Friday, June 1, 2012

வாஷிங் மெஷின்- வாங்க உபயோகிக்க சில டிப்ஸ் - பை அய்யாசாமி

வ்வொருவரும் திருமணம் முடிந்ததும் முதலில் டிவி வாங்குவார்கள். சிலர் பிரிட்ஜ் வாங்குவார்கள். அய்யாசாமி திருமணத்துக்கு பின் முதலில் வாங்கியது என்ன தெரியுமா ? வாஷிங் மெஷின் தான் !

இது ஏன் என அவரிடம் கேட்டபோது " எல்லா வேலைகளை விட துணி துவைக்க ரொம்ப சிரமம் ஆயிருக்கு; அதிலும் இந்த புடவையை துவைக்குறது இருக்கு பாருங்க அது ரொம்ப கஷ்டம் " என்றார்.

நன்கு விசாரித்து ஐ.எப்.பி (IFB) வாஷிங் மெஷின் வாங்கினார் அய்யாசாமி. அதன் பின் பிரிட்ஜ், டிவி போன்றவை வாங்கினாலும் அவருக்கு மிக பிடித்தது ஐ.எப்.பி வாஷிங் மெஷின் தான் !


இது பற்றி பலரிடமும் இப்படி சொல்வார்:" 15 ,000 போட்டு ஐ.எப்.பி வாஷிங் மெஷின் வாங்கினோம். சும்மா சொல்ல கூடாது. என்னமா உழைக்குது தெரியுமா? பதிமூணு வருஷம் ஒரு சின்ன பால்ட் கூட வந்தது கிடையாதுங்க. ஒவ்வொரு தடவை வீடு மாறும்போதும் பிளம்பரை கூட்டி பைப் கனக்ஷன் குடுப்பதோட சரி. சில நேரம் வெளியில் உள்ள பைப் எலி கடிச்சோ ரொம்ப வருஷம் ஆனதாலோ லேசா உடையும். அப்ப மட்டும் பிளம்பரை வச்சு பைப் மாத்துவோம். அதுவும் வெளியில் தான். மெஷினில் கை வச்சதே இல்லை. நம்மோட கஷ்டம் புரிஞ்ச ஜீவன்னா அது வாஷிங் மெஷின் தான். என்னோட பெஸ்ட் Friend களில் முக்கியமான ஆள் இது !"
இப்படியெல்லாம் அய்யாசாமியால் கொண்டாடப்பட்ட அவரது IFB வாஷிங் மெஷின் சமீபத்தில் திடீர் மரணம் அடைந்தது !

ஒரு நாள் வாஷிங் மெஷின் திடீரென வேலை செய்யலை. அய்யாசாமிக்கு கையும் ஓடலை ; காலும் ஓடலை. ஒவ்வொரு மெக்கானிக்கா கூட்டி வந்து காண்பித்தார். " இப்ப தாங்க முதல் தடவை ரிப்பேர் ஆகுது. இது வரை ரிப்பேர் ஆனதே இல்லை"

அனைவரும் சொல்லி வைத்த மாதிரி " இதை ரிப்பேர் செய்வது வேஸ்ட். பேசாம புதுசு வாங்கிடுங்க" என்றனர்.

"இந்த மெஷினை பொறுத்தவரை நீங்க தான் டாக்டர். எப்படியாவது காப்பாத்துங்க" என கெஞ்சி பார்த்தார். யாரும் நம்பிக்கை தரலை.

கனத்த மனதுடன் அடுத்த இரு நாளில் புது வாஷிங் மெஷின் வாங்கிட்டார் அய்யாசாமி (இன்னும் நாலு நாள் ஆனா, யார் சாமி துணி துவைக்கிறது?).

இந்த முறை IFB வாங்கலை. அதன் விலை 25 ஆயிரத்தை தாண்டி விட்டதால், Whirlpool-ல் சிக்கனமாய் ஒரு வாஷிங் மெஷின் 10,000-க்கு வாங்கி விட்டார்.
***************
ய்யாசாமி தன் வீட்டில் முழுசாய் பொறுப்பு எடுத்து செய்கிற வேலை ஒன்று உண்டென்றால் "வாஷிங்" வேலை தான் ! அவர் தான் வாஷிங் செய்கிறார்னு புரளியை கிளப்பிடாதீங்க ! வாஷிங் மெஷினில் துணி போடுவது,  பின் காய வைப்பது, எடுப்பது, மடித்து அந்தந்த இடங்களில் வைப்பது, அயனுக்கு தருவது, அதனை வாங்குவது இத்தகைய வேலைகள் அவர் தான் செய்வார்.

மழை காலத்தில் துணிகளை மாடியில் போட்டு விட்டு ஆபிஸ் போன பின், மழை வந்தால் டென்ஷன் ஆகி மனைவிக்கு போன் செய்வார் " மழை பெய்யுது "

" பெய்யட்டும். நல்லது தானே?" என்பார் Mrs. அய்யாசாமி தன் அலுவலகத்தில் அமர்ந்தவாறு.

"இல்லை ........மொட்டை மாடியில் துணி காய போட்டேன்"

" அப்படியா? காய போட்டீங்களா ? " என சிரித்து விட்டு " எனக்கு அந்த கவலையே இல்லை. அது உங்க டிபார்ட்மென்ட் !"
************
நிற்க. புதிதாய் வாஷிங் மெஷின் வாங்குவோருக்கு அனுபவசாலி அய்யாசாமி தரும் டிப்ஸ் இதோ :

நிச்சயம் Fully ஆட்டோமேடிக் வாஷிங் மெஷின் வாங்குங்க. Partly ஆட்டோமேடிக் எனில் நிறைய வேலை வைக்கும். நாம் துவைக்கிற வேலையில் பாதி இதில் செய்ய வேண்டியிருக்கும்

இந்த பதிவில் சொன்னது போல் வாஷிங் மெஷின் பெரும்பாலும் அதிக வருஷம் உழைக்கும். மற்ற வீட்டு உபயோக பொருட்கள் போல் வாஷிங் மெஷின் அதிகம் ரிப்பேர் ஆகாது. நல்ல Life-ம் வரும். ஓரளவு நல்ல கம்பனி மெஷின் வாங்குங்க

அநேகமாக வாஷிங் மெஷின் ரிப்பேர் ஆகாது என்பதால், இதற்கு என எந்த AMC-ம் எடுக்க தேவையில்லை. எப்போதேனும் சிறு பிரச்சனை எனில் காசு தந்து சரி செய்து கொள்ளலாம்.

துணிகள் நிறைய போட்டு stuff பண்ணாதீங்க. அதே நேரம் பாதி காலியாவும் ஓட்டாதீங்க. சின்ன குடும்பம் எனில் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை போட்டாலே போதும்

துணிகள் போடும் போது பெருசு ஒன்றும் சின்னது ஒன்றுமா மாத்தி மாத்தி போடணும்.

வாஷிங் மெஷினுக்கு என்று குறிப்பிட்ட சோப்பு பவுடர் இருக்கும் அதை மட்டும் தான் போடணும், எல்லா சோப்பு பவுடரும் போட கூடாது; போட்டால் மெஷின் பிரச்சனை ஆகிடும். எந்த சோப்பு பவுடர் போடணும் என்பதை மெஷின் விற்கும் அதே கம்பனியில் சொல்வார்கள். (உதாரணமாய் IFB-க்கு Surf Excelmatic சோப்பு பவுடர் மட்டும் தான் போடணும்)

வாஷிங் மெஷினில் துணிகள் துவைத்து எடுத்தபின் உள்ளே சின்ன துணி ஏதும் கிடக்குதா என பாருங்கள். சில நேரம் கீழே சில துணி கிடந்து அடுத்து நாம் வாஷிங் மெஷின் போடும்வரை மெஷின் நாத்தம் அடிச்சிடும்.

Fully ஆட்டோமேடிக் மெஷின் என்பதால் துணிகள் ஓரளவு காய்ந்து விடும். எனவே துணிகளை அதிக நேரம் வெய்யிலில் போடாதீர்கள். அப்படி போட்டா துணி ரொம்ப  வெளுத்துடும். நல்லா வெயில் அடிக்கும் போது மொட்டை மாடியில் துணியை போட்டால் இரண்டு மணி நேரத்தில் எடுத்துடலாம். இது தான் கணக்கு ! மழை காலத்தில் வெய்யில் அதிகம் இல்லாம துணி காய நேரம் ஆகலாம்.

மொட்டை மாடியில் துணிகளை போடும் போதும், எடுக்கும் போதும் அக்கம் பக்கத்து மாடியில் உள்ள மாமிகளை பார்க்காதீர்கள். அது உங்கள் இல்லறத்துக்கு நல்லது !

Happy Washing Folks !!

*******
வல்லமை May 18 இதழில் வெளியான கட்டுரை !

சமீபத்திய பதிவுகள்:


ஆனந்த விகடனும் வீடுதிரும்பலும்

குளு-மணாலி பயணம் -படங்கள் டிரைலர்

சென்னை பெட்ரோல் தட்டுப்பாடு: நேரடி அனுபவம்

ஹோட்டல் அறிமுகம்: தஞ்சை சாந்தி பரோட்டா கடை

37 comments:

  1. kindly suggest, which is the best comparing top loaded and front loaded machines?

    ReplyDelete
  2. மோகன்,

    என்ன கொடுமை இது வாஷிங் மெஷின்
    பத்தி சொல்லிவிங்கன்னு பார்த்தால் அதில் துணிப்போட்டு எடுப்பேன்,மொட்டை மாடில காயவைப்பேன்னு உங்க அனுபவத்தினை சொல்லுறிங்க.

    தொழில்நுட்ப டிப்ஸ் கொடுக்கணும் சார் :-))

    துவைப்பான் ஆயுட்காலமே 7 ஆண்டுகள் தான் அதுக்கு மேல ஓடினது அதிஷ்டமே,அதை பழுதுப்பார்ப்பது செலவு வைக்கும் என்பதாலே புதுசு சொல்லி இருப்பாங்க.

    ஐ.எஃப்பி ல 17,800 ரூபாய்ல ஒரு மாடல் அனைத்து வசதியோடும் இருக்கே.

    சுழல் குளம் (வொர்ல் பூல்) துவைப்பானா,அப்போ டாப்ல லோடிங் ஆஹ் தான் இருக்கும்,10000 விலையில்,பிரண்ட் லோடிங் ல தான் நல்லா அழுக்கு போகும். ஹாட் வாஷ் இல்லைனா அவ்ளோ சுத்தம் வராது.

    பேசாம நானே துவைப்பான் பதிவு போட்டுறலாம் போல இருக்கு. நாம பயன்ப்படுத்தின துவைப்பான் வச்சு பொதுவா எல்லாருக்கும் எப்படி சொல்றதுனு இதெல்லாம் பதிவு போடவில்லை.

    \

    ReplyDelete
  3. செசில்: விலை பற்றி பிரச்சனை இல்லை என்றால் IFB வாங்குங்கள். மிக நல்ல கம்பனி. சற்று விலை அதிகம் என்றாலும் நல்ல தரம். அதில் Front லோடிங் இருக்கும்
    Whirlpool நிறுவனமும் ஓகே தான். விலை சற்று குறைவு

    ReplyDelete
  4. வவ்வால் said...

    தொழில்நுட்ப டிப்ஸ் கொடுக்கணும் சார் :-))
    ******
    தெரிஞ்சதனை தானே சொல்ல முடியும்? தொழில் நுட்ப டிப்சுக்கு நான் எங்கே போறது?

    //ஐ.எஃப்பி ல 17,800 ரூபாய்ல ஒரு மாடல் அனைத்து வசதியோடும் இருக்கே. //

    அப்படியா? இந்த முறை இன்னொரு நிறுவனம் முயற்சிக்கலாமே என நினைத்தேன்
    ***

    சுழல் குளம் (வொர்ல் பூல்) ....கலக்குறீங்க பாஸ் :))

    ReplyDelete
  5. //அய்யாசாமி தன் வீட்டில் முழுசாய் பொறுப்பு எடுத்து செய்கிற வேலை ஒன்று உண்டென்றால் "வாஷிங்" வேலை தான் ! அவர் தான் வாஷிங் செய்கிறார்னு புரளியை கிளப்பிடாதீங்க ! //
    எல்லா வீடுகளிலயும் இதேதான்.வீட்டுக்கு வீடு வாசல்படி.வீட்ல உதவி செய்றாங்களாமாஆஆஆமாம் !

    ReplyDelete
  6. நான் இந்த வேலை எல்லாம் செய்யரதில்லை. எனக்கு கொடுக்கப்படும் வேலை வாசிங் மெசின் நின்னா மனைவியை கூப்பிடனும். அப்பப்ப அதிலிருக்கர வேஸ்ட் பேக்கை கிளீன் செய்யனும். அவங்க காயப்போடும் போது ஒத்தாசையா கூட இருக்கனும். ஆனா ? நீங்க சொன்ன கடைசி அட்வைஸ் எனக்கு பிடிக்கலை.

    ReplyDelete
  7. முதல் முதலாக வாங்கிய வாஷிங் மெஷின் IFB..13 வருடம் ஓடி ஒரு நாளில் 1000 ரூபாய்க்கு தள்ளிட்டு, இதே மாதிரி தான் விலை அதிகமாகி போச்சு அதை விட குறைந்த விலைக்கு whirlpool அதிக 6.5 கிலோ லோட் செய்யலாம் என ஆசைப்பட்டு வாங்கி செம தகராறு.நாங்கள் வாங்கிய மாடலில் சுடு தண்ணீர் ஆப்ஷன் ஒரே வருடத்தில் ஊத்தி கொண்டது. ஃபெயிலர் மாடலாம். அதில் போடும் டார்க் கலர் துணிகளெல்லாம் சோப் பவுடர் ஒட்டி கொள்ளும். 4 வருடங்கள் ஓட்டணுமே என்று ஓட்டினேன்.மாத்து மாத்து என்று பசங்களும், கணவரும் நச்சரித்து இப்போ புதுசா LG வாங்கி ஓடி கொண்டு இருக்கிறார். IFB-யில் இருக்கும் சத்தம் இதில் சுத்தமாய் இல்லை.

    ReplyDelete
  8. மோகன்,

    //தெரிஞ்சதனை தானே சொல்ல முடியும்? தொழில் நுட்ப டிப்சுக்கு நான் எங்கே போறது? //

    அதான் நான் இருக்கேன்ல, உங்க குறிப்பு பத்தலைனு பெருங்குறிப்பா ஒரு துவைப்பான் வாங்க வழிகாட்டும் பதிவு போட்டாச்சு பாருங்க,

    துவைப்பான் வாங்க துப்பு கொடுக்கும் வவ்வால்

    ReplyDelete
  9. //அக்கம் பக்கத்து மாடியில் உள்ள மாமிகளை பார்க்காதீர்கள்//


    rite....sontha kathai soga kathaiyaa....??

    ReplyDelete
  10. Anonymous6:02:00 PM

    Happy Washing 2 u 2....

    ReplyDelete
  11. Hi,வவ்வால் அமுக்க சொன்னதால் அமுக்கினேன்.இரண்டு பேரும் சேர்ந்து ஏன் ஆம்பிளைக மானத்தை சேர்ந்து வாங்குறீங்க:)

    நான் மிச்ச கச்சேரியை அங்கே போய் வச்சிக்கிறேன்.

    ReplyDelete
  12. Anonymous7:12:00 PM

    >>மொட்டை மாடியில் துணிகளை போடும் போதும், எடுக்கும் போதும் அக்கம் பக்கத்து மாடியில் உள்ள மாமிகளை பார்க்காதீர்கள். அது உங்கள் இல்லறத்துக்கு நல்லது !

    நல்ல அறிவுரை...

    on a related note,

    ?பக்கத்து வீட்டுப் பெண் பார்க்கும்போதெல்லாம் ஒரு மாதிரி ஆகி விடுகிறதே, அது ஏன்?

    !வீடு மாற்றுங்கள்

    (சுஜாதா பதில்கள் - இரண்டாம் பாகம்)

    ReplyDelete
  13. அஹா...... நல்ல பதிவு சார் !

    ReplyDelete
  14. நல்ல குறிப்புகள்.... :)))

    ReplyDelete
  15. துணி துவைக்கறது நீங்களா? அப்பாடா இந்த பதிவ எங்க வீட்டுல பார்க்கலை....!

    ReplyDelete
  16. ஆண்களுக்கான பிரத்யோக பதிவு நன்று.

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. ஹேமா: நன்றி. வீட்டு வேலைகள் இன்னும் பெரிய அளவில் பெண்கள் பொறுப்பில் தான் உள்ளது

    ReplyDelete
  19. கலா குமரன்: ரொம்ப ஈசி வேலை உங்களுக்கு. மனைவி வேலைக்கு போனால் நிச்சயம் நாமும் வேலை பாக்கணும் நண்பா

    ReplyDelete
  20. ரிசி: நன்றி

    ReplyDelete
  21. அமுதா மேடம்: தங்கள் அனுபவம் விரிவாய் பகிர்ந்தமைக்கு நன்றி. பலருக்கும் பயனுள்ள தகவல்கள் கூறி உள்ளீர்கள்

    ReplyDelete
  22. ஜெட்லி: பொதுவாய் சொன்னேன் :))

    ReplyDelete
  23. ரெவரி: நன்றிங்கோ

    ReplyDelete
  24. ராஜ நடராஜன் சார்: வாங்க வவ்வால் பதிவில் மட்டும் தான் உரிமையா அரட்டை அடிப்பீங்களா?

    ReplyDelete
  25. பால ஹனுமான்: தலைவர் என்னமா சொல்லிருக்கார் பாருங்க. ரசித்தேன்

    ReplyDelete
  26. திண்டுக்கல் தனபாலன் சார்: நன்றி

    ReplyDelete
  27. வெங்கட்: நன்றி :))

    ReplyDelete
  28. சுரேஷ்: ரைட்டுங்கோ

    ReplyDelete
  29. ரத்னவேல் ஐயா : நன்றி

    ReplyDelete
  30. முரளி: நன்றி மகிழ்ச்சி

    ReplyDelete
  31. நல்ல பயனுள்ள தகவல். நன்றி!

    ReplyDelete
  32. //மனைவி வேலைக்கு போனால் நிச்சயம் நாமும் வேலை பாக்கணும்//

    அப்ப வேலைக்குப் போலைன்னா செய்யக்கூடாதா? :-(((

    ReplyDelete
  33. நல்ல குறிப்புக்கள் தந்தீர்கள்...

    ReplyDelete
  34. ஹுஸைனம்மா said...

    //மனைவி வேலைக்கு போனால் நிச்சயம் நாமும் வேலை பாக்கணும்//
    *********
    ஆஹா மாட்டிக்கிட்டேன் !! பதிவை படிச்சுட்டு சும்மா இருந்த ஹுசைனம்மா பின்னூட்டத்தில் பிடிசுட்டாங்கலே !

    என் மனைவி முதல்லேந்து அலுவலக வேலையும் செய்வதால் வேலைக்கு போகாத மனைவி உள்ள வாழ்க்கை எப்படி இருக்கும்னே தெரியலை. அப்பவும் நிச்சயம் வீட்டு வேலை செய்வேன். ஆனா இப்போ அளவு இல்லாமல் சற்று குறைவாய் செய்வேன்னு நினைக்கிறேன்

    ReplyDelete
  35. அமைதி அப்பா: நன்றி

    நிசாமுதின்: நன்றி

    ReplyDelete
  36. அய்யாசாமி யின் அனுபவம் அருமை .

    இணையத் தமிழன்.
    http://www.inaya-tamilan.blogspot.com/

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...