மனோகர் தேவதாஸ் எழுதிய " எனது மதுரை நினைவுகள் " நாவல் சமீபத்தில் வாசித்தேன். அவரின் வாழ்க்கை வரலாறாகவும் மதுரை குறித்த ஒரு ஆவணமாகவும் உள்ளது இந்த நூல்.
மனோகரின் தந்தை ஒரு மருத்துவர். அவரை குறித்த நிகழ்வுடன் துவங்குகிறது புத்தகம். அம்மை நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம் பார்க்கும் இவர் மூன்று நாள் தொடர்ந்து வீட்டுக்கு வராமல் மருத்தவமனையில் கிடப்பாராம். மீண்டும் வீட்டுக்கு வரும்போது மனைவியிடம் வாங்கி கட்டி கொள்வாராம்.
தன்னை நான் என்று விளிக்காமல், "மனோகர்" என்று நூல் ஆசிரியர் சொல்லி செல்வது சுவாரஸ்யம்.
நாவல் முழுதுமே மனோகர் மற்றும் அவரது நண்பர்களான கேப்ரியல், ஜெயராஜ், பீமன், ஹமீது, கோபால் ஆகியோர் அடிக்கும் லூட்டிகளில் தான் நகர்கிறது. வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் தத்தம் இளமை கால குறும்புகள் நினைவுக்கு வருவது நிச்சயம். இதில் ஜெயராஜ் என சொல்லப்படுபவர் தான் பிற்காலத்தில் பிரபலமான ஓவியர் "ஜெ". சும்மா சொல்ல கூடாது சின்ன வயசில் செம வில்லனா இருந்திருக்கார் ஓவியர் ஜெ !
இவர்களின் லூட்டிக்கு சாம்பிள்கள் சில:
பச்சை கிணறு என்கிற கிணற்றில் மண்டை ஓட்டை ஒளித்து வைத்து பிற மாணவர்களுக்கு அதை காட்டி, கிணற்றுக்கு வர விடாமல் மிரட்டியது (இவர்கள் குழு மட்டும் அங்கு இருக்கனுமாம்)
கேப்ரியல் எதிர் வீட்டு பெண்ணுடன் சினிமா பாட்டை ஆளுக்கு ஒரு வரி பாடலாம் என பேசி வைத்து கொண்டு பாடி, அந்த பெண் அவள் அப்பாவிடம் செம அடி வாங்கியது
ஜெயராஜ் கிணற்றில் கல் தூக்கி போட்டு பேய் என பிறரை பயமுறுத்தியது ...
இப்படி நாவல் முழுதும் ஏராளமான சம்பவங்கள்
இந்த குழுவில் இந்து, முஸ்லீம், கிறித்துவர்கள் அனைவரும் இருந்துள்ளனர். மேலும் இவர்களில் பலர் நல்ல ஓவியர்கள். தங்கள் குழுவுக்கு இந்து, முஸ்லீம், கிறித்து- மூன்று மத சின்னமும் வருகிற மாதிரி பிச்சுவா கத்தியை ( பிறை+ பிள்ளையார் சுழி+ சிலுவை ) சிம்பலாக வைத்து கொண்டு, பார்க்கிற இடமெல்லாம் அதனை வரைந்து வைத்துள்ளனர் இந்த சிறுவர்கள் !
ஒவ்வொருவருக்கும் இருந்த பட்ட பெயர்கள் பற்றியும் அதன் காரணம் பற்றியும் விரிவாய் சொல்கிறார் மனோகர்.
மதுரை குறித்து நிறைய தகவல்கள் ஆங்காங்கு விரவி கிடக்கின்றன. மீனாட்சி அம்மன் கோவில் முதலில் ஒரு சிவன் கோவிலாக இருந்து பின் அம்மன் கோவிலாக மாறியது; மதுரையை சோழர்கள் கைப்பற்றியது, பின் பாண்டியர்கள் எப்படி மீட்டனர். பிரிட்டிஷார் எப்படி மதுரைக்கு வந்தனர் என வரலாறு அறியும் ஆர்வம் உள்ளோருக்கு இப்புத்தகம் ஒரு புதையல் தான்.
தனது பள்ளியை பற்றி சொல்லும் போது பாரதியார் ஆசிரியராக இருந்த பள்ளி; எம். எஸ். சுப்புலட்சுமி படித்த பள்ளி என்கிறார் பெருமை பொங்க.
ஒவ்வொருவரும் தன் இளவயது நண்பன் ஒருவனையாவது மரணத்திடம் பறிகொடுக்கிறோம். இந்த நண்பர் குழுவிலும் ஒருவன் இறக்க, அந்த வலியை எழுத்தில் கொண்டு வந்துள்ளார் மனோகர்.
மருத்துவரான தனது தந்தை இறந்ததை பற்றி வருத்ததோடு சொன்னாலும், அப்போது வந்து அழுத பெரும் கூட்டம் பற்றியும், தன் தந்தை எத்தனை பேரின் வாழ்வை தொட்டு சென்றுள்ளார் என்றும் பெருமிதத்தோடு நினைவு கூர்கிறார்.
இத்துணை சுவாரஸ்யமாக நாவல் எழுதிய மனோகரின் வாழ்க்கை மிக துயர் நிரம்பியது. அவருக்கு முதலில் ஒரு கண்ணில் பார்வை போனது. பின் இன்னொரு கண்ணிலும் பார்வை போய் விட்டது. ஆனால் பார்வையற்ற நிலையிலும் அவர் ஓவியங்கள் வரைகிறார். இந்த நூலில் அவர் வரைந்துள்ள மதுரை ஓவியங்கள் அற்புதம் !
அவரது மனைவியும் கூட ஒரு விபத்தில் உடல் முழுதும் பராலிஸ் ஆகி பல ஆண்டுகளாய் படுக்கையோடு இருக்கிறார். ஆனால் இருவரும் வாழ்க்கை குறித்து எந்த முணுமுணுப்பும் இன்றி நம்பிக்கையுடன் எதிர்கொள்கின்றனர்.
மதுரையை நேசிக்கும் எவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல் இது.
நூல் பெயர்: எனது மதுரை நினைவுகள்
பதிப்பகம்: கண்ணா தாசன் பதிப்பகம்
பக்கங்கள் : 365
விலை 200
***********
அதீதம் ஜூன் 15 இதழில் வெளியானது
***********
அண்மை பதிவுகள்:
சமர் விமர்சனம்
கண்ணா லட்டு தின்ன ஆசையா - Laugh Riot - விமர்சனம்
பாண்டியன் மெஸ் (அலெக்ஸ் பாண்டியன் - சினிமா விமர்சனம் - By: ராஜசுந்தர்ராஜன்)
சென்னை புத்தக கண்காட்சி: பிளஸ், மைனஸ் - ஸ்டால் & நிகழ்ச்சி விபரங்க
ள்
நல்லதொரு நூல் அறிமுகம். நாவலாசிரியரின் வாழ்க்கை தன்னம்பிக்கை பாடம்.
ReplyDeleteone for the people those who love/like madurai?!1
ReplyDelete:-)
only for the people those who love / like madurai?
ReplyDeleteமதுரைன்னா எனக்கு உயிர். இந்தப் புத்தகம் அவசியம் வாங்கிப் படிச்சிடறேன். அறிமுகத்துக்கு நன்றி மோகன்குமார். இன்னொரு விஷயம்... பாரதியார் ஆசிரியரா இருந்த. எம்.எஸ், படிச்ச பள்ளியில நானும ஒரு மாணவனா இருந்தேன்னு பெருமையோட செர்ல்லிக்கறேன். மிக்க நன்றி.
ReplyDeleteஅவசியம் வாங்கிப்படிக்கத் தூண்டும்
ReplyDeleteஅருமையான பதிவு
நானும் மதுரை வாசி என்பதால் கூடுதல் ஆர்வம்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 7
ReplyDeleteவாய்ப்பு கிடைக்கும் போது கட்டாயம் வாங்கி படிக்கிறேன்! நன்றி!
ReplyDeleteநல்லதொரு நூலை அறிமுகம் செய்தமைக்கு நன்றி!
ReplyDeleteநூல் அறிமுகம் அருமை! அதைப்பற்றி எழுதியுள்ள விதமே ஆவலைத் தூண்டுகிறது!
ReplyDeleteபுலவர் சா இராமாநுசம்
நூலாசிரியர் கவனத்தை ஈர்த்துவிட்டார்.அறிமுகத்துக்கு நன்றி.
ReplyDeleteநன்றி ராமலட்சுமி மேடம். மனோகர் தேவதாஸ் பற்றி நீங்கள் சொன்னது மிக சரி
ReplyDeleteஷர்புதீன்: நன்றி. நாவல் முழுக்க முழுக்க மதுரை மற்றும் அதன் வரலாற்று குறித்தே பேசுவதால் அப்படி எழுதினேன். பிறரும் கூட ரசிப்பார்கள் தான் !
ReplyDeleteபால கணேஷ் said...
ReplyDeleteபாரதியார் ஆசிரியரா இருந்த. எம்.எஸ், படிச்ச பள்ளியில நானும ஒரு மாணவனா இருந்தேன்னு பெருமையோட செர்ல்லிக்கறேன். மிக்க நன்றி
அப்படியா சார் ! மகிழ்ச்சி நன்றி !
ரமணி சார்: மிக நன்றி
ReplyDeleteவரலாற்று சுவடுகள்: மகிழ்ச்சி நன்றி
ReplyDeleteசுரேஷ்: நன்றி
ReplyDeleteராமானுசம் ஐயா: தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteகோகுல் said...
ReplyDeleteநூலாசிரியர் கவனத்தை ஈர்த்துவிட்டார்.
****
ஆம் கோகுல் நன்றி
balhanuman said...
ReplyDeleteஅன்புள்ள மோகன் குமார்,
அருமையான விமர்சனம். இவர் தொடர்பான மற்றும் சில பதிவுகள்:
http://balhanuman.wordpress.com/category/manohar-devadas/
****
நன்றி Balhanuman Sir!
அருமையான நூல் அறிமுகம் ! வாழ்த்துக்கள் ! நன்றி ! (TM 14)
ReplyDeleteநன்றாக விமர்சனம் எழுதியுள்ளீர்கள்!
ReplyDeleteமனோகர் தேவதாஸ் பற்றி இப்பொழுதுதான் அறிந்துக் கொண்டேன்.
நன்றி.
அனுபவித்து வாசித்தேன். அவர் அமெரிக்கன் கல்லூரியை வரைந்த படம் என் letter padeல் பல காலம் அழகு படுத்தியது.
ReplyDeleteநல்ல அறிமுகம். வாங்கிப் படிக்கத்தூண்டுகிறது உங்கள் விமர்சனம். தமிழகம் வரும்போது வாங்க வேண்டியவைகளில் சேர்த்து விடுகிறேன்.
ReplyDeletePadikkum aavalaith thoondi vitteergal
ReplyDeleteNanri.
This comment has been removed by the author.
ReplyDeleteஅமைதி அப்பா: நானும் நூல் ஆசிரியர் பற்றி இப்போது தான் அறிந்தேன். வாசிக்க முயலுங்கள் நன்றி
ReplyDeleteதருமி ஐயா : தாங்கள் இங்கு வருகை தந்ததில் மிக மகிழ்ச்சி. மதுரை தான் உங்களை இங்கு அழைத்து வந்திருக்க வேண்டும் மிக நன்றி
ReplyDeleteவெங்கட் நன்றி மகிழ்ச்சி வாங்கி படியுங்கள்
ReplyDeleteநன்றி மாதவி மேடம்
ReplyDeleteரொம்ப அருமையான புக் சார் இது. கடையில் பார்த்த முதல் நாளே வாங்கினேன். நானும் மதுரை என்பதனால் கதையில் வரும் அனைத்து இடங்களுக்கும் கால ஓட்டத்தில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. எல்லா ஓவியங்களும் பென்சிலால் வரைந்தது என்பது ஆச்சர்யமான விஷயம். இதே புத்தகம் ஆங்கிலத்திலும் கிடைகிறது அதிக படங்களுடன்.
ReplyDelete"Multiple Facets Of My Madurai" and "Green Well Years" (English version)
நல்ல அறிமுகம் மோகன்...படிக்கிறேன்...
ReplyDeleteரெண்டு: புத்தகம் பற்றி மிக அருமையாக பகிர்ந்து கொண்டுள்ளீர்கள் மிக நன்றி
ReplyDeleteநன்றி ரெவரி
ReplyDeleteஅருமையான நூல் அறிமுகம். மதுரையில் அப்பா படித்து விட்ட இந்தப் புத்தகம் என் கைக்கு வரக் காத்திருக்கிறேன்.
ReplyDeleteநீண்ட நாட்களுக்குப்பின் DD வருகை-கமெண்ட்- குறித்து மகிழ்ச்சி.