பதிவர்கள் ஒவ்வொருவரும் சிரமப்பட்டு எழுதுவது, தான் எழுதுவதை நிறைய பேர் வாசிக்க வேண்டும் என்பதால் தான். உள்ளடக்கம் நன்கிருக்க வேண்டும், தலைப்பு Catchy ஆக இருக்க வேண்டும் என்பதுடன் எந்த நேரத்தில் வெளியிடுகிறோம் என்பதும் ஒரு முக்கிய விஷயம் தான்.
எனக்கு தெரிந்த வரை நம் ப்ளாகுக்கு ரெகுலராய் தொடர்ந்து வருபவர்கள், Dashboard-ஐ பார்த்து விட்டு, வாசிப்பதால், எப்போது வேண்டுமானாலும் வந்து வாசிக்கிறார்கள். கமன்ட் போடுகிறார்கள். எனவே ரெகுலர் readers-ஐ பொறுத்தவரை நீங்கள் எந்த நேரத்தில் வெளியிடுகிறீர்கள் என்பதில் எந்த வித்யாசமும் இல்லை. சில நேரம் மெதுவாய் படிப்பார்கள். அவ்வளவு தான்.
ஆனால் எந்த ஒரு பதிவையும் ரெகுலராய் வாசிப்போர் கிட்டத்தட்ட 20௦ சதவீதம் மட்டுமே. மீதம் 80 %-க்கும் மேல் திரட்டி மூலம் புதிதாய் வருபவர்களே. இங்கு தான் நாம் பதிவை எப்போது வெளியிடுகிறோம், எப்போது திரட்டியில் இணைக்கிறோம் என்பது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியா மற்றும் பிற இடங்களில் இருந்து வாசிப்போரை எடுத்து கொண்டால் 70 %-க்கும் மேல் இந்தியாவில் இருந்தும் மீதம் 30 சதவீதம் வெளிநாடு வாழ் தமிழர்களும் வாசிக்கிறார்கள். எனவே இந்தியர்கள் அதிகம் வாசிக்கிற நேரத்தில் வெளியிடுவது அவசியம் ஆகிறது
பெரும்பாலானோர் அலுவலகத்து வேலைக்கு இடையே நேரம் கிடைக்கும் போது தான் ப்ளாக் படிக்கின்றனர். ஆகவே இந்தியர்கள் அலுவலகத்தில் இருக்கும் நேரமான காலை பத்து டு மாலை ஏழுக்குள் பதிவுகள் வெளியிடுவது மிக நல்லது.
என் அனுபவத்தில் இந்த மூன்று நேர ஸ்லாட்டுகளும் பதிவு வெளியிட சிறந்தது என்பேன்
1. காலை பத்து டு பன்னிரண்டு. பலரும் அலுவலகம் வந்து ஆபிஸ் மெயில் பார்த்து முடித்து விட்டு பின் ப்ளாகை எட்டி பார்க்கும் நேரமிது. எனவே இந்த நேரம் திரட்டிகளை பார்வையிடுவோர் கூட்டம் அதிகமிருக்கும். உங்கள் பதிவு இந்நேரத்தில் திரட்டியில் இணைத்து, அதன் முதல் பக்கத்தில் இருந்தால், அதன் மூலம் நிறைய பேர் உங்கள் ப்ளாக் உள்ளே வர வாய்ப்பு உண்டு.
2 . மதியம் ஒன்று டு மூணு. சாப்பிட்டு விட்டு சற்று ரிலாக்சுடு ஆக சிலர் இந்த நேரம் திரட்டி பக்கம் வருவதால் இந்த நேரம் சொல்கிறேன்
3. மாலை ஆறு டு எட்டு. சிலர் அலுவலகத்தில் ப்ளாக் படிக்காமல் மாலை வீடு வந்து தான் படிப்பார்கள். மேலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வாசிக்க வருவோர் இந்நேரம் தான் உள்ளே நுழைவர். இப்படி இரண்டு வித வாசிப்போரும் உள்ளதால் இந்நேரமும் நல்லதே.
இது பற்றி சில பிரபல பதிவர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்ப்போமா?
சென்னை பித்தன்
பதிவை வெளியிடுபவர், பிரபல பதிவர்களாயிருந்தால் எந்த நேரமும் நல்ல நேரம்தான்!.
இல்லையெனில் மாலையும் இரவும் சந்திக்கும் நேரமே சரியான நேரம் என நான் கருதுகிறேன்.இது என் அனுபவம் அடிப்படையில் சொல்வது அவ்வளவே !
ஆரூர் மூனா செந்தில்
நான் நேரம் பார்த்து பதிவு போடுவதில்லை. முன்பே பதிவுகளை தட்டச்சு செய்து வைத்து நான் பதிவிடுபவனில்லை. எனக்கு ஒரு எண்ணம் எழுந்தால் அதனை விரிவுபடுத்தி தட்டச்சு செய்து பதிவு முழுமையடைந்து விட்டதாக கருதினால் எந்த நேரமாக இருந்தாலும் வெளியிட்டு விடுவேன். ஹிட்ஸை எதிர்பார்த்து போடுவது சினிமா விமர்சன பதிவு மட்டுமே. எல்லோரும் 11.30 மணி காட்சி பார்த்து விட்டு விமர்சனம் எழுதும் போது நான் அதற்கு முன்பாகவே 08.00 மணி சிறப்பு காட்சி பார்த்து விட்டு எழுதுவதனால் ஹிட்ஸ் அதிகம் கிடைக்கிறது
கோகுல்
பதிவு வெளியிடும் நேரத்தை விட பதிவின் தலைப்பு அதிக பார்வையாளர்களை இழுத்து வருகிறது என்பது தான் எனது எண்ணம்.எந்த நேரத்தில் பதிவு போட்டாலும் தலைப்பு தான் ரேஸில் முந்த வைக்கிறது. நேரம் என குறிப்பிட்டு பார்த்தால் மாலை ஐந்துக்கு மேல இரவு பத்து பதினொன்று வரை என நினைக்கிறேன்.
*****
உங்களுக்கு பதிவு வெளியிடும் நேரம் குறித்து வேறு வித கருத்து இருந்தால் அவசியம் பின்னூட்டத்தில் சொல்லுங்கள் நண்பர்களே !

நான் ராகு காலத்திலதான் போடுவேன்.......சில சமயம் எமகண்டத்தில....
ReplyDeleteநல்ல அலசல் மோஹன்
ReplyDelete//நான் ராகு காலத்திலதான் போடுவேன்.......சில சமயம் எமகண்டத்தில....//
சுரேஷ், நாங்கெல்லாம் பதிவு போட்டாலே அது படிப்பவர்களுக்கு ராகு காலம் தான்.
நமக்கு அப்படியெல்லாம் கிடையாதுங்க...எந்த ஹோட்டலில் சாப்பிடறனோ அதைபத்தி அடுத்த நாள்...ஊர் சுத்த போனா போய்ட்டு வந்துட்டு பதிவு போடுவேன்..நமக்கு நேர காலம் இல்லீங்க...
ReplyDeleteஅப்புறம் ஹிட்ஸ் ஹிட்ஸ் அப்படின்னு சொல்றாங்க...அப்படின்னா என்னாங்க..?
எப்ப பதிவு எழுதி முடிக்கறமோ அப்பவே போட்டுட வேண்டியதுதான், வர முடிஞ்சவங்க வந்து படிப்பாங்க அவ்வளவுதான்
ReplyDeleteபுதிதாக எழுதுபவர்களுக்கு
ReplyDeleteதங்கள் பதிவு நிச்சயம் பயனுள்ளது
பொதுவாக நான் எழுதியவுடன் பதிவைப் போட்டுவிடுவேன்
நேரம் காலம் பார்ப்பதில்லை
tha.ma 5
ReplyDeleteநேரம் காலம் கிடையாது:). எப்போது ரெடி செய்கிறேனோ அப்போதே.
ReplyDeleteமுதல் கமெண்டை ரசித்தேன்:)).
மற்றபடி, நல்ல ஆலோசனைகள்.
பகல் உணவுக்கு அப்புறம் கிடைக்கும் ஓய்வு நேரத்தில்(??) பதிவை வெளியிடுவேன்.
ReplyDeleteஎங்கூர் மணி 2 முதல் 4 மணிக்குள்.
நான் எப்ப பதிவு எழுதி முடிக்கறேனோ அப்ப வெளியிட்டுடுவேன். நான் வெளியிடற நேரம் எல்லாமே நல்ல நேரம்தான் (எனக்கு). படிக்கறவங்களுக்குத் தான்... ஹி... ஹி...
ReplyDeleteபதிவு எழுதினதை படிச்சு கமெண்ட் வரணும்னு ஆசை எல்லோருக்கும் உண்டு. ஆனா பல சமயம் மனசுல பட்ட உடனே எழுதிடுவேன். நேரங்காலம் பாக்க மாட்டேன். விரும்பறவங்க படிக்கப்போறாங்க. சொல்லணும்னு நினைக்கறவங்க கமெண்ட் எழுத போறாங்க. என் கடன் பதிவெழுதுவது மட்டும். :))
ReplyDeleteஇன்னைக்கு பதிவெழுதுவேன்னு நினைக்ககூட இல்லை. ஆனா பிரியாணி போட்டாச்சு.
நாம பதிவு போட்டா எல்லாரும் படிச்சே ஆகணுமா என்ன?
ReplyDeleteமோகன் சார் நான் பதிவு எப்போது முழுமை செய்து விட்டேனோ அப்போதே உடனே போட வேண்டும் என்று விருப்பபடுவேன்
ReplyDeleteஉடனே பதிவு போட்டும் விடுவேன் கால நேரம் பார்ப்பதில்லை
தங்கள் பதிவு நல்ல அலசல் உபயோகமான பதிவு
//யுவகிருஷ்ணா said...
ReplyDeleteநாம பதிவு போட்டா எல்லாரும் படிச்சே ஆகணுமா என்ன?//
ஹா..ஹா..
ச்சே.. இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
ReplyDeleteபதிவின் தரத்தையும், தலைப்பையும், வெளியீடு நேர காலங்களையும் தாண்டி அதிர்ஷ்டம் சார்ந்த விஷயம் ஆகவும் இது ஆகி விட்டது! :) ஞாயிறுகளில் வெளியிட்டால் அதோகதிதான் (திரைமணம் விதிவிலக்கு)!
ReplyDeleteமோகன்,
ReplyDeleteஇது போல சிலர் முன்னரே ஆராய்ச்சிலாம் செய்து இருக்காங்க,ஆனால் இதெல்லாம் "ஹிட்ஸ்" வெறி கொண்டோர் செய்யும் வேலை ஆச்சே?, நீங்களும் அக்கூட்டத்தில் இணைந்துவிட்டீர்கள் ,வாழ்த்துக்கள் :-))
ஹி...ஹி நான் நிலாக்காயும் நள்ளிரவு நேரம் 12 மணிக்கு (மத்த நேரமும் உண்டு, பொதுவா 12)பதிவு போடுவேன் ,எவன் படிச்சா எனக்கென்னானு :-))
---------
//அப்புறம் ஹிட்ஸ் ஹிட்ஸ் அப்படின்னு சொல்றாங்க...அப்படின்னா என்னாங்க..?//
கோவை நேரம் ரொம்ப அப்பாவியா இருக்காரே, மோகனிடம் ஒரு வாரம் டூயுஷன் எடுக்கவும் :-))
நான் இதெயெல்லாம் பத்தி யோசிக்கிரதேயில்லை.. படிச்சா படிங்க இல்லை எப்பிடியோ போக்கங்க்ன்னு விட்டுர்றது (எப்பிடியெல்லாம் மனசைகல்லாக்கிகிட்டு கருத்து போட வேண்டியதிருக்குது ஹி ஹி ஹி)
ReplyDelete///@ வீடு சுரேஸ்குமார் said...
ReplyDeleteநான் ராகு காலத்திலதான் போடுவேன்.......சில சமயம் எமகண்டத்தில...///
வீடு விளங்கிரும் :D
வவ்வால்: நாம் எழுதுவதை நிறைய பேர் வாசிக்க வேண்டும் என்கிற ஆசை எழுதும் ஒவ்வொருவருக்கும் உண்டு. இது இல்லை என்று சொன்னால், சொல்பவர் hypocrite தான். இந்த ஆசை இல்லாதோர் தன்னுடைய டையரியில் மட்டும் எதையும் எழுதி வைத்து
ReplyDeleteகொள்ளலாம். ப்ளாகில் வெளியிட காரணமே நிறைய பேர் வாசிக்க தான் !
"நிறைய பேர் வாசிக்க வேண்டும் " என்ற எண்ணத்துக்கும் ஹிட்ஸ் வெறி கொண்டு அலைவதற்கும் நிறைய வித்யாசம் இருக்கிறது. எனக்கு அந்த வெறி இல்லை. ஹிட்ஸ் வெறிக்கு சில உதாரணங்கள் சொல்ல ஆசை தான். நண்பர்கள் சிலரை காயப்படுத்தும் என்பதால் சொல்லாமல் விடுகிறேன் (டைப் அடித்து விட்டு அந்த வரிகளை டெலீட் செய்து விட்டேன் )
கோவை நேரம் எம்மாம் பெரிய டெக்னிகல் ஆள் தெரியுமா? சும்மா ஜாலிக்கு ஹிட்ஸ்ன்னா என்னன்னு கேட்டுட்டு போறார். நீங்க அதான் சாக்குன்னு என்னை ஒரு அடி அடிக்குறீங்க. நடத்துங்க !
புதிதாக எழுதுபவர்களுக்கு
ReplyDeleteதங்கள் பதிவு நிச்சயம் உதவியாக இருக்கும்...
www.sindanaisiragugal.blogspot.com
எழுதி முடிச்ச கையோட வெளியிட்டு விடுவேன். விடியக்காலம் மூணு மணிக்குக்கூட வெளியிட்டதுண்டு :-)
ReplyDeleteபெரும்பாலும் நண்பகல் 2.00 மணிக்குள்ள போட முயற்சிப்பேன்.
ReplyDeleteபத்து, பன்னிரண்டு, இரண்டுன்னு நேரத்தை மாத்தி மாத்திப் போட்டேன்.
என்ன செய்தும் சராசரியா பார்வையாளர் எண்ணிக்கை 60 அல்லது 70 தான் தேறுது.
குமுதத்தில் வந்த என் ஒருபக்கக் கதையை போட்ட போது மட்டும் 200 ஐ தாண்டிச்சி.
இன்னும் சில 150 ஐத் தாண்டின.
அதிக நண்பர்கள் தொடர்பு இல்லாததும், தொடர்ந்து ‘கடவுள்’ தொடர்பான ‘வறட்சியான’ பதிவுகளும் காரணமோ என்னவோ தெரியலீங்க.
வாய்ப்புத் தந்ததற்கு மிக்க நன்றி நண்பரே.
This comment has been removed by the author.
ReplyDeleteநான் காலை 8.00 மணிக்குள் பதிவுகளை வெளியிடுவேன்.எட்டு மணிவரை ப்ரீ டைம் என்பதுதான் காரணம். (லிமிடெட் பிளான்)
ReplyDeleteநல்ல ஐடியா சொல்லி இருக்கீங்க முயற்சித்துப் பார்க்கிறேன்.
என் பொண்ணு ஈவினிங்க் ஹோம் வொர்க் பண்ணுற நேரத்துல பதிவு ரெடி பண்ணி அதற்கான படங்களை தயார் செய்து அமெரிக்காவின் ஈஸ்டர்ன் டையத்தில் இரவு 9 மணியில் இருந்து 12 மணியளவில் பதிவிடுவேன்.பதிவிற்கு தலைப்பு மிக அவசியம் அது போல வித்தியாசமான செய்திக்ளை முடிந்த வரையில் மிக சுருக்கமாக தர வேண்டும். ஒரே மாதிரியான செய்திகளை தந்த்தால் வருபவர்களுக்கு போரடித்து விடும் நான் பதிவு இடவில்லை என்றாலும் குறைந்த பட்சம் 200 லிருந்து 300 ஹிட்ஸ்கள் கிடைத்துவிடும் அதன் பிறகு பதிவிற்கு தகுந்து ஹிட்ஸ் அதிகரிக்கும். நான் அரசியல் பற்றி பதிவுகள் போட்டால் ஹிட்ஸ் மிகவும் அதிகரிக்கும் அதே சமயத்தில் நன்றாக யோசித்து மிக நல்ல பதிவு போட்டால் வருகை மிக குறைவாக இருக்கும் .நான் எந்த க்ருப்பிலிலும் சேரவில்லை என் வழி தனி வழி என நினைத்து செல்கிறேன். அதனால் கமெண்ட்ஸ் பத்தி கவலைப்படுவதில்லை த.ம 1 2 3 பற்றியும் கவலைபடுவதில்லை ஒரு புகழ் பெற்ற தமிழ் பெண் பதிவாளர் என்னிடம் சொன்னார் உங்களுக்கு சைலண்ட் ரீடர்ஸ் மிக அதிகம் என்று அது மிக உண்மை என்பது எனக்கு தெரியும் சைலண்ட் ரீடர்கள்தான் எனது பலம். அவ்ர்களுக்கு உங்கள் பதிவின் மூலம் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். புதிதாக வந்து பதிவு போடுபவர்கள் சண்டே அன்று பதிவு இட வேண்டாம் என்பது என் கருத்து
ReplyDeleteநேரமோ மேட்டரோ முக்கியமில்லை தலைப்புதான் முக்கியம். சும்மா பரபரப்பா வைக்கணும், கில்மா மேட்டர் தலைப்பு என்றால் ஹிட்ஸ் அள்ளும்.
ReplyDeleteதலைவரே.. இது ஒரு பதிவுன்னு எழுதுறதே எதுக்குன்னு தெரியலை..?
ReplyDeleteமோகன்...
ReplyDeleteபதிவுலக ரசிகன் என்ற முறையில்...
எழுத்து மட்டுமே நீண்ட காலம் ஒரு பதிவரை உயர்த்திப்பிடிக்கும்...
அது நல்ல சீரியஸ்/முழு கலகலப்பு கட்டுரையாக இருக்கலாம்...
அல்லது காதல்/சமூக கதை/கவிதையாக கூட இருக்கலாம்...
முக்கியமாக வாசிப்பவரை கட்டிப்போடும் எதுவுமே...
ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட ஆடியன்ஸ்...
மற்றபடி பதிவர்களில் நிறைய பேர் பொழுதுபோக்குக்காக... சிலர் ஆத்ம திருப்திக்காக...சிலர் ஈகோ திருப்திக்காக.. சிலர் மற்ற பதிவர் பார்வை மற்றும் அங்கீகாரத்துக்காக...சிலர் தமிழ் மறக்காமல் இருக்க.... சிலர் திரை உலகு மற்றும் எழுத்து உலகில் பிரவேசிக்க...சிலர் கூட்டம் சேர்த்து காசு பார்க்க...இப்படி பல ரகங்கள்...அதனால் எல்லாமே எல்லாருக்கும் பொருந்தாதுன்னு நினைக்கிறேன்..
எழுதி பத்து மாதம் ஆகிறது...'என் மார்பகம்' என்ற கவிதை...கூகுல் ஸ்டாட்ஸ்ல பார்த்தா என் வலையின் அறுபத்தி ஏழு சதவீத ஒட்டுமொத்த ட்ராபிக் அதை நோக்கி தான்...வேடிக்கை என்னவென்றால்...
உலகம் முழுதும் இருந்து அதைத்தான் தேடி இருக்கிறார்கள்/அலைகிறார்கள்....இதுதான் நிதர்சனம்...
காலை நேரங்களில் போட்டால் ஹிட்ஸ் அதிகரிக்கிறது! பதிவின் தலைப்பு கொஞ்சம் விவகாரமாய்! வித்தியாசமாய் இருந்தாலோ சினிமாகிசு கிசு, அரசியல் கிசுகிசுவாக இருந்தால் அதிகம் பேர் படிக்கிறார்கள். நல்ல படைப்புக்களுக்கு வாசகர்கள் குறைவுதான். இது எனது ஒரு வருட அனுபவம்.
ReplyDeleteநண்பர்களே, நம் பதிவில் ஒரு சில நண்பர்கள் உரிமையா வந்து " இந்த பதிவு தேவையா?" என்கிற ரீதியில் கேட்டது இந்த பதிவுக்கு மட்டும் தான்.
ReplyDeleteஅப்படி கேட்டது 3 , 4 பேர் என்பது ஒரு புறமிருக்க.. இருபதுக்கும் மேற்பட்டோர் தாங்கள் எப்படி பதிவு வெளியிடுகிறோம் என்று இங்கு சொல்லி சென்றது சுவாரஸ்யம் ஆக உள்ளது.
பலரும் எழுதிய உடன் வெளியிடுவதாய் சொல்கிறார்கள். சுஜாதா சொல்லி நான் கற்றது: எழுதியதை அப்படியே வைத்து விட்டு ஓரிரு நாள் கழித்து வாசித்தால், நிறைய மாற்ற/ முன்னேற்ற முடிகிறது. நீங்களும் முயன்று பார்க்கலாம். சில குறிப்பிட்ட பதிவுகளுக்கேனும் ...
சுரேஷ்: ரைட்டு. என் மேல ஏதும் கோபம் இல்லியே?
ReplyDelete(அஞ்சலி??)
சீனி: நன்றி
ReplyDeleteகோவை நேரம்: நன்றிங்கோ
ReplyDeleteஇரவு வானம்: ரைட்டுங்கோ நன்றி
ReplyDeleteRamani said...
ReplyDeleteபுதிதாக எழுதுபவர்களுக்கு
தங்கள் பதிவு நிச்சயம் பயனுள்ளது
***
ஆமா சார். இந்த பதிவு வெளியிட அதுவும் ஒரு காரணம்
ராமலட்சுமி மேடம்: நன்றி
ReplyDeleteதுளசி மேடம்: வருகைக்கு நன்றி
ReplyDeleteபாலகணேஷ்: உங்கள் பதிவை வாசிக்கும் நேரம் எங்களுக்கும் சுவையானது தான்
ReplyDeleteபுதுகை தென்றல் மேடம்: நன்றி
ReplyDeleteயுவா: எழுதினா கொஞ்சம் பேராவது படிக்கணும்னு இன்னமும் எதிர்பார்ப்பு இருக்கு. தப்பா சார்?
ReplyDeleteசரவணன்: நன்றி
ReplyDeleteசிவா: வருகைக்கு நன்றிண்ணா
ReplyDeleteKarthik Somalinga said...
ReplyDeleteஞாயிறுகளில் வெளியிட்டால் அதோகதிதான் (திரைமணம் விதிவிலக்கு)!
முழுக்க அப்படி சொல்ல முடியுமான்னு தெரியலை. அன்று பலர் பதிவு வெளியிடாததால் நாம், மற்றவர்களுக்கு பிடித்த தலைப்பில் நல்ல பதிவு போட்டால் நிறைய வாசிக்க வாய்ப்பு இருக்கு
வரலாற்று சுவடுகள்: வலை சர ஆசிரியருக்கு நன்றி
ReplyDeleteசாமுண்டீஸ்வரி: நன்றி மேடம்
ReplyDeleteஅமைதி சாரல்: நன்றிங்க. காலைல மூணு மணிக்கு பதிவா? அடேங்கப்பா !
ReplyDeleteமுனைவர் பரமசிவம் ஐயா: தங்கள் அனுபவம் பகிர்ந்தமைக்கு நன்றி
ReplyDeleteமுரளி சார்: முயற்சி செய்து பாருங்கள் நன்றி
ReplyDeleteஅவர்கள் உண்மைகள்: விரிவாய் தங்கள் அனுபவம் சொன்னதுக்கு மிக நன்றி
ReplyDeleteகும்மாச்சி: ஹா ஹா ரைட்டு. அந்த விஷயத்தில் நீங்க கில்லாடி
ReplyDeleteகேபிள்: விடுங்க தலை. சிலருக்கு பிடிச்சிருக்கு. என்ன பண்ண?
ReplyDeleteரெவரி: அழகாய் சொல்லி உள்ளீர்கள் உங்கள் அவதானிப்பை நன்றி
ReplyDeleteசுரேஷ்: உங்கள் அலசல் சரிதான் !
ReplyDeleteநன்றி
நேரத்ட்தை விட பதிவே முக்கியமாகிப்பார்க்கபடுகிற போது எல்லாம் சரியாகிப்போகலாம்.
ReplyDeleteமோகன்,
ReplyDeleteநாம் விருப்பப்பட்டதை எழுதாமல் அடுத்தவங்களுக்கு எது பிடிக்கும்னு "சினிமா" எடுப்பவர்கள் வெற்றி ஃபார்முலா கண்டுப்பிடிப்பது போல கண்டிப்பிடித்து ,எப்போ வெளியிட்டால் நிறைய பேர் படிப்பாங்க என சினிமா வெளியீடு போல் கணக்கெல்லாம் செய்யும் நிலைக்கு,ஆளாவதை சுருக்கமா சொன்னால் ஹிட்ஸ் வெறி எனலாம். :-))
தலைப்பு, கருத்து, நேரம் என கவலைப்படாமல் எழுதுபவர்களே "நிறைய பேர் வாசித்தால் நல்லா இருக்கும்"னு எழுதுபவர்கள் எனலாம்.
உங்களுக்கு ஹிட்ஸ் மேல ஆசையில்லைனு நீங்க சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன்.ஆனால் மெதுவா ஆசைப்பட ஆரம்பிச்சுட்டிங்க :-))
ஏன் சண்டேயில் பதிவு போட வேண்டாம்னு சொல்றிங்க தெரியலை , நான் சனி இரவு வழக்கமா போடுவேன்,மேலும் வார நாட்களில் போடுவதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.(அதெல்லாம் பிரபலங்களுக்கு உனக்கு இல்லைனு சொல்லுறிங்களா)
இவ்வளவு நாளா இருக்கேன், இந்த நாளு,நேரம் எல்லாம் பார்க்கணும்னு எனக்கு தெரியாம போச்சே :-))
லேபிள் அமைப்பதும் முக்கியம். இதனால் கூகிள் தேடல் மூலம் நிறைய வருகை வர வாய்ப்புள்ளது.
ReplyDeleteஒருமுறை நான் ஞாயிறு காலை ஒன்பது மணி வாக்கில் நடிகர் விஜய் பத்தி (தலைப்புல விஜய்ன்னு வரும்)சில மொக்கை ஜோக்ஸ் பதிவு போட்டேன். அன்னைக்கு என் தளம் சுமார் நாலாயிரம் பேஜ்வியு வரை வந்தது. இதுக்கு பேரு ஹிட்ஸ்ன்னு சொல்லலாமா? அனுபவத்தை சொன்னேன் சார்.
அதனால பதிவிடும் நேரத்தை விட தலைப்பு ரொம்ப முக்கியம்.
ஒரு காமிக்ஸ் விசிறி என்ற முறையில், அடிக்கடி காமிக்ஸ் பற்றி பதிவு போட்டிருக்கேன் - என்னை மாதிரியான ஆளுங்கள தவிர்த்து பெரிசா யாரும் படிச்சது இல்ல! காமிக்ஸ் புக்கு வாங்குக்கப்பான்னு தலைப்பு வைக்காம, "இந்த பதிவை படிக்காதீங்க, இந்த புக்கை வாங்காதீங்கன்னு" போட்டா ஹிட்ஸ் அள்ளுது! :D
ReplyDeleteஇதுல ஹிட்ஸ் கணக்கு அப்படிங்கறதை தாண்டி நம்மளுக்கு பிடிச்ச விஷயம் பலருக்கு போய் சேர்ந்தா, நெறைய பேர் படிச்சா மனசுக்கு நிறைவா இருக்கு! ஆனா, ஒரு பதிவை ரெடி பண்ணிட்டா அதை ஊறப்போட்டு போட மனசு வர்றதில்லேங்கற ஒரே காரணத்தினால உடனே வெளியிடுறது வழக்கம்! நெறைய பேர் படிக்கலைன்னா என்ன? இருக்கவே இருக்கு மீள்பதிவு & பட்டி, டிங்கரிங் பாத்த பதிவு! ;)
நேரம் காலம் பார்ப்பதில்லை சார் !
ReplyDeleteநான் எழுதுவதோ எப்போதாவது... நேரம் கிடைப்பதோ எப்போதாவது...
இணையத்தில் அமரும் நேரத்தில் அவ்வப்போது பதிவை (update) எழுதுவேன்...
எப்போது எனக்கு திருப்தி வருகிறதோ... உடனே.. பப்ளிஷ்..
நல்ல அலசல்... பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்... (த.ம.17)
வேண்டும் என்றால் சொல்லுங்கள்... இதைப்பற்றி என் பாணியில் ஒரு கட்டுரை எழுதி விடுவோம்... ஹா .... ஹா ...
உபயோகமான பதிவுதான். நாங்கள் எல்லா நேரங்களிலும் பதிவிட்டிருக்கிறோம். எப்போது பதிவிட்டாலும் அதே ரெகுலர் வாசகர்கள்தான்.!
ReplyDeleteநன்றி விமலன் சார்
ReplyDeleteபிரகாஷ்: உங்கள் அனுபவம் சுவாரஸ்யம் நன்றி
ReplyDeleteகார்த்திக் சோமலிங்கா: சுவாரஸ்யமா எழுதுறீங்க. ..பின்னூட்டமே. எழுதும் சுவாரஸ்யமா இருக்கும் என நினைக்கிறேன் நன்றி
ReplyDeleteதனபாலன் சார்: நன்றி
ReplyDeleteவாங்க ஸ்ரீராம் நன்றி
ReplyDelete@மோகன் குமார்: நன்றி!
ReplyDeleteசினிமா சார்ந்த பதிவுகள் எந்நேரம் போட்டாலும் அதிக பேர் பார்வையிடுகின்றனர் என்பது என் கருத்து .மத்த பதிவுகளுக்கு இரவு 10 மணி எனது சாய்ஸ்
ReplyDeleteவெள்ளிக் கிழமை பத்தரை டு பன்னெண்டுல (morning) பதிவு போட்டா ஹிட் ஆகுமா ?
ReplyDeleteநல்ல அலசல் மோகன். என்னுடைய பதிவுகள் பல ஏற்கனவே Schedule செய்து வைத்து விடுவேன், காலை நேரத்தில் வெளியாவது மாதிரி....
ReplyDeleteவெளியானபிறகு திரட்டிகளில் இணைத்து விடுவேன். நிச்சயம் பகல் நேரத்தில் வெளியிடவோ, திரட்டிகளில் இணைக்கவோ முடியாது! :) நாம் எழுதும் விஷயங்கள் சிலரையாவது சென்றடைந்தால் மகிழ்ச்சி தான்!
***மோகன் குமார் said...
ReplyDeleteநாம் எழுதுவதை நிறைய பேர் வாசிக்க வேண்டும் என்கிற ஆசை எழுதும் ஒவ்வொருவருக்கும் உண்டு. இது இல்லை என்று சொன்னால், சொல்பவர் hypocrite தான்.***
உண்மைதான். இந்த ஆசையை ஏன் கெளரவக்குறைவா நெனைக்கனும்னு தெரியலை.
மேலும் அதிகப்பேர் விசிட் செய்தால் அதிகப்பேரு வாசிச்சாங்கனு அர்த்தம் இல்லை. வந்துட்டு இந்த எழவைப்படிக்க ஏன் வந்தோம்னு பலர் திட்டிக்கிட்டுப் போறதெல்லாம் நமக்குத் தெரியாது.
என்னை பொருத்தவரையில், ஹிட்ஸ், ஃபாளோவர்ஸ் கணக்கெல்லாம் தப்புனு சொல்லவில்லை. சினிமாவாக இருக்கட்டும், மொக்கையாக இருக்கட்டும் மனசாட்சிக்கு பயந்து உண்மையை எழுதினால் சரிதான்.
//PREM.S said...
ReplyDeleteசினிமா சார்ந்த பதிவுகள் எந்நேரம் போட்டாலும் அதிக பேர் பார்வையிடுகின்றனர் என்பது என் கருத்து//
******
மிக சரி நன்றி பிரேம்
Madhavan Srinivasagopalan said...
ReplyDeleteவெள்ளிக் கிழமை பத்தரை டு பன்னெண்டுல (morning) பதிவு போட்டா ஹிட் ஆகுமா ?
**
மாதவா: படிச்சோன சிரிச்சுட்டேன். நீ விரும்பியதும் அதை தானே?
வெங்கட் : உங்கள் அனுபவம் சொன்னமைக்கு மிக நன்றி
ReplyDeleteவாங்க வருண். உங்க பதிவை போலவே உங்க பின்னூடமும் வித்யாசமா இருக்கு நன்றி
ReplyDelete