Monday, July 2, 2012

சகுனி படம் - மனசாட்சியுடன் ஒரு சண்டை

குனி படம் பார்த்து விட்டு விமர்சனம் எழுத எண்ணும்போதே மனசாட்சி விழித்து கொண்டது.

இனி மனசாட்சிக்கும் எனக்கும் நடந்த உரையாடல் ( படம் தந்த பாதிப்பில் மனசாட்சி ஆங்காங்கு சந்தானம் பாணியில் பேசுது,. பொறுத்தருள்க !)

"ஏண்டா டேய் ..ஒரு வாரம் முன்னாடி தான் சகுனி பத்தி ஒரு பதிவு எழுதி கல்லா கட்டினே. இப்போ அந்த மொக்கை படத்தை வச்சு அடுத்த பதிவா?"

"ஹி ஹி . அது படம் பாக்காம, கலக்சன்ஸ் கணக்கை வச்சு எழுதினது. இது படம் பாத்துட்டு எழுதறது. சகுனி கதை உனக்கு சொல்லவா?"

" தகர டப்பா தலையா.. கேபிள்லே இருந்து விகடன் வரை எல்லாரும் கதை சொல்லிட்டாங்க. நீ வேற ஆரம்பிக்காதே; படத்திலே என்ன நல்லா இருந்தது ? அதை சொல்லு "

"எடுத்த உடனே கஷ்டமான கேள்வி கேட்டா எப்புடி? சரி சொல்றேன். படத்திலே உருப்படியான முதல் விஷயம் சந்தானம் காமெடி தான். அது கூட ஓகே ஓகே அளவுக்கெல்லாம் இல்லை. ஆனா அங்கங்கே அவரோட வழக்கமான பாணியில சிரிக்க வைக்கிறார். அடுத்த நல்ல விஷயம் " மனசெல்லாம் மழையே " பாட்டு ; ரொம்ப நல்ல மெலடி. அந்த பாட்டை எடுத்தது (Picturization) கூட பரவாயில்லை. அப்புறம் கார்த்தி புதுசா டான்ஸ் ஆட டிரை பண்ணிருக்கார் . இதுக்கு மேலே வேற ஏதும் தெரியலை"

" இந்த ஹீரோயின் ஹீரோயின்னு இருப்பாங்களே அவங்களை பத்தி ஜொள்ளு "

"அந்த கொடுமையை ஏன் கேக்குறே? டைரக்டர் படம் புக் பண்ணும் போதே " மேடம் உங்களுக்கு மூணு பாட்டு இருக்கு; அதுக்கு மட்டும் ஆடினா போதும்னு சொல்லிட்டாருன்னு நினைக்கிறேன் . பாட்டுக்கு நாப்பது நாளும், மத்த சீனில் நடிக்க நாலு நாளும் கால்ஷீட் குடுத்துருப்பாங்க போல. ஆளும் மார்வாடி பொண்ணு மாதிரி இருக்கு. ஏற்கனவே காஜல்னு ஒரு மார்வாடி பொண்ணு இருக்கே அது போதாதா?"

" ஏம்பா. இந்த படத்திலே அனுஷ்கா ஆண்ட்ரியா எல்லாம் நடிசிருக்காங்களாமே? என்னவா வர்றாங்க?"

" அனுஷ்கா கார்த்தியை பார்த்து ஒன் சைடா ஜொள்ளு விடுற போலீசா வர்றாங்க. ரெண்டு சீன் தான் ! தலைவியை கூட இவ்ளோ அசிங்கமா காட்ட முடியுமான்னு உள்ளம் கொதிச்சுடுச்சு. ஆண்ட்ரியா மாதிரி ஒருத்தங்க ஹோட்டலில் அம்பது பேருக்கு நடுவில் ஆடினாங்க. அவங்க ஏன் வந்தாங்கன்னு புரியவே இல்லைப்பா"

" சரி ஜி. வி. பிரகாஷ் குமார். நம்ம பையன் ..ரீ ரிக்கார்டிங் எல்லாம் எப்படி?" 

" அதுக்கு எங்கே இடம் இருக்கு? மூச்சு விடாமல்ல எல்லாரும் பேசுறாங்க? கொஞ்சம் இடம் இருக்கும் போது நல்லா சவுண்டா மியூசிக் போட்டிருக்கார். ஏன்னா அப்புறம் படத்தில் வெறும் வசனம் தான் இருக்குன்னு ரீ ரிக்கார்டிங் பேமென்ட் கட் பண்ணிட கூடாதுல்ல"

" படம் எதோ தூள் பார்ட் டூ அப்படிங்கறாங்களே?? கதை அப்படியா இருக்கு?"

" கிட்டத்தட்ட அந்த லைன் தான். ஆனா மிக மட்டமான கதை அதை விட மோசமான திரைக்கதை. படத்தை நூறு சதம் கொல்றது கதை- திரைக்கதை ரெண்டும் தான். எதுவுமே நம்பற மாதிரி இல்லை. ஹீரோ வீட்டை இடிக்கறாங்கன்னா, அதை நிறுத்த என்ன செய்யணுமோ அதை செய்யாம வேற ஏதேதோ செய்றார். மூணு மாசத்தில் வீடு இடிக்க போறாங்கன்னு சொல்றாங்க. அதுக்குள்ளே ஹீரோ ஒருத்தரை மேயர் ஆக்குறார். இன்னொருத்தரை பெரிய சாமியார் ஆக்குறார். இன்னொருத்தரை முதல்வர் ஆக்குறார். கடைசியா முதல்வர் வந்து, முதல் கையெழுத்தா ரயில்வே பிரிட்ஜ் வேண்டாம்னு போடுறார். முடியலை "

" அப்ப காதுல பூ சுத்திருக்காங்கன்னு சொல்றே "

" பூவா? பூ கூடையே சுத்திருக்காங்க. ஹீரோ சொன்னா எல்லாமே நடந்துடுது. அவர் சொன்னா எல்லாரும் கேட்டுக்கறாங்க. அப்படி என்ன மந்திர சக்தியோ தெரியலை. எந்த ஊரில பொண்ணுங்க ஒரு ஆம்பளையை பார்த்ததும் இப்படி நேரா வந்து ஜொள்ளு விடுராங்கன்னு தெரியலை. அதுவும் அத்தனை பெண்களும் கார்த்தியை பாத்து அடுத்த நொடி ஜொள்ளு விடுறது டூ மச். "

" ஏம்பா உனக்கு ஏன் பொறாமை? பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான். புது டைரக்டர் பழைய ஜனாதிபதி மாதிரி சங்கர் தயாள்னு பேரு வச்சிட்டு வந்திருக்காரே ; அவரு எப்படிப்பா? "

 "க்கும். அவர் தானே கதை திரைக்கதை எழுதின வில்லன்.பிற்பகுதியில்  ரன்பீர் கபூர் நடிச்ச ஹிந்தி படமான "ராஜ்நீத்தி" யில் இருந்து நிறைய காட்சி சுட்டிருககார். அந்த படத்திலிருந்து கதை மட்டுமில்ல. ஹீரோ போட்டுக்கற கண்ணாடி வரை உருவிட்டாரு. சகுனியில் கார்த்தி எங்கெல்லாம் கண்ணாடி போட்டுட்டு வர்றாரோ அதெல்லாம் ராஜ்நீத்தி உருவல்"



"அட கடவுளே இது வேறயா?"

" ஆமாப்பா. பாட்டு ஒவ்வொன்னும் தனியா துருத்திக்கிட்டு நிக்குது. ஒண்ணு கூட கதையோட ஒட்டலை. நிறைய நல்ல நடிகர்கள், பெரிய மார்கெட்டிங் இருந்தும் மோசமான கதை திரைக்கதையால் சொதப்பிட்டார் "

"அப்ப முடிவா என்ன தான் சொல்ல வர்றே?"

"120 ரூபா காசு குடுத்து பாக்கும் அளவு நிச்சயம் வொர்த் இல்லை. இணையத்திலோ டிவியிலோ பார்த்தாலே ரொம்ப அதிகம். அப்படி பார்த்தாலே, பாத்து முடிச்சுட்டு திட்ட தான் செய்வீங்க. ரொம்ப போர் அடிச்சா மட்டும் டிவியில் பாக்கலாம். அம்புட்டு தான் "

33 comments:

  1. தொலைக்காட்சியில் கூட பார்க்க தொகுதி ஸாரி தகுதி இல்லை.
    படம் இன்னும் பார்க்கவில்லை...
    பார்க்க போவதும் இல்லை...
    (TM 2) நன்றி !

    ReplyDelete
  2. படத்தை ரொம்ப நல்லா கல்லாய்ச்சு இருக்கேங்க...இன்னும் ஒரு மாசத்தில் விஜய் டிவியில் மெகா ஹிட் படம் என்ற விளம்பரத்துடன் காலை காட்சி போடுவாங்க பாருங்க...

    ReplyDelete
  3. நாங்க இனி சுதாரிச்சுருவோம்ல (TM 4)

    ReplyDelete
  4. ஏற்கனவே படம் பார்த்த பல பேர் மந்திரிச்சு விட்டா மாதிரி பதிவு எழுதிகிட்டு இருக்காங்க. தெரிந்தும் போய் பாத்திருக்கீங்கனா, உங்களுக்கு ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்பிடற்து போல் இருக்கும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  5. முதல் நாளே படம் பார்த்து நொந்து போய் இருக்கோம் சார்...

    ReplyDelete
  6. உங்க மன கஷ்டத்துக்கு ஒரு மருந்து இருக்கு. முரட்டுக் காளை படம் பாருங்க, பார்த்தீங்கன்னா ஐயோ........ சாமி...... இதுக்கு சகுனியே தேவலைடான்னு ஆயிடுவீங்க. [எப்படி ஜெ. ஆட்சியைப் பார்த்து கருணாநிதியே தேவலை போலிருக்கேன்னு நினைக்கிறாங்களோ அது மாதிரி. ஹி........ஹி........ஹி........]

    ReplyDelete
  7. டிவியில் பார்த்தால் விளம்பரத் தொல்லை. எனவே இணையத்திலேயே பார்த்துக் கொள்ளலாம்! அப்புறம் 'இந்தப் பாட்டக் கேட்டா அந்தப்பாட்டு மாதிரி' விளக்கம் சொல்லறது நம்ம கடமையாச்சே...!! 'வெள்ளை பம்பரம் மெல்ல சுத்துது' பாடலைக் கேட்கும்போது முதல்வன் படப் பாடல் 'உப்புக் கருவாடு ஊற வச்ச சோறு' பாடல் நினைவுக்கு வரும்.

    ReplyDelete
  8. பில்டப் செய்யப்படும் படங்கள் எல்லாம் இப்படித்தான் டவுன் ஆகின்றன. நல்ல நக்கல் விமரிசனம்!

    ReplyDelete
  9. பாவம் சகுனி படம்
    இப்படி திருப்பி திருப்பி அடிச்சா எப்படித் தாங்கறது
    சுவாரஸ்யமான பதிவு.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. பாவம் சகுனி படம்
    இப்படி திருப்பி திருப்பி அடிச்சா எப்படித் தாங்கறது
    சுவாரஸ்யமான பதிவு.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. Anonymous7:47:00 PM

    இப்படி நல்லா விமரிசனம் எழுத வைக்க தான் படம் சொதப்பலா எடுக்கறாங்க போல மோகன்...

    ReplyDelete
  12. தனபாலன் சார்: முதல் வருகைக்கும் வாக்குக்கும் நன்றி

    ReplyDelete
  13. ராஜ்: மிக நன்றி

    ReplyDelete
  14. வரலாற்று சுவடுகள் : நன்றி நண்பா

    ReplyDelete
  15. சீனி: ம்ம். :)

    ReplyDelete
  16. அமுதா மேடம்: அட பாவமே !

    ReplyDelete
  17. தாஸ்: ஒய் திஸ் கொலை வெறி ?

    ReplyDelete
  18. நித்ய அஜால் குஜாலானந்தா : அடடா என்னா பேர் சார் ! என்னமா யோசிக்கிறீங்க ! வருகைக்கு நன்றி

    ReplyDelete
  19. ஸ்ரீராம்: நீங்க சொன்ன பிறகு அந்த பாட்டின் சாயல் சற்று தெரிகிறது

    ReplyDelete
  20. சுரேஷ்: நன்றி நண்பரே

    ReplyDelete
  21. ரமணி சார்: நன்றி மகிழ்ச்சி

    ReplyDelete
  22. ரெவரி : நன்றி :)

    ReplyDelete
  23. முதல் பாதியாவது பரவால்ல....இரண்டாம் பாதி இருக்கே...ஸ்ஸப்பா..முடியல :(

    நினைச்சவுடனே ஒருத்தரை மேயர் ஆக்குறது, இன்னொருத்தரை முதல்வர் ஆக்குறதுலாம் பார்க்கும்போது, 'வருங்கால ஜனாதிபதி முருகேசன்' கேரக்டர்தான் ஞாபகத்துக்கு வந்தது :))

    ReplyDelete
  24. ரகு: உங்கள் ஊர் போன போது படம் பாத்தீங்களா? ரைட்டு

    ReplyDelete
  25. ரத்னவேல் நடராசன் ஐயா: நன்றி

    ReplyDelete
  26. நல்லா கலாய்ச்சு எழுதி இருக்கீங்க. நாம சும்மா நல்ல படங்களையே தியேட்டர்ல பார்க்க மாட்டோம். டிவிடி தான். இந்தப் படம் டிவில போட்டா மட்டும் தான். காமெடி எல்லாம் சிரிப்பொலியில் பாத்துக்கலாம்.

    ReplyDelete
  27. செம கலாய்ப்பு.. டிவியில் போட்டாக்கூட ஓடிருவோம்ல
    :-)))

    ReplyDelete
  28. எப்படியும் பார்க்கப் போறதில்ல... :)

    த.ம. 15

    ReplyDelete
  29. ஹாலிவுட் ரசிகன் :ரைட்டு

    ReplyDelete
  30. அமைதி சாரல் :-) வருகைக்கு நன்றி

    ReplyDelete
  31. வெங்கட் : நன்றி நண்பா

    ReplyDelete
  32. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...