Thursday, June 21, 2012

காந்திஜி சுடப்பட்ட இடம் இன்று- நேரடி அனுபவம்

மகாத்மா சுடப்பட்ட இடம்
டில்லியில் மகாத்மா காந்தி நினைவாக இரண்டு குறிப்பிடத்தக்க இடங்கள் உண்டு. ஒன்று அவர் சுட்டு கொல்லப்பட்ட இடம். இன்னொன்று அவர் உடல் அடக்கம் செய்யப்பட்ட அவரது சமாதி. நாங்கள் சென்ற மே மாதம் சமாதி இருக்கும் இடம் மிக அதிக சூடாக இருக்கும் என அங்கு செல்ல வில்லை.

பகல் 12 மணி அளவில் நாங்கள் மகாத்மா சுட்டு கொல்லப்பட்ட இடத்த்துக்கு சென்ற போது அங்கு பார்வையாளர்கள் மிக கொஞ்சமே இருந்தனர்.

துவக்கத்தில் மகாத்மா நினைவாக ராட்டைகள் இருந்தன. அவற்றில் இன்னமும் ஆடைகள் நெய்யத்தான் செய்கிறார்கள்

ராட்டைகள்
தையல் வகுப்பு அங்கு நடக்கிறது. ஏராளமான பெண்கள் தையல் பயிலுகின்றனர்.
தையல் வகுப்பு


மகாத்மா சுட்டு கொல்லப்படும் முன் பிரார்த்தனை நடத்தினார் அல்லவா? அந்த இடம் இப்போது ஒரு exhibition நடத்தும் இடமாக மாற்றி விட்டனர். நாங்கள் சென்றபோது சுதந்திரத்துக்கு போராடிய பெண்கள் படங்கள் அங்கு இருந்தது. எப்போதும் இதுவே தொடருமா என தெரியலை.மகாத்மா இறுதியாய் நடந்து போன இடத்தில் காலடி தடம் போல செய்து வைத்துள்ளனர். அந்த இடத்தை நாம் கடக்கும் போது மனதை என்னவோ செய்கிறது. சுற்றிலும் புல்வெளிகள் நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது.

மகாத்மா சுடப்பட்ட அந்த குறிப்பிட்ட இடத்துக்கு செல்லும் போது செருப்பு அணிந்து செல்ல கூடாது. இதை வலியுறுத்த அந்த ஒரு இடத்தில் மட்டும் ஒரு காவலாளி அமர்ந்துள்ளார்.

ஒரு தீபம் எப்போதும் எரித்து கொண்டுள்ளது. நாங்கள் சென்ற போது ஒரு வெளிநாட்டவர் வந்து அதனை படம் மற்றும் வீடியோ எடுத்து கொண்டிருந்தார்.

இந்த இடத்தை பார்த்து விட்டு வந்தால், சுதந்திர போராட்ட வரலாறு முழுமையாக படத்துடன் சேர்ந்து விளக்கி உள்ளனர். இதை வாசிக்கும் போது பல சுவாரஸ்யமான தகவல்கள் தெரிய வருகின்றன.

காந்தி 1915-ல் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வருகிறார். (இடைவேளைக்கு பின் வருகிற ஹீரோ மாதிரி ) அதன் பின் சுதந்திர போராட்டம் வேகம் எடுக்கிறது

பதிவர் வெங்கட்  நாகராஜ்  மியூசியத்தில் எடுத்த படம்
மவுண்ட்பேட்டன் வந்ததே இந்தியாவுக்கு சுதந்திரம் தர வேண்டும் என்கிற ஒரே நோக்கில் தான். இந்திய நிலையை பார்த்து விட்டு அவர் " இந்து-முஸ்லீம் இடையே இருக்கும் வகுப்பு கலவரம் மட்டுமே சுதந்திரம் தர தடையாக உள்ளது" என இங்கிலாந்துக்கு தெரிவிக்கிறார். பாகிஸ்தான் தனி நாடாகும் யோசனை உதிக்கிறது. காந்தி பலமாக எதிர்க்க நேரு உள்ளிட்ட தலைவர்கள் " எப்படியோ சுதந்திரம் கிடைத்தால் சரி" என அதற்கு சம்மதிக்கின்றனர்.

இந்தியாவிற்கு ஆகஸ்ட் 15, 1947 - அன்று சுதந்திரம் தர போவதாக ஜூன் மாதமே (Before 2 months) ஆங்கிலேயர்கள் அறிவித்து விட்டனர்

சுதந்திரம் கிடைத்த நாள் அன்று காந்தி மிக அப்செட் (பாகிஸ்தான் தனியே செல்வதால்). கொல்கத்தாவில் வகுப்பு கலவரத்தை அடக்குவதில் அன்று மும்முரமாய் இருந்துள்ளார் மகாத்மா.

முதல் பிரதமராகும் தருணத்தில் நேரு பேசியது நெகிழ்ச்சி " நமக்கு சுதந்திரம் கிடைக்க முக்கிய காரணம் மகாத்மா. அவர் நம் அனைவரையும் விட மிக உயர்ந்தவர். ஆனால் அவர் பேச்சுப்படி பல நேரங்களில் நாம் நடப்பதில்லை "

காந்தி- மோகன்
சுதந்திர போராட்ட கால துவக்கத்தில் கடிதங்களை தர, மனிதர்களே பயன்படுதபட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு ஊருக்கும் கடிதத்தை எடுத்து கொண்டு ஓடுவார்களாம். பிரிட்டிஷ் வந்த பின் போஸ்டல் முறை வர, இவர்களுக்கு வேலை போய் விட்டது. இதனால் கோபமடைந்த இவர்கள் ப்ரிடிஷுக்கு எதிராய் மிக தீவிரமாய் பணியாற்றி உள்ளனர். தபாலில் தகவல் சென்றால் ஆங்கிலேயர்கள் பிரித்து படித்து விடுவதால் இவர்கள் மூலம் கடித போக்குவரத்து நடந்துள்ளது !

தில்லி அருகே ஒரு ஊரில் ஒரு கிராமத்து மக்கள் அனைவரையும் ஆங்கிலேயர்கள் ஒரு குறிப்பிட்ட மரத்தில் தூக்கிலிட்ட சம்பவம் நடந்துள்ளது. அந்த மரம் இன்றும் நினைவு சின்னமாக உள்ளதாம் !

காந்தி நினைவு இல்லத்தில் எடுத்த வீடியோ இதோ:வீடுதிரும்பல் பரிந்துரை : இந்தியாவின் வரலாறை அறிந்து கொள்ள விரும்புவோர் நிதானமாய் வாசித்து பார்க்க வேண்டிய விஷயங்கள் இங்கு உண்டு. காந்தி மீது அன்பு கொண்டோர் டில்லி செல்லும்போது இந்த இடத்துக்கு அவசியம் செல்லுங்கள்

டில்லி துணுக்ஸ்:

பேருந்துகளில் அதிக கூட்டமில்லை. மாறாக மெட்ரோ ரயில் நிரம்பி வழிகிறது.

டில்லியின் தெருக்களின் பெயர்கள் சுவாரஸ்யம் ! ஒரு பக்கம் அக்பர், ஔரங்கசீப், ஷாஜஹான், ஹுமாயூன் போன்ற மொகலாய பேரரசர்கள் பேரில் தெருக்கள்.. இன்னொரு புறம் அனைத்து மாஜி பிரதமர்கள் (இந்திரா, ராஜீவ், மொரார்ஜி, சரண்சிங், சந்திரசேகர்) , ஜனாதிபதிகள் பெயரில் தெருக்கள்.. மகா கவி பாரதி பெயரிலும் ஒரு ரோடு உண்டு !

நண்பன் தேவா இருக்கும் வசந்த் குன்ஜ் அருகே ஸ்பைனல் கார்ட் சர்ஜரிக்கான மிக சிறந்த மருத்துவ மனை உள்ளது ! இங்குள்ள லிவர் ஹாஸ்பிடல் ஒன்றும் மிக புகழ் பெற்றது. தினமும் குடிக்கும் இந்தியாவின் "முதல் குடிமகளும்" அவர் கணவரும் இங்கு தான் டிரீட்மென்ட் எடுத்துப்பார்களாம் ! இது டில்லியில் ஊரறிந்த ரகசியமாயிருக்கு !

31 comments:

 1. நிச்சயம் பார்க்க வேண்டிய இடம்...

  ReplyDelete
 2. படங்கள் மற்றும் தகவல்களுக்கு நன்றி..

  ReplyDelete
 3. //காந்தி- மோகன்//

  மோகன்(தாஸ்) - மோகன் ??!! :-))))

  //டில்லியில் ஊரறிந்த ரகசியமாயிருக்கு//

  என்னங்க பெரீஈஈஈய்ய இடியைத் தூக்கிப் போடுறீங்க?? நம்பவே முடியலை!! :-(((((

  ReplyDelete
 4. மோகன்,

  இந்த இடம் எல்லாம் உங்க பதிவில் வரும்னு முன்னரே சொன்ன தீர்க்க தரிசினு எனக்கு எனக்கு நானே பாராட்டிக்கிறேன்(டில்லி போறவங்க எல்லாம் பாக்குற இடம் இத சொல்ல ஒரு தீர்க்க தரிசியானு சொல்லக்கூடாது)


  அந்த வீடு பிர்லா ஹவுஸ், காந்தி நினைவில்லமா அமைக்க கொடுத்துட்டாங்க.

  அங்க இருக்க கடையில ஜிப்பா , சத்திய சோதனை எதுவும் வாங்கலையா?

  ராட்டைனு சொல்லி தறிய போட்டு இருக்கிங்க, ராட்டை சக்கரத்தோட அங்க தனியா இருக்குமே.

  டில்லில எல்லா இடத்துக்கும் பேரு கஞ்ச், சவுக்,விகார்னு இருக்கு.எதுக்கு அப்படி பேரு வைக்கிறாங்க தெரியலை.

  ReplyDelete
 5. //டில்லில எல்லா இடத்துக்கும் பேரு கஞ்ச், சவுக்,விகார்னு இருக்கு.எதுக்கு அப்படி பேரு வைக்கிறாங்க தெரியலை//

  சவுக் (chowk) என்றால் சந்தி அல்லது கூடல் - இரண்டு தெருக்கள் கூடுமிடம். உதாரணத்திற்கு சாந்தினி சௌக் என்றால் முகலாயர் காலத்தில் பௌர்ணமி நிலவில் கூடுமிடம்.

  விகார் என்றால் வசிக்கும் இடம். தமிழில் சரித்திர நாவல்களில் படித்த (புத்த) விகாரம் தான். [’விகாரமாக இருப்பதா’ என்று விவகாரமாகக் கேட்கக் கூடாது]

  கஞ்ச் என்றால் சந்தை. பஹாட் கஞ்ச் என்றால் குன்றுச் சந்தை.

  கஞ்ச்-ஐயும் குஞ்ச்-ஐயும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். வசந்த் குஞ்ச் என்று ஒரு இடம் உள்ளது. அது வசந்த் கஞ்ச் அல்ல. குஞ்ச் என்றால் மரங்கள் நிறைந்த தோப்பு அல்லது பண்ணை. குஞ்ச் என்பது பண்ணை வீடுகள் (farm house) நிறைந்த பகுதியைக் குறிக்கும்.

  ReplyDelete
 6. மோகன் அருமையான விவரிப்பு. நேரில் பார்ப்பது போல் எழுதியுள்ளீர்கள்

  ReplyDelete
 7. வெங்கட் ஶ்ரீனிவாசன்,

  நன்றி!

  //கஞ்ச் என்றால் சந்தை. பஹாட் கஞ்ச் என்றால் குன்றுச் சந்தை. //

  இப்போ புரியுது , தார்யா கஞ்ச் என்ற இடத்தில் ஏகப்பட்ட புத்தக கடைகள், சாலையோரம் எல்லாம் புத்தகக்கடைகள் தான்,புது புத்தகமே மலிவாக கிடைக்குது,எல்லாம் பைரேட்டட் புக் தானாம்.

  புத்தகசந்தைனு சொல்வது பொருத்தம் தான்.

  ReplyDelete
 8. /தார்யா கஞ்ச் //

  வவ்வால், தர்யா என்றால் நீரோட்டத்தைக் குறிக்கும்; அதாவது நூலோட்டம் போலத் தொடர்ச்சியாக இடைவிடாது நீர் ஓடுவது. [தமிழில் கூட தாரைத் தாரையாக் கண்ணீர் வழிந்தது என்று சொல்வோமே.
  ’தாரா’ என்று எண்ணெய் பிராண்ட் கூட இருக்கிறது. அது இடைவிடாமல் தொடர்ச்சியாக எண்ணெய் கிடைப்பதைக் குற்க்கும்]

  இங்கே இது (யமுனை) ஆற்றை ஒட்டியச் சந்தை என்று பொருள் கொள்ள வேண்டும். [நீங்கள் குறிப்பிட்டது போல் இங்கு புத்தகங்கள் தண்ணீர் பட்ட பாடுதான்]

  ReplyDelete
 9. பார்க்க வேண்டிய இடங்கள், புகைப்படங்களுடன் கட்டுரை அருமை.!

  ReplyDelete
 10. காந்தி தனது வாழ்வில் கடைசி சில மாதங்களைக் கழித்தது பிர்லா அவர்களின் இல்லத்தில் [ஒரே ஒரு அறை] தான். அவரது இறப்பிற்குப் பிறகு அதை ஒரு நினைவில்லமாக ஆக்கிவிட்டார்கள். இப்போதும் இங்கே இருக்கும் காட்சிப் பொருட்களும், எலக்ட்ரானிக் காட்சிகளும் பிர்லா ஃபவுண்டேஷன் தான் நிர்வாகிக்கிறார்கள்.

  இங்கே இருக்கும் ஒவ்வொரு பொருட்களிலும் காந்தியின் ஒரு நினைவு இருக்கும். ஒரு இசைக் கருவி இருக்கும் - பலகைகளும் ஒரு குச்சியும் இருக்கும். குச்சியால் ஒவ்வொரு பலகையையும் தட்ட “ரகுபதி ராகவ ராஜா ராம்” ஒலிக்கும்... அந்த புகைப்படம் என்னிடம் இருக்கிறது. முடிந்தால் மின்னஞ்சலில் அனுப்புகிறேன். உங்கள் பதிவினில் சேர்ப்பதாக இருந்தாலும் சரி. இந்த இடம் பற்றி நிறைய விஷயங்கள் இருக்கின்றன. பிறிதொரு சமயத்தில் அதைப் பகிர முயல்கிறேன்.

  ReplyDelete
 11. த.ம. - 4

  [நானும் ஓட்டு போட்டாச்சு!]

  ReplyDelete
 12. /அவர் பேச்சுப்படி பல நேரங்களில் நாம் நடப்பதில்லை/

  இன்று வரை செளகரியமாக இதைதான் கடைப்பிடிக்கிறோம்.

  /நினைவுச் சின்னமாய் அந்த மரம்./

  பெற்ற சுதந்திரத்துக்குப் பின்னால் எத்தனை தியாங்கள் இப்படி.

  ReplyDelete
 13. நல்லதொரு பகிர்வு. வெங்கட் சீனிவாசனின் பின்னூட்டம் இன்னும் தெரிந்து கொள்ள உதவியது. நன்றி அவருக்கு. பதிவின் கடைசி வரிகள் ஆச்சர்யம் தந்தன!

  ReplyDelete
 14. காணொளியும் விளக்கங்களும்
  நேரடியாகப் பார்ப்பதைப் போன்ற உணர்வை
  ஏற்படுத்திப் போனது
  விரிவான பதிவுக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 15. சங்கவி: ஆம் நன்றி

  ReplyDelete
 16. ஹுஸைனம்மா said...
  //காந்தி- மோகன்//

  மோகன்(தாஸ்) - மோகன் ??!! :-))))

  அட ! இது நல்லா இருக்கே !

  //டில்லியில் ஊரறிந்த ரகசியமாயிருக்கு//

  என்னங்க பெரீஈஈஈய்ய இடியைத் தூக்கிப் போடுறீங்க?? நம்பவே முடியலை!! :-(((((  ஆம் எனக்கும் அதே உணர்வு தான். ஆனா இதை பலரும் தனித்தனியே சொன்னபோது நம்பத்தான் வேண்டியிருந்தது

  ReplyDelete
 17. மாதவா: நன்றி

  ReplyDelete
 18. வவ்வால்: பிர்லா ஹவுஸ் பற்றி சொன்னதுக்கு மிக நன்றி

  ReplyDelete
 19. சீனிவாசன்: நிறைய தகவல்கள் சொன்னீர்கள் மிக நன்றி

  ReplyDelete
 20. வரலாற்று சுவடுகள் : நன்றி

  ReplyDelete
 21. வெங்கட்: மிக நன்றி. உங்கள் படத்தை இதே பதிவில் இணைக்கிறேன்

  ReplyDelete
 22. ராமலட்சுமி மேடம்: ஆம் சரியாய் சொன்னீர்கள். எவ்வளவு தியாகத்துக்கு பின் பெற்றுள்ளோம் சுதந்திரம். இந்த உணர்வு அங்கு செல்லும் போது நிச்சயம் வரும் !

  ReplyDelete
 23. ரமணி சார்: நன்றியும் மகிழ்ச்சியும்

  ReplyDelete
 24. Anonymous9:14:00 PM

  அங்க செருப்பு போட்டு போறவங்கள சுடனும்....

  ReplyDelete
 25. Anonymous9:15:00 PM

  அங்க செருப்பு போட்டு போறவங்கள சுடனும்....//

  நீங்க ?

  ReplyDelete
 26. ரெவரி: நன்றி நான் செருப்பு போட்டு போகலை நண்பரே

  ReplyDelete
 27. This comment has been removed by the author.

  ReplyDelete
 28. அருமையான பதிவு.
  ஆனால் ஒரு தகவல் அதிர்ச்சியாக இருக்கிறது.
  நன்றி.

  ReplyDelete
 29. டில்லிக்கு உங்களுடன் கூடவே வந்தது போல் இருந்தது. இரசனையும் பயனும் மிக்க பதிவு.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...