Tuesday, June 19, 2012

ஜனாதிபதி தேர்தல் – பிரணாப் தேர்வு சரியா?

ந்தியா இன்னொரு தேர்தலுக்கு தயாராகி விட்டது. இம்முறை ஜனாதிபதி தேர்தல் !

காங்கிரஸ் பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதி வேட்பாளராய் அறிவித்த பின், அனைத்து நடவடிக்கையும் சூடு பிடித்து விட்டது

ஜனாதிபதி எப்படி தேர்ந்தெடுக்க படுகிறார் தெரியுமா?

லோக்சபா, ராஜ்ய சபா என அவைகளின் உறுப்பினர்களும், கூடவே அனைத்து மாநில சட்டசபை உறுப்பினர்களும் வாக்களித்து தான் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கிறார்கள்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த 776 எம்.பி.க்களும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த 4,120 எம்.எல்.ஏ.க்களும் என மொத்தம் 4,896 பேர் மட்டுமே இந்த தேர்தலில் வாக்களிப்பார்கள்.

இது பற்றி விகடன் இணைய தளம் வெளியிட்ட கட்டுரை இங்கு:

சரி இவர்களது ஓட்டு மதிப்பு எப்படி தெரியுமா?

மாநிலங்களின் மக்கள்தொகை அடிப்படையில், எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு வேறுபடுகிறது.ஒரு மாநிலத்தின் மக்கள்தொகையை,அதன் சட்டசபைத் தொகுதிகளின் எண்ணிக்கையால் வகுத்து, வரும் விடையை ஆயிரத்தால் வகுத்தால் கிடைப்பதுதான் எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு.
**
இப்போதுள்ள நிலையில் காங்கிரசின் கூட்டணியில் மம்தா தவிர மற்ற அனைவரும் பிரணாபை ஆதரிக்கிறார்கள். கூட்டணியில் இல்லாத மாயாவதி போன்றோரும் கூட மகிழ்ச்சியும் ஆதரவும் தெரிவிக்கிறார்கள். எப்போதும் பீ. ஜே.பி க்கு எதிரான நிலைப்பாடையே எடுக்கும் கம்யூனிஸ்டுகள் பிரணாபை ஆதரிக்க கூடும். பிரணாப் கொல்கட்டாகாரர் என்பதும் அங்கு கம்யூனிஸ்டுகள் அதிகம் என்பதும் கூட இடது சாரி கட்சிகள் இவரை ஆதரிக்க காரணமாகலாம்.

இடது சாரிகள் ஆதரவு இல்லாமலே கூட, காங்கிரஸ் மற்றும் மாயாவதி ஆதரவுடன் பிரணாப் வெல்வதற்கு வாய்ப்புகள் மிக மிக பிரகாசமாக உள்ளன. அடுத்த ஜனாதிபதி பிரணாப் தான் என்பதில் அநேகமாய் சந்தேகம் இல்லை.

இவரது தேர்வு சரிதானா? சற்று சிந்திப்போம் :

பிரணாப் ஒரு மிக சிறந்த அறிவாளி, உழைப்பாளி என்பதில் சந்தேகம் இல்லை. இந்திரா, ராஜீவ், நரசிம்ம ராவ், மன்மோகன் என அனைத்து பிரதமர்களின் கீழ் நிதி, வெளிநாட்டு துறை போன்ற முக்கிய பொறுப்புகளை நிர்வகித்தவர். காங்கிரசின் தற்போதைய பொது செயலாளர். நாடாளு மன்ற அவை முன்னவர். ..இப்படி அவரது அரசியல் சாதனைகள் நீள்கிறது.

ஆனால் எம் கேள்வி இது தான்:

 ஜனாதிபதி என்பவர் நடு நிலையுடன் இருக்க வேண்டாமா? ஆளும் கட்சி, தனது கட்சியின் பொது செயலாளரை ஜனாதிபதி ஆக்குவது என்ன விதமான அணுகு முறை? தமிழகத்தை வைத்து சொல்கிறேன். தி.மு.க ஆட்சி செய்யும் போது ஆளுநர் தேர்தல் நடக்கிறது என வையுங்கள். அப்போது பேராசிரியர் அன்பழகனை ஆளுநர் ஆக்கினால் அது சரியா? அவர் எந்த கட்டத்திலும் தி.மு.க விற்கு பாதகமாய் முடிவு எடுப்பாரா? இம்முறை வந்தது போல் ஒரு கட்சி பெரிய அளவில் வென்றால் குழப்பமில்லை. தேர்தலுக்கு பின் இரண்டு கட்சிகளுக்கு இடையே யார் ஆட்சி அமைப்பது என இழுபறி எனில், ஆட்சி அமைக்க யாரை அழைப்பது என முடிவெடுப்பது ஜனாதிபதி தான். அவர் அப்போது காங்கிரசுக்கு எதிராய் முடிவெடுப்பார் என எப்படி எதிர்பார்க்க முடியும்?

சோனியா விரும்புவதும் இதை தான் என தெரிகிறது. எந்நிலையிலும் தான் சொல்வதை கேட்கும் ஒரு பிரதமர் இருக்கிறார். அதே போன்றே அடுத்து ஜனாதிபதியும் தயார் ஆகிறார்.

இதற்கு முன் கூட அந்தந்த கட்சி சார்ந்தோரே ஜனாதிபதி ஆயினர் எனினும், இப்படி ஒரு ஆளும் கட்சி மந்திரி, அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு ஜனாதிபதி ஆவது இது முதன் முறை என நினைக்கிறேன். இது நிச்சயம் நல்ல முன் மாதிரி கிடையாது.

முகநூலில் தமிழ் நண்பர்கள் பலர் பிரணாபுக்கு எதிராய் எழுதுகின்றனர். அவர்கள் சொல்லும் காரணம்: பிரணாப் இலங்கை தமிழர் விவகாரத்தில், தமிழர்களுக்கு எதிராய் நடந்தார் என்பது. மேலும் பிரணாப் நாடாளுமன்றத்தில் தூங்கும் படம் போட்டு இப்படி பட்டவரா நம் ஜனாதிபதி என்று கேள்வி எழுப்புகிறார்கள்.



ஆனால் பத்திரிக்கைகள் பிரணாப் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்பவர் என்றும் கொல்கத்தாவில் துர்கா பூஜை நடக்கும் நேரம் மட்டுமே தன் குடும்பத்துடன் விடுமுறையில் இருப்பார் என்றும் பாராட்டி சொல்கிறது !

On a lighter vein, பிரணாப் நிறைய உழைத்து விட்டார்.. இனியாவது ஓய்வு எடுக்கட்டும். அப்படியே பல நாடுகள் சுற்றி பார்க்கட்டும் என காங்கிரஸ் நினைத்திருக்கலாம்

பிரணாப் ஜனாதிபதி ஆவது உறுதி. ஜனாதிபதியாக அவர் காங்கிரசுக்கு உண்மையாக இல்லாமல், நாட்டு நலனை மனதில் கொண்டு நடுநிலையான முடிவுகளை எடுக்க வேண்டும், இதுவே ஒரு சராசரி இந்தியனாக நம் எதிர்பார்ப்பு !

வல்லமை ஜூன் 18 இதழில் வெளியான முகப்பு கட்டுரை 

37 comments:

  1. பாவம் அவரும்கொஞ்சம் நாள் சுகமாய்
    அனுபவிக்கட்டுமே
    சீனியர்களை ஒதுக்குவதற்கும்
    பிரச்சனைக்குரியவர்களை
    சிறிது நாள் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கவும்
    ஏற்ப்டுத்தப்பட்ட பதவிகள் தானே
    கவர்னர் பதவியும் ஜனாதிபதி பதவியும்
    பாவம் நன்றாகத் தூங்கட்டும்
    செயல் படாவிட்டாலும் பரவாயில்லை
    திவாரி மாதிரி செயல்படாமல் இருந்தால் சரி

    ReplyDelete
  2. என்னுடைய தேர்வு சுப்பிரமணியன் சுவாமிதான், அவர்தான் சரியான ஆள் இதுக்கு, ஏன்னா ஒரு பயலையும் தூங்க விடமாட்டார் என்ன உண்மைதானே..?

    ReplyDelete
  3. @ Mano நாஞ்சில் மனோ.,

    ஹா ஹா உண்மைதான்.!

    ReplyDelete
  4. விடுங்க பாஸ்.... யார் ஜனாதிபதியா வந்தாலும் நாட்டை அப்படியே புரட்டிப் போட்டு மாற்றி விட முடியாது. மந்திரி சபையில் இவர் தொல்லை இல்லாமல் இருக்க இவரைத் தூக்கி 'அங்கே போய்த் தூங்கிக் கொள்ளவும்'னு அனுப்பறாங்க.... சில முக்கிய தருணங்களில் இவர் கொஞ்சம் ஆபத்தானவர் என்றும் ஒரு கருத்தும் உண்டு.

    //என்னுடைய தேர்வு சுப்பிரமணியன் சுவாமிதான், அவர்தான் சரியான ஆள் இதுக்கு, ஏன்னா ஒரு பயலையும் தூங்க விடமாட்டார் என்ன உண்மைதானே..?//

    ஹா...ஹா... ஹா... நல்ல தெரிவு!

    ஆனால் எழுபதுக்கு மேலே உள்ள கிழங்கள்தான் 'ஜ' ஆக வேண்டுமா....ஏன் இளைஞர்களை முயற்சிக்க மாட்டேன் என்கிறார்கள்? குறைந்த பட்ச வயதுத் தகுதி முப்பத்தி ஐந்துதானே?

    ReplyDelete
  5. லிந்திய வரலாற்றில் முதன் முறையாக ஜனாதிபதி தேர்தலின் சறுக்கலும்,எதிர் விமர்சனங்களும்.

    இந்திய ஜனாதிபதி ரப்பர் ஸ்டாம்ப் என்பதை இனி சோனியா ஸ்டாம்ப் என மாற்றி விடலாம்.

    ReplyDelete
  6. குடியரசு தலைவர் தேர்தலை நான் புறக்கணிக்கப்போகிறேன்,எனக்கு வாக்குரிமை இல்லாத தேர்தல் எனக்கு வேண்டாம் :-)) 49-ஓ போட்டாச்சு!

    ReplyDelete
  7. Anonymous9:16:00 PM

    பென்ஷன் வாங்குவது அந்த பதவிக்கு அடிப்படை தகுதி போல...கூடவே உலக அளவில் நல்ல பெயர் எடுக்க மட்டுமே உபயோகபடுத்தப்படும் MERE FORMALITY இது மோகன்...

    ReplyDelete
  8. //ஒரு மாநிலத்தின் மக்கள்தொகையை,அதன் சட்டசபைத் தொகுதிகளின் எண்ணிக்கையால் வகுத்து, வரும் விடையை ஆயிரத்தால் வகுத்தால் கிடைப்பதுதான் எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு. //

    a) எதுக்கு ஆயிரத்தால் வகுக்கப் படுகிறது.. ?

    2) மக்கள்தொகை -- பிறந்த குழந்தை கூட கணக்கில் உண்டா.. இல்லை பதினெட்டு வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமா ?

    ReplyDelete
  9. பிரணாப் நிறைய உழைத்து விட்டார்.. இனியாவது ஓய்வு எடுக்கட்டும். அப்படியே பல நாடுகள் சுற்றி பார்க்கட்டும்

    அருமை.

    ReplyDelete
  10. //a) எதுக்கு ஆயிரத்தால் வகுக்கப் படுகிறது.. ?//

    குடியரசு தலிவர் தேர்தலுக்கு சொல்லுற கணக்கு எல்லாம் சும்மா டுபாக்கூர்,மக்கள் ஓட்டுப்போடாத நிலையில் மக்களுக்கும் பங்கு கீதுனு காட்ட ,மக்கள் தொகை, ஆயிரத்தால வகுறது எல்லாம்.

    ஆயிரத்தால் வகுப்பதால் ,ஒவ்வொரு எம்.எல்.ஏவின் ஓட்டையையும் ஆயிரத்தில் ஒருவருக்கு என பிரதிநிதித்துவம் செய்றாங்களாம்.

    ஆனால் அப்படி இல்லை ஆயிரத்தால வகுறலைனா நம்பர் பெருசா போயிடும் அதான் :-))

    இதுல என்ன ஒரு சிக்கல்னா வாக்காளர் அதிகமாக இருக்க மாநில எம்.எல்.ஏக்களின் சராசரி அதிகம் இருக்கும். உ.ம் உத்திரபிரதேசம் ,மகாராஷ்ட்ரா, மேற்கு வங்கம், ஆந்திரா எம்.எல்.ஏ க்களின் ஒரு ஓட்டுக்கு தமிழ் நாட்டு எம்.எல்.ஏ ஓட்டை விட கூடுதல் பலம் இருக்கும்.

    எனவே ஒரு அட்வாண்டேஜ் கிடைக்கும்.

    மக்கள் தொகைனு யாரு சொன்னானு தெரியலை, வாக்காளர் பட்டியலில் கடைசியாக திருத்தம் செய்யப்பட்ட அடிப்படையில் என நினைக்கிறேன்.

    அப்படி மக்கள் தொகை என்றாலும் கடைசி சென்சஸ் அடிப்படையில் தான்.ஆனால் வாக்காளர்ப்பட்டியல் தான் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் அப்டேட் செய்யப்படுவது. மேலும் சென்சஸ் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்பதால் சரியாக வராது. எனவே மொத்த வாக்காளர் எண்ணிக்கை என்பதே சரியாக இருக்க வேண்டும்.

    ReplyDelete
  11. இதுவரை வந்த ஜனாதிபதிகள் எல்லோருமே, அந்தப் பதவி வெறும் ரப்பர் ஸ்டாம்ப் மட்டுமே என்ற தோற்றத்தையே ஏற்படுத்தியுள்ளனர். ஒரு வேலை டி.ஏன். சே ஷன் ஒரு முறை வந்திருந்தால், ஜனாதிபதி என்றால் என்ன என்று காட்டியிருக்கலாம். கலாம் வந்து ஒன்னத்தையும் கலட்ட வில்லை. நிறைய ஸ்கூல் பிள்ளைகளுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்ததோடு சரி, நிறைய வெளிநாட்டுக்குப் போனார், நம்ம விவேக்குக்கு பன்ச் டயலாக் பேச உதவினார். எல்லாத்துக்கும் மேல பிரதீபா பாட்டீலையே ஜனாதிபதியா பாத்தாச்சு, இதுக்கும் மேல இன்னொரு கேவலமானவர் வந்து விட முடியுமா என்ன?

    ReplyDelete
  12. அருமையா படங்களைப் போட்டிருக்கீங்க பேஷ்.......பேஷ்...... பின்னால இருந்து எழுந்து அந்தம்மா இவரு தூங்குராரானு சந்தேகத்தோட செக் பண்றாங்க போல இருக்கே!!

    ReplyDelete
  13. \\ ஜனாதிபதி என்பவர் நடு நிலையுடன் இருக்க வேண்டாமா? ஆளும் கட்சி, தனது கட்சியின் பொது செயலாளரை ஜனாதிபதி ஆக்குவது என்ன விதமான அணுகு முறை?\\ இது மட்டுமல்ல, ஆளுங் கட்சி வேட்பாளர் கட்டாயம் இதில் வெற்றி பெற வேண்டும். அப்படி நடக்காவிட்டால், பெரும்பான்மையை இழந்து விட்டது என்று அர்த்தம். மாநில அளவிலும் இதே கேள்வியை சட்டசபை சபாநாயகர் தேர்ந்தெடுப்பதை கூறலாம். சபாநாயகர் என்பவர் நீதிபதியைப் போல செயல்பட வேண்டியவர். ஆளுங் கட்சியைச் சேர்ந்தவரே சபாநாயகர்ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தால் அவர் எப்படி நடுவுநிலையோடு இருப்பார்? விடுங்க பாஸ், இங்கே எதுதான் ஒழுங்க இருக்குது, இதெல்லாம் அப்படி இருப்பதற்கு.

    ReplyDelete
  14. \\நாட்டு நலனை மனதில் கொண்டு நடுநிலையான முடிவுகளை எடுக்க வேண்டும், இதுவே ஒரு சராசரி இந்தியனாக நம் எதிர்பார்ப்பு !\\ இந்தப் பதவியில் இருப்பவரால் நாட்டுக்கு ஒன்னும் ஆகப் போவதில்லை பாஸ், கவலைப் படாம இருங்க.

    ReplyDelete
  15. //சோனியா விரும்புவதும் இதை தான் என தெரிகிறது. எந்நிலையிலும் தான் சொல்வதை கேட்கும் ஒரு பிரதமர் இருக்கிறார். அதே போன்றே அடுத்து ஜனாதிபதியும் தயார் ஆகிறார். //

    அப்படி வெளிப்படையாக ஒரு கட்சிக்கு சார்பாக முடிவெடுக்க முடியும் என்று தோன்றவில்லை...அதுவும் 'எப்படா மாட்டும்' என்று காத்திருக்கும் மீடியாக்களின் மத்தியில்.

    நிறைய குழந்தைகளை சந்தித்து கல்விக்கான ஊக்கத்தை கொடுத்தது தவிர, அப்துல் கலாம் கூட இந்த பதவியின் மூலம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

    என்னை பொறுத்தவரை, நம் வரிப்பணத்தின் மற்றுமொரு அனாவசிய செலவு இந்த ஜனாதிபதி பதவி...அவ்வளவே. ப்ரதிபா பாட்டீல் இதற்கு சரியான உதாரணம்.

    ReplyDelete
  16. its all in the game of life/poltics

    ReplyDelete
  17. ரமணி said

    //திவாரி மாதிரி செயல்படாமல் இருந்தால் சரி//
    சரியா சொன்னீங்க நன்றி

    ReplyDelete
  18. மனோ: சுப்பிரமணியம் சுவாமி வந்தா நல்லா நமக்கு பொழுது போகும் !

    ReplyDelete
  19. வரலாற்று சுவடுகள் : நன்றி

    ReplyDelete
  20. ஸ்ரீராம்: அரசியலில் உள்ள பிரதமர், கவர்னர் எல்லாரும் வயதானவர்கள் என்பதால் "வேவ் லெங்க்த்" ஒத்து போக வயதானவர்களை தேர்ந்தெடுக்கிறார்களோ? பிரதமரே இளமையானவராய் இருந்தால் நல்லாயிருக்கும்

    ReplyDelete
  21. ராஜ நடராஜன்: கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  22. கவிதை நாடன் : வருகைக்கு நன்றி

    ReplyDelete
  23. நன்றி வெங்கட் நாகராஜ்

    ReplyDelete
  24. நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்

    ReplyDelete
  25. ரெவரி: உண்மை தான். அப்புறம் நம்ம பதிவில் வந்து நம்பள்கி என்ற பதிவர் உங்களை எதிர் பதிவுக்கு அழைத்துள்ளாரே ! என்ன விஷயம்?

    ReplyDelete
  26. மாதவா: உனக்கு வவ்வால் பதில் சொல்லிருக்கார் பாரு (கேள்வி கேட்பது ஈசி. பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?:))

    ReplyDelete
  27. ரத்னவேல் நடராசன் ஐயா: நன்றி

    ReplyDelete
  28. வவ்வால்: விரிவான விளக்கத்துக்கு மிக நன்றி

    ReplyDelete
  29. ரகு:

    //நிறைய குழந்தைகளை சந்தித்து கல்விக்கான ஊக்கத்தை கொடுத்தது தவிர, அப்துல் கலாம் கூட இந்த பதவியின் மூலம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.//

    மிக சரியாக சொன்னீர்கள் நன்றி

    ReplyDelete
  30. தாஸ்: கலாம் மற்றும் பிரதீபா பற்றி நீங்கள் சொன்னதை ஒத்து கொள்ள தான் வேண்டும்

    ReplyDelete
  31. நம்பள்கி: ஏன்? நல்லா தானே போய்கிட்டு இருக்கு ?

    ReplyDelete
  32. ஷர்புதீன்: நன்றி நலமா?

    ReplyDelete
  33. பாவம் பிரணாப் முகர்ஜி: அவரது ஆசை நிறைவேற இனி வாய்ப்பே இல்லை!

    http://arulgreen.blogspot.com/2012/06/blog-post_16.html

    ReplyDelete
  34. நம்பள்கி எனும் வேடிக்கை பதிவர்! - இந்தியாவில் புகைபிடித்தால் தப்பேயில்லை!!

    http://arulgreen.blogspot.com/2012/06/blog-post_20.html

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...