பார்த்த படம் : நான் ஈ
செம ஹீரோயிச படம் ! வழக்கமான ஹீரோ இல்லாமல் ஈயை ஹீரோவாக பார்ப்பது வித்யாசமாய் உள்ளது. ஹீரோயினை பிடித்து வைத்து கொண்டு வில்லன் " கொன்று விடுவேன் " என மிரட்ட, ஈ வந்து காப்பாற்றும் காட்சி கூட உண்டு.
சில படங்களில் ஹீரோ தொடர்ந்து தோற்று கொண்டே இருப்பார். கிளைமாக்சில் மட்டும் வில்லனை ஹீரோ மொத்தமாய் தோற்கடித்து விடுவார். இத்தகைய படங்களில் ஹீரோ தொடர்ந்து வீழ்வது நமக்கு அலுப்பாய் இருக்கும். நான் ஈயில் வில்லன் தான் தொடர்ந்து அடி வாங்குகிறார். இது நம் உள் மனதுக்கு செம குஷியாய் உள்ளது. படம் இறுதியை நெருங்கும் போது வில்லன் தன் முழு வேலையும் காட்டினாலும் நம்ம ஹீரோ பிச்சு உதறிடுறார்.
இந்த படத்துக்கு மிக முக்கிய காரக்டர் அந்த வில்லனுடையது. சுதீப் அருமையாக செய்துள்ளார். அடுத்து கம்பியூட்டர் கிராபிக்ஸ். அதுவும் உறுத்தாமல் நன்றாகவே உள்ளது.
சமீபத்து படங்களில் குடும்பத்தோடு பார்க்கும் வகையில் செம ஜாலியாக உள்ள படம் - நான் ஈ !
முக நூல் கிறுக்கல்கள்
அம்மா எந்தெந்த விஷயத்துக்கு திட்டினாங்களோ அதே விஷயத்துக்கு இப்போ மனைவியும் திட்டுறார். அம்மா திட்டிய போது அதை சட்டையே பண்ணாத மனது மனைவி திட்டும்போது மட்டும் அந்த குணத்தை மாற்றி கொள்ள போராடுது !
######
காந்தி படத்தை விட சேகுவரா படம் தான் நிறைய இடங்களில் பார்க்க முடியுது...டி-ஷர்ட், இணையம் மற்றும் பல இடங்களில். இந்த புரட்சியாளர்கள் வீட்டில் எப்படி இருப்பாங்கன்னு பார்க்க ஆவல் :))
######
அழகு கார்னர்
இந்த படம் போடுவதால் "சரவணன்- மீனாட்சி" சீரியல் பார்ப்பதாக நினைத்து விடாதீர்கள். எப்போதாவது சேனல் மாற்றும் போது இந்த பெண்ணை கவனித்ததோடு சரி. லட்சணமான முகம், வெட்கத்தோடு கூடிய சிரிப்பு என ரொம்ப அழகாய் உள்ளார். உடல் ஒரு சுற்று குறைந்தால் இன்னும் நன்றாய் இருக்கும்.
சரவணன்- மீனாட்சியில் மீனாட்சியாய் வரும் மலையாள மங்கை - பெயர் ஸ்ரீஜா ... ஆஜா ஆஜா !
விடிய விடிய பேச்சு
காதலிக்கும் போது மணிக்கணக்கில் பேசுவது வழக்கம் தானே. இதனை"Sweet Nothings " என்பார்கள் ! இதனை வைத்தே அமைந்த பாடல் அழகன் படத்தில் இடம்பெற்ற " சங்கீத ஸ்வரங்கள்" ! படம் வந்த காலத்தில் செல்போன் கூட கிடையாது. லேண்ட் லைன் போன் தான். அதை வைத்து கொண்டே கே. பி என்னமாய் கலக்கியிருக்கிறார் !
நிஜமாகவே முழு இரவும், விடிய விடிய யாருடனாவது நீங்கள் பேசியிருக்கிறீர்களா? நான் பேசியிருக்கிறேன்... ஒன்று ஹவுஸ் பாசுடன். இரண்டு மறைந்த நண்பன் லட்சுமணனுடன் !
பதிவர்/ போட்டோ கார்னர்
பதிவர் ஜெட்லியை வாசித்துள்ளீர்களா? சில வருடங்களுக்கு முன் ரிலீஸ் ஆகும் படத்தை முதல் நாள் முதல்ஷோ பார்த்து விட்டு விமர்சனம் எழுதுவார். திருமணத்துக்கு பின் எழுதுவதை குறைத்து கொண்டார். (நாமளும் தான் இருக்கோமே !) Facebook-ல் அவர் போட்ட இந்த போட்டோ மிக ரசிக்க வைத்தது.
ஜெட்லி பிறந்த போது எடுத்த படமும், 28 வருடம் கழித்து இன்று அவர் மகன் அதே போஸில் எடுத்த படமும் இதோ:
11000 ஹிட்ஸ் தாண்டிய பதிவொன்று
மாதந்திர மற்றும் ஆள் டைம் ஹிட் பதிவுகள் கூகிள் துணையால் தெரிகிறது இல்லையா? இதில் நமது பதிவொன்று 11,000 ஹிட்ஸ் தாண்டியுள்ளது. "உடல் எடை குறைப்பது" பற்றி எழுதிய பதிவு தான் இது ! இதற்கு அடுத்த பதிவு மூவாயிரம் தான் தாண்டியுள்ளது. முதல் பதிவுக்கும் அடுத்த பதிவுக்கும் உள்ள வித்யாசத்தை பாருங்கள் !
மனிதர்கள் பலருக்கும் எடையை குறைக்க வேண்டும் என்கிற எண்ணம் உள்ளது தெரிகிறது ! பல திரட்டி மூலம் நம் ப்ளாக் உள்ளே எட்டி பார்ப்போர் இந்த தலைப்பை பார்த்து ஈர்க்கப்பட்டு படித்து விட்டு செல்கின்றனர். தினம் இந்த பதிவை குறைந்தது நூறு பேர் வாசிப்பதால் மாதாந்திர டாப்பில் கூட எப்போதும் இப்பதிவே உள்ளது.
ஆனந்த் கார்னர்
Everything you want in life is waiting for you outside your comfort zone and inside your effort zone.

இனிய பகிர்வு...
ReplyDeleteநான் ஈ - பார்க்க நினைத்திருக்கும் படம்.
பூஜா - ஆஜா ஆஜா :) ஒண்ணும் சொல்லறதுக்கில்லை!
ஹிட்ஸ் - வாழ்த்துகள்.... நம்மதெல்லாம் ஆயிரமே தாண்டினதில்ல!
ஜெட்லீ படம் - அருமை....
முகப்புத்தகம் - இரண்டுமே அருமை...
வாழ்த்துகள் மோகன். த.ம. 2
நான் ஈ சமீப காலத்தில் குடுமபதொடு போகக்கூடிய படம். நானும் கூட உங்கள் உடல் எடை பதிவை படித்துள்ளேன். 10 ஆயிரம் ஹிட்ஸ் .வாழ்த்துக்கள்.தொடரட்டும்.
ReplyDeleteநான் ஈ - படம் இன்னும் பார்க்கவில்லை... இனிமேல் தான்...
ReplyDeleteகண்ணொளி - எனக்கு மிகவும் பிடித்த பாடல்... காட்சி அமைப்பு (எடிட்டிங்) நன்றாக இருக்கும்....
11024 ஹிட்ஸ் - வாழ்த்துகள்....
சின்ன நிகழ்வு : உங்கள் பதிவை நான் படித்து இப்போது தான் கமெண்ட் எழுதுகிறேன்.. உங்கள் கமெண்ட் என் மெயிலுக்கு வருகிறது... ஹா.. ஹா..
பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...(த.ம. 4)
ஆஹா.!!!!!!!!!!!
ReplyDeleteஸ்ரீஜா ஆஜாவா... வீட்டம்மா உங்க பதிவுகள் எதையும் படிக்கிறதில்லையா..? நான் ஈ... இன்னும் பாக்கலை. பாக்கணும் சீக்கிரம். அழகன் பாடலும் அதையொட்டிய உங்களின் நினைவுகளும் அருமை. வண்ணமயமான அழகான வானவில்!
ReplyDeleteசுவையான மிக்சர்
ReplyDeleteபடித்தும் பார்த்தும் ரசித்தேன்
தொடர வாழ்த்துக்கள்
ஸ்ரீஜா - ஆஜா ஆஜா ....வீட்ட்ல ப்ளாக் படிக்கறது இல்லையோ???
ReplyDeleteஏம்பா ஜெட்லி: உங்க குடும்ப போட்டோ போட்டிருக்கேன். அதை பத்தி பேசாம, குடும்பத்தில் குழப்பம் உண்டாக்கி கிட்டு.. :))
ReplyDeleteஸ்ரீஜா...ஆஜான்னு சும்மா ரைமிங்கா சொன்னேன். மறுபடி நல்ல நல்ல சீரியலில் நடிங்க அப்படிங்கற அர்த்தத்தில். ஆள் ஆளுக்கு பீதியை கிளப்புறீங்க :))
நல்ல ரசிக்க வைக்கும் கலவை.
ReplyDelete"விடிய விடிய பேச்சு" அந்த பாட்டு ரொம்பவே நல்லா இருக்கும்...இசை ரொம்ப நாளா ராஜா சார்ன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்....இப்ப தான் அது மரகத மணின்னு தெரிஞ்சுது..
ReplyDeleteஜெட்லி அவர்களின் ப்ளாக் பேரு "nee-keelen"..அவரோட விமர்சனத்தை விட அவர் எழுதற தியேட்டர் நொறுக்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்...இப்ப எல்லாம் அவர் சினிமா விமர்சனம் எழுதுறது இல்லை....
தொப்பை, உடல் எடை குறைப்பு, இப்பிடி எந்த பதிவு போட்டாலும் அதுதான் நம்ம ப்ளாக்-ல முதல் இடத்துல இருக்குது.., நானும் எத்தனையோ நல்ல(?) பதிவு எழுதியிருக்கேன்., இருந்தாலும் தொப்பையை குறைப்பது எப்படின்னு போட்ட பதிவு தான் முதல் இடத்துல இருக்கு :)
ReplyDeleteஇரண்டு போட்டாவில் இருக்கும் குழந்தையும் ஒரே மாதிரி இருக்கே!!!
ReplyDeleteநான் ஈ சூப்பர் படம், ஜெட்லி படம் பேஸ்புக்கிலயும் பாத்தேன் நன்றாக உள்ளது, உடல் எடை மேட்டர் உண்மைதான், சும்மாவா 11000 ஹிட்ஸ் கிடைச்சிருக்கு :-)
ReplyDelete-நான் ஈ பற்றிய விமர்சனங்கள் எல்லாம் பாராட்டுகளாகவே உள்ளன. எதிர்பாராத விஷயம் போலும். தெலுங்கு டப்பிங்?
ReplyDelete-தாய்க்குப் பின் தாரம் இல்லையா? தாரம் 'பின்' மாதிரி குத்தறாங்களோ என்னமோ!!!
-கொள்கைக்காகவா டீ ஷர்ட் போடறாங்க.... வித்தியாசமா, பளிச்சுன்னு தெரியணும்! எத்தனை பேருக்கு சே குவேரா பற்றி தெரியும்?
-சீரியல்...? டிவியே அதிகம் பார்ப்பதில்லை!
-தொலைபேசியில் நீண்ட நேரம் பேசுவது... அலுப்பைத் தரும் எனக்கு!
-ஜெட் லீ - அவரின் தியேட்டர் அனுபவங்கள் சுவாரஸ்யம். படித்திருக்கிறேன்.
மோகன் சார் அந்த உடல் எடை குறைய பதிவு நானும் படிச்சேன்...!எடை குறையல...ஆனா உங்களுக்கு ஹிட்ஸ் கிடைச்சிருச்சு வாழ்த்துகள்..!
ReplyDeleteஇந்தப் பதிவை படிச்சிட்டு நானும் ஹிட்ஸ் செக் பண்ணிப் பார்த்தேன்.
ReplyDeleteசவிதா அண்ணி!
Aug 27, 2009, 32 comments
54111
நடுநிசி நாய்கள்!
Feb 19, 2011, 53 comments
12450
முதல் பதிவுக்கும், ரெண்டாம் பதிவுக்கும் 42,000 ஹிட்ஸ் வித்தியாசம் :-)
//மனைவி திட்டும்போது மட்டும் அந்த குணத்தை மாற்றி கொள்ள போராடுது//
ReplyDeleteஅப்படியொண்ணும் தெரியலையே? ஏன், இந்தப் பதிவில்கூட
”பூஜா - ஆஜா ஆஜா”
-இதைப் பாத்தா, ஹவுஸ் பாஸ் போதிய அளவு ஸ்ட்ரிக்டா இல்லைன்னு புரியுது!! :-))))
//விடிய விடிய யாருடனாவது நீங்கள் பேசியிருக்கிறீர்களா? நான் பேசியிருக்கிறேன்... ஒன்று ஹவுஸ் பாசுடன்//
இப்பவுமா?? :-))))
ஹிட்ஸ்க்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteநான் ஈ நானும் பார்த்தேன் ரொம்ப நாளைக்கு பின் படம் பார்த்த திருப்தி...
அருமையான தகவல் கதம்பம்! சூப்பர்!
ReplyDeleteநான் ஈ இன்னும் பார்க்கவில்லை இந்த வாரம் பார்த்து விடுவேன்
ReplyDeleteமுக நூல் கிறுக்கல் ஓகே
சங்கீத ஸ்வரங்கள் பாடல் எப்போதும் என் விருப்ப பாடல்களில் ஒன்று இந்த பாட்டு பற்றி பதிவு எழுத வேண்டும் என்றிருக்கிறேன்
11000 ஹிட்ஸ் க்கு மன பூர்வ வாழ்த்துக்கள்
அப்பா பையன் படங்கள் அருமை. இதுபோல சில கலெக்ஷன் உள்ளன என்னிடம்:).
ReplyDeleteநல்ல தொகுப்பு.
நான் ஈ....செம..அப்புறம் ஜெட்லி போட்டோ...அப்பனுக்கு பிள்ளை தப்பாம பொறந்து இருக்கு அப்படின்னு ஒரு சொலவடை இருக்கே...அது மாதிரி...
ReplyDeleteஜெட்லீ ஜூனியர் கார்பன் காப்பி...அழகு..உங்களை சொல்லலைங்க மோகன்...
ReplyDeleteஈ கண்டிப்பாய் பார்க்கணும்..
மீனாட்சி...வீட்டுக்காரம்மா சொன்னாங்க இடுப்பில் சேலையை கூட மேல வரை தூக்கி பின் பண்ணும் பொண்ணு என்று..
ஹவுஸ் பாசுடன்...SAME BLOOD...
11000 ஹிட்ஸ் தாண்டிய பதிவொன்று...வாழ்த்துகள் மோகன்
\\லட்சணமான முகம், வெட்கத்தோடு கூடிய சிரிப்பு என ரொம்ப அழகாய் உள்ளார்.\\ ஐயையோ இந்த அநியாயத்த கேட்க ஆளே இல்லியா ...... Mrs. அய்யாசாமி நீங்க எங்கேயிருந்தாலும் உங்க வீட்டுக்காரர் கடைக்கு வரவும்...........!!
ReplyDeleteநான் ஈ படத்துக்கு நன்றி. பார்க்கின்றேன்.
ReplyDeleteவாழ்த்துகள்.
\\மனிதர்கள் பலருக்கும் எடையை குறைக்க வேண்டும் என்கிற எண்ணம் உள்ளது தெரிகிறது ! \\ குண்டாகனும்னு நினைக்கிறவங்க யாருமே இல்லியா.........?? என் கட்சிக்கு யாரும் வரமாட்டீங்களா .....நான் மட்டும் தனியா உட்கார்ந்துகிட்டு புலம்பிகிட்டு இருக்கேனா.......
ReplyDeleteBut அரிசி விலையைப் பார்த்தா இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு வந்திடும் போல இருக்கு. :((
விரிவான அலசலுக்கு நன்றி வெங்கட். நான் ஈ உங்கள் பெண்ணுடன் சேர்ந்து பாருங்கள். ரோஷினி மிக என்ஜாய்
ReplyDeleteசெய்வாள்
scenecreator : மிக வித்யாசமான பேர் நண்பரே. நன்றி
ReplyDeleteதனபாலன் சார்: பொதுவாய் மாலை தான் இணையம் பக்கம் வருவீர்கள். இன்று காலையில் வந்துள்ளீர்கள் நன்றி
ReplyDeleteதுளசி மேடம்: 11000 க்கே ஆஹா சொல்லிட்டீங்க. பின்னாடி ஒருத்தர் 50000 தாண்டி சொல்றார் பாருங்க
ReplyDeleteபால கணேஷ் said...
ReplyDeleteஅழகன் பாடலும் அதையொட்டிய உங்களின் நினைவுகளும் அருமை.
கணேஷ் சார்: இந்த படத்தை ஒட்டி ஏராளமான நினைவுகள் இருக்கு. சொல்ல முடியலை :((
தமிழ்மண ஸ்டார் ரமணி சார்: மிக நன்றி
ReplyDeleteசீனி : நன்றி
ReplyDeleteராஜ் said...
ReplyDeleteஜெட்லி அவர்களின் ப்ளாக் பேரு "nee-keelen"..அவரோட விமர்சனத்தை விட அவர் எழுதற தியேட்டர் நொறுக்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்...இப்ப எல்லாம் அவர் சினிமா விமர்சனம் எழுதுறது இல்லை
ராஜ். மிக சுருக்கமாய் சரியாய் ஜெட்லி பத்தி சொல்லிட்டீங்க நன்றி
வரலாற்று சுவடுகள்: உங்களுக்கும் இதே அனுபவம் உண்டா நண்பரே ? நன்றி
ReplyDeleteஅமுதா கிருஷ்ணா said...
ReplyDeleteஇரண்டு போட்டாவில் இருக்கும் குழந்தையும் ஒரே மாதிரி இருக்கே!!!
ஆம் மேடம் அதனால் தான் பகிர்ந்தேன். முதல் படம் ரொம்ப பழசா இருக்கு பாருங்க. அப்பாவும் மகனும் ஒரே மாதிரி டைமில் போட்டோ எடுத்துள்ளனர்.
இரவு வானம்: நன்றி மகிழ்ச்சி
ReplyDeleteஸ்ரீராம். said...
ReplyDeleteவிரிவான அலசுலுக்கு மிக மிக நன்றி ஸ்ரீராம்
//-தொலைபேசியில் நீண்ட நேரம் பேசுவது... அலுப்பைத் தரும் எனக்கு!//
உண்மை தான். நான் சொன்ன இரண்டு பேரிடமும் நேரில் தான் பேசியிருக்கேன்
சுரேஷ் குமார்: ஹிஹி நன்றி
ReplyDeleteயுவகிருஷ்ணா: பல பேர் பொறாமை பெருமூச்சு விடுற மாதிரி டீடைல்ஸ் தர்றீங்க.
ReplyDeleteசவிதா ஆண்டி பற்றி தெரியாத அப்பாவியா இருந்தேன். நீங்கள் சொன்ன பின் இன்று தான் படித்தேன் :))
ஹுசைனம்மா: இன்னும் strict-ஆ இருக்கனுமா? உங்களை மாதிரி ஒரு சில நண்பர்கள் இருந்தா போதும் ! நல்ல வேளை மேடம் பின்னூட்டங்களில் அதிகம் கான்சென்ட்ரேட் பண்ணுவதில்லை :)
ReplyDelete//விடிய விடிய யாருடனாவது நீங்கள் பேசியிருக்கிறீர்களா? நான் பேசியிருக்கிறேன்... ஒன்று ஹவுஸ் பாசுடன்//
இப்பவுமா?? :-))))
கல்யாணம் ஆகி 15 வருஷம் முடிய போகுது . நாங்க விடிய விடிய பேசின ஒரே நாள் என்னிக்குன்னு கல்யாணம் ஆன எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும்.
இப்போல்லாம்?? கொர்...கொர்...னு ரெண்டு பேரும் பேசிக்க வேண்டியது தான்
சங்கவி: நன்றி உங்கள் பையனும் சேர்ந்து படம் பார்த்தானா?
ReplyDeleteநன்றி வலங்கை சரவணன்
ReplyDeleteராமலட்சுமி மேடம்: உங்கள் படங்களை பின் ப்ளாகில் பகிருங்கள்
ReplyDeleteரெவெரி said...
ReplyDelete//மீனாட்சி...வீட்டுக்காரம்மா சொன்னாங்க இடுப்பில் சேலையை கூட மேல வரை தூக்கி பின் பண்ணும் பொண்ணு என்று..//
ஆமா ! ஆமா !
டேங்க்ஸ் ரெவரி அண்ணாச்சி
கோவை நேரம்: ஜெட்லியை உங்களுக்கு தெரியுமா? சுவாரஸ்யமான நண்பர்
ReplyDeleteநித்ய அஜால் குஜாலானந்தா said...
ReplyDeleteMrs. அய்யாசாமி நீங்க எங்கேயிருந்தாலும் உங்க வீட்டுக்காரர் கடைக்கு வரவும்...........!!
**
ஏம்பா? ஏன்? நல்லா தானே போய்க்கிட்டு இருக்கு?
ஒரு ரகசியம் சொல்லவா? ஒரே பொண்ணை தொடர்ந்து சைட் அடிச்சா தான் மனைவிகளுக்கு பிடிக்காது. (சந்தேகம் !!) இப்படி அழகாய் இருக்கும் எல்லாரையும் ரசித்தால், நாம் ரசிப்பது கடவுளின் படைப்பை மட்டுமே என தண்ணி தெளிச்சு விட்டுடுவாங்க
மாதேவி: நன்றி பாருங்க
ReplyDeleteநித்ய அஜால் குஜாலானந்தா : //குண்டாகனும்னு நினைக்கிறவங்க யாருமே இல்லியா.........?? என் கட்சிக்கு யாரும் வரமாட்டீங்களா .....நான் மட்டும் தனியா உட்கார்ந்துகிட்டு புலம்பிகிட்டு இருக்கேனா.......
ReplyDeleteஒரு 10 % மக்கள் அப்படியும் இருக்காங்க. ஆனா நாங்க தான் மெஜாரிட்டி
மதுரை சீரியலில் நடித்த மீனாக்ஷியை தெரியும் ஆனால் உண்மையான பெயர் தெரியாது.இன்று இன்றுதான் தெரிந்துகொண்டேன். சினிமாவில் நடிக்க தகுதியுள்ள முகவெட்டும் நடிப்புத் திறமையும் உடையவர்.
ReplyDeleteவணக்கம் நண்பரே,
ReplyDeleteபதிவு வழக்கம் போல் சூப்பர்,ஈ படம் நல்லா இருக்கு...பூஜா கலக்கல்..
ஜெட்லி போட்டோ அசந்து போய்டேன்...ஆண்டவனின் அருட்கொடை...ஹிட்ஸ் எல்லாம் உங்களுக்கு ஒரு மேட்டரா சார்? இன்னும் போகும் பாத்துட்டே இருங்க.......போன் பாட்டு என்னோட ஆல் டைம் பேவரைட்டு..
நான் ஈ நானும் பார்த்தேன். ரொம்பவே என்ஜாய் பண்ணி பார்த்த படம். இதுக்கு கூட லாஜிக் இல்ல லாஜிக் இல்லன்னு நம்மாளுங்க விமர்சனம் எழுதுவாங்களோன்னு நினைச்சேன். நல்ல வேளை..அப்படி எதுவும் நடக்கலை :)
ReplyDeleteஸ்ரீஜா - உங்க ரவுசு இருக்கே........கடவுள் சீக்கிரம் கண்ணை திறப்பார்.....ஹவுஸ் பாஸை பின்னூட்டங்களையும் வாசிக்க வைப்பார் :)))
"சங்கீத ஸ்வரங்கள்" ரொம்ப ரசிச்ச பாடல்.
ReplyDeleteT.N.MURALIDHARAN said...
ReplyDeleteமீனாக்ஷியை தெரியும் ..... சினிமாவில் நடிக்க தகுதியுள்ள முகவெட்டும் நடிப்புத் திறமையும் உடையவர்.
உண்மை தான் சார் நன்றி ; ரேவதி மாதிரி நடிகை ஆகலாம்
சித்தார்த்தன் : நல்ல வரிகளாக சொல்லி வாழ்த்தி உள்ளீர்கள் மிக மகிழ்ந்தேன் நன்றி
ReplyDeleteரகு said...
ReplyDelete//ஸ்ரீஜா - உங்க ரவுசு இருக்கே........கடவுள் சீக்கிரம் கண்ணை திறப்பார்.....ஹவுஸ் பாஸை பின்னூட்டங்களையும் வாசிக்க வைப்பார் :)))
ரகு: வேண்டாம் யூ ஆர் மை பெஸ்ட்டு பிரண்டு
அமைதி சாரல்: சங்கீத ஸ்வரங்கள் பலருக்கும் பிடிச்ச பாட்டா இருக்கு
ReplyDeleteThanks !