பசங்க என்கிற தனது முதல் படத்திலேயே அசத்தியவர் இயக்குனர் பாண்டிராஜ் . பின்
வம்சம் மற்றும் மெரீனா என முதலுக்கு மோசமில்லாத படங்கள் தந்தவர்,
இம்முறை முழுக்க முழுக்க காமெடியை நம்பி களம் இறங்கியிருக்கிறார்
கதை
விமல் மற்றும் சிவ கார்த்திகேயன் வேலையின்றி ஊரில் சுற்றி வரும் நண்பர்கள். கூடவே கல்யாணம் ஆகி வீட்டோடு மாப்பிள்ளையாய் இருக்கும் பரோட்டா சூரி. பொறுப்பின்றி இருக்கும் இவர்கள் பிரிந்தால் தான் உருப்படுவார்கள் என பெற்றோர் பல விதமாய் முயற்சிக்கிறார்கள்.
ஹீரோக்களின் ஒரே குறிக்கோள் உள்ளாட்சி தேர்தலில் நின்று கவுன்சிலர் ஆவது. கிளைமாக்ஸ் நெருக்கத்தில் அந்த தேர்தலும் வருகிறது. நம் ஹீரோக்கள் நின்றனரா வென்றனரா என்பதை சிரிக்க சிரிக்க சொல்கிறார்கள்
****
இதனை டபிள் ஹீரோ சப்ஜெக்ட் என்பதை விட ட்ரிபிள் ஹீரோ சப்ஜக்ட் என சொல்லலாம்.
முதல் ஹீரோ - சிவகார்த்திகேயன். அடுத்து - பரோட்டா சூரி. மூன்றாவது - விமல்.
சிவகார்த்திகேயனுக்கு - டைலர் மேட் ரோல். டிவி யில் எப்படி காமெடி செய்து நம்மை சிரிக்க வைப்பாரோ அதே பணியை தொடர்கிறார். ஓட்டு சேர்க்கிறேன் என இவர்கள் அடிக்கும் லூட்டி ஒவ்வொன்றும் வெடி சிரிப்பு ! குறிப்பாக பஸ் ஸ்டாண்டில் காத்திருக்க, ஒருவர் ஓடிவந்து அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கோம் என சொல்ல, அதற்கு ஹீரோக்கள் போடும் பில்ட் அப் தியேட்டர் குலுங்குகிறது. கிளை மாக்சில் எப்படியும் தேர்தலில் சிவகார்த்தி ஜெயிப்பார் என நினைத்தால் அந்த காட்சியையும் அதகள காமெடியாக்கினர்.
சால்வையை டாஸ்மார்க்கில் குடிப்போருக்கு போட்டு ஓட்டு கேட்பது, தேர்தல் பிரசாரத்தை செண்டிமெண்டலாக டாஸ் மார்க்கில் துவங்குவது என ரவுண்டு கட்டி அடிக்கிறார்கள்
பரோட்டா சூரி. சீரியசாக முகத்தை வைத்து கொண்டு இவர் அடிக்கிற கமண்ட் ஒவ்வொன்றுக்கும் செம ரெஸ்பான்ஸ். மனுஷன் இந்த படத்தை வைத்து சம்பளத்தை நிச்சயம் உயர்த்தி விடுவார்
" கல்யாணத்துக்கு முன்னாடி என் பொண்டாட்டி ஊமை மாதிரி இருந்தா "
" கல்யாணத்துக்கு அப்புறம்?"
" நான் செவிடு மாதிரி இருக்கேன்" .. இப்படி பெண்களை கிண்டலடிக்கும் வசனங்களுக்கு ஓஹோன்னு சவுண்ட் விடுறாங்க மக்கள்.
ஒரு காட்சியில் ஒரு பெரிய மனிதர் சீரியசாக பேச சூரி மைண்ட் வாய்ஸ் இப்படி சொல்கிறது " ரொம்ப நல்லவரா இருக்காரே; பேசாம உன் வீட்டுக்கு நான் வீட்டோட மாப்பிள்ளை ஆயிருக்கனும்யா "
மாம்ஸ் கிப்ட் என போட்ட பைக்கில் சுற்றுவதும், 'வெட்கம் ரோஷமே இல்லையா ?" என கேட்கும் பொண்டாட்டிக்கு சொல்லும் பதிலாகட்டும் சூரி பிச்சு உதறிட்டார்.
படத்துக்கு திருஷ்டி பரிகாரமே விமல் தான். சிவா மற்றும் சூரி முன்பு இவர் சுத்தமாய் எடுபடாமல் போகிறார். அதுவும் இவருக்கும் சிவாவுக்கும் அவ்வப்போது வரும் அடிதடி சண்டைகளுக்கு வலுவான காரணம் எதுவுமே இல்லை. பிந்து மாதவியிடம் அடி வாங்கி கொண்டு இவர் விழிப்பது அதிகம் எடுபடலை. ஆனால் பிந்து மாதவியின் அப்பா " இது ஒரு பரம்பரை வியாதி; என் மாமியார் மற்றும் என் பெண்டாட்டி எல்லாரும் இப்படி தான் என விளக்கம் சொல்ல அதற்கு அவர்கள் கட்டும் ஆக்ஷன் காட்சிகள் .. வயிற்று வலி தான் !
படத்தின் இனிய சர்ப்ரைஸ் - சிவா ஜோடியாக வரும் ரெஜினா..
வாவ்.. குறைவான மேக் அப்பிலேயே அசத்துகிறார் . செம கியூட். வருங்கால தமிழ் படங்களில் வாய்ப்பு தாருங்கள் டைரக்டர்களே !
பிந்து மாதவி முதல் சீனில் கண்ணடித்து கொண்டே வந்து பயமுறுத்துகிறார் போக போக இவரும் மேக் அப் இன்றி வசீகரிக்கிறார்.
ஓரிரு பாடல்களே தேறுகின்றன. சிவா - ரெஜினா பாட்டு வரும் இடம் பொருந்தாமல் செய்த திணிப்பு.
கிராமங்களில் ரயிலடி தான் நண்பர்கள் ரெகுலராய் சந்திக்கும் இடமாய் இருக்கும். அதே போல இங்கு நண்பர்கள் எப்போதும் ரயிலடி பெஞ்சிலேயே கிடக்கிறார்கள். அந்த பின்னணியே வித்யாசமாய் இருக்கு
டில்லி கணேஷ், இயக்குனர் மனோஜ் குமார் என பல குட்டி பாத்திரங்கள் அழகு.
பாண்டிராஜ் - தெளிவாய் காமெடியை நம்பி இறங்கியுள்ளார். இடைவேளையின் போது 2 ஹீரோயின்களும் ஹீரோக்களை அடித்து விரட்டுகிறார்கள். மீண்டும் படம் போட்டதும் வாங்கி வந்த பப்ஸ் சாப்பிட்டு முடிப்பதற்குள் சொல்லி வைத்த மாதிரி இருவரும் மன்னித்து சேர்த்து கொள்கிறார்கள். இப்படி சில தலை சுற்றல்கள் இருந்தாலும் ஜாலியாக குடும்பத்துடன் பார்க்கிற மாதிரி ஒரு படம் கொடுத்தமைக்கு வாழ்த்துகள் !
2 மணி நேரம் சிரிக்க வைத்து விட்டு, கடைசி 10 நிமிஷம் சீரியஸ் சீன் போட்டு, மீண்டும் ஜாலியாக தான் படத்தை முடிக்கிறார்கள். நிச்சயம் அந்த 10 நிமிஷம் இல்லாட்டி படத்தில் ஒண்ணுமே இல்லை என்று பொதுமக்கள் சொல்லியிருப்பார்கள். ஓரளவு சரியாக தான் அந்த எமோஷனல் காட்சிகளை ( அப்பா செண்டிமெண்ட் ) வைத்துள்ளனர்!
படம் முடிந்ததும் மக்கள் மிக திருப்தியாக சிரித்து பேசியவாறு செல்கிறார்கள்.
இணையத்தில் படம் ரிலீஸ் ஆகாமல், DVD கிடைக்காமல் தியேட்டரில் மட்டுமே பார்க்க முடியும் என்றிருந்தால் நிறையவே லாபம் பார்க்கும் இப்படம்.. திருட்டு பிரிண்ட் தடை செய்வது சாத்தியமே இல்லை என்பதால் நிச்சயம் போட்ட காசை எடுத்து விடுவார்கள் !
ஒரு முறை பார்த்து ஜாலியாய் சிரிக்கலாம் இந்த பில்லா - ரங்காவை !
அண்மை பதிவுகள் :
சென்னையில் ஒரு நாள் மலையாள ஒரிஜினலை மிஞ்சியதா - விமர்சனம்

விமரிசனம் நல்லாஇருக்கு படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டும் விதமாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநன்றி பூந்தளிர் மகிழ்ச்சி
Delete//இணையத்தில் படம் ரிலீஸ் ஆகாமல், DVD கிடைக்காமல் தியேட்டரில் மட்டுமே பார்க்க முடியும் என்றிருந்தால் நிறையவே லாபம் பார்க்கும் இப்படம்.. திருட்டு பிரிண்ட் தடை செய்வது சாத்தியமே இல்லை என்பதால் நிச்சயம் போட்ட காசை எடுத்து விடுவார்கள் !//
ReplyDelete:)
ஜெட்லி : வாங்க நன்றி
Deleteநன்றி. படம் பார்த்து சிரித்திடுவோம்.
ReplyDeleteநன்றி மாதேவி :)
Deleteபொறுமையாக பார்க்கிறேன்.
ReplyDeleteகுட்டி பிசாசு : ரைட்டு :)
Deleteநல்ல விமர்சனம்.
ReplyDeleteநன்றி MSD
Deleteஓகே பாஸ் படத்தை நிச்சயம் பார்த்துட வேண்டியதுதான்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete