Wednesday, July 25, 2012

வானவில் 98: ராகுல் காந்தியும் அது-இது-எதுவும்

முகப்புத்தக கிறுக்கல்கள்

ராகுல் காந்தி இனிமே கட்சி மற்றும் ஆட்சியில் தீவிரமா குதிக்க போறாராம். இது வரை இறங்கிய அனைத்து தேர்தலிலும் ஜெயித்த லெக் தாதா ..வாங்கோ வாங்கோ !

###########

ஜிம் மாஸ்டர் இன்னிக்கு என் பெண்டை நிமித்திட்டார். . செம வொர்க் அவுட்

(இப்படி ஒரு Status போட்டா தானே நான் தினம் ஜிம்முக்கு போறது உங்களுக்கு தெரியும் ஹிஹி)

###########

அம்மா ஆட்சியில் என்னென்னவோ இலவசமா கிடைக்குது. ஆனா இந்த கொத்தமல்லி இதுவரை காய்கறி கடையில் இலவசமா குடுத்தாங்க. இப்போ இல்லைங்குறாங்க. இதுக்கு எவ்ளோ செலவானுலும் சரி அம்மா தான் ஒரு பஞ்சாயத்து பண்ணி விடணும் :)

டிவி கார்னர்

இந்த வார "அது இது எது"வில் "சிரிச்சா போச்சு " பகுதி செம காமெடியாய் இருந்தது. பார்த்து கொண்டிருந்த நானும் பெண்ணும் சிரித்து சிரித்து கண்ணில் தண்ணீர் வந்து விட்டது.

ஒருவர் இறந்து விட, அவரை வெவ்வேறு நடிகர்கள் வந்து பார்த்து வருத்தம் தெரிவிக்கிறார்கள். அதற்கெல்லாம் இறந்தவரின் மகன் கவுண்டமணி கவுண்டர் கொடுப்பது தான் கான்செப்ட். கவுண்டமணியாக நடித்தவர் அனைவர் தலைமுடியையும் பிடிச்சு ஆட்டு ஆட்டுன்னு ஆட்டினார். இருந்தாலும் நிச்சயம் முழுதும் சிரிக்கிற மாதிரி இருந்தது.

நீங்கள் பார்க்க விரும்பினால் இந்த வீடியோவில் பார்த்து சிரியுங்கள் :




அய்யாசாமி

ஒரு நாள் இரவு உறங்க போகு முன் பால் இருக்கும் பாத்திரம் டைனிங் டேபிள் மேல் இருப்பதை பார்த்தார் அய்யாசாமி. வீட்டம்மா மறந்து வெளியில் வச்சுட்டார் என பிரிட்ஜுக்குள் எடுத்து வைத்தார்.

மறு நாள் காலை முதலில் எழுந்த அய்யாசாமி, குக்கர் வைப்பது, பால் சுட வைப்பது உள்ளிட்ட வேலைகள் செய்து வைத்தார் . அந்த பாலை சுடவைத்து முடிக்கும் போது உள்ளே வந்த வீட்டம்மா, " இது நான் தயிர் உரைக்கு ஊற்றிய பாத்திரம் ஆச்சே? தயிர் ஆகலை? எப்படி சுட வைக்கிறீங்க?" என கேட்க, மிரண்டு போயிட்டார் அய்யாசாமி.

தயிர் உரைக்கு ஊற்றிய பாத்திரத்தை தான் இரவு பிரிட்ஜுக்குள் வைத்து விட்டு காலை சுட வைத்திருக்கார். எந்த பதிலும் சொல்லாமல் கிட்சனிலிருந்து வெளியே எஸ் ஆகி பேப்பருக்குள் தலையை நுழைத்து கொண்டார். "மோர் குழம்பு வைக்கணும்னு நினைச்சேன்; இப்படி ஆகிடுச்சே" என புலம்பியவாறு வேறு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார் வீட்டம்மா ! 

நாட்டி அஜூ கார்னர் 

நாட்டி வர வர ரொம்ப செல்லம் கொஞ்சிக்கொண்டு இருக்கிறாள். மனைவியும் மகளும் கையில் தூக்கி வைத்து கொண்டால் அவர்கள் கன்னத்தை நன்கு கொஞ்சுவாள். நெற்றியில் இருக்கும் பொட்டினை கவ்வி எடுத்து லேசாய் கடித்து விட்டு கீழே போட்டு விடுவாள். அந்த பொட்டு அவள் சாப்பிட முடியாது என்று தெரிந்தாலும் இப்படி கவ்வுவதை தொடர்கிறாள் ! "நான் தான் இந்த வீட்டில் செல்லம் ! என்னைத்தான் கொஞ்சுறாங்க ...தெரிஞ்சிக்கோ" என்கிற மாதிரி அஜூவை மிரட்டவும் தவறுவதில்லை !

கிரிக்கெட் கார்னர் 

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே  இன்னொரு சீரிஸ் ! வருஷக்கு ஒரு முறையாவது அவங்க நம்ம ஊர் வந்துடுவாங்க. நாம அவங்க ஊர் போயிடுவோம். தற்போது நடைபெறும் போட்டிகளில் விடுமுறை நாட்களில் கூட இலங்கை மைதானங்கள் காலியாக உள்ளது. ( நம்ம நாட்டில் அலுவலகம் இருக்கும் நாளில் கூட லீவு போட்டு விட்டு பல்லாயிரக்கணக்கில் மக்கள் கிரிக்கெட் பார்க்க போவாங்க.)

இந்தியாவின் பீல்டிங் மற்றும் பவுலிங் வழக்கம் போல் கொடுமையா இருக்கு ! இந்திய அணியை பேட்டிங் மட்டுமே காப்பாத்தி கிட்டு இருக்குதுன்னு நினைச்சா நேத்து அதிலும் சொதப்பிட்டாங்க :(

பதிவர் பக்கம் : இரா. எட்வின் 

இரா. எட்வின் என்கிற பதிவரின் ப்ளாக் சமீபத்தில் வாசித்தேன். பள்ளி ஒன்றில் ஆசிரியராய் இருக்கிறார்  திரு. எட்வின். அவரது இந்த பதிவு அருமையாய் இருந்தது. இதில் சொல்லப்படும் அந்த வரி "எதற்கும் உதவாத ஒருவன் எங்கும் இருக்க மாட்டான்" எவ்வளவு நிஜம் !  

போட்டோ கார்னர் -1

புதிதாய் திருமணமான இரு ஜோடிகளை எந்த வண்டியில் கூட்டிட்டு போறாங்க பாருங்க.



படம் கேரள திருமணத்தில் எடுக்கப்பட்டதாம் !

போட்டோ கார்னர் -2: யார் இது ?

இந்த படத்தில் புறமுதுகு காட்டும் நபரை அடையாளம் தெரிகிறதா? யார் இவர்? என்ன நடக்கிறது இங்கே?




ஊகிக்க முயலுங்கள்.. விடை அடுத்த வானவில்லில் ...

51 comments:

  1. இரண்டாவது படத்தில் இருப்பது “நீங்கதாண்ணே!”....

    என்ன பண்றீங்கன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டீகளே - “மீட்டிங் நேரத்திலேயே ப்ளாக் போஸ்ட் போட ரெடி பண்ணிட்டு இருக்கீங்க!”

    வழக்கம்போல் அருமையான வானவில். வாழ்த்துகள்.

    த.ம. 1

    ReplyDelete
  2. நீங்க சிரிச்சுரீக்கீங்க ஆனா போட்டியாளர்கள் சிரிக்கலயே

    ReplyDelete
  3. வானவில்லின் ஏழு நிறங்க்களும்
    மனதை கொள்ளை கொண்டன்
    குறிப்பாக அய்யாச்சாமி
    (நானும் இப்படி அடிக்கடி
    வெகு புத்திசாலித்தனமாக செய்வதாக நினைத்து
    பல சமயம் அய்யாச்சாமி வேலை
    பார்த்துவிடுவேன் என்பதால்)
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. எல்லாமே நல்லா இருந்திச்சு....

    ReplyDelete
  5. இலங்கை -இந்திய கிரிக்கெட் மக்களிடம் பெரிய ஆர்வம் இல்லை என்றே சொல்ல வேண்டும்.அதற்க்கு காரணம் அடிக்கடி இரு அணிகள் மோதுவது என்றாலும் எதோ ஒரு விஷயம் ஆர்வம் இல்லாமல் செய்கிறது.

    ReplyDelete
  6. புறமுதுகு காட்டும் நபர் அங்கேயும் ஒரு பதிவு ரெடி செய்வார் போல...

    ReplyDelete
  7. //- “மீட்டிங் நேரத்திலேயே ப்ளாக் போஸ்ட் போட ரெடி பண்ணிட்டு இருக்கீங்க!”//

    மீட்டிங்கே ப்ளாக்-ல என்ன எழுதலாம் என்பதைப் பற்றிதான்....

    ReplyDelete
  8. \\ராகுல் காந்தியும் அது-இது-எதுவும்\\ இந்த ரெண்டுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குமோ என்று நினைக்க வைக்கிறது, இனி தலைப்புகளை
    "ராகுல் காந்தி, அது-இது-எது" போன்று வைக்கலாமா என்று யோசியுங்களேன். [மாத்தணும்னு சொல்லல.......ஹி.......ஹி.......ஹி.......]

    ReplyDelete
  9. வெங்கட்டு, சங்கவி, சீனி..

    அய்யாசாமி இமேஜை டோட்டல் டேமேஜ் பண்றீங்க ! பாத்து அடிங்கப்பு...:)

    பிரேம்: நீங்க தான் நல்லவர். ஓரளவு சரியா சொல்றீங்க :)

    ReplyDelete
  10. நித்ய அஜால் குஜாலானந்தா

    //\\ராகுல் காந்தியும் அது-இது-எதுவும்\\ இந்த ரெண்டுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குமோ என்று நினைக்க வைக்கிறது,//

    நீங்க வேற. இதை விட மோசமா சம்பந்தா சம்பந்தம் இல்லாத தலைப்பு கூட வைக்குறாங்க. நாலு பேர் உள்ளே வரணுமுன்னா இதெல்லாம் தப்பே இல்லை :))

    ReplyDelete
  11. சார், எனக்கு இந்த தளம் ரொம்ப பிடிச்சிருந்தது, நீங்க நிறைய டிஜிடல் போடோ எல்லாம் எடுக்குறீங்களே, உங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்னு தோனுச்சு. பாருங்க, ரொம்ப நல்லா இருக்கு.


    http://digital-photography-school.com/10-tips-for-improving-your-wildlife-photography?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+DigitalPhotographySchool+%28Digital+Photography+School%29&utm_content=Google+Reader

    ReplyDelete
  12. \\இந்திய அணியை பேட்டிங் மட்டுமே காப்பாத்தி கிட்டு இருக்குதுன்னு நினைச்சா நேத்து அதிலும் சொதப்பிட்டாங்க :(\\ அவங்களுக்குத்தான் ஐ.பி.எல்லில் வேண்டிய காசு கிடைக்குதே, இங்கே ஏன் கஷ்டப் படனும்? அப்புறம் இருக்கவே இருக்காங்க ரசிக சிகாமணிகள், இந்திய அணியை மற்றவர்கள் எவ்வளவு அடிச்சாலும் தாங்கக் கூடியவர்கள், வருஷத்துக்கு ஒரு மேட்ச் கனடாவுடன் ஆடி 350 அடிச்சா போதும், அடுத்த பத்து வருஷத்துக்கு கவலையே படாதவர்கள். ........ம்ம் நம்ம நாடு எங்கே உருப்படப் போவுதோ தெரியலை.

    ReplyDelete
  13. \\படம் கேரள திருமணத்தில் எடுக்கப்பட்டதாம் !\\ இதுங்க எல்லாம் குப்பைகல்ன்னு முடிவு பண்ணிட்டாங்களா.......!! ஆனா, கேரளா காரங்க வறட்டு கவுரவம் பார்க்க மாட்டாங்க, திருமணமே ஆனாலும் அனாவசியமாக ஒரு பைசா கூட செலவு பண்ணமாட்டாங்க.

    ReplyDelete
  14. \\இந்த படத்தில் புறமுதுகு காட்டும் நபரை அடையாளம் தெரிகிறதா? யார் இவர்? என்ன நடக்கிறது இங்கே? \\ ஆஹா, அங்கே உட்கார்ந்துகிட்டு என்ன சார் பண்ணிக்கிட்டு இருக்கீங்க!!

    ReplyDelete
  15. அனைத்து கார்னர்களையும் கண்டேன் பிடித்தது..வாசித்தேன்..

    வாசித்து கருத்திடுங்கள் தோழர்..
    பிரபல பதிவர்கள் சங்கமிக்கும் சென்னை பதிவர் சந்திப்பு

    ReplyDelete
  16. உரைக்கு ஊற்றிய பாலை வீணாக்குவது எப்படி என்று அய்யாசாமி ஆஃபிசில் விளக்குவது சூப்பர்.

    ReplyDelete
  17. பல்சுவை விருந்து... நன்றி சார் ! (த.ம. 10)

    ReplyDelete
  18. நல்ல தொகுப்பு.

    புதுமணத் தம்பதியர் செல்லுகிற வாகனம் நல்ல வேடிக்கை.

    கொத்தமல்லி மனு பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று. கட்டு என்ன விலை எனக் கேட்டு விட்டு வாங்காமல் நகருகின்றார்கள் பலர்.

    புறமுதுகு காட்டுபவரைக் கண்டிபிடிப்பது ஒன்றும் அத்தனை கடினமாக இல்லையே.

    க்யூட் நாட்டி.

    ReplyDelete
  19. பாஸ் நீங்க பண்ணுனத யாரோ பன்னுனமாதிரி எழுதிருக்கீங்களே அய்யாசாமியில் ஹி ஹி ஹி ஹி!

    ReplyDelete
  20. //இந்த வார "அது இது எது"//

    போட்டியாளர்கள் மூணு பேரும் கண்டிப்பா ஜெயிச்சிருப்பாங்களே?? அபப்டியொரு கடி! சுத்தமா சிரிப்பே வரலை வீடியோவைப் பாத்து. :-(((

    ஆனா, தயிர்-பால்-அய்யாசாமி கதைதான் சிரிக்கவைத்தது. எல்லா வீட்டு அய்யாசமிக்களும் இப்படித்தான் ‘ஓவர் ஸ்மார்ட்’ ஆகப் பார்த்து, வாங்கிக் கட்டிக்குவாங்கபோல!! :-))))))

    ReplyDelete
  21. வானவில்லுக்கு வாழ்த்துகள் !

    ReplyDelete
  22. கல்யாண ஜோடியை ஃபுல்டோசரில் ஏத்துராங்கன்னா அவன் வாழ்க்கையிலும் எறிடிச்சு மூதேவ்ன்னு சொல்லாம சொல்றாங்களோ அவ்வ்வ்வ்....

    ReplyDelete
  23. வானவில் நிறங்கள் பல் சுவைகளில் படிக்க நல்லாருக்கு மோகன் சார்

    ReplyDelete
  24. வெங்கட்: நன்றி

    முதல் ஓட்டு கூட போடாம அய்யாசாமி இந்த பதிவை பப்ளிஷ் பண்ணிட்டு ஓடிட்டார். நீங்க தான் முதல் ஓட்டு போட்டு கணக்கை துவக்கினீர்கள் நன்றி !

    ReplyDelete
  25. பிரேம்: நன்றி; ஒரு போட்டி தான் நடந்தது. விபரம் அடுத்த வானவில்லில் சொல்றேன் நன்றி

    ReplyDelete
  26. ரமணி சார்: நீங்களும் அய்யாசாமி மாதிரி கூத்தடிசுருக்கீன்களா? சொன்னா சந்தோஷப்படுவார் அவர். நன்றி சார்

    ReplyDelete
  27. ராஜ்: மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  28. சங்கவி said...

    புறமுதுகு காட்டும் நபர் அங்கேயும் ஒரு பதிவு ரெடி செய்வார் போல...

    **

    நமக்கு வேட்டு வைக்க நண்பர்கள் போதும் ஓய் :)

    ReplyDelete
  29. சீன் கிரியேட்டர்: உண்மை தான் நன்றி

    ReplyDelete
  30. வெங்கட ஸ்ரீநிவாசன் said...

    மீட்டிங்கே ப்ளாக்-ல என்ன எழுதலாம் என்பதைப் பற்றிதான்....


    லாப்டாப் முன்னாடி அய்யாசாமி இருந்தது ஒரு தப்பாய்யா ? ஆள் ஆளுக்கு அவரை அடிக்கிறீங்க?

    ReplyDelete
  31. தாஸ்: புதிய தள அறிமுகத்துக்கு மிக நன்றி; நல்லாருந்தது. நான் ஒரு கத்து குட்டி போட்டோகிராபார் நண்பரே
    //கேரளா காரங்க வறட்டு கவுரவம் பார்க்க மாட்டாங்க, திருமணமே ஆனாலும் அனாவசியமாக ஒரு பைசா கூட செலவு பண்ணமாட்டாங்க//

    அப்படியா? நன்றி

    ReplyDelete
  32. அமுதா கிருஷ்ணா said...

    உரைக்கு ஊற்றிய பாலை வீணாக்குவது எப்படி என்று அய்யாசாமி ஆஃபிசில் விளக்குவது சூப்பர்.


    மேடம்: நோ அய்யாசாமி பாவம் :))

    ReplyDelete
  33. மதுமதி: நன்றி பதிவர் சந்திப்பில் சந்திப்போம்

    ReplyDelete
  34. தனபாலன் சார்: மிக நன்றி

    ReplyDelete
  35. ராமலட்சுமி மேடம்: நாட்டி பற்றி குறிப்பிட்டு சொன்னது மகிழ்ச்சி

    ReplyDelete
  36. வரலாற்று சுவடுகள்: ஹிஹி அரசியல்லே இதெல்லாம் சாதாரணம் சாரே

    ReplyDelete
  37. ஹுசைனம்மா: உங்களுக்கு கவுண்டமணி அதிகம் பிடிக்காதோ? கவுண்டமணி பிடித்தவர்களுக்கு அந்த காமெடி பிடிக்கும், அல்லது இறந்தவரை அசிங்கபடுதுகிரார்கள் என உங்களுக்கு பிடிக்கலையோ என்னவோ Taste always differ !

    அய்யாசாமியை பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள் என்றால், ரசிப்பதை நினைத்து கொண்டு இன்னும் கொஞ்சம் கூத்தடிப்பார் ஹும் :)

    ReplyDelete
  38. ஹா ஹா நன்றி மனோ

    ReplyDelete
  39. வலங்கை சரவணன் : நன்றி

    ReplyDelete
  40. சமையலில் முக்கிய பங்கு வகிக்கிற கொத்தமல்லி எப்படி இலவசங்களிலிருந்து இதுவரை விலகியிருந்தது எப்படி முக்கிய இடத்ஹை பிடித்ததோ,அதுதான் நமது வாழ்வின் குறியீடாக,கொத்டம்ல்லி இல்லாமல் சமையல் நிறாவு பெறுவதில்லையே?

    ReplyDelete
  41. அவரு XP விண்டோஸ் explorer-ல tiles view-லருந்து details view-க்குப் போக முயற்சிக்கிறாரோ?

    ReplyDelete
  42. எல்லாமே சுவாரஸ்யம்...! படத்தில் இருப்பது நீங்கள்தான் என்று எல்லோருமே ஏற்கெனவே சொல்லி விட்டார்கள்!

    ReplyDelete
  43. அய்யாசாமி இந்த மீட்டிங்கை பற்றி ஒரு பதிவு எழுதலாமான்னு உள்ளுக்குள்ள யோசிச்சுகிட்டிருக்கார் :))

    ReplyDelete
  44. Anonymous8:13:00 PM

    ஊகிக்க முயலுங்கள்.. விடை அடுத்த வானவில்லில் ...//

    தலை...
    வீட்டுக்காரம்மாவை விட்டுட்டு அடுத்து எந்த ஊருக்கு போலான்னு ப்ளான் பண்றீங்க போல...

    ReplyDelete
  45. Gujaal said...
    அவரு XP விண்டோஸ் explorer-ல tiles view-லருந்து details view-க்குப் போக முயற்சிக்கிறாரோ?

    குஜால்: நீங்கள் சொல்ற வார்த்தைக்கெல்லாம் அவருக்கு அர்த்தமே புரியாது நீங்க வேற :)

    ReplyDelete
  46. விமலன்: நன்றி

    ReplyDelete
  47. ஸ்ரீராம். said...

    எல்லாமே சுவாரஸ்யம்...!


    நன்றி ஸ்ரீராம்

    ReplyDelete
  48. ர‌கு said...


    அய்யாசாமி இந்த மீட்டிங்கை பற்றி ஒரு பதிவு எழுதலாமான்னு உள்ளுக்குள்ள யோசிச்சுகிட்டிருக்கார் :))

    ஏம்பா? ஏன்?

    ReplyDelete
  49. ரெவரி: நீங்க வெளிநாட்டில் இருந்தா என்ன? ஒரு நாள் இந்தியா வரும்போது உங்களை பார்க்கமலா போயிடுவேன் ? :)

    ReplyDelete
  50. வானவில் வண்ணமயம்!
    அது இது எது"வில் "சிரிச்சா போச்சு " பகுதி செம காமெடி??????? சரியான் அபத்தம். சிரிப்பே வரவில்லை. கவுண்டமணியாக வந்தவர் எல்லோரையும் தலைமுடியை பிடித்து ஆட்டி... எப்போடா முடிப்பாங்க ன்னு நினைத்தேன்.
    முகநூல் முத்துக்கள் (Why to say KIRUKKALKAL) அருமை!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...