இந்திரா காந்தி இல்லம் பார்த்து முடித்ததும் நாங்கள் அதன் அருகில் உள்ள நேரு இல்லம் சென்றோம். நேரு இல்லம் மிக பெரியது. உள்ளே நுழைந்ததும் பிளானட்டரியம் உள்ளது. நாம் சென்னை கோட்டூர் புரத்திலேயே ஒரு பிளானட்டரியம் பார்த்ததால் செல்ல வில்லை.
நிறைய பள்ளி குழந்தைகள் பிளானட்டரியம் வந்து அதன் நிகழ்சிகளை பார்த்தனர். டில்லி பள்ளி பசங்க செம சுறுசுறுப்பு. ஒரு நிமிடம் சும்மாயிரமால் அங்கும் இங்கும் ஓடுறாங்க; டீச்சர்ஸ் பற்றி இவர்களுக்கு சிறிதும் பயமில்லை
ப்ளனாடோரியத்தில் துறுதுறு டில்லி குழந்தைகள் |
3 பிரதமர்கள் நினைவாய் எரியும் ஜோதி |
தன் தந்தை பற்றி நேரு சொல்லும் போது " என் அப்பா பகல் முழுதும் கோர்ட்டில் வாதிடுவார். மாலை பல நண்பர்கள் வீட்டுக்கு வருவர். அவர்களுடன் ஒயின் அருந்துவார். பின் எங்களுடன் சேர்ந்து டின்னர் சாப்பிட வருவார். தினம் இவை மூன்றும் நடக்கும்" என்கிறார். மோதிலால் நேருவும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர் !
நேருவின் அறை |
இங்கு உள்ள கடையில் நிறைய பொது அறிவு புத்தகங்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது, மேலும் நேரு படம் போட்ட டீ ஷர்ட்டுகள் கிடைக்கின்றன!
நிறைய செடிகள், மரங்கள் உண்டு. அதென்னவோ இங்கு மட்டுமல்ல டில்லி முழுதுமே செடி கோடிகளுக்கு கீழே உள்ள மண், களிமண் போல் உள்ளது. விசாரித்ததில் மண் இயல்பே அப்படி தான் என்றனர்.
நேரு இல்லத்தில் இப்போது ஒரு லைப்ரரி இயங்குகிறது. ஆனால் லைப்ரரி உறுப்பினர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக படுகின்றனர்.
******************
அக் ஷர்தாம் கோயில்
டில்லியில் நாம் அடுத்து பார்க்க இருப்பது அக்-ஷர்தாம் கோயில் !
இந்த கோயிலின் உள்ளே காமிரா மட்டுமல்ல மொபைல் கூட அனுமதி இல்லை. இவ்வளவு ஏன் நமது பெல்ட் கூட கழற்ற சொல்லி அதனை செக் செய்கிறார்கள். சாமி சந்நிதியில் கூட்டமில்லை. மிக எளிதாய் சுற்றி வரலாம். ஆனால் கோயில் உள்ளே நுழையும் முன் பரிசோதனைக்கு தான் மிக அதிக நேரம் நிற்க வேண்டும் ( அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை !) இதே போல் குஜராத்திலிருக்கும் கோயிலில் தீவிரவாதிகள் அட்டாக் செய்ததால் இவ்வளவு சோதனை நடக்கிறது !
Central Doom: Photo: Wikipedia |
மிக மிக அழகான புல்வெளி. பூ வடிவத்தில் புல்லை நறுக்கி வைத்துள்ளனர். என்னே கலை அழகு !
Crowd waiting to enter |
மேலே சொன்ன எக்சிபிஷன், படம் மற்றும் போட்டிங் இதற்கு தான் பணம் கட்டணும். கோயிலை மட்டும் சுற்றி பார்க்க பணமில்லை.
உள்ளேயே சாப்பிட நிறைய கடைகள் உள்ளன. ஐஸ் கிரீம், இதர ஸ்நாக்ஸ்கள் நிறைய கிடைக்கின்றன (மற்ற உணவுகள் உள்ளே அனுமதி இல்லை)
கோயிலை சுற்றி நடந்து வந்தால் செருப்புடன் கூட வரலாம். இதற்கு அனுமதி உண்டு . வெய்யில் நேரம் எனில் முதலில் செருப்புடன் சுற்றி வந்து விட்டு, செருப்பை போட்டு விட்டு பின் சன்னதிக்கு செல்லலாம். செருப்பை ஒரு துணி பைக்குள் போட்டு கட்டி வைக்கின்றனர்.
மயில்களும் மாடு போன்ற ஒரு மிருகமும் நிறைய பொம்மை வடிவில் உள்ளது.
கோயிலின் உள்ளே நீங்கள் போட்டோ எடுக்க தனி ஆட்கள் உள்ளனர். 130 ரூபாய் தந்தால் கோபுரம் பின்னணியில் உங்களை போட்டோ எடுத்து தரிசனம் முடிந்து போவதற்குள் தந்து விடுவார்கள்
சன்னதி உள்ளே ராமர்- சீதா சிலை, கிருஷ்ணா- ருக்மணி சிலை, சிவன்- பார்வதி சிலை ஆகியவை உள்ளன. அனைத்தும் தங்க முலாம் பூசியவை.
சுவாமி நாராயண் என்பவர் தான் இந்த கோயிலின் முக்கிய காரணகர்த்தா. அவர் நினைவாக கட்டப்பட்டது தான் இக்கோயில். இவர் வாழ்ந்த காலம் 1781- 1830 வரை மட்டுமே. இவரது உடை, செருப்பு, கால் பதம் ஆகியவை பத்திரம் செய்து வைத்துள்ளனர்.
விவேகானந்தர் போல் இவருக்கு பெரிய சிலை உள்ளது. இது தான் முக்கிய சந்நிதி போல ! இந்த சிலையில் அவர் துண்டை தோளில் ஒரு புறமாய் போட்டு கொண்டு அதன் மறு முனை கையிலிருக்க, நின்ற வண்ணம் உள்ளார். சுற்றி நின்று அவரது சீடர்கள் மலர் தூவுகிற மாதிரி அமைத்துள்ளனர்
சன்னதி உள்ளே தண்ணீர் கூட அனுமதி இல்லை. தவறி போய் எடுத்து சென்று, நீங்கள் தண்ணீர் குடிப்பதை பார்த்தால் பாய்ந்து வந்து தடுக்கிறார்கள். மார்பில் தரையில் தண்ணீர் கொட்டி அதில் யாரும் வழுக்கி விழ கூடாது என்கிற காரணம் தான் !
வி.ஐ.பி களுக்கு கோவிலில் பணி புரிவோரே கைடு போல அழைத்து சென்று அனைத்து விளக்கமும் தருகிறார்கள். மற்றவர்களுக்கு கைடு அனுமதி இல்லை.
நிறைய தூண்கள் உள்ளன. அவற்றின் அருகே தரையில் சக்தி வாய்ந்த விளக்குகள் பொருத்தப்பட, அவை ஒளியை பீய்ச்சி அடித்து கோயிலை வண்ண மயமாக்குகின்றன.
உடல் முடியாதவர்களுக்கும், வயதானோருக்கும் வீல் சேரில் சுற்றி பார்க்க அனுமதி உண்டு.
சுருக்கமாய் சொன்னால், இது கட்டிட அழகை , மார்பிளில் கட்டப்பட்ட இந்த "அதிசயத்தை" கண்டு ரசிக்கத்தான் மக்கள் பெரும் கூட்டமாக வருகிறார்கள். பக்தி என்பது மருந்துக்கும் காணும் !
மீண்டும் டெல்லி சென்று வந்த உணர்வு...
ReplyDeleteடெல்லி போகும் போது உங்க குறிப்புகள் உதவும்னு நினைக்கிறேன்..
ReplyDeleteஅருமையான பதிவு. இந்திராகாந்தி நினைவு இல்லமெல்லாம் போனதில்லை. காந்தி சமாதிதான் ஒரு முறை போனேன்.
ReplyDeleteஅக்ஷர்தாம் பிடிச்சுருந்துச்சு. அதைப்பற்றி எழுதிய சுட்டிகள் இங்கே!
நேரம் இருக்கும்போது பாருங்கள்.
http://thulasidhalam.blogspot.com/2007/03/blog-post_16.html
http://thulasidhalam.blogspot.com/2007/03/blog-post_19.html
// இங்கு உள்ள கடையில் நிறைய பொது அறிவு புத்தகங்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது, மேலும் நேரு படம் போட்ட டீ ஷர்ட்டுகள் கிடைக்கின்றன!
ReplyDelete//
நான் அங்க ஜோல்னாபை ஒன்னு வாங்கினேன் :)
படங்கள் எடுக்க முடியாப் பகிர்வு. கண்டவர் விண்டு சொல்ல முடியா அழகு!
ReplyDelete//பக்தி என்பது மருந்துக்கும் காணும் !//
இது எல்லாக் கோவில்களுக்குமே பொருந்தும் என்று தோன்றுகிறது. கோவில்கள் பணம் பண்ணும் வியாபார ஸ்தலங்கள் ஆகி விட்ட நிலையில் பக்தியை அங்கு எப்படி எதிர்பார்க்க முடியும்?!
நல்ல அவதானிப்புடனான தகவல்கள். தொடருங்கள்.
ReplyDeleteவழக்கம் போல் அருமை தொடருங்கள் நண்பரே!
ReplyDeleteஇன்றைய ஸ்தலங்கள் நான் பார்க்காதவை...சுவாரஸ்யம் மோகன்...
ReplyDelete//ஒரே குடும்பத்தில் இருந்து மூன்று தலை முறையை சேர்ந்தவர்கள் வேறு யாரும் பிரதமராக வர வர வாய்ப்பு இல்லை (ராகுல் வந்தால் நான்காம் தலை முறையாகும் !) //
ReplyDeleteராகுல் வந்தால்..... ?????
நேரு இல்லத்தில் வாசல் முழுவதும் ரோஜாக்கள் பூத்துக் குலுங்கும்..... நீங்கள் வந்த போது அவ்வளவாக பூக்கள் இருந்திருக்காது.
அக்ஷர்தாம் - மாலையில் நடக்கும் ஒளி-ஒலி காட்சி மிகவும் பிரமாதமாக இருக்கும்... 15 நிமிடங்கள் நம்மை அசத்தி விடுவார்கள்.....
அன்புள்ள மோகன் அவர்களுக்கு,
ReplyDeleteவிகடனில் குட் ப்லாக்ஸ் பகுதியில் தங்கள் வலைத்தளம் வந்ததில் இருந்து தங்களை படித்து வருகிறேன். உங்கள் புகைப்படத்தை கண்டவுடன் " அட நம் பழைய நண்பர் சந்திர குமாரை போல இருக்கிறாரே, எப்படி தான் எழுதுகிறார் என்று பார்க்கலாமே" என்று தான் முதலில் படிக்க துவங்கினேன்.பல விஷயங்களில் தங்களின் பார்வை மற்றும் தங்களின் இயல்பான நடை என்னை உங்களின் வலைதளத்தை தவறாமல் படிக்க அழைத்து வருகின்றன. பல வருடங்களுக்கு பிறகு தமிழில் எழுத வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இனி தவறாமல் உங்கள் பதிவுகளுக்கு கருத்து தெரிவிப்பேன் ( நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் கூட :))
அன்புடன்
சுபாஷினி
This comment has been removed by the author.
ReplyDeleteசங்கவி: நமது பயண கட்டுரையை தொடர்ந்து வாசித்து ஊக்குவிகிறீர்கள் நன்றி
ReplyDeleteநன்றி கோவை நேரம்
ReplyDeleteநன்றி துளசி மேடம். உங்கள் பதிவுகள் வாசித்து வியந்து போனேன். அங்கேயே குறிப்பிட்டும் உள்ளேன்
ReplyDeleteஅப்து அண்ணே: நீங்க இந்த பக்கம் வந்து, பின்னூட்டம் தந்ததில் மிக மிக மகிழ்ந்தேன் நன்றி
ReplyDeleteஸ்ரீராம்: நீங்கள் சொல்வது உண்மை தான் நன்றி
ReplyDeleteநன்றி ராமலட்சுமி மேடம் மகிழ்ச்சி
ReplyDeleteநன்றி ரெவரி
ReplyDeleteவெங்கட் : ராகுல் பிரதமர் ஆவது நிச்சயம் நடந்தே தீரும். அரசியல் !! வேறு வழி இல்லை :((
ReplyDeleteபிரணாப் மனு தாக்கல் செய்யும் போது அவர் வல புறம் மன்மோகன்- இட புறம் ராகுல் ! யாருக்கு முக்கியத்துவம் பார்த்தீர்களா?
நேரு இல்லம் மாற்றம் கோவில் பற்றி தகவல்களுக்கு நன்றி
Candle Lover @ சுபாஷினி: தங்கள் வார்த்தைகள் மிக மகிழ்ச்சி தருகின்றன. இது போன்ற ஊக்கங்கள் தான் தொடர்ந்து எழுத வைக்கிறது
ReplyDeleteபதிவுகள் பற்றி தொடர்ந்து பின்னூட்டம் மூலம் கருத்து சொன்னால் மிக மகிழ்வேன் நன்றி
அருமையான படங்களுடன் கூடிய, விளக்கங்கள் நிறைந்த பதிவு.
ReplyDeleteஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
/பக்தி என்பது மருந்துக்கும் காணும்//
ReplyDeleteஇங்கும் ஒரு பள்ளிவாசல் அப்படித்தான் ஆகி வருகிறது. :-(
//ராகுல் வந்தால் நான்காம் தலை முறை//
வரட்டும். அவராவது உறுதியான முடிவுகள் எடுப்பவராக இருக்கிறாரா பார்க்கலாம். (அதாவது ‘தானே’ செயல்படும் தானைத் தலைவராகன்னும் சொல்லலாம்...) :-))))))