Thursday, June 21, 2012

தடையற தாக்க..அருண்விஜய்க்கு இன்னொரு இன்னிங்க்ஸ் !

டையற தாக்க படத்தின் டிரைலர் பார்த்த போது நடிகர் அருண் விஜய்யின் வழக்கமான இன்னொரு படம். திரைக்கு வந்து விட்டு சில நாட்களில் காணாமல் போகும் என்று தான் நினைத்தேன்.

சூர்யா, விஜய் போன்றோருடன் நடிக்க வந்தவர் அருண் விஜய். நடனம், சண்டை எல்லாம் செய்வார். நடிப்பு, காமெடி இரண்டும் நன்கு வரும். இருந்தும் ஏனோ அவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஓடுவது இல்லை. அவ்வப்போது பாண்டவர் பூமி போன்ற நல்ல படங்களில் நடிப்பார். அந்த வரிசையில் ஒரு நல்ல படம் தடையற தாக்க

கதை

செல்வா (அருண் விஜய்) ஒரு டிராவல்ஸ் வைத்து நடத்துகிறார். இவர் காதலி மம்தா மோகன் தாஸ். கந்து வட்டியில் பணம் வாங்கி விட்டு கஷ்டப்படும் ஒரு பெண்ணுக்கு உதவ போகும் போது அந்த கும்பலின் வலைக்குள் வருகிறார்.

கந்து வட்டி கூட்டத்தின் தலைவரான மகா என்பவர் மோசமாக தாக்கப்பட்டு சுய நினைவு இழக்க, அருண் விஜய் மீது சந்தேகம் வருகிறது. வில்லன் கும்பல் அருண் விஜயை கொல்ல அலைகிறது. அவர்களின் கொட்டத்தை ஹீரோ எப்படி அடக்கினார் என்பதே இறுதி கதை
***
இது முழுக்க முழுக்க இயக்குனர் மகிழ் திருமேனியின் படம். கதையாக சொல்வதில் இதே போல பல படங்களை நாம் பார்த்தோம் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் திரை கதையில் நிச்சயம் செம விறுவிறுப்பு.

படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள். அவை பற்றி அதிகம் யோசிக்காது படத்தை ரசிக்கும் படி செய்துள்ளார் இயக்குனர்.

மகாவின் சின்ன வீடு என சொல்லப்படும் பெண் கடத்தப்படும் போதே, யார் என்கிற நினைவை இழக்கிறாள் என்பது கதை ஓட்டத்துக்கு தான் உதவுமே தவிர, அதற்கு எந்த லாஜிக்கும் இல்லை.

அருண் விஜய் ஒரு டிராவல்ஸ் வைத்து நடத்துபவரையும் , காதலரையும் அப்படியே பிரதிபலிக்கிறார். சண்டை காட்சிகளில் நல்ல வேகம். இனியாவது நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் தமிழ் திரை உலகில் நீடிக்கலாம்

மம்தா மோகன் தாஸ் -ஹீரோயின்.   நிஜ வாழ்வில் புற்று நோயில் இருந்து மீண்டு வந்தவர். மிக அழகாக இருக்கிறார். நடிப்பும் ஓகே. ஆனால் பெண்கள் அணியும் உள்ளாடைக்கு பட்டர்பிளை என பெயர் வைத்து " இன்னிக்கு என்ன கலர் பட்டர்பிளை?" என ஹீரோ இவரிடம் அடிக்கடி கேட்பது ரொம்ப டூ மச். பெண்கள் எப்படி தான் இத்தகைய காட்சிகளில் நடிக்க ஒப்பு கொள்கிறார்களோ?

ஹீரோவின் நண்பர்களாக வருபவர்கள் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள் (காலம் காலமாய் ஹீரோவின் நண்பர்கள் செய்வது அது தானே?)

இரண்டே பாடல்கள்- முதல் பாதியில் முடிந்து விடுகிறது. இடை வேளைக்கு பின் ஒரே ஓட்டம் தான் !

வில்லன் மகாவை அடித்தது யார் என்று ஒரு கேள்வி- எதிர் வீட்டில் இருக்கும் அந்த பெண் யார்- அவள் கதை என்ன என்ற இரு கேள்விகளும் தான் படத்தின் பெரிய சஸ்பென்சுகள் . அவை இரண்டும் நாம் ஊகிக்க முடியாத படி உள்ளது. படம் நிமிர்ந்து நிற்பது இந்த ஆர்வம் கலந்த சஸ்பென்சில் தான்.

திரைக்கதை அருமை எனினும் இன்னும் கொஞ்சம் தெளிவாக எடுத்திருக்கலாம். படம் பார்க்கும் சிலருக்கு திரைக்கதை புரிய வில்லை. படம் பெண்கள் குழந்தைகள் இரு பிரிவினருக்கும் பிடிக்காது. சண்டைகள் மற்றும் ரத்த வாடை அதிகம்

மொத்தத்தில் - இந்த படம் மூலம் இயக்குனர் மகிழ் திருமேனி - கவனிக்க பட வேண்டியவராகிறார். அருண் விஜய் மீண்டும் ஒரு இன்னிங்க்ஸ் ஆட வாய்ப்பு.

தடையற தாக்க - ஒரு முறை பார்க்க !

டிஸ்கி: பொதுவாய் ஒரு நாளைக்கு ஒரு பதிவு வெளியிடுவது தான் நம் வழக்கம். இந்த படம் வெளிவந்து/ பார்த்து நாளாகி விட்டது. நாளை சகுனி படம் வெளிவந்தால் அடுத்த சில நாட்கள் சகுனி பற்றியே பேச்சாய் இருக்கும். எனவே இப்பதிவு இன்று வெளியிடப்படுகிறது :)

ஜூன் 20 தேதியிட்ட வல்லமை இதழில் வெளியான விமர்சனம்.

சமீபத்து பதிவு :

காந்தி சுடப்பட்ட இடம் இன்று 

ஆனந்த விகடனும்  வீடுதிரும்பலும் 

12 comments:

  1. பார்த்தால் கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் பார்க்கணும்! :)))

    ஆனந்த விகடன் மார்க் ஆச்சர்யப்படுத்தியது.

    ReplyDelete
  2. ஒரே நாளில் இரண்டு பதிவுகளா என நினைத்தபடியே படித்தேன். முடிப்பதற்குள் விளக்கமும் கிடைத்தது....

    த. ம. - மூணு!

    ReplyDelete
  3. எனக்கு என்னமோ இந்த படத்துக்கு 35/100 மாற்கு தான் போட தோணுது

    ReplyDelete
  4. Anonymous9:11:00 PM

    பெண்களுக்கு மிகவும் பிடித்த முகம்..அவரப்பா போலவே...

    ReplyDelete
  5. ஸ்ரீராம்: நன்றி விகடனில் மார்க் கொஞ்சம் அதிகம் தான்

    ReplyDelete
  6. வெங்கட்: நன்றி

    ReplyDelete
  7. அன்பை தேடி அன்பு: 40 மார்க் தரலாம் என நினைக்கிறேன் நான் நன்றி

    ReplyDelete
  8. ரெவரி: ஆம் நன்றி

    ReplyDelete
  9. தனபாலன் சார்: நன்றி

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. ஜனனம் படத்தின் பொழுதும் அருணுக்கு இன்னொரு இன்னிங்க்-ஸ் என்று தான் சன் தொ.கா. விமர்சனம் செய்ததாக நினைவு.

    அவரும் அவ்வப் பொழுது இயற்கை, பாண்டவர் பூமி என்று வெறு முயற்சிகள் செய்து தான் பார்க்கிறார்.

    ம்ம் பார்ப்போம்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...