Thursday, July 26, 2012

தாஜ்மஹால்.. வாவ்..! நேரடி அனுபவம்

தாஜ்மஹால்.. இந்தியர்கள் மட்டுமல்ல, நம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டவரும் தவறாமல் பார்க்க விரும்பும் இடம். எங்கள் டில்லி பயணத்தில் ஆக்ரா சென்றபோது தாஜுக்கும் சென்றோம். அருமையான அனுபவமாய் இது இருந்தது

எங்களுடன் வந்த நண்பன் தேவா இதுவரை பத்து முறைக்கும் மேல் தாஜ்மஹால் வந்துள்ளதாக சொன்னது ஆச்சரியமாய் இருந்தது. இங்கு வரும் ஒவ்வொரு முறையும் மனசு என்னவோ போல் ஆகி விடும் என்று சொன்ன தேவாதான் தாஜ்மஹால் பற்றி பல்வேறு தகவல்கள் நமக்கு சொன்னது.
 
****
நாம் செல்லும் பஸ் அல்லது கார் தாஜுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்த படுகிறது. பஸ், கார் அருகில் அனுமதித்தால்,  கட்டிடத்தை புகை பாழாக்கும் என்பதால் !

ஒரு கிலோ மீட்டர் முன்பு இறங்கும் நாம், பாட்டரியில் இயங்கும் காரில் பயணிக்கிறோம்.

பாட்டரியில் இயங்கும் கார்
ஒரு ஆளுக்கு பத்து ரூபாய் வாங்கி கொண்டு தாஜிற்கு இருநூறு மீட்டர் முன்பு கொண்டு போய் விடுகின்றனர். அதன் பின் மீதம் உள்ள தூரத்தை நடந்து கடக்கிறோம்.

தாஜ்க்கு செல்லும் சாலையை இந்த வீடியோவில் பாருங்கள்



உள்ளே நுழையும் முன் மிக தீவிரமான செக்கிங் நடக்கிறது.



























தாஜுக்கு பல வழிகள் உள்ளன. நீங்கள் செல்லும் பேருந்து குறிப்பிட்ட திசையில் உள்ள நுழைவு வாயிலில் உள்ளது எனில் மீண்டும் நீங்கள் அதே இடத்துக்கு வர வேண்டும். எனவே எந்த திசை exit-ல் நீங்கள் வெளியேற வேண்டும் என்பதை குறித்து வைத்து கொள்வது முக்கியம்

நுழைந்ததும் தெரிகிற கட்டிடம் பாருங்கள் இதுதான் தாஜ் என்றால் அடிக்க மாட்டீர்கள்?



இந்த இடத்திலிருந்து சிறிது தொலைவு சென்றால், வலப்புறத்தில் தாஜ்மஹாலை காணலாம் !

முதல் பார்வையில் தாஜ்மஹால்  

முதன் முதலில் தாஜ்மஹாலை  பார்க்கும்  அந்த சில நொடிகள் மனதை என்னவோ செய்கிறது. நெடு நாள் பார்க்க நினைத்து பார்ப்பதால் இந்த உணர்வா, அல்லது அந்த இடம் தருகிற சிலிர்ப்பா என தெரியவில்லை. இந்த வீடியோவில் தாஜ்மஹாலை பார்த்து ரசியுங்கள்




தாஜுக்குள் ஷூ போட்டு செல்ல அனுமதி இல்லை. (வெள்ளை நிற கட்டிடம் பாழ் ஆக கூடாது என்று தான்) ஆனால் வெய்யில் கொதிக்குமே என்று திக்கான சாக்ஸ் எடுத்து சென்றிருந்தோம்.

இம்முறை ஒரு முன்னேற்றம். நமது ஷூ மேல் ஒரு கவர் போட்டு கொண்டு செல்ல அனுமதிக்கிறார்கள். இந்த கவர் போட்டு கொண்டால் ஷூவுடனே செல்லலாம். இதற்கு பத்து ரூபாய் வாங்குகிறார்கள். முன்பெல்லாம் வெளி நாட்டு பயணிகளுக்கு மட்டுமே இந்த சலுகை தந்து வந்துள்ளனர். அதென்ன வெளி நாட்டு பயணிகள் மட்டும் இப்படி போவது என எதிர்ப்பு கிளம்ப, இந்தியர்களுக்கும் இப்போது இப்படி அனுமதிக்கிறார்கள்


தாஜ்மஹாலுக்குள் மக்கள் கூட்டம்
ஆனால் ஒரு முறை போய் வந்து கழட்டி போட்ட கவரை,  சிலர் எடுத்து அணிந்து கொண்டு செல்கின்றனர். இன்னும் சிலர் காலிலிருந்து கவர் கீழே கழன்று விழுந்தாலும், கவலைப்படாமல்  ஷூவுடன் செல்கின்றனர். இதனால் இந்தியர்களுக்கு இந்த சலுகை எவ்வளவு நாள் தொடரும் என தெரியலை.

உள்ளே நுழைய கட்டிடம் முழுமையும் சுற்றி வர வைக்கிறார்கள். இந்த வெய்யிலில் ஏன் தேவையின்றி சுற்ற விடுகிறார்கள் என பல முறை வந்த தேவா வருந்திய படி வந்தார்

முன்பு இங்கு நிறைய காமிரா மேன்கள் இருப்பாராம். அவர்கள் தாஜ் முன் நாமிருக்கிற மாதிரி மிக அழகான படங்கள் எடுத்து தருவர். நாம் எடுக்கும் படங்களை விட அவர்கள் எடுப்பவை மிக அற்புதமாக இருக்கும். ஆனால் அவர்களுடன் நடந்த ஏதோ சண்டையால் புகைப்படகாரர்கள் மட்டுமல்லாது கைடுகளும் யாரும் தற்போது தாஜ் அருகே அனுமதி இல்லை !

கீழே மும்தாஜ் கல்லறை உள்ளது. அங்கு தற்போது யாரும் அனுமதிக்க படுவதில்லை.

தாஜுக்கு பின்னே யமுனை ஆறு உள்ளது. இங்கு நன்கு தண்ணீர் இருக்கும் போது போட்டிங் இருக்குமாம். இப்படி போட்டிங் சென்றபடி தாஜின் அழகை பார்த்து ரசிப்பது ஒரு பொழுது போக்கு.

வெளியே வெய்யில் தகிக்க தாஜ்மஹால் உள்ளுக்குள் போனதும் மிக கூல் ஆக இருந்தது. மார்பிள் மகிமை !

தாஜ் கட்டிடம் முன்பு மிக பெரிய புல்வெளி உள்ளது. அதில் நிறைய நாரைகள் இருந்தன.
நாரைகள் 
மிக கூட்டமான இந்த இடத்தில் கவலைப்படாமல் உலா வரும் நாரைகளை பார்க்க வேடிக்கையாக இருந்தது.

தாஜுக்கு நேரே போட்டோ எடுக்க ஒரு பெஞ்ச் உள்ளது. அதில் ஏதாவது குடும்பத்தை சேர்ந்தோர் ஒவ்வொருவராய் அமர்ந்து படம் எடுக்கிறார்கள்.


பத்து பேர் உள்ள குடும்பத்தில் வித வித காம்பினேஷனில் பத்து நிமிஷத்துக்கு மேல் படமெடுக்க நேரம் எடுக்கிறார்கள். இதனால் அங்கு காத்திருக்கும் மற்றவர்கள் அமர்ந்து படம் எடுக்க வாய்ப்பு தருவது பற்றி கவலைப்படுவதே இல்லை. ஆக்ரா கோட்டையிலும் இதே தான் நடந்தது.

****
நிற்க. தாஜ்மகாலில் எடுத்த படங்கள், வீடியோ மற்றும் தாஜ் குறித்த அனைத்து தகவல்களையும் ஒரே பதிவில் அடக்கினால் ரொம்ப டூ மச்சாய் இருக்கும். எனவே தாஜ் விசிட் அடுத்த பகுதியுடன் நிறைவடையும் !

****

அடுத்த பகுதியில்:

தாஜ்மஹாலில் சோகமான டயானா

தமிழர் குடும்பம் இங்கு பேசிய சுவாரஸ்ய டயலாக்

தாஜ்மஹாலின் அதி அற்புத    Caligraphy writing

எடுக்க கூடாத இடத்தில் புகைப்படம் எடுத்து மாட்டி கொண்ட அய்யாசாமி

இதுவரை பார்க்காத சில கோணங்களில் தாஜ் புகைப்படம் !



தாஜ் குறித்து நீங்கள் அறியாத ஏராள தகவல்கள்...!

65 comments:

  1. Anonymous7:58:00 AM

    நல்ல பதிவு. அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்து விட்டீர்கள்..

    ReplyDelete
  2. முதன் முறை செல்லும் உணர்வை நன்றாக விவரித்திருக்கிறீர்கள்.

    எனக்கு இன்னும் தாஜ்க்கு செல்லும் வாய்ப்பு அமையவில்லை. ஆபீசே கதி என்று கிடக்கிறேன் :)

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு மோகன்.

    மற்ற கருத்துகள் மாலையில்! :)

    ReplyDelete
  4. நான் முதன் முறை சென்ற போது அனுபவித்த சுகத்தை
    தங்கள் பதிவு மீண்டும் நினைவுறுத்திப் போனது
    அருமையான புகைப்படங்கள் காணொளி விளக்கங்கள்
    பகிர்வுக்கு நன்றி
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. இனிய பயணத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
    தொடருங்கள். படங்கள் அருமை.

    நன்றி (த.ம. 6)

    ReplyDelete
  6. சார் அது ஆறுதான் பேரு வந்து யமுனா நதி ,,,,,,,,,

    ReplyDelete
  7. சார் அது ஆறுதான் பேரு வந்து யமுனா நதி ,,,,,,,,,

    ReplyDelete
  8. முதல்முறை பார்க்கும்போது மனசுக்குள்ளே வரும் ஜிலீர் என்ற உணர்வே தனி!

    பின்னால் ஓடும் ஆறு யமுனை நதி.

    கீழே நிலவறையில் ஒரிஜனல் சமாதிகளைப் பார்த்துருக்கேன். அது அந்தக் காலம்! அதாவது தீவிரவாதம் வருமுன் இருந்த பொற்காலம்.

    செக்யூரிட்டி செக் கூட இல்லை அப்போ!

    பாட்டரி வண்டி நல்லா இருக்கே! நான் சைக்கிள் ரிக்‌ஷா. வரும்போது குதிரை வண்டி:-)

    நேரம் கிடைக்கும்போது பார்க்க ஒரு சுட்டி:-)
    http://thulasidhalam.blogspot.co.nz/2010/12/blog-post_23.html

    ReplyDelete
  9. நல்ல பதிவு..நான் ஒருமுறை தாஜ்மஹாலை கண்டிருக்கிறேன்.ஆனால் பாருங்கள் புகைப்படம் வீடியோ என்று எதுவும் எடுக்கவில்லை.

    ReplyDelete
  10. நேர்ல பார்க்க எப்போ நேரம் வரப்போவுதோ.. அதுவரைக்கும் உங்க இடுகையில் பார்த்துக்கறேன்.

    படங்களும் அருமையா வந்துருக்கு.

    ReplyDelete
  11. \\முதன் முதலில் தாஜ்மஹாலை பார்க்கும் அந்த சில நொடிகள் மனதை என்னவோ செய்கிறது. நெடு நாள் பார்க்க நினைத்து பார்ப்பதால் இந்த உணர்வா, அல்லது அந்த இடம் தருகிற சிலிர்ப்பா என தெரியவில்லை. \\ என்னதான் புகைப் படங்களிலும், திரைப் படங்களிலும் பலமுறை தசை பார்த்திருந்தாலும், நுழைவாயில் எல்லாம் கடந்து முதன் முதலாக தாஜ்மஹாலை நேரில் பார்க்கும் போது அதன் பிரமாண்டம் நம்மை நிஜமாகவே அசர வைத்து விடுகிறது.

    ReplyDelete
  12. \\
    நாம் செல்லும் பஸ் அல்லது கார் தாஜுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்த படுகிறது. பஸ், கார் அருகில் அனுமதித்தால், கட்டிடத்தை புகை பாழாக்கும் என்பதால் !

    ஒரு கிலோ மீட்டர் முன்பு இறங்கும் நாம், பாட்டரியில் இயங்கும் காரில் பயணிக்கிறோம்.\\ நாங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சென்றிருந்தோம், அப்போது இந்த மாதிரி ஏற்ப்பாடுகள் இல்லையே, நடந்து செல்லும் தூரம் வரை ஆட்டோக்கள் சென்றன.

    ReplyDelete
  13. \\ஆனால் அவர்களுடன் நடந்த ஏதோ சண்டையால் புகைப்படகாரர்கள் மட்டுமல்லாது கைடுகளும் யாரும் தற்போது தாஜ் அருகே அனுமதி இல்லை !\\ அங்கே வரும் வெளிநாட்டு பயணிகளை தொல்லை செய்திருப்பார்கள், வேறென்ன. குறைந்த பட்சம், நிர்வாகத்தின் லைசன்சோடு உள்ள புகைப்படகாரர்கள் மட்டுமாவது அனுமதிக்கலாம்.

    ReplyDelete
  14. \\கீழே மும்தாஜ் கல்லறை உள்ளது. அங்கு தற்போது யாரும் அனுமதிக்க படுவதில்லை.\\ உள்ளே தாஜின் மையப் பகுதியில் இரண்டு கல்லறைகள் இருந்தன, ஒன்று மும்தஜினது, இன்னொரு ஷாஜஹானுடையது என்றார்களே, அது என்னவாயிற்று?

    http://members.virtualtourist.com/m/p/m/b4540/

    ReplyDelete
  15. அழகழகான படங்கள்.அருமையான பகிர்வு.

    ReplyDelete
  16. சும்மா அதிருதுல்ல.., நான் கடைசி படத்தை சொன்னேன் ஹி ஹி!

    ReplyDelete
  17. தாஜ்மஹால் சென்று வந்த உணர்வு...

    ReplyDelete
  18. வெய்யில் தகிக்க பார்த்த தாஜ்மஹாலின் ஜிலீர் படங்களும் பகிர்வும் அருமை...

    ReplyDelete
  19. வெயில் காலத்தில் போனாலே மிகவும் டயர்டாகி விடுவோம். இது வரை மூன்று முறை அங்கு போயாச்சு.பெளர்ணமி அன்று இரவில் மிக நல்லாயிருக்குமாமே ஒரு முறை போக வேண்டும்.

    ReplyDelete
  20. அருமையான வர்ணனை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. ஆஹா அருமை நானே நேரில் போயி பார்த்தது போல இருக்கு நன்றி....!

    அடப்பாவமே தாஜ்மஹால் போனால் அங்கேயும் செக்கிங்கா முடியலைடா ஷாஜகான்....!

    ReplyDelete
  22. நீங்க ஒரு சூப்பர் guide சார்!! தாஜ்மஹால் உள்ள நுழைய இவ்வளவு கெடுபிடி பாதுகாப்பு இருக்கும்னு இதுவரைக்கும் தெரியாது சார்... உங்க பதிவுல இருந்துதான் தெரிஞ்சிகிட்டேன்... அழகாக படம் பிடித்து போட்டதுக்கு நன்றி!!!

    ReplyDelete
  23. படங்களும் பதிவும் கவர்கின்றன. அதே சமயம் மும்தாஜ் பற்றி அடிக்கடி வரும் எஸ் எம் எஸ்ஸும் நினைவுக்கு வருகிறது!!

    ReplyDelete
  24. பாலஹனுமான்: மிக நன்றி மகிழ்ச்சி

    ReplyDelete
  25. ரகு: நானும் இப்போ தானே போயிருக்கேன். உங்களுக்கு இன்னும் வயசு இருக்கு. தனியா போவது நல்லா இருக்காது. காதலி/ அல்லது மனைவி இருக்கணும். நம்ம கூடவும் வீட்டம்மா இருந்தாங்கோ

    ReplyDelete
  26. வெங்கட்: வெல்கம். வெல்கம். ஆவோ :)

    ReplyDelete
  27. ரமணி சார்: மிக மகிழ்ச்சி

    ReplyDelete
  28. ஹேமந்த் : சேர்த்து விட்டேன் நண்பரே

    ReplyDelete
  29. துளசி மேடம்: ஒரிஜனல் சமாதிகளைப் பார்த்துருக்கீன்களா? ம்ம் காலப்போக்கில் எல்லாம் மாறிடுது. உங்கள் பதிவை அவசியம் படிக்கிறேன்

    ReplyDelete
  30. மதுமதி: அப்படியா நண்பரே? படம் எடுத்தால், அதை பார்க்கும் போது நாங்கள் சென்ற வந்த உணர்வு மீண்டும் கிடைக்குது

    ReplyDelete
  31. அமைதி சாரல்: மும்பையில் இருந்து அதிக தூரம் இல்லீங்களே (எங்களுடன் கம்பேர் செய்தால்.. நாங்கள் தென் இந்தியா ஆயிற்றே)

    ReplyDelete
  32. தாஸ்: ஆம் முதல் பார்வை என்னமோ செய்து

    //உள்ளே தாஜின் மையப் பகுதியில் இரண்டு கல்லறைகள் இருந்தன, ஒன்று மும்தஜினது, இன்னொரு ஷாஜஹானுடையது என்றார்களே//

    ஆம். இரண்டுமே இருக்கு. நானும் அதை சொல்லிருக்கேன் என நினைக்கிறேன்

    ReplyDelete
  33. நன்றி ஸாதிகா

    ReplyDelete
  34. வரலாற்று சுவடுகள்: நன்றி நண்பா;

    ReplyDelete
  35. சங்கவி: நன்றி தம்பி

    ReplyDelete
  36. இராஜராஜேஸ்வரி: நன்றி மேடம்

    ReplyDelete
  37. அமுதா மேடம் : வெய்யில் கொடுமை தான். எங்களுக்கும் கூட தாஜை இரவில் பார்க்க ஆசை தான்

    ReplyDelete
  38. சீனி: வழக்கமாய் அடிஷனல் தகவல் சொல்வீர்கள்; இம்முறையும் எதிர்பார்த்தேன் நன்றி வருகைக்கு

    ReplyDelete
  39. MANO நாஞ்சில் மனோ said...

    அடப்பாவமே தாஜ்மஹால் போனால் அங்கேயும் செக்கிங்கா ....!

    மனோ: இல்லாட்டி உள்ளே ஏதாவது தீவிரவாதி போயிட்டால் பிரச்சனை தானே நண்பரே !

    ReplyDelete
  40. சமீரா: உங்கள் பின்னூட்டம் மிக மகிழ்ச்சி தந்தது. குறிப்பாய் உங்கள் profile பார்த்த போது, நீங்கள் தொடர்வது ஏன். கணேசன் என்ற நல்ல பதிவரையும் கூடவே நம் பதிவையும் மட்டுமே என்று அறிந்து ஆச்சரியம் ஆனது

    ReplyDelete
  41. ஸ்ரீராம்: மும்தாஜ் ஜோக் என்ன சாரே? ஐ டோன்ட் நோ

    ReplyDelete
  42. படங்களும் விரிவான பகிர்வும் மிக அருமை. அடுத்த பதிவை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  43. தாஜ்மஹால் கண்டுகொண்டோம்.

    மிகுதிக்கு வெயிட்டிங்...

    ReplyDelete
  44. Anonymous7:55:00 PM

    இம்முறை இன்னும் நிறைய விவரங்கள்...

    ரசித்தேன்...

    உங்க போட்டோ போடாம உங்களுக்கு இருக்க முடியாதா?
    -:)

    ReplyDelete
  45. முன்பெல்லாம் கீழே இருக்கும் மும்தாஜின் சமாதி பார்க்க விடுவார்கள். நான் பலமுறை இங்கே சென்றிருப்பதால் பார்த்திருக்கிறேன். பல முறை சென்றதைப் பற்றி ”மும்தாஜ் வந்து விட்டால்...” [http://venkatnagaraj.blogspot.in/2011/06/blog-post_13.html] என்ற பகிர்வில் எழுதி இருக்கிறேன். பௌர்ணமி இரவில் பார்ப்பது நிச்சயம் பரவசம் அளிக்கும்.

    பொதுவாகவே தில்லியிலிருந்து அழைத்துச் செல்லும் பேருந்துகள் மதியம் 11.30-12.00 மணிக்கு தான் தாஜில் விடுவார்கள் - அதாவது நல்ல உச்சி வெயிலில். காலில் செருப்பில்லாமல் மக்கள் ஓட்டமாய் ஓடுவார்கள்...

    பேருந்து நிறுத்தத்திலிருந்து டாங்கா [குதிரை வண்டி], பேட்டரி வண்டிகள், ரிக்‌ஷாக்கள் என எல்லாம் உண்டு.

    புகைப்படங்கள் எடுப்பவர்கள் குறிப்பாய் பாஷை தெரியாதவர்களை நன்றாக ஏமாற்றுவார்கள். அப்போதே புகைப்படம் எடுத்துக் கொடுப்பதாகச் சொல்லி, பணம் வாங்கிக்கொண்டு கம்பி நீட்டிவிடுவார்கள். இது போல சிலர் இருப்பதால் எல்லோருக்கும் வந்தது பிரச்சனை.

    இப்போது தானே இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளெல்லாம், முன்பு சுகமாய் உள்ளே சென்று நெடு நேரம் தாஜின் அழகை ரசித்து வந்திருக்கிறேன்....

    அடுத்த பகுதியில் நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் எனப் பார்க்கக் காத்திருப்புடன்....

    ReplyDelete
  46. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    ஸ்ரீவில்லிபுத்தூரில் தேரோட்டத் திருவிழா. நிறைய 'வீட்டுப் பாடங்கள்" சேர்ந்து விட்டன.
    நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  47. காணொளியில்
    கவர்ந்தீர்கள்.
    காணொளியுடன்
    சிறு வர்ணனையாக
    குரலொலியும்
    சேர்ந்திருந்தால்
    இன்னமும் கூட
    சிறப்பாக இருக்குமே...

    எடுக்கும்போதேயும்
    வர்ணிக்கலாம்
    எடுத்தபின் தனியாகவும்
    சிறு அறிமுகம்,
    விமர்சனம்
    இணைக்கலாமே...!

    ReplyDelete
  48. தாஜ் மகாலைக் கண்டு பிரமிப்பதற்கு அதன் அழகும் பிரம்மாண்டமும் காரணம் அல்ல.கலையோடு காதலும் சேர்ந்து கட்டப்பட்டதாலோ என்னவோ இன்றுவரை உயிரோட்டமாகத் திகழ்கிறது
    இனிமையான பகிர்வு. .

    ReplyDelete
  49. தமிழ் மணத்தில் முதல் இடுகையாக இந்த இடுகை

    வாசகர்களால் அதிகம் பார்வையிடப்பட்ட இடுகைகள்
    சூடான இடுகைகள்

    இன்று
    தாஜ்மஹால்.. வாவ்..! நேரடி அனுபவம்
    மோகன் குமார்

    ReplyDelete
  50. பயனுள்ள தகவல்கள்

    ReplyDelete
  51. ராமலட்சுமி மேடம்: புகைப்படக்காரரான நீங்கள் படங்கள் நன்று எனும் போது மகிழ்வாக உள்ளது

    ReplyDelete
  52. நன்றி மாதேவி விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்

    ReplyDelete
  53. ரெவெரி said...

    உங்க போட்டோ போடாம உங்களுக்கு இருக்க முடியாதா?
    -:)

    ரெவெரி அண்ணே: படம் போடாட்டி நாம அந்த இடத்துக்கு போகாமலே கதை எழுதிட்டோம்னு நினைக்க வாய்ப்பு இருக்கு இல்லியா? (யப்பா ! எப்புடி எல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு )

    ReplyDelete
  54. வெங்கட் : வழமை போல் மிக விரிவான விளக்கங்கள் மிக நன்றி நண்பா

    ReplyDelete
  55. ரத்னவேல் ஐயா: முக நூலில் பகிர்ந்தமைக்கு மிக நன்றி

    ReplyDelete
  56. ஸ்ரீராம்: பாட்டாவே படிச்சிடீன்களா :) மகிழ்ச்சி நன்றி ; நம்ம குரல் ரொம்ப சுமார். மேலும் தனியாய் பேசி இணைக்கும் தொழில் நுட்பமெல்லாம் இன்னும் கற்கலை.

    ReplyDelete
  57. நன்றி முரளி சார்

    ReplyDelete
  58. நன்றி அவர்கள் உண்மைகள் மகிழ்ச்சி

    ReplyDelete
  59. தமிழ்மணம் மகுடம்
    கடந்த 2 நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை
    தாஜ்மஹால்.. வாவ்..! நேரடி அனுபவம் - 22/22
    மோகன் குமார்

    ReplyDelete
  60. தாஜ் பற்றி அக்கு வேறா ஆணிவேரா தெரிஞ்சுக்க, இதப் பாருங்க மக்காஸ்!!

    http://www.youtube.com/watch?v=c9dvrQ26arA&feature=related

    ReplyDelete
  61. மிகவும் சிறப்பான பதிவு. போட்டோ மற்றும் வீடியோ நன்று. அடுத்த பாகம் எப்பொழுது வரும் என்று கேட்க வைக்கிறது இந்தப் பதிவு!

    ReplyDelete
  62. சூப்பருங்க... நான் போயிட்டு வந்ததை நினைவுபடுத்திவிட்டீர்கள்!!!

    http://www.saravanakumaran.com/2010/08/blog-post_17.html

    ReplyDelete
  63. //ஹேமந்த் : சேர்த்து விட்டேன் நண்பரே//

    நன்றி சார், அப்புறம் ஒரு விஷயம்

    அங்க மூங்கில் பட்டு புடவை பிரசித்தம், காசு இல்லைன்னு சொன்ன கூட VPP பார்சல் பண்ணுவாங்க, அந்த புடவை எவ்ளோ வருஷம் கழிச்சி போய் திரும்ப கொடுத்தாலும் வாங்கிட்டு
    discountla புது புடவை வாங்கிக்கலாம், அங்க போற
    பெண்மணிகள் மறக்காம வாங்கிட்டு வாங்க.
    நம்ம ஊரு கோ-ஆப்டெக்ஸ் மாதிரி அங்க யு.பி ஸ்டேட் சொசிட்டி கடைங்க இருக்கு அங்கதான் வாங்கணும்.. புடவை மட்டும் இல்ல
    நிறைய பெட்ஷீட், பில்லோ கோவேர்ஸ் அட்டகாசம இருக்கும்.

    ReplyDelete
  64. //ஹேமந்த் : சேர்த்து விட்டேன் நண்பரே//

    நன்றி சார், அப்புறம் ஒரு விஷயம்

    அங்க மூங்கில் பட்டு புடவை பிரசித்தம், காசு இல்லைன்னு சொன்ன கூட VPP பார்சல் பண்ணுவாங்க, அந்த புடவை எவ்ளோ வருஷம் கழிச்சி போய் திரும்ப கொடுத்தாலும் வாங்கிட்டு
    discountla புது புடவை வாங்கிக்கலாம், அங்க போற
    பெண்மணிகள் மறக்காம வாங்கிட்டு வாங்க.
    நம்ம ஊரு கோ-ஆப்டெக்ஸ் மாதிரி அங்க யு.பி ஸ்டேட் சொசிட்டி கடைங்க இருக்கு அங்கதான் வாங்கணும்.. புடவை மட்டும் இல்ல
    நிறைய பெட்ஷீட், பில்லோ கோவேர்ஸ் அட்டகாசம இருக்கும்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...