Sunday, June 17, 2012

வித்யாபாலன் அசத்திய கஹானி

கஹானி - ஹிந்தியில் சமீபத்தில் வெளியான மிக வித்யாசமான கதையம்சம் உள்ள படம். கஹானி என்றாலே கதை என்று தான் அர்த்தம் ! மிக பொருத்தமான தலைப்பு !

கதை

துவக்கத்தில் கொல்கத்தா மெட்ரோ ரயிலில் தீவிரவாத கும்பலால் நூற்று கணக்கானோர் இறப்பதை காட்டுகிறார்கள். இரண்டு வருடத்துக்கு பின் கர்ப்பிணியான வித்யா அதே கொல்கத்தாவிற்கு தன் கணவனை தேடியபடி வருகிறார். லண்டனில் இருந்து விமானத்தில் வந்து இறங்குபவர், நேரே போலிஸ் ஸ்டேஷன் சென்று கணவனை காண வில்லை என கம்பிலேயின்ட் தருகிறார்.

கணவர் தங்கிய லாட்ஜ் சென்று அவரை குறித்த விபரம் கேட்க, அவர்கள் அப்படி ஒருவர் தங்க வில்லை என்கின்றனர். இதனை நம்பாமல் அதே லாட்ஜில் தங்குகிறார் வித்யா. ரானா என்கிற போலிஸ் அவ்வப்போது வந்து சந்தித்து வித்யாவுக்கு உதவுகிறார்.
கணவரை தேடும் முயற்சியில் சிறு தகவல் கிடைத்தால் அந்த தகவல் தந்தவர் உடனே கொல்லபடுவதில் அரள்கிறார் வித்யா ! இதற்கிடையே வித்யாவை கொல்ல அலைகிறார் ஒரு கூலி படை ஆள் ! போலிஸ் இடம் சிக்கும் நேரத்தில் அவரும் விபத்தில் சிக்கி இறக்கிறார்.

கடைசி பத்து நிமிடத்தில் படத்தின் அனைத்து முடிச்சுகளும் அவிழ்கின்றன. கதை தெரியாதோர் ஊகிக்க முடியாத படி இருக்கிறது அந்த பத்து நிமிடம்

மேலே சொன்ன கதையில் பல விஷயம் பொய் என்று இறுதியில் தெரிகிறது. அவர் பெயர், கணவர் பெயர் எல்லாமே பொய். கணவரை தேடி வந்ததாக சொன்னதும் பொய்.

முதலில் காட்டும் விபத்தில் வித்யா கணவர் இறக்க, அவரை கொன்றவரை தேடியே வித்யா வருகிறார். இறுதியில் கொல்லவும் செய்கிறார். அவருக்கு ஒரு உயர் போலிஸ் அதிகாரி உதவ, வித்யா மூலம் போலிஸ் துறையில் உள்ள கருப்பு ஆடுகளும் சிக்குகிறார்கள்.

*********

படத்தில் ஹீரோ என்று யாரும் கிடையாது. கதை - திரைக்கதை தான் ஹீரோ. முழு படத்தையும் வித்யா பாலன் அசால்ட்டாக சுமக்கிறார். என்னா நடிப்பு ! வித்யா பாலனை எனக்கு முன்பிலிருந்தே பிடிக்கும். ஐஸ்வர்யா ராய்- கரீனா கபூர் போன்றோர் முன் அதிகம் பிரபலமாகாத வித்யாவிற்கு இப்போது தான் நல்ல ரோல்களும், அவர் திறமைகேற்ற புகழும் கிடைக்கிறது

படத்தில் வரும் ஆண் பாத்திரங்கள் பலரும் பெங்காலி நடிகர்களே. கொல்கத்தாவில் கதை நடப்பதால், படம் இயல்பாகவும் நம்பக தன்மையுடனும் இருக்க வேண்டும் என்பதால் இயக்குனர் இப்படி தேர்ந்தெடுத்துள்ளார். புதியவர்கள் என்றாலும், யாருமே நடிப்பில் குறை சொல்ல முடியாத படி அற்புதமாய் செய்துள்ளனர்.

வித்யா தாண்டி மனதில் பதியும் பல பாத்திரங்கள் உண்டு.

வித்யாவுக்கு உதவும் ரானா என்கிற போலிஸ் அதிகாரி - கர்ப்பிணி ஆனாலும் அவள் மேல் ஒரு தலையாய் காதல் கொள்கிறார். சற்றே பயந்த மாதரியான இவர் பாத்திரம் அருமை

கான் என்கிற போலிஸ் அதிகாரி கர்ப்பிணி முன்பே புகைக்கிறார்... வித்யா அதை object செய்கிற போதும் ! முதலில் கான் ஒரு கெட்டவர் என நினைத்தேன். ஆனால் அவர் பாத்திரம் பல வண்ணங்களில் பயணிக்கிறது. செம கேரக்டர் !

சீரியல் கில்லர் பாப் பாத்திரம் மக்களிடையே செம பாபுலர் ஆகி விட்டது. எல். ஐ சி ஏஜன்ட் போல வந்து "ஒரு நிமிடம் பேசலாமா" என்று கேட்டு, அரை நிமிடத்தில் கொல்லும் இவர் அதிர வைக்கிறார்

லாட்ஜில் இருக்கும் சிறுவன், innocent புன்னகையால் மனதை கவர்கிறான்

இப்பட இயக்குனர் சுஜாய் கோஷ் ஹிந்தி பீல்டுக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகிறது. இதற்கு முன் எடுத்த மூன்று படங்களும் செம டப்பா ஆகி விட்ட நிலையில் வாழ்வா சாவா என எடுத்த இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

எட்டு கோடியில் எடுத்து நூறு கோடிக்கும் மேல் இதுவரை வசூல் செய்துள்ளது. கமர்ஷியல் வெற்றி தாண்டி விமர்சகர்கள் ,சாதாரண மக்கள் என அனைவரையும் இந்த படம் திருப்தி படுத்தி உள்ளது

படம் தமிழிலும் வர போகிறதாம். வித்யா ரோலுக்கு அனுஷ்காவை பேசி வருகிறார்கள். அழகு + நடிப்பு இரண்டும் உள்ள அனுஷ்கா இதற்கு சரியான சாய்ஸ் தான் !

கஹானி - அவசியம் காண வேண்டிய படம் !


வல்லமை ஜூன் 15 இதழில் வெளியான விமர்சனம் 

17 comments:

  1. இன்னும் பார்க்கவில்லை
    தங்கள் விமர்சனம் படித்தவுடன்
    பார்க்கவேண்டும் எனத் தோன்றுகிறது
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. பார்க்கணும்ன்னு லிஸ்டில் வெச்சுருக்கும் படங்களில் இதுவும் ஒண்ணு.

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. பார்க்க நினைத்திருக்கும் படம்....

    ReplyDelete
  5. என்னோட அட்வைஸ் அந்த secret knot (ie) she is not pregnantnu சொல்லி இருக்க வேண்டாம் உங்க விமர்சனத்தில்...மற்றபடி ரொம்ப நல்ல படம்..

    ReplyDelete
  6. அருமையான விமர்சனம்.
    நன்றி.

    ReplyDelete
  7. முதல் காமன்டுக்கும் தமிழ் மண ஓட்டுக்கும் நன்றி ரமணி சார்

    ReplyDelete
  8. அமைதி சாரல்: அவசியம் பாருங்கள்

    ReplyDelete
  9. மாலதி: எப்போதோ ஒரு முறை எட்டி பார்ப்பவர் தாங்கள். வருகைக்கு நன்றி

    ReplyDelete
  10. வெங்கட்: படம் பாருங்கள் பிடிக்கும் என நினைக்கிறேன்

    ReplyDelete
  11. ஸ்ரீ அப்பா: நீங்கள் சொன்ன சீக்ரெட் மட்டும் இப்போது எடுத்து விட்டேன் நன்றி

    ReplyDelete
  12. திண்டுக்கல் தனபாலன்: நன்றி சார்

    ReplyDelete
  13. ரத்னவேல் ஐயா: நன்றி

    ReplyDelete
  14. மிக அருமையான படம். என் மகனுடன் பார்த்தேன். அவ்வப்போது ஹிந்தி புரியாமல் அவனிடம் கேட்டு கொண்டே பார்த்தேன். எப்பவும் என்னை மாதிரியே ஒரு துணியினை கையில் வைத்து கொண்டு வித்யா எல்லாவற்றையும் துடைத்து கொண்டெ இருப்பார். சரி இவருக்கும் இந்த் துடைக்கும் டிசீஸ் இருக்கு போலிருக்கு என்று நினைத்து கொண்டேன். கடைசியில் தான் எதற்கு இப்படி துடைக்கிறார் என்றே புரிந்தது. மிக அருமையான டைரக்‌ஷன்.

    ReplyDelete
  15. நன்றி.

    பார்க்கின்றேன்.ஹிந்தி புரியாது ஆங்கிலத்துடன்தான்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...