Saturday, June 23, 2012

உயில்மூலம் சொத்து- சட்டஆலோசனை-கேள்வி பதில்

கேள்வி: கண்ணன், அம்பத்தூர்


சென்னை அம்பத்தூரில் ஒரு மனை, விற்பனைக்கு வந்தது. அதனை வாங்கும் பொருட்டு, அதன் பத்திரங்களை நோக்கினோம். தாத்தாவின் பெயரில் முதலில் மனை இருந்தது. அவருக்கு இரு மகன்கள். முதல் மகன் தன்னைக் கவனிக்கவில்லை என்ற கோபத்தில் இரண்டாம் மகனின் 10 – 12 வயதுள்ள இரு பிள்ளைகளுக்கு இந்த மனையைத் தானமாகக் கொடுப்பதாகப் பத்திரம் பதிவு செய்திருந்தார். பின்னர், முதல் மகனுடன் சமரசம் ஏற்பட்டு, தானத்தை ரத்து செய்வதாக, இன்னொரு பத்திரம் பதிவு செய்திருந்தார். சிலரிடம் கேட்டதில், தானமாகக் கொடுத்த பிறகு, அவர் கையிலிருந்த உரிமையை அவர் இழக்கிறார்; எனவே மீண்டும் அதனை ரத்துச் செய்ய அவருக்கு உரிமை இல்லை; இது தொடர்பாக உச்சநீதிமன்றமே தீர்ப்பு அளித்திருக்கிறது என்றனர்.

இன்னும் சிலரோ, தானம் கொடுத்தவர், உயிருடன் இருக்கிறார்; எனவே அவர் தன் தானத்தை ரத்துச் செய்யலாம் என்றனர். மைனர் வயதுள்ள பிள்ளைகளுக்குத் தானம் கொடுத்து அதனை ரத்து செய்ததால், அவர்கள் மேஜர் ஆனதும் வழக்குத் தொடர உரிமை உள்ளது என்றும் சிலர் கூறினர். எனவே இந்த மனையை வாங்குவதற்குக் கொடுத்த முன்பணத்தைத் திரும்பப் பெற்றோம். எனினும் இந்தச் சந்தேகம் தீரவில்லை. தானமாகக் கொடுத்த பிறகு, அதனை ரத்து செய்து, மீண்டும் சொத்தின் மீது உரிமை கோர ஒருவருக்கு உரிமை உண்டா?

பதில்:

ஒரு அசையா சொத்தை உயில் எழுதி வைப்பதற்கும், தானமாய்த் தருவதற்கும் வித்தியாசம் உள்ளது.

தானமாய்த் தந்து அது ரிஜிஸ்தர் செய்யப்பட்டால் அதை தானம் செய்தவருக்கு அந்த சொத்தின் மீது பின் எந்த உரிமையும் கிடையாது. குறிப்பிட்ட சொத்து மைனர்களுக்கு வேறு எழுதி வைக்கப்பட்டுள்ளது. மைனர் பெயரில் உள்ள சொத்தை மாற்றி எழுத, பிறருக்கு விற்க பெற்றோருக்கு கூட உரிமை கிடையாது.

சட்டப்படி அந்த பெரியவர் தான் தந்த தானத்தை கேன்சல் செய்தது தவறு.

இதே சொத்தை அவர் உயில் மூலம் எழுதி வைத்தார் எனில் , அவர் உயிரோடு இருக்கும் வரை அதனை திரும்ப வேறு யாருக்கும் எழுதி வைக்க அவருக்கு உரிமை உண்டு.

குறிப்பிட்ட சம்பவத்தில் தானத்துக்கும், உயில் மூலம் வரும் சொத்துக்கும் உள்ள நடைமுறைகளை குழப்பிக் கொண்டுள்ளீர்கள் என நினைக்கிறேன்.

இந்த குறிப்பிட்ட நிலத்தைப் பொறுத்த வரை, நிலத்தின் possession யாரிடம் இருந்தது என்பது முக்கியமான விஷயம். அந்த பெரியவர் வசமே possession இருந்தால், நீங்கள் அந்த சொத்தை வாங்கி இருந்தாலும், மறுபடி அந்த நிலத்தின் possession நீங்கள் பெறுவது கடினமாய் இருந்திருக்கும். நீதிமன்றம் சென்று வழக்கு முடிய பல ஆண்டுகள் ஆகி நீங்கள் மன நிம்மதி இழக்க வேண்டி வந்திருக்கும்.

இப்படி குழப்பம் உள்ள நிலையில் நீங்கள் அந்த நிலத்தை வாங்காதது நல்ல முடிவு தான்.

*********
கேள்வி: தம்பிராஜா திருப்பூர்

1983ல் எனது தாத்தா சுயசொத்தை (மைனர்) எனக்கு ரிஜிஸ்டர் உயில் எழுதிய பிறகு அதை தாத்தாவின் மகன் (எனக்கு அப்பா), விற்க அதிகாரம் உண்டா?

பதில்:

உங்கள் தாத்தா மைனரான உங்களுக்கு ஒரு சொத்தை உயில் மூலம் எழுதி வைத்துள்ளார். அது தான் அவரது கடைசி உயில் எனில் அந்த சொத்துக்கு உரிமை தாரர் நீங்கள் தான். அதனை விற்க உங்கள் தந்தைக்கு உரிமை கிடையாது.

நீங்கள் அந்த சொத்தை விற்கவேண்டும் எனில் அந்த சொத்து (சென்னை, திருச்சி, மதுரை போன்ற) கார்ப்பரேஷன் லிமிட்டில் இருந்தால் அதனை முதலில் ப்ரோபெட் செய்யவேண்டும்.

அதாவது நீதி மன்றத்தில் உயிலை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். உயில் படி சொத்துக்களை கோர்ட் பிரித்து அறிவிக்கும். அப்படி அறிவிக்கும் டாகுமென்ட் தான் “ப்ரோபேட்” எனப்படும். அது தான் கடைசியாக எழுதப்பட்ட உயில் என்பதோடு, அவர் சுய நினைவில் எழுதினாரா போன்ற விஷயங்களை திருப்தி படுத்திக் கொண்ட பின் நீதி மன்றம் இந்த ப்ரோபேட்டை வழங்கும். கிட்டத்தட்ட உயிலின் காபி தான் இது. இந்த ப்ரோபேட் வைத்து தான் அவரவர் சொத்துக்களை தங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஏற்கனவே சொன்னது போல் உங்கள் சொத்து கார்ப்பரேஷன் லிமிட்டில் இருந்தால் மட்டுமே ப்ரோபெட் செய்வது அவசியமாகிறது

கேள்வி: தம்பிராஜா திருப்பூர்

ஒருவரின் சொத்தை வில்லங்கம் பார்க்கும் போது அதில் ரிஜிஸ்டர் உயில் (1983ல்) எழதி இருந்தால் அது வில்லங்கத்தில் வருமா?

பதில்:

இல்லை. வில்லங்கத்தில் அந்தசொத்து மேல் கடன் வாங்கியிருந்தால், அது ரிஜிஸ்தர் ஆனால் மட்டும் கடன் விபரம் தெரியும். உயில் எழுதிய விபரங்கள் வில்லங்கத்தில் தெரியாது !
*****

19 comments:

  1. சூப்பர் சார்.. ஒரு தொடராகவே எழுதலாம்..ஜாலியா..

    நன்றி..

    ReplyDelete
  2. நல்ல கேள்விகள் - தெளிவான பதில்கள்.....

    த.ம. 2 [இப்பல்லாம் தொடர்ந்து ஓட்டு போடறேன்... :)))))]

    ReplyDelete
  3. பயனுள்ள பகிர்வு :)

    ReplyDelete
  4. உபயோகமான பகிர்வு.

    ReplyDelete
  5. மிகமிகப் பயனுள்ள பகிர்வு. தொடர்ந்து எழுதுஙகள்.

    ReplyDelete
  6. அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய
    தகவல்கள் அடங்கிய அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. நன்றி காவேரி கணேஷ். அப்படி தான் வருகிறது. வல்லமை என்கிற இணைய இதழில். தங்கள் மனம் திறந்த பாராட்டு மகிழ்ச்சி தருகிறது

    ReplyDelete
  8. நன்றி வெங்கட் நாகராஜ்

    ReplyDelete
  9. மகிழ்ச்சி நன்றி வரலாற்று சுவடுகள்

    ReplyDelete
  10. மாதவா: நன்றி

    ReplyDelete
  11. நன்றி ஸ்ரீராம்

    ReplyDelete
  12. கணேஷ் சார்: மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  13. நன்றி தனபாலன் சார்

    ReplyDelete
  14. நன்றி ரமணி, கருத்துக்கும் வாக்குக்கும்

    ReplyDelete
  15. அருமையான பதிவு.
    பயனுள்ள தகவல்கள்.
    நன்றி.

    ReplyDelete
  16. arumaiaana
    payanulla
    details
    thanks for the same

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...