Tuesday, June 26, 2012

உணவகம் அறிமுகம்: மெட்ராஸ் கபே, ஆலந்தூர்

சென்னை - ஆலந்தூரில் ராஜா என்றொரு தியேட்டர் உள்ளது. " அஞ்சரைக்குள்ள வண்டி", "பாவம் கொடூரன்" போன்ற மலையாள படங்களை மட்டுமே வெளியிட தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த தியேட்டர் இது ! இதனால் சென்னை வாசிகள் பலருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். இந்த தியேட்டருக்கு அடுத்த தெருவில், தியேட்டரில் இருந்து நூறு மீட்டர் தொலைவில், ஆலந்தூர் எம். கே. என் சாலையில் உள்ளது மெட்ராஸ் கபே.

நாங்கள் சில ஆண்டுகள் ஆலந்தூரில் குடியிருந்தோம். அப்போதெல்லாம் எனது ஆஸ்தான ஹோட்டல் மெட்ராஸ் கபே தான். மனைவி தன்னுடைய அம்மா வீட்டுக்கு செல்லும் போதோ, மனைவியுடன் சண்டை வந்து, வீட்டு சாப்பாட்டை புறக்கணிக்கும் நாட்களிலோ நான் நாடுவது மெட்ராஸ் கபேயை தான். இவை தாண்டி, பொழுது போகாத வார இறுதி விடுமுறை நாட்களின் மாலை நேரத்தில் நைசாக வீட்டிலிருந்து எஸ்கேப் ஆகி மெட்ராஸ் கபே வருவதுண்டு.

மெட்ராஸ் கபேயில் டிபன் ஐட்டங்கள் தான் பிரமாதமாயிருக்கும். மதிய உணவு அந்த அளவு அருமை என சொல்ல முடியாது.

சரி டிபன் ஐட்டங்களுக்கு வருவோம். எனக்கு இங்கு மிக பிடித்தது தோசை தான்.

உண்மையை சொல்ல வேண்டுமெனில் வீட்டில் தோசை சாப்பிட நிறைய கண்டிஷன் போடுவேன். குறிப்பாய் தாகம் எடுக்குமென இரவு நேரத்தில் வீட்டில் எப்போதும் தோசை சாப்பிடாத நான், இந்த ஹோட்டலில் மட்டும் இரவானாலும் தோசை சாப்பிட தவற மாட்டேன்.

மாடல் தோசை- From- இணையம்
சாதா தோசை என்று சொல்வார்கள். ஆனால் அதுவே பெரிய சைசில் இருக்கும். மாலை நேரத்தில் நைசாக செல்வேன் என்றேனே... அப்போது ஒரே ஒரு தோசை மட்டும் தான் சாப்பிடுவேன். ஆனால் மிக சின்ன சின்ன துண்டாய் சாம்பார் மற்றும் சட்னியுடன் கலந்து பிச்சு உதறிடுவேன். தோசை மாவு  புளிக்காமல்,  தோசை அவ்வளவு அருமையாய் இருக்கும். இங்கு உள்ள அளவு சுவையான தோசை வேறு எங்கும் சாப்பிட்டதில்லை.

தோசைக்கு தொட்டு கொள்ள சாம்பார் மிக அருமையாய் இருக்கும் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. தோசைக்கு நாம் கொடுக்கிற காசில் ஒரு ரூபா கூட அவங்களுக்கு லாபம் வராது என்கிற அளவில் சாம்பாரை குடித்து விட்டு தான் மறுவேலை.

ஒரு தோசையை இருபது நிமிடம் மிக மெதுவாய் ரசித்து சாப்பிட்டு விட்டு எழுந்தால் வரும் ஆனந்தம் இருக்கே அடடா ! பத்மா சேஷாத்ரியில் ஸ்கூல் சீட் கிடைத்த தந்தை மாதிரி பெருமிதமாய் வெளியே வருவேன்.

மாலையில் இப்படி தோசை + சாம்பார் கட்டு கட்டி விட்டு வீட்டில் ஒழுங்காய் சாப்பிடாமல் முழிக்கும் போது தான் " மெட்ராஸ் கபே தோசை" உள்ளே போன உண்மை வெளியே வரும் !

என்றைக்கும் இங்கு நான் இரண்டாம் தோசை சாப்பிட்டதே இல்லை. ஒன்றிலேயே மனம் நிரம்பி விடும். போலவே இங்கு டிபன் சாப்பிட போய் விட்டு தோசை சாப்பிடாமல் வந்ததே இல்லை.
சரி மற்ற உணவுகளுக்கு வருவோம்:

சப்பாத்தி ரொம்ப சுமார் தான். பரோட்டா மெத்து மெத்து என நல்லா இருக்கும். காலை நேரம் மட்டும் கிடைக்கும் பொங்கல், நெய் நிறைய ஊற்றி ஓஹோவென இருக்கும்  ! இட்லியும் பூ மாதிரி அருமையாய் இருக்கும். இந்த கடை ஓனர் முதல் சர்வர்கள் வரை அனைவரும் என்னிடம் மிக நன்றாக பேசுவார்கள். ..ரெகுலர் கஸ்டமர் என்பதால்.

ஆலந்தூரில் நாங்கள் இருக்கும் வரை ஞாயிறு காலை வீட்டில் சமையல் கிடையாது. இங்கு தான் வந்து பார்சல் வாங்குவேன். அந்த நேரம் செம கூட்டமாய் இருக்கும். நம்மை போல பலரும், வீட்டில் ஞாயிறு காலை சமைப்பதில்லை போல !

ஆலந்தூரில் இருந்து மடிப்பாக்கம் வந்த பிறகு நான் அதிகம் மிஸ் செய்வது மெட்ராஸ் கபே ஹோட்டல் தான். இங்கு வந்த புதிதில் ரொம்ப நாள் புலம்பி கொண்டிருந்தேன். " வேணும்னா மெட்ராஸ் கபே போய் சாப்பிட்டுட்டு வாங்க" என்பார் வீட்டம்மா. " இதுக்குன்னு பைக் எடுத்துட்டு போக முடியுமா? அருமையான ஹோட்டல்.. வீட்டுக்கு கூப்பிடு தூரத்தில் இருந்தால் நடந்து போய் சாப்பிடுற மாதிரி வருமா? " என புலம்புவேன்.

நிற்க, மெட்ராஸ் கபே ஹோட்டல் இன்னும் இருக்கா? மிக பழமையான, நல்ல லாபத்தில் நடக்கும் ஹோட்டல் இது. ஆலந்தூர் அருகே இருக்கும் யாராவது மெட்ராஸ் கபே இன்று எப்படி இருக்கு என சொன்னால் மிக மகிழ்வேன் !

39 comments:

  1. அறிமுகம் அருமை..ரொம்ப நாளாவே நீங்க வெஜ் ஹோட்டலா அறிமுகம் செய்றீங்க...நமக்கு வாரத்துல ஒருநாள் தான் வெஜ்ஜே பிடிக்கும்...

    ReplyDelete
  2. rite antha side pona parthu solren

    ReplyDelete
  3. //நம்மை போல பலரும், வீட்டில் ஞாயிறு காலை சமைப்பதில்லை போல !//

    இந்த 'நம்மை' போல என்பது, அய்யாசாமியை குறிக்கிறதோ? ;))

    உங்கள் எழுத்து ஒரு முறை இந்த ஹோட்டலுக்கு செல்லலாம் என தோன்ற வைத்தாலும், தூரம் யோசிக்க வைக்கிறது. :(

    ReplyDelete
  4. அறிமுகம் அருமை...

    உணவகம் சென்றால் சாம்பார் குடிப்பதும் ரசம் சாப்பிடுவதும் ஒரு விதமான கலை... (உங்களைப்போல் தான் நானும்)

    ReplyDelete
  5. மனதில் பதிந்திருக்கும் ருசியை மிக அழகாகப்
    பதிவு செய்துள்ளீர்கள்
    ருசித்துப் படித்தேன்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. Now madras cafe has closed

    ReplyDelete
  7. எங்காவது ஊருக்குச் செல்லும் போது ஹோட்டலில் சாப்பிடுவதே எப்படா வீட்டில் வந்து ஒரு ரசம் சாப்பிடுவோம் என்று இருக்கும்.இப்படி ஹோட்டலில் ரசித்து ருசித்து சாப்பிட்டதே இல்லை. பசிக்கு தான் சாப்பிட்டு இருக்கேன்.இனி ருசிக்கும் சாப்பிடணும்.

    ReplyDelete
  8. நான் தான் சில குறிப்பிட்ட உணவகங்களில் தோசை சாப்பிடும் போது சாம்பார் நிறைய வாங்குவேன் என்று இது நாள் வரை நினைத்திருந்தேன் பரவாயில்லை கூட்டணிக்கு ஆள் நிறையா இருக்கு :)

    ReplyDelete
  9. மோகன்,

    // Vairavan said...
    Now madras cafe has closed//

    நல்ல வேளை 5 வயசில ஒரு உணவகத்தில பூரி சாப்பிட்டேன் என உணவகம் அறிமுகம் செய்யவில்லை, நிகழ்காலத்தில் சென்று சாப்பிட்ட உணவகத்தினை பற்றி எழுதுவது தான் அறிமுகம், கடந்த கால அனுபவத்தினை எழுதினால் அதுக்கு பேரு "உணவகம் ஒரு மலரும் நினைவுகள்" :-))

    பின் குறிப்பு:

    ஆலந்தூர் ராஜாவில் சில பல திரைக்காவியங்களை கண்டவர்களில் அடியேனும் ஒருவன் :-))

    தியேட்டருக்கு அடுத்த இணையான தெரு என்றால் ஆலந்தூர் மார்க்கெட் வீதி தானே வரும்,அங்கே சில உணவகங்கள் இருக்கு.

    மடிப்பாக்கம்,ஆலந்தூரே தூரமா? இப்போ புது சப்வே எல்லாம் போட்டு தில்லை கங்கா நகர், நங்கநல்லூர் ,மடிப்பாக்கம் எல்லாம் போக வழி செய்து இருக்காங்களே போய் பார்த்துட்டு பதிவ போடுறதுக்கென்ன?

    ReplyDelete
  10. எவ்வளவு சாம்பார் வேண்டுமானாலும் ஊத்துறேன்னு சொல்ற ஒரு ஹோட்டல் மெட்ராஸ்ல இருக்கா? ஆச்சரியமா இருக்கே!!

    ReplyDelete
  11. சப்பு கொட்டிகொண்டே படித்தேன்..

    ReplyDelete
  12. Anonymous6:37:00 PM

    " அஞ்சரைக்குள்ள வண்டி", "பாவம் கொடூரன்" ...

    இதெல்லாம் என்ன மோகன்...அவ்வ்வ்வ்

    ReplyDelete
  13. Anonymous6:39:00 PM

    அடுத்த முறை நல்ல செட்டிநாடு அறிமுகம் PLZ...

    ReplyDelete
  14. தோசை ரொம்பவே ருசிச்சு ரசிச்சு சாப்பிட்டீங்க போல....

    நல்லாருக்கு உணவக அறிமுகம்...

    ReplyDelete
  15. சாதா தோசை சரி... ரவா தோசை எப்படி இருக்கும்? எப்படி இருந்தால் என்ன.... அதுதான் கடையை மூடிட்டாங்கங்கறாங்களே.......!

    ReplyDelete
  16. ருசியை விவரித்த விதம் அழகு:)! கடை மூடப்படாவிட்டால் இந்த ஞாயிறு நீங்களே கிளம்பிப் போயிருப்பீர்கள். பல பதிவர்களையும் அங்கே சந்தித்திருப்பீர்கள்.

    ReplyDelete
  17. நல்ல அறிமுகம் சார் ! (TM 11)

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. கோவை நேரம்: சென்னைக்கு சற்று வெளியே தானே இருக்கீங்க. வேளச்சேரிக்கு வாங்க ஒரு நாள். நல்ல நான் வெஜ் ஹோட்டல் போய் சாப்பிடுவோம்

    ReplyDelete
  20. ரகு : நன்றி ஹோட்டல் மூடி விட்டதாக சொல்கிறார் ஒருவர் :((

    ReplyDelete
  21. நன்றி சங்கவி சாப்பிடும் விஷயத்தில் வெட்க பட கூடாது என்பார்கள் பெரியவர்கள். (உடல் நலனை பாத்து தான் சாப்பிடனும் இல்லையா )

    ReplyDelete
  22. நன்றி ரமணி வாக்குக்கும் வார்த்தைகளுக்கும்

    ReplyDelete
  23. வைரவன்: இந்த ஹோட்டல் நான் அந்த வழியே சென்ற சில நேரங்களில் பூட்டி இருந்தது; உங்கள் தகவல் மூலம் மூடியது அறிந்து உறவினர் இறந்தது போல் வருத்தம் :((

    ReplyDelete
  24. நன்றி அமுதா மேடம் ; உங்கள் எண்ணங்களை அப்படியே வார்த்தையாக்கி விட்டீர்கள் பின்னூட்டத்தில்

    ReplyDelete
  25. நன்றி அமுதா மேடம் ; உங்கள் எண்ணங்களை அப்படியே வார்த்தையாக்கி விட்டீர்கள் பின்னூட்டத்தில்

    ReplyDelete
  26. வரலாற்று சுவடுகள் கை குடுங்க நீங்களும் என்னை மாதிரி தானா? :))

    ReplyDelete
  27. வவ்வால்
    //நல்ல வேளை 5 வயசில ஒரு உணவகத்தில பூரி சாப்பிட்டேன் என உணவகம் அறிமுகம் செய்யவில்லை, //

    ஹா ஹா இருந்துட்டு போகட்டும்.. இது மலரும் நினைவுகள் என்கிற வகையில்..

    //தியேட்டருக்கு அடுத்த இணையான தெரு என்றால் ஆலந்தூர் மார்க்கெட் வீதி தானே வரும்//

    ஆம் மார்கெட் வீதியில் முதல் கடையே இந்த ஹோட்டல் தான் இருந்தது. இப்போதும் அந்த பில்டிங் உள்ளது. பூட்டப்பட்டுள்ளது என அறிகிறேன் அந்த பில்டிங்கில் நிச்சயம் வேறு கடை வரவில்லை

    ReplyDelete
  28. தாஸ்: நகரின் உள்ளே தான் சாம்பார்/ குருமாவுக்கு அளவு எல்லாம் பார்ப்பார்கள்; வெளியில் அந்த அளவு இல்லை என நினைக்கிறேன்

    ReplyDelete
  29. கோவி: உங்கள் பின்னூட்டம் மிக ரசிக்க வைத்தது மிக நன்றி

    ReplyDelete
  30. ரெவெரி said...
    " அஞ்சரைக்குள்ள வண்டி", "பாவம் கொடூரன்" ...

    இதெல்லாம் என்ன மோகன்...அவ்வ்வ்வ்

    **

    நம்ம பதிவை நிறைய பெண்கள் வாசிப்பதால் கொஞ்சம் டீசன்ட் பேரா மட்டும் சொன்னேன்.

    ரெவெரி said...
    அடுத்த முறை நல்ல செட்டிநாடு அறிமுகம் PLZ...

    நிச்சயம் முயல்கிறேன்

    ReplyDelete
  31. ஆம் வெங்கட் ; மனைவியும் படித்து விட்டு " உங்க favourite ஹோட்டல் பத்தி எழுதிட்டீங்க " என்றார்

    ReplyDelete
  32. வாங்க ரவா தோசை பிரியர் ஸ்ரீராம். இங்கு சாதா தோசை தான் நிஜ ஸ்பெஷல் ; ம்ம் All good things come to an end :((

    ReplyDelete
  33. ராமலட்சுமி மேடம்: ஆம் ஹோட்டல் இருந்தால் நிச்சயம் இந்த வாரம் அங்கு சென்றிருப்பேன்.

    ReplyDelete
  34. தனபாலன் சார் : மிக்க நன்றி தொடர் ஆதரவுக்கும் தமிழ் மண வாக்கிற்கும்

    ReplyDelete
  35. அருமை.  கூடவே விலையையும் போடுங்களேன்.  பரோட்டா முற்றிலும் தவிருங்கள் தலைவரே.  அது வேண்டாம். உடம்புக்கு ரொம்ப கெடுதி.  மாதம் ஒரு முறை ஓ.கே.

    ReplyDelete
  36. அருமையான உணவக அறிமுகம்.

    ReplyDelete
  37. "மெட்ராஸ் கஃபே" ரொம்ப நாட்களாக மூடியே கிடக்கிறது! அதே ரோட்டில், மவுண்ட் சப்வேக்கு மிக அருகில், சுக்கு பாய் பிரியாணி பார்சல் சர்வீஸ் செயல்படுகிறது... ஆலந்தூரில் உள்ள நான் வெஜ் பிரியர்களுக்குப் பரிச்சயமான, மிகப் பிரபலமான, பர்ஸுக்குச் செலவு அதிகம் வைக்காத ஹோட்டல் இது!... கவுண்டரில் நிற்பவர், அமெரிக்க ரிட்டர்ன் என்பது மிகவும் வியப்பூட்டும் செய்தி! சென்று ருசித்துத் தகவல் தாருங்கள்!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...