Saturday, June 9, 2012

சென்னை-டி ஷர்ட் பிரியர்களுக்கு செம வித்யாச கடை

வாலிப வயோதிக நண்பர்களே, கல்யாண வீடா இருந்தாலும் சரி துக்க வீடா இருந்தாலும் சரி, டி ஷர்ட் போட்டுக்கிட்டு தான் போகணும் என்று, என்னை மாதிரியே கொள்கை உள்ளவரா நீங்கள்? உள்ளே வாங்க..... இந்த பதிவு உங்களுக்கு தான் !
*************
மீபத்தில் குடும்பத்தோட சென்னை சிட்டி செண்டர் போயிருந்தேன். லைப் ஸ்டையிலுக்குள்ளே கெத்தா உள்ளே போயி, 30-ஆம் தேதி குடும்பஸ்தன் மாதிரி நொந்து நூடுல்ஸ் ஆகி வெளியே வரும் போது, அதன் வாசலிலேயே வேறு ஒரு கடையை பார்த்தேன்.

கடை முதலாளிகள் சரண்யா & செந்தில் நாதன் (இந்த படம் : நன்றி : Hindu Metroplus)
முதலில் அந்த கடையில் தெரிந்தது வாழை பழ தார். சற்று நெருங்கியதும் அது நிஜ வாழை பழம் இல்லை என தெரிந்தது. கடை வெளியே டீ கடை என போட்டிருந்தது. டீ கடையில் பெரிய பாட்டில் வைத்து அதனுள் பிஸ்கட், கடலை மிட்டாய் வைத்திருப்பார்கள் அல்லவா? அதை போல் பாட்டில்கள். ஆனால் உள்ளே இருந்தது துணி போல தெரிந்தது. கடைக்கு ஒரு பெயரும் வைத்திருந்தார்கள் Dude தமிழா !

மனைவி மற்றும் மகள் லைப் ஸ்டைலில் நம் பர்சை நாசம் செய்திருந்ததால், வேறு பர்ச்சேஸ் பற்றி யோசிக்கும் நிலையில் இல்லை. எனவே " எதுவா இருந்தா தான் என்ன?" என்று தான் கடந்து கொண்டிருந்தேன். அப்போது தான் அந்த வரி கண்ணில் பட்டது :

பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?


ஆம். இது ஒரு டி ஷர்ட்டில் எழுத பட்ட வாசகம். நின்று விட்டேன் ! கவனித்தேன். டீ கடை என போட்டு அங்கு இருப்பது மாதிரி சில விலை பட்டியல் இருந்தது. அந்த கடையின் மொத்த இடம் 10௦ X 10 அளவு கூட இல்லை ! அவரிடம் " சார் இது என்ன கடை?" என கேட்டேன். " டீ ஷர்ட் கடை சார்" என சொல்லி விட்டு ஒரு வாடிக்கையாளரை அட்டென்ட் செய்ய ஆரம்பித்தார். மெல்ல அங்கிருக்கும் டீ ஷர்ட்டுகளை ஆராய்ந்தேன்

டீ ஷர்ட்டுகளில் இருந்த tagline-களை பாருங்கள்

அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா ! (படத்தில் கவுண்ட மணி பேசும் அதே மாதிரி போன் பிரிண்ட் ஆகியிருந்தது. கவுண்டர் படம் இல்லை)


"எனது தெரு விளையாடல்களில் இதுவும் ஒன்று" (படத்தில் கோலி குண்டு , பம்பரம், கிட்டி புல்லு)

"பாடி கார்ட் முனீஸ்வரன் துணை"
***
ன்னும் சிலவற்றில் " லுங்கி கட்டுவது எப்படி" என நான்கு ஸ்டெப்களில் லுங்கி கட்டும் படம் போட்டிருந்தது. அந்த டீ ஷர்ட் பார்த்ததும் தான் இவங்க எந்த அளவு லொள்ளு பிடிச்சவங்க என தெரிந்தது. செமையாக சிரிக்க ஆரம்பித்தேன்.
லுங்கி கட்டுவது எப்படி?
இன்னொரு டீ ஷர்ட் பம்பரம் விட்டுfy எப்படி ? என பம்பரம் விட கயிறு கட்டி தரையில் விடுவதை படங்களில் விளக்கி இருந்தது
***

நமக்குள் இருக்கும் ப்ளாகர் விழித்து கொள்ள மொபைலில்  போட்டோ எடுத்தேன். அவர் ஏன் என்று கேட்க, இன்டர் நெட்டில் எழுத போறேன் என்றேன். அதற்கு அவர் "ஏற்கனவே ஹிந்துவில் எழுதிட்டாங்க சார்; சண் டிவியில் ரெண்டு நாள் முன்னாடி வந்து எடுத்துட்டு போயிருக்காங்க" என்றார் !



" கல்லூரி போகும் இளம் வயதினர் தான் இந்த டி ஷர்ட் வாங்குறாங்க இல்லையா?" என்றேன் " நீங்க வேற சார்; இதோ பாருங்க இந்த ஷர்ட் XXL சைஸ் ! ஒரு வயசானவர் புல் பணம் குடுத்துட்டு போயிருக்கார். அவர் சைஸ் வாங்கிட்டு வர சொல்லி" என்றார்

இப்படி ஒரு கடை போட எப்படி யோசனை வந்தது என்று பேட்டியை தொடர்ந்தால் மனுஷன் " சார் அது எங்க முதலாளிக்கு தான் தெரியும்; எனக்கு தெரியாது " என்று பம்மி விட்டார்


400 மற்றும் 500 என இரண்டு விலைகளில் டி ஷர்ட் உள்ளது. அனைத்தும் ரவுண்ட் நெக் தான். இது ஒரு மைனஸ். அடுத்து இந்த சட்டையை ஆசையாய் வாங்கினாலும், பின் தொடர்ந்து போடுவோமா என்பதையும் யோசித்து அப்புறம் வாங்குங்கள் !

உங்களுக்கு ஒரு டி ஷர்ட் வாசகம் பிடிக்கும். ஆனால் உங்கள் சைஸ் இல்லாமலும் போகலாம்.

இங்கு நான் சொல்லியுள்ளது நான் சென்ற போது இருந்த டி ஷர்ட் வாசகங்கள். நீங்கள் செல்லும் போது அவை இல்லாமல் வேறு இருக்கலாம். பெட்ரோ மாக்ஸ் லைட் மற்றும் அரசியல்லே இதெல்லாம் சாதரணமப்பா இரண்டும் தான் செம பாஸ்ட் மூவிங் என்றார் ! "கவுண்டரு"க்கு இருக்கும் மவுசை பாருங்க !

நான் ஒரே ஒரு ஷர்ட் வாங்கினேன். அதை ஒழுங்கா போட்டா அடுத்தடுத்து பிறகு வரும் போது வாங்கலாம் என எண்ணம். அதில் என்ன வாசகம் எழுதியிருந்தது என கேட்கிறீர்களா? சென்னையில் அடுத்து நடக்கும் பதிவர் சந்திப்புக்கு போட்டு வருகிறேன். அது வரை சஸ்பென்ஸ் !

நீங்க சிட்டி சென்டர் பக்கம் போனால் அவசியம் முதல் மாடியிலிருக்கும் இந்த கடையை எட்டி பாருங்க.. டி ஷர்ட் வாங்குரீங்களோ இல்லையோ மனம் விட்டு சிரிப்பது நிச்சயம் !

33 comments:

  1. Have read about in times of india i think

    ReplyDelete
  2. ////வாலிப வயோதிக நண்பர்களே,///////

    சார் அந்த லேகியம் கிடைக்குமா?

    ReplyDelete
  3. எல். கே தினம் விடாம டைம்ஸ் படிக்கிறேனே? அதில் படிச்ச நினைவில்லை. ஹிந்து வில் வந்த லிங்க் பதிவிலேயே தந்துருக்கேன் பாருங்க. இது அப்புறம் தேடி பார்த்த போது தெரிந்தது

    ReplyDelete
  4. ராம்சாமி அண்ணே : உங்களுக்கு இல்லாத லேகியமா? சென்னை வரும்போது சொல்லுங்க. வாங்கிடலாம் :))

    ReplyDelete
  5. சுவாரஸ்யம். குறிப்பாக /அரசியல்லே இதெல்லாம் சாதரணமப்பா / :)!!

    ReplyDelete
  6. சுவாரசியமான தகவல்....

    அடுத்த சென்னைப் பயணத்தின் போது அங்கே டீ வாங்கிடலாம் மோகன்.... :))

    ReplyDelete
  7. பெண்கள் சேலைக்கடையில் மொய்பதுபோல் இங்கு ஆண்கள் மொய்க்கப் போகின்றார்களே:)))

    ReplyDelete
  8. இடம் தெரியாமல் தேடிக் கொண்டு இருந்தேன். தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  9. கலக்கல் கடையா இருக்கே? பாராட்டுக்கள்!

    ReplyDelete
  10. சூப்பர்... இன்னைக்கே போகணும்ன்னு நினைச்சேன்... ஆனா நண்பர்கள் யாரும் வராததால் திட்டம் அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது... S size T-Shirt கிடைக்குமா...?

    ReplyDelete
  11. சென்னை வரும்போது கவனிக்கிறேன்..ஆனாலும் நமக்கு இப்படி பட்ட வாசகங்கள் தான்.(அதே பெண்களுக்கு மட்டும் கொஞ்சம் விவகாரமா இருக்கே ஏன்..?)

    ReplyDelete
  12. தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  13. விலைகளைப் பற்றி எழுதியிருந்தால் என்னைப் போன்றவர்களுக்கு வசதியாக இருக்கும்.

    ReplyDelete
  14. நன்றி ராமலட்சுமி

    ReplyDelete
  15. நிச்சயம் வெங்கட். நான் வாங்கிய டி ஷர்ட்டை ஒரு மாசமாகியும் போடாமல் வச்சிருக்கேன் அதான் பிரச்சனை

    ReplyDelete
  16. மாதேவி மேடம் நன்றி

    ReplyDelete
  17. நன்றி திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  18. தோழன் மபா, தமிழன் வீதி: நன்றி

    ReplyDelete
  19. ஜனா சார்: நன்றி

    ReplyDelete
  20. தனுஷ் குமார்: ஆம் நன்றி

    ReplyDelete
  21. பிரபாகர்: கிடைக்கும். ஆனால் நாம் குறிப்பிட்ட வாசகம் உள்ள சட்டை விரும்பினால் அது அதே சைசில் கிடைக்குமா என்பது தான் பிரச்சனை. வாங்கி வைத்து கூட தருகிறார்கள். அப்படி எனில் மறுபடி போய் வாங்கணும் !!

    ReplyDelete
  22. கோவை நேரம்: அதானே? நன்றி

    ReplyDelete
  23. ஜோதிஜி: 400 மற்றும் 500 இரண்டு விலையில் மட்டுமே கிடைக்கிறது என எழுதி உள்ளேனே?

    ReplyDelete
  24. \\நான் வாங்கிய டி ஷர்ட்டை ஒரு மாசமாகியும் போடாமல் வச்சிருக்கேன் அதான் பிரச்சனை \\ அப்போ நான் இப்பாவே அப்பீட் ஆகிடறேன்!!

    ReplyDelete
  25. இந்தக் கடையைப் பற்றி முன்பு விகடனில் படித்த ஞாபகம்.

    ReplyDelete
  26. Arumaiya... Solomon paapaiya stylil padikavum :-)

    ReplyDelete
  27. thanks for this post

    ReplyDelete
  28. வாழ்த்துகள் திரு மோகன் குமார்.
    வித்தியாசமான பதிவு.
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

    ReplyDelete
  29. வாழ்த்துகள் திரு மோகன் குமார்.
    வித்தியாசமான பதிவு.
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...