முக நூல் கிறுக்கல்கள்
விஜய் டிவி சூப்பர் சிங்கரில் இந்த வாரம் அக்ரஹாரம் ஸ்பெஷல் ! பார்வையாளர்கள் ,நடுவர்கள், போட்டியாளர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்அனைவரும் மடிசார் / பிராமின் உடையில். அதே பாஷை பேச முயற்சிக்கிறார்கள். அனைத்து பாடல்களும் அக்ரஹார பாடல்களே !
எனக்கு தெரிந்து இது எந்த சாராரையும் மகிழ்ச்சி படுத்தாது.
பிராமணர் அல்லாதோர் "எதற்கு பிராமணர்களுக்கு ஸ்பெஷல் நிகழ்ச்சி?" என நினைப்பார்கள். பிராமணர்களோ அந்த நிகழ்ச்சி முழுதும் தங்களை கிண்டல் செய்வதாக நினைப்பார்கள் ( மா. கா. பா டயலாக்: ஆத்துக்கு போறேளா? குளத்துக்கு போறேளா? )
விஜய் டிவி இத்தகைய கான்செப்டை தவிர்த்திருக்கலாம்
**********
எனக்கு லாட்டரியில் USD 500௦௦,000 பரிசு விழுந்துருக்காம். "ரிசர்வ் பாங்கி"லிருந்து இப்போ தான் மெயில் வந்துருக்கு. இது தெரியாம இவங்க முன்னாடி அனுப்புன மெயிலை எல்லாம் படிக்காமலே டெலிட் பண்ணிட்டேனே ! இதுவரை எவ்ளோ பணம் லாஸ் ஆச்சோ?
ஏய்...நானும் இனிமே கோடீஸ்வரன்.. கோடீஸ்வரன்..கோடீஸ்வரன் !
பார்த்த படம்: ஏஜன்ட் வினோத்
வட நாடு போனதிலிருந்து இப்பல்லாம் நிறைய ஹிந்தி படம் பாக்க ஆரம்பிச்சாச்சு :)) இந்த வாரம் பார்த்தது : ஏஜன்ட் வினோத் !
சைப் அலி கான் நடிச்ச படம் இதுவரை பார்த்ததில்லை. இதான் பஸ்ட்டு ! கரீனா கபூர் அழகு நமக்கு கொஞ்சம் பிடிக்கும் (ஹிஹி)
ஹீரோ சைப் ஒரு ஸ்பை (Spy) ஆக நடித்துள்ளார். ஆக்ஷன் படம் என்கிற பேரில் தலை சுத்தல் கதை. என்ன தான் சப் டைட்டிலுடன் பார்த்தாலும் கதை என்ன என எங்கள் யாருக்கும் முழுசா புரியலை.
நம்ம விஜய காந்த் மாதிரி ஒன் மேன் ஆர்மியா ஹீரோ, வில்லன்களை பந்தாடுறார். படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் சுத்த தமிழர் !
சண்டை; சேசிங் இப்படியே படம் முழுக்க போகுது. கிளைமாக்சில் பெரிய நியூக்கிளியர் குண்டு வெடிக்காம ஹீரோ காப்பாத்துறார். ஹீரோயின் செத்துடுறார். சரி படம் முடிஞ்சுதுன்னு நினைச்சா அதுக்கப்புறம் ரெண்டு நாடுகளுக்கு போறார் ஹீரோ. அது போகுது பத்து நிமிஷம் ...! முடியல !
டிவியில் போட்டா கூட எஸ் ஆகிடுங்க !
சிறு வயதில் இளையராஜா ரசிகர்களுக்கும் MSV ரசிகர்களுக்கும் எப்போதும் சண்டை தான். நான் இளையராஜா ரசிகன். நண்பன் நந்து MSV பிரியன். ஆறாவது படிக்கும்போது ராஜா- MSV இருவரில் யார் சூப்பர் என சட்டையை பிடித்து கொண்டு உருண்டுள்ளோம்
கல்லூரி லெவல் வந்த பிறகு தான் MSV வெறுப்பை விட்டு நகர்ந்து அவரது சில பாடல்கள் எவ்வளவு அற்புதம் என புரிந்தது. உதாரணமாய் இந்த பாட்டை கேட்டு பாருங்கள். MSV-யின் மேதைமை புரியும்
பாடல் இடம் பெற்ற படம்: பட்டின பிரவேசம். பாடியது: SPB இசை MSV
பாடல்: வான் நிலா நிலா அல்ல, இதோ உங்களுக்காக
மெட்டு, வயலின், அற்புதமான பாடல் வரிகள், SPB பாடலை பாடிய விதம் இப்படி பல ரசிக்கும் படி உள்ளது. படமாக்கிய விதம் (குறிப்பாய் ஹீரோயின்) better-ஆய் இருந்திருக்கலாம். :((
பதிவர் கார்னர்/ ரசித்த கவிதை
பதிவர் உழவன்குழந்தைகள் குறித்த சில அற்புத கவிதைகள் எழுதி உள்ளார். இவரது ப்ளாக் இதோ:
மன்னிக்கவும்
கண்ணாடி முன்னால் நிற்கும்போதே
கவனிக்கத் தொடங்கிவிடுகிறாள்
பேண்ட் சர்ட் அணியும்போது
உறுதிப்படுத்தி விடுகிறாள்
வண்டிச் சாவியை எடுத்தவுடன்
தவழ்ந்தோடி வந்து
காலைக் கட்டிக்கொண்டு
அண்ணாந்து பார்த்து
அழுது அடம்பிடிக்கிறாள்.
என்ன கூறி சமாதானம் செய்வது
என்பது தெரியாமல்
அவளோடு விளையாட ஆரம்பித்துவிட்டேன்
மன்னிக்கவும்
இன்றைய என் வருகை
தாமதமும் ஆகலாம்
இல்லாமலும் போகலாம்! - உழவன்
ஒரு கேள்வி
இது நிஜமாகவே ரொம்ப நாளாய் எனக்கு இருக்கும் சந்தேகம். யாராவது விளக்குங்கள் !
தமிழ் மணத்தில் ஏழு ஓட்டுக்கு மேல் வாங்கியிருந்தால் தான் "வாசகர் பரிந்துரை" தலைப்பின் கீழ் வருகிறது. அப்போது தான் நமக்கு யார் யார் ஓட்டு போட்டனர் என்பதும் பார்க்க முடிகிறது. ஏழுக்கு குறைவாய் ஓட்டு வாங்கும் பதிவுகளில் ( உதாரணமாய் ஐந்து ஓட்டு வாங்கும் போது) யார் யார் ஓட்டு போட்டனர் என தமிழ் மணத்தில் பார்க்க முடியுமா? முடியும் எனில் எப்படி ?
போஸ்டர் கார்னர்
Facebook-ல் நண்பர் பகிர்ந்திருந்த இந்த படம் நெகிழ்ச்சியாய் இருந்தது. ஒரு முஸ்லீம் தம்பதி தங்கள் குழந்தை பள்ளியில் நடக்கும் மாறுவேட போட்டியில் பங்கேற்று விட்டு செல்கிறார்கள்என்பது பார்க்கும் போதே தெரிகிறது.
It can happen only in India என்று தலைப்பிட்டிருந்தார்கள். மிக சரி தானே?
அஜூ நாட்டி கார்னர்
நாட்டியின் டாமினேஷன் பொதுவாகவே ரொம்ப அதிகமாக உள்ளது. "நான் தான் வீட்டுக்கு முதலில்வந்தேன்; நீ ஜூனியர்" என்கிற எண்ணமா.. அல்லது பெண்களுக்கே உரிய .. சரி வேண்டாம் விடுங்கள்.
இருவருக்கும் தனி தனி பாத்திரத்தில் சாப்பாடு வைப்போம். நாட்டி மட்டும் இருவர் பாத்திரத்திலும் சாப்பிடலாம். அஜூ தன்னுடைய பாத்திரத்தில் தான் சாப்பிடணும்; நாட்டி பாத்திரத்தில் அஜூ ஏதாவது சாப்பிட வந்தால் அவ்வளவு தான் பிரளயமே நடக்கும்.
அஜூ பையலும் சும்மா இருக்க மாட்டான். சமயத்தில் அவளை போய் தொந்தரவு செய்வான். வள்ளென்று அவனை குதற பார்ப்பாள் நாட்டி
சில நேரம் அவனது இறக்கையை பிய்த்து நாட்டி கடிப்பாள். அவன் பரிதாபமாய் பார்ப்பான்.அப்போது அவனை பார்க்க அய்யாசாமி போலவே பாவமாய் இருக்கும் :)
ஆக ...மனிதர்களோ, பறவைகளோ ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் கை தான் ஓங்கியிரு..............
இருங்க. .. ஹவுஸ் பாஸ் கூப்பிடுற சத்தம் கேட்குது..உங்களை நெக்ஸ்ட் மீட் பண்றேன் :)

என்னா பாட்டுப்பா இது !

>>எனக்கு தெரிந்து இது எந்த சாராரையும் மகிழ்ச்சி படுத்தாது.
ReplyDelete>>விஜய் டிவி இத்தகைய கான்செப்டை தவிர்த்திருக்கலாம்.
Very well said...
விஜய் டி.வி. சூப்பர் சிங்கர்: சென்னை லோக்கல், நெல்லை, சௌகார்பேட்டை பாஷை ஆகியவற்றை வைத்து தினந்தோறும் ஊடகங்களில் நிகழ்ச்சிகள் நடக்கத்தான் செய்கின்றன. நாகரீக எல்லை மீறாதவரை டேக் இட் ஈசியாக எடுத்து கொள்ளலாம்.
ReplyDelete//ஒரு கேள்வி//
ReplyDeleteஎனக்கு ஏழுக்கு மேல ஓட்டு போட்டாலும் யார் ஓட்டு போட்டாங்கங்கிரதை எப்பிடி பார்க்கனும்ன்னு தெரியலை., அதை எப்படி பார்க்கிறதுன்னு பின்னூட்டத்தில் சொல்லவும் நண்பரே.!
அஜூ & நாட்டிக்கு என் அன்பு.
ReplyDelete//பையலும் சும்மா இருக்க மாட்டான்//
ReplyDeleteகாரணத்தையும் நீங்களே சொல்லிட்டீங்க!!
//It can happen only in India //
“நீங்களெல்லாம் பாகிஸ்தானுக்கோ, சவூதி அரேபியாவுக்கோ ஓடுங்கள்” என்று சொல்வதும் - It can happen only in India!! :-((((
//முக நூல் கிறுக்கல்கள் //
இந்தத் தலைப்பின்கீழ் விஜய் டிவி பத்தி எழுதிருக்கீங்க?
வரலாற்று சுவடுகள்,
ReplyDeleteதமிழ் மணத்தில் பரிந்துரை என தனி செக்ஷன் இருக்கு. ஏழு ஓட்டுக்கு மேல் வந்தால் அந்த பிரிவில் குறிப்பிட்ட இடுகை லிஸ்ட் ஆகும்.
http://tamilmanam.net/readers/choice/1
அதில் நம் பதிவை சென்று அதற்கு எத்தனை ஓட்டு விழுந்துள்ளது என பார்க்கலாம். நம் பதிவுக்கு எட்டு ஓட்டு விழுந்துள்ளது எனில், அந்த எட்டு என்கிற எண்ணுக்கு அருகில் ஒரு கை சின்னம் தெரியும். அந்த கையை க்ளிக் செய்தால் நமக்கு யார் யாரெல்லாம் ஓட்டு போட்டார்கள் என தெரியும் !
மிக்க மகிழ்ச்சி.. நன்றி மோகன்குமார் :-)
ReplyDelete@மோகன் குமார்.,
ReplyDeleteநன்றியுடையவனானேன்.!
எங்க வீட்டு ரீனா,ரியோவை பற்றி படித்தது போலவே இருக்கு அஜூ.நாட்டி கதை.மனிதன்,பறவை கூடவே மிருகத்தையும் சேர்த்துக்கோங்க.ரீனா,ரியோ நாய்கள்.சேம் ப்ளட்..
ReplyDeleteஏழு ஒட்டுக்கு கீழே வாங்குனா கண்டிப்பா யாரு ஒட்டு போட்டாங்கன்னு பார்க்க முடியாது...நானும் பல ஆராச்சி பண்ணி பார்த்துட்டேன்..ஒன்னும் ஒர்க் அவுட் ஆகல..கண்டே பிடிக்க முடியவில்லை.....
ReplyDeleteஅதே மாதிரி திரைமணம் பகுதியில் இருந்தது நம்ப பதிவு 10 ஓட்டு வாங்குனாலும் "சூடான இடுக்கை" பிரிவுல வராது....
பாடலைக் கேட்டும்
ReplyDeleteகவிதையினைப் படித்தும் ரசித்தேன் அருமை
நான் எப்போதும் படித்து முடித்ததும் ஓட்டைப் போட்டுவிடுவேன்
அதிலும் ஏழாவது ஓட்டாக பல சம்யங்களில் என் ஓட்டு இருக்கும்
அது போன்ற சமயங்களில் அதிகச் சந்தோஷம் கொள்வேன்
மற்றபடி ஓட்டு ஆராய்ச்சி செய்வதில்லை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 5
ReplyDelete-விஜய் டிவி.... நீங்கள் சொவது சரி என்று படுகிறது. நான் அந்த நிகழ்ச்சி பார்ப்பதில்லை!
ReplyDelete-நண்பர்கள் அனுபுல நீங்க எப்பவுமே கோடீஸ்வரன்தானே.....! :))))
-சைஃப் அலி கான்நடிச்ச எல்லா படமுமே போர்!!! அவர் ஆடிய பாடல்களில் ஒரு பாடல் எனக்குப் பிடிக்கும். 'ஜப் பி கோ லடுக்கி தேகோ மேரா தில் தீவானா போலே....வோலே...வோலே..'
-எம் எஸ் வி யைப் பிடிக்காது என்று எப்படிச் சொல்லலாம் நீங்கள்.... மெல்லிசை மன்னர் பாடல்கள் மறக்க முடியாதவை.
-உழவன் கவிதை அபாரம்.
-முகப் புத்தகம் படம் முன்னரே பார்த்திருக்கிறேன்.
-தமிழ்மணம் எங்களுக்கு அருள்பாலிப்பதேயில்லை! எங்களுக்கு யாரும் ஓட்டுப் போட முடியாது. என்றாலும் எங்கும் நான் ஓட்டுப் போடத் தவறுவது இல்லை!
விஜய் டிவி இத்தகைய கான்செப்டை தவிர்த்திருக்கலாம்
ReplyDelete//
லூஸ்ல விடுங்க அம்பி..அவாள் மட்டும் தான் ஒழுங்கா டி வி நடத்துராள்...
வட நாடு போனதிலிருந்து //
அதான் நீங்க ஜரிதா பீடா சாப்பிட்டு ரோட்டுல துப்பும்போதே நினைச்சேன்...
ஏழுக்கு குறைவாய் ஓட்டு வாங்கும் பதிவுகளில் //
டெபொசிட் போயிட்டுன்னு நினைச்சுக்க வேண்டியது தான்...அவ்வ்வ்வ்வ்..
பெண்கள் கை தான் ஓங்கியிரு//
அதாங்க நாட்டுக்கும் நல்லது...வீட்டுக்கும் நல்லது...
Good Night...
ஸ்ரீராம்:
ReplyDelete//நண்பர்கள் அனுபுல நீங்க எப்பவுமே கோடீஸ்வரன்தானே.....! :))))
**
என்ன சொல்ல வந்தீன்னு சரியா புரியலை. சம்திங் மிஸ்ஸிங்
**
தமிழ் மணம் ஓட்டு பட்டை இணைப்பது மிக எளிய விஷயம். ப்ளாக்ஸ்பாட் மாறிய பின் தானே உங்களுக்கு பிரச்சனை? எனக்கும் இதே பிரச்சனை இருந்தது. நண்பர் வெங்கட் நாகராஜ் தான் உதவினார்.
உங்கள் ப்ளாகின் பாஸ் வார்டு சொன்னால் உடனே ஓட்டு பட்டை வைத்து வந்து விடுவார் நம் நண்பர் வெங்கட் நாகராஜ். (வேணும்னா அப்புறம் பாஸ் வார்டு மாத்திக்குங்க)
//நண்பர்கள் அனுபுல //
ReplyDeleteநண்பர்களின் அன்பில்!! (கரெக்டா ஸ்ரீராம் சார்?) :-)))
பிளாக்கர் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு
மேற்சொன்னப் பதிவில் எளிமையாக தீர்வு சொல்லப்பட்டிருக்கிறது, முயற்சித்துப் பாருங்கள்.
ஹுஸைனம்மா said...
ReplyDelete//நண்பர்கள் அனுபுல //
நண்பர்களின் அன்பில்!! (கரெக்டா ஸ்ரீராம் சார்?) :-)))
அடடா ! நன்றி ஸ்ரீராம் ! நன்றி ஹுசைனம்மா !
**
அப்புறம் ஹுசைனம்மா.. நீங்க லிங்க் தந்த பதிவை படிச்சும் ஐயாசாமியால் தமிழ் மனத்தில் இணைக்க முடியலை; டெக்னிகல் விஷயத்தில் அவரு படு வீக்கு; அப்புறம் வெங்கட் ஹெல்ப் பண்ணார்
ஸ்ரீராம்: ஹுசைனம்மா தரும் பதிவு படி முயற்சி பண்ணுங்க. அதில் முடியாவிடில் வெங்கட்டிடம் கேட்கலாம்
//ஆக ...மனிதர்களோ, பறவைகளோ ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் கை தான் ஓங்கியிரு..............
ReplyDelete//
நான் ஒண்ணும் சொல்றதுக்கில்லைங்கோ! :)))
அட நம்ம பேரு அடிபடுதே கமெண்டில்னு பார்த்தேன். ஆன்லைனில் வாங்க ஸ்ரீராம், தமிழ்மணத்தில் இணைச்சுடுவோம்!
\\எனக்கு லாட்டரியில் USD 500௦௦,000 பரிசு விழுந்துருக்காம். "ரிசர்வ் பாங்கி"லிருந்து இப்போ தான் மெயில் வந்துருக்கு. இது தெரியாம இவங்க முன்னாடி அனுப்புன மெயிலை எல்லாம் படிக்காமலே டெலிட் பண்ணிட்டேனே ! இதுவரை எவ்ளோ பணம் லாஸ் ஆச்சோ? \\ இதே மாதிரி SMS கூட வருது, அதை அனுப்பிய என்னும் உள்ளது, சைபர் கிரைமுக்கு எப்படி அதைத் தெரியப் படுத்துவது?
ReplyDelete\\சிறு வயதில் இளையராஜா ரசிகர்களுக்கும் MSV ரசிகர்களுக்கும் எப்போதும் சண்டை தான்.\\ MSV செய்ததெல்லாம் ஹிந்தி படங்களின் டியூன்களை தமிழில் போட்டது மட்டும் தான், தமிழ் திரைப் படத்துக்கென்று தனித்துவம் வந்தது இளையராஜாவின் வருகைக்கப்புறம் தான் என்று சிலர் சொல்கிறார்கள், நிஜமா? மேலும், ரஹ்மான் வருகைக்கு முன்னர் இளையராஜா கோலோச்சிய காலகட்டங்களில் MSV பற்றி எதுவும் பேசியிராத ராசா தற்போது, தன்னுடைய இசை எல்லாம் MSV போட்ட பிச்சை, அவர் தின்று விட்டு துப்பிய எச்சில் என்ற ரேஞ்சுக்கு பேசிக் கொண்டே போகிறார், ஏனிந்த மாற்றம்??!! உண்மை என்ன?!
ReplyDeleteநன்றி பாலஹனுமான். எனக்கு பிராமண நண்பர்கள் ப்ளாக் உலகிலும் வெளியிலும் அதிகம். இதனை எழுதும் போது அவர்களை எந்த விதத்திலேனும் காய படுதுவேனோ என சற்று பயப்படவே செய்தேன். நல்ல வேளை அப்படி ஏதும் நடக்கலை !
ReplyDeleteசிவகுமார்: தங்கள் கருத்துக்கு நன்றி
ReplyDeleteதுளசி மேடம்: மிக மகிழ்ச்சி சென்னை வரும் போது நாட்டி & அஜூவை நேரில் வந்து பார்க்க அன்புடன் அழைக்கிறேன்
ReplyDeleteஹுசைனம்மா:
ReplyDelete////முக நூல் கிறுக்கல்கள் //
இந்தத் தலைப்பின்கீழ் விஜய் டிவி பத்தி எழுதிருக்கீங்க?
ஆம் இவற்றை ஏற்கனவே முக நூலில் (Facebook ) எழுதி விட்டேன். பின் இங்கு பகிர்ந்துள்ளேன்
அமுதா கிருஷ்ணா: தங்கள் அனுபவம் சொன்னமைக்கு மிக நன்றி. பெட்களில் எல்லாமே இப்படி தானோ? நன்றி
ReplyDeleteராஜ்: மிக நன்றி
ReplyDelete//திரைமணம் பகுதியில் இருந்தது நம்ப பதிவு 10 ஓட்டு வாங்குனாலும் "சூடான இடுக்கை" பிரிவுல வராது....//
உண்மை. ஆனால் மற்ற அணைத்து பதிவுகளை விட மிக அதிக ஓட்டு வாங்கினால் மட்டும் " அதிக ஓட்டு வாங்கிய பதிவு" என தனித்து காட்டுகிறார்கள். நமக்கு ஒரு முறை அப்படி நடந்தது. எனவே தெரிந்தது
ரமணி சார்: பலரையும் ஊக்குவிக்கும் தாங்கள் வாழ்க !
ReplyDeleteரெவரி
ReplyDeleteஏழுக்கு குறைவாய் ஓட்டு வாங்கும் பதிவுகளில் //
டெபொசிட் போயிட்டுன்னு நினைச்சுக்க வேண்டியது தான்...அவ்வ்வ்வ்வ்..
ஹா ஹா ரசித்தேன்
பெண்கள் கை தான் ஓங்கியிரு//
அதாங்க நாட்டுக்கும் நல்லது...வீட்டுக்கும் நல்லது...
நீங்களும் நம்மை மாதிரி தானா? ரைட்டு
வெங்கட்: நன்றி. உங்க வீட்டில் சிதம்பரம் ஆட்சி என்றல்லவா நினைத்தேன் ? (பார்த்ததை வைத்து கணித்தது)
ReplyDeleteதாஸ்:
ReplyDelete//இதே மாதிரி SMS கூட வருது, அதை அனுப்பிய என்னும் உள்ளது, சைபர் கிரைமுக்கு எப்படி அதைத் தெரியப் படுத்துவது?//
பெரும்பாலும் வெளி நாட்டில் இருந்து வருகிறது என நினைக்கிறேன்; அப்போது சைபர் கிரைம் நடவடிக்கை எடுப்பது கடினமே
ராஜா - MSV பற்றி நீங்கள் சொன்னது யோசிக்க வைக்குது. ராஜா பற்றி எதுக்கு தப்பா பேசிகிட்டு (அவர் உத்தமர் இல்லை; ஆனாலும் நமக்கு பிடித்தமானவர்.)
This comment has been removed by the author.
ReplyDelete//ஏஜன்ட் வினோத் //
ReplyDeleteஓவர் ஹைப் படத்துக்கு ஆவாதுங்கறதுக்கு இதுவும் ஒரு உதாரணம்
//அல்லது பெண்களுக்கே உரிய .. சரி வேண்டாம் விடுங்கள். //
//ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் கை தான் ஓங்கியிரு..............//
மிசஸ்.அய்யாசாமி இப்பல்லாம் தொடர்ந்து பதிவுகளை வாசிக்கறாங்கன்னு தெளிவா புரியுது ;))
'அன்பில்' என்ற வார்த்தையைத்தான் கொலை செய்திருந்தேன். ஸாரி. அது கூட 'அனபுல' என்று பேச்சு வழக்கில் டைப் அடிக்க நினைத்ததன் விளைவு! என்ன அடிக்கிறோம் என்று திருப்பிப் படிப்பதே இல்லை. அவசரம்! தமிழ்மண உதவிகளுக்கு நன்றி ஹுஸைனம்மா. நன்றி மோகன் குமார். நன்றி வெங்கட். ஒவ்வொன்றாக முயற்சித்துப் பார்க்க வேண்டும்.
ReplyDeleteவிஜய் நிகழ்ச்சி பார்ப்பதில்லை.
ReplyDelete‘மன்னிக்கவும்’ பிடித்த கவிதை.
குழந்தைக் கண்ணன் அழகு.
அய்யாச்சாமிக்கும் இத்தனை சுய இரக்கம் ஆகாது:)!
ரகு said...
ReplyDeleteமிசஸ்.அய்யாசாமி இப்பல்லாம் தொடர்ந்து பதிவுகளை வாசிக்கறாங்கன்னு தெளிவா புரியுது ;))
ஹிஹி. ஆமாங்கோ !
ராமலட்சுமி : சிற்சில வார்த்தைகளில் பல பகுதிகளை அலசியமைக்கு மிக நன்றி
ReplyDeleteவிஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி பிராமண சமூகத்தினரை மிகவும் கிண்டல் செய்வதாகத் தான் இருக்கிறது. விஜய் டிவி இத்தகைய கான்செப்டை தவிர்த்திருக்கலாம்
ReplyDelete