முக நூல் கிறுக்கல்கள்
சந்து பொந்துகளில் வண்டியை விட்டு சர்க்கஸ் சாகசம் செய்து, குழந்தையை சரியான நேரத்தில் பள்ளியில் விடும் ஒவ்வொரு அப்பாவும் தெய்வ திருமகனே !
#########
பிரிட்ஜுக்குள் பச்சை மிளகாய் எந்த கவரில் உள்ளது என்று தேடுவதும், துணிக்கடையில் மனைவி எந்த கவுண்டரில் உள்ளார் என்று தேடுவதும் ஒரே வித பயத்தையும், அனுபவத்தையும் கொடுக்கிறது
#########
சில விளம்பரங்களை பார்த்தாலே பத்திக்கிட்டு வரும். வந்த முதல் நாளே அதில் இணைந்துள்ளது "சினேகா- பிரசன்னா பிரிவுக்கு என்ன காரணம்?" .
#########
பெண்கள் தங்கள் கோபத்தை காட்டுவது கணவன் மற்றும் குழந்தைகளிடம் மட்டும் தான். உலகில் மற்ற எல்லாருக்கும் அவங்க ரொம்ம்ம்ம்ப நல்லவங்க ! (முடியலைத்துவம் !!)
பார்த்த படம் - ராக்கெட் சிங் - ஹிந்தி
ரன்பீர் கபூர் நடித்த இந்த படம் முழுக்க முழுக்க Salesman-களின் வாழ்க்கையை அடிப்படையாய் கொண்டது. நிறுவனத்தில் இருக்கும் அரசியல், வஞ்சம் இவற்றை சுற்றியே கதை சுழல்கிறது. நிறுவனம் பற்றியே ஒரு படம் என்கிற விதத்தில் மிக வித்யாசமான களத்தில் இயங்குகிறது. சண்டை இல்லை. டூயட் இல்லை. காதலி என்று ஒருவர் முக்கால் வாசி படம் தாண்டியதும் வருகிறார்.
ரன்பீர் கபூர் நடிக்கிற மாதிரியே தெரியவில்லை. பாத்திரத்துக்கு மிக பொருந்துகிறார். மற்ற பாத்திரத்தில் நடிப்போரும் அதிகம் அறிமுகம் இல்லாதோர் என்பதால் முழுதும் ஒன்ற முடிகிறது.
ஒரு நிறுவனத்தில் இருந்து கொண்டே ஒரு குரூப்பாய் சேர்ந்து கொண்டு இயங்குவதும், பின் அந்த நிறுவனத்தை விட்டு பிரிந்து போட்டியாளர் ஆவதும் மருந்து தொழிலில் நிறையவே உண்டு. இங்கு அதை கம்பியூட்டர் துறையில் காட்டுகிறார்கள். நேரம் கிடைக்கும் போது இந்த வித்தியாச படத்தை ஒரு முறை பாருங்கள் !
மேற்கு வங்க கொடுமை
மேற்கு வங்கத்தில் ஒரு பள்ளி விடுதியில் ஐந்தாம் வகுப்பு மாணவி தூக்கத்தில் சிறுநீர் கழித்தமைக்கு தண்டனையாக, அவளை சிறுநீர் குடிக்க வைத்திருக்கிறார் ஒரு பெண் வார்டன் ! என்ன கொடுமை என்று நொந்து போனால், அடுத்தடுத்த தகவல்கள் இன்னும் அதிர வைக்கின்றன. வார்டனை கைது செய்து அன்று மாலையே விடுதலை செய்து விட்டனர். அவ்வளவு தான் தண்டனையா? ஒரு பெண் முதல்வராக உள்ள மாநிலத்தில் ஒரு சிறுமிக்கு இந்த நிலையா ?
இந்த விஷயம் வெளியே கொண்டு வர போராடிய அந்த பெண்ணின் பெற்றோரையும் கைது செய்து பின் விடுவித்துள்ளனர். இப்படி செய்தால் இனி எப்படி தைரியமாக பெற்றோர் இது போன்ற தவறுகளை வெளியே சொல்வார்கள்?
என்னை மனம் வருந்த வைப்பது இது போன்ற அநியாயங்கள் இன்னும் எவ்வளவோ வெளி வராமல் நடக்கிறது என்பது தான் !
எளியோரை வலியோர் வாட்டினால், வலியோரை தெய்வம் வாட்டும் ! வேறொன்றும் சொல்ல தோன்ற வில்லை !
சென்னை ஸ்பெஷல் : மேக்ஸ் துணி கடை
எங்கள் குடும்ப உறுப்பினர்களை துணி வகைகளில் திருப்தி படுத்துவது கொஞ்சம் கஷ்டம். ஓரளவு திருப்தி படுத்தும் விதத்தில் உள்ளது மேக்ஸ் ஷோ ரூம். நிறைய வெரைட்டி இருப்பதுடன், வேலை செய்வோர் பொறுமையாய் எடுத்து காண்பிக்கிறார்கள். நிறைய கடைகளில் ஒரு உடை நமக்கு பிடிக்கும். ஆனால் நாம் விரும்பும் சைஸ் அல்லது கலர் இல்லை என்பார்கள். மேக்ஸில் எப்படியோ தேடி நாம் கேட்கும் கலர், சைஸ் எடுத்து கொடுத்து விடுவார்கள். விலை ஓரளவு அதிகம். எனினும் மேலே சொன்ன மாதிரி வெரைட்டிக்காகவே நாங்கள் விரும்பி செல்கிறோம்.
நிற்க. ஜூலை 16 வரை மேக்ஸில் டிஸ்கவுன்ட் சேல் நடக்கிறது. சென்ற ஞாயிறு சென்று வந்தோம். 20 % முதல் 40 % வரை டிஸ்கவுன்ட் உள்ளது. அமெரிக்காவில் சீசன் முடிந்த பின் ஜூன் இறுதி/ ஜூலை துவக்கத்திலும், பின் ஜனவரியில் பொங்கலுக்கு பின்னும் இரு முறை டிஸ்கவுன்ட் சேல் இங்கு இருக்குமாம் ! முடிந்தால் சென்று வாருங்கள். லஸ் கார்னர் மற்றும் டி. நகர் வடக்கு உஸ்மான் ரோடில் இவர்கள் கடை உள்ளது
பாரத் மேட்ரிமோனியில் விளம்பரம்
வலது ஓரம் உள்ள பெண்ணை பாருங்கள். நமக்கு நன்கு தெரிந்த அவன் இவனில் நடித்த ஜனனி ஐயர் தான் இது ! அவர் படத்தை போட்டு " சோனியா" என்று விளம்பரம் செய்கிறார்களே ! என்ன கொடுமை இது !
யாராவது எனக்கு இந்த பெண் தான் வேண்டும் என கேட்டு அடம் பிடித்தால் என்ன செய்வார்களாம்? ஹும் !
பதிவர் பாலஹனுமான் பற்றி ஏற்கனவே ஒரு முறை பகிர்ந்திருந்தேன். கடந்த வாரத்தில் ஒரு நாள் மெயில் மூலம் பேசும் போது உங்கள் போன் நம்பர் என்ன என கேட்டு விட்டு, உடனே போனில் பேசினார். அமெரிக்காவில் இருக்கிறார் இவர் ! நாங்கள் பேசியபோது பகல் பன்னிரண்டு மணி. அமெரிக்காவில் நள்ளிரவாய் இருக்கும் ! சாப்ட் வேர் துறையில் வேலை செய்வதாக சொன்னார். எழுத்தை வைத்து முப்பது வயதிருக்கும் என நினைத்திருந்தேன். குரல் இன்னும் இளமையாய் இருந்ததால், " உங்களுக்கு திருமணம் ஆகிடுச்சா? " என கேட்க எத்தனிக்கும் முன் " அடுத்த மாசம் இந்தியா வர்றேன். என் பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கேன்" என்றாரே பார்க்கலாம் !
இணையம் பல வயது மனிதர்களையும் நண்பர்களாக்கி விடுகிறது. ஒத்த சிந்தனை இருந்தால் போதும். வயது வித்யாசம் இணையத்தில் பொருட்டே இல்லாமல் போய் விடுகிறது !
பாலஹனுமான் சார் ! உங்களை காண ஆவலுடன் இருக்கிறேன் !
அழகு கார்னர்
இவர் குரல் அழகா அல்லது இவரே அழகா... என லியோனி தலைமையில் ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். இரண்டில் ஒரு பக்கம் மட்டும் தீர்ப்பு தந்தால், சண்டை பிடிப்பேன் நான் !
ஷ்ரேயா கோஷல் ! சொல்லும் போதே கண்கள் பனிக்கிறது. இதயம் இனிக்கிறது. இவரை பற்றி மட்டுமே ஒரு பதிவெழுத மனம் துடிக்கிறது ! ஹவுஸ் பாஸ் நினைவு வந்து அதை தடுக்கிறது !

பாரத் மேட்ரிமோனியில் எல்லா வெப்சைட்டிலும் விடாது விளம்பரம் போடுகிறார்கள். சில பெண்கள் படம் போட்டு அவர்கள் பெயர் வயது என சில போட்டு நம்மை உள்ளே ஈர்க்க பார்க்கிறார்கள்.
வலது ஓரம் உள்ள பெண்ணை பாருங்கள். நமக்கு நன்கு தெரிந்த அவன் இவனில் நடித்த ஜனனி ஐயர் தான் இது ! அவர் படத்தை போட்டு " சோனியா" என்று விளம்பரம் செய்கிறார்களே ! என்ன கொடுமை இது !
யாராவது எனக்கு இந்த பெண் தான் வேண்டும் என கேட்டு அடம் பிடித்தால் என்ன செய்வார்களாம்? ஹும் !
பதிவர் பாலஹனுமான்
பதிவர் பாலஹனுமான் பற்றி ஏற்கனவே ஒரு முறை பகிர்ந்திருந்தேன். கடந்த வாரத்தில் ஒரு நாள் மெயில் மூலம் பேசும் போது உங்கள் போன் நம்பர் என்ன என கேட்டு விட்டு, உடனே போனில் பேசினார். அமெரிக்காவில் இருக்கிறார் இவர் ! நாங்கள் பேசியபோது பகல் பன்னிரண்டு மணி. அமெரிக்காவில் நள்ளிரவாய் இருக்கும் ! சாப்ட் வேர் துறையில் வேலை செய்வதாக சொன்னார். எழுத்தை வைத்து முப்பது வயதிருக்கும் என நினைத்திருந்தேன். குரல் இன்னும் இளமையாய் இருந்ததால், " உங்களுக்கு திருமணம் ஆகிடுச்சா? " என கேட்க எத்தனிக்கும் முன் " அடுத்த மாசம் இந்தியா வர்றேன். என் பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கேன்" என்றாரே பார்க்கலாம் !
இணையம் பல வயது மனிதர்களையும் நண்பர்களாக்கி விடுகிறது. ஒத்த சிந்தனை இருந்தால் போதும். வயது வித்யாசம் இணையத்தில் பொருட்டே இல்லாமல் போய் விடுகிறது !
பாலஹனுமான் சார் ! உங்களை காண ஆவலுடன் இருக்கிறேன் !
இவர் குரல் அழகா அல்லது இவரே அழகா... என லியோனி தலைமையில் ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். இரண்டில் ஒரு பக்கம் மட்டும் தீர்ப்பு தந்தால், சண்டை பிடிப்பேன் நான் !
வானவில்...அருமை...பாரத் மேட்ரி மோனியல் மட்டுமல்ல...பெரும்பாலும் இப்படிதான்...
ReplyDelete//ஷ்ரேயா கோஷல் ! சொல்லும் போதே கண்கள் பனிக்கிறது. இதயம் இனிக்கிறது. இவரை பற்றி மட்டுமே ஒரு பதிவெழுத மனம் துடிக்கிறது ! ஹவுஸ் பாஸ் நினைவு வந்து அதை தடுக்கிறது !//
ReplyDeleteஆனாலும் உங்களுக்கு ரொம்பதான் தைரியம் மோகன்..... :))
கொல்கத்தா பெண் வார்டன் - நிச்சயம் தண்டிக்கப்படவேண்டியவர். எத்தனை கஷ்டம் அச் சிறுபெண்ணுக்கு... இதெல்லாம் முதலமைச்சர் அம்மாவுக்கு புரியாது... எங்க அவங்களுக்கு தான் தில்லி கூட சண்டை போடறதுக்கே நேரம் சரியா இருக்கே... :(
//பெண்கள் தங்கள் கோபத்தை காட்டுவது கணவன் மற்றும் குழந்தைகளிடம் மட்டும் தான். உலகில் மற்ற எல்லாருக்கும் அவங்க ரொம்ம்ம்ம்ப நல்லவங்க ! (முடியலைத்துவம் !!)//
ReplyDeleteWhy blood same blood!!!
இன்னிக்குக் கொஞ்சம் அதிகமோ தத்துவமாக மாறியுள்ளது.
//எங்க அவங்களுக்கு தான் தில்லி கூட சண்டை போடறதுக்கே நேரம் சரியா இருக்கே... //
இது ’விஸ்வபாரதி’ சம்பந்தப்பட்டதால் வங்காளத்தில் அனைத்து கட்சியினருமே அடக்கி வாசிப்பது போலத்தான் தோன்றுகிறது. வங்காளிகள் தாகூரையும் வி.பா.-ஐயும் எப்போதுமே விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
\\சந்து பொந்துகளில் வண்டியை விட்டு சர்க்கஸ் சாகசம் செய்து, குழந்தையை சரியான நேரத்தில் பள்ளியில் விடும் ஒவ்வொரு அப்பாவும் தெய்வ திருமகனே !\\ அடடே....... நான் கூடத் தெய்வத் திருமகனா......!!
ReplyDelete\\சில விளம்பரங்களை பார்த்தாலே பத்திக்கிட்டு வரும். வந்த முதல் நாளே அதில் இணைந்துள்ளது "சினேகா- பிரசன்னா பிரிவுக்கு என்ன காரணம்?" . \\ நீங்க சினேகா ரசிகரா சார்? நானும் தான்....... ஹி...... ஹி.......... ஹி.........
ReplyDelete\\பார்த்த படம் - ராக்கெட் சிங் - ஹிந்தி
ReplyDeleteசண்டை இல்லை. டூயட் இல்லை. காதலி என்று ஒருவர் முக்கால் வாசி படம் தாண்டியதும் வருகிறார்.
ரன்பீர் கபூர் நடிக்கிற மாதிரியே தெரியவில்லை. மற்ற பாத்திரத்தில் நடிப்போரும் அதிகம் அறிமுகம் இல்லாதோர் .......\\
இதையெல்லாம் படிச்சதுக்கப்புறம் அந்த படத்த எப்படி சார் பார்க்கிறது?
\\நிறைய வெரைட்டி இருப்பதுடன், வேலை செய்வோர் பொறுமையாய் எடுத்து காண்பிக்கிறார்கள். நிறைய கடைகளில் ஒரு உடை நமக்கு பிடிக்கும். ஆனால் நாம் விரும்பும் சைஸ் அல்லது கலர் இல்லை என்பார்கள். மேக்ஸில் எப்படியோ தேடி நாம் கேட்கும் கலர், சைஸ் எடுத்து கொடுத்து விடுவார்கள்.\\ எனக்கு அங்காடித் தெரு படம்தான் ஞாபகத்துக்கு வருது. நம்மை திருப்திப் படுத்த எத்தனை ஜீவன்கள் தங்கள் உடல் நலத்தையும், வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு வாடுகின்றனவோ தெரியலையே............???
ReplyDelete\\பாரத் மேட்ரிமோனியில் விளம்பரம்\\ இவர்கள் விளம்பரத்தில் நாலஞ்சு வருஷமா மூன்று பெண்களையும் வயதையும், செய்யும் வேலையையும் மாற்றாமல் போடுறாங்க, அது தான் எப்படின்னே புரியலை!!
ReplyDelete\\ஷ்ரேயா கோஷல் ! சொல்லும் போதே கண்கள் பனிக்கிறது. இதயம் இனிக்கிறது. இவரை பற்றி மட்டுமே ஒரு பதிவெழுத மனம் துடிக்கிறது ! ஹவுஸ் பாஸ் நினைவு வந்து அதை தடுக்கிறது !\\ அடுப்பு எரிகிறது, அதில் கரண்டி காய்கிறது, இப்போ ஐயா சாமி தொடையை அது பதம் பார்க்கப் போகிறது.......... ஹா........ஹா...........ஹா........... [அவங்க உங்க பிளாக்கை ரெகுலரா படிப்பாங்களா சார்..............??!!]
ReplyDelete'கான்' நடிகர்களுக்கு பிறகு, ரன்பீர் நிச்சயம் ஒரு பெரிய இடத்தை பிடிப்பார் என்று நம்புகிறேன்.
ReplyDelete//மேற்கு வங்க கொடுமை//
இந்த மாதிரி ஆளுங்களுக்கு, 'நல்லாசிரியர்' விருது மாதிரி, 'சைக்கோ ஆசிரியர்' விருது கொடுக்கலாம்..
//இவரை பற்றி மட்டுமே ஒரு பதிவெழுத மனம் துடிக்கிறது ! ஹவுஸ் பாஸ் நினைவு வந்து அதை தடுக்கிறது !//
நீங்க லேசுப்பட்டவர் இல்ல...கண்டிப்பா எழுதிடுவீங்க பாருங்க :))
கோவை நேரம் : ஆம். நன்றி நண்பா
ReplyDeleteவெங்கட்: தைரியம் ப்ளாகில் மட்டும் தான். வீட்டில் இல்லை.
ReplyDelete:)
:((
சீனி: நீங்கள் சொல்வது புது கோணம், உண்மையும் கூட !
ReplyDeleteதாஸ்: வீட்டம்மா இப்போல்லாம் ப்ளாக் படிக்கிறாங்க. இன்னிக்கு சாயங்காலம் வீட்டுக்கு எப்படி போறதுன்னு கொஞ்சம் பயமா தான் இருக்கு. நீங்க வேற அடுப்புலே போடுற கரண்டி -சூடுன்னு ஐடியா தர்றீங்க :)
ReplyDeleteபாரத் மேட்ரிமோனி பற்றி நீங்க எழுதியது படிச்சு சிரிச்சுட்டேன்
ஸ்னேஹா முன்பு பிடிக்கும். நேரில் சமீபத்தில் ஒரு விழாவில் பார்த்தேன். ரொம்ப வயசாகிடுச்சு. முகத்திலயே தெரிந்தது.
This comment has been removed by the author.
ReplyDeleteரகு: அய்யாசாமியை ரெண்டு முறை பார்த்ததிலேயே அவரை பத்தி நல்லா புரிஞ்சு கிட்டீங்க. ஷ்ரேயா கோஷல் பாட்டுகளில் சிறப்பானவை வைத்து ஒரு பதிவு எழுதனும்னு எண்ணம். பாக்கலாம்
ReplyDeleteரன்பீர் நிச்சயம் நம்பிக்கை தருகிறார். வெகு இயல்பான நடிப்பு
ஹா... ஹா... உங்களோட சேர்ந்துக்கிட்டு ஸ்ரேயா கோஷலுக்கு நானும் ஓட்டுப் போடறேன். என் வீட்ல அடி விழாதுப்பா... நண்பர் பாலஹனுமானைச் சந்திக்க வெகு ஆவலுடன் காத்திருக்கிறேன் நானும்.
ReplyDeleteமுதல் முகநூல் பகிர்வு அருமை.
ReplyDelete/எப்படி தைரியமாக பெற்றோர் இது போன்ற தவறுகளை வெளியே சொல்வார்கள்? /
மாட்டார்கள். அப்படிதான் பல கொடுமைகள் வெளிவராது போகின்றன. தொடரவும் செய்கின்றன:(.
சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போகணும் பாஸ் அதை நினைவில வச்சுகிட்டு பதிவு போடுங்க ஹி ஹி ஹி
ReplyDeleteராக்கெட் சிங்கை படம் வெளியான பொழுதில் தமிழில் ரீமேக்குவதாவும் சூர்யா நடிக்க போவதாகவும் தகவல் வந்துச்சு... நல்ல வேல...நடக்கல... ஒரிஜினல் அவ்வளவு நேர்த்தி...
ReplyDeleteமுகநூல் பதிவு அருமை. ஏற்கனவே முகநூலில் படித்துள்ளேன். அந்த வங்கப்பெண் கொடுமை மனதை பதைபதைக்க வைக்கிற்து.
ReplyDeleteசினேகா-பிரசன்னாவுக்கென்ன? அத்தனையையும் காசாக்கும் வித்தை தெரிந்துள்ளது...
எனது தீர்ப்பு ஸ்ரேயா கோஷலின் குரல்தான் மிக அழகானது. ஏனென்றால் குரலுக்கு ஆயுள் கொஞசம் அதிகமில்லையா?
ஷ்ரேயா கோஷல் ! சொல்லும் போதே கண்கள் பனிக்கிறது. இதயம் இனிக்கிறது...
ReplyDeleteவீட்டுக்காரம்மா கொடுத்த அடியால் வலிக்கிறது...
ராக்கெட் சிங்//
சிங் னாலே நமக்கு அலர்ஜி...-:)ஹிந்தி நஹி மாலும்...
சந்து பொந்துகளில் வண்டியை விட்டு சர்க்கஸ் சாகசம் செய்து, குழந்தையை சரியான நேரத்தில் பள்ளியில் விடும் ஒவ்வொரு அப்பாவும் தெய்வ திருமகனே //
Liked it...படம் பார்க்கவில்லை..ஆனால் புரிந்தது...
ஓரளவு திருப்தி படுத்தும் விதத்தில் உள்ளது மேக்ஸ் ஷோ ரூம்//
வழக்கம் போல உங்களுக்கு கர்சீப் தானா மோகன்...-:)
ராமலக்ஷ்மி said...
ReplyDelete/எப்படி தைரியமாக பெற்றோர் இது போன்ற தவறுகளை வெளியே சொல்வார்கள்? /
மாட்டார்கள். அப்படிதான் பல கொடுமைகள் வெளிவராது போகின்றன. தொடரவும் செய்கின்றன:(.
ஆம். அது தான் என் வருத்தமும்
பாலகணேஷ் சார்: நன்றி
ReplyDeleteவரலாற்று சுவடுகள்: ஹிஹி உங்களுக்கும் அந்த அனுபவம் உண்டா? ரைட்டு
ReplyDeleteமயிலன்: நல்ல வேலை தமிழில் வரலை
ReplyDeleteஉமா மேடம் //எனது தீர்ப்பு ஸ்ரேயா கோஷலின் குரல்தான் மிக அழகானது. ஏனென்றால் குரலுக்கு ஆயுள் கொஞசம் அதிகமில்லையா//
ReplyDeleteஉண்மைதான் மேடம் ஒத்துக்குறேன்
ரெவெரி said...
ReplyDeleteராக்கெட் சிங்//
சிங் னாலே நமக்கு அலர்ஜி...-:)ஹிந்தி நஹி மாலும்...
எனக்கும் தெரியாது. சப் டைட்டில் உடன் மட்டும் தான் ஹிந்தி படம் பார்ப்பேன்
//வழக்கம் போல உங்களுக்கு கர்சீப் தானா மோகன்...-:)
அடுத்த மாசம் நமக்கு பொறந்த நாள் என்பதால் ஒரு சட்டை எடுத்து குடுத்தாங்க :)
சிறப்பான பதிவு! முகநூல் கிறுக்கல்களாக இருந்தாலும் யோசிக்க வைத்தது! அந்த வங்காள வார்டனை கடலில் தூக்கி வீசக்கூடாது?
ReplyDelete>>இணையம் பல வயது மனிதர்களையும் நண்பர்களாக்கி விடுகிறது. ஒத்த சிந்தனை இருந்தால் போதும். வயது வித்யாசம் இணையத்தில் பொருட்டே இல்லாமல் போய் விடுகிறது !
ReplyDeleteஅன்புள்ள மோகன் குமார்,
நீங்கள் கூறுவது உண்மைதான். என்னுடைய நெருங்கிய நண்பர்கள் ஆகி விட்ட கடுகு ஸார் (அகஸ்தியன்), திரு. பாரதி மணி, திரு. நாஞ்சில் நாடன் ஆகியோருக்கு எனது அப்பாவின் வயது ஆகிறது.
இருந்தாலும் என்னை சீனியர் சிடிசன் ரேஞ்சுக்கு உயர்த்திய உங்கள் அன்பை நினைக்கும்போது கண்கள் பனிக்கிறது. இதயம் இனிக்கிறது :-)
ஆகஸ்ட் மாத மத்தியில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்.
முக நூல் அறிந்தது தான்... மேற்கு வங்க கொடுமை-மிகக் கொடுமை... இணையம் பல வயது மனிதர்களையும் நண்பர்களாக்கி விடுகிறது-உண்மை தான் சார்... பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்... (த.ம.15)
ReplyDeleteமுக நூல் கிறுக்கல்கள் நல்லாருந்துச்சு மோகன் sir
ReplyDeleteஇணையம் பல வயது மனிதர்களையும் நண்பர்களாக்கி விடுகிறது. ஒத்த சிந்தனை இருந்தால் போதும். வயது வித்யாசம் இணையத்தில் பொருட்டே இல்லாமல் போய் விடுகிறது !
ஆம் சரி தான்
சுனிதி சௌகனுக்கப்புறம் ஸ்ரேயா கோஷல் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.அவ்வளவு இனிமையான குரல் வளம் அவருடையது.
ReplyDeleteமே.வங்கத்தில் நடந்ததைப் பார்க்கையில் வருத்தமா இருக்கு. அந்தக் குழந்தையின் மனம் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்குமோ :-(
சுரேஷ் சார்: மிக நன்றி
ReplyDeleteபாலஹனுமான்:
ReplyDelete//ஆகஸ்ட் மாத மத்தியில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்.//
அப்போ தான் அய்யாசாமி பொறந்த நாளும் வருது, வாங்க மீட் பண்ணிடுவோம்; முடிஞ்சா ஒரு ஹோட்டலில் சாப்பிடலாம் (வெஜ் ஹோட்டல் தான் சார்)
நன்றி சரவணன் சார்
ReplyDeleteஅமைதி சாரல்: ஷ்ரேயா குரலை ரசிக்கிறேன். ஆனா அவர் டிவியில் வந்து பாடும்போது மட்டும் அவர் குரலை ரசிக்க முடியாமல் அவர் அழகு ஓவர் டேக் செஞ்சிடுது :))
ReplyDeleteஇணையம் பல வயது மனிதர்களையும் நண்பர்களாக்கி விடுகிறது. ஒத்த சிந்தனை இருந்தால் போதும். வயது வித்யாசம் இணையத்தில் பொருட்டே இல்லாமல் போய் விடுகிறது !
ReplyDeleteவானவில் இனிமை !
ஹவுஸ் பாஸ் romba stricta?
ReplyDeleteராஜராஜேஸ்வரி: நன்றிங்க
ReplyDeleteஅருள்: பப்ளிக்கா கேட்டா எப்படி சொல்றது? நான் ரொம்ப பயந்த சுபாவம் :)
ReplyDelete