Thursday, July 5, 2012

டில்லி :சில முக்கிய குறிப்புகள்

லைநகர் புது டில்லி சென்ற போது கவனித்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்கிறேன்
***
தில்லியில் எங்கும் சினிமா போஸ்டர்களை துளியும் காண வில்லை. போலவே அரசியல் மீட்டிங் குறித்த போஸ்டர்களும் ! இவை முழுதும் தடை செய்யப்பட்டதாம் ! சினிமா போஸ்டர் இல்லாவிடில் படம் எந்த திரை அரங்கில் நடக்கிறது என எப்படி தெரியும் என்றால், பேப்பர் அல்லது இணையம் மூலம் தான் தெரியும் என்கிறார்கள் !

பாஹர் கன்ஜ் என்கிற தெரு முழுக்க ஹோட்டல்கள் நிரம்பி வழிகிறது. இந்த தெரு மட்டும் டிராபிக் மிக மோசமாய் உள்ளது. ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவாய் உள்ள இத்தெருவை கடக்க ( ஒன் வே டிராபிக் மட்டுமே அனுமதி !) குறைந்தது இருபது நிமிடம் ஆகிறது !

நாங்கள் சென்ற மே மாதம் பல முறை புழுதி புயல் இரவு நேரத்தில் அடித்தது. வீட்டுக்குள் எல்லாம் புழுதி வந்து நம்மை அறியாமல் இருமி, தும்மி விழிக்கிறோம். அடிக்கிற காற்றில் கண்ணாடி ஜன்னல்கள் உடையவும் வாய்ப்பு உண்டு ! இயற்கை தில்லி மக்களை நிறையவே சோதிக்கிறது !

வெய்யில்.... அடேங்கப்பா ! சென்னையில் வெய்யில் அதிகம் எனினும் மதியம் மூணு, நாலு மணிக்கு மேல் கடல் காற்று வீசுவதால் சற்று இதமாகி விடும். ஆனால் டில்லியில் கடல் இல்லாததால் வெய்யில் கொன்று கடாசுகிறது. அதே நேரம் டிசம்பர் போன்ற மாதத்தில் குளிர் மைனசில் போய் விடுமாம்  ! அனைத்து வீட்டிலும் சம்மர் கிளாத் தனியாக, விண்டர் கிளாத் முற்றிலும் வேறாக வைத்திருப்பார்களாம் ! அந்தந்த சீசன் முடிந்ததும் அந்த உடைகள் பரணுக்கு போய் விடுமாம் !

பெரிய சைஸ் ஆஞ்சநேயர்
ங்காங்கு சில கோயில்களில் வெளியே உள்ள போர்டில் தமிழ் பெயரை பார்க்க முடிகிறது. வசந்த் குன்ஜ் அருகே பார்த்து வியந்த தமிழ் பெயர் பலகை " வைகுண்ட நாதர் கோவில் " !
டில்லியில் மிக வியந்த, ரசித்த ஒரு விஷயம் பெரிய, பெரிய  பார்க்குகள் ! நடை பயிற்சிக்கும், விளையாடவும் மக்கள் இதை நன்கு பயன் படுத்துகின்றனர். பல அரசியல்வாதிகளும் கூட சாதரணமாய் தங்கள் நண்பர்களுடன் பார்க்கில் நடை பயிற்சி செய்வார்களாம் !

வீடுகளில் வேலை செய்ய பங்களாதேஷில் இருந்து பெண்கள் வருகிறார்களாம் ! (தில்லியிலேயே தங்கி விடுவார்கள் போலும்!)

நிறைய ஓவர் பிரிட்ஜ்கள் இருந்தன. மற்ற ஊர்களில் ஓவர் பிரிட்ஜ் மீது ஏற படிகள் தான் இருக்கும். இங்கோ ஓவர் பிரிட்ஜ் ஏற சில இடங்களில் escalators - இருந்தன ! தலை நகரம் !!

முனிர்கா அருகே உள்ள Flyover
முனிர்கா என்கிற இடத்தில் தமிழர்கள் நிறைய வசிக்கிறார்கள். இங்கு ராமா ஸ்டோர்ஸ், திருப்பதி ஸ்டோர்ஸ் ஆகிய தமிழ் கடைகள் உள்ளன (பலவும் விற்கிறார்கள், குறிப்பாய் மளிகை சாமான்கள்)

CNG கேசில் இயங்கும் ஆட்டோ மற்றும் கார்கள் ஏராளமாய் காண முடிகிறது (சென்னையில் கேசில் இயங்கும் ஆட்டோ மிக அரிது.)

கார்களை பொறுத்த வரை டில்லி ரெஜிஸ்டிரேஷன் மட்டுமல்லாது பிற மாநில வண்டிகளும் நிறைய புழங்குகின்றன. குறிப்பாய் சண்டிகர் மற்றும் பஞ்சாப் வண்டிகள் எக்கச்சக்கம் !

இது நல்ல நிலையில் உள்ள பஸ்
பெரிய ரோடுகளில் சைக்கிள் டிராக் என ஓரத்தில் தனியாக வைத்துள்ளனர். சைக்கிள் ஓட்டிகள் பாதுகாப்பாக, நிதானமாக அதில் ஓட்டி செல்கின்றனர்.

ங்களுக்கு கார் ஓட்டிய தேவாவின் டிரைவர் நரேஷின் பொழுது போக்கு கிரிக்கெட் ஆடுவது தான். சனி, ஞாயிறில் உள்ளூர் டீம்களுக்கு ஆடும் இவர் பெட் மேட்சில் (Bet Match) நிறையவே சம்பாதிப்பாராம் !

பழைய டப்பா பஸ்
ர்தார்ஜி ஜோக் நிறைய படிக்கிறோமே... அவை ஓரளவு உண்மை தான் என்கிறார்கள் டில்லி வாசிகள் ! சர்தார்ஜிகள் மட்டுமல்லாது சர்தார்ஜினிகளும் கூட தங்களை தாங்களே கிண்டல் செய்து கொள்வார்களாம் !

ஞ்சாபில் இருக்கும் அனைவரும் சீக்கியர், தலையில் டர்பன் கட்டுவார்கள் என நினைக்கிறோம் நாம் ! (நான் அப்படி தான் நினைத்தேன்) இது உண்மையில்லை. அங்கு பிற மதத்தவர்கள் உண்டு என்பதோடு, இந்துக்களிலேயே சீக்கியர் இன்றி நிறைய பேர் உண்டாம் ! உதாரணமாய் கம்பீர் மற்றும் விராட் கோலி இருவருமே டில்லியை சேர்ந்த டர்பன் அணியாத பஞ்சாபிகள் !

மாணவர்கள் வளர்க்கப்படும் விதம் தான் நிஜமாகவே அச்சுறுத்துகிறது.
டில்லி காரர்கள் தங்கள் குழந்தைகளை மிக சுதந்திரமாக வளர்க்கிறார்கள். ஆனால் அதற்காக அவர்கள் செய்யும் பெரிய சைஸ் தவறுகளை கூட கண்டிப்பதோ கேள்வி கேட்பதோ இல்லை ! நாங்கள் இருந்த மூன்று நாட்களில் தினம் செய்தி தாளில் பள்ளியில் கத்தி குத்து, துப்பாக்கியால் சுட்ட மாணவன் போன்ற செய்திகளை நிறையவே வாசித்தோம். மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கொஞ்சமும் பயப்பட மாட்டார்களாம் ! (தமிழ் நாட்டுக்கு நேர் எதிர் !) நிறையவே பணக்கார மாணவர்கள் என்பதால் attitude பிரச்சனை அதிகம் இருக்கும் போலும்.

காரில் செல்லும் போது சண்டை வந்தால் பணிந்து போய் விடுவதோ, சண்டை வராமல் தவிர்ப்பதோ நலமாம் ! கார் இடித்த சண்டையில் துப்பாக்கி எடுத்து சுடும் சம்பவங்கள் மிக நிறைய உண்டு என்கிறார்கள் ( ஆள் ஆளுக்கு துப்பாக்கியோடு திரிவார்கள் போல..)

தில்லி செல்ல ஏற்ற மாதங்கள் செப்டம்பர் மற்றும் அக்டோபர். (பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை வரும் நேரம்) போலவே பிப்ரவரி மற்றும் மார்ச் கூட குளிர் குறைந்து நன்றாக இருக்கும் என்கிறார்கள்.

****
அடுத்த பதிவு: செங்கோட்டையும் கன்னாட் பிளேசும்


பின் டில்லி பயணம் முடிந்து ஆக்ரா (தாஜ் மஹால்!!) பயணமாகிறோம் !

65 comments:

  1. குறிப்புகள் அருமை!

    குளிர்காலத்தில், காலை பத்தரை மணி ஆனாலும்கூட கடைவீதிகள் கொஞ்சம் வெறிச் என்று இருக்கு.

    சிக்னலுக்கு வண்டி நிற்கும்போது கைக்குழந்தையோடு பிச்சைக்காரர்கள் குறுக்கும் நெடுக்கும்போய் கார்க்கதவுகளை டமடமவென்று தட்டி பிச்சை கேட்கிறார்கள்.

    ReplyDelete
  2. சார்,
    சர்தார்ஜி மாதிரி கோபகாரர்களை நீங்கள் பார்க்கவே முடியாது...நான் பார்த்த வரையில் அவர்கள் மிகவும் முன் கோபகாரர்கள்......
    நிறைய சிறு சிறு சுவாரசிய தகவல்கள்...படிக்க நன்றாக இருந்தது...

    ReplyDelete
  3. சூப்பர் குறிப்புகள் :)

    பார்லிமெண்ட் எதிர்க்க இருக்கற பார்க்குல சீட்டு கட்டு விளையாடறது,

    பாஹர் கஞ்சை பார்கஞ்ச் என்றால் மட்டுமே புரிந்துகொள்வது

    கோட்டு சூட்டெல்லாம் போட்டுக்கொண்டு பள பளவென்று இருப்பவரிடம் ஆங்கிலத்தில் விலாசம் கேட்டால் க்யா என்று கிந்தியில் கேட்பது,

    பிப்ரவரியில் வெயிலிலும் குளிரிலும் மாறி மாறி மாட்டிக்கொண்டது, என்னுடைய தில்லி அனுபவங்கள் :))

    ReplyDelete
  4. \\சர்தார்ஜி ஜோக் நிறைய படிக்கிறோமே... அவை ஓரளவு உண்மை தான் என்கிறார்கள் டில்லி வாசிகள் ! \\ உண்மைதான்னா எப்படி? [ஹை...... உன் பாஸ்வேர்டை நான் பாத்திட்டேன், எட்டு * போடணும் அதுதானே?- இந்த மாதிரி நிஜத்திலும் இருப்பார்களா?!!]

    ReplyDelete
  5. குறிப்புகள் படிக்க very ineteresting

    ReplyDelete
  6. குறிப்புகள் படிக்க very ineteresting

    ReplyDelete
  7. சுவாரஸ்யம்!

    ReplyDelete
  8. Anonymous11:52:00 AM

    very informative and interesting :-)

    ReplyDelete
  9. Anonymous11:52:00 AM

    This comment has been removed by the author.

    ReplyDelete
  10. சுவையான குறிப்புகள்!

    ’அனைத்து வீட்டிலும் சம்மர் கிளாத் தனியாக, விண்டர் கிளாத் முற்றிலும் வேறாக வைத்திருப்பார்களாம் ! அந்தந்த சீசன் முடிந்ததும் அந்த உடைகள் பரணுக்கு போய் விடுமாம் !’
    - நான கல்கத்தாவில் இருந்தபோது கவனித்த விஷயம். பெங்காலிகள் வீடுகளில் வைத்திருக்கும் கடவுள் விக்கிரகங்கள், படங்களுக்கும் கூட பருவங்களுக்கு ஏற்ப உடைமாட்டிவிடுவார்கள். டிசம்பரில் எல்லா சாமிசிலைகளும் ஸ்வெட்ட்ர்மாட்டியிருக்கும்.

    ReplyDelete
  11. சுவாரஸ்யமான தகவல்கள்

    ReplyDelete
  12. நல்ல அவதானிப்பு மோஹன்.

    சர்தார்ஜீகளைப் பொறுத்தவரை நல்ல உழைப்பாளிகள். கோபக்காரர்கள் தான் அதுவும் முன்கோபம் தான் (ஹர்பஜன், சித்து போன்றோருக்கும் அதுதான் பிரச்சனை; ஆனால், இதற்கு நேரெதிராக மன்மோஹன் சிங்கைப் பார்க்கிறோம்) சற்று நேரத்தில் சரியாகிவிடுவார்கள். தொடர்ந்து விரோதம் பாராட்ட மாட்டார்கள். அதே நேரம், பிச்சை எடுக்கும் ஒரு சர்தாரைக் கூட எங்கும் பார்க்க முடியாது.

    பாஹர் கஞ்ச் - அது பஹாட்(d) கஞ்ச். (எழுதும் பொழுது பஹார் கஞ்ச் தான்) பஹாட் என்றால் குன்று.

    //அந்தந்த சீசன் முடிந்ததும் அந்த உடைகள் பரணுக்கு போய் விடுமாம்//
    பரண் என்பதை விட கட்டிலுக்குள் என்பது தான் பல இடங்களில் உண்மை. கட்டில் இதற்காகவே பெட்டி அமைப்பில் செய்யப்படுகிறது.

    ReplyDelete
  13. சுகமான அனுபவங்கள் சுவாரஸ்யமான தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  14. உங்கள் பயணத்தால் டில்லி பற்றி அறிந்து கொண்டோம்.

    ReplyDelete
  15. தகவல்கள் அனைத்தும் நன்று.

    ReplyDelete
  16. துளசி டீச்சர்: டில்லி பற்றி இன்னும் சில தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக நன்றி

    ReplyDelete
  17. ராஜ் said...

    சர்தார்ஜி மாதிரி கோபகாரர்களை நீங்கள் பார்க்கவே முடியாது...நான் பார்த்த வரையில் அவர்கள் மிகவும் முன் கோபகாரர்கள்......


    அப்படியா? ஆச்சரியமா இருக்கு தகவலுக்கு நன்றி ராஜ்

    ReplyDelete
  18. ஷங்கர்: உங்கள் அனுபவங்கள் சுவாரஸ்யம்

    ReplyDelete
  19. நன்றி மிடில் கிளாஸ் மாதவி

    ReplyDelete
  20. தாஸ்:நண்பர் சொன்ன தகவல் தான் அது. நான் வேறு டீடைல்ஸ் கேட்கலை. ஆனால் நண்பர் வேங்கட

    சீனிவாசன் இது பற்றி சற்று கூறி உள்ளார் பாருங்கள்

    ReplyDelete
  21. வலங்கைமான் சரவணன் : மிக நன்றி.

    ReplyDelete
  22. முதல் வருகைக்கு நன்றி விஷ்ணு

    ReplyDelete
  23. உமா மேடம்: ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு நடைமுறை:)

    நீங்கள் சொன்ன கல்கத்தா தகவலில் அந்த சாமிக்கு டிரேஸ் போடும் விஷயம் சுவாரஸ்யம் !

    ReplyDelete
  24. நன்றி ஸாதிகா

    ReplyDelete
  25. சீனி: டில்லி பற்றிய தகவல்களுக்கு மிக நன்றி. உங்களை பார்க்காமல் தவற விட்டேனே என்று இருக்கிறது

    ReplyDelete
  26. மகிழ்ச்சியும் நன்றியும் சுரேஷ்

    ReplyDelete
  27. நன்றி மாதேவி

    ReplyDelete
  28. மிக்க நன்றி அமைதி அப்பா

    ReplyDelete
  29. Anonymous7:16:00 PM

    நல்ல பயனுள்ள, சுவையான குட்டிக் குட்டித் தகவல்கள். உங்களை அன்புடன் உபசரித்த தேவாவைப் போல் எங்களுக்கும் ஒரு நண்பர் கிடைக்காமலா போய் விடுவார் ? (நண்பேன்டா - சந்தானம் ஸ்டைலில் படிக்கவும்)

    ReplyDelete
  30. நானிருந்த டில்லி நிறையவே மாறி விட்டது

    ReplyDelete
  31. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  32. அத்தனை குறிப்புகளும் ஜெப்பூருக்கும் பொருந்தும் என்றாலும் இப்படி எழுதணும்னு தோணலை:((
    சூப்பர்!

    ReplyDelete
  33. நிறையத் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

    ReplyDelete
  34. //ஆங்காங்கு சில கோயில்களில் வெளியே உள்ள போர்டில் தமிழ் பெயரை பார்க்க முடிகிறது. வசந்த் குன்ஜ் அருகே பார்த்து வியந்த தமிழ் பெயர் பலகை " வைகுண்ட நாதர் கோவில் " !//

    இங்கே தமிழர்கள்/மலையாளிகளால் கட்டப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன.

    சீனு சொன்னது போல, ஒரு சர்தார்ஜி பிச்சை எடுப்பதை பார்க்க முடியாது.... பழகி விட்டால் மிகவும் ஒட்டி விடுவார்கள். எனக்கு நிறைய சர்தார்ஜி நண்பர்கள் உண்டு [அலுவலகத்தில்].

    பழமையான நிறைய இடங்கள் இங்கே இருக்கின்றன. ஆடம்பரமும் அழுக்கும் ஒரு சேர கோலாட்சும் இடம்! பழைய தில்லி பக்கம் போய் பாருங்கள் இது தில்லியா என கேட்க வைக்கும் நிறைய இடங்கள்....

    ReplyDelete
  35. Anonymous8:09:00 PM

    இதில் நிறைய இப்ப தான் கேள்விப்படுகிறேன் மோகன்..

    தொடருங்கள்...

    ReplyDelete
  36. Sir, all your observations regarding Delhi are true. Enjoyed all your postings about this trip.

    All the best and keep going.

    ReplyDelete
  37. வாவ்! சுவாரஸ்யமான குறிப்புகள்.....இதுக்காகவே அந்த குட்டி நோட்பேடை காலி பண்ணியிருப்பீங்களே?! :))

    ReplyDelete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. தாங்கள் சொல்கிற சில செய்திகள் கொஞ்சம்
    பயமுறுத்தித்தான் போகிறது
    முழுமையான டெல்கியை மிகச் சரியாகப்
    புரிந்து கொள்ள உதவுகிறது தங்க்கள் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  40. பால ஹனுமான் சார்: நன்றி :-)

    ReplyDelete
  41. சென்னைப்பித்தன் ஐயா: நீங்கள் டில்லியில் இருந்தீர்களா? வருகைக்கு நன்றி

    ReplyDelete
  42. ரத்னவேல் நடராஜன் ஐயா: நன்றி

    ReplyDelete
  43. அருணா மேடம்: அதிசயமாய் இந்த பக்கம். நலமா? நன்றி

    ReplyDelete
  44. ராமலட்சுமி மேடம் நன்றி மகிழ்ச்சி

    ReplyDelete
  45. வெங்கட்: டில்லி குறித்த தகவல்களுக்கு நன்றி. செங்கோட்டை பழைய தில்லியோ? அந்த ஏரியா (குறிப்பாய் ரயில்வே ஸ்டேஷன் அருகே மிக மோசமாய் இருந்தது)

    ReplyDelete
  46. ரெவரி: மகிழ்ச்சி நண்பரே

    ReplyDelete
  47. சோமு : நன்றிங்க. உங்களை போன்றோர் இப்படி சொல்வது மிக மகிழ்ச்சியை தருகிறது

    ReplyDelete
  48. ர‌கு said...

    சுவாரஸ்யமான குறிப்புகள்.....இதுக்காகவே அந்த குட்டி நோட்பேடை காலி பண்ணியிருப்பீங்களே?! :))
    ***********

    ரகு: பதினோரு நாள் டூருக்கும் சேர்த்து ஒரு குட்டி நோட்டில் குறிப்பு எழுதியதாக சொல்கிறார் அய்யாசாமி; டூர் முடியும் போது நோட்டும் காலி ஆகிடுச்சாம்

    ReplyDelete
  49. மதுரை சரவணன்: நன்றி நண்பா

    ReplyDelete
  50. நன்றி ரமணி சார் மகிழ்ச்சி

    ReplyDelete
  51. //உங்களை பார்க்காமல் தவற விட்டேனே என்று இருக்கிறது//
    தங்கள் அன்பிற்கு நன்றிகள் மோகன். அடுத்த முறை நான் சென்னை வரும் பொழுதோ அல்லது நீங்கள் தில்லி வரும்போதோ நிச்சயம் சந்திப்போம்.

    //செங்கோட்டை பழைய தில்லியோ?//
    ஆம். அதுதான் பழைய தில்லி. முகலாயர் ஆண்ட பொழுது வாழ்ந்த இடங்கள் பழைய தில்லி.
    புது தில்லி என்பது 1911-ல் ல்யூடன்ஸ் என்பவரால் வடிவமைக்கப் பட்ட குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் அதை சுற்றிய பகுதிகள்.
    நகர்மயமாக்கலால், தற்போதைய தில்லி என்பது நாளுக்கு நாள் விரிவடைந்து அருகிலுள்ள மாநிலங்களின் பகுதிகளையும் தன்னுள் விழுங்கி வருகிறது. (எப்படி சென்னை செங்கல்பட்டு பகுதிகளை விழுங்கி வருகிறதோ அதே போல்) தேசிய தலைநகர் பகுதி என்பது உ.பி.-யின் நோய்டா, காஸியாபாத், ஹரியாணாவின் குர்(ட்)காவ்ன், ஃபரீதாபாத், ரோதக், பல்வல் போன்றவையைக் கூட உள்ளடக்கியது.

    ReplyDelete
  52. //CNG கேசில் இயங்கும் ஆட்டோ மற்றும் கார்கள் ஏராளமாய் காண முடிகிறது (சென்னையில் கேசில் இயங்கும் ஆட்டோ மிக அரிது.)//

    கிட்ட தட்ட எல்லா ஆட்டோக்களுமே எல்.பி.ஜியில்தான் ஓடுகின்றன சென்னையில்.. தகவலுக்காக..

    ReplyDelete
  53. டெல்லிக்குப் போய்வந்தது போல் இருக்கிறது.

    ReplyDelete
  54. சர்தார்ஜிகளைப் போல நாணயமானவர்களையும், உழைத்துப் பிழைப்பவர்களையும், உதவி என்றால் முன்னே வருபவர்களையும் பார்க்க முடியாது. வட மாநிலங்கள் அனைத்திலுமே கோடைக்குத் தனி ஆடை, குளிருக்குத் தனி ஆடை என உண்டு. இங்கே சென்னையில் தான் 365 நாட்களும் கோடை என்பதால் ஒரே மாதிரியான ஆடை அணிகிறோம். இப்போதெல்லாம் இங்கேயும் மாறி வருகிறது.

    ReplyDelete
  55. ஆட்டோவோ, பட்பட்டியோ, டாக்சியோ பணம் அதிகம் வாங்க மாட்டார்கள். ஒவ்வொரு தெருவிலும் பழமையான, மிகப் பழமையான மரங்களைப் பார்க்கலாம். மரங்களைச் சுற்றி மேடை அமைத்து ஆங்காங்கே உட்காரும்படி சுத்தமாகவும் வைத்திருப்பார்கள். மரங்கள் இல்லாத தெருவே இருக்காது. (இப்போ எப்படியோ!)

    ReplyDelete
  56. சென்னையிலும் காஸில் இயங்கும் ஆட்டோக்கள் வந்துவிட்டன.

    ReplyDelete
  57. கால் டாக்சிகள் முக்கியமாய் மாருதி ஆம்னி என்றால் காஸில் தான் ஓடுகின்றன சென்னையில்.

    ReplyDelete
  58. செங்கோட்டை தான் பழைய தில்லி. சாந்தினி செளக் பிரபலம் அங்கே. மீனா பஜார். சரியான உச்சரிப்பு மினா பஜார் அங்கே நன்றாக இருந்தது ஒரு காலத்தில். இப்போத் தெரியலை. உத்தரசுவாமி மலை ஆர்.கே.புரத்தில் இருக்கே, பார்க்கலையா? மயூர் விஹாரில் குருவாயூரப்பன் கோயிலும் அங்கே கொடுக்கும் லட்டுப் பிரசாதமும் பிரபலம்.

    ReplyDelete
  59. மணிஜி: அப்படியா? கேஸ் பற்றி தாங்கள் சொன்ன தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  60. கீதா மேடம்: எப்படி இருக்கீங்க? ரொம்ப நாள் கழித்து நம் ப்ளாகுக்கு வந்துருக்கீங்க மிக மகிழ்ச்சி. நீங்கள் டில்லியில் பல வருடம் இருந்தீர்களா ? சர்தார்ஜி பற்றி தகவலுக்கு நன்றி

    //உத்தரசுவாமி மலை ஆர்.கே.புரத்தில் இருக்கே, பார்க்கலையா? மயூர் விஹாரில் குருவாயூரப்பன் கோயிலும் அங்கே கொடுக்கும் லட்டுப் பிரசாதமும் பிரபலம்.//

    அப்படியா? பார்க்கலை மேடம். அக்ஷர்தாம் கோவில் மட்டும் தான் சென்றோம்

    தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக நன்றி

    ReplyDelete
  61. //அக்ஷர்தாம் கோவில் மட்டும் தான் சென்றோம்//

    அடடா..... இப்படிச் சொன்னால் நான் சும்மா இருக்க முடியுதா? :-)))))

    டில்லி முருகன் இங்கே

    http://thulasidhalam.blogspot.co.nz/2007/03/blog-post_28.html

    டில்லி பெருமாள் இங்கே

    http://thulasidhalam.blogspot.co.nz/2007/03/blog-post_2516.html

    ReplyDelete
  62. கீதா மேடம்: எப்படி இருக்கீங்க? ரொம்ப நாள் கழித்து நம் ப்ளாகுக்கு வந்துருக்கீங்க மிக மகிழ்ச்சி//

    எங்கே பல பதிவுகளுக்குப் போய்ப் படிக்க முடியலை. பல வேலைகள். :)))) சிலருக்குக் கோபமும் கூட. :))))))
    என்ன தான் நேரம் ஒதுக்கினாலும் முடியறதில்லை.

    டெல்லியில் வசிக்கவில்லை என்றாலும் என் மாமியார் அங்கே இருப்பதால் அடிக்கடி போவோம். பலமுறை சென்று தங்கி இருக்கிறோம். அதிகமாய் வட மாநிலங்களில் தான் வாசம் செய்திருக்கோம்.

    ReplyDelete
  63. அனைத்தும் நன்று.. வாழ்த்துக்கள் சார்.

    சிவபார்கவி
    திருச்சி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...