர்பார்க்கப்பட்ட பெண். எனக்கென்னவோ பிரகதியை பார்க்கும் போது சின்ன வயது த்ரிஷா பார்க்கிற மாதிரி இருக்கும். நேற்று முதல் பாட்டு பாட ஆரம்பித்த போது மிக சுமாராய் ஆரம்பித்தாலும் அந்த பாட்டை முடிக்கும் போது மிக அட்டகாசமாக பாடி முடித்தார் பிரகதி. அடுத்து பாடிய "மையா மையா " பாட்டு பிச்சு உதறிட்டார். இரண்டாம் ரவுண்டில் மிக நன்கு பாடியது இவர் தான் என சொல்லணும்

பிரகதிக்கு முதல் இடம் வந்தால் "வேறு பல சர்ச்சைகள்' வந்திருக்கும். இரண்டாம் இடம் பிரகதிக்கு என்பதை அனைவரும் ஏற்று கொண்டு விட்டனர் என்றே சொல்ல வேண்டும் (அரை மார்க்கில் முதல் இடம் போச்சாம் )

ஆஜித்

               

நேற்று மாலை ஜிம்மில் (வாரத்தில் அஞ்சு நாள் மாலை நேரம் போறேனாக்கும் :))) சில நண்பர்கள் ஆஜித் தான் ஜெயிப்பான் என்று பேசினர். அப்போது " பெரிய குழந்தைகள் இருக்கும் போது சிறுவன் ஜெயிப்பது கஷ்டம். " என சொல்லி கொண்டிருந்தேன். ஆனால் நேற்று ஆஜித் பாடிய முதல் பாட்டான " வந்தே மாதரம்" அனைவரையும் கவர்ந்து இழுத்து விட்டது. அந்த பாட்டு பாடி கொண்டிருக்கும் போதே என் பெண், மொபைலை தேடி எடுத்து ஆஜித்துக்கு ஓட்டு போட ஆரம்பித்து விட்டாள். (இரு நாளுக்கு முன் இணையம் வழியே சுகன்யாவிற்கு ஓட்டு போட்டிருந்தோம். )

வந்தே மாதரம் கிளாசிக்கல் பாட்டா என்று சந்தேகம் இருந்தாலும், அந்த பாட்டு அனைவரையும் எளிதில் கனக்ட் செய்யும் பாட்டு. நம் தேசிய கீதம் போல அந்த பாட்டு அனைவருக்கும் மனதில் பதிந்து விட்டது. அவன் பாடிய விதமும் அருமை.

அடுத்து "சில பூக்கள்" பாட்டும் அசத்தலாய் பாடினான். நேற்று பாடிய ஐவரில் முறையாய் சங்கீதம் கற்காத ஒரே சிறுவன் -இருப்பதில் இளையவன் பட்டம் வென்றது ஆச்சரியமான, மகிழ்வான விஷயம் தான் ! நம்ம காவேரி தண்ணி குடித்து வளர்ந்த ஆஜித் - உனக்கு இந்த மாமாவின் வாழ்த்துகள் !

நிகழ்ச்சி நடக்கும் போது நான் போட்ட சில முகநூல் குறிப்புகள் :

##  26 ஆம் தேதி பைனல் ன்னு சொல்லிட்டு 27-ஆம் தேதி காலை வரை இழுக்கிறாங்க விஜய் டிவியில #

##  பாட்டு பாடின குழந்தைங்க எல்லாம் வீட்டுக்கு வந்து உட்கார்ந்து பைனல் முடிவு அனவுன்ஸ் பண்றதை பாத்துக்கிட்டிருக்காங்க. லைவ் புரோகிராமாம் :))

நண்பர் சுகுமார் சுவாமிநாதனின் முகநூல் குறிப்புகள்  

##  நீங்க லைவ்னு சொல்றதை கூட மன்னிச்சுடுவேன்.. ஆனா புரோக்ராம் முடிஞ்சு வின்னர் அனௌன்ஸ் பண்ண பிறகும் வோட்டு போடுங்க வோட்டு போடுங்கன்னு டி.வியில சொல்லிக்கிட்டு இருக்கீங்க பார்த்தீங்களா... நீங்கள்ளாம் நல்லா வருவீங்க..நல்லா வருவீங்க #Vijay TV Super Singer Junior 3

##  அடக்கடவுளே... ஏ.ஆர்.ரஹ்மான் நைட்டுலதான் பிரஷ்ஷா மியூசிக் போடுவாராம்.. அவரையே சொக்கி சொக்கி தூங்கி விழ வச்சிட்டாய்ங்க இந்த விஜய் டி.வி. # Vijay TV Super Singer Junior 3

விழாவில் இதர துளிகள் :

துவங்கும் போது மா. கா. பா மற்றும் பாவனாவை காட்ட , பாவனா மணி இப்போ நாலு ஆகுது என்றார். அப்போ நம் கிளாக்கில் ஏழு மணி. மூணு மணி நேரம் மெதுவா ஓடுச்சா நிகழ்ச்சி? கொடுமைடா சாமி !

இரவு 11.45-க்கு போட்டியில் ஜெயித்தவர்கள் விபரம், நிகழ்ச்சி நேரே பார்த்தவர்கள் மூலம் இணையத்தில் வந்துடுச்சு. ஆனால் அவர்கள் இரண்டு மணி நேரம் கழித்து அதிகாலை 1.45-க்கு தான் டிவியில் முடிவுகளை அறிவித்தனர் !



இந்த சீசனில் முதல் பத்தில் வந்த ரக்ஷிதா, ஜெயந்த் உள்ளிட்ட சிறுவர்- சிறுமியர் ரிசல்ட் அறிவிக்க சற்று முன் வந்து பாடினர். அட்லீஸ்ட் அதே மேடையில் நாமும் பாடி விட்டோம் என்று மகிழ்ச்சி அவர்களுக்கு இருந்திருக்கும். பாய்ஸ் பட " மாத்தி யோசி" பாட்டை அனைவரும் சேர்ந்து அருமையாய் பாடினர்

வழக்கமாய் பாட்டு பாடி டான்ஸ் ஆடும் பாடகி சுசித்ரா இம்முறை ஆப்சென்ட். மற்ற பாடக பாடகிகள் முழு அட்டெண்டன்ஸ் போட்டிருந்தனர்.

மனோவிற்கு பிறந்த நாள் என கேக் வெட்டி கொண்டாடினர். கோட் உள்ளே மனோ போட்டிருந்த பல கலர் கொண்ட சட்டை சான்சே இல்லை :)



AR ரகுமான் வருவதை மிக சஸ்பென்ஸ் ஆக வைத்திருந்தனர். இது டிவி பார்ப்போரிடம் கூட நல்லா ரீச் ஆச்சு. பாடும் சிறுவர்கள் அத்தனை பேரும் ஒருவர் விடாமல் " என்னால் நம்ப முடியலை. நான் காண்பது கனவா நினைவா? ரகுமான் சாரை நான் நேரில் பார்க்கிறேனா?" என்று பேசியது கடி ! ஒருவர் சொன்னால் ரைட்டு அடுத்தடுத்து ஐந்து பேரும் அதே டயலாக் ஒப்பிச்சா எப்புடி??

ரகுமான் வந்த பின் சிறுவர்கள் பாடுவதற்கு, ரகுமான் முக பாவனைகளையே காமிரா நெடு நேரம் காட்டியது.

சீனியர்/ ஜூனியர் சூப்பர் சிங்கரில் இதுவரை பைனல் வரை வந்த பெரும்பாலானோர் மேடைக்கு வந்து பாடினர் (அல்கா தவிர்த்து )

நிறைவாக: நிகழ்ச்சி நடத்துவோரிடம் ஒரே வேண்டுகோள்: முதல் சீசனில் இருந்து பார்க்கிறேன். போக போக பைனல் முடியும் நேரத்தை அதிமாக்கி கிட்டே தான் போறீங்க ! இரவு பன்னிரண்டு மணிக்குள்ளாவது நிகழ்ச்சியை முடிக்க பாருங்க . முடியல !
*****
இஸ்லாமிய நண்பர்களுக்கு இனிய பக்ரீத் நல் வாழ்த்துகள் !


42 comments:

  1. அப்பாடா...தமிழனின் நேரத்தை வீணடித்த இம்சை தற்காலிகமாக ஓய்ந்தது.

    ReplyDelete
    Replies
    1. சிவா: அடுத்து சூப்பர் சிங்கர் சீனியர் சீக்கிரமே ஆரம்பிச்சுடுவாங்க :)

      Delete
  2. எப்படியும் உங்க பக்கத்துல ரிசல்ட் போடுவீங்கன்னு தெரியும் மோகன். அதனால நான் பார்க்கவே இல்லை!

    வெற்றி பெற்ற ஆஜித்திற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் பதிவு நிகழ்ச்சி பார்க்காத உங்கள் மாதிரி ஆட்களுக்கும் என்ன ஆனது என தெரியவும் தான்

      Delete
  3. நீங்க சொன்ன பல விடயங்களோடு ஒத்துப் போகிறேன் மோகன் சார். நேத்து ரொம்ப இழுத்துட்டாங்க.

    எனக்கென்னவோ ப்ரகதிக்கு முதலிடம் கிடைக்காதது இன்னும் வருத்தமாகவே இருக்கு... நேற்று அனைவரிலும் மிக அழகாகவும், சிறப்பாகவும் பாடியது அவள் தான். ஹ்ம்ம் ... சின்னப்பசங்கள பாடுறது தான் எல்லாருக்கும் பிடிக்குது. இனிமே சத்தியமா சூப்பர்சிங்கர் பார்ப்பதில்லைன்னு முடிவு கட்டியாச்சு!

    வெற்றி பெற்ற ஆஜித்திற்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஹாலிவுட் ரசிகன். இனி பார்க்க மாட்டேன் என்பது நல்ல முடிவு. செயல்படுத்த வாழ்த்துகள்

      Delete
  4. ஆஜித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் பக்ரீத் நல்வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்

      Delete
  5. //சீனியர்/ ஜூனியர் சூப்பர் சிங்கரில் இதுவரை பைனல் வரை வந்த பெரும்பாலானோர் மேடைக்கு வந்து பாடினர் (அல்கா தவிர்த்து )//

    சத்யபிரகாஷை மறந்துட்டிங்களே?? :)

    A.R.R.இன் விசிட் நானும் எதிர்ப்பார்க்கவில்லை. அட்டகாசம்!

    ReplyDelete
  6. ஆஜித் அந்த பட்டத்துக்கு தகுதியானவர் தான்

    //இரவு 11.45-க்கு போட்டியில் ஜெயித்தவர்கள் விபரம், நிகழ்ச்சி நேரே பார்த்தவர்கள் மூலம் இணையத்தில் வந்துடுச்சு. ஆனால் அவர்கள் இரண்டு மணி நேரம் கழித்து அதிகாலை 1.45-க்கு தான் டிவியில் முடிவுகளை அறிவித்தனர் !//

    விளம்பரங்களை போடத் தான் இத்தனை நேரமோ நேரடி ஒளிபரப்பு என்று சொல்லி இப்படி!

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி பிரேம்குமார்

      Delete
  7. நன்கு விரிவாக எழுதி இருக்கிறீர்கள்.ஆஜித் வெல்வார் என்று நினைக்கவில்லை,எப்படி இருப்பினும் அஜித்துக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முரளி சார்

      Delete
  8. நானும் பார்க்க முயற்சித்து பினொரு மணிவரை பார்த்தேன் முடியவில்லை தூங்கிவிட்டேன்,இப்போது உங்களின் விமர்சனம் நான் பார்க்க மரணத்தையும் சொல்லிவிட்டீர்கள் அருமை. ஆனால் திறமையை விட குறுஞ்செய்தி யால் முடிவு தவறு.எனது சாய்ஸ் கௌதம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி கண்ணதாசன்

      Delete
  9. நன் 12 மணிவரை பார்த்துவிட்டு பின் தூங்கி விட்டேன்..
    பாட்டு செலெக்‌ஷன் பொறுத்தவரை குழந்தைகள் நிர்பந்திக்கப்படுவதாக கேள்வி,

    ReplyDelete
    Replies
    1. வாங்க உமா மேடம். பலரும் முழுசா பார்க்கலை போலும் எங்க வீட்டிலும் சிலர் டிவி முன்பே தூங்கிட்டனர்

      Delete
  10. விஜய் டிவி எப்பவுமே இப்படிதான் .நான் இவர்களின் விஜய் அவார்ட்ஸ் பார்க்க ஆசைப்பட்டு ரொம்ப வெறுப்பாகி விட்டேன்.15 நிமிடத்திற்கு ஒருமுறை விளம்பரம்.அது முடிந்து வரும் போது திரும்பவும் எலோரும் நடந்து வருவது ,மேடையில் பேசுவது என்று சில நிமிடங்கள் காட்டி போதுண்டா சாமி என்றாகி விட்டது.விஜய் டிவி கவனிக்குமா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க சீன் கிரியேட்டர் ; நன்றி

      Delete
  11. Anonymous8:02:00 PM

    "ஜீன்ஸ் பட " மாத்தி யோசி" பாட்டை " boss athu BOYS movie

    ReplyDelete
    Replies
    1. Yes. You are correct. Will change it.

      Delete
  12. Anonymous8:12:00 PM

    ஆஜித் பாடிய வந்தே மாதரம் பாட்டை இதற்கு முன் நேரு உள்விளையாட்டரங்கில் ஒரு சீனர் பாட கேட்டிருக்கிறேன்.

    Dream On 2010 என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அப்போதும் ஏ.ஆர்.ரகுமான் தான் சிறப்பு விருந்தினர்.

    சீனர் பாடிய பாடலின் லிங்க் இங்கே - http://dreamon2010.com/

    அவர் பாடிய போது தெளிவாய் கேட்ட வார்த்தைகள் ஒலிப்பதிவின் போது சரியாக கேட்கவில்லை. ஆனாலும் மேடையில் அந்த பாடல் வெற்றியை பெற்றுத் தரக்கூடிய ஒரு தேர்வே.

    ReplyDelete
    Replies
    1. மிக நன்றாக சொன்னீர்கள் நன்றி

      Delete
  13. இந்த நிகழ்ச்சியும் என்னை பொருத்த வரையில் வேஸ்ட்டுதான் சொல்லுவேன்.ஏதோ ஒருவாட்டி நிகழ்ச்சி பார்க்கிரப்பனா பரவாயில்லை.சும்மா சும்மா ஒரே மாதிரினா சரியான போர் நிகழ்ச்சி தான் இது.அடுத்த தலவழி உருவாக்கி ரெடியாவேர வச்சு இருப்பானுன்க விஜய் டீ.வி காரங்கே.இவங்க டி.வில எதாவது நிகழ்ச்சி ஹிட் ஆச்சுன அத நார் நார்ர கிழிஜ்சி தொங்கிறவரைக்கும் 5,6 சிசன் போடாமா விட மாடானுங்க.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி Arif

      Delete
  14. நானும் பார்த்தேன் சார்.. ஆனால் முழுதாக பார்க்கவில்லை... ஆஜித் ரொம்ப அழகா பாடினான்...
    வாழ்த்துக்களுக்கு நன்றி சார்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி. பக்ரீத் வாழ்த்துகள் சமீரா

      Delete
  15. மா கா பா ..அபர்ணாவின் முடி அலங்காரத் தயாரிப்பைப் பார்த்து , அபர்ணா தலையில் கொண்டை என்று சொல்லியவுடன் ,போடா...என்று அபர்ணா சொல்லாமல்
    முழுங்கியதை பார்த்தவுடன் , பெண்கள் இந்த வார்த்தைகளைக் கூட சரளமாக சொல்வார்களா என்று ஆச்சர்யம் கொண்டேன்!

    ReplyDelete
    Replies
    1. :))

      கருத்துக்கு நன்றி IlayaDhasan

      Delete
  16. பரிசு யாருக்கு என்று முதலே எதிர்பார்த்ததுதான்..... விஜய்யின் மிக நல்ல ஒரு நிகழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. வாங்க துஷ்யந்தன் நன்றி

      Delete
  17. கவுதம் பொதுவாகவே சோகப் பாடல்களே தெரிவு செய்தாரோ என்று தோன்றியது விடுகதையா நிச்சயம் தவறான செலெக்ஷன். சுகன்யாவும் பாடல் செலேக்ஷனில் தவறி விட்டால். ஆனாலும் சுகன்யா, யாழினி ஆகியோருக்கு நல்ல குரல் வளம். இது மாதிரி நிகழ்ச்சிகள் ஒன்டே மேட்ச் மாதிரி. போட்டி அன்று எது க்ளிக் ஆகிறதோ அதுதான் வின்னர்!

    ReplyDelete
  18. இது அங்கீகரிக்கப் பட்ட போட்டி அல்ல..
    WWF & IPL போல Just a Show...
    ASS (Airtel Super Singer) is neither a sport nor a competition.
    இந்த விளம்பரதாரர் நிகழ்ச்சியை விமர்சிப்பது நாமே இலவசமாக விளம்பரம் செய்வது போலாகும்.

    ReplyDelete
  19. அதெப்படி சார், ஃ பைனல்சுக்கு வரவே லாயக்கில்லாத ஒருத்தன் வைல்டு கார்டுல உள்ளே வந்து முதல் இடத்தை பிடிக்க முடியும்? எங்கேயோ இடிக்குது. இதில் பித்தலாட்டம் இருப்பதாக பலர் சொல்றாங்க இரண்டாவதா வந்த பொண்ணு தான் உணமியிலேயே பட்டம் வெள்ளத் தகுதியானவள்னும் சொல்றாங்க.

    \\இரவு 11.45-க்கு போட்டியில் ஜெயித்தவர்கள் விபரம், நிகழ்ச்சி நேரே பார்த்தவர்கள் மூலம் இணையத்தில் வந்துடுச்சு. \\ அங்கேயே நம்மாளுங்க லேப்டாப்பில் இணைய இணைப்போட உட்கார்ந்துகிட்டு சுடச் சுட பதிவே போட்டாங்கலாமே!! ரொம்ப முன்னேறிட்டாங்க...........

    ReplyDelete
    Replies
    1. விஜய் வழக்கமாய் நன்கு பாடுபவரை வெளியேற்றி பின் ஒய்ல்ட் கார்ட் மூலம் உள்ளே கொண்டு வரும். சென்ற முறை சீநியரில் வென்ற சாய் சரண் கூட வெளியேற்றப்பட்டு பின் ஒய்ல்ட் கார்ட் மூலம் வந்தவர் தான் !

      Delete
  20. //இரவு 11.45-க்கு போட்டியில் ஜெயித்தவர்கள் விபரம், நிகழ்ச்சி நேரே பார்த்தவர்கள் மூலம் இணையத்தில் வந்துடுச்சு. ஆனால் அவர்கள் இரண்டு மணி நேரம் கழித்து அதிகாலை 1.45-க்கு தான் டிவியில் முடிவுகளை அறிவித்தனர் !// அப்புறம் எப்டி சார் அது லைவ் ப்ரோக்ராம் ...

    இந்த ப்ரோக்ராம் பார்க்கிறது இல்லை.. இருந்தாலும் சுவாரசியமான சம்பவங்கள் பகிர்ந்த்ததர்க்கு நன்றி

    ReplyDelete
  21. உங்கள் உடயை பார்வை மிகவும் சரியான பார்வை.எந்தவிதமான பாரபச்சமில்லாத தெளிவான பார்வைக்கு .... பாரட்டு... நன்றி... தொடரட்டும் இந்த பணி.

    ReplyDelete
  22. இது நம்ம ஏரியா இல்லைன்னு வேகமா ஸ்க்ரோல் பண்ணி கீழே வந்தா, அட எனக்காக வாழ்த்துகள்!! நன்றி.

    ReplyDelete
  23. //பிரகதிக்கு முதல் இடம் வந்தால் "வேறு பல சர்ச்சைகள்' வந்திருக்கும்//
    எனக்கு இது மட்டும் தெளிவா புரியல மோகன் சார்... எப்படின்னு கொஞ்சம் தெளிவுபடுத்துங்க....

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...