Thursday, June 28, 2012

சென்னை அண்ணா மேம்பால பஸ் விபத்து:சில கேள்விகள்

சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து, ஒரு பேருந்து விபத்துக்குள்ளானது உங்கள் அனைவருக்கும் இந்நேரம் தெரிந்திருக்கும். இது குறித்த ஒரு பார்வை.

பகல் மூன்று மணி அளவில் அலுவலகத்தில் இந்த செய்தி கசிய துவங்கியது. " செம ஆக்சிடன்ட்டாம் ! நிறைய பேர் சீரியசாம். மவுன்ட் ரோடு முழுக்க டிராபிக் ஜாமாம்" என்று பேசி கொண்டனர். மவுன்ட் ரோடுக்கு அலுவலக வேலையாக   செல்ல வேண்டியவர்கள் கூட " நாளை போய் கொள்ளலாம்" என தள்ளி போட்டனர்

அண்ணா மேம்பாலத்திலிருந்து பஸ் விழுந்தது என்றதும் மிக அதிக உயரத்தில் இருந்து விழுந்ததாக முதலில் நினைத்தோம். ஆனால் மேம்பாலத்தில் இருந்து இறங்கும் போது குறிப்பிட்ட தூரம் கீழே வந்த பின், ஒரு திருப்பத்தில் சுவற்றை உடைத்து கொண்டு பஸ் விழுந்துள்ளது. மிக அதிக உயரத்திலிருந்து விழுந்தால் விபத்து இன்னும் பெரிதாய் இருந்திருக்கும்

விபத்துக்கான காரணம் இரண்டு விதமாய் சொல்கிறார்கள்

பேருந்து ஓட்டுனர் யூனியனில் " பேருந்து நல்ல கண்டிஷனில் இல்லை ;  இதனால் திருப்பத்தில் ஓட்டுனர் சீட் உடைந்து விட்டது, அதனால் பாலன்ஸ் தவறி சுவர் மீது மோதினார்" என்கிறார்கள்.

இது ஏற்று கொள்ளும் வாதமாய் இல்லை. காரணம் நேரில் பார்த்தவர்கள் சொல்வது வேறு விதமாய் உள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை சம்பவம் நடந்த இடத்துக்கும், மருத்துவமனைக்கும் சென்று பேசியதில் சம்பவ இடத்தில் இருந்த பலரும் ஓட்டுனர் செல்போனில் பேசியதாக சொல்கிறார்கள்

பேருந்து கீழே விழுந்து, சில நிமிடங்களில் கண்ணாடியை உடைத்து அனைவரையும் வெளியே எடுத்த பலரும் - ஓட்டுனரை வெளியே இழுத்த போது கூட அவர் செல்போனை விடாமல் கெட்டியாய் பிடித்து கொண்டிருந்ததாக சொல்கிறார்கள்.

ஓட்டுனர் செல்போனில் பேசியதால் இந்த விபத்து நிகழ்ந்ததா என்பதை நிச்சயம் கண்டுபிடிக்க முடியும்.

ஒன்று- அவர் செல்போன் எண்ணுக்கு விபத்து நடந்த அந்த நிமிடத்தில் தொலை பேசி வந்ததா, அவர் போனை எடுத்து பேசினாரா என சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்திடம் கேட்க முடியும். அவர்கள் தரும் தகவல் நிச்சயம் அவர் அந்த நேரத்தில் செல்போன் பேசினாரா என உறுதிபடுத்தும்.

இரண்டு- வண்டியின் முன் பக்கம் - ஓட்டுனருக்கு இடது புறம் அமர்ந்தவர்கள் ஓட்டுனர் செல்போனில் பேசியிருந்தால் நிச்சயம் கவனித்திருப்பார்கள். இவர்களிடம் விசாரித்தாலும் உண்மை தெரிய வந்து விடும்

பதிவரும், புதிய தலைமுறை நிருபருமான யுவகிருஷ்ணா இவ்வாறு கூறுகிறார்:


"நேற்று விபத்து நடந்த கொஞ்ச நேரத்தில் சம்பவ இடத்துக்கு போயிருந்தேன்.

அடி எதுவும் பெரியதாக படாமல் தப்பிய அன்பு என்பவர் மீடியாவிடம் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். அவர் ட்ரைவர் சீட்டிலிருந்து மூன்று சீட்டுகள் பின்னாலிருந்தார். டிரைவர் தனது லெப்ட் ஹேண்டில் செல்போன் பிடித்தவாறே, ரைட் ஹேண்டில் ஸ்டியரிங்கை சுமார் 40 கி.மீ வேகத்தில் லெஃப்டுக்கு திருப்பியிருக்கிறார். அவரால் எதிர்ப்பார்த்த அளவுக்கு திருப்பமுடியவில்லை. சுவரில் பஸ் மோதிவிட்டது.

நாம் கூடுதல் வசதி என்று நினைக்கிற செல்ஃபோன் மிகப்பெரிய பிரச்னையாக போய்க் கொண்டிருக்கிறது :-( "

*************
இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒரு சாதாரண பயணியாக நாம் எதிர்பார்ப்பது இதை தான்:

அரசாங்கம்- ஓட்டுனர் செல்போன் பேசியபடி வண்டி ஓட்டினாரா என உறுதி படுத்த வேண்டும். அப்படி இருந்தால் ஓட்டுனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் செல்போன் ஓட்டிய படி வண்டி ஓட்டும் டிரைவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அறிவிக்க வேண்டும். அவர்கள் லைசன்சும் சில ஆண்டுகளாவது முடக்க வேண்டும்.

யூனியன்கள்- உங்கள் ஒற்றுமை பாராட்ட தக்கது. ஆனால் குடித்து விட்டோ, செல்போன் பேசியபடியோ வண்டி ஓட்டும் இத்தகைய ஓட்டுனர்களை காப்பாற்ற நினைக்காதீர்கள். அந்த ஒரு நபரின் குடும்பத்தை காப்பாற்ற நீங்கள் பொய் பேசுகிறீர்கள். ஆனால் பெரும் விபத்து நடந்தால் எத்தனை குடும்பம் பாதிக்கப்படும்? இத்தகைய நபர் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் தான் பிறருக்கு பயம் இருக்கும்

மீடியா- ஒவ்வொரு நாளும் பேருந்து விபத்து நடக்க தான் செய்கிறது. ஓரிருவர் இறக்கின்றனர். அதையெல்லாம் விட்டு விட்டு ஏன் இந்த விபத்துக்கு இவ்வளவு முக்கியத்துவமும், மக்களிடம் பயமும் கிளப்ப வேண்டும்? உண்மையில் ஒரு நபரை தவிர மற்ற யாருக்கும் பெரிய அடி கிடையாது என டாக்டர்கள் பேசுவது மூலம் தெரிகிறது. எதற்கு இத்தனை பரபரப்பை கிளப்புகிறீர்கள்? புகழ் பெற்ற சென்னை அண்ணா மேம்பாலத்தில் விபத்து என்பதால் தான் உங்கள் TRP ஐ அதிகமாக்க உழைக்கிறீர்கள். உங்கள் எழுச்சி மூலம் செல்போன் பேசிய படி வண்டி ஓட்டும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை வந்தால் மகிழ்ச்சி

இதை வாசிக்கும் நாம் என்ன செய்ய வேண்டும்?

நம் நாட்டில் பலரும் " யாரும் கேக்கலை .. கேட்டால் பாத்துக்கலாம்" என்று தான் தப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். தட்டி கேட்காத வரை தவறுகள் தொடரும்.

நீங்கள் செல்லும் எந்த வாகனமாக இருந்தாலும் - அது பஸ்ஸோ, காரோ - டிரைவர் செல்போனில் பேசினால், "வண்டியை ஓரமாய் நிறுத்தி விட்டு பேசுங்கள்; ஓட்டி கொண்டே பேசாதீர்கள்" என அவசியம் சொல்லுங்கள். இதை செய்ய தவறினால் விபத்துக்கு நாமும் காரணமாகிறோம் என மறவாதீர்கள்.

43 comments:

  1. யூனியன்கள்- உங்கள் ஒற்றுமை பாராட்ட தக்கது. ஆனால் குடித்து விட்டோ, செல்போன் பேசியபடியோ வண்டி ஓட்டும் இத்தகைய ஓட்டுனர்களை காப்பாற்ற நினைக்காதீர்கள். அந்த ஒரு நபரின் குடும்பத்தை காப்பாற்ற நீங்கள் பொய் பேசுகிறீர்கள். ஆனால் பெரும் விபத்து நடந்தால் எத்தனை குடும்பம் பாதிக்கப்படும்? இத்தகைய நபர் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் தான்
    பிறருக்கு பயம் இருக்கும் //


    மிகச் சரியான கருத்து
    வக்கீல் என்றால் தீமைகளுக்கு ஆதரவாக வாதிடுபவர்
    மக்கள் உரிமை குறித்து பேசுபவர்கள் என்றால்
    தீவீரவாதிகளுக்கு ஆதரவாக இருப்பவர் என்கிற
    கருத்து போல யூனியங்களின் நிலைமை
    அப்படியாகிக்கொண்டிருக்கிறது
    சரியான நேரத்தில் சரியான பதிவு தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  2. யூனியன்கள்- உங்கள் ஒற்றுமை பாராட்ட தக்கது. ஆனால் குடித்து விட்டோ, செல்போன் பேசியபடியோ வண்டி ஓட்டும் இத்தகைய ஓட்டுனர்களை காப்பாற்ற நினைக்காதீர்கள். அந்த ஒரு நபரின் குடும்பத்தை காப்பாற்ற நீங்கள் பொய் பேசுகிறீர்கள். ஆனால் பெரும் விபத்து நடந்தால் எத்தனை குடும்பம் பாதிக்கப்படும்? இத்தகைய நபர் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் தான்
    பிறருக்கு பயம் இருக்கும் //

    சும்மா சொல்ல கூடாது, பின்னிட்டீங்க, நூத்துல ஒரு வார்த்தை சொன்னாலும்.................சும்மா நெத்தியடி............ உங்கள் பதிவிர்க்கு நன்றி.

    ReplyDelete
  3. மோகன்,

    என் பயண அனுபவத்தில் இருந்து இவ்விபத்தினை ஒப்பிட்டு பதிவு தயாராகிட்டு இருக்கு, நீங்க ரொம்ப வேகம் உடனே போட்டுட்டிங்க.

    பெரும்பாலான விபத்துக்கு ஓட்டுநரே காரணம்.

    யாரும் கேட்பதில்லைனு சொல்றிங்க ,கேட்டால் கேட்பவனை வில்லன் ஆக்கிடுறாங்க,போதாக்குறைக்கு சகப்பயணிகளும் இதுக்கு சம்பந்தமே இல்லாதது போல வேடிக்கை பார்க்கிறாங்க

    4 மாதங்களுக்கு மேல் இருக்கும் என நினைக்கிறேன், நான் பயணித்த பேருந்து மாமண்டூர் அருகே வயலில் பாய்ந்து ஒரு மரத்தில் இடித்துவிட்டது, எனக்கு மூக்கும் உடைந்தது.நிறைய பேருக்கு நல்ல அடி ,உயிர்ச்சேதம் மட்டும் இல்லை.

    செய்திகளில் எல்லாம் வந்துச்சு.விபத்துக்கு காரணம் ஒரு மினி லாரி ராங்க் சைடில் வந்ததது, ஆனால் அதை முன்னரே கவனிக்கவில்லை ,கடசி நேரத்தில் கவனித்து வண்டியை திருப்பிவிட்டதில் விபத்தாச்சு.

    சாலையில் வாகனம் ஓட்டுபவர்கள் எதைப்பற்றியும் கவலைக்கொள்வதில்லை.

    ReplyDelete
  4. /////உங்கள் ஒற்றுமை பாராட்ட தக்கது. ஆனால் குடித்து விட்டோ, செல்போன் பேசியபடியோ வண்டி ஓட்டும் இத்தகைய ஓட்டுனர்களை காப்பாற்ற நினைக்காதீர்கள். அந்த ஒரு நபரின் குடும்பத்தை காப்பாற்ற நீங்கள் பொய் பேசுகிறீர்கள். ஆனால் பெரும் விபத்து நடந்தால் எத்தனை குடும்பம் பாதிக்கப்படும்? இத்தகைய நபர் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் தான் பிறருக்கு பயம் இருக்கும்///


    நெத்தியடி தலைவா :)

    ReplyDelete
  5. // உங்கள் TRP ஐ அதிகமாக்க //

    உங்களுக்கொரு பதிவு தேறினமாதிரி......
    :-)

    (எனக்குத் தெரியும் நீங்கள் விழிப்புணர்விற்காக எழுதியுள்ளீர்கள். கமர்ஷியலுக்காக அல்ல)

    ReplyDelete
  6. சரியான நேரத்தில் எழுதப்பட்ட சரியான விழிப்புணர்வுப் பதிவு. நன்று.

    ReplyDelete
  7. மாதவா: நீ என் மேல் உள்ள உரிமையில் கிண்டலாய் சொல்கிறாய் என்பதை நன்கு அறிவேன்

    இந்த பதிவை படித்து அரசாங்கமோ, ஓட்டுனர்களோ மாற போவதில்லை; ஆனால் இனி டிரைவர் செல்போன் பேசிய படி வண்டி ஓட்டும் போது ஒரு சிலராவது தட்டி கேட்க கூடும். அந்த எண்ணம் ஒரு சிலருக்காவது வர வேண்டுமென்று தான் இப்பதிவு எழுதினேன் !

    நன்றி !

    ReplyDelete
  8. காலைச் செய்தித்தாளில் (தில்லியில்) படித்த போது மேலோட்டமாக இருந்தது. இதில் விவரமாக எழுதியுள்ளீர்கள். நன்றி

    ReplyDelete
  9. இதை வாசிக்கும் நாம் என்ன செய்ய வேண்டும்?
    எல்லேரையும் சிந்திக்க வைத்த பதிவு. நன்றிங்க.

    ReplyDelete
  10. onnum nadakathu. driver mela action edutha union prachanai pannuvanga. moonu masam suspension panna athiagam

    ReplyDelete
  11. மோகன் சார்,

    நேற்று விபத்து நடந்த கொஞ்ச நேரத்தில் சம்பவ இடத்துக்கு போயிருந்தேன்.

    அடி எதுவும் பெரியதாக படாமல் தப்பிய அன்பு என்பவர் மீடியாவிடம் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். அவர் ட்ரைவர் சீட்டிலிருந்து மூன்று சீட்டுகள் பின்னாலிருந்தார். டிரைவர் தனது லெப்ட் ஹேண்டில் செல்போன் பிடித்தவாறே, ரைட் ஹேண்டில் ஸ்டியரிங்கை சுமார் 40 கி.மீ வேகத்தில் லெஃப்டுக்கு திருப்பியிருக்கிறார். அவரால் எதிர்ப்பார்த்த அளவுக்கு திருப்பமுடியவில்லை. சுவரில் பஸ் மோதிவிட்டது.

    நாம் கூடுதல் வசதி என்று நினைக்கிற செல்ஃபோன் மிகப்பெரிய பிரச்னையாக போய்க் கொண்டிருக்கிறது :-(

    ReplyDelete
  12. யுவகிருஷ்ணா: நேரடி அனுபவம் பகிர்ந்தமைக்கு மிக நன்றி. நீங்கள் சொன்ன விஷயம் மிக முக்கியமானது என்பதால் தற்போது பதிவிலேயே சேர்த்து விட்டேன். நன்றி

    ReplyDelete
  13. செல்ஃபோனில் பேசுபவர்கள் தானாகத் திருந்தினால்தான் உண்டு. அதுவும் மாநகரப் பேருந்து ஓட்டுனர்களிடம் நாம் சொல்லித் திருத்த முடியுமா?

    ReplyDelete
  14. நீங்க சொன்ன மாதிரி தலைநகரம்... அப்புறம் ஜெமினி பாலம் அதுனாலத்தான் இவ்வளவு பரபரப்பு..ஆனா இன்னொரு பெரிய தப்பு எல்லா ரோடுல நடக்கறது என்னன்னா பைக் இல்ல கார் எல்லாரும் காதுல செல்போன் பேசிக்கிட்டு தான் போறாங்க அவங்களும் ஒரு விதத்துல விபத்து ஏற்படுத்ரங்க..அவங்கள எப்படி தண்டிக்றது? அதுவும் பைக்ல போற பசங்க தலை சாஞ்சு கிட்டு போன் பேசிக்கிட்டு போறப்ப அவன அப்படியே ஒரு அடி அடிக்கலாம்னு தோணும் ..

    ReplyDelete
  15. நல்ல அருமையான பதிவு.

    செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டும் அனைவருக்கும் ஒரு சவுக்கடி!!! ஆனால் இதன் பாதிப்பால் திருந்துபவர் யார் என்று யோசித்தால் அந்த டிரைவரும் அவர்களின் குடும்பமும் மட்டுமே என்பது தான் நிதர்சன உண்மை.அதற்காக அவர்கள் கொடுத்த விலை தான் அதிகம்.

    இவ்விபத்து நடந்த சில நிமிடங்களியே, தனது டூ வீலரை ஒட்டியபடி "மச்சான் 23c டிரைவர் செல்போன் பேசிட்டு பிரிட்ஜ்ல விட்டுட்டனாமே?" என்று செல்போனில் கதைத்த படி செல்லும் இளம் வயதினரையும்....
    "சொல்லு செல்லம்...வீட்டுக்கு வரும் போது மறக்காம வாங்கிட்டு வந்திடறேன்" என்று செல்போனைப் பாக்கெட்டில் வைத்தவாறே திரும்பி தனது கஷ்டமரிடம் "நீங்க சொல்றது கரெக்ட் சார், அந்த பஸ் டிரைவர் ஐ லாம் வேலையை விட்டே தூக்கிடனும்" என்று சொல்லும் ஆட்டோ டிரைவர்களையும் பார்த்து கொண்டே தான் இருக்க போகிறோம் என்னும் போது மனம் வலிக்கிறது.

    ReplyDelete
  16. சென்னை நகரப் பேருந்து ஓட்டுனர், நடத்துனர்களுக்கு அறிவுரை சொல்வதா? ஐயையோ........ அவங்க கிட்ட வாயைக் கொடுத்தவன் செத்தான்.

    ReplyDelete
  17. நாம் செல்லும் வாகனத்தில் வாகன் ஒட்டி செல்லில் பேசுவதை கண்டிப்பாக நாம் கண்டிக்க வேண்டும் முடிந்தால் போலீசுக்கும் தகவல் சொல்லலாம்...!

    ReplyDelete
  18. விழிப்புணர்வைக் கொடுக்கும் பதிவு.

    ReplyDelete
  19. நன்றி ரமணி சார்

    ReplyDelete
  20. அபு சனா : முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  21. வவ்வால்: உங்கள் அனுபவம் பயமுறுத்துகிறது. அவசியம் நீங்களும் இது பற்றி எழுதுங்கள் மிக விரிவாய் பல தகவல்களுடன் எழுதுவீர்கள் என தெரியும்

    ReplyDelete
  22. வரலாற்று சுவடுகள் : நன்றி

    ReplyDelete
  23. கணேஷ் சார்: நன்றி

    ReplyDelete
  24. சீனிவாசன் : நன்றி; வெளியூரில் இருக்கும் தமிழர்கள் சென்னை பற்றி ஆர்வமாய் வாசிப்பது புரிகிறது

    ReplyDelete
  25. சசி கலா: முதல் முறையாய் வருகிறீர்களோ? நன்றி

    ReplyDelete
  26. நன்றி ராமலட்சுமி

    ReplyDelete
  27. எல். கே. இதுவரை எந்த punishment-ம் அறிவிக்கலை. அறிவிப்பாங்களா என்றும் தெரியலை

    ReplyDelete
  28. ஸ்ரீராம்: உங்கள் கருத்து பல பேர் எதிரொளிதுள்ளனர். நான் கார் டிரைவர்களிடம் செல்போன் பேசாதீர்கள் என சொல்லியுள்ளேன். பஸ் டிரைவர்களிடம் சொன்னதில்லை

    ReplyDelete
  29. ஸ்ரீ அப்பா said
    //பைக்ல போற பசங்க தலை சாஞ்சு கிட்டு போன் பேசிக்கிட்டு போறப்ப அவன அப்படியே ஒரு அடி அடிக்கலாம்னு தோணும் ..//

    உண்மை. எனக்கும் இதே கோபம் வருவதுண்டு

    ReplyDelete
  30. Unknown to myself : தங்கள் கருத்துக்கு மிக நன்றி

    ReplyDelete
  31. தாஸ்: பஸ் டிரைவர்களிடம் பேசுவது சிரமம் தான் போலிருக்கு. அரசு ஏதாவது கடும் நடவடிக்கை எடுத்தால் தான் உண்டு

    ReplyDelete
  32. மனோ: மிக நல்ல suggestion சொன்னீர்கள். பஸ்ஸில் " இந்த வண்டி ஓட்டுனர் செல்போனில் பேசினால் இந்த எண்ணுக்கு தகவல் தாருங்கள் என எழுதி போடலாம். அது ஓரளவு பயன் தரும் என நினைக்கிறேன்

    ReplyDelete
  33. நன்றி அமைதி அப்பா

    ReplyDelete
  34. விபத்து நடப்பது சகஜம்! புதியதலைமுறையில் செய்தி பார்த்துகொண்டிருந்தேன் என்னவோ அனு உலை விபத்து மாதிரி மூச்சுஇறைக்க செய்தியாளர் டெம்போ கூட்டிக் கொண்டிருந்தார்....நேற்று பெருந்துறையில் இரயில் தீவிபத்தில் 1000பயணிகள் தப்பியதை சாதாரணமாக கூறுகிறார்கள்...இது யாரை திருப்தி படுத்த என்று யாம் அறியேன் பராபரமே!

    ReplyDelete
  35. விபத்து தவிர்க்கப் பட வேண்டியது தான். இந்த விபத்து சென்னையைல் நடந்ததால் இவர்கள் Live Relay கொடுத்து மிகவும் பரபரப்பூட்டுகிறார்கள். இதே விபத்து இவர்கள் போய்ச்சேர முடியாத குக்கிராமத்தில் இருந்தால் இப்படி ஊதிப்பெருக்குவார்களா?

    ReplyDelete
  36. சுரேஷ்,

    //இது யாரை திருப்தி படுத்த என்று யாம் அறியேன் பராபரமே!//

    சேனல் எம்டி ஐ திருப்திப்படுத்த தான். சென்னை செய்தி என்றால் மக்கள் அதிகம் பார்ப்பார்கள், டிஆர்பி என்பது சென்னையில் மட்டுமே எடுக்கப்படுகிறது அல்லது அதனை வைத்து மட்டுமே கணக்கிடுகிறார்கள், சென்னையில் அதிக மக்கள் பார்த்தாலே டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணி ஆகலாம். வீணாக தமிழ் நாடுப்பூரா சுத்த வேண்டாம், பிள்ளையார் மாம்பழம் வாங்கின கதை தெரியுமோ :-))

    ரயில் விபாத்தில் 1000 பேரும் செத்திருந்தால் கூட , அடுத்த நாள் தான் செய்திப்போட்டு இருப்பாங்க :-((

    ReplyDelete
  37. தவறென தெரிந்தாலும் நம் நண்பர்கள் எனில் அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுத்து விட மாட்டோம். அதைத்தான் யூனியனும் செய்கிறார்கள். அவர்களை குறை சொல்ல முடியாது.

    முடிவெடுக்க வேண்டியது அரசுதான். உயிர்ச் சேதம் இல்லாததால் ஓட்டுனருக்கு பெரியளவில் தண்டனை கிடைக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.

    //அது பஸ்ஸோ, காரோ - டிரைவர் செல்போனில் பேசினால், "வண்டியை ஓரமாய் நிறுத்தி விட்டு பேசுங்கள்; ஓட்டி கொண்டே பேசாதீர்கள்" என அவசியம் சொல்லுங்கள். இதை செய்ய தவறினால் விபத்துக்கு நாமும் காரணமாகிறோம் என மறவாதீர்கள்.//

    அப்பா அம்மாவுடன் ஒரு முறை கால் டாக்சியில் செல்லும்போது, ட்ரைவரிடம் சொல்லியிருக்கிறேன், "வண்டிய ஓரமா நிறுத்திட்டு, நீங்க பேசி முடிங்க..அப்புறமா போகலாம்" என்று..(திமிராக அல்ல). அவரும் சாரி சொல்லி, பேசி முடித்து பின் கிளம்பினார். அதன் பின் நாங்கள் இறங்கும் வரை, மொபைலில் பேசவில்லை. கண்டிப்பாக மனதிற்குள் திட்டியிருக்கக்கூடும். அதுபற்றி கவலையில்லை. பின் சீட்டில் உட்கார்ந்திருந்த என் அப்பா அம்மாதான் முக்கியமாக பட்டது எனக்கு.

    மீடியா பரபரப்பு - THERE IS NO NEWS LIKE BAD NEWS என்று ஜேம்ஸ் பாண்ட் படத்தில் ஒரு வசனம் வரும். அதுதான் மீடியாவின் வேதவாக்கு. விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு, எத்தனை சேனல்களில், எத்தனை நிமிடங்கள் அவர் பேட்டி வந்தது? இதுவே நித்யானந்தா செய்தியாக இருந்தால்..?

    ReplyDelete
  38. // ஒவ்வொரு நாளும் பேருந்து விபத்து நடக்க தான் செய்கிறது. ஓரிருவர் இறக்கின்றனர். அதையெல்லாம் விட்டு விட்டு ஏன் இந்த விபத்துக்கு இவ்வளவு முக்கியத்துவமும், மக்களிடம் பயமும் கிளப்ப வேண்டும்? உண்மையில் ஒரு நபரை தவிர மற்ற யாருக்கும் பெரிய அடி கிடையாது என டாக்டர்கள் பேசுவது மூலம் தெரிகிறது. எதற்கு இத்தனை பரபரப்பை கிளப்புகிறீர்கள்? புகழ் பெற்ற சென்னை அண்ணா மேம்பாலத்தில் விபத்து என்பதால் தான் உங்கள் TRP ஐ அதிகமாக்க உழைக்கிறீர்கள். உங்கள் எழுச்சி மூலம் செல்போன் பேசிய படி வண்டி ஓட்டும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை வந்தால் மகிழ்ச்சி //

    நறுக்குன்னு கேட்டீங்க தல...

    ReplyDelete
  39. நல்ல கேள்விகள்...

    எல்லா விஷயங்கள் போலவே, இந்த பரபரப்பு சில நாட்களில் அடங்கிவிடும். வாகனம் ஓட்டுவோரில் பலர் செல்போனில் பேசியபடியேதான் ஓட்டுவார்கள். பட்டாலும் திருந்துவதில்லை... :(

    இதுவரை ஓட்டுனரின் மேல் எதுவும் நடவடிக்கை எடுத்த மாதிரி தெரியவில்லை. எல்லா இடங்களிலும், அரசியல்.....

    ReplyDelete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete
  41. // அப்பா அம்மாவுடன் ஒரு முறை கால் டாக்சியில் செல்லும்போது, ட்ரைவரிடம் சொல்லியிருக்கிறேன், "வண்டிய ஓரமா நிறுத்திட்டு, நீங்க பேசி முடிங்க..அப்புறமா போகலாம்" என்று..(திமிராக அல்ல). //

    This is possible in 'Call Taxi' at that is being hired by a particular party. We have the right.

    In public busses also, we have the right to insist the same to the bus driver.. but, he will simply fire back @ us. He will reply that "It's not your bus". But, also it's not his (personal) bus too..

    That's the problem.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...