தில்லி சிம்லா பயண கட்டுரையின் ஒரு பகுதியாக விமான பயணம் குறித்த படங்களும் வீடியோவும் இதோ:
முதலில் படங்களை மட்டும் தான் பகிர நினைத்தேன். பதிவர் அமைதி அப்பா விமான பயணம் செல்லாதோருக்கும் பயன் படும் வகையில் விரிவாக எழுத சொன்னதால் இந்த பதிவு விரிவாக வருகிறது. விமான பயணம் சென்றோருக்கு இத்தகவல்கள் புதிதாய் இராது !
***********
தில்லி விமான நிலையம் ஆசியாவின் இரண்டாவது சிறந்த விமான தளமாம் (அப்போ இந்தியாவில் அது தான் சிறந்த விமான நிலையம் என சொல்லுங்க ) சென்னை விமான நிலையத்தில் நீங்கள் உங்கள் லக்கேஜ் ஒரு இடத்தில் தர வேண்டும். டிக்கெட் இன்னொரு இடத்தில் வாங்க வேண்டும். ஆனால் டில்லியில் இரண்டும் ஒரே இடத்தில் நடப்பது ஆறுதல். (ரெண்டு முறை கியூவில் நிற்க வேணாம் பாருங்க)
உள்ளூர் விமான பயணம் எனில் ஒண்ணரை மணி நேரத்துக்கு முன்பாவது விமான நிலையம் போகணும்.
நாம் முதலில் புக் செய்யும் போது நமது டிக்கெட் மட்டும் தான் உறுதியாகும். சீட் நம்பர் எல்லாம் அப்போ வராது. நீங்கள் விமான நிலையம் சென்ற பின் தான் சீட் எண் போடுவார்கள். இரண்டு அல்லது மூணு பேர் எனில் ஒரு விண்டோ சீட் நிச்சயம் கிடைச்சிடும். ஒரே ஆள் எனில், நீங்கள் விண்டோ வேண்டும் என கேட்டால் தான் தருவார்கள்.
விமானம் துவங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பே இந்த சீட் பிடிக்கும் பணி ஆன் லைனில் துவங்கிடும். இதனை வெப் செக் இன் என்று சொல்வார்கள். நீங்களே இணையம் மூலம் உங்களுக்கு வேண்டிய சீட் எடுத்து கொள்ளலாம். பலரும் விண்டோ சீட் என்பதுடன் விமானத்தில் ஓரளவு முன்னே சீட் வேணும் என எதிர்பார்க்கிறார்கள். முன்னால் எதுக்கு என்றால், அப்போ தான் விமானம் கடைசியாய் நின்றதும் சீக்கிரம் வெளியே இறங்கலாம்
விமான நிலையத்தில் பொதுவாய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. விலை செம அதிகம். நாங்கள் தில்லியிலிருந்து திரும்பிய போது மதியம் மூணு மணிக்கு விமான நிலையம் அடைந்தோம். நாலரைக்கு விமானம். வேறு வழியின்றி விமான நிலையத்தில் சாப்பிடுற மாதிரி ஆனது. புட் கோர்ட் என நிறைய கடைகள் வைத்துள்ளனர். நிறைய கூட்டம் இருந்த ஒரு கடையில் சாப்பிட்டோம். மூணு பேருக்கு ஐநூறு ரூபாய் ஆனது ! சிக்கன் பிரியாணி ! சகிக்கலை ! வீட்டம்மா "இதுக்கு பேர் பிரியாணியா?"என திட்டி கொண்டே சாப்பிட்டார். விமானம் துவங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பே இந்த சீட் பிடிக்கும் பணி ஆன் லைனில் துவங்கிடும். இதனை வெப் செக் இன் என்று சொல்வார்கள். நீங்களே இணையம் மூலம் உங்களுக்கு வேண்டிய சீட் எடுத்து கொள்ளலாம். பலரும் விண்டோ சீட் என்பதுடன் விமானத்தில் ஓரளவு முன்னே சீட் வேணும் என எதிர்பார்க்கிறார்கள். முன்னால் எதுக்கு என்றால், அப்போ தான் விமானம் கடைசியாய் நின்றதும் சீக்கிரம் வெளியே இறங்கலாம்
சாப்பிடும் இடத்தில் ஒரே ஆறுதல் அங்கிருந்து விமானங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் ரன் வே பார்க்க முடிவது தான். ரன்வேயை பார்க்க ஒரு பஸ் நிலையம் மாதிரி, விமானங்கள் வருவதும் போவதுமாய் உள்ளது.
ஒரு வித்தியாச பியானோ அங்கு இருந்தது. தானாகவே அது இசைக்கிறது. அதனை நிறைய பேர் நின்று ஆசையாய் பார்த்து சென்றனர்.
நமது டிக்கெட் வாங்கியதும் நமது உடமைகளை செக் செய்வார்கள். எரிய கூடிய பொருள், கத்தி போன்றவை விமான பயணத்தில் அனுமதி இல்லை. நம் வீட்டம்மா ஒரு லைட்டர் தெரியா தனமா வைத்திருக்க, அதை எடுத்தாலே போச்சு என அடம் பிடித்தனர். எங்கே என தேடி எடுப்பதற்குள் போதும் போதும்னு ஆகிடுச்சு. இது மாதிரி -பொருட்களை அவர்கள் எடுத்து கொண்டு உங்களுக்கு டாட்டா காட்டி விடுவார்கள். அவற்றை நீங்கள் மறந்து விட வேண்டியது தான்.
உங்கள் உடமைகள் சோதனையை அடுத்து உங்கள் உடைகள் அல்லது உடலில் மறைத்து ஏதேனும் objectionable பொருட்கள் எடுத்து போகிறீர்களா என சோதனை நடக்கும். இப்படி டிக்கெட் வாங்குவது, லக்கேஜ் சோதனை, உங்கள் உடல் சோதனை இவற்றுக்காக தான் நீங்கள் ஒண்ணரை மணி நேரம் முன்னர் செல்ல வேண்டும், குறிப்பாய் விமானம் கிளம்ப 45 நிமிடத்துக்கு முன் விமானத்தில் ஏறுவதற்கான அனைத்து வேலைகளும் முடிந்து விடும். விமானம் கிளம்ப அரை மணி முன்பு நீங்கள் போனால் உங்களை விமானத்துக்குள் பயணிக்க அனுமதிக்க மாட்டார்கள் !!
சோதனைகள் முடிந்ததும் காத்திருக்கும் இடத்தில் அமர்ந்து அங்கிருக்கும் டிவியை பார்த்து கொண்டு அமர்ந்திருப்போம். அங்கிருக்கும் ஸ்பீக்கரில் நம் விமானம் தயார் என்கிற அறிவிப்பு வருகிறதா என பார்த்து கொண்டே இருக்கணும். அந்த அறிவிப்பு வந்ததும் எழுந்து செல்லனும். விமானம் சற்று தள்ளி நிற்கும். அந்த இடம் வரை ஒரு பஸ்ஸில் ஏற்றி அழைத்து போவார்கள். ஓரிரு நிமிட பயணம் தான். பலரும் நின்று கொண்டிருப்பார் (கொஞ்சம் சீட்களே பஸ்ஸில் இருக்கும். வயதானவர்களே அமர்நிதிருப்பர்) விமானம் வந்து உள்ளே ஏறியதும் பணி பெண்கள் செயற்கை புன்னுகையுடன் உங்களை வரவேற்பார்கள். உங்கள் சீட் தேடி அமர வேண்டியது தான். விமானம் உள்ளே பார்க்க நம்ம ஆம்னி பஸ் மாதிரி தான் இருக்கும்.
சற்று நேரத்தில் பைலட் ஸ்பீக்கரில் சில அறிவிப்பு செய்வார். குறிப்பாய் விமானம் மேலேறும் போது சீட் பெல்ட் போடணும் என அறிவுறுத்துவார்கள். போட தெரியாவிடில் பணி பெண்கள் வந்து சொல்லி தருவர்.
விமானம் கிளம்பும். கொஞ்ச நேரம் மறுபடி ஆம்னி பஸ் மாதிரி வேகமாய் தரையில் ஓடும். தரையிலிருந்து செங்குத்தாய் மேலேறும் அந்த நொடிகள் செம ஜாலியாய் இருக்கும். குறிப்பாய் முதல் சில முறை பயணிப்போர் இதை மிக என்ஜாய் செய்வார்கள். பயணம் முழுதுமே அவர்களுக்கு புதிதாயும் ஆச்சரியமாயும் மகிழ்வாயும் தான் இருக்கும்.
பல முறை விமான பயணம் மேற்கொண்டாரோ புத்தகத்தில் ஆழ்ந்திருப்பர். அல்லது தூங்க ஆரம்பித்திருப்பர் !
முன்பெல்லாம விமான பயணம் அனைத்திலும் இலவச உணவு கிடைக்கும். இப்போது அப்படி கிடைப்பதில்லை. பணி பெண்கள் ஹோட்டல் சர்வர் போல என்ன வேண்டுமென கேட்டு, தாங்களே காசு வாங்கி கொண்டு தருகிறார்கள். விலையெல்லாம் செம அதிகம். காபி ஒன்று அறுபது ரூபாய். சிப்ஸ் பாக்கெட் (வெளியே விலை பத்து) ஐம்பது ரூபாய். தண்ணீர் மட்டும் தான் (மிக கொஞ்சமாய்) இலவசமாய் தருகிறார்கள். ரெண்டு மூணு முறை நீங்கள் கேட்டால் தண்ணி பாட்டில் வாங்கி கொள்ளுங்களேன் என்கிறார்கள் (அம்பது !!)
விமானம் பறக்க துவங்கியதும் பணி பெண்கள் இரண்டு அல்லது மூன்று பேர் ஆங்காங்கு நின்று கொண்டு எங்கெங்கு வெளியேறும் கதவு உள்ளது, பாராசூட்டை பயன்படுத்துவது எப்படி போன்ற விஷயங்களை சொல்வார்கள். இது எப்போதும் ஒரே மாதிரி கதை வசனம் தான். இதனை உத்து பார்க்கிற மக்கள் நிச்சயம் முதல் முறை பயணிப்பவர்கள் என அடித்து சொல்லி விடலாம். மற்றவர்கள் பணி பெண் அழகாய் இருந்தால் மட்டும் பார்ப்பார்கள்.
வெளிச்சத்தில் பயணித்தால் மேகங்களை மிக அருகில் பார்க்கலாம். மிக அழகாய் இருக்கும். போலவே மாலை ஏழு மணி அளவில் உங்கள் விமானம் தரை இறங்கினால் உங்கள் ஊரை அதன் வண்ண விளக்குகளுடன் பார்த்து ரசிக்கலாம்.
இங்குள்ள படங்கள் மற்றும் வீடியோவில் மேகங்களையும், வானம் தன் நிறத்தை எப்படி மாற்றி கொள்கிறது என்பதையும் படிப்படியாக கண்டு களியுங்கள்
வெளிச்சத்தில் பயணித்தால் மேகங்களை மிக அருகில் பார்க்கலாம். மிக அழகாய் இருக்கும். போலவே மாலை ஏழு மணி அளவில் உங்கள் விமானம் தரை இறங்கினால் உங்கள் ஊரை அதன் வண்ண விளக்குகளுடன் பார்த்து ரசிக்கலாம்.
இங்குள்ள படங்கள் மற்றும் வீடியோவில் மேகங்களையும், வானம் தன் நிறத்தை எப்படி மாற்றி கொள்கிறது என்பதையும் படிப்படியாக கண்டு களியுங்கள்
பஞ்சு போல் மிதக்கும் மேகங்கள் |
விமானத்தின் இறக்கை தெரிகிறது பாருங்கள் |
அடுத்தடுத்த படத்தில் வானம் நிறம் மாறுவதை கவனியுங்கள் |
செந்நிறமாகிறது வானம் |
இருட்ட துவங்கி விட்டது |
இன்னும் கொஞ்ச வெளிச்சமே மிச்சம் |
இருட்டாகிடுச்சு |
சென்னையில் விமானம் இறங்கும்போது தெரியும் விளக்குகள் |
விமானம் நின்றதும் இறங்க மக்கள் அடித்து கொள்கிறார்கள். சீக்கிரம் வெளியே போகணுமாம் ! விமானம் நின்றதும் ஒவ்வொருவரும் போன் அடிப்பது தன் மனைவிக்கு அல்லது வெளியில் காத்திருக்கும் டிரைவருக்கு தான் ! சில நேரம் விமானத்திம் இரு புறமும் இறங்க விடுவர். சில நேரம் முன் பக்கம் மட்டுமே இறங்குவது இருக்கும். மீண்டும் வெளியில் வர ஒரு பஸ்.
விமான நிலையம் வந்ததும் நமது லக்கேஜ்கள் அங்கிருக்கும் கன்வேயரில் வரும். (நம் விமான லக்கேஜ்கள் எந்த எண் கன்வேயரில் வருகிறது என தெரிந்து கொள்வது அவசியம். நீங்கள் பாட்டுக்கு வேறு விமான கன்வேயரில் உள்ள சூட்கேசை எடுக்க போயிட கூடாது) கன்வேயரில் வரும் சூட் கேசை ஆள் ஆளுக்கு தானே எடுத்து கொள்கிறார்கள். நம் லக்கேஜ் இன்னொருவர் எடுத்து போனால் கூட தெரியாது. அதனை தடுக்க எந்த முறையும் இல்லை. இதுக்கு ஏதாவது ஒரு செக் வைத்தால் நன்றாயிருக்கும் !
டிஸ்கி: இது நம் ப்ளாகில் 400-ஆவது பதிவு !
400ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் .. என்னோட நண்பன் ஒருத்தன் indigoல ஹைதராபாத்ல இருந்து சென்னை வந்தான். பசியில உள்ள வித்துட்டு (!) வந்ததை சாப்பிட்டு இருக்கான். வெளியே வந்துடு எனக்கு போன் பண்ணவன், மச்சி இந்த ப்ளைட்ல அநியாயத்துக்கு கொள்ளை அடிக்கிறாங்க, முன்னமே தெரிஞ்சிருந்தா பரோட்டாவும் சால்னாவும் வாங்கிட்டு போயிருப்பேன்னு சொல்லி கஷ்டத்திலும் காமெடி பண்ணான் :)))
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே, 400-என்பது சுலபமான விசயமல்ல ., உளம் கனிந்த வாழ்த்துக்கள் ..!
ReplyDeleteநல்ல விவரமான பதிவு.
ReplyDelete//நம்ம ஆம்னி பஸ் மாதிரி தான்//
வீடியோஸ்ல பேக்ரவுண்ட் வாய்ஸுகளும் அதைத்தான் ஞாபகப்படுத்துகின்றன. சூப்பரா எஞ்சாய் பண்ணிருக்காங்க மக்கள்ஸ்!!
//முன்னமே தெரிஞ்சிருந்தா பரோட்டாவும் சால்னாவும் வாங்கிட்டு போயிருப்பேன்னு சொல்லி கஷ்டத்திலும் காமெடி//
உண்மையிலேயே இங்கே பட்ஜெட் ஃப்ளைட்டுகளில் இந்தியா செல்வோர் சிலர் வீட்டிலிருந்து உணவு கையில் எடுத்துச் செல்வதுண்டு!!
400க்கு வாழ்த்துக்கள் நண்பரே. மேலும் தொடரட்டும்.
ReplyDelete400க்கு வாழ்த்துக்கள் !
ReplyDeleteஅன்பின் திரு மோகன் குமார்,
ReplyDelete400வது பதிவிற்கு வாழ்த்துகள். அழகாக விவரித்துள்ளமைக்கு பாராட்டுகள்.
அன்புடன்
பவள சங்கரி
நானூறுக்கு நல்வாழ்த்துகள்:)! தொடருங்கள்!
ReplyDeleteநிறம் மாறும் வானைப் படிப்படியாகப் பிடித்த படங்கள் அழகு.
விமான பயண கையேடுன்னே சொல்லலாம் போல?
ReplyDelete////நம் லக்கேஜ் இன்னொருவர் எடுத்து போனால் கூட தெரியாது. அதனை தடுக்க எந்த முறையும் இல்லை. இதுக்கு ஏதாவது ஒரு செக் வைத்தால் நன்றாயிருக்கும் !//////
ReplyDeleteஅது கஷ்டம்தான். ஒரு முறை சென்னை விமான நிலையத்தில் ஏர்லைன்ஸ் அதிகாரி ஒருவர் (யூனிஃபார்மில் இருந்தார்), லக்கேஜ் எடுப்பவர்களிடம் சென்று அதன் டேக்கை செக் பண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் இது வழமையாக நடப்பதில்லை
400 வது பதிவுக்கு மனங்கனிந்த நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteபடங்கள் அனைத்தும் மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
400-ற்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteGreetings to 400th post
ReplyDelete// நாம் முதலில் புக் செய்யும் போது நமது டிக்கெட் மட்டும் தான் உறுதியாகும். சீட் நம்பர் எல்லாம் அப்போ வராது. நீங்கள் விமான நிலையம் சென்ற பின் தான் சீட் எண் போடுவார்கள். //
hmmm.. seems that you are traveling for the first time. I believe many bloggers might be knowing this information.
In-fact in Air india.. after booking your ticket, with reference / PNR number you can choose your seat well in advance to get your favorite seat
And finally, experienced/frequent travelers prefer 'Aisle' seat for a simple reason
1) not to disturb neighboring seaters (sitters) for nature's call.
400-வது பதிவிற்கு வாழ்த்துகள் மோகன். மேலும் பல பதிவுகள் எழுதி எங்களை மகிழ்விக்க வாழ்த்துகிறேன்..
ReplyDeleteமுதலில் 400வது பதிவிற்கு வாழ்த்துக்கள் !
ReplyDeleteபடங்கள் அனைத்தும் மிக அருமை !
படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. நானூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்.
ReplyDelete//பதிவர் அமைதி அப்பா விமான பயணம் செல்லாதோருக்கும் பயன் படும் வகையில் விரிவாக எழுத சொன்னதால் இந்த பதிவு விரிவாக வருகிறது.//
ReplyDeleteமிக்க நன்றி சார்.
படங்கள், வீடியோ மற்றும் தகவல்கள் அனைத்தும் நிச்சயம் பயன்படும்.
ReplyDeleteஎன்னைப் போன்ற விமானப் பயணம் செய்யாதவர்கள் இந்தப் பதிவைப் படித்து புரிந்துக் கொள்ள முடியும் என்பது உண்மை!
400க்கு வாழ்த்துகள் மோகன்.
ReplyDeleteஒரு விமான பயணமும், கப்பல் பயணமும் போகணும்னு ஆசை....உதாரணத்துக்கு, இங்கிருந்து அந்தமானுக்கு கப்பல்ல போய், வரும்போது விமானத்துல வரணும்....ஆசை இன்னும் ஆசையாவே இருக்கு...செயல் படுத்த முடியல :(
// முன்னால் எதுக்கு என்றால், அப்போ தான் விமானம் கடைசியாய் நின்றதும் சீக்கிரம் வெளியே இறங்கலாம் //
ReplyDeleteஅதில்லை வாத்யாரே... வண்டி ஸ்பீட் பிரேக்கரில் ஏறி இறங்கும்போது தூக்கி போடாம இருக்கணும்ல... அதுக்குத்தான்...
// போட தெரியாவிடில் பணி பெண்கள் வந்து சொல்லி தருவர். //
ReplyDeleteஅவங்களே போட்டு விட மாட்டாய்ங்களா...
விமான பயணம் இதுவரை போனதில்லை. டைரியில் குறித்து வைத்துக்கொண்டேன். நிச்சயம் பயன்படும்.
ReplyDeleteநானூறுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
வாழ்த்துகள்.
ReplyDeleteநல்ல அனுபவங்கள்.. முதல் முறை பயணிப்பவர்களுக்கு நிச்சயமாப் பயன்படும்.
ReplyDeleteசாப்பாடு விஷயத்தில் ஜெட் ஏர்வேஸ் தேவலை.. கிங்ஃபிஷர்சும் கூட காம்ப்ளிமென்ட்ரின்னு கொடுத்தாங்க.
400-க்கு வாழ்த்துகள்.
அருண் மொழி தேவன்: உங்கள் நண்பர் சொன்னது Fact -டு !Fact -டு !Fact -டு !
ReplyDeleteநன்றி வரலாற்று சுவடுகள்
ReplyDeleteஹுசைனம்மா: நாங்க கூட போகும் போது சாப்பாடுடன் ஏறிட்டோம்
ReplyDeleteவரதராஜலு சார்: நீண்ட நாள் கழித்து வந்துள்ளீர்கள் நன்றி நலமா?
ReplyDeleteநன்றி ரிஷபன் சார்
ReplyDeleteநன்றி பவள சங்கரி மேடம்
ReplyDeleteநன்றி ராமலட்சுமி மேடம் புகை படகாரரான தாங்கள் பாராட்டுவது மகிழ்ச்சி
ReplyDeleteராம்சாமி அண்ணே : பேகேஜ் பற்றி உங்கள் அனுபவம் சொன்னதுக்கு நன்றிங்கோ
ReplyDeleteரமணி: நன்றி மகிழ்ச்சி
ReplyDeleteமாதவா: நான் இதுவரை ஏழெட்டு முறை விமான பயணம் சென்றுள்ளேன். எல்லா நிறுவன விமானத்திலும் சென்றதில்லை. பெரும்பாலும் அலுவலக நபர் டிக்கெட் போடுவார். வெப் செக் இன் செய்து தருவார். இம்முறையும் அவரே செய்தார்
ReplyDeleteநன்றி ஸ்ரீராம்
ReplyDeleteநன்றி வெங்கட் மகிழ்ச்சி
ReplyDeleteஅமைதி அப்பா : நன்றி சார். தங்களுக்காக தான் விரிவாய் எழுதினேன். நீங்கள் வேலைகளுக்கு நடுவே வந்து படித்ததில் சந்தோசம்
ReplyDeleteதனபாலன் சார்: நன்றி மகிழ்ச்சி
ReplyDeleteரகு : நன்றி. அந்தமான் செல்வது பற்றி சேர்ந்து யோசிப்போம்
ReplyDeleteபிலாசாபி பிரபாகர் : சீட் பெல்ட் போட தெரியாதுன்னு சொன்னா, நமக்கு போட்டு விட சொல்லுவாங்க..பக்கத்து சீட்டில் உள்ளவர்களை !
ReplyDeleteமுரளி : நன்றி மகிழ்ச்சி
ReplyDeleteநன்றி சரவண குமார்
ReplyDeleteநன்றி அமைதி சாரல் மேடம்
ReplyDeleteமோகன்,
ReplyDeleteநல்லா சொல்லி இருக்கிங்க.
விமானத்தை, விமான நிலையத்தை இது போல படம் எடுக்கலாமா?
டெல்லி விமான நிலையம் உண்மையில் நன்றாக இருக்கும்.நான் மொபைல்ல படம் எடுத்தேன், கூட வந்தவர் ,சர்வைலண்ஸ் கேமிரால பார்த்துட்டு வந்து, மொபைல் புடுங்கிடுவாங்கனு மிரட்டினாரே. ச்சே அப்போ பல்ப் வாங்கிட்டேன்னா :-))
ஹி..ஹி நான் மேட்ச் பாக்ஸே வச்சிருந்தேன் ,மாட்டிக்கலையே. செக்கிங் முன்னர் ஒரு இடத்தில மேட்ச் பாக்ஸ் நிறைய புடுங்கி போட்டது கிடக்கும்.
ஏர் இந்தியால ,பரோட்டா,புலாவ் எல்லாம் கொடுத்தாங்க.லாஸ்ட் வீக் கூட என் கசின் போனார் , சாப்பாடுக்கொடுத்தாங்களாம். சில மலிவு பயண விமான நிருவனத்தில தான் "நோ ஃப்ரில்" சேவைனு இப்படி செய்றாங்க.
கேப்சினோ காம்போனு வாங்கி மலிவா சாப்பிட்டுக்கலாம். ஒரு பர்கர் +காபி.
நாம தான் விமான நிலையத்தில பயந்து சாகிறோம்,சில பேரு கோயம்பேடு பஸ் ஸ்டேண்டு போல படுத்து தூங்குறாங்க, ஃபிளைட் லேட் ஆச்சுன்னு.
பிளைட்ல டாய்லெட் போறது எப்படினு சொல்லி இருக்கலாம். எனக்கு அது ஒத்து வராதுனு அடக்கிட்டு வருவேன் :-))
வவ்வால்: நாங்களும் போட்டோ எடுக்க யோசித்தோம். ஆனால் ஏர் போர்ட்டில் சில பேர் படம் எடுப்பதை பார்த்து விட்டு தான் பின் எடுத்தோம்.
ReplyDeleteபோலவே விமானத்திலும் பலர் படம் எடுக்கவே செய்தனர். பின் தான் நாங்களும் எடுக்க ஆரம்பித்தோம்
விமானத்தின் குறுகிய இடத்தில் டாய்லெட் போவது கடினமே. எனக்கு அதை விட அந்த தண்ணீர் எப்படி வெளியாகும் என தான் ஆச்சரியமாய் இருக்கும் !
அருமையான பதிவு.
ReplyDeleteபடிப்படியாக சொல்லியிருக்கிறீர்கள். மிகவும் பயனுள்ள பதிவு. படங்களும் மிக மிக அருமை.
400 வது பதிவுக்கு வாழ்த்துகள்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
நானூறுக்குப் பாராட்டுக்கள் மோகன்குமார்.
ReplyDeleteபடங்கள் அருமை - பொறுமையைப் பாராட்டுகிறேன்.
இப்ப சாப்பாடு கிடையாதா ப்ளேன்ல? சென்ற முறை சென்னை-தில்லிப் பயணத்தில் ஒருவர் தனக்கு இரண்டாவது சாப்பாடு தரவேண்டும் என்று அடம் பிடித்தது நினைவுக்கு வருகிறது. இப்ப முதலுக்கே மோசமா?
நானூறுக்குப் பாராட்டுக்கள் மோகன்குமார்.
ReplyDelete