தில்லி-சிம்லா-குளு-மணாலி பயண கட்டுரை இந்த பதிவில் துவங்குகிறது. பல நண்பர்கள் எந்த ரயிலில் போகணும், எங்கு தங்கணும் என்ற விபரங்கள் கேட்டதால், இந்த டூருக்கு பிளான் செய்வது எப்படி என்பதில் துவங்குவோம்.
**********
கோடை விடுமுறைக்கு எங்கு போகலாம் என யோசித்த போது உடன் பணியாற்றும் சீனு என்கிற நண்பர்" சிம்லா, மணாலி போயிட்டு வாங்க; சம்மரில் போக வேண்டிய இடம் அது தான்" என்றார். சில ஆண்டுகள் முன் அவர் குடும்பத்தோடு இதே இடம் சென்று வந்திருந்தார். பின் அவர் மூலம் சென்னையிலிருக்கும் ஹிமாச்சல் டூரிசம் முகவரி வாங்கி மவுன்ட் ரோடு - கலை வாணர் அரங்கம் அருகே இருக்கும் அவர்கள் அலுவலகம் சென்று அனைத்து தகவல் சேகரித்து வந்தேன். ( ஹிமாச்சல் டூரிசம் சென்னை தொலை பேசி எண்: 2538 5689)
குளு - மணாலிக்கு இரண்டு ரூட்டில் செல்லலாம். சண்டிகார் சென்று அங்கிருந்து மணாலி செல்வது தான் குறுக்கு வழி. இன்னொரு வழி- சிம்லா வழியே செல்வது - இது சுற்று என்றாலும் சிம்லாவை பார்க்க இன்னொரு முறை வர முடியாது அல்லவா? அதனால் சிம்லா வழியே சென்றோம் !
டில்லி சென்று அங்கிருந்து கல்கா என்கிற ஊருக்கு செல்லவேண்டும். பின் கல்காவிலிருந்து சிம்லாவுக்கு டாய் டிரையினில் (ஊட்டி செல்லும் ரயில் நியாபகம் இருக்கா?) செல்லவேண்டும். இதில் கல்காவிலிருந்து சிம்லா செல்லும் டாய் டிரையின் டிக்கெட் கிடைப்பது தான் மிக கடினம். மற்ற ரயில்கள் நான்கு மாதம் முன் - ரிசர்வேஷன் ஆரம்பிக்கும். நல்ல வேளையாக இந்த ரயிலுக்கு ஒரு மாதம் முன் தான் முன் பதிவு துவங்குகிறது. முதலில் இந்த டாய் டிரையின் டிக்கெட் புக் செய்து விட்டு அதன் அடிப்படையில் தான் மற்ற டிக்கெட்டுகள் போட வேண்டும் என புரிந்தது. தொடர்ந்து சில நாள் முயற்சி செய்தேன். சரியாக 30 நாளுக்கு முன் டிக்கெட் விற்பனை ஆரம்பிக்கும். ஓரிரு மணி நேரத்தில் full ஆகிடும். எப்படியோ ஒரு நாள் டிக்கெட் கிடைத்து விட்டது.
கல்கா டு சிம்லா: பல ரயில்கள் உள்ளன. நம் நேரத்துக்கு ஏற்ற வசதியான ரயில் எண்: 52455 - Train name: Himalayan Queen.
இதன் பின் மள மள வென்று மற்ற டிக்கெட்டுகள் போட துவங்கினோம்.
முதலில் சிம்லா மற்றும் மணாலி மட்டும் தான் செல்லும் ஐடியா. தில்லியில் வெயில் அதிகம் என்பதால் அங்கு தங்க வேண்டாம் என நினைத்தோம். தில்லியிலிருக்கும் நண்பன் தேவாவிடம் சொன்னதும் " அண்ணே இவ்ளோ தூரம் வர்றீங்க; டில்லியில் சில இடம் பாத்துடலாம்" என்றான். அவன் சொன்னதும் சரியாக தோன்றவே, தில்லியில் மூன்று நாள் - சிம்லாவில் இரண்டு நாள்- மணாலியில் நான்கு நாள்- என திட்டம் தயாரானது.
ஒரு மாதம் முன்பே டிக்கெட் புக் செய்ததால் விமானத்தில் ஓரளவு குறைவான விலையில் டிக்கெட் கிடைத்தது. (ஒரு நபருக்கு 3500 ). இதே ஓரிரு நாள் முன் போட்டால் ஒரு டிக்கெட் விலை எட்டாயிரத்துக்கு மேல் தாண்டி விடும் !
இண்டிகோ விமானத்தில் டிக்கெட் போட சொல்லி தேவா சொன்னது மிக நல்ல யோசனையாக இருந்தது. மிக நல்ல சேவை. சரியான நேரத்துக்கு கிளம்பி சரியான நேரம் சேர்ந்து விடுகிறார்கள். ( " We are happy to announce that we arrived 20 minutes ahead of time" - Standard announcement in Indigo !)
தில்லி டு கல்கா ரயில் டிக்கெட், திரும்ப வர சண்டிகார் டு டில்லி ரயில் டிக்கெட் எடுப்பதில் எந்த சிரமும் இல்லை. மிக எளிதாக கிடைக்கின்றன.
அடுத்து சிம்லா மற்றும் மணாலியில் சுற்றி பார்க்கவும் தங்கவும் ஏற்பாடுகள். இவற்றை சென்னையிலிருக்கும் ஹிமாச்சல் டூரிசமே செய்து தருகிறார்கள். தங்க வேண்டிய ஹோட்டல் வாடகை எந்த ரேஞ்சில் வேண்டும் என்று சொன்னால் அதற்கு தகுந்த ஹோட்டல் புக் செய்து விடுகிறார்கள். நாம் முன்பணம் தந்து விட்டு மீதம் அங்கு சென்று தந்து கொள்ளலாம்.
சிம்லாவில் சுக் சாகரிலும், மணாலியில் ரோடங் ஹிமான்சுலுவிலும் ( Tel:(01902) - 2523 32, 253723 E-mail: manali@hptdc.in) தங்கினோம்.
சுற்றி பார்க்க வாகனமும் (பஸ்) ஹிமாச்சல் டூரிசமே ஏற்பாடு செய்கிறார்கள். அதில் சென்று அந்த ஊரை சுற்றி பார்க்கவும் பணம் இங்கேயே கட்டி புக் செய்து விடலாம். அதுவும் செய்தாயிற்று !
மணாலியில் சாப்பாடு சரியிருக்காது என சில பொடி வகைகள், புளி காய்ச்சல் மாதிரி சமாசாரங்களை வீட்டம்மா ஒரு வாரம் தயார் செய்தார் (அவற்றை அநேகமாய் பயன் படுத்தலை)
முதல் முறை பத்து நாள் டூர் என்பதால், பத்து செட் துணிகள் எடுத்து போக வேண்டியிருந்தது ! இதற்காக மனைவி-மகள் செய்த ஷாப்பிங்கில் பர்ஸ் கொஞ்சம் டேமேஜ் ஆனது.
சுவெட்டர் போன்றவற்றை தேடி எடுத்து தோய்த்து காய வைக்கும் வேலை, நல்ல பெட்டிகள் தயார் செய்யும் வேலை என சில வாரங்களாகவே சிறிது சிறிதாக வேலை நடந்தது.
இந்த டூருக்கு ஒரு ஆளுக்கான செலவு மட்டும் இருபதாயிரம் ஆகும்;
பத்து நாள் டூர் என்பதால் காமிராவுக்கு ஒரு எக்ஸ்ட்ரா பாட்டரியும் இன்னொரு மெமரி கார்டும் வாங்கணும் என வீட்டம்மா கட்டளையிட, ரொம்ப யோசித்து அதை நிறைவேற்றி விட்டேன். (இரண்டு பாட்டரி இருந்து நன்கு யூஸ் ஆச்சு. போலவே பழைய மெமரி கார்ட் மட்டும் இருந்தால் இவ்வளவு பிரியா படம் எடுத்திருக்க முடியாது !)
கிளம்புகிற அன்று ஆபிசில் போர்ட் மீட்டிங். வழக்கமாய் போர்ட் மீட்டிங் காலை துவங்கி மதியம் முடிஞ்சிடும். அன்று மதியம் துவங்கி மாலை முடிந்தது. ஏழரைக்கு பிளைட். ஆபிசில் கிளம்பும் போது மணி ஆறே கால். எங்களை அழைத்து செல்ல வேண்டிய கார் ஏற்கனவே வந்து காத்திருக்க, அப்புறம் தான் வீடு வந்தேன். ஐந்து நிமிஷத்தில் அவசரமாய் கிளம்பியாச்சு!
கிளம்புகிற நாள் நெருங்கும் போது அய்யாசாமிக்கும் அவர் மனைவிக்கும் ஒரு சின்ன விஷயத்தில் செம சண்டை. விமானம் ஏறி டில்லி இறங்கும் வரை அய்யாசாமி உர்ர் என்று இருந்தார். தில்லியில் தன் நண்பன் தேவாவை பார்த்து பேசியதும் நார்மல் ஆனார். அப்புறம் தான் மனைவியிடமும் பேசினார்.
இப்படியாக எங்கள் பயணம் இனிதே துவங்கியது. இனி ஒவ்வொரு இடமாக பார்க்க துவங்குவோம் !
*******
சமீபத்திய பதிவுகள்:
ஆனந்த விகடனும் வீடுதிரும்பலும்
சென்னை பஸ் கண்டக்டர் வாழ்வில் 1 நாள் -பேட்டி
ஹோட்டல் அறிமுகம்: தஞ்சை சாந்தி பரோட்டா கடை
சென்னையை சுற்றி பார்க்க சில டிப்ஸ்
**********
பனி சூழ்ந்த மலை பாதையில் |
குளு - மணாலிக்கு இரண்டு ரூட்டில் செல்லலாம். சண்டிகார் சென்று அங்கிருந்து மணாலி செல்வது தான் குறுக்கு வழி. இன்னொரு வழி- சிம்லா வழியே செல்வது - இது சுற்று என்றாலும் சிம்லாவை பார்க்க இன்னொரு முறை வர முடியாது அல்லவா? அதனால் சிம்லா வழியே சென்றோம் !
டில்லி சென்று அங்கிருந்து கல்கா என்கிற ஊருக்கு செல்லவேண்டும். பின் கல்காவிலிருந்து சிம்லாவுக்கு டாய் டிரையினில் (ஊட்டி செல்லும் ரயில் நியாபகம் இருக்கா?) செல்லவேண்டும். இதில் கல்காவிலிருந்து சிம்லா செல்லும் டாய் டிரையின் டிக்கெட் கிடைப்பது தான் மிக கடினம். மற்ற ரயில்கள் நான்கு மாதம் முன் - ரிசர்வேஷன் ஆரம்பிக்கும். நல்ல வேளையாக இந்த ரயிலுக்கு ஒரு மாதம் முன் தான் முன் பதிவு துவங்குகிறது. முதலில் இந்த டாய் டிரையின் டிக்கெட் புக் செய்து விட்டு அதன் அடிப்படையில் தான் மற்ற டிக்கெட்டுகள் போட வேண்டும் என புரிந்தது. தொடர்ந்து சில நாள் முயற்சி செய்தேன். சரியாக 30 நாளுக்கு முன் டிக்கெட் விற்பனை ஆரம்பிக்கும். ஓரிரு மணி நேரத்தில் full ஆகிடும். எப்படியோ ஒரு நாள் டிக்கெட் கிடைத்து விட்டது.
கல்கா டு சிம்லா: பல ரயில்கள் உள்ளன. நம் நேரத்துக்கு ஏற்ற வசதியான ரயில் எண்: 52455 - Train name: Himalayan Queen.
இதன் பின் மள மள வென்று மற்ற டிக்கெட்டுகள் போட துவங்கினோம்.
நண்பன் தேவாவுடன்
|
ஒரு மாதம் முன்பே டிக்கெட் புக் செய்ததால் விமானத்தில் ஓரளவு குறைவான விலையில் டிக்கெட் கிடைத்தது. (ஒரு நபருக்கு 3500 ). இதே ஓரிரு நாள் முன் போட்டால் ஒரு டிக்கெட் விலை எட்டாயிரத்துக்கு மேல் தாண்டி விடும் !
இண்டிகோ விமானத்தில் டிக்கெட் போட சொல்லி தேவா சொன்னது மிக நல்ல யோசனையாக இருந்தது. மிக நல்ல சேவை. சரியான நேரத்துக்கு கிளம்பி சரியான நேரம் சேர்ந்து விடுகிறார்கள். ( " We are happy to announce that we arrived 20 minutes ahead of time" - Standard announcement in Indigo !)
தில்லி டு கல்கா ரயில் டிக்கெட், திரும்ப வர சண்டிகார் டு டில்லி ரயில் டிக்கெட் எடுப்பதில் எந்த சிரமும் இல்லை. மிக எளிதாக கிடைக்கின்றன.
அடுத்து சிம்லா மற்றும் மணாலியில் சுற்றி பார்க்கவும் தங்கவும் ஏற்பாடுகள். இவற்றை சென்னையிலிருக்கும் ஹிமாச்சல் டூரிசமே செய்து தருகிறார்கள். தங்க வேண்டிய ஹோட்டல் வாடகை எந்த ரேஞ்சில் வேண்டும் என்று சொன்னால் அதற்கு தகுந்த ஹோட்டல் புக் செய்து விடுகிறார்கள். நாம் முன்பணம் தந்து விட்டு மீதம் அங்கு சென்று தந்து கொள்ளலாம்.
Hotel Rohtang Manlsu, Manali |
சுற்றி பார்க்க வாகனமும் (பஸ்) ஹிமாச்சல் டூரிசமே ஏற்பாடு செய்கிறார்கள். அதில் சென்று அந்த ஊரை சுற்றி பார்க்கவும் பணம் இங்கேயே கட்டி புக் செய்து விடலாம். அதுவும் செய்தாயிற்று !
மணாலியில் சாப்பாடு சரியிருக்காது என சில பொடி வகைகள், புளி காய்ச்சல் மாதிரி சமாசாரங்களை வீட்டம்மா ஒரு வாரம் தயார் செய்தார் (அவற்றை அநேகமாய் பயன் படுத்தலை)
முதல் முறை பத்து நாள் டூர் என்பதால், பத்து செட் துணிகள் எடுத்து போக வேண்டியிருந்தது ! இதற்காக மனைவி-மகள் செய்த ஷாப்பிங்கில் பர்ஸ் கொஞ்சம் டேமேஜ் ஆனது.
சுவெட்டர் போன்றவற்றை தேடி எடுத்து தோய்த்து காய வைக்கும் வேலை, நல்ல பெட்டிகள் தயார் செய்யும் வேலை என சில வாரங்களாகவே சிறிது சிறிதாக வேலை நடந்தது.
இந்த டூருக்கு ஒரு ஆளுக்கான செலவு மட்டும் இருபதாயிரம் ஆகும்;
தில்லி வரை ரயிலில் சென்றால் ஒரு ஆளுக்கு 15,000 போதும் !
கிளம்புகிற அன்று ஆபிசில் போர்ட் மீட்டிங். வழக்கமாய் போர்ட் மீட்டிங் காலை துவங்கி மதியம் முடிஞ்சிடும். அன்று மதியம் துவங்கி மாலை முடிந்தது. ஏழரைக்கு பிளைட். ஆபிசில் கிளம்பும் போது மணி ஆறே கால். எங்களை அழைத்து செல்ல வேண்டிய கார் ஏற்கனவே வந்து காத்திருக்க, அப்புறம் தான் வீடு வந்தேன். ஐந்து நிமிஷத்தில் அவசரமாய் கிளம்பியாச்சு!
கிளம்புகிற நாள் நெருங்கும் போது அய்யாசாமிக்கும் அவர் மனைவிக்கும் ஒரு சின்ன விஷயத்தில் செம சண்டை. விமானம் ஏறி டில்லி இறங்கும் வரை அய்யாசாமி உர்ர் என்று இருந்தார். தில்லியில் தன் நண்பன் தேவாவை பார்த்து பேசியதும் நார்மல் ஆனார். அப்புறம் தான் மனைவியிடமும் பேசினார்.
இப்படியாக எங்கள் பயணம் இனிதே துவங்கியது. இனி ஒவ்வொரு இடமாக பார்க்க துவங்குவோம் !
*******
சமீபத்திய பதிவுகள்:
ஆனந்த விகடனும் வீடுதிரும்பலும்
சென்னை பஸ் கண்டக்டர் வாழ்வில் 1 நாள் -பேட்டி
ஹோட்டல் அறிமுகம்: தஞ்சை சாந்தி பரோட்டா கடை
சென்னையை சுற்றி பார்க்க சில டிப்ஸ்
நல்ல திட்டமிடல். விரிவான பகிர்வு.
ReplyDelete/இறங்கும் வரை அய்யாசாமி உர்ர் /
ஈகோ ரொம்ப இருக்கும் போலயே:)!
ம்ம் பார்க்கணும்னு ஆசைய தூண்டிட்டீங்க
ReplyDeleteஉபயோகமான பகிர்வு.
ReplyDeleteThanks your post!!! Helpful information, Thanks a lot !!!!
ReplyDeleteமுதல் படத்தில் ஆர்ம்ஸ்ட்ராங் போல இருக்கிறீர்கள்! திட்டமிட்ட பயணம்
ReplyDelete/இறங்கும் வரை அய்யாசாமி உர்ர் /
ReplyDeleteஅய்யாசாமி கோவக்காரரோரோ....
Toy train -இல் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் அல்லது நாம் விரும்பும் தேதிக்குக் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது? பேருந்து வசதிகள் உண்டா? டாக்சிகள் உண்டா?
ReplyDeleteஅண்ணன் ரொம்ப கோவக்காரருங்கோ....!
ReplyDeleteநிறைய நேரம் எடுத்து நிதானமாக படிப்படியாக எழுதுவதற்கு நன்றி மோகன்...
ReplyDeleteஇத்தொடர் சுவாரஸ்யமாகவும்...உபயோகமாயும் இருக்கும் என்று நம்புகிறேன்...
This comment has been removed by the author.
ReplyDeleteசிம்லா - குலு - மணாலி மூன்றுமே பார்க்க வேண்டிய இடங்கள் தான்.. தில்லி வந்த சில வருடங்களிலேயே சென்று இருக்கிறேன்....
ReplyDeleteமீண்டும் ஒரு முறை குடும்பத்துடன் செல்ல வேண்டும்...
ஆனால் நான் தில்லியில் இல்லாதபோது இங்கே வந்ததால் உங்களோடு கட்டி! [டூ....]
is there railway station in chandigarh?
ReplyDeleteராமலக்ஷ்மி said...
ReplyDelete/இறங்கும் வரை அய்யாசாமி உர்ர் /
ஈகோ ரொம்ப இருக்கும் போலயே:)!
அவுங்க கோபத்தை வார்த்தையில் காட்டினா, எங்க கோபத்தை அமைதியா இருந்து கூட காமிக்க கூடாதா என்று புலம்புகிறார் அய்யாசாமி :))
பிரேம்: நன்றி குறிப்பா மணாலி தவற விட கூடாத ஊர். அவசியம் பாருங்க
ReplyDeleteஸாதிகா: நன்றிங்கோ
ReplyDeleteசரவணகுமார்: மிக மகிழ்ச்சி, முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteஸ்ரீராம். said...
ReplyDeleteமுதல் படத்தில் ஆர்ம்ஸ்ட்ராங் போல இருக்கிறீர்கள்!
**
ஏஏஏன் ஸ்ரீராம்? ஏன் கோபம் ? எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம் :))
சங்கவி said...
ReplyDelete/இறங்கும் வரை அய்யாசாமி உர்ர் /
அய்யாசாமி கோவக்காரரோரோ....
***
ஆமாம். ஆனா கோபம் வந்தா அமைதி ஆகிடுவார் :)
கோபி: சிம்லாவுக்கு ரயில், விமானம், பஸ், கார் அணைத்து விதத்திலும் செல்லும் வசதி உண்டு. அது தானே ஹிமாச்சல பிரதேஷின் காபிடல்? டில்லியில் இருந்து பல வித பஸ்களும் உண்டு. ஹிமாச்சல் டூரிசத்தின் நல்ல பஸ்களும் கிடைக்கும். டாய் டிரையின் சரியாக திட்டமிட்டு முதல் நாள் காலை முயற்சித்தால் கிடைச்சுடும். நான் குறிப்பிட்டது ஒரு ரயில் என்றாலும், கல்காவிளிருந்து சிம்லாவுக்கு ஒரு நாளைக்கு ஏழெட்டு டாய் டிரையின் செல்கிறது
ReplyDeleteராமசாமி அண்ணே: நீங்க அப்புடி நம்புறீங்களா? அது ஒரு புள்ளை புச்சி பாஸ்
ReplyDeleteநன்றி மகிழ்ச்சி ரெவரி
ReplyDeleteவெங்கட்: முன்பே திட்டமிட்டதால் இப்படி ஆச்சு. நீங்களும் இந்த இடங்கள் சென்றுள்ளீர்களா என கேட்க நினைதேன் நீங்களே சொல்லிடீங்க
ReplyDeleteVJR: சண்டிகாரில் ரயில் நிலையம் உள்ளது.
ReplyDeleteஉபயோகமான பதிவு ! நன்றி நண்பரே !
ReplyDeleteஎனக்கு ரொம்ப பயனுள்ள பதிவு, நன்றி.
ReplyDeleteCan you inform us what were the services provided by 'Himachal Tourism'? Or, did you only collect the details and arranged your programme on your own? - R. J.
ReplyDeleteஹிமாச்சல் டூரிசம் மூலம் தான் ரூம் புக் செய்தோம். லோக்கல் டிராவலும் அவர்களே arrange செய்கிறார்கள். சிம்லா அல்லது மணாலி எங்கு செல்ல வேண்டுமெனினும், டில்லி வரை நீங்கள் புக் செய்து கொண்டால் அங்கிருந்து உங்களை கூட்டி சென்று, தங்க வைத்து இடங்களை சுற்றி பார்ப்பதை அவர்கள்
ReplyDeleteசெய்வார்கள்.
லோக்கல் டூர் அவர்கள் மூலமும் செல்லலாம். அல்லது தனியாகவும் நாம் ஒரு கார் வைத்து கொண்டு சுற்றி பார்க்கலாம். நம்முடன் வேறு ஒரு குடும்பமும் இருந்தால் கார் வைத்து கொண்டு சுற்றி பார்ப்பது நல்லது. நிறைய இடங்கள் பார்க்க முடியும்