முக நூல் கிறுக்கல்கள்
கிச்சன் யார் கையில் இருக்கோ, வீட்டோட கண்ட்ரோல் அவங்க கிட்டே தான் இருக்கும்னு பழமொழி உண்டு.
பெண்கள் கையில் கிட்சன் இருந்தா, வீட்டு கண்ட்ரோல் அவங்க கிட்டே தான் இருக்கு. இது சரி. ஆனா, ஆண்கள் கையில் கிட்சன் இருந்தாலும், வீட்டு கண்ட்ரோல் பெண்கள் கிட்டே தான் இருக்கு
பேசாம வீடுன்னா அது பெண்கள் கண்ட்ரோலில் தான் இருக்கும்னு பழமொழியை மாத்திடுங்கப்பா !

#######
கமல் விஜய் டிவியில் விஸ்வரூபம் பற்றி பேசும் போது literal-ஆக தரையில் உருண்டு புரண்டு சிரித்தேன்.
வழக்கம் போல் தூய தமிழில் முற்று புள்ளி வைக்காமால் நீ........ண்ட வாக்கியங்கள்........பேசினார்.
செம ஹைலைட் : அவர் பேசி முடித்ததும் கோபிநாத் ஏதோ ஒன்று சொல்லி, "நீங்கள் சொல்வதற்கான அர்த்தம் இது தான் என்று எடுத்து கொள்கிறோம்" என்றார். அடேங்கப்பா ! கமல் தமிழில் பேசுவதற்கே
மொழி பெயர்ப்பு தேவையா இருக்கே என மெய் சிலிர்த்தேன் ! # உலக நாயகனே !
"குஜால்" சாமியார்கள்
சாமியார்களில் புது விக்கெட் வின்சென்ட் செல்வகுமார் . மனிதர் கதையை படித்தால் குமட்டுது.
சாமியார்கள் பற்றி நன்கு அறிந்த என் நெருங்கிய நண்பன் பல நிஜ சம்பவங்கள் சொல்லியுள்ளான். அவற்றை இங்கே எழுத்தில் எழுத முடியாது ( நம் ப்ளாகை படிக்கும் பெண்கள் மிக அதிகம்)
அவன் சொன்னதில் எழுத கூடியது இது தான்: " எந்த மதமா இருந்தாலும் சரி, ஒரு சாமியார் கூட செக்ஸ் விஷயத்தில் ஒழுங்கு கிடையாது. ஒவ்வொரு சாமியாரும் பல பேரிடம் செக்ஸ் வச்சிக்காம இருப்பதில்லை. கொஞ்சம் கதை தான் வெளியே தெரியுது "
துறவறம் என்பதே இயற்கைக்கு எதிரானது தான். எந்த மனிதனாலும் செக்ஸ் உணர்வுகளை முழுக்க அழிக்க முடியும் என தோணலை. இப்படி பிரம்மச்சரியம் என்கிற பேரில் பலரை டார்ச்சர் செய்வதை விடுத்து, சாமியார்கள் ஒரே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, பின் சாமியார் பிசினசை தொடரலாம் !
தினம் பதிவு- புதுப்புது அனுபவம்
தினம் பதிவு எழுத ஆரம்பித்ததும் புதுப்புது அனுபவமும், இதுவரை நேரிலோ, மெயிலிலோ, பின்னூடத்திலோ அறிமுகம் ஆகாத மனிதர்களும் காண கிடைக்கின்றனர். இதுவரை அறியாத ஒரு அம்மணி " ஐயா, நாங்கள் குடும்பத்துடன் வட இந்தியா பயணம் செய்ய உள்ளோம்; எந்த ரயிலில் போகலாம், எங்கு தங்கலாம், எந்த இடங்களை சுற்றி பார்க்கலாம் என எங்களுக்கு விரிவாக பதில் எழுதுங்கள் " என்று பள்ளியில் "ஒரு பக்கத்துக்கு மிகாமல் எழுதுக" பாணியில் எழுதி உள்ளார். இவருக்கு இன்னும் பதில் எழுதலை.
இன்னொரு நபர், "இதோ என் போன் நம்பர் - உங்களுடன் பேசணும்" என தந்தி போல் மெயில் அனுப்பினார். என்னமோ ஏதோ என போன் செய்தால் " சார் நாங்க திருச்சியிலே இருக்கோம். நாலைஞ்சு பேச்சிலர்ஸ் சேர்ந்து சிம்லா போறோம்; எப்படி போகலாம் சார்?" என்று பேச ஆரம்பித்தார்.
அய்யாசாமி ரிட்டையர் ஆனதும் டூர் பிசினஸ் பண்ணலாம் போல :-)
இதற்கிடையே ஒருவர் எப்போதோ போட்ட பதிவில் வந்து " ஊட்டி சூப்பர் மார்கெட் பத்தி எழுதுறியே; அவங்க கிட்டே எவ்ளோ கமிஷன் வாங்கினே?" என சட்டையை பிடிக்கிறார். அவரிடம் அய்யாசாமி " அதே கடையில் எனக்கு காய்கறி பை மாத்தி குடுத்தாங்கன்னு அடுத்த வாரமே எழுதிருக்கேன். அதை படிங்க" என கையை பிடித்து கொண்டு பின்னூட்டத்தில் கெஞ்ச வேண்டியதா போச்சு
வாழ்க்கை இப்படி காமெடியா போய் கிட்டு இருக்கு !
நண்பன் தேவா
டில்லி சென்ற போது நண்பன் தேவா இல்லத்தில் தான் தங்கினோம் . அவ்வப்போது வீடுதிரும்பலில் பதிவுகள் எழுதும் தேவாவை நீங்கள் அறிவீர்கள் தானே? தேவா மற்றும் அவர் மனைவியின் உபசரிப்புகள் எங்களை நெகிழ்த்தி விட்டது. நாங்கள் நினைத்திருந்தது " வீட்டில் தங்க மட்டும் செய்வோம்; பெரும்பாலும் அவர்களுக்கு தொந்தரவு இல்லாத படி வெளியில் சாப்பிடுவோம்" என்று. ஆனால் அதற்கு நேர் மாறாய் எல்லா நேரமும் வீட்டில் சாப்பிடுகிற படியே பார்த்து கொண்டார்கள். காலை ஏதாவது இடம் பார்த்து விட்டு மதியம் வீடு வந்து சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்து விட்டு தான், மாலை மீண்டும் வெளியே போனோம். பெரும்பாலும் தேவா தன் காரிலேயே எல்லா இடமும் அழைத்து சென்றான். தேவாவிடம் "அண்ணன்கள்- அக்கா வீட்டை தவிர, யார் வீட்டிலும் நான்கு நாட்கள் நாங்கள் தங்கியதே இல்லை" என்றேன்.
நிற்க. பயண கட்டுரையில் டில்லி பகுதி முடியும் முன்பே தேவா குடும்பம் சென்னைக்கு மாற்றலாகி வந்து விட்டது ! இனி அடிக்கடி சந்திப்போமா அல்லது சென்னை காரர்கள் மாதிரி போனில் மட்டுமே பேசி கொள்வோமா என தெரியலை. இந்தியா முழுக்க சுற்றி வரும் தேவா இப்போது சென்னையில் ! நல்ல ஒரு நண்பன் அருகில் வந்ததில் எனக்கு மகிழ்ச்சியே !
பதிவர் பக்கம்
ஷங்கர் ராமசுப்ரமணியம் என்ற பெயரில் எழுதும் பதிவரின் ப்ளாக் சமீபத்தில் வாசித்தேன். குறிப்பாய் இந்த கவிதையை வாசியுங்கள்
காலை எழுந்தவுடன்
யூட்யூப்பில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குறையொன்றுமில்லை
பிறகு ஜெயமோகன்.இன்
சாருஆன்லைன்
வழியாக முகநூல்.....
ஒரு நிலைச்செய்தி போட்டுவிட்டேன்
எத்தனை லைக் இன்று வரும்..
...............
என்று நீண்டு செல்லும் கவிதையில் சில இடங்களில் கண்ணாடியில் உங்கள் முகம் பார்ப்பது போல் இருக்கும் ! வாசித்து பாருங்கள் !
போஸ்டர் கார்னர்
கல்யாணத்துக்கு பிறகு பெண்கள் எப்படி ஆகுறாங்க. ..ஆண்கள் என்ன ஆகுறாங்க நீங்களே பாருங்க.
சந்தித்த நபர்:
ஞாயிறு காலை பதினோரு மணி அளவில் "சானை பிடிக்கலையோ சானை " என குரல். வீட்டம்மா நம்மை சானை பிடிக்கும் வேலைக்கு டெபியூட் செய்து அனுப்பினார். இரண்டு பொருளுக்கு முப்பது ரூபாய் சொன்னார் அவர். நியாயமான அளவு கேட்டதால் பேரம் பேசாது ஒப்பு கொண்டேன்.
சானை பிடிக்கும் நேரம் பேச்சு கொடுக்க, அரக்கோணத்திலிருந்து வருகிறார் என தெரிந்தது. அரக்கோணத்திலிருந்து மவுன்ட் ஸ்டேஷன் வந்து இறங்கி, அங்கிருந்து ஒவ்வொரு தெருவாக சுற்றி வருகிறார். ரயில் நிலையத்திலிருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் எங்கள் தெருவுக்கு நடந்தே வந்துள்ளார். " எப்படி சார் இவ்வளவு தூரம் நடந்தே வர்றீங்க.. அதுவும் வெய்யிலில் இந்த வெயிட் தூக்கிட்டு?" என்று நான் கேட்க, "இதெல்லாம் ஒரு தூரமா சார்? தினம் எவ்வளவோ தூரம் நடக்கிறோம்................சானை பிடிக்கலையோ சானை " என்றவாறு மெஷினை தோளில் தூக்கி போட்டபடி நடக்கலானார்.
ஐந்து நிமிடம் நின்றதால் நான் டயர்ட் ஆகி வீட்டினுள் போய் உட்கார்ந்து கொண்டேன்.

சுவையான வானவில். கலந்து கட்டி எழுதும் பணியைத் தொடருங்கள் மோகன்.
ReplyDeleteதினம் ஒரு பதிவு என அசத்துறீங்க!
த.ம. 2
நன்றாக இருக்கிறது....
ReplyDelete//சாமியார்கள் ஒரே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, பின் சாமியார் பிசினசை தொடரலாம் ! //
ReplyDeleteஅட நல்ல அறிவுரை தான்
////சாமியார்கள் ஒரே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, பின் சாமியார் பிசினசை தொடரலாம் ! //
ReplyDeleteஅட நல்ல அறிவுரை தான்//
ஆஹா.... கல்யாணம் முடிஞ்சுட்டா அவர் சம்சாரி ஆகிடுவாரே! அப்புறம் என்ன சாமி......யார்....????
7 செய்திகளும் ரொம்ப நல்லா இருந்திச்சு...."சந்தித்த நபர்" என்னை ரொம்பவே சிந்திக்க வைத்து விட்டது..
ReplyDeleteகமலே சொன்னாரே,ஒரு வழியா படத்தோட கதைய சொல்லாம மழுப்பிட்டனா?அப்டின்னு.நாமளா ஒரு அர்த்தம் எடுத்துக்க வேண்டியது தான்.
ReplyDeleteபிசினஸ் ஸ்டார்ட் பண்ணிடுங்க இப்பவே.
ReplyDeleteநீங்கள் கூறியிருப்பது போல், அறிவு ஜீவித்தனம் என்ற எண்ணத்தில் புரியாமல் பேசி மண்டை காய வைப்பதில் கமல் கில்லாடி. எனக்கென்னவோ ரஜினி கொஞ்சம் ஆத்மார்த்தமாகப் பேசுவது போல் தோன்றும்.
ReplyDeleteசுவையான கதம்ப பதிவு! அருமை!
ReplyDelete//அய்யாசாமி ரிட்டையர் ஆனதும் டூர் பிசினஸ் பண்ணலாம் //
ReplyDeleteஅது ஏன் ரிட்டையர் ஆகிற வரைக்கும் வெயிட் பண்ணணும்? இப்பவே ஸைட் பிஸினஸ் ஆரம்பிச்சுடலாமே? “ப்ளாக்கை விட பிஸினஸ் மேல்”!!
//வீடுன்னா அது பெண்கள் கண்ட்ரோலில் தான்//
பேருதான் பெத்த பேரு!!
//கல்யாணத்துக்கு பிறகு ஆண்கள்//
முன்பு “மனைவி திட்டுவது மட்டும் நிற்கவேயில்லை” என்று நீங்க எழுதினதுதான் ஞாபகம் வருது!! இதைத்தான் அப்பவும் இலைமறைகாயா சொல்லிருந்தீங்களோ? :-D
//நல்ல ஒரு நண்பன் அருகில் வந்ததில் எனக்கு மகிழ்ச்சியே //
உங்களின் அளவிலா மகிழ்ச்சி, பப்பளபளா உடையுடன் உள்ள அவரின் (அவர்தானே?) படத்தைப் போட்டதிலிருந்தே தெரிகிறது!! :-)))))))
வானவில் அருமை. நீங்க போட்டிருக்கற போஸ்டரைப் பாத்ததும் சிரிச்சிட்டேன். (ஆனாலும் அநியாயப் பொய்தான்). நீங்கள் சந்திச்ச நபரைப் பத்திப் படிச்சதுல ஏற்பட்டது வியப்பும் பிரமிப்பும்.
ReplyDelete\\துறவறம் என்பதே இயற்கைக்கு எதிரானது தான். எந்த மனிதனாலும் செக்ஸ் உணர்வுகளை முழுக்க அழிக்க முடியும் என தோணலை.\\ நம்மால் முடியவில்லை என்பதற்காக யாராலும் முடியாது என்று நினைப்பது சரியாகாது. போலிகள் எக்கச் சக்கமாக மலிந்த விட்டன, அதனால் ஒரிஜினலே இருக்காது என்ற முடிவுக்கு நாம் தள்ளப் பட்டிருக்கிறோம். நீங்க ஒரு பொளுளை விட்டொழிக்க மனது இடம் தராது, ஆனால் அதை விட சிறந்த ஒன்றை ருசி பார்த்துவிட்டால், இந்த அல்பத்தை விட்டு விடுவது மிகவும் எளிது. பயின்றால் எதுவும் சாத்தியமே.
ReplyDeleteகோழி படம் உண்மையை போட்டு உடைக்குது....... சூப்பர்!!
\\balhanuman said...
ReplyDeleteநீங்கள் கூறியிருப்பது போல், அறிவு ஜீவித்தனம் என்ற எண்ணத்தில் புரியாமல் பேசி மண்டை காய வைப்பதில் கமல் கில்லாடி. எனக்கென்னவோ ரஜினி கொஞ்சம் ஆத்மார்த்தமாகப் பேசுவது போல் தோன்றும்.\\ ரிபீட்டு............!!
for past one month am reading ur blog its super .......sir write abt neyveli book exhibition.....like ur chennai exhibition
ReplyDeleteபுதுப்புது அனுபவம் புன்னகைக்க வைத்தது.
ReplyDeleteசந்தித்த நபர்: எளிய மனிதர்களின் வாழ்க்கை உயர்வானது என்பதை உணர்த்தும் விதமாக முடித்திருப்பது அழகு.
ரசித்தேன்,நன்றி.
ReplyDeleteகோழிகள் படம் பார்த்து குலுங்கி குலுங்கி சிரிச்சேன் மக்கா....!
ReplyDeleteபோஸ்டர் கார்னர் - வெடி சிரிப்பு!
ReplyDeleteவெங்கட் நாகராஜ் said.
ReplyDeleteசுவையான வானவில். கலந்து கட்டி எழுதும் பணியைத் தொடருங்கள் மோகன்.
***
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பு ரணகளமாகிடுச்சு. "கலந்து கட்டி" எழுதுறதா சொல்றதை அய்யாசாமி ரொம்ப பெருமையா நினைசிகிட்டு தினம் எழுதுகிட்டு இருக்கார். எவ்ளோ நாள் முடியுமோ?
நன்றி வெங்கட்
கோவை நேரம்: நன்றி ! சென்னை அருகில் இப்போது இருந்து கொண்டு சென்னைக்குள் வர மாட்டேன் என்கிறீர்கள் இருக்கட்டும். என்னிக்காவது பாக்காமலா போக போறோம்?
ReplyDeleteதுளசி டீச்சர்: மேல்மருவத்தூர் சாமிகள் மற்றும் ஜாக்கி வாசுதேவ் ஆகியோர் திருமணம் ஆனவர்கள் தானே மேடம்? அது போல் சாமியாரை இருக்கலாமே?
ReplyDeleteநன்றி ராஜ். தங்கள் மெயில் கிடைத்து மகிழ்ந்தேன். விரைவில் தங்களோடு பேசுவேன் என நம்புகிறேன்
ReplyDeleteஅட புது மாப்பிள்ளை கோகுல், எப்படி இருக்கீங்க? வரவுக்கும் வாக்குக்கும் நன்றி.
ReplyDeleteஆமா நீங்க கமல் ரசிகரா? நான் கூட ஒரு காலத்தில் ரசித்து கொண்டிருந்தேன்
பலஹனுமான்: ஆம் உண்மை தான். அடுத்த வாரம் வானவில்லில் உங்களை பற்றி மிக சிறிதாக எழுத எண்ணம் தப்பாய் ஏதும் இராது பயம் வேண்டாம்
ReplyDeleteநன்றி சுரேஷ் மகிழ்ச்சி
ReplyDeleteஹுசைனம்மா
ReplyDelete//ப்ளாக்கை விட பிஸினஸ் மேல்”!!
என்ன இப்படி சொல்லிட்டீங்க ! சரி விடுங்க. கொஞ்ச நாளில் ப்ளாகிலேயே பிசினெஸ் ஆரம்பிச்சிடலாம்
//வீடுன்னா அது பெண்கள் கண்ட்ரோலில் தான்//
பேருதான் பெத்த பேரு!!
செமையா சொன்னீங்க. !
//பப்பளபளா உடையுடன் உள்ள அவரின் (அவர்தானே?) //
அவரே ! நன்றி
நன்றி தாஸ், கோழி படம் ஆண்கள் பலரையும் கவர்ந்துள்ளது
ReplyDeleteநன்றி பால கணேசன். நான் சென்னையில் உள்ளேன். நெய்வேலி புத்தக கண்காட்சி செல்ல வில்லை. நீங்கள் கடலூர் என்பதால் அது பற்றி தகவல் அனுப்பினால் இங்கு(ம்) பகிர்கிறேன்
ReplyDeleteநீங்கள் சந்தித்த நபர் சிந்திக்க வைத்திருக்கிறார் கோழிகள் படம் ரசித்து சிரித்தேன் சுவையான பகிர்வு
ReplyDeleteஆர்.வி.சரவணன்
வலங்கைமான்
குடந்தையூர்
ராமலக்ஷ்மி said...
ReplyDeleteசந்தித்த நபர்: எளிய மனிதர்களின் வாழ்க்கை உயர்வானது என்பதை உணர்த்தும் விதமாக முடித்திருப்பது அழகு.
**
மிக அழகாய் நான் சொல்ல வந்ததை உங்கள் வார்த்தைகளில் சொல்லி விட்டீர்கள். பெரியோர் பெரியோரே !
மனோ: ஆம் மக்கா நன்றி
ReplyDeleteகிருஷ்: நன்றி மகிழ்ச்சி
ReplyDeleteவரலாற்று சுவடுகள்: நன்றி நண்பா
ReplyDeleteவலங்கை மான் சரவணன்: அட நம்ம ஊர் காரரா நீங்கள்? மிக மகிழ்ச்சி. நான் நீடாமங்கலம் என்பது தெரியும் தானே? தற்போது எந்த ஊரில் உள்ளீர்கள்?
ReplyDeleteசார் நான் வேலைக்காக இருப்பது சென்னையில் என் வீடு வலங்கைமானில் உள்ளது நான் குடந்தையூர் என்ற ப்ளாக் எழுதி வருகிறேன் சமீபத்தில் தான் தங்கள் தளம் பார்த்து பதிவுகள் படிக்க ஆரம்பித்திருக்கிறேன் வாழ்த்துக்கள்
ReplyDeleteசாமி ஒகே...அதென்ன சாமியார்? யாரொருவரும் சாதாரண மனிதரே....எனக்கு இதுபோன்ற ஆட்களிடம் துளி கூட நம்பிக்கையோ, ஈடுபாடோ இல்லை.
ReplyDeleteகலக்குறீங்க சார் ! நன்றி !
ReplyDelete(TM 13)
வானவில் ஒளிருது.. அதுவும் சந்தித்தநடர்.. அருமையான சிந்தனை.. கிராமங்களிலிருந்து சிறுநகரங்களுக்கு கீரை தலையில் சுமந்துவரும் பெண்களை பாருங்கள். இடுப்பில் குழந்தைவேறு இருக்கும்..பாவம் உழைக்கும் மனிதர்கள்.
ReplyDelete// சாமியார்கள் ஒரே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, பின் சாமியார் பிசினசை தொடரலாம் ! //
ReplyDelete'க்ருஹ சாஸ்திரம்' என்பது ஒருவர் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி பிள்ளைப் பேரு பெறுவது.
அப்படி 'க்ருஹ சாஸ்திரம்' செய்த பின்னர்தான் ஒருவர் எங்கள்( நாங்கள் தொன்று தொட்டு வழிபடும்) ஆஸ்ரமத்தின் குருவாக முடியும்.
Guru is supposed to have enough knowledge on 'Aanmikam' and guide others to attain Mukthi. So, it is not that 'Guru' Should be a 'Brahmacharya'. Hence, a married man after setting his family (dependent members settle in life) can come out open to guide others in calm / safe path to attain 'mukthi'
ரகு: உங்கள் கருத்தை ஏற்கிறேன். எனக்கும் அந்த எண்ணம் உண்டு
ReplyDeleteதனபாலன் சார்: நன்றி
ReplyDeleteரத்னவேல் ஐயா நன்றி
ReplyDeleteUma said...
ReplyDeleteகிராமங்களிலிருந்து சிறுநகரங்களுக்கு கீரை தலையில் சுமந்துவரும் பெண்களை பாருங்கள். இடுப்பில் குழந்தைவேறு இருக்கும்..பாவம் உழைக்கும் மனிதர்கள்.
**
அடடா ! அருமையாய் சொன்னீர்கள். நீங்கள் சொன்ன விதம் அந்த பெண்மணியை கண் முன் கொண்டு வருகிறது
மாதவா: மிக நல்ல விளக்கம் தந்தமைக்கு மிக மிக நன்றி.
ReplyDeleteஇப்ப தான் படித்தேன்...சுவாரஸ்யம் குறையாமல் இருக்கு...
ReplyDeleteதொடருங்கள் மோகன்...
எத்தனை வண்ணமயமான வானவில் !!!
ReplyDelete- சுபாஷிணி