தமிழகத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாய் வைத்து மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற படம் - டிராபிக். அதன் ரீ மேக் உரிமை வாங்கி ராதிகா சரத்குமார் தயாரிக்க, சண் பிக்சர்ஸ் வெளியீடாக வந்துள்ளது சென்னையில் ஒரு நாள்.
கதை
செப்டம்பர் 16- அன்றைய தினம் பலரின் வாழ்வை புரட்டி போட்டு விடுகிறது.
காலை நேரம் - சாலையில் ஒரு விபத்து நிகழ்கிறது. டூ வீலர் பில்லியனில் அமர்ந்து சென்ற வாலிபன் கீழே விழுந்த மண்டையில் அடிபட்டு நினைவை இழக்கிறான் அவனது தந்தை (மருத்துவர்) ஒரே பையன் என காப்பாற்ற சொல்லி கெஞ்சுகிறார்.
இன்னொரு புறம் பிரபல நடிகர் பிராகாஷ் ராஜின் 12 வயது மகளுக்கு மிக அவசரமாக இருதயம் தேவைப்படுகிறது. பெரிய இடத்து பிரஷர் எல்லாம் தந்து கேட்டாலும் பையனின் தந்தை " என் மகனை அவரசமாய் கொல்ல நான் தயார் இல்லை" என்கிறார். பின் அவர் இனி தன் மகன் பிழைக்க வாய்ப்பு இல்லை என உணர்ந்து, இருதய மாற்றுக்கு ஒப்பு கொள்ள, அந்த இளைஞனின் இருதயத்தை மூவர் அணி எடுத்து கொண்டு பயணமாகிறது
இதில் டிரைவராக செல்பவர் சேரன். போலிசாக இருந்து லஞ்சம் வாங்கி, Suspend ஆனவர். இதனால் அவர் தங்கை கூட சரியே பேசாமல் இருக்க, இந்த விஷயத்தில் நல்ல பெயர் கிடைத்தால் தன் மேல் உள்ள கறையை அழிக்கமுடியும் என தைரியமாக இறங்குகிறார். இன்னொருவர் இறந்த பையனை தனது பைக்கில் வைத்து பயணமான நண்பன். மூன்றாம் நபர் ஒரு டாக்டர்.
இந்த கார் செல்லும் வழியில் உள்ள தடைகளை நீக்கும், தேவையான உத்தரவுகள் தரும் உயர் அதிகாரியாக சரத்குமார்
மிக வேகமாக செல்லும் கார் திடீரென காணாமல் போகிறது அது என்ன ஆனது சரியான நேரத்தில் இருதயம் சென்று சேர்ந்ததா என்பது க்ளைமாக்ஸ்.
************
ரீ மேக் படங்களை பார்க்கும் போது முக்கிய பிரச்சனை - ஒரிஜினலடுன் ஒப்பிட்டவாறே இருப்போம். என்ன தான் எடுத்தாலும் " ஒரிஜினல் மாதிரி இங்கே இல்லை ; அங்கே இல்லை" என சொல்வது ரொம்ப ஈசி.
ஆனால் இந்த படம் நிச்சயம் ஒரிஜினல் அளவிற்கு - சில இடங்களில் அதை விட நன்றாகவே எடுத்துள்ளனர்
முக்கிய காரணம் காஸ்டிங். சரத் குமார், சேரன், பிரசன்னா, பிரகாஷ் ராஜ் , ராதிகா இவர்கள் அனைவருமே பாத்திரத்துக்கு நன்கு பொருந்துவதோடு நன்றாக நடித்துள்ளனர். மேலும் மொழி முழுவதும் புரிவதால் இன்னும் நன்கு ரசிக்க முடிகிறது
**************
இது முழுக்க முழுக்க ஒரு எமோஷனல் படம். பார்க்கும் ஒவ்வொருவரையும் அந்த உணர்வுகளில் ஒரு ரோலர் கோஸ்டர் ரைட் அழைத்து செல்கிறார்கள்.
கார்த்திக் காதலியாக வரும் அதிதியின் கண்ணாடி ஆரம்பத்தில் உறுத்தி கொண்டே இருந்தாலும் போக போக பழகிடுது. குறிப்பாய் கார்த்திக் இதயத்தை தானம் தரலாம் என முதலில் சொல்பவர் இந்த காதலி தான். " Let us give him a wonderful farewell" என்று அவர் சொல்வது தெளிவாய் படமாக்கப்பட்டுள்ளது
பிரகாஷ் ராஜுக்கு அந்த திமிர் பிடித்த நடிகர் பாத்திரம் செமையாக பொருந்துகிறது ( ஆனால் அவர் தன் வீட்டிலே தங்காமல் வேறொரு வீட்டில் எப்பவும் தங்குற மாதிரி ஏன் காட்டுகிறார்கள்?). டிவி பேட்டியில் காமிராவை ஆப் செய்ய சொல்லி விட்டு " உனக்கு பிடிச்ச டீச்சர் யாரு ? " என மகளிடம் கேட்டு " சௌமியா டீச்சர் " எனும்போது ஒரிஜினல் பார்க்காத மக்கள் குதூகலிக்கிறார்கள்.
ஏற்கனவே மலையாளத்தில் பார்த்த படம். ஒவ்வொரு காட்சியும் என்ன ஆகும் என தெரியும். இருந்தும் சில காட்சிகளில் உணர்ச்சி வசப்பட்டு கண்கள் கலங்குவதை தடுக்க முடிய வில்லை.
பதிவர்களில் சிலர் மலையாளத்துடன் ஒப்பிட்டு " அந்த அளவு இல்லை" எனலாம். ஆனால் தியேட்டரில் அமர்ந்து பார்த்த பலரும் படத்தை மிக ரசித்தனர் என்ஜாய் செய்தனர்
சென்னையில் ஒரு நாள் - நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம் !
************
************
அண்மை பதிவுகள் :
கேடி பில்லா கில்லாடி ரங்கா காமெடி கலாட்டா - Go For it !

ஆரம்பத்தில் வரும் டூயட் மற்றும் குட்டி பாடல் இரண்டுமே குட். படத்தின் இறுதியில் நாடோடிகள் சம்போ சிவா சம்போ பாணியில், கார் வேகமாக செல்லும் போது ஒரு பாட்டு. பாடல்களை விடவும் பின்னணி இசை படத்துக்கு தேவையான பரபரப்பை சரியாக கூட்டுகிறது. (மலையாள இசையமைப்பாளர் )
லஞ்சம் வாங்கி மாட்டி கொள்ளும் சேரனின் பெயர் - சத்திய மூர்த்தி :)) சேரன் ஓவர் ஆக்டிங் செய்யாமல் சரியாக செய்துள்ளார். வாழ்க்கை என்கிற நெடும் பயணத்தில், தவறு செய்யும் மனிதனுக்கும் கூட மறு வாய்ப்பு ஒரு நாள் கிடைக்கும் என்பது இவர் பாத்திரம் மூலம் அழுத்தம் திருத்தமாய் பதிவாகியுள்ளது அழகு.
லஞ்சம் வாங்கி மாட்டி கொள்ளும் சேரனின் பெயர் - சத்திய மூர்த்தி :)) சேரன் ஓவர் ஆக்டிங் செய்யாமல் சரியாக செய்துள்ளார். வாழ்க்கை என்கிற நெடும் பயணத்தில், தவறு செய்யும் மனிதனுக்கும் கூட மறு வாய்ப்பு ஒரு நாள் கிடைக்கும் என்பது இவர் பாத்திரம் மூலம் அழுத்தம் திருத்தமாய் பதிவாகியுள்ளது அழகு.
கார்த்திக் காதலியாக வரும் அதிதியின் கண்ணாடி ஆரம்பத்தில் உறுத்தி கொண்டே இருந்தாலும் போக போக பழகிடுது. குறிப்பாய் கார்த்திக் இதயத்தை தானம் தரலாம் என முதலில் சொல்பவர் இந்த காதலி தான். " Let us give him a wonderful farewell" என்று அவர் சொல்வது தெளிவாய் படமாக்கப்பட்டுள்ளது
பிரகாஷ் ராஜுக்கு அந்த திமிர் பிடித்த நடிகர் பாத்திரம் செமையாக பொருந்துகிறது ( ஆனால் அவர் தன் வீட்டிலே தங்காமல் வேறொரு வீட்டில் எப்பவும் தங்குற மாதிரி ஏன் காட்டுகிறார்கள்?). டிவி பேட்டியில் காமிராவை ஆப் செய்ய சொல்லி விட்டு " உனக்கு பிடிச்ச டீச்சர் யாரு ? " என மகளிடம் கேட்டு " சௌமியா டீச்சர் " எனும்போது ஒரிஜினல் பார்க்காத மக்கள் குதூகலிக்கிறார்கள்.
கணவனை அதட்டும் அந்த மனைவிக்கு ராதிகா பக்கா. " ஒவ்வொரு மனுஷனுக்கும் குடும்பம் தான் முக்கியம். வெளியிலே ஜெயிச்சாலும் குடும்பத்தில் நல்ல பேர் இல்லாட்டி அந்த மனுஷன் தோத்தவன் தான் " என்று ராதிகா பேசும் வசனத்துக்கு விசில் பறக்கிறது. ஒரு தயாரிப்பாளராக மலையாளத்தை விட ரிச்சாகவும் படம் வந்துள்ளதற்கு இவரை பாராட்ட வேண்டும்.
இருதய தானம் பெரும் பிரகாஷ் ராஜ் மகள் செம கியூட். அப்பாவின் அன்புக்கு ஏங்குவதில் தொடங்கி, தன்னை பற்றி அப்பாவுக்கு தெரியுதா என கேள்விகள் எழுதி தருவது வரை பேசாமலே நம் அன்பையும் பரிதாபத்தையும் சம்பாதிக்கிறாள்
ஏராள பாத்திரங்கள் இருந்தாலும் குழப்பமின்றி பொறுமையாய் அறிமுகம் செய்வது அழகு. இதயம் தரும் கார்த்திக்கின் பெற்றோராய் வரும் ஜெயப்ரகாஷ் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணா நிறைவு முக்கிய பாத்திரங்களை தவிர மற்றவர்கள் நிறையவே மலையாளிகள் ( இயக்குனர்க்கு ஊர் பாசம் போகுமா என்ன?)
படம் முழுக்க கிண்டி கத்திப்பாரா, போரூர் என நம்ம ஊர் பெயரை கேட்கவே செம ஹாப்பியா இருக்கு
கார் பயணிக்கும் காட்சிகளில் காமிரா பரபரப்பை கூட்டுகிறது. ஆனால் ஹாஸ்பிட்டல் சம்பந்தப்பட்ட காட்சிகளில் தான் அங்கு அவர்களை தவிர வேறு யாருமே காணும். இரண்டு இடத்திலும் ஏதோ அவர்களுக்கு மட்டுமே சிகிச்சை நடக்கிற மாதிரியிருக்கு.
நடிகர் சூர்யாவை சின்ன பாத்திரத்தில் நன்கு யூஸ் செய்திருந்தாலும் படம் முடிந்த பின் அவர் திரையில் தோன்றி உறுப்பு தானம் பற்றி பேசும்போது மக்கள் மெரிசல் ஆகிறார்கள்.
இருதய தானம் பெரும் பிரகாஷ் ராஜ் மகள் செம கியூட். அப்பாவின் அன்புக்கு ஏங்குவதில் தொடங்கி, தன்னை பற்றி அப்பாவுக்கு தெரியுதா என கேள்விகள் எழுதி தருவது வரை பேசாமலே நம் அன்பையும் பரிதாபத்தையும் சம்பாதிக்கிறாள்
ஏராள பாத்திரங்கள் இருந்தாலும் குழப்பமின்றி பொறுமையாய் அறிமுகம் செய்வது அழகு. இதயம் தரும் கார்த்திக்கின் பெற்றோராய் வரும் ஜெயப்ரகாஷ் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணா நிறைவு முக்கிய பாத்திரங்களை தவிர மற்றவர்கள் நிறையவே மலையாளிகள் ( இயக்குனர்க்கு ஊர் பாசம் போகுமா என்ன?)
படம் முழுக்க கிண்டி கத்திப்பாரா, போரூர் என நம்ம ஊர் பெயரை கேட்கவே செம ஹாப்பியா இருக்கு
கார் பயணிக்கும் காட்சிகளில் காமிரா பரபரப்பை கூட்டுகிறது. ஆனால் ஹாஸ்பிட்டல் சம்பந்தப்பட்ட காட்சிகளில் தான் அங்கு அவர்களை தவிர வேறு யாருமே காணும். இரண்டு இடத்திலும் ஏதோ அவர்களுக்கு மட்டுமே சிகிச்சை நடக்கிற மாதிரியிருக்கு.
நடிகர் சூர்யாவை சின்ன பாத்திரத்தில் நன்கு யூஸ் செய்திருந்தாலும் படம் முடிந்த பின் அவர் திரையில் தோன்றி உறுப்பு தானம் பற்றி பேசும்போது மக்கள் மெரிசல் ஆகிறார்கள்.
ஏற்கனவே மலையாளத்தில் பார்த்த படம். ஒவ்வொரு காட்சியும் என்ன ஆகும் என தெரியும். இருந்தும் சில காட்சிகளில் உணர்ச்சி வசப்பட்டு கண்கள் கலங்குவதை தடுக்க முடிய வில்லை.
பதிவர்களில் சிலர் மலையாளத்துடன் ஒப்பிட்டு " அந்த அளவு இல்லை" எனலாம். ஆனால் தியேட்டரில் அமர்ந்து பார்த்த பலரும் படத்தை மிக ரசித்தனர் என்ஜாய் செய்தனர்
சென்னையில் ஒரு நாள் - நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம் !
************
டிராபிக் ஒரிஜினல் மலையாள படத்தில் விமர்சனம் : இங்கு
************
அண்மை பதிவுகள் :
கேடி பில்லா கில்லாடி ரங்கா காமெடி கலாட்டா - Go For it !
எப்படியோ ஃபோரடிக்காமல் இருந்தால் சரி...
ReplyDeleteவிமர்சனத்திற்கு நன்றி...
உறுப்பு தானம் முக்கியம் என்பதை கட்டும் படமோ
ReplyDeleteசெம விறுவிறுப்பாய் இருக்கும் போலிருக்கு.
ReplyDeleteமொழி நன்றாக புரிகிறது, சில இடங்களில் கண்ணீர் வரவழைத்துவிட்டது என்பதெல்லாம் உண்மை தான்
ReplyDelete//பதிவர்களில் சிலர் மலையாளத்துடன் ஒப்பிட்டு " அந்த அளவு இல்லை" // கொஞ்சங் கூட இல்லை சார்... மிக அதிகமாக எதிர்பார்த்து சென்றேன்.... மிடியல....
சரத்தின் கெத், பிரகாஷ்ராஜின் திமிர் இன்னும் சிலரின் நடிப்பை ரசித்தேன்....
சென்னையில் ஒரு நாள் - நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம் ! ( நிச்சயம் பார்க்க வேண்டும் )
ஆனால் மலையாள சினிமா ட்ராபிக்கிடம் தோற்றுவிட்டது சென்னையில் ஒருநாள்.... படுமட்டமான பின்னணி இசை....
த.ம: 1
ReplyDeleteவிமர்சனம் படம் பார்க தூண்டுகின்றது. நன்றி..
ReplyDeleteகதை நன்றாகவே உள்ளது. படமும் நன்றாக இருக்கும் என நம்புகிறேன்.
ReplyDeleteநல்ல படமாகத்தான் இருக்கும் போல் இருக்கிறது.
ReplyDelete