நீயா நானா பற்றி இங்கு திட்டி எழுதிய மை இன்னும் காயவில்லை. அதற்குள் அதே நிகழ்ச்சி பற்றி இன்னொரு பதிவா என தயங்கினாலும், இதை விட நல்லதொரு நீயா நானா எபிசொட் கிடைப்பது கடினம் ;
நீயா நானாவில் குறை இருக்கும் போது சுட்டி காட்டும் நாம், அதில் ரசிக்கும் படி ஒரு நல்ல விஷயம் நடந்தால் பாராட்டுவது தானே முறை !
நிகழ்ச்சி பார்க்க தவறியவர்கள் பார்த்து ரசிக்கவே இங்கு முழு வீடியோவோடு பகிர்கிறேன்.
எண்பதுகளில் வெளிவந்த திரைப்பட பாடல்கள் - குறிப்பாய் இளையராஜா பாடல்கள் உங்களுக்குள் என்னென்ன பாதிப்பை
ஏற்படுத்தியது என்பதே தலைப்பு. இதற்கான டிரைலர் இரண்டு நாட்களாய் போடும்போதே இது நிச்சயம் நல்ல எபிசொட் ஆக இருக்க போகிறது என அலுவலகத்திலும் இன்னும் பிற நண்பர்களும் பேசி கொண்டோம். நிகழ்ச்சி ஏமாற்றவில்லை. Simply superb !!
வழக்கமாய் இரு அணியினரும் எதிர் கருத்து கொண்ட அணியாய் இருப்பார்கள். இங்கு அனைவருக்கும் ஒரே வித உணர்வு தான். இசை !!
நிகழ்ச்சியில் கவர்ந்த சில விஷயங்கள்/ மனிதர்கள் :
பெண்களில் பச்சை துப்பட்டா அணிந்து வாயாலேயே இசை அமைத்து காட்டிய பெண்மணி மிக மிக அற்புதமான இசை பிரியை ! (நீயா நானாவில் பெயர் போடாததால் இப்படி தான் அவரை அடையாளம் சொல்ல வேண்டியிருக்கு)
கீழே உள்ள வீடியோவில் ஆறு நிமிடம் முதல் ஏழரை நிமிடத்துக்குள் இவர் பேசு/பாடு-கிறார். இதில் இளைய நிலா பாட்டின் கிட்டார் இசையை இவர் வாயாலேயே இசைத்து காட்டுகிறார் பாருங்கள் .. அட்டகாசம் ! இந்த பகுதியை வீடியோவில் பார்க்கும் ஒவ்வொரு முறையும் உதடுகள் சிரிக்கிறது. கண்களிலோ நீர் கோர்க்கிறது.. மூன்று நான்கு முறை பார்த்த போதும் இப்படி ஆகி விட்டது..! ஏன் என்றே புரிய வில்லை ..!
இளையநிலா பாட்டை பற்றி தனி பதிவே எழுதலாம்...பள்ளியில் படித்த போது, எனக்கு நினைவு தெரிந்து ரசித்த முதல் பாடல் இது. பாடலின் வரிகள் தான் சிறுவயதில் என்னை கட்டி போட்டது. படத்தில் பாடலை படமாக்கிய விதமும் அற்புதமாய் இருக்கும். வளர்ந்த பின் இப்பாடலில் ராஜா என்ன அற்புதமாய் இசை அமைத்துள்ளார் என்பதெல்லாம் புரிந்தது. இன்றைக்கும் இளையநிலா என் ஆல் டைம் favourite பாடல்களில் ஒன்று.
பொன்மானை தேடி பாடல் வரிகளை எழுதி வைத்து விட்டு இறந்து போன தங்கை பற்றி பேசிய நபரும், தன் தந்தை இறக்கும் போது மறுபடி மறுபடி கேட்ட பாட்டை 15 வருடமாக கேட்க தைரியமின்றி இருக்கிறேன் என்று பேசிய நபரும் நெகிழ வைத்தனர்.
ஆண்களில் வெள்ளை சட்டையும் வெள்ளை பேண்ட்டும் அணிந்த வயதான ஒருவர் மிக அழகான குரலில் பாடினார். இவர் சொல்லிய கல்லூரி கால நினைவுகளும் அருமை ! போலவே சற்று பருமனாக இருந்த ஒரு ஆண் மிக நல்ல பாடல்களை மிக அற்புதமாக பாடினார் !
ஹாஸ்டலில் உள்ள ரேடியோ ரூம், அங்கு போடும் ரிக்கார்ட் பிளேயர்கள், டீ கடையில் திரும்ப திரும்ப ஒரே பாட்டை போட சொன்னது என, நம் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை தான் இவர்கள் அனைவரும் பேசினர் !
வீட்டம்மா " நீங்க போயிருந்தா இன்னும் நிறைய பாட்டு சொல்லிருப்பீங்க" என்று சொல்லி கொண்டே இருந்தார். நிகழ்ச்சியில் பலரும் சுட்டி காட்டிய பாடல்கள் அனைத்தும் என்னிடம் மொபைல், கணினி இரண்டிலுமே உள்ளவையே ! வேலை செய்யும் போதும் சரி, பதிவு எழுதும் போதும் சரி, இந்த பாடல்களை தான் கேட்டு கொண்டே இருப்பேன். அதனால், நிகழ்ச்சியில் ஒவ்வொரு பாட்டு பாடும் போதும், கேட்கும் போதும் Goosepumps !!
அதிசயமாய் கோபி அதிகம் டாமினேட் செய்யாமல் அடக்கி வாசித்தார். நிகழ்ச்சி முடிய இரவு 11 .30 ஆனபோதும் முழுதும் பார்த்து விட்டு நெகிழ்ந்த மனதுடன் உறங்க போனோம்.
இந்த எபிசொட் வீடியோ முழுவதும் இதோ உங்கள் பார்வைக்கு !
நீங்கள் நிகழ்ச்சி பார்த்திருந்தால் அவசியம் உங்கள் உணர்வுகளை இங்கு பதிவு செய்யுங்கள் !

இந்த நிகழ்ச்சி பற்றி என் கல்லூரி நண்பரும் மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். நான் பார்க்கவில்லை.
ReplyDeleteமாலை வந்து உங்கள் பதிவில் இருக்கும் காணொளி பார்க்கிறேன்.
த.ம. 2
எனக்கும் சிறுவயதில் 'இளைய நிலா' பற்றி தெரியவில்லை. சமீபத்தில் கேட்டபோதுதான் அசந்து போனேன்!
ReplyDeleteமுகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ
அது மழையோ....
என்னா மாதிரியான வரிகள்!
விடாப்பிடியாக அழவைப்பதை தவிர்த்தால், நானும் விஜய் டிவியை ரசிக்க ஆரம்பித்துவிடுவேன். ஆனால் அவர்கள் அதைத்தான் ப்ளஸ் பாயிண்ட்டாக வைத்திருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை இன்னும் பார்க்கவில்லை. வீடியோ பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteநான் மிகவும் விரும்பிப் பார்த்தேன்... (பாடல் நிகழ்ச்சி அல்லவா ?) நன்றி... (த.ம. 5)
ReplyDeleteரகு: மிக சரியாக சின்ன வயதில் என்னை கட்டி போட்ட வரிகளை சொல்லி உள்ளீர்கள் ## நண்பேண்டா !
ReplyDeleteஅண்ணே நிகழ்ச்சியை பார்க்கல... உங்கள் பதிவை படித்தது பார்க்கதோணுகிறது...
ReplyDeleteநான் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை. நீங்கள் தந்துள்ள காணொளியை தரவிறக்கிக் கொண்டேன். இன்றிரவு பார்த்து விடுகிறேன். நீங்கள் சொல்லியிருப்பதை வைத்து நான் இதை மிக ரசிப்பேன் என்பது என் நம்பிக்கை. நன்றி மோகன்.
ReplyDeleteபோன பதிவில் இதைப்பற்றி குறிப்பிட்டு டைப் பண்ணிட்டு அப்புறம் வேண்டாம் என்று விட்டுவிட்டேன் நீயா நானாவில் நான் மிகவும் ரசித்த எபிசோட்!
ReplyDeleteநன்றி, மோகன்குமார்! கோபிநாத் போன்ற தன்முனைப்பாளர்களைக் கண்டு வெருண்டு ஓடவேண்டி இருப்பதால், "நீயா? நானா?" பார்க்கிற வழக்கத்தை விட்டு நாளாயிற்று. இந்தக் காணொலியை முழுக்கப் பார்த்தேன்/கேட்டேன். பர்ரக்க/கேட்கக் கூடியதாக இருந்தது. மறுபடியும் நன்றி!
ReplyDeleteநீண்டகாலத்தின் பின் நான் முழுமையாக பார்த்து ரசித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி அதில் வந்த பாடல்கள் பலவும் இன்னும் மறக்க முடியாது காதல் ஓவியம் பாடல் மெட்டி பாடல்!ம், நிறமாறா பூக்கள் ஆயிரம் மலர்களே இன்றும் ஏதோ உணர்வைத்தீண்டும்! நானும் அதன் பாதிப்பில் ஒரு பதிவை எழுதினாலும் இன்னும் பல பாடல் பேசாமல் விட்டார்கள் என்ற ஏக்கம் இருக்கு நெஞ்சத்தைக்கிள்ளாதே. மன்வாசனை !ம்ம் அது ஒரு காலம் சார்!
ReplyDeleteகோபிநாத் பங்கேற்பாளர்களை ஓவராய் டாமினேட் பண்ணுவதால் நான் இப்ப்லாம் நீயா நானா பார்ப்பட்ஜில்லை. நல்லதொரு நிகழ்ச்சியை மிஸ் பண்ணாம பார்க்க காணொளி இணைத்தமைக்கு நன்றி சகோ
ReplyDeleteநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நண்பரே.
ReplyDeleteஇந் நிகழ்ச்சியைப் பார்த்தேன். பங்குபற்றியோர் அனைவரும் சிறப்பாகப் பேசினர், பாடினர்.
ReplyDeleteஎல்லோருமே இசைபற்றியும், இசையமைப்பாளர் பற்றியும், பாடகர்கள் பற்றியுமே பேசினார்கள்.
பாடலாசிரியர்கள் பற்றி எவருமே குறிப்பிட்டதாகத் தெரியவில்லை.
பல பாடல்கள் மனதில் பதிய அதிலுள்ள சில சொற்களும்,வரிகளும் காரணமாகின்றன. ஆனால்
அந்த சொற்களின்,வரிகளின் சொந்தக்காரரை நாம் கண்டு கொள்ளுவதேயில்லை.
வானொலியில் பாடல்கள், ஒலிபரப்பும் போது கூட ஒரு சில அறிவிப்பாளர்களே! பாடலாசிரியரைச் சேர்ப்பார்கள். வாயசைக்கும் நடிகர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் கூட இந்த அறிவிப்பாளர்கள், பாடலாசிரியருக்குக் கொடுக்காதது. வேதனை மிக்க அவமரியாதை என்பதை இன்றுவரை பல அறிவிப்பளர்களோ!, நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களோ! புரிவதாகவில்லை.
காவிரியாறும் கைக்குத்தலரிசியும்" என்ற சிவாஜி படப்பாடலில் உள்ள கைக்குத்தலரிசி எனும் சொல்லுக்கும்,"ஆடு,மாடு மேலே உள்ள பாசம்; வீட்டு ரேசன் காட்டில் சேர்க்கச் சொல்லிக் கேட்கும், என்ற வரிக்கும், அங்கே இரட்டைக்கிழவிக்காக அள்ளி வீசிய சொற்களுக்காகவும் - ரகுமான், எஸ் பியுடன் பாடலாசிரியர் நா.முத்துக்குமாரையும் போற்றவேண்டும்.
இப்பாடலைக் கூட பலர் வைரமுத்து எழுதியதென எண்ணுகிறார்கள்; அன்று வாலி எழுதிய பல பாடல்களின் புகழ் கண்ணதாசனுக்குப் போனதுபோல்,
அதனால் பாடலாசிரியர்களையும் ஒரு பாடலின் சிறப்பில் சேருங்கள் என்பதே என் வேண்டுகோள்!!
இலங்கை வானொலி ஆற்றிய சேவை பற்றி சிலர் நன்றியுடன் குறிப்பிட்டார்கள். இலங்கையனாக, இன்றும் இணையத்தூடு அவ்வானொலி ரசிகனாகப் பெருமைப்படுகிறேன்.
சூரியன் எவ் எம் - யாழ் சுதாகருக்கு , பாடலாசிரியர் பெயருடன் தொகுத்து வழங்கும் அந்த மாட்சிமைக்காக மனமார்ந்த நன்றி!
நிகழ்ச்சி பார்க்க முடியவில்லை! எங்கள் பகுதியில் கேபிள் இணைப்பு அடிக்கடி கட் ஆகிவிடுகிறது! காணொளியை பிறகு பார்க்கிறேன்! இளையநிலா பாடல் எனக்கும் பேவரிட் தான்! சிறப்பான பகிர்வு! நன்றி!
ReplyDeleteநான் பார்த்து ரசித்த நீயா நானாவில் இதுவும் ஒன்று...
ReplyDeleteநிறைய மலரும் நினைவுகள்...சிலோன் ரேடியோ கேட்டு வளர்ந்த நினைவுகள்...அப்பப்பா..
அந்த நாட்கள் இனி எந்த சந்ததிக்கும் கிடைக்காது என்பது மட்டும் நிச்சயம்...
என்னை மட்டுமல்ல என் மகளையும் கவர்ந்த அந்த 70 -80 களின் பாடல்கள் அத்தனையும் முத்துக்கள்...
இளையராஜா கைவரிசை...வைரமுத்து/வாலி...வார்த்தைகளில்...
ரொம்ப தூரம் செல்லும் போது வண்டியில கேட்கிறது எப்பவும் ஆல் டைம் இளையராஜா , எஸ் பி பி.மலேசியா வாசுதேவன், சுரேந்தர், ஜெயசந்திரன் என நிறைய....
ReplyDeleteநிகழ்ச்சியை அன்று முழுதாய் பார்க்கவில்லை.எனக்கு இன்றும் ஒரு ஆச்சர்யம், 70,80 களில் பிறந்தவர்கள் பெரும்பாலும் இளையராஜா பாடல்களே கேட்டு வளர்த்தவர்கள்.ஆனால் அதற்க்கு பின் பிறந்தவர்களல் ரகுமான் இசை கேட்டு techno beat பாடல்களில் மூழ்கியவர்கள்.ஆனால் இவர்களே சில வருடங்களாக ராஜா இசையை விரும்பி கேட்கிறார்கள்.அது சரி தினமுமா பிசா சாப்பிட முடியும் ? சாதம் சாப்பிடும் வழி வராது இல்லையா?
ReplyDeleteஅந்த நிகழ்ச்சி ஒரு ருமையான அனுபவப் பகிரல்! நிறைய நேரங்களில் நானே அங்கு பேசியது போல உணர்வு!....பாடல் லிரிக்ஸ் தெரிய இரவின் மடியில் போடும் போது மெழுகுவர்த்தி கொழுத்தி பாடல் வரிகள் எழுதியதைச் சொல்லியிருப்பேன் நான் போயிருந்தால்!!!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவெங்கட்: நேரம் கிடைக்கும் போது பாருங்கள் நன்றி
ReplyDeleteபாலஹனுமான் சார்: நன்றி
ReplyDeleteதனபாலன்: பாடல் பிரியரான நீங்கள் நிச்சயம் ரசித்திருப்பீர்கள் நன்றி
ReplyDeleteசங்கவி: பாருங்கள் நன்றி
ReplyDeleteபாலகணேஷ் சார்: நன்றி மகிழ்ச்சி
ReplyDeleteசுரேஷ்: சென்ற நீயா நானா பதிவில் கமன்ட் போட எண்ணினீர்களா? நன்றி நண்பரே
ReplyDeleteராஜசுந்தரராஜன் சார்: தங்கள் பின்னூட்டம் மிக மகிழ்ச்சி தருகிறது நன்றி
ReplyDeleteதனிமரம்: உங்கள் உணர்வை அழகாய் கூறினீர்கள் நன்றி
ReplyDeleteநன்றி ராஜி சிற்சில குறைகள் இருந்தாலும் நீயா நானா நல்ல நிகழ்ச்சி என்று தான் இன்னமும் கருதுகிறேன்
ReplyDeleteயோகன் : மிக விரிவாகவும், தெளிவாகவும் பின்னூட்டம் இட்டமைக்கு மிக நன்றி
ReplyDeleteரெவரி சார் : நன்றி இலங்கை வானொலி பற்றியும் அதில் " பிறந்த நாள்" என்று காலை வரும் நிகழ்ச்சி பற்றியும் சொன்னது பழைய நினைவுகளை எனக்கும் கிளறி விட்டது
ReplyDeleteகோவை நேரம்: எனக்கும் காரில் பாட்டு கேட்க மிக பிடிக்கும் நண்பரே
ReplyDeleteஅருணா மேடம்: நலமா? அருமையாய் சொன்னீர்கள் மிக நன்றி
ReplyDeleteசீன கிரியேட்டர்: உண்மை தான். ராஜா பாடல்களை இந்த தலைமுறையும் ரசிக்கிறது
ReplyDeleteமோகன்,
ReplyDeleteநானும் தங்கமணியும் சேர்ந்து இரசித்த நீயா நானா இதுவாகத்தானிருக்கும்,நேரம் போனதே தெரியவில்லை.விளம்பர இடைவேளையில் தெரிந்த நண்பர்களுக்கெல்லாம் அலைப்பேசியில் நிகழ்ச்சி பாருங்க என்று சொல்லிகொண்டேயிருந்தேன்
நீங்க நல்ல எழுதிருக்கீங்க.....
ReplyDeleteIt is a good show also, I enjoyed it.
கேட்கும் போதும் Goosepumps !!...
use more tamil good words like this "மயிர் கூச்செரிக்கும்".....
நீயா-நானா., பார்ப்பதை நிறுத்து வெகு நாட்களாகிவிட்டது! நீங்கள் பாராட்டி எழுதியிருப்பதால் நீங்கள் இணைத்திருக்கும் வீடியோவை பார்க்க முயல்கிறேன்!
ReplyDeleteஎந்த ஒரு நிகழிச்சியையும் ஒரு தடவை மேல் பார்த்ததில்லை. திரும்ப திரும்ப பார்க்கத் தோன்றுகிறது. தாங்கள் குறிப்பிட்ட அனைவரின் பாடல்களும் .குறிப்பாய் வெள்ளை உடை சகோதரர் யார் யாருக்காகவோ பாடி அசத்திவிட்டார். பாராட்டி எழுதியதை வாசித்தபின் உங்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
ReplyDeleteஅடடா....முன்னாலேயே தெரிந்திருந்தால் 'லைவா'கவே பார்த்திருக்கலாம். இறக்கிக் கொண்டு அப்புறம் பார்க்க வேண்டும்!
ReplyDeleteநான் இளையராஜாவின் திவிர ரசிகன் எப்போதும் அவரது பாடல்கள் தான் என் விருப்பம் இருந்தும் இன் நிகழ்ச்சி நான் இன்னும் பார்க்கவில்லை வீடியோ கண்டிப்பாக பார்க்கிறேன் மோகன் சார் நீங்களும் இளையராஜா ரசிகர் என்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி
ReplyDeletesame blood
I Had also wrote a post about the same.you can a view at http://iam.svaroon.com/2012/07/neeya-naana-ilayaraja-songs.html
ReplyDeleteps : this is not a spam comment for backlinks.my blog is still under development.I liked this post and i want to share my comments also :)
This comment has been removed by the author.
ReplyDeleteஅரவிந்தன் said...
ReplyDeleteநானும் தங்கமணியும் சேர்ந்து இரசித்த நீயா நானா இதுவாகத்தானிருக்கும்.
****
அரவிந்த் ! நாங்கள் இதற்கு நேர் எதிர். நாங்கள் இருவரும் வாரா வாரம் சேர்ந்து பார்க்கும் நிகழ்ச்சி நீயா நானாவாக இருக்கும் !
நன்றி வடிவேலன். மயிர் கூச்செறியும் என்பது சண்டை காட்சிக்கு மட்டும் என்பது மாதிரி மனதில் பதிந்து விட்டது :)
ReplyDeleteநன்றி வரலாற்று சுவடுகள் பார்க்க முயலுங்கள்
ReplyDeleteஸ்ரீராம்: அதனால் என்ன? விளம்பர தொந்தரவு இன்றி பொறுமையாய் பாருங்கள்
ReplyDeleteசரவணன் சார்: நன்றி ராஜாவை ரசிக்கதோர் உண்டா?
ReplyDeleteநன்றி அருண் வைத்தியநாதன் வாசிக்கிறேன்
ReplyDeleteதோஹா டாக்கீஸ் : நன்றி நண்பரே
ReplyDeleteநானும் முழுவதும் பார்த்தேன். மிக நன்றாக இருந்தது என்பதில் ஐயமில்லை. கவிஞர் அறிவுமதி சொன்ன கருத்துக்கள் அருமை.
ReplyDeleteநன்றி மகி கிராணி. முன்பே உங்களை பற்றி குறிப்பிட மறந்து விட்டேன் மன்னிக்க மிக அழகாய் பாராட்டி உள்ளீர்கள் மிக மகிழ்வாய் உள்ளது
ReplyDeleteநன்றி T.N. முரளி
ReplyDeleteமிக மிக அருமை
ReplyDeleteநன்றி நன்றி
ஸ்வரங்கள் கலந்த(நிறைந்த) சுவாரஸ்யமான பதிவு!!! பல மாதங்கள் பிறகு நான் பார்த்த நீயா நானா எபிசொட் இது!! உண்மையில் இது தான் நீயா நானா நிகழ்ச்சி.. திரு கோபியின் தலையீடு இல்லாமல் பங்கேற்பாளர்களே முழுக்க பங்கேற்று பேசி பாடி நெகிழ்ந்து இருகிறார்கள்... திறமையான பாடகர்கள் நம்ம பக்கத்துக்கு வீட்டில் கூட இருப்பார்கள் என உணரவைத்தது இந்த நிகழ்ச்சி... எனக்கும் 70 -80 களில் வந்த பாடல்கள் தான் பிடிக்கும் இன்றும்.... ஏன் எனக்கும்னு சொல்லி weight கொடுத்ததற்கு காரணம்... நான் பிறந்தது 80 முடிவில்...
ReplyDeleteநல்ல ஒரு நிகழ்ச்சியை பார்க்க வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்ததற்கு உங்களுக்கு தான் நன்றி சொல்லணும், இல்லன்னா இந்த ப்ரோக்ராம் கண்டிப்பா நான் miss செய்து இருப்பேன். ..