உணவகம் அறிமுகம் வரிசையில் நிறைய ஹோட்டல்கள் குறித்து எழுதி, Draft-ல் வைத்து விட்டேன். ஆனால் அவற்றில் பல வெஜ் ஹோட்டல்களே !
ரெவரி மற்றும் கோவை நேரம் என இரண்டு பதிவர்கள் "எப்போதும் வெஜிடேரியன் ஹோட்டல் பற்றியே எழுதுறே; நல்ல நான் வெஜ் ஹோட்டல் பற்றி எழுதலைன்னா நடக்கிறதே வேற" என மிரட்டல் விடுத்ததால் இதோ உங்களுக்காக- பொன்னுசாமி !
சென்னைவாசிகளுக்கு பொன்னுசாமி பற்றி தெரியாமல் இருக்காது. மற்றவர்களுக்கு மட்டுமே இந்த பெயரும் ஹோட்டலும் புதிதாய் இருக்கலாம்.
சென்னையில் நான் இதுவரை சாப்பிட்ட நான் வெஜ் ஹோட்டல்களில் தி பெஸ்ட் என்றால் அது பொன்னுசாமி தான் !
சுத்தம், சுவை, வெரைட்டி என எல்லா விதத்திலும் பொன்னுசாமி மிக அருமை ! விலை தான் சற்று அதிகம். வெஜிட்டேரியனுக்கு சரவணபவன் விலை எப்படி இருக்குமோ அதே மாதிரி தான் நான் வெஜ்ஜில் இவர்கள் விலை சற்று அதிகமாய் இருக்கும். வயிற்றை பதம் பார்க்காத இவர்களின் உணவு வகைகளுக்கு சென்னைவாசிகள் ஏராளமான பேர் ரசிகர்கள் தான்.
வேலுபிள்ளை மெஸ் என்ற பெயரில் 1954-ல் ராயப்பேட்டையில் துவங்கப்பட்டது இந்த ஹோட்டல். இதனை ஆரம்பித்த வேலு பிள்ளை அவர்களின் மறைவுக்கு பின் அவரது மூன்று மகன்களும் இணைந்து ஹோட்டல் வியாபாரத்தை விரிவு படுத்தினர். மூன்று மகன்களில் ஒருவரான பொன்னுசாமி பெயரில் ஹோட்டல் இயங்க துவங்கியது.
இவர்களுக்கு சென்னையில் மட்டுமே ஒன்பது கிளைகள் உள்ளன. பெங்களூரு, விழுப்புரம், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் மட்டுமல்ல, துபாய் & சிங்கப்பூரிலும் உள்ளது பொன்னுசாமி ஹோட்டல் !
எப்போதும் வாழை இலையில் தான் பரிமாறுவார்கள். தட்டு என்பதே கிடையாது. அதுவே நன்றாய் இருக்கும்
நாங்கள் இங்கு விரும்பி சாப்பிடும் சில டிஷ்களை சொல்கிறேன் :
பிஷ் பிங்கர் : முள்ளே இல்லாமல் மொறுமொறுவென மீன் இருப்பதால் குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்
பிரியாணி: ஒவ்வொரு ஹோட்டலுக்கும் பிரியாணி டேஸ்ட் சற்று மாறும் அல்லவா? இங்கு பிரியாணியும் நன்கு இருக்கும்
இட்லி மற்றும் சிக்கன் குருமா : சிம்பிள் ஆக நன்றாக இருக்கும். அதிகம் சாப்பிடுற மூட் இல்லாத நாட்களில் இட்லி சிக்கன் குருமா நான் prefer செய்வேன்.
இடியாப்பம் - மட்டன் பாயா - நண்பர்களுடன் செல்லும் போது சிலர் இதனை மிக விரும்பி, கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இங்கு இது மிக ஸ்பெஷல் !
பரோட்டா குருமா: நம்ம ஆல் டைம் விருப்ப உணவு: நல்ல சிக்கன் சைட் டிஷ் இருக்கும் போது பரோட்டா சாப்பிடாம இருக்க முடியுமா?
*************
நான் சென்னையில் வடபழனி மற்றும் ராயபேட்டையில் தான் மிக அதிகம் முறை சாப்பிட்டுள்ளேன். வடபழனி பொன்னுசாமிக்கு சில சினிமா நடிகர்களும் வருவதை பார்த்துள்ளேன். ஒரு முறை நாசர் வந்து தன் வீட்டுக்கு பார்சல் வாங்கி சென்றார்.
நான் வெஜ் சாப்பிடுபவரானால், சென்னையிலிருந்தும் நீங்கள் இதுவரை செல்லாவிடில், ஒரு முறை அவசியம் சென்று பாருங்கள் !
பர்சில் சற்று அதிக பணம் அல்லது கிரெடிட் கார்டு எடுத்து செல்ல மறக்க வேண்டாம் :))
ரெவரி மற்றும் கோவை நேரம் என இரண்டு பதிவர்கள் "எப்போதும் வெஜிடேரியன் ஹோட்டல் பற்றியே எழுதுறே; நல்ல நான் வெஜ் ஹோட்டல் பற்றி எழுதலைன்னா நடக்கிறதே வேற" என மிரட்டல் விடுத்ததால் இதோ உங்களுக்காக- பொன்னுசாமி !
சென்னைவாசிகளுக்கு பொன்னுசாமி பற்றி தெரியாமல் இருக்காது. மற்றவர்களுக்கு மட்டுமே இந்த பெயரும் ஹோட்டலும் புதிதாய் இருக்கலாம்.
சென்னையில் நான் இதுவரை சாப்பிட்ட நான் வெஜ் ஹோட்டல்களில் தி பெஸ்ட் என்றால் அது பொன்னுசாமி தான் !
சுத்தம், சுவை, வெரைட்டி என எல்லா விதத்திலும் பொன்னுசாமி மிக அருமை ! விலை தான் சற்று அதிகம். வெஜிட்டேரியனுக்கு சரவணபவன் விலை எப்படி இருக்குமோ அதே மாதிரி தான் நான் வெஜ்ஜில் இவர்கள் விலை சற்று அதிகமாய் இருக்கும். வயிற்றை பதம் பார்க்காத இவர்களின் உணவு வகைகளுக்கு சென்னைவாசிகள் ஏராளமான பேர் ரசிகர்கள் தான்.
வேலுபிள்ளை மெஸ் என்ற பெயரில் 1954-ல் ராயப்பேட்டையில் துவங்கப்பட்டது இந்த ஹோட்டல். இதனை ஆரம்பித்த வேலு பிள்ளை அவர்களின் மறைவுக்கு பின் அவரது மூன்று மகன்களும் இணைந்து ஹோட்டல் வியாபாரத்தை விரிவு படுத்தினர். மூன்று மகன்களில் ஒருவரான பொன்னுசாமி பெயரில் ஹோட்டல் இயங்க துவங்கியது.
இவர்களுக்கு சென்னையில் மட்டுமே ஒன்பது கிளைகள் உள்ளன. பெங்களூரு, விழுப்புரம், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் மட்டுமல்ல, துபாய் & சிங்கப்பூரிலும் உள்ளது பொன்னுசாமி ஹோட்டல் !
எப்போதும் வாழை இலையில் தான் பரிமாறுவார்கள். தட்டு என்பதே கிடையாது. அதுவே நன்றாய் இருக்கும்
நாங்கள் இங்கு விரும்பி சாப்பிடும் சில டிஷ்களை சொல்கிறேன் :
பிஷ் பிங்கர் : முள்ளே இல்லாமல் மொறுமொறுவென மீன் இருப்பதால் குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்
பிரியாணி: ஒவ்வொரு ஹோட்டலுக்கும் பிரியாணி டேஸ்ட் சற்று மாறும் அல்லவா? இங்கு பிரியாணியும் நன்கு இருக்கும்
இட்லி மற்றும் சிக்கன் குருமா : சிம்பிள் ஆக நன்றாக இருக்கும். அதிகம் சாப்பிடுற மூட் இல்லாத நாட்களில் இட்லி சிக்கன் குருமா நான் prefer செய்வேன்.
இடியாப்பம் - மட்டன் பாயா - நண்பர்களுடன் செல்லும் போது சிலர் இதனை மிக விரும்பி, கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இங்கு இது மிக ஸ்பெஷல் !
பரோட்டா குருமா: நம்ம ஆல் டைம் விருப்ப உணவு: நல்ல சிக்கன் சைட் டிஷ் இருக்கும் போது பரோட்டா சாப்பிடாம இருக்க முடியுமா?
*************
நான் சென்னையில் வடபழனி மற்றும் ராயபேட்டையில் தான் மிக அதிகம் முறை சாப்பிட்டுள்ளேன். வடபழனி பொன்னுசாமிக்கு சில சினிமா நடிகர்களும் வருவதை பார்த்துள்ளேன். ஒரு முறை நாசர் வந்து தன் வீட்டுக்கு பார்சல் வாங்கி சென்றார்.
நான் வெஜ் சாப்பிடுபவரானால், சென்னையிலிருந்தும் நீங்கள் இதுவரை செல்லாவிடில், ஒரு முறை அவசியம் சென்று பாருங்கள் !
பர்சில் சற்று அதிக பணம் அல்லது கிரெடிட் கார்டு எடுத்து செல்ல மறக்க வேண்டாம் :))
எழுத்து உங்களுக்கு வசப்பட்டு விட்டது. சுவையான பதிவு....
ReplyDeleteபடங்களுடன் உணவக அறிமுகம் அருமை
ReplyDeleteரசித்துப் படித்தோம்
ருசித்து மகிழ நிச்சயம் வருவோம்
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma3
ReplyDeleteதாம்பரத்தில் ஒரு கிளை உண்டு தல....
ReplyDeleteதன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
ReplyDeleteஇன்னுயிர் நீக்கும் வினை.
தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.
அறவினை யாதெனின் கொல்லாமை
கோறல் பிறவினை எல்லாந் தரும்.
அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.
நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.
வாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.
கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.
கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
நோய் நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறப்பில் பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர் என்று அறிந்தோர் கூறுவர்.
௨௱௫௰௧) தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்.மு.வ உரை:தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்.
ReplyDeleteசாலமன் பாப்பையா உரை:தன் உடம்பை வளர்ப்பதற்காக இன்னோர் உடம்பைத் தின்பவன் மனத்துள் இரக்கம் எப்படி இருக்கும்?.
௨௱௫௰௨) பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.மு.வ உரை:பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.
சாலமன் பாப்பையா உரை:பொருளால் பயன் பெறுவது அதைப் பாதுகாக்காதவர்க்கு இல்லை; அது போல, இரக்கத்தால் பயன்பெறுவது இறைச்சி தின்பவர்க்கு இல்லை.
௨௱௫௰௩) படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம்.மு.வ உரை:ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது.
சாலமன் பாப்பையா உரை:கத்தியைத் தன் கையில் பிடித்திருப்பவரின் மனம், இரக்கத்தை எண்ணிப் பாராதது போலப் பிறிதொரு உடலைச் சுவைத்து உண்டவரின் மனமும் இரக்கத்தை எணணாது.
௨௱௫௰௪) அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் பொருளல்ல தவ்வூன் தினல்.மு.வ உரை:அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.
சாலமன் பாப்பையா உரை:இரக்கம் எது என்றால் கொலை செய்யாமல் இருப்பதே; இரக்கம் இல்லாதது எது என்றால் கொலை செய்வதே; பாவம் எது என்றால் இறைச்சியைத் தின்பதே.
௨௱௫௰௫) உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு.மு.வ உரை:உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.
சாலமன் பாப்பையா உரை:இறைச்சியைத் தின்னாது இருத்தல் என்னும் அறத்தின்மேல் உயிர்நிலை இருக்கிறது. இதை மீறித் தின்னும் உயிர்களை நரகம் விழுங்கும்; வெளியே விடவும் செய்யாது.
௨௱௫௰௬) தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.மு.வ உரை:புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.
சாலமன் பாப்பையா உரை:தின்பதற்காகவே கொலை செய்பவர் இல்லை என்றால், இறைச்சியை விலைக்குத் தருபவரும் உலகில் எங்கும் இருக்கமாட்டார்.
௨௱௫௰௭) உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ணது உணர்வார்ப் பெறின்.மு.வ உரை:புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.
சாலமன் பாப்பையா உரை:இறைச்சி, இன்னோர் உடம்பின் புண்; அறிந்தவர் அதை உண்ணக்கூடாது.
௨௱௫௰௮) செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன்.மு.வ உரை:குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:பிழையற்ற அறிவினை உடையவர், உயிர் பிரிந்த இறைச்சியை உண்ணமாட்டார்.
௨௱௫௰௯) அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று.மு.வ உரை:நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.
சாலமன் பாப்பையா உரை:(மந்திரம் சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய) அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது.
௨௱௬௰) கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும்.மு.வ உரை:ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
சாலமன் பாப்பையா உரை:எந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.
தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி
ReplyDeleteதாஸ்: நான் வெஜ் ஹோட்டல் பத்தி எழுதாட்டி ரெவரி & கோவை நேரம் திட்டுறாங்க.
ReplyDeleteநான் வெஜ் ஹோட்டல் பத்தி போட்டா நீங்க திட்டுறீங்க. ஐ யாம் பாவம் !
சும்மா........ தமாசு........ தமாசு........... [படிச்சுட்டு, நாலு பேரு Non Veg விட்டுட்டா நான் சந்தோஷப் படாமலா இருப்பேன்........... ஹி........ஹி.....ஹி...........]
ReplyDeleteநான் நான்வெஜ் சாப்பிடுவதில்லை. ஆனாலும் உங்கள் நடையை (ஐமீன் எழுத்து நடை) ரசித்தேன்.
ReplyDeleteசரவணபவனில் சென்னை வரும் பொழுது bill இதுவரை என் அத்திம்பேர் (அக்காவின் கணவர்) தான் கொடுப்பார் என்பதால் எனக்குத் தெரியவில்லையோ என்னவோ? மற்றபடி fast food அல்லது ரயில் நிலையத்தில் விலை அதிகம் போல் தோன்றவில்லையே.
ReplyDeleteநான் நான் வெஜ் சாப்பிடுவதில்லை இருந்தும் வீட்டில் சாப்பிடுபவர்களுக்காக ஒரு முறை சென்று பார்க்கிறேன்
ReplyDeleteபதிவு அருமை. இப்போதெல்லாம் வாரயிறுதியில் வாழ்க்கை ஓடுவது, பாண்டிச்சேரியில் இருக்கும் பொன்னுசாமியால் தான். ஆனாலும் சாப்பிடுவது சைவம் தான். சைவச்சாப்பாடும் இவர்களிடம் நல்லாத்தான் இருக்கிறது.
ReplyDeleteபாலஹனுமான்: மகிழ்ச்சி நன்றி
ReplyDeleteரமணி சார்: நன்றி
ReplyDeleteவழிப்போக்கன் யோகேஷ்: ஆம் நண்பா. சென்னையில் எங்கெங்கு உள்ளது என்பதை நான் பதிவில் சொல்லலை
ReplyDeleteபாலகணேஷ் சார்: நன்றி தங்கள் வருகைக்கு
ReplyDeleteநான் சைவமென்றாலும் அசைவ பதிவை ரசித்தேன்!
ReplyDeleteசீனி: சரவணா பவனில் சாதா தோசை ஐம்பது அல்லது அறுபது ரூபாய் இருக்கும். அப்ப பாத்துக்குங்க அவங்க விலை எப்படி என்பதை
ReplyDeleteசரவணன்: நன்றி நண்பரே. உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பிடிக்கும் என்பதால் ஒரு முறை சென்று பாருங்கள்
ReplyDeleteநன்றி நித்திலன். நீங்கள் சொல்லும் தகவல் மகிழ்ச்சி தருகிறது
ReplyDeleteஅப்படியா? நன்றி சுரேஷ்
ReplyDeleteநலமா மோகன்?
ReplyDeleteநன்றி நேயர் விருப்பத்தை நிறைவேற்றியதற்கு...
இந்த வார தொடக்கத்தில் மயிலர் தேவதை பிம்பம் மூலம் நிறைவேற்றினார்...
இன்னைக்கு நீங்க..
நன்றி மறுபடியும்...
எனக்காக தாஸிடம் அடி வாங்குவதற்கு...
அஞ்சப்பர்...அமராவதி..தலப்பாக்கட்டு...விருதுநகர்..முனியாண்டி விலாஸ் (எல்லாம் இப்ப இருக்கா தெரியலை) வரிசையில் பொன்னுசாமி எனக்கு மிகவும் பிடிக்கும்...
கல்யாணத்திற்கு முன்னாடி எங்க வீட்டுக்காரம்மாவோடு சுத்தும் போது உச்சி வெயிலில் உள்ளே நுழைந்தோம்...
அப்ப சின்னதா இருக்கும்...உள்ள ஒரே கரடு முரடான ஆசாமிகளா சாபிட்டுட்டு இருந்தாங்க...வாசனை மூக்கை துளைத்தாலும் அப்படியே விடு ஜூட்....நம்ம லெவல் அவ்வளவுதான்னு நினைச்சிறக்கூடாதுன்னு வண்டியை வட பழனி அமராவதி பக்கம் திருப்பினோம்...
அதுக்கப்புறம் FRIENDS கூட அடிக்கடி போய் அடிமை ஆயாச்சு...
சைவ சகோதரர்கள் மன்னிக்க....
ReplyDeleteஅசைவப்பிரியர்/வெறியர் என்ற முறையில் ஒரு அசைவ உணவகத்தின் சுவையை/புகழை அதன் மட்டன் சுக்கா வறுவல் நிர்ணயிபபதாய் நினைக்கிறேன்...
ஒரு காலத்தில் பிரியாணி அளவுகோலாய் இருந்தது...
ENZOY
ராகட் பிளாசால இருக்க பொசாமி ஹோட்டல்ல நானும் சாப்பிட்டுருக்கேன்,வெல ரொம்ப அதிகம்ங்க..
ReplyDeleteஇப்போ ஈரோட்டுலையும் திறந்திருக்காங்க போகனும் தல :-)
பதிவு நன்றாக இருந்தது. பொன்னுசாமி இங்கு அமெரிக்காவிலும் இருக்கிறது. பொதுவாக நான் இந்திய உணவகங்களுக்கு விலை காரணமாக செல்வதில்லை. இங்கே இருக்கும் அஞ்சப்பரில் தலைக்கு 20 டாலருக்கு குறைவாக உணவருந்த முடியாது. மெக்சிகன் உணவகத்தில் 20 டாலருக்கு நிச்சயம் இரண்டு பேர் உண்ணலாம், அதுவும் அருமையாக உணவுடன். ஆனாலும் கூட்டம் குறைவதே இல்லை.
ReplyDeleteபடங்களுடன் ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க. சாப்பாடு பத்தி சொன்னிங்க ஆனா உபசரிப்பு சுத்த மோசம் இங்க OMR ல அவங்களோட உணவகம் இருக்கு, சாப்பாட எடுத்து வாய்ல வைத்த ரெண்டாவது நிமிடம்
ReplyDeleteபின்னாடியே நின்னு எப்படா எழுந்திரிப்பானுங்கன்னு பேசுவானுங்க. ஏன்னா இவங்களுக்கு சாப்பிட்டவர்கள் திரும்பி வரணும்னு அவசியம் இல்லை, போதுமான அளவுக்கு IT தொழிலாளர்கள் கூப்பனோட(உணவு கூப்பன் ) வருவாங்க. அதனால சுத்தமா யாரையும் மதிக்கமாட்டானுங்க. இதுக்கு (நுங்கம்பாக்கம்) அஞ்சப்பர் என்னோட விருப்பம்.
ரெவரி said
ReplyDelete//அஞ்சப்பர்...அமராவதி..தலப்பாக்கட்டு...விருதுநகர்..முனியாண்டி விலாஸ் (எல்லாம் இப்ப இருக்கா தெரியலை) வரிசையில் //
முனியாண்டி விலாஸ் மட்டும் தெரியலை. மற்றவை இருக்கு
//ஒரு அசைவ உணவகத்தின் சுவையை/புகழை அதன் மட்டன் சுக்கா வறுவல் நிர்ணயிபபதாய் நினைக்கிறேன்//
என்னவோ மட்டன் மீது அதிக நாட்டம் இல்லை. நீங்கள் சொன்னதால் ஒரு முறை முயற்சித்து பார்க்கிறேன்
வாங்க ஈரோடு கார்த்திக். விலை அதிகம் தான். ஈரோடிலும் வந்துடுச்சா? ரைட்டு
ReplyDeleteஅமரபாரதி: வாங்க. உணவகம் பதிவுக்கு மட்டும் தான் வர்றதுன்னு வச்சிருக்கீங்க போல. என்ன இருந்தாலும் பேர் வச்ச பாசம் இல்லியா? :))
ReplyDelete(மத்த நேரமும் எட்டி பாருங்க நண்பா )
NSK : அடேங்கப்பா? இப்படியா பண்றாங்க? உங்க அனுபவம் பகிர்ந்தமைக்கு நன்றிங்க
ReplyDeleteArumai
ReplyDelete//மத்த நேரமும் எட்டி பாருங்க நண்பா//
ReplyDeleteஅப்படின்னு ஒன்னும் இல்ல மோகன். எல்லா பதிவையும் படிக்கிறேன், பின்னூட்டம் இட நினைக்கும் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுகிறேன். அவ்வளவே.
படித்தேன்.. ரசித்தேன்.. :)
ReplyDeleteத.ம. வோட் போட்டாச்சு!
வணக்கம்..எங்க விருப்பத்தை நிறைவேத்தி விடீங்க...ஒரு ஹோட்டல் பார்த்து இருக்கேன் உளுந்தூர்பேட்டை டு விழுப்புரம் ரோட்டில்..எனக்கு அது வெஜ் ஹோட்டலா இருக்குமே என்ற சந்தேகத்தில் நுழையல..ஏன்னா பேருக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லை..திண்டுக்கல் வேணு பிரியாணி, தலப்பாகட்டி பிரியாணி இப்படி கேள்வி பட்டிருப்பதால் என்னவோ பொன்னுசாமி என்ற பேரை பார்த்ததும் சைவம் என்று நினைத்து விட்டேன்,,,கூடிய விரைவில் டேஸ்ட் பார்க்குறேன்...
ReplyDeleteபோட்டோ எடுத்து இருக்கலாம்..
கோவை வந்தால் சொல்லுங்க.நாம திண்டுக்கல் வேணு வை ஒரு பிடி பிடிக்கலாம்..பிரியாணி அவ்ளோ சுவையா இருக்கும்.கோலா உருண்டை செமையா இருக்கும்...வஞ்சிரம் நச்சுன்னு இருக்கும்...இப்பவே நாக்குல எச்சில் ஊறுது..சீக்கிரம் வாங்க,,,கோவைக்கு..
ReplyDeleteபோட்டு தாக்குங்க :)
ReplyDeleteகோவை நேரம், அங்கண்ணன் கடையை விட தின்டுக்கல் வேணு சுவை அதிகமா?
ReplyDeleteஎனக்கு இன்னும் தலப்பாகட்டிதான் பெஸ்ட்டாக தோன்றுகிறது :)
ReplyDeleteகடந்த மூன்று வாரமா தீவிர வெஜிடேரியனா மாறியிருக்கேன். அப்படியே மெய்ன்டெய்ன் பண்ணமுடியுமான்னு தெரியல...பார்ப்போம்..
ஒருமுறை அலுவலகப் பிரிவுபசாரப் பார்ட்டி அங்கு நடந்த போது சென்று மாட்டியிருக்கிறேன்! ஏனென்றால் நான் வெஜ்!!
ReplyDeleteஅஞ்சப்பர் அரசப்பர் எல்லாம் ருசிப் பந்தயத்தில் ஓடப்பர்களா? முனியாண்டி விலாஸ்? தலப்பாகட்டியில் பிரியாணி மட்டும்தான் கிடைக்கும் என்று நினைக்கிறேன்! சரியா? மதுரையில் வேலு மெஸ்ஸும், கோனார் மெஸ்ஸும் ரொம்பப் பிரபலம்.
மட்டனில் சுக்கு போட்டால் மட்டன் சுக்காவா?
தமிழ் மணத்தில் முதல் இடத்தில இந்த இடுகை
ReplyDeleteவாசகர்களால் அதிகம் பார்வையிடப்பட்ட இடுகைகள்
சூடான இடுகைகள்
இன்று
உணவகம் அறிமுகம்-பொன்னுசாமி ஹோட்டல்
மோகன் குமார்
///அமரபாரதி///இப்போ அங்கண்ணன் சரியில்ல..வாழை இலையில வச்சி கொடுத்தா...நன்றாக இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள்..
ReplyDeleteரத்னவேல் நடராசன் ஐயா: பயணத்தில் உள்ளீர்கள் என நினைக்கிறேன் நன்றி
ReplyDeleteஅமர பாரதி said...
ReplyDelete//மத்த நேரமும் எட்டி பாருங்க நண்பா//
அப்படின்னு ஒன்னும் இல்ல மோகன். எல்லா பதிவையும் படிக்கிறேன், பின்னூட்டம் இட நினைக்கும் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுகிறேன். அவ்வளவே.
நன்றி அமரபாரதி மகிழ்ச்சி
கோவை நேரம் said...
ReplyDeleteகோவை வந்தால் சொல்லுங்க.நாம திண்டுக்கல் வேணு வை ஒரு பிடி பிடிக்கலாம்
ரைட்டு நிச்சயம் சொல்றேன். கோவை என்று விட்டீர்களா என்ன? சென்னை தாண்டி ஒரு வேலைக்காக வந்து இருப்பதாக சொன்னீர்களே
நன்றி வெங்கட்; உங்களுக்கு சம்பந்தம் இல்லாத பதிவு எனும் போதும் வாசித்தமைக்கு நன்றி
ReplyDeleteரகு said...
ReplyDeleteஎனக்கு இன்னும் தலப்பாகட்டிதான் பெஸ்ட்டாக தோன்றுகிறது :)//
எனக்கும் பிடிக்கவே செய்தது. தலைப்பா கட்டு பற்றி எழுதிடுவோம்
வரலாற்று சுவடுகள் நன்றி பாஸ்
ReplyDeleteஸ்ரீராம். said...
ReplyDeleteதலப்பாகட்டியில் பிரியாணி மட்டும்தான் கிடைக்கும் என்று நினைக்கிறேன்!
இல்லை; பிரியாணிக்கு பேமஸ் என்றாலும் மற்றவையும் கிடைக்கும்
//மட்டனில் சுக்கு போட்டால் மட்டன் சுக்காவா?//
இல்லை; மட்டன் வறுத்தால் மட்டன் சுக்கா. இன்னும் நிறைய இருக்கு எனக்கு தெரியலை
சுவைக்கின்றது.
ReplyDeleteமகளுக்குப் பிடித்த உணவுகள்.
@அமரபாரதி // அங்கண்ணன் கடையை விட தின்டுக்கல் வேணு சுவை அதிகமா? //
ReplyDeleteஅண்ணா அந்தக்கட சுத்த வேஸ்ட்டுணா..
வேணு நல்லாருக்கு ஆனா ஒரு தடவைக்கு மேல சாப்பிட முடியல...
கிராஸ்கட் ரோட்டுல ஒரு கடை இருக்கும் பேர் மறந்துபோச்சு அதுவேண கொஞ்சம் தேவலைணா :-)
அடுத்த முறை போவோம் கார்த்திக். ஈரோடு காப்ஸ் புட்ல ஆரம்பிச்சு ஒரு ரவுண்ட் விடுவோம்.
ReplyDeleteதமிழ்மணம் மகுடம்
ReplyDeleteகடந்த 2 நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை
உணவகம் அறிமுகம்-பொன்னுசாமி ஹோட்டல் - 18/18
மோகன் குமார்