பார்த்த படம் : தில்வாலே துல்ஹியானா லீ ஜாயேங்கே
"என்னாது காந்தி செத்துட்டாரா? என கேட்க கூடாது. இந்த படம் வெளிவந்து ஜஸ்ட் 16 வருஷம் தான் ஆகுது ! டில்லி போனபோது (ஆரம்பிச்சிட்டான்யா !) பஸ்ஸில் இந்த படம் பார்த்தோம். முடிவு பாக்க முடியாம சீ. டி நின்னுடுச்சு. அதனால் சென்னை வந்ததும் மறுபடி சீ. டி வாங்கி பார்த்தோம். அப்புறம் இந்த படம் பற்றி விக்கி பீடியாவில் படிச்சுட்டு அசந்து போயிட்டேன். ஹிந்தியில் இதுவரை வந்த படங்களில் மிக சிறந்த (Top 10) படங்களில் ஒன்று என்கிறார்கள்.
ஷாரூக் - கஜோல் ஜோடி- காதலுக்கு மரியாதை டைப் காதல் கதை- செம பாட்டுகள்- வெளிநாட்டு லொக்கேஷன் என பீல் குட் மூவி. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள் !
QUOTE CORNER
“Difficulties in your life do not come to destroy you, but to help you realize your hidden potential and power; let difficulties know that you too are difficult.”
முகநூல் கிறுக்கல்கள்
மடிப்பாக்கத்தில் கடந்த இரண்டு நாளாய் ஒரு மணி நேரம் கரன்ட் இருந்தால், அடுத்த ஒண்ணரை மணி நேரம் கரண்ட் இல்லை. இரவிலும் கூட இதே நிலை தான். தினம் எட்டு மணி நேரம் கரண்ட் விடும் அம்மாவின் கருணையே கருணை !
கமல் ஹாசன் யார் கூடவோ சேர்ந்து ஹாலிவுட் படம் நடித்து, எழுதி, இயக்கி, தயாரிக்க போறாராம்.எனக்கு மருதநாயகம் ஞாபகம் வருது !
சகுனி படத்தில் "மனசெல்லாம் மழையே" பாட்டு மிக நல்ல மெலடி. குறிப்பாய் பல்லவி ரொம்ப சூப்பர். படம் எப்படி இருக்குதோ தெரியலை. ஆனா கார்த்தி- சந்தானம் காம்பினேஷனில் காமெடி கலக்கும் என எதிர்பார்க்கிறேன்.
பதிவர் கார்னர்
பலராமன் என்கிற இந்த பெரியவர் புற்று நோய் பற்றி நிறைய அனுபவ கட்டுரைகள் எழுதுகிறார். இவர் மனைவி புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரின் அனுபவ கட்டுரைகள் இதுவரை வாசிக்கா விடில் வாசித்து பாருங்கள் ! அற்புதமான சில கட்டுரைகள் இவர் ப்ளாகில் உள்ளது !
அய்யாசாமி
ஊட்டி வெஜிடபிள் கடை பற்றி சென்ற வாரம் தான் இங்கு நல்ல விதமாய் எழுதினோம். அதற்குள் அய்யாசாமிக்கு அங்கு ஏடாகூட அனுபவம் கிடைத்து விட்டது. சென்ற வாரம் ஒரு நாள் காய்கறி வாங்க சென்றார் அவர். காய்களை நிறுத்து பில் போடுவது ஒரு இடம். பில் பெற்று கொண்டு இன்னொரு இடத்தில் பணம் கட்டவேண்டும். கட்டிய ஸ்லிப் காட்டி காய்கறி கவர் பெற்று கொள்ள வேண்டும். எல்லாம் சரியாக தான் நடந்தது. வீட்டுக்கு சென்று பார்த்தால் வேறு யாருக்கோ தர வேண்டிய காய்கறி கவர் அய்யாசாமியிடம் வந்து விட்டது. கிட்டத்தட்ட அதே விலைக்கு காய்கறி இருந்தால் கூட பேசாமல் இருந்திருப்பார். அவர் வாங்கியதில் பாதிக்கும் குறைவே இந்த கவரில் இருந்தது.
ஹவுஸ்பாஸ் " ப்ளாக் தான் உங்களை கெடுக்குது. என்ன எழுதுறதுன்னு நினைச்சுக்கிட்டே வேலை செஞ்சா இப்படி தான்" என்று "ஆசிகள்" வழங்க "இல்லை. இல்லை நான் ப்ளாக் பத்தி நினைக்கவே இல்லை" என்று கெஞ்சி மன்றாடினார் அய்யாசாமி. மறுநாள் காலை அதே கடைக்கு சென்ற போது அவர் கவரை மீண்டும் பத்திரமாக தந்து விட்டனர். கவர் மாறியதுக்கு அய்யாசாமி மனைவியிடம் தந்த விளக்கம் பின் வருமாறு: " நானும் ரெண்டு முருங்கை காய் வாங்கியிருந்தேனா? அந்த கவரிலும் அதே மாதிரி ரெண்டு முருங்கை காய் வெளியே நீட்டிக்கிட்டு இருந்தது. அதான் நம்ம கவர்னு வாங்கிட்டு வந்துட்டேன்"
நாட்டி கார்னர்
இந்த குட்டி வீடியோ, அஜூ வரும் முன் நாட்டி தனியே இருந்த போது எடுத்தது. நாட்டியின் சாப்பாட்டு டப்பாவை நான் எடுக்க என்னிடமிருந்து பிடுங்குவதை இதில் காணலாம்.
அஜூ எங்களிடம் இன்னும் வர ஆரம்பிக்கலை. எனவே நாட்டி தான் செல்லமாக உள்ளது. மனைவியோ மகளோ கையில் தூக்கினால், சில நேரம் அவர்கள் நெற்றியில் உள்ள பொட்டை சரியாக கவ்வி எடுத்து விடும் நாட்டி !
தமிழ்மணத்தில் வீடுதிரும்பல்
தமிழ்மணம் வாரா வாரம் ப்ளாகுகளுக்கு ரேன்க் வழங்கி வருவதை உங்களில் சிலர் கவனித்திருப்பீர்கள். வாரம் நாலு பதிவாவது போடும்போது வீடுதிரும்பல் முதல் இருபதுக்குள் வரும். தினம் ஒரு பதிவு போட்டால் முதல் ஏழுக்குள் வரும். இப்படி நான்காம் இடம், இரண்டாம் இடமெல்லாம் கிடைத்துள்ளது. அதிசயமாய் சென்ற வாரம் - வீடுதிரும்பல் தமிழ் மணத்தில் முதலிடத்தில் வந்தது.
இந்த ரேங்கிங் ஹிட்ஸ், கமண்ட்ஸ், ஓட்டுகள் மூன்றும் வைத்து தான் தமிழ்மணம் தருகிறது. நம் பதிவுகளுக்கு ஹிட்ஸ் மற்றும் காமன்ட்சுக்கு குறைவில்லை. ஓட்டுகள் தான் மிக குறைவாய் விழுகிறது.
தமிழ்மண ஓட்டுகளில் ...
எப்போதும் ஆதரிக்கும் ரத்னவேல் ஐயா & எங்கள் ப்ளாக் - ஸ்ரீராம் (வணக்கம். தொடருங்கள் தங்கள் மேலான ஆதரவை!)
எப்போது உள்ளே வந்து கமன்ட் போடுகிறார்களோ அப்போது ஆதரிக்கும் ராமலட்சுமி மேடம், ரமணி சார், அமைதி அப்பா, ரெவரி, ஜெயதேவ் தாஸ் (அன்பிற்கு நன்றி: சில சமயம் கமண்டுக்கு நேரமில்லா விட்டாலும், ஓட்டு போடலாமே :)) )
எப்போதும் உள்ளே வந்தாலும், எப்போதாவது தான் ஆதரிக்கும் வெங்கட் நாகராஜ், வரலாற்று சுவடுகள், திண்டுக்கல் தனபாலன் (வீ வான்ட் மோர் சப்போர்ட் இன் தமிழ் மணம் ஓட்டு பிளீஸ்)
ஆகியோரை இந்நேரத்தில் நன்றியோடு நினைவு கூர்கிறோம் !
வீடுதிரும்பல் வாசிக்கும் அனைவரின் அன்பால் தான் இது சாத்தியமானது !
தொடர்ந்து முதலிடத்தை தக்க வைக்கும் எண்ணமெல்லாம் இல்லை. இதுவும் கடந்து போகும் என அறிவேன். நன்றி !
"என்னாது காந்தி செத்துட்டாரா? என கேட்க கூடாது. இந்த படம் வெளிவந்து ஜஸ்ட் 16 வருஷம் தான் ஆகுது ! டில்லி போனபோது (ஆரம்பிச்சிட்டான்யா !) பஸ்ஸில் இந்த படம் பார்த்தோம். முடிவு பாக்க முடியாம சீ. டி நின்னுடுச்சு. அதனால் சென்னை வந்ததும் மறுபடி சீ. டி வாங்கி பார்த்தோம். அப்புறம் இந்த படம் பற்றி விக்கி பீடியாவில் படிச்சுட்டு அசந்து போயிட்டேன். ஹிந்தியில் இதுவரை வந்த படங்களில் மிக சிறந்த (Top 10) படங்களில் ஒன்று என்கிறார்கள்.
இது அந்த கால அழகுங்கோ.. |
QUOTE CORNER
“Difficulties in your life do not come to destroy you, but to help you realize your hidden potential and power; let difficulties know that you too are difficult.”
முகநூல் கிறுக்கல்கள்
மடிப்பாக்கத்தில் கடந்த இரண்டு நாளாய் ஒரு மணி நேரம் கரன்ட் இருந்தால், அடுத்த ஒண்ணரை மணி நேரம் கரண்ட் இல்லை. இரவிலும் கூட இதே நிலை தான். தினம் எட்டு மணி நேரம் கரண்ட் விடும் அம்மாவின் கருணையே கருணை !
கமல் ஹாசன் யார் கூடவோ சேர்ந்து ஹாலிவுட் படம் நடித்து, எழுதி, இயக்கி, தயாரிக்க போறாராம்.எனக்கு மருதநாயகம் ஞாபகம் வருது !
சகுனி படத்தில் "மனசெல்லாம் மழையே" பாட்டு மிக நல்ல மெலடி. குறிப்பாய் பல்லவி ரொம்ப சூப்பர். படம் எப்படி இருக்குதோ தெரியலை. ஆனா கார்த்தி- சந்தானம் காம்பினேஷனில் காமெடி கலக்கும் என எதிர்பார்க்கிறேன்.
பதிவர் கார்னர்
பலராமன் என்கிற இந்த பெரியவர் புற்று நோய் பற்றி நிறைய அனுபவ கட்டுரைகள் எழுதுகிறார். இவர் மனைவி புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரின் அனுபவ கட்டுரைகள் இதுவரை வாசிக்கா விடில் வாசித்து பாருங்கள் ! அற்புதமான சில கட்டுரைகள் இவர் ப்ளாகில் உள்ளது !
அய்யாசாமி
ஊட்டி வெஜிடபிள் கடை பற்றி சென்ற வாரம் தான் இங்கு நல்ல விதமாய் எழுதினோம். அதற்குள் அய்யாசாமிக்கு அங்கு ஏடாகூட அனுபவம் கிடைத்து விட்டது. சென்ற வாரம் ஒரு நாள் காய்கறி வாங்க சென்றார் அவர். காய்களை நிறுத்து பில் போடுவது ஒரு இடம். பில் பெற்று கொண்டு இன்னொரு இடத்தில் பணம் கட்டவேண்டும். கட்டிய ஸ்லிப் காட்டி காய்கறி கவர் பெற்று கொள்ள வேண்டும். எல்லாம் சரியாக தான் நடந்தது. வீட்டுக்கு சென்று பார்த்தால் வேறு யாருக்கோ தர வேண்டிய காய்கறி கவர் அய்யாசாமியிடம் வந்து விட்டது. கிட்டத்தட்ட அதே விலைக்கு காய்கறி இருந்தால் கூட பேசாமல் இருந்திருப்பார். அவர் வாங்கியதில் பாதிக்கும் குறைவே இந்த கவரில் இருந்தது.
ஹவுஸ்பாஸ் " ப்ளாக் தான் உங்களை கெடுக்குது. என்ன எழுதுறதுன்னு நினைச்சுக்கிட்டே வேலை செஞ்சா இப்படி தான்" என்று "ஆசிகள்" வழங்க "இல்லை. இல்லை நான் ப்ளாக் பத்தி நினைக்கவே இல்லை" என்று கெஞ்சி மன்றாடினார் அய்யாசாமி. மறுநாள் காலை அதே கடைக்கு சென்ற போது அவர் கவரை மீண்டும் பத்திரமாக தந்து விட்டனர். கவர் மாறியதுக்கு அய்யாசாமி மனைவியிடம் தந்த விளக்கம் பின் வருமாறு: " நானும் ரெண்டு முருங்கை காய் வாங்கியிருந்தேனா? அந்த கவரிலும் அதே மாதிரி ரெண்டு முருங்கை காய் வெளியே நீட்டிக்கிட்டு இருந்தது. அதான் நம்ம கவர்னு வாங்கிட்டு வந்துட்டேன்"
நாட்டி கார்னர்
இந்த குட்டி வீடியோ, அஜூ வரும் முன் நாட்டி தனியே இருந்த போது எடுத்தது. நாட்டியின் சாப்பாட்டு டப்பாவை நான் எடுக்க என்னிடமிருந்து பிடுங்குவதை இதில் காணலாம்.
அஜூ எங்களிடம் இன்னும் வர ஆரம்பிக்கலை. எனவே நாட்டி தான் செல்லமாக உள்ளது. மனைவியோ மகளோ கையில் தூக்கினால், சில நேரம் அவர்கள் நெற்றியில் உள்ள பொட்டை சரியாக கவ்வி எடுத்து விடும் நாட்டி !
தமிழ்மணத்தில் வீடுதிரும்பல்
தமிழ்மணம் வாரா வாரம் ப்ளாகுகளுக்கு ரேன்க் வழங்கி வருவதை உங்களில் சிலர் கவனித்திருப்பீர்கள். வாரம் நாலு பதிவாவது போடும்போது வீடுதிரும்பல் முதல் இருபதுக்குள் வரும். தினம் ஒரு பதிவு போட்டால் முதல் ஏழுக்குள் வரும். இப்படி நான்காம் இடம், இரண்டாம் இடமெல்லாம் கிடைத்துள்ளது. அதிசயமாய் சென்ற வாரம் - வீடுதிரும்பல் தமிழ் மணத்தில் முதலிடத்தில் வந்தது.
புதுப்பிக்கப்பட்ட நாள் : 2012-06-17
வலைப்பதிவுகளின் முன்னணி பட்டியில் ஒவ்வொரு ஞாயிறும் வெளியிடப்படும். கடந்த ஏழு நாட்களில் வலைப்பதிவுகள் வாசகர்களிடம் பெற்ற பார்வைகளை (ஹிட்ஸ்) முதன்மையாக கொண்டு இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது. மறுமொழிகள், வாசகர் பரிந்துரை வாக்குகள் போன்றவையும் ஒரு காரணியாக இருக்கும்
இந்த ரேங்கிங் ஹிட்ஸ், கமண்ட்ஸ், ஓட்டுகள் மூன்றும் வைத்து தான் தமிழ்மணம் தருகிறது. நம் பதிவுகளுக்கு ஹிட்ஸ் மற்றும் காமன்ட்சுக்கு குறைவில்லை. ஓட்டுகள் தான் மிக குறைவாய் விழுகிறது.
தமிழ்மண ஓட்டுகளில் ...
எப்போதும் ஆதரிக்கும் ரத்னவேல் ஐயா & எங்கள் ப்ளாக் - ஸ்ரீராம் (வணக்கம். தொடருங்கள் தங்கள் மேலான ஆதரவை!)
எப்போது உள்ளே வந்து கமன்ட் போடுகிறார்களோ அப்போது ஆதரிக்கும் ராமலட்சுமி மேடம், ரமணி சார், அமைதி அப்பா, ரெவரி, ஜெயதேவ் தாஸ் (அன்பிற்கு நன்றி: சில சமயம் கமண்டுக்கு நேரமில்லா விட்டாலும், ஓட்டு போடலாமே :)) )
எப்போதும் உள்ளே வந்தாலும், எப்போதாவது தான் ஆதரிக்கும் வெங்கட் நாகராஜ், வரலாற்று சுவடுகள், திண்டுக்கல் தனபாலன் (வீ வான்ட் மோர் சப்போர்ட் இன் தமிழ் மணம் ஓட்டு பிளீஸ்)
ஆகியோரை இந்நேரத்தில் நன்றியோடு நினைவு கூர்கிறோம் !
வீடுதிரும்பல் வாசிக்கும் அனைவரின் அன்பால் தான் இது சாத்தியமானது !
தொடர்ந்து முதலிடத்தை தக்க வைக்கும் எண்ணமெல்லாம் இல்லை. இதுவும் கடந்து போகும் என அறிவேன். நன்றி !
// அதே மாதிரி ரெண்டு முருங்கை காய்//
ReplyDeleteவாங்கிட்டு வந்திட்டீர்களா... இல்லை, ‘எடுத்துட்டு’ வந்திட்டீர்களா:)?
வோட்டுக்களை பிரிந்து ஆராய்ந்த கருத்துக் கணிப்பு நன்று. கோரிக்கை கவனிக்கப் படும்:)!!!
ரேங்க் கிட்டில் முதலாவதாக
ReplyDeleteவந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
பதிவு மிக்ஸர் அனைத்து சுவைகளுடன் அருமை
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 4
ReplyDelete// இந்த படம் வெளிவந்து ஜஸ்ட் 26 வருஷம் தான் ஆகுது !//
ReplyDeleteபதினாறுன்னு நெனைக்கிறேன் சார்.
//மடிப்பாக்கத்தில் கடந்த இரண்டு நாளாய் ஒரு மணி நேரம் கரன்ட் இருந்தால், அடுத்த ஒண்ணரை மணி நேரம் கரண்ட் இல்லை. இரவிலும் கூட இதே நிலை தான். தினம் எட்டு மணி நேரம் கரண்ட் விடும் அம்மாவின் கருணையே கருணை !//
அம்மாவின் கருணையெல்லாம் இதற்கு காரணமில்லை. பெருங்குடியில் கேபிள் எரிந்துவிட்டது. இதற்கெல்லாம் நாம் அரசை குறை சொல்வது அநியாயம். மின்சார வாரியத்தில் தற்போது பணிபுரிபவர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கும் மேல் கடுமையான உழைப்பை செலுத்துகிறார்கள். நாம் அவர்களது சிச்சுவேஷனையும் புரிந்துகொள்ள வேண்டும்.
Yuvakrishna: you are right. It is 16 years. Will correct it.
ReplyDeleteAlso thanks for sharing the information on E.B situation.
தமிழ் மணம் முதலிடத்துக்கு வாழ்த்துகள்... இந்தப் பதிவுக்கு எனது ஓட்டைப் போட்டு விட்டேன்...
ReplyDelete// நம் பதிவுகளுக்கு ஹிட்ஸ் மற்றும் காமன்ட்சுக்கு குறைவில்லை. ஓட்டுகள் தான் மிக குறைவாய் விழுகிறது. வீ வான்ட் மோர் சப்போர்ட் இன் தமிழ் மணம் ஓட்டு பிளீஸ்//
ReplyDeleteஆகச்சிறந்த பதிவராக இருப்பதற்கான ஒரு சின்ன மைனசும் ப்ளஸ் ஆகிவிட்டது இவ்வரிகளின் மூலம் :)
முதலிடம் பெற்றதற்கு வாழ்த்துகள் சார். பெரும்பாலும் தமிழ்மணத்தில் ஓட்டு போடுவதில்லை நான். எனவே யுடான்ஸில் வாக்களித்துவிட்டேன். அரசியல்வாதிகளிடம் கூட வாக்கு சேகரிப்பின் போது நெஞ்சு நிமிர்த்து மனதில் பட்டதை பேசி விட முடிகிறது :(
ReplyDelete-தமிழ்மணப் பதிவில் முதலிடத்துக்கு வாழ்த்துகள்.
ReplyDelete-ஹையா..... பதிவில் என் பெயர்... நன்றி... நான் படிக்கும் தளங்களில் என்னால் முடிந்த எல்லா வோட்டுகளையும் போட்டு விடுவேன்! ஏதோ என்னாலானது!
-DDLJ இன்னமும் கூட ஏதோ ஒரு தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் படம். பாடல்கள் ஸ்பெஷல்!
-ஊர் முழுக்க, மாநிலம் முழுக்க கரண்ட் படும்பாடு மோசம்தான்.
-பலராமன் பக்கம் க்ளிக்கியிருக்கிறேன்! படிக்க வேண்டும்.
-காகிகறிக் கவர் உங்கள் பை கிடைத்தது சரி, அவர்கள் கவரை நீங்கள் திரும்பிக் கொடுத்தீர்களா இல்லையா?
பல்சுவை பகிர்வு, வாழ்த்துக்கள்......!
ReplyDelete//தமிழ்மணப் பதிவில் முதலிடத்துக்கு வாழ்த்துகள். //
ReplyDeleteCongrats !!
BTW, 'DDLJ' is useless film according to me. It was a hit for no reason other than songs....
D.D.L.J மும்பையின் 'மராட்டா மந்திர்'தியேட்டர்ல இன்னும் ஓடுது. ஷாருக்+கஜோல் எங்கூர்ல வெற்றிக்கூட்டணியாக்கும் :-)
ReplyDeleteமுதலிடத்துக்கு வாழ்த்துகள்.
நானே இரண்டு முறை காய்கறிகளை மாற்றி கொண்டு வந்தேன். பாவம் அய்யாசாமி என்ன செய்வார்??
ReplyDelete/அந்த கால அழகுங்கோ.. //
ReplyDelete”இந்த காலம் அழுக்குங்கோ”வா? :-))))
பலராமன் ஐயாவின் வலைத்தள தகவலுக்கு நன்றி. சில அனுபவங்கள் வாசிக்கவே நடுங்குகிறது!! (http://orbekv.blogspot.in/2012/06/blog-post_13.html)
//ப்ளாக் தான் உங்களை கெடுக்குது. என்ன எழுதுறதுன்னு நினைச்சுக்கிட்டே வேலை செஞ்சா இப்படி தான்//
வீட்டுக்கு வீடு வாசப்படி.... ஹி.. ஹி..
//அய்யாசாமிக்கு அங்கு ஏடாகூட அனுபவம்//
இதப்பாத்தா கடைக்காரங்கதான் ஏதோ தப்பு பண்ணிட்டாங்க்ளோன்னு தோணுச்சு!! :-)))
தமிழ்மண முதல் ரேங்குக்கு வாழ்த்துகள்.
வழக்கமா ஓட்டு போடறவங்க, எப்பவாவது ஓட்டு போடுறவங்கன்னு எவ்வளவு துல்லியமா நோட் பண்ணிருக்கீங்க?? ஆச்சர்யம். (நல்லவேளை, ஓட்டே போடாதவங்கன்னு ஒரு லிஸ்ட் போடலை. தப்பிச்சேன்!!)
Watched dilwale dulhania on Mumbai on its 800 th week of screening in maratha mandir theatre...... Remarkable... Good post
ReplyDeleteதிரு. மோகன் குமார் அவர்களுக்கு,
ReplyDeleteஎனது பிளாக் பற்றி, தங்களது வலைப்பூவினில் குறிப்பிட்டதற்காக , மிகவும் நன்றி. ஹூசைனம்மா அவர்கள், தங்களது வலைப்பூவில் ஒரு குறிப்பு வந்ததால் , எட்டிப் பார்த்ததாகச் சொல்லியிருக்கிறார். அனைவருக்கும் எனது மனதார்ந்த நன்றி!
தாங்கள் குறிப்பிட்டது போல எனது துனைவியார், கான்சரால் பாதிக்கப் பட்டிருப்பதால், எதிலும் மனம் நாட்டம் கொள்ளவில்லை! நாளும் பொழுதும் மன அழுத்தத்தால், சித்திரவதை அனுபவித்துக் கொண்டுள்ளேன். ஒவ்வொரு தினமும் ஒரு யுகம் போல கழிந்து கொண்டுள்ளது!
எனினும் உங்களது தமிழ் ஆர்வத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். சமயம் கிடைக்கும் போதெல்லாம் உங்களை வந்து பார்ப்பேன்.
நன்றி!
பலராமன்
orbekv.blogspot.in
what?!! is jesus died?!!
ReplyDelete\\தில்வாலே துல்ஹியானா லீ ஜாயேங்கே \\ கண்டிப்பா பார்க்கிறேன், தவலுக்கு நன்றி.
ReplyDelete\\“Difficulties in your life do not come to destroy you, but to help you realize your hidden potential and power; let difficulties know that you too are difficult.”\\ ஆஹா, நால்லாத்தான் இருக்கு, இதை வாழ்க்கையிலும் ஃ பாலோ பண்ண முடிஞ்சா எப்படி இருக்கும்.. ம்ம்ம்.....
ReplyDeleteசகுனி -Not released yet?!
ReplyDeleteதமிழ்மணம் - முதலிடம்... வாழ்த்துகள் மோகன்..... இன்னிக்கு ஓட்டும் போட்டுட்டேன். :)
ReplyDeleteஇன்னிக்கு நம்ம பக்கத்திலயும் புது பதிவு வந்துருக்கு! வந்து பாருங்க!
வீடியோவிலயும் அய்யாசாமி திட்டு வாங்கறார் போல! :))))
\\கமல் ஹாசன் யார் கூடவோ சேர்ந்து ஹாலிவுட் படம் நடித்து, எழுதி, இயக்கி, தயாரிக்க போறாராம்.எனக்கு மருதநாயகம் ஞாபகம் வருது !\\ அப்போ கதை? வழக்கமா அங்கே இருந்து தானே கதையை உருவுவாறு, இப்போ என்ன பண்ணுவாரு?
ReplyDelete\\
ReplyDeleteமடிப்பாக்கத்தில் கடந்த இரண்டு நாளாய் ஒரு மணி நேரம் கரன்ட் இருந்தால், அடுத்த ஒண்ணரை மணி நேரம் கரண்ட் இல்லை. இரவிலும் கூட இதே நிலை தான். தினம் எட்டு மணி நேரம் கரண்ட் விடும் அம்மாவின் கருணையே கருணை !\\ I thought you have UPS?!
\\சில சமயம் கமண்டுக்கு நேரமில்லா விட்டாலும், ஓட்டு போடலாமே \\ இப்படியும் ஒன்னு இருக்கா!! தெரியாமப் போச்சே, நெக்ஸ் டைம் மிஸ் செய்ய மாட்டேன் நண்பரே!!
ReplyDeleteமுதலிடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள் சார் !
ReplyDeleteநல்லதொரு தளத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளீர்கள் ! நன்றி !
தொடர்ந்து பட்டைய கிளப்புங்க மோகன்...
ReplyDeleteஉங்கள் எழுத்து தானாகவே உங்களை உயரங்களுக்கு கொண்டு செல்லும்...
Don't worry about rankings...ratings...I am sure you will go a long way...
வாழ்த்துக்கள் மோகன்...
//ஷாரூக் - கஜோல் ஜோடி//
ReplyDeleteஇது போன்ற ஒரு ஜோடி இப்போது ஹிந்தி சினிமாவில் இல்லை என்று நினைக்கிறேன். சில பல ஹிட்ஸ் கொடுத்தாலும், ஷாருக்-காஜோல் ஜோடி போன்று, Akshay Kumar - Katrina Kaif ஜோடி கவரவில்லை.
//தொடர்ந்து முதலிடத்தை தக்க வைக்கும் எண்ணமெல்லாம் இல்லை. இதுவும் கடந்து போகும் என அறிவேன். நன்றி !//
வாழ்த்துக்கள் மோகன்..முதலிடத்திற்கும், உங்கள் மனப்பக்குவத்திற்கும்...
கேபிள், ஜாக்கி போன்ற பெருந்தலைகளை புறந்தள்ளி தமிழ்மணத்தில் முதலிடம் பிடிப்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல... சாதித்துவிட்டீர்கள்... மனமார்ந்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள் சார்.!
ReplyDeleteராமலட்சுமி மேடம்: நீங்க முதல் பின்னூட்டம் & ஓட்டு போட்டா கடையில் வியாபாரம் அமோகமா நடக்குது நன்றி !
ReplyDeleteஅந்த கடையில் காய்கறி பை அவர்களே தான் எடுத்து தந்தார்கள் எப்படியோ மாறிடுச்சு
தொடர் ஆதரவுக்கும் ஓட்டுக்கும் நன்றி ரமணி சார்
ReplyDeleteபாலஹனுமான் : வாங்க சார் வாங்க ! தமிழ்மண யூசர் ஐ. டி இருந்தும், இதுவரை நேரா எஸ் ஆனீங்களா? இனிமேலாவது நியாபகம் வச்சிக்குங்க பாஸ்
ReplyDeleteசிவா:
ReplyDelete//ஆகச்சிறந்த பதிவராக இருப்பதற்கான ஒரு சின்ன மைனசும் ப்ளஸ் ஆகிவிட்டது இவ்வரிகளின் மூலம் :)
கிண்டல் பண்றீங்களோ? புரியலை எனக்கு :))
ஸ்ரீராம்: உங்கள் பெயரை சொல்வதில் என்ன ஆச்சரியம் தொடர்ந்து ஆதரவு தரும் வெகு சிலருள் நீங்களும் ஒருவர் நன்றி
ReplyDeleteஅப்புறம் அவர்கள் காய்கறி பை அப்படியே குடுத்துட்டேன்
நன்றி மனோ
ReplyDeleteமாதவா: நன்றி DDLJ படம் ஓஹோ
ReplyDeleteஇல்லா விட்டாலும் ஓகே என சொல்லலாம் என தோணுது
அமைதிச்சாரல் said...
ReplyDeleteD.D.L.J மும்பையின் 'மராட்டா மந்திர்'தியேட்டர்ல இன்னும் ஓடுது.
ஆம் விக்கி பீடியாவில் படிதேன். நினைவு படுத்தியமைக்கு நன்றி
அமுதா கிருஷ்ணா said...
ReplyDeleteநானே இரண்டு முறை காய்கறிகளை மாற்றி கொண்டு வந்தேன்.
*********
இதை போய் மறுபடி எங்க வீட்டில் சொன்னேன். ப்ளாகர்ஸ் எல்லாம் இப்படி தான் .. என்ன எழுதுறதுன்னு யோசிச்சிட்டே இருப்பீங்க போல என கமன்ட் வந்தது
ஹுஸைனம்மா said...
ReplyDelete/அந்த கால அழகுங்கோ.. //
”இந்த காலம் அழுக்குங்கோ”வா? :-))))
இந்த கால அழகு என்றால் அனுஷ்கா, அஞ்சலி. அது போல இவங்க அந்த கால அழகு என்றேன். என்னா வில்லத்தனம் !
//(நல்லவேளை, ஓட்டே போடாதவங்கன்னு ஒரு லிஸ்ட் போடலை. தப்பிச்சேன்!!)
அப்படி போட்டா முதல் பேர் உங்கள் பேர் தான் வரும். :))
உங்களுக்கு எவ்ளோ பேர் தமிழ் மணத்தில் மரியாதை செய்றாங்க? யாருக்குமே நீங்க பதில் மரியாதை செய்றதில்லைன்னு உங்க மேலே நிறைய கம்பிலேயின்ட் வந்திருக்கு. இனிமேலாவது ஓட்டு போட பாருங்க :))
மௌனகுரு: தில்வாலே பற்றிய உங்கள் அனுபவம் பகிர்ந்தமைக்கு மிக நன்றி
ReplyDeleteபலராம் ஐயா: தங்கள் பின்னூட்டம் மனதை பாதித்தது. மனதை தைரியமாக வைத்து கொள்ளுங்கள். எல்லாம் சரியாகி விடும்.
ReplyDeleteஷர்புதீன்: ஹி ஹி
ReplyDeleteஜெயதேவ் தாஸ் : சகுனி: ஜூன் 22 ரிலீஸ் .
ReplyDelete//
\\கமல் ஹாசன் யார் கூடவோ சேர்ந்து ஹாலிவுட் படம் நடித்து, எழுதி, இயக்கி, தயாரிக்க போறாராம்.எனக்கு மருதநாயகம் ஞாபகம் வருது !\\ அப்போ கதை? வழக்கமா அங்கே இருந்து தானே கதையை உருவுவாறு, இப்போ என்ன பண்ணுவாரு?
இதை படிச்சிட்டு செமையா சிரிச்சுட்டேன். நிஜமாவே கதைக்கு என்ன பண்ணுவார்? ஹாலிவுட்டில் யாராவது கதை எழுதுவாங்க பாருங்க. இங்கே பண்ற மாதிரி காபி அடிச்சு அங்கே படம் எடுத்தா கேஸ் போட்டுடுவாங்க. அண்ணன் அந்த விஷயத்தில் விபரம். அங்கே காப்பி அடிக்க மாட்டார்
//I thought you have UPS?!
மிக்சி, பிரிட்ஜ் எல்லாம் என்ன பண்றது? மேலும் பத்து மணி நேரம் கரண்ட் கட் என்றால் இன்வர்டர் சற்று சிரமப்பட தான் செய்யும்
//இப்படியும் ஒன்னு இருக்கா!! தெரியாமப் போச்சே, நெக்ஸ் டைம் மிஸ் செய்ய மாட்டேன் நண்பரே!!//
நன்றி தாஸ் !
தனபாலன் சார்: என்னை மட்டுமல்லாது பலரையும் தொடர்ந்து ஊக்குவிக்கிறீர்கள் நன்றி
ReplyDeleteரகு: ஷாரூக் ரசிகர் ஆயிற்றே நீங்கள் !
ReplyDeleteரெவரி: தங்கள் வார்த்தைகளுக்கு மிக நன்றி மகிழ்ச்சி
ReplyDeleteபிலாசபி: நமக்குள் என்ன தம்பி பிரச்சனை? எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம். :))
ReplyDeleteஜாக்கி, கேபிள் கூட போய் என்னை ஒப்பிடுரீங்க? அவங்க எங்கே.. நான் எங்கே ?
வரலாற்று சுவடுகள்" நன்றி
ReplyDeleteவெங்கட் நாகராஜ்: நன்றி அடிக்கடி உங்களுக்கு ஓட்டு பற்றி நியாபகம் படுத்த வேண்டியிருக்கு :))
ReplyDelete// இதை போய் மறுபடி எங்க வீட்டில் சொன்னேன். ப்ளாகர்ஸ் எல்லாம் இப்படி தான் .. என்ன எழுதுறதுன்னு யோசிச்சிட்டே இருப்பீங்க போல என கமன்ட் வந்தது //
ReplyDeleteHa.. Ha.. Haaa... :-)
அருமை. வாழ்த்துகள் திரு மோகன் குமார்.
ReplyDeleteதமிழ் மண ஓட்டுப் பட்டை இருந்தால் முதலில் ஓட்டு போட்டு விடுவேன். பின்பு படிப்பேன். எனது பதிவில் தமிழ் மணத்தில் இணைக்கிறேன். ஆனால் தமிழ் மண பட்டை இல்லை. என் தம்பி மகன் வந்தவுடன் பார்க்க சொல்ல வேண்டும்.
கிளியைப் பற்றி, உங்கள் வீட்டில் எடுத்த விடியோவா, அருமை. எங்கள் வீட்டில், அடுத்த வீட்டில் எங்கள் தங்கை கிளி வளர்த்தாள். கூட்டில் வைக்கவில்லை. கிளி நான் வந்தவுடன் இங்கு வந்து விடும். சப்பாத்தி, சட்னி தனித்தனி தட்டில் வைப்போம். சப்பாத்தி எடுத்து சட்னியில் தோய்த்து சாப்பிடும். அருமையாக இருக்கும். விடியோ எடுத்து வைக்கவில்லை. மிகவும் பாசத்துடன் இருக்கும்.
வாழ்த்துகள்.
//உங்க மேலே நிறைய கம்பிலேயின்ட் வந்திருக்கு//
ReplyDeleteமுன்பே என் பதிவு ஒன்றில் சொன்னபடி, இதற்குக் காரணம், த.ம. ஓட்டு போடும்போது, தனியே ஒரு tab திறக்கும், பின் அதை க்ளிக்கி, மூடி மறுபடி திரும்பி பதிவுக்கு வரணும். அதற்குச் சோம்பல்படுவதால்தான்... மேலும், சிலசமயம் மறந்தும் விடுகிறது. (பழக்கம் இருந்தாத்தானே...) :-((
(யுடான்ஸ் திரட்டியில் ஓட்டு போடுவது சுலபம். ஆனால் மறதியால் அதுவும்...)
கிடைக்கும் (சொற்ப) சமயத்தில், பதிவுகளைப் படித்து, கமெண்ட் எழுதுவதிலேயே நேரம் போய்விடுகிறது. கமெண்ட்டைச் சின்னதாக எழுதவும் வரமாட்டேன்கிறது என்பதால், அதிலும் நேரம் போகிறது! :-(((
என்னைப் புரிந்த நண்பர்கள் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதே என் நம்பிக்கை. :-))))
Congratulations! My wishes are always with you.
ReplyDeleteBalaraman R
(orbekv.blogspot.in)
நான் இதுவரை யாருக்கும் ஓட்டு போட்டதே இல்லை.அதை பற்றி ஒன்றும் தெரியாது!!!
ReplyDeleteதமிழ்மணத்தில் முதலிடம் வாழ்த்துகள்!
ReplyDeleteமற்றபடி, பதிவு அதற்கு வந்த கமெண்ட்கள் அனைத்தும் நன்று.
ரத்னவேல் ஐயா: மிக நன்றி தொடர்ந்து தங்கள் ஆதரவு நிச்சயம் ஊக்கம் தருகிறது
ReplyDeleteஹுசைனம்மா: சும்மா கலாய்க்க தான் சொன்னேன். உங்களை பற்றி அனைவரும் அறிவர். பதிவை முழுக்க படித்து விரிவாய் அலசும் உங்களை போன்ற ஆட்கள் மிக கம்மி.
ReplyDeleteபலராமன் சார்: நன்றி
ReplyDeleteஅமுதா மேடம்: தமிழ் மணம் சென்று உங்கள் மெயில் ஐ.டி மட்டும் தந்தால், உங்கள் பெயர் மற்றும் மெயில் ரிகிஸ்தர் ஆகிடும். அப்புறம் உங்களுக்கு பிடித்த பதிவுகளுக்கு நீங்கள் ஜஸ்ட் ஒரு கிளிக் செய்து ஓட்டு போடலாம். இது தான் ஓட்டு போடும் முறை.
ReplyDeleteஅமைதி அப்பா: தங்கள் வேலை பளுவால் தொடர்ந்து கமன்ட் போடாவிடினும், தாங்கள் பதிவை தொடர்ந்து வாசிப்பதும், ஓட்டு மட்டும் போடுவதும் அறிவேன். நன்றி மகிழ்ச்சி
ReplyDelete