கலகலப்பு -எப்புடி?
கொஞ்ச நாளாய் ஊரில் இல்லாததால் நண்பர் கேபிள் சங்கர் பணிபுரிந்த இந்த படம் இப்போது தான் பார்க்க முடிந்தது. படம் என்னை அதிகம் கவரலை. ஆனால் பெண்ணுக்கும் மனைவிக்கும் ரொம்ப பிடித்தது. செம காமெடியா இருக்கு; மறுபடி பார்க்கணும் என்று சொல்லி கொண்டுள்ளனர். கதை 25-வருடத்துக்கு முன் வந்திருக்க வேண்டிய ஒன்று என தான் எனக்கு தோன்றியது.
விமலை ஹீரோ என்று சொல்லிவிட்டு மிக முட்டாளாக காட்டியுள்ளனர். பாக்யராஜ் படத்தில் அவர் முட்டாள் போல் தெரிந்தாலும், அந்த பாத்திரத்தில் சிரிக்க வைக்கும் புத்திசாலி தனம் இருக்கும். ஆனால் விமலோ வில்லனிடம் வைரத்தை தானே எடுத்து தருமளவு அறிவாளியாக இருக்கிறார். சந்தானம் காமெடியும் அஞ்சலியின் அழகும் தான் படத்தை பார்க்க வைக்கிறது. படம் ஆவேரேஜ் ஹிட் என கேள்வி.
பெட்ரோல் விலை நியாயமா?
மற்ற நாடுகளை விட இந்தியாவில் பெட்ரோல் அதிக விலை என்பதை அனைவரும் அறிவோம்.அதற்கு அரசாங்கம் சொல்லும் ஒரு காரணம் "பெட்ரோல் நிறுவனங்கள் ஏற்கனவே நஷ்டத்தில் இயங்குகின்றன. இதற்கு மேலும் நஷ்டப்படமுடியாது" என்பதே. டிவியில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆடிட்டர் ஒருவர், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பெட்ரோல் நிறுவனங்களின் லாபம் எத்தனை ஆயிரம் கோடி என பட்டியலிட்டார். கேட்டு விட்டு நொந்து போனேன். இவ்வளவு லாபம் ஈட்டும் போதும் பெட்ரோல் நிறுவனங்கள் ஏன் பெட்ரோல் விலையை இந்த அளவு உயர்த்த வேண்டும்? யாருக்கேனும் விடை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே !
அழகு கார்னர்
இவங்களுக்கு இன்னும் உலக அழகி பட்டம் தராத இந்த சமூகத்தை வன்மையாக கண்டிக்கிறேன் !
சென்னை ஸ்பெஷல்
வேளச்சேரியில் ஒரு வருடம் முன் தொடங்கிய கடை ஊட்டி வெஜிடபிள் & புருட்ஸ்.
பல காய்கறிகள் செம பிரெஷ் ஆக கிடைக்கிறது. மற்ற இடத்தில் கிடைக்காத காய்கள் சிலவும் இங்கு கிடைக்கிறது. விலை reasonable - தான் ! அதிகமில்லை. ஒரு முறை சென்று பாருங்கள். வேளச்சேரி அடையார் ஆனந்த பவனுக்கு மிக அருகில் இந்த கடை உள்ளது
கவிதை கார்னர்
எனக்கு
யாருமில்லை
நான்
கூட! -நகுலன்.
காமெடி போஸ்டர்
டிவி கார்னர்
* நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் இப்போல்லாம் கலந்து கொள்ள வரும் ஆட்கள் கண்ணீர் கதையை பகிர்கிறார்கள். கேட்கும் போது " ஒரு மனுஷனுக்கு இவ்ளோ சோதனையா?" என தோன்றுகிறது. உதாரணத்துக்கு ஒன்று: கலந்து கொண்ட பெண்ணின் சகோதரி, தந்தை, கணவர், என பலரும் தனித்தனியே விபத்தில் இறந்தனராம். எப்படி தான் தாங்குகிறார்களோ? நமக்கு வரும் துன்பமெல்லாம் சிறிது என எண்ண வைக்கும் அளவில் இருந்தது !
** ஸ்னேஹா-பிரசன்னா கல்யாணத்தை ஜவ்வு மாதிரி விஜய் டிவியில் காட்டினர். கொஞ்ச நேரத்துக்கு மேல் பார்க்க முடியலை. இது பற்றி வினவு எழுதிய கட்டுரை வாசித்தீர்களா? செம ஹாட்!
*** ஜீ தமிழில் நிர்மலா பெரியசாமி (வணக்க்க்க்கம்ம்ம்ம் !) ஏதாவது விஷயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சண்டை வந்த கணவன்-மனைவியை அழைத்து மத்திசம் செய்கிறார். எப்போதாவது சானல் மாற்றும் போது இந்த நிகழ்ச்சி சற்று பார்ப்பேன். இந்நிகழ்ச்சி ஒரு பெரிய குற்றத்தை வெளியே கொண்டு வந்துள்ளது ! ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் தன் தந்தையுடன் செல்ல மாட்டேன் என்றும் அவர் மூன்று கொலைகள் செய்தவர் என்றும் சொல்ல, அதே ஊரில் நடந்த மூன்று கொலைக்கு காரணம் யார் என தேடி வந்த போலிஸ் இந்த நபர் தான் காரணம் என கண்டுபிடித்து விட்டது. மனிதர் இப்போ தலை மறைவு. போலிஸ் இப்போ சொல்லுதாம் " நிர்மலா மேடம் உங்களுக்கு நன்ன்ன்ன்ன்றி"
கொஞ்ச நாளாய் ஊரில் இல்லாததால் நண்பர் கேபிள் சங்கர் பணிபுரிந்த இந்த படம் இப்போது தான் பார்க்க முடிந்தது. படம் என்னை அதிகம் கவரலை. ஆனால் பெண்ணுக்கும் மனைவிக்கும் ரொம்ப பிடித்தது. செம காமெடியா இருக்கு; மறுபடி பார்க்கணும் என்று சொல்லி கொண்டுள்ளனர். கதை 25-வருடத்துக்கு முன் வந்திருக்க வேண்டிய ஒன்று என தான் எனக்கு தோன்றியது.
விமலை ஹீரோ என்று சொல்லிவிட்டு மிக முட்டாளாக காட்டியுள்ளனர். பாக்யராஜ் படத்தில் அவர் முட்டாள் போல் தெரிந்தாலும், அந்த பாத்திரத்தில் சிரிக்க வைக்கும் புத்திசாலி தனம் இருக்கும். ஆனால் விமலோ வில்லனிடம் வைரத்தை தானே எடுத்து தருமளவு அறிவாளியாக இருக்கிறார். சந்தானம் காமெடியும் அஞ்சலியின் அழகும் தான் படத்தை பார்க்க வைக்கிறது. படம் ஆவேரேஜ் ஹிட் என கேள்வி.
பெட்ரோல் விலை நியாயமா?
மற்ற நாடுகளை விட இந்தியாவில் பெட்ரோல் அதிக விலை என்பதை அனைவரும் அறிவோம்.அதற்கு அரசாங்கம் சொல்லும் ஒரு காரணம் "பெட்ரோல் நிறுவனங்கள் ஏற்கனவே நஷ்டத்தில் இயங்குகின்றன. இதற்கு மேலும் நஷ்டப்படமுடியாது" என்பதே. டிவியில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆடிட்டர் ஒருவர், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பெட்ரோல் நிறுவனங்களின் லாபம் எத்தனை ஆயிரம் கோடி என பட்டியலிட்டார். கேட்டு விட்டு நொந்து போனேன். இவ்வளவு லாபம் ஈட்டும் போதும் பெட்ரோல் நிறுவனங்கள் ஏன் பெட்ரோல் விலையை இந்த அளவு உயர்த்த வேண்டும்? யாருக்கேனும் விடை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே !
அழகு கார்னர்
இவங்களுக்கு இன்னும் உலக அழகி பட்டம் தராத இந்த சமூகத்தை வன்மையாக கண்டிக்கிறேன் !
சென்னை ஸ்பெஷல்
கவிதை கார்னர்
எனக்கு
யாருமில்லை
நான்
கூட! -நகுலன்.
காமெடி போஸ்டர்
டிவி கார்னர்
* நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் இப்போல்லாம் கலந்து கொள்ள வரும் ஆட்கள் கண்ணீர் கதையை பகிர்கிறார்கள். கேட்கும் போது " ஒரு மனுஷனுக்கு இவ்ளோ சோதனையா?" என தோன்றுகிறது. உதாரணத்துக்கு ஒன்று: கலந்து கொண்ட பெண்ணின் சகோதரி, தந்தை, கணவர், என பலரும் தனித்தனியே விபத்தில் இறந்தனராம். எப்படி தான் தாங்குகிறார்களோ? நமக்கு வரும் துன்பமெல்லாம் சிறிது என எண்ண வைக்கும் அளவில் இருந்தது !
** ஸ்னேஹா-பிரசன்னா கல்யாணத்தை ஜவ்வு மாதிரி விஜய் டிவியில் காட்டினர். கொஞ்ச நேரத்துக்கு மேல் பார்க்க முடியலை. இது பற்றி வினவு எழுதிய கட்டுரை வாசித்தீர்களா? செம ஹாட்!
*** ஜீ தமிழில் நிர்மலா பெரியசாமி (வணக்க்க்க்கம்ம்ம்ம் !) ஏதாவது விஷயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சண்டை வந்த கணவன்-மனைவியை அழைத்து மத்திசம் செய்கிறார். எப்போதாவது சானல் மாற்றும் போது இந்த நிகழ்ச்சி சற்று பார்ப்பேன். இந்நிகழ்ச்சி ஒரு பெரிய குற்றத்தை வெளியே கொண்டு வந்துள்ளது ! ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் தன் தந்தையுடன் செல்ல மாட்டேன் என்றும் அவர் மூன்று கொலைகள் செய்தவர் என்றும் சொல்ல, அதே ஊரில் நடந்த மூன்று கொலைக்கு காரணம் யார் என தேடி வந்த போலிஸ் இந்த நபர் தான் காரணம் என கண்டுபிடித்து விட்டது. மனிதர் இப்போ தலை மறைவு. போலிஸ் இப்போ சொல்லுதாம் " நிர்மலா மேடம் உங்களுக்கு நன்ன்ன்ன்ன்றி"
சினேகா-பிரசன்னா விஜய் டி.வி.கவரேஜ்.. ஓவர் புல்லரிப்பு.!!
ReplyDeleteகலகலப்பு தியேட்டரில் அப்படி சிரிச்சோம்.வீட்டிற்கு வந்ததும் ஜோக் எல்லாம் மறந்துடுச்சு. அனுஷ்கா ஃபோட்டா வேற போட்டிருக்கலாம், இதில் அவ்வளவா அழகாயில்லை!!!!
ReplyDeleteகவிதை கார்னர்
ReplyDeleteஎனக்கு
யாருமில்லை
நான்
கூட! -நகுலன்.
எத்தனை கனம் கவிதையில் !
// இவங்களுக்கு இன்னும் உலக அழகி பட்டம் தராத இந்த சமூகத்தை வன்மையாக கண்டிக்கிறேன் ! //
ReplyDeleteஇந்தப் போட்டோவுக்கு நிச்சயம் உலக அழகி போட்டோ கிடைக்காது. ஏதாவது தெலுங்கு பில்லா ஸ்டில் போட்டா கொஞ்சம் யோசிக்கலாம்.
வானவில் இந்த வாரம் கொஞ்சம் கலர் கம்மியோ....
ReplyDeleteஉலக அழகி.... இது கொஞ்சம் ஓவரா தெரியலையா மிஸ்டர் அய்யாசாமி..... :))))
உலக அழகி ...//
ReplyDeleteஉங்க டேஸ்ட் வித்தியாசம் தான்...-:)
பெட்ரோல் விலை நியாயமா?//
இன்னும் நமக்கு மானிய விலையில் தான் கிடைக்கிறது என்பதை மறந்துவிடுகிறோம் அடிக்கடி...மோகன் மற்றதை வௌவால் பதிவா போடுவார் -:)
Ulaga azhaki... why others have to give..
ReplyDeleteWe will give..
ரெவெரி,
ReplyDelete//மோகன் மற்றதை வௌவால் பதிவா போடுவார் -:)
7:30:00 PM//
அந்த மாநியமே ஏமாத்து வேலை. அரசாங்கம் சட்டையின் ஒரு பையில் இருந்து இன்னொரு பையில் காசு எடுத்துப்போட்டுக்கொண்டு மக்களுக்கு மாநிய விலையில் தருகிறோம்னு சொல்லிக்குது.
பதிவெல்லாம் போட்டு 6 மாசம் ஆச்சு அதுக்கு அப்பப்போ ஃபாலோவ் அப் ஓடிக்கிட்டு இருக்கு.
அடுத்த பதிவில் மாநியம் எங்கே போகுதுனு சொல்லுகிறேன்.
சிவகுமார் : ஆம் அனைவரும் காசு பார்த்துட்டனர். நம் காதில் பூ
ReplyDeleteஅமுதா மேடம்: எனக்கு இந்த படத்திலேயே அழகா தான் தெரியுறாங்க.
ReplyDeleteராஜ ராஜேஸ்வரி: ஆம் கவிதை பல விஷயம் சொல்லுது
ReplyDeleteஹாலிவுட் ரசிகன்: டாப் ஆங்கிளில் தலைவி படம் அருமையா கீது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ரசனை
ReplyDeleteவெங்கட்: அப்படியா? என்னன்னு பாக்குறேன் ! நன்றி
ReplyDeleteரெவரி: மானியம் என்றால் எப்படி நிறுவனங்கள் லாபத்தில் இயங்குது? அதான் புரியலை !
ReplyDeleteவடிவேலன்: கை குடுங்க. நீங்க நம் இனம்
ReplyDeleteவவ்வால்: நீங்க பதிவு எழுத இங்கு யோசனை கிடைத்தால் அதுக்கான தக்க சன்மானம் இனி குடுத்துடணும் ! :))
ReplyDeleteமோகன்/வவ்வால் FYI...
ReplyDeletehttp://peakoil.com/production/india-land-of-energy-opportunity/
கவிஞர்கள் கவிதை பாட ரூம் போட்டு யோசிக்கிற மாதிரி வவ்வால் பதிவு போட இங்கேதான் உலாத்தறதா பதிவுலக கிசு...கிசு...மெய்யாலுமா!
ReplyDeleteகலகலப்பு - அஞ்சலி & சந்தானம் காமெடி - இவையிரண்டுதான் படத்தை பொறுமையாக பார்க்க காரணம் :))
ReplyDeleteஅனுஷ்கா - ம்ம்...இன்னும் அழகான ஃபோட்டோவா போட்டிருக்கலாம் :(
ஊட்டி வெஜிடபிள்ஸ் - போன வாரம்தான் போயிருந்தேன். பழங்களும் மத்த கடைகளை ஒப்பிடும்போது கம்மியான விலைதான்.
மோகன்,
ReplyDelete//வவ்வால்: நீங்க பதிவு எழுத இங்கு யோசனை கிடைத்தால் அதுக்கான தக்க சன்மானம் இனி குடுத்துடணும் ! :))//
பெருசு பெருசா பின்னூட்டம் போடுறேன் அதை விட சன்மானம் வேறு உண்டோ?
அப்புறம் அந்த பதிவெல்லாம் 6 மாசம் முன்னாடியே போட்டாச்சுனு சொன்னப்பிறகும் ஐடியானு சொல்லிக்கிறிங்களே, கிட்டத்தட்ட பெட்ரோல் வச்சே நான் 4-5 பதிவு போட்டாச்சு, அப்புற்ம் பொருளாதாரப்பதிவிலும் அப்போ அப்போ ஊறுகாயா பெட்ரோலை தொட்டுக்கிட்டாச்சு, இனிமே தான் ஐடியா கொடுக்கப்போறாப்போல பேச்சு :-))
அந்தப்பதிவெல்லாம் படிக்காம இருந்ததுக்கு நான் ஃபைன் போடணூம்!
-----
இதுல ராஜ நடை வேற அப்போ ,இத்தனை நாளா படிக்காமலே தான் பெரிசா பின்னூட்டம் போட்டிங்களா?
----
ரெவெரி உங்க சுட்டிய பார்க்கிறேன் , பீக் ஆயில் கிரிசிஸ் பத்திக்கூட சொல்லியாச்சு, இப்போ ஓடுற பிரச்சினை போஸ்ட் பீக் ஆயில் கிரிசிஸ் என சொல்லலாம்.
எது எப்படியோ இன்னும் 70 ஆண்டுகளில் உலகில் 90 சதவீத பெட்ரோல் இல்லாம போயிடும், அதன் பலனை அனுபவித்தே தீரணும், ,என்பதிவில் சொல்லியிருக்கும் பயோடீசல் முறையை கத்துவச்சுக்கோங்க உதவும் :-))
கலக்கல் !
ReplyDeleteஅருமை.
ReplyDeleteவாழ்த்துகள்.
\\இவங்களுக்கு இன்னும் உலக அழகி பட்டம் தராத இந்த சமூகத்தை வன்மையாக கண்டிக்கிறேன் ! \\ உலக அழகின்னு ஒருத்தருக்கு மட்டும் கொடுத்து மத்தவங்களை அழகி இல்லைன்னு கேவலப் படுத்தும் இந்த சமூகத்தை வன்மையாக கண்டிக்கிறேன் ![அது சரி, யாரு இந்தம்மா?]
ReplyDeleteOoty vegitables kadaila yevalo kamison vanguneenga
ReplyDeleteவாசிம் கான்: அதுக்கு அடுத்த வாரமே அந்த கடை ஊழியர்கள் அடித்த கூத்தை இந்த லிங்கில் உள்ள பதிவில் எழுதி இருக்கேன். படிச்சு பாருங்கள்.அதில் எழுதி இருக்கும் பின்னூட்டங்களும் சேர்ந்து
ReplyDeletehttp://veeduthirumbal.blogspot.in/2012/06/blog-post_20.html
நாம் என்ன பத்திரிக்கையா நடத்துறோம்? நம்ம பதிவை பல ஆயிரங்கள் பேர் படிக்க? இதுக்காக நம்மை கமிஷன் தர்றோம்னு சில பேர் அப்ரோச் செய்ய?
நிற்க. நான் யாரிடமும் கமிஷன் வாங்கும் நிலையில் ஆண்டவன் என்னை வைக்க வில்லை