Monday, October 1, 2012

தொல்லை காட்சி பெட்டி -3

நல்ல நிகழ்ச்சி அறிமுகம் : களம் இறங்கியவர்கள்

புதிய தலைமுறை டிவியில் ஞாயிறு காலை 10.30 முதல் 11 வரை "களம் இறங்கியவர்கள்" என்ற நல்ல நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. கபிலன் வைரமுத்து தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி வெவ்வேறு தொழில்களை செய்யும் வித்யாசமான மனிதர்களை அறிமுகம் செய்கிறது. பஸ் ஓட்டும் பெண்மணி, கல்விக்கு உதவும் குழு என வித்யாசமாய் இருக்கும். இயலும்போது பாருங்கள் இந்த நல்ல நிகழ்ச்சியை !

லக்கா கிக்கா


திங்கள் முதல் புதன் வரை ஜி தமிழ் டிவி யில் இரவு 9.30 முதல் 10.30 வரை "லக்கா கிக்கா" என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. "செம்பருத்தி" புகழ் நடிகை ரோஜா இதனை தொகுத்து வழங்குகிறார். நான்கு ரவுண்டுகள் உள்ள நிகழ்ச்சியில் சின்னத்திரை நட்சத்திரங்கள் நால்வர் கலந்து கொள்கிறார்கள். கையில் ரூபாய் வைத்து கொண்டு இந்தாங்க ஐநூறு ரூபாய் ஜெயிச்சிருக்கீங்க , ஆயிரம் ரூபாய் ஜெயிச்சிருக்கீங்க என ரூபாய் நோட்டுகளை கலந்து கொள்பவர்களுக்கு ரோஜா தருகிறார். ரொம்ப சுமார் நிகழ்ச்சி இது ! ரோஜா முகமும் சிரிப்பும் அப்படியே இருப்பது மட்டுமே ஆறுதல் !

கிரிக்கெட்

சில வாரங்களுக்கு கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். ஐ. சி. சி T -20 ல் சூப்பர் 8 ஆரம்பமாகி விட்டது. தினம் இரு அட்டகாசமான மேட்சுகள்.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து மேட்சில் கெயில் வழக்கம் போல் விளாசினார். கூடவே சார்லஸ் என்கிற இன்னொரு இளைஞரும் வெளுத்து வாங்கினார். இங்கிலாந்து நிச்சயம் மோசமாய் தோற்கும் என நினைத்தால் கடைசி வரை போராடி இறுதி பந்துகளில் தோற்றனர். மார்கன் ஆட்டம் அட்டகாசம் !

இந்தியா ஆஸியுடன் தோற்றாலும் பாக்குடன்  வென்று செமி பைனல் வாய்ப்பை இன்னும் தக்க வைத்துள்ளது. ஆஸி மற்றும் இலங்கை செமி பைனல் செல்வது உறுதி. மற்ற இரு அணிகளில் மேற்கு இந்திய தீவும் இந்தியாவும் இருக்க வேண்டுமென்பது நம் எதிர்பார்ப்பு !

நீயா நானாவில் மனுஷ்ய புத்திரன்

"எது எல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது" என்ற தலைப்பில் நடந்த நீயா நானாவில் மனுஷ்ய புத்திரன் நன்கு பேசினார். " ஒரு லட்சியத்தை அடைந்தால் தான் மகிழ்ச்சி என பலர் நினைக்கிறார்கள். அந்த லட்சியத்தை அடைய 25 வருடம் ஆகுமென்றால் அதுவரை மகிழ்ச்சியை ஒத்தி போட முடியுமா? இதில் மட்டும் தான் மகிழ்ச்சி கிட்டும் என்ற மனநிலையை தவிர்த்து ஓபன் மைண்டாக அணுகினால் பல இடங்களில் மகிழ்ச்சியை காணலாம் " என்றார் மனுஷ் !

சீரியல் பக்கம்: சிந்து பைரவி

வடக்கில் வரும் சில சீரியல்கள் தமிழில் டப் ஆகி ஒளிபரப்பாகிறது. அந்த வரிசையில் ராஜ் டிவியில் வரும் சீரியல் தான் சிந்து பைரவி. சிறு வயது முதல் தோழிகளாக இருக்கும் இருவர் வளர்ந்த பின் ஒரே கணவனை மணக்கிறார்கள். இருவரில் சிந்து நல்லவள். பைரவி வில்லி. பைரவி மட்டும் கர்ப்பமாகிறாள். இருவரும் மணந்த கணவர் குழந்தை பாக்கியம் தர முடியாது என்று தெரிய வருகிறது. இப்படி போகிறது கதை.

நான் என்னவோ இந்த சீரியல் பார்ப்பதாக நினைத்து விடாதீர்கள். வீட்டில் எப்பவும் நடக்கும் டிஸ்கஷன் வைத்து தெரிஞ்சு கிட்ட கதை தான் இது. பெரும்பாலும் இந்த சீரியல் முடிந்த பின் தான் வீட்டுக்கே வருவேன். பைரவி ஓரளவு அழகு. எப்பவாவது பார்த்தால் ரசிப்பதோடு சரி :)

பலரும் இந்த சீரியல் பார்ப்பதாகவும், பெண்கள் இதன் ஹீரோவை சைட் அடிப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் :)

ஜெயா டிவியில் கே. பாலசந்தர்

திரும்பி பார்க்கிறேன் நிகழ்ச்சியில் கே.பாலசந்தர் சில வாரங்களாக தினம் இரவு பத்து மணிக்கு பேசி வருகிறார். இந்த வாரம் சில அற்புதமான படங்கள் பற்றி பேசினார். சிந்து பைரவி - முதல் முறையாக இளையராஜாவுடன் கே. பி இணைந்த படம். அதுவரை இசை அமைத்த எம். எஸ். வி யிடம் சொல்லி விட்டு அவர் மனம் நோகாமல் ராஜா பக்கம் வந்ததை சொன்னார். அப்படத்துக்கு ராஜா மற்றும் சுகாசினிக்கு கிடைத்த விருது, ஒவ்வொரு பாடலும் எப்படி வித்யாசமாய் அமைந்தது என சுவாரஸ்யமாய் இருந்தது

இன்னொரு நாள் கே. பி யின் படத்தில் என்றும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் மன்மத லீலை பற்றி பேசினார். ரஜினிக்கு எப்படி தில்லு முல்லுவோ அதே போல் கமலுக்கு இந்த படம் ! நான் ஸ்டாப் காமெடி ! இது வரை பார்க்கா விடில் டீ. வி. டி யாவது வாங்கி ஒரு முறை பாருங்கள் ( அடல்ட்ஸ் ஒன்லி படம் - ஞாபகம் இருக்கட்டும்)

சூப்பர் சிங்கர் அப்டேட்

செமி பைனல் இந்த வாரம் நடந்தது. கிளிப்பிங்கில் பிரகதி அழுகிற மாதிரி காண்பித்து அவர் தான் அவுட் ஆக போகிறார் என்கிற மாதிரி பில்ட் அப் தந்தனர். ஆனால் அவுட் ஆனது யாழினி. சுகன்யா, பிரகதி மற்றும் கெளதம் பைனல் சென்று விட்டனர்.

இது முடிந்த மறு நாளே பத்து குழந்தைகளை வைத்து கொண்டு ஒய்ல்ட் கார்ட் நடத்துகிறார்கள். இனி மக்களை ஓட்டு போட சொல்லி ஏர்டெல் நல்லா காசு பார்க்கும்.

" என் பெயர் ஜெயந்த். எனது ஐ. டி SSJ 01 . எனக்கு தயவு செய்து ஓட்டு போடுங்கள்" என SMS வந்துள்ளது; உங்களுக்கு ஏதும் வந்ததா? 
*****
வல்லமை அக்டோபர் 1 , 2012 தேதியிட்ட இதழில் வெளியான விமர்சனம்.

23 comments:

  1. இப்போ வரும் எத்தனையோ யு சர்டிபிகேட் படங்களை விட மன்மத லீலை மோசமாக இருக்காது!
    கிரிக்கெட்டில் கப் வாங்குகிறோமோ இல்லையோ, பாகிஸ்தானை ஜெயித்ததே போதும்!

    ReplyDelete
  2. இது முடிந்த மறு நாளே பத்து குழந்தைகளை வைத்து கொண்டு ஒய்ல்ட் கார்ட் நடத்துகிறார்கள். இனி மக்களை ஓட்டு போட சொல்லி ஏர்டெல் நல்லா காசு பார்க்கும்.
    உண்மைதாங்க இதுவரை எனக்கு ஏதும் வரவில்லை.

    ReplyDelete
  3. களம் இறங்கியவர்கள் மட்டுமே நான் பார்க்கும் நிகழ்ச்சி. மத்தஹெல்லாம் பார்த்ததில்லை. அதனால் எனக்கு அது பற்றி தெரியாது சகோ. பாட்டு போட்டின்னு சொல்லி குழந்தைகளை அழ வைக்குறதால அதை நான் பார்ப்பதில்லை.

    ReplyDelete
  4. //
    " என் பெயர் ஜெயந்த். எனது ஐ. டி SSJ 01 . எனக்கு தயவு செய்து ஓட்டு போடுங்கள்" என SMS வந்துள்ளது; உங்களுக்கு ஏதும் வந்ததா? //

    இந்த டப்பா ப்ரோக்ராமை பார்த்து பல மாதங்கள் ஆகிவிட்டது. அந்த சுற்று, இந்த சுற்று என்று ஜவ்வாய் இழுப்பது கொடுமை. ஏமாந்த ரசிகர்கள் தலையில் மிளகாய் அரைத்து நன்றாக பணம் பார்க்கிறது விசய் டி.வி.

    'உங்கள் பதிவை தொடர்ந்து வாசிக்கிறேன். எனது பதிவை வாசித்து விட்டு மறக்காமல் ஓட்டு போடவும்' என்று ஒரு மெயில் பதிவுலகமெங்கும் உலவுவதாக பார்க்கும் நண்பர்கள் எல்லாம் சொல்கின்றனர். எனக்கு இன்னும் வரவில்லை.

    ReplyDelete
  5. ஓட்டு போடச்சொல்லி மக்களிடம் பணத்தை வசூலிப்பது கொடுமை..

    ReplyDelete
  6. //ராஜ் டிவியில் வரும் சீரியல் தான் சிந்து பைரவி// - இந்த கொடுமையை கொஞ்ச காலம் பார்த்து பின் ச்சீஈ-னு தொக்கி போட்டுட்டேன்.. செம கேவலமான சீரியல்..
    //பெண்கள் இதன் ஹீரோவை சைட் அடிப்பதாகவும்// - ஹம்ம்ம்ம் பார்த்ததற்கு இது மட்டும் தான் ஆறுதல் அந்த சில காலம்..

    //ஜெயா டிவியில் கே. பாலசந்தர்// - நான் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி.. அனால் இந்த எபிசொட் மிஸ் பண்ணிவிட்டேன்.

    ReplyDelete
  7. கிரிக்கட் தான் அண்ணே எனக்கு முக்கியம் மற்றவை சும்மா டைம் பாஸ் ..
    பார்ப்போம் யார் செமிக்கு நுழையுறாங்க என்று

    ReplyDelete
  8. கிரிக்கெட் தவிர மற்ற நிகழ்ச்சிகள் உங்கள் பதிவின் மூலம் தான் தெரியும்...

    திரும்பி பார்க்கிறேன்-கே.பாலசந்தர் - பார்க்கிறேன்...

    நன்றி...

    ReplyDelete
  9. ஆஸ்திரேலியா இப்படி எழும் என்று எதிர்பாக்கவில்லை மோகன் சார்.இருந்தாலும் வாட்சன் ,வார்னர் சீக்கிரமே அவுட் ஆகிவிட்டால் கஷ்டம் தான்.இந்தியா வர வாய்ப்புள்ளது.கோப்பை வெல்லும் அணியாக நான் கணிப்பது இலங்கை,பாகிஸ்தான்.
    பாலச்சந்தர் நிகழ்ச்சி நான் முதல் நாள் முதலே பார்த்து வருகிறேன்.ரொம்ப தகவல்கள்.எனக்கு அவர் படங்கள் நிறைய பிடிக்கும்

    ReplyDelete
  10. மன்மத லீலை இதுவரை பார்த்ததில்லை.

    ReplyDelete
  11. நன்றி ஸ்ரீராம் இன்று தெரிந்து விடும் நாம் செமி பைனல் செல்கிறோமா என

    ReplyDelete

  12. நன்றிங்க சசி கலா

    ReplyDelete

  13. நன்றிங்க சசி கலா

    ReplyDelete
  14. துரை டேனியல் சார்: வாங்க நன்றி

    ReplyDelete

  15. நன்றி ராஜி

    ReplyDelete
  16. சிவா: அப்படியா? எனக்கு இதுவரை வரலை

    ReplyDelete

  17. ஆம் மதுமதி நன்றி

    ReplyDelete

  18. சமீரா: சிந்து பைரவி நீங்களும் பார்த்தீர்களா? ரைட்டு

    கே.பி நிகழ்ச்சி முடிந்தால் பாருங்கள்

    ReplyDelete

  19. வாங்க அரசன். கரக்ட் தான் நன்றி

    ReplyDelete
  20. சீன் கிரியேட்டர் :

    //ஆஸ்திரேலியா இப்படி எழும் என்று எதிர்பாக்கவில்லை மோகன் சார்.இருந்தாலும் வாட்சன் ,வார்னர் சீக்கிரமே அவுட் ஆகிவிட்டால் கஷ்டம் தான்.//

    ரொம்ப சரியா சொன்னீங்க. வாட்சன் தான் ஒன மேன் ஷோ வாக கலக்கி கொண்டிருக்கிறார்

    ReplyDelete

  21. நன்றி TN முரளி சார் . முடியும் போது பாருங்கள்

    ReplyDelete
  22. வாரம் ஒன்று என தொடர்கிறதா தொல்லைக்காட்சி! தொடரட்டும்... தொலைக்காட்சி தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு பயன்படும்....

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...