இந்தியா கேட் - டில்லியின் அடையாளங்களில் ஒன்று. இந்திய பாராளுமன்றத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ளது இந்தியா கேட்.
முதல் உலக போரில் உயிரிழந்த வீரர்கள் நினைவாக 1931-ல் கட்டப்பட்ட தூண் தான் இந்தியா கேட்.
42 மீட்டர் உயரம் உள்ளது இந்த நினைவு தூண்.
இரவு நேரம் விளக்குகள் போடப்பட்டு இந்த இடம் மிக அழகாக இருக்கும் என்று சொல்கிறார்கள்
1930-களில் இந்தியா கேட்- வாகனங்களை பாருங்கள் ! |
***************
மேலே உள்ள படத்தில் இந்த நினைவு சின்னம் உயிரிழந்த வீர்கள் நினைவாக அமைக்கப்பட்டது என எழுதி உள்ளனர்.
இந்தியா கேட் சுவற்றில் போரில் உயிர் இழந்தோர் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை உடையில் காவலாளிகள் இந்த நினைவு சின்னம் அருகில் இருந்தனர். இந்த படத்தில் அத்தகைய காவலாளி ஒருவர் போனில் பேசுவதை பாருங்கள்.
உள்ளே அணையா ஜோதி எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது. இது அமர் ஜவான் ஜோதி ("the flame of the immortal soldier") எனப்படுகிறது.
அணையா ஜோதி |
இந்தியா கேட் சுவரில் தேனடை ஒன்று பெரிய அளவில் இருந்தது. அதை தொந்தரவு செய்யாமல் அப்படியே வைத்துள்ளனர்.
தேன்.... அடை ! |
அய்யாசாமி போஸ் |
படம் பிடிப்போரை படம் பிடிப்போம் கார்னர்:
இந்தியா கேட்டுக்கு முன்புறம் பின்புறம் இரண்டு உள்ளது. இரண்டு பக்கமும் சென்று பார்க்கலாம். அருகில் சென்று பார்க்க நமக்கு அனுமதி இல்லை. சுற்றிலும் பெரிய இரும்பு கம்பி கட்டி விட்டுள்ளனர். நமக்கு அனுமதி இல்லா விடினும், இந்த கம்பி உள்ளே போய் சில நாய்கள் மிக ஹாயாக தூங்குகின்றன.
இந்தியா கேட் அருகில் குளம் போல தண்ணீர் தேங்கி நிற்க, அது அழுக்காகவும், அசுத்தமாகவும் உள்ளது.
இந்தியா கேட்டிலிருந்து பாராளுமன்ற கட்டிடத்தை பார்க்க முடிகிறது. நாடாளு மன்றம் உள்ளே சென்று பார்க்க பாஸ் வாங்க முடியுமாம். அரை மணி நேரம் போல் அமர்ந்து பார்க்க முடியுமாம். நாங்கள் முயற்சித்தோம். அந்த நேரம் பாஸ் கிடைக்கலை.
இந்தியா கேட்டிலிருந்து தெரியும் பாராளுமன்ற கட்டிடம் |
இந்தியா கேட்: வீடுதிரும்பல் பரிந்துரை: இங்கு பார்க்க சிறப்பாக ஏதுமில்லை. பகலில் செல்வதை தவிர்க்கவும். (வெய்யில் மிக அதிகம்) இரவில் வண்ண விளக்குகளுடன் பார்க்குமாறு செல்லவும்.
***********
தில்லியின் சிறப்பு மிக்க இடங்களில் அடுத்து நாம் பார்க்க போவது மெட்ரோ ரயில் ! பெரும்பாலும் காரில் தான் சுற்றினோம் எனினும் மெட்ரோ ரயில் அனுபவத்துக்காக ஒரு முறை பயணித்தோம் ! அதிலிருந்து சில துளிகள்:
நாங்கள் சென்ற அக்ஷதாம் மெட்ரோ ரயில் ஸ்டேஷன் |
சிகப்பு சட்டையணிந்து Escalator-ல் செல்கிறார் நண்பர் தேவா |
ரயில் நிற்கும் இடத்துக்கு படியேற, லிப்ட், Escalator என மூன்று வித வழியும் உண்டு. விரும்பிய விதத்தில் நீங்கள் செல்லலாம்.
டிக்கெட் விலை அதிகமில்லை. சென்னை மின்சார ரயிலில் எட்டு ரூபாய் இருக்கும் டிக்கெட் அங்கு பதினாலு ரூபாய் ( ஏ. சி ஆச்சே?) டிக்கெட் வாங்கும் போது ஒரு டோக்கன் தருகிறார்கள்.
ஆங்காங்கு தடுப்பு உள்ளது. டோக்கன் வைத்தால் தான் தடுப்பு நகர்கிறது. நீங்கள் செல்ல வேண்டிய கடைசி இடத்தில் இந்த டோக்கனை உள்ளே போட்டு விட வேண்டும். அப்புறம் தான் வழி விடும் !
ரிட்டன் டிக்கெட் தருவதில்லை. அதற்கு மீண்டும் நீங்கள் கியூவில் நின்று தான் டிக்கெட் எடுக்கணும்.
டிக்கெட் வாங்கிவிட்டு ரயில் ஏற செல்லும் முன் உங்களையும் உங்கள் உடைமைகளையும் முழுவதும் போலிஸ் பரிசோதிக்கிறார்கள். இவ்வளவு கூட்டத்தையும் சோதித்து ரயிலில் ஏற்றுவது ஆச்சரியம் !
டில்லி மெட்ரோ ரயிலின் தலைமை அதிகாரியாக இருந்த ஸ்ரீதரன் மீது டில்லி மக்களுக்கு அளவு கடந்த அன்பும் மரியாதையும் உண்டு. ஆசியன் கேம்ஸ் கட்டிடம் இடிந்ததற்கு கல்மாடி மீது பாய்ந்த மக்கள், மெட்ரோ ரயில் கட்டுமான பணியில் பெரும் விபத்து நடந்து பலர் இறந்தபோது கோபம் காட்ட வில்லை. " விபத்துகள் எங்கும் நடப்பது தான் " என கூறி விட்டனர். அப்போது ஸ்ரீதரன் தன் பதவியை ராஜினாமா செய்ததை பிரதமரும், டில்லி மக்களும் ஒப்பு கொள்ளவில்லை. பின் அவரே அப்பணியில் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 2011-ல் ஓய்வு பெற்றார்.
ரயிலில் மொத்தம் ஐந்து ஆறு கோச் தான் உள்ளது. கூட்டம் அதிகம் என்றால் ரயிலை தள்ளி போய் நிறுத்துகிறார்கள். நீங்கள் ஓடி போய் ஏற முடியாதே !
மக்கள் ரயிலில் பொறுமையாய் கியூவில் நின்று ஏறுகிறார்கள் !
நான்கு வெவ்வேறு ரூட்களில் ரயில்கள் உள்ளன. ஒரே ஸ்டேஷனில் இப்படி நான்கு ரூட் ரயிலும் செல்கிறது. எந்த ரயில் நீங்கள் ஏற வேண்டியது என கண்டுபிடித்து ஏறுவது சவால் தான் ..குறிப்பாக ஹிந்தி தெரியாத போது !
ஒவ்வொரு நான்கு நிமிஷத்துக்கும் ஒரு ரயில் உண்டு. இதனால் கூட்டம் அதிகம் என ஒரு ரயிலில் ஏறாவிட்டால் கூட, அடுத்தடுத்து ரயில் வந்து விடுகிறது.
பிக்பாக்கெட் நிறைய அடிக்க கூடிய இடம் மெட்ரோ ரயில் என்பதால் நிரம்ப ஜாக்கிரதை ஆக இருக்க வேண்டுமாம்.
வண்டி நின்று கொஞ்ச நேரத்தில் கதவு தானாக மூடி கொள்கிறது. எனவே கடைசி நிமிடத்தில் ஏறுவோர் கவனமாக ஏற வேண்டியது முக்கியம் !
வீடுதிரும்பல் பரிந்துரை: டில்லி செல்வோர் அவசியம் ஒரு முறை மெட்ரோவில் பயணிக்கவும். வித்யாசமான அனுபவமாய் அது இருக்கும் ! உடன் டில்லி நண்பர் இருந்தால், எந்த ரயிலில் ஏற வேண்டும் என புரிய சற்று வசதியாய் இருக்கும் !
விரிவான தகவல்களுடன் நல்ல பகிர்வு. இரவில் இன்டியா கேட் பட்ம் மிக அழகு.
ReplyDelete/கடைசி நிமிடத்தில் ஏறுவோர் /
கவனமாக இருந்தல் மிக அவசியமே. கதவில் சென்சர் இருக்குமென்றும் நம்புகிறேன்.
சென்னை மெட்ரோ ரயில் மூன்று நிமிடத்திற்கு ஒரு முறை வருமாம். விரைவில் ரியல் மெட்ரோ நகராக மாற உள்ளது நம்மூரு. பிறகென்ன..அடிக்கடி மெட்ரோ ட்ராவல்தான்.
ReplyDeleteசென்னை மெட்ரோ ரயிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் .
ReplyDeleteஇணையத் தமிழன்
http://www.inaya-tamilan.blogspot.com/
எந்த ஸ்டேஷனிலும் உட்கார ஒரு இடம் கூட இல்லாதது வயசானவர்களுக்கு கஷ்டமாக உள்ளது.
ReplyDeleteநல்ல பகிர்வு ..!
ReplyDeleteஓ சமீபத்தில் தில்லி வந்திருந்தீர்களா?
ReplyDelete//இந்தியா கேட்டிலிருந்து தெரியும் பாராளுமன்ற கட்டிடம்//
இந்த படத்தில் இருப்பது குடியரசுத் தலைவர் மாளிகை; இதன் இடப்புறம் South Block, வலப்புறம் North Block. நார்த் ப்ளாக்கிற்கு சற்று வலப்புறத்தில் நாடாளுமன்றக் கட்டிடம் உள்ளது.
மெட்ரோ ரயிலில் 4 அல்லது 6 பெட்டிகள் உள்ளன.
ஆங்கிலத்திலும் பலகைகள் உள்ளன.
ஆஹா சீனு நீ முந்தியே சொல்லிட்டியே....
ReplyDelete”மெட்ரோ ரயில் ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கு ஒன்று” - இது மாறுபடும்.. Peak Hours-ல் இரண்டு நிமிடத்திற்கு ஒன்று கூட இருக்கிறது. கூட்டம் அதிகம் இருந்தாலும், சுகமான பயணம் தான் மெட்ரோ பயணம்.....
இந்தியா கேட் அதற்கு நேர் எதிரே இருப்பது குடியரசுத்தலைவர் மாளிகை - இணைக்கும் சாலை தான் ராஜ்பத். இங்கே தான் ஜனவரி 26 நிகழ்ச்சிகள் நடைபெறும்.....
மலரும் நினைவுகளை கிளப்பி விடுறீங்க மோகன்.....
ReplyDeleteஇந்தியா கேட்ல வாங்கின ஹெலிகாப்டர்...ரூம் போறதுக்கு முன்னே காணாம போயிட்டு...ஒரு வேளை தோணி அதை சுட்டுட்டாரோ என்னவோ...-:)
ரூம்ல போய் பார்த்தா சொந்தக்காரங்க பொண்ணை ஆசீர்வதிச்சு கொடுத்த காசை யாரோ ஆட்டைய போட்டு போய்ட்டாங்க...ம்ம்ம்ம்ம்..
ஆசை படத்துல (தமிழனுக்கு அவ்வளவு தான் தெரியுங்க...) வந்த இடத்துலலாம் நின்னு போட்டோ எடுத்ததோட சரி...
தமிழ்நாடு பவன்ல சாப்பிட்டீங்களா? அசத்தல் சாப்பாடு அங்கே...
நாங்க கடைசியா போனப்ப மெட்ரோ ரயிலுக்காக எல்லா இடத்தையும் உடைத்துப்போட்டிருந்தாங்க...
நீங்க அதிலே பயணித்ததில் மகிழ்ச்சி...
முதல் படத்தைப் பார்த்ததும் 'ரங் தே பசந்தி' பாடல் நினைவுக்கு வந்தது.
ReplyDeleteநாய்க்கு உள்ள சுதந்திரம் கூட மனிதருக்கிலையா....!
மெட்ரோ ரயில் விவரங்கள் சுவாரஸ்யம். சென்னையில் அது ஓடத் துவங்கி அதில் பயணிக்கும் நாளை எதிர்பார்த்து...!
//அய்யாசாமி போஸ்//
ReplyDeleteபோட்டோ பார்த்ததுமே 'சாமி' விக்ரம் சொல்ற மாதிரி நினைச்சு பார்த்தேன்.
அய்யாசாமி.....டெல்லி போலிஸ் :))
வ்வால் வந்தார்ன்னா கட்டாயம் மெட்ரோ ரயில் பற்றி ஒரு பதிவு போடச் சொன்னேன்னு சொல்லுங்க.
ReplyDeleteபயனுள்ள தகவல்கள்.
ReplyDeleteஇன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றி குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் இருப்பின் வருகை தந்து கருத்துக்களை அளிக்கவும்.
http://blogintamil.blogspot.in/2012/06/6.html
நன்றி ராமலட்சுமி மேடம்
ReplyDeleteசிவகுமார்: ஆம் நம்ம ஊருக்கும் மெட்ரோ சீக்கிரம் வரட்டும்
ReplyDeleteவிஜய்: ஆம் நன்றி
ReplyDeleteஅமுதா மேடம்: நீங்க சொன்னதும் தான் யோசிக்கிறேன்: உண்மை தான். இந்த தவறை அவசியம் அவங்க சரி செய்யணும்
ReplyDeleteநன்றி வரலாற்று சுவடுகள்
ReplyDeleteசீனிவாசன்: தவறை சுட்டியதற்கு மிக்க நன்றி
ReplyDeleteவெங்கட்: நாங்க வந்தப்போ ஊரில் இருந்து இடத்தை சுத்தி காட்டாம, என்னா இது .. இப்போ வந்து சொல்றீங்கோ? :))
ReplyDeleteOn a serious note, தகவல்களுக்கு நன்றி !!
ரெவரி சார் : உங்க மலரும் நினைவுகள் சுவாரஸ்யம். பகிர்ந்தமைக்கு நன்றி
ReplyDeleteஸ்ரீராம்: அட ஆமால்ல ரங் தே பசந்தியில் இந்த இடம் வருமே? நன்றி
ReplyDeleteரகு: யூ ஆர் மை பெஸ்ட் பிரன்ட். நோ அசிங்கம் மீ இன் பப்ளிக் பிளேஸ் :)
ReplyDeleteராஜ நடராசன்: என்னாது வவ்வாலா? அந்த வவ்வாலே நீங்க தானே சார்? :)) அந்நியன் மாதிரி ரெண்டு வேஷம் உங்களுக்குன்னு டவுட்டா இருக்கு
ReplyDeleteமுரளி: மிக மகிழ்ச்சி நன்றி !
ReplyDeleteமோகன்,
ReplyDeleteஇப்போ என்னை கலாய்க்கிறிங்களா இல்லை ராச நடராசரையா ?
ஆனால் ஒரெ கல்லுல ரெண்டு மாங்கானு நினைச்சா கல்லு தான் விழும் :-))