Monday, July 9, 2012

வோடபோனின் மோசமான செல்போன் சேவை


மீபத்தில் ஊருக்கு சென்ற போது பெண் கையில் ஒரு போன் இருந்தால், அவசரத்தில் தொடர்பு கொள்ள எளிதாய் இருக்குமென புது சிம் வாங்கினேன். பூர்விகா மொபைல் நிறுவனத்தில் வோடபோன் சிம் வாங்கி, அதற்கான ஐ. டி புரூப், போட்டோ எல்லாம் கொடுத்தாயிற்று.

ஊருக்கு கிளம்ப ஓரிரு நாள் இருக்கும் போது ஐ. டி புரூப், போட்டோ வரலை என - வோடபோனில் இருந்து SMS வந்ததாக பெண் சொன்னாள்.  போன் செய்து கேட்டால் " வோடபோனின் சிஸ்டமுக்கு வர சில நாள் ஆகும். அது ரொட்டின் மெசேஜ் தான் கண்டுக்காதீங்க" என்றனர். சரி என ஊருக்கு போயாச்சு

ஊருக்கு போன பின் அந்த சிம்முக்கு இன்கமிங், அவுட் கோயிங் இரண்டும் துண்டித்து விட்டனர். டில்லியிலிருந்து சென்னைக்கு வோடபோன் Customercare போன் செய்தால் காரியம்  நடக்கலை.   சென்னையிலிருக்கும் நண்பர் ஒருவரை விட்டு பேச சொல்ல, அவர் பேசி விட்டு " மறுபடி ஐ. டி புருப் மற்றும் போட்டோ தந்தால் தான் activate ஆகி மறுபடி வேலை செய்யுமாம்" என்று கூறி விட்டார்.

ஊருக்கு வந்தபின் வோடபோன் கஸ்டமர் கேருக்கு போன் செய்து கேட்க, முதலில் கொடுத்த ஐ. டி புருப் மற்றும் போட்டோ வரவே இல்லை என்றும் மறுபடி வோடபோன் ஷோ ரூம் கடையிலேயே தாருங்கள் என்றனர். அன்றே வோடபோன் ஷோரூம் சென்று மீண்டும் அனைத்து ஐ. டி புரூப் தந்தேன். "பூர்விகாவில் தரும் ஐ. டி க்கள் போக மாட்டேங்குது சார் இந்த முறை போயிடும்" என்றனர்

அடுத்த சில நாட்கள் கழித்து பார்த்தால் மீண்டும் அந்த சிம் வேலை செய்யலை.

கஸ்டமர் கேருக்கு கேட்க, எந்த ஆவனமும் வராததால் அந்த சிம் முடக்க பட்டது என்றும் இனி வேலை செய்யாது, வேண்டுமானால் நீங்கள் எந்த ஷோ ரூமில் தந்தீர்களோ அங்கு போய் கேளுங்கள் என்றனர்.

அதே  வோடபோன் ஷோ ரூமுக்கு மீண்டும் விஜயம். அவர்கள் எல்லாம் பரிசோதித்து விட்டு டாகுமென்ட்ஸ் தந்தது உண்மை தான் என்றும் ஆனால் வோடபோன் அதனை பரீசளித்து முடிப்பதற்குள் முப்பது நாளாகிடுச்சு எனவே அந்த சிம் கார்ட் முடக்கப்பட்டது என்றனர். நான் போட்ட கூச்சலில் மிரண்டு போன மேனேஜர் பெண்மணி ஓடிவந்து புது சிம்கார்ட் ஒன்றை தந்தார்.மீண்டும் ஒரு முறை என்னிடம் அதே ஐ. டி கார்டு போட்டோ எல்லாம் வாங்கி கொண்டார். பழைய எண் போயே போச்சு என சொல்லி புது எண் தந்தார்.

இதில் வோடபோன் பற்றி எனக்கு தெரிய வந்தது இது தான் :

நாம் தரும் ஐ. டி கார்டு மற்றும் போட்டோ ஆகியவை வோடபோன் முக்கிய அலுவலகத்தை அடைவதே இல்லை. பூர்விகாவில் தந்தது மட்டுமின்றி  வோடபோன் ஷோ ரூமில் தந்தவையும் போகவே இல்லை. இது மிக பெரிய தவறு. அவர்கள் சிஸ்டம் இவ்விஷயத்தில் பூஜ்யம்

என் மேல் எந்த தவறும் இல்லாத போதும், அவர்கள் சிஸ்டமில் உள்ள தவறால் என் சிம் கார்டை யூஸ் பண்ண முடியாமல் செய்தனர். இரண்டு முறை நான் தந்த டாகுமென்ட்ஸ் சேர்க்காதது அவர்கள் தவறு. அந்த சிம்மில் இருந்த நூற்று சில்லறை ரூபாய் முழுதும் சுவாகா செய்து விட்டனர்.

ஒவ்வொரு முறை இரண்டு போட்டோக்கள் ஓசியிலா கிடைக்கிறது? அதற்கு காசு வேணாம்? ஏன் இவர்கள் ஐ. டி புருப் மற்றும் போட்டோ ஒழுங்காய் சேர்ப்பதில்லை?  பணம் இருக்கட்டும் .. எவ்வளவு அலைச்சல், நேர விரயம்? மன உளைச்சல் ?

நாம் இதனை அவர்களுக்கு போனிலோ, ஷோ ரூமிலோ போய் சொன்னால் அவர்கள் கேட்கும் கேள்வி: எந்த தேதியில் கொடுத்தீர்கள்? யாரிடம் இவற்றை கொடுத்தீர்கள்?

நாம் என்ன டையரியா எழுதி வைத்து கொள்ள முடியும்? மேலும்   நம்மிடம் பேசுவோரிடம் பேரை கேட்டாலும் யாரும் சொல்வதில்லை. தேதியும் வேணுமாம். யாரிடம் தந்தோம் என்பதும் வேணுமாம். இல்லா விடில் கம்பிலேயின்ட் எடுக்க மாட்டார்களாம்

" உங்கள் வேலையை நீங்கள் உருப்படியா பாக்க மாட்டீங்க. ரெண்டு தடவை நான் குடுத்த டாகுமென்ட்ஸ் நீங்க சேக்கவே இல்லை. நான் அவை குடுத்தேனா என உங்கள் கணினியில் பார்த்தால் தெரியாதா ? நான் மட்டும் எல்லாம் குறிச்சு வச்சிக்கனுமா?" என்றேன். அவர்களிடம் பதில் இல்லை

கஸ்டமர் கேரில் எந்த மெயிலுக்கு கம்பிலேயின்ட் அனுப்பனும் என்றால் தவறான மெயில் ஐ. டி தருகிறார்கள். அவர்கள் இணையத்தில் பார்த்தால் மெயில் ஐ. டி சற்று மாறி உள்ளது. இரண்டுக்கு அனுப்பினாலும் மெயில் பவுன்ஸ் ஆகிறது

"என்னோட சிம் கார்டை ஏன் நீங்க டீ ஆக்டிவேட் செய்யணும்? என் மீது என்ன தப்பு? நான் குடுத்த ஐ. டி புருப் ஒழுங்கா சேர்க்காதது உங்க தப்பு தான். அதுக்கு என்னை ஏன் பனிஷ் பண்ணனும்? நான் கட்டிய பணத்தை எப்படி நீங்க மறுபடி தராம போகலாம்? " என்றால் " எங்க சைடில் தான் சார் தப்பு. நாங்க விசாரிக்கிறோம்" என்கிறார்கள்.

என் மனைவி இதே நிறுவன சிம் வைத்திருக்கிறார். ஒவ்வொரு 3 மாதத்துக்கும் ஐ. டி கார்ட் மற்றும் போட்டோ கேட்கிறார்களாம். கேட்டால் உங்கள் ஐ. டி எங்கள் சிஸ்டத்தில் இல்லை என்கிறார்களாம்.   ஒவ்வொரு முறை ஐ. டி கார்ட் வாங்கி என்ன தான் செய்கிறார்களோ தெரிய வில்லை.

நிற்க. புதிதாய் ஒரு சிம் கார்டு வோடபோன் ஷோ ரூமிலேயே தந்தார்கள் அல்லவா? எல்லா ஐ, டியும்   மறுபடி ஒருமுறை வாங்கி விட்டு "இது வி.ஐ.பி சிம் மாதிரி டிரீட் பண்ணுவோம். இனிமே உங்களுக்கு இந்த மாதிரி ஆகவே ஆகாது என்று சொல்லி அனுப்பி வைத்தனர்.

இப்போது அதே வி. ஐ. பி சிம்முக்கு " நீங்கள் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் சப்மிட் செய்யவில்லை. நீங்கள் ஐ. டி புருப் மறுபடி தரா விடில் விரைவில் உங்கள் சிம் கார்ட் ரத்து செய்யப்படும் " என்று SMS வந்துள்ளது . இவர்களை எல்லாம் என்ன செய்யலாம் ! சொல்லுங்க !

56 comments:

  1. நான் ரெலையன்ஸ் கார்ட் வைத்துள்ளேன்
    ஒவ்வொரு முறை சார்ஜ் செய்தவுடன் அவர்களாகவே
    30 ரூபாயை எடுத்துக் கொண்டு உங்களை
    இதில் ஆக்டிவேட் செய்துள்ளோம் என
    அவர்களாகவே ஏதோ ஒரு சனியனில்
    ஆக்டிவேட் செய்துகொண்டு தேவையில்லையெனில்
    இந்த எண்ணில் டி-அக்டிவேட் செய்யவும் என
    தகவல் தருகிறார்கள்.அந்த எண்ணும் மெச்சேஜ்
    கொடுத்தால் போக்வே மாட்டேன் என்கிறது
    ஒவ்வொரு முறையும் கஸ்டமர் கேர் க்கு போன் செய்து
    சொன்னால் சரி செய்துவிடுகிறோம் எனச் சொல்கிரார்களே
    ஒழிய ஏதும் செய்வதில்லை.மாதம் 60 ரூபாய்
    அம்பானிகுடும்பத்திற்கு பிச்சை போடுவது போல்
    நினைத்து எனக்குள் நானே பெருமைபட்டுக் கொள்கிறேன்
    வேறு வழியில்லை.வேறு கம்பெனிக்கு அதே எண்ணை
    மாற்றிக் கொள்ளலாம் என்றால் எல்லாமே ஒரே
    குட்டையில் ஊறிய மட்டைகளாகத்தானே உள்ளது
    இது குறித்து யாராவது தெளிவான கருத்து சொன்னால்
    நல்லது.எனக்கு அது பயனுள்ளதாக இருக்கும்
    உருப்படாதவர்கள் குறித்து ஒரு பயனுள்ள
    பதிவு கொடுத்தமைக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  2. நான் எட்டு வருசமா வோடபோன் வச்சிருக்கேன் ஹச் இருந்த போது இருந்து.....BSNL வாங்கிப் பாருங்க....அப்புறம் சொல்லுவிங்க...வோடபோன் பெஸ்ட் என்று.

    ReplyDelete
  3. எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். நான் வைத்திருக்கும் ஏர்டெல் ரொம்ப வருஷம் முன் வாங்கியது. வாங்கி ஐந்து வருடம் கழித்து ஒரு நாள் உங்கள் ஐடி இல்லை எனக் கேட்டார்கள், எல்லாம் கொடுத்து ஒரு வாரத்தில் பெர்மனெண்டா ப்லாக் பண்ணிவிட்டதாக செய்தி! ட்ராய்-ல் ஒரு நண்பர் வேலை செய்யவே அங்கு முறையிட்டு மீண்டும் இந்த நம்பர் கிடைத்தது.

    ReplyDelete
  4. :))))

    இது சர்வசாதரணமாக எல்லா மொபைல் ஆப்பரேட்டர்களாலும் செய்யப்படுவது போல :)

    ஏர்செல்லுடன் இம்மாதிரி அனுபவம் எனக்கு நடந்தது. சிம் அப்ளிகேஷனில் ஒரிஜினல் ஐடிக்கள் பெற்றுக்கொண்டு இந்த நம்பருடைய சிம்மை அளித்திருக்கிறோம் என்று ரிசிப்ட் தந்ததார்கள்.

    ஒரு வாரத்தில் மீண்டும் ஐடி ப்ரூப் தரவில்லை என்றால் டி ஆக்டிவேட் செய்யப்படும் என்று தகவல் வந்தது, ஏர்செல் செண்டருக்குச் சென்று என்னால் ஐடி தரமுடியாது என்றேன், தரவில்லை என்றால் டி ஆக்டிவேட் ஆகிவிடும் என்றார்கள், அப்படி என்றால் என்னுடைய ஐடிக்களை தொலைத்துவிட்டோம் என்று கடிதம் தாருங்கள், இல்லை என்றால் அதை வைத்து யாரேனும் போலியாக சிம் கார்ட் வாங்கி குற்றம் செய்ய வாய்ப்பிருக்கிறது என்றேன்.

    எங்கெங்கோ பேசி, எந்த ஐடியும் திரும்பத் தராமலேயே ஆக்டிவேட் செய்துவிட்டனர், இன்று வரை பிரச்சனை இல்லை.


    புதிய சிம் கார்ட் வாங்கும்பொழுது கண்டிப்பாக பெற்றுக்கொண்ட சலான் வாங்கிக்கொள்ளவேண்டும். அப்படி ஒன்று இல்லாத பட்சத்தில் அப்ளிகேஷன் வாங்கி சிம் தருபரோடு சேர்த்து மொபைலில் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளலாம் :))

    மீண்டும் ஐடி கேட்டால், என்ன காரணம் என்று லெட்டர் கேட்கவேண்டும். தந்தால் மட்டுமே மறுபடியும் ஐடி தருவேன் என்று கூறலாம்.

    :))

    ReplyDelete
  5. நானும் ஏழெட்டு வருடமாக ஹட்ச் வைத்துள்ளேன்.இதுவரை ஒரு பத்து முறையாவது ஐடி புரூஃப்,போட்டோ சப்மிட் பண்ணி இருப்பேன்.வருடத்திற்கு ஒரு முறை இப்படி மெசேஜ் வந்து விடும்.சரி இதனை தொலைத்து விட்டு ஏர்டெல் வாங்கிக்கலாம் என்று புதிதாக ஏர்டெல் வாங்கிப்போட்டேன்.அது இன்னும் சுத்த மோசம்.பூஸ்டர் போட்டால்த்தான் பலன்.இல்லை என்றால் ரீ சார்ஜ் செய்த வுடன் கடலில் போட்ட பெருங்காயம்தான்.எல்லா மொபைல் சர்வீஸிலும் ஒவ்வொரு குறை..:(

    ReplyDelete
  6. மொபைல் கம்பெனிகள் எல்லாமே பணம் விழுங்கும் முதலைகள்தான். ஒண்ணு நல்லால்லைன்னு இன்னொரு கம்பெனிக்கு மாத்தினா முதலாவதே பரவால்லைன்னு நினைக்கச் செய்துருவாங்க.

    ReplyDelete
  7. I use BSNL since Sep. 2003. First it was in GJ till 2009 Sep

    When i moved to AP, I got fresh BSNL prepaid since Aug 2009..

    So far so good.

    Atleast there is no false promises, in BSNL. I feel it's reasonable...

    ReplyDelete
  8. மோகன்,

    வோடபோன் இப்படித்தான் போல, ஜிபிஆரெஸ் ல 98 ரூபா எனக்கு தண்டம் ஆகிடுச்சு.கஸ்டமர் கேர் எல்லாம் பேசியும், கடசியில உங்க போன் சரியில்லைனு சொல்லிட்டாங்க, இதுல காமெடி என்னனா ஆறுமாசம் முன்னர் இதே வோட போன் ஜிபிஆரெஸ் ,அதே போன்ல ஒர்க் ஆச்சு :-))

    நடுவில டோகோமோ ஜிபிஆரெஸ் 63 (அ) 67 ரூக்கு கிடைக்கவே மாறி பயன்ப்படுத்தினேன், கொஞ்சம் நெட் ஒர்க் பிரச்சினை வரவே மீண்டும் வோடபோன் ல 98 ரூக்கு போட்டால் ,நாமம் போட்டானுங்க.

    ஐடி புரூஃப்னு இம்சைலாம் செய்யலை, ஹி..ஹி நான் எதுமே கொடுக்காம சிம் வாங்கி இருக்கேன், கடைக்காரனே எல்லாம் பார்த்துப்பான்,50 ரூ கொடுக்கணும் :-))

    10 லட்சம் கஸ்டமர்ல 1% இப்படி காசு அடிச்சா கூட நல்ல லாபம் வரும் போல.

    ReplyDelete
  9. மொபைல் கம்பெனி கள் இப்படி பணம் பிடுங்குவது அநியாயம் தான் இதற்க்கான தீர்வு தான் எப்போது என்று தான் தெரியவில்லை மோகன் சார்

    ReplyDelete
  10. படிக்கும் போது சிரிப்பா இருந்தாலும் அந்த நிலைமைல நாம மாட்டிக்கும் போது தான் அதோட வலி நமக்கு தெரியும். நமக்கு தெரியாமையே 30 ரூபாய் ஆட்டய போடற திட்டம் எல்லா கம்பெனிலையும் பொதுவா இருக்கு! :(

    ReplyDelete
  11. ரெண்டாவது சிம்முக்கு ஐடி ப்ரூஃப் வாங்கும்போது, அவர்களிடம் காப்பியில் கையெழுத்து/ஸ்டாம்ப் வாங்கிவிட்டுக் கொடுத்திருக்கலாம்.

    //【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...//
    இவரின் கருத்துகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவேண்டியவை.

    ReplyDelete
  12. im with aircel for about 9 years now. same number. no issues so far, touch wood.

    ReplyDelete
  13. இந்தியாவில் செல்போன் சர்வீஸ் சுத்த வோஸ்ட்.. விடுப்பில் வந்த போது நான் அறிந்துகொண்டது..!

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. பொதுவாக பூர்விகா மாதிரியான கடைகளில் கடை விளம்பரத்திற்காக சிம்கார்டுகள் இலவசமாக கொடுக்கப்படுகின்றன. அதில் அவர்களுக்கு பெரிய அளவில் லாபம் இல்லை. அதனால் அவர்களிடம் நாம் கொடுக்கும் ஐடி ப்ரூப்புகளை சம்மந்தப்பட்ட மொபைல் ஆப்பரேட்டர்களிடம் முறையாக கொண்டு போய் சேர்ப்பதில்லை என்பது தான் உண்மை.

    சமீபத்தில் எனது அண்ணனுக்கு இதே மாதிரியான ஒரு அனுபவம் ஐடியாவில் நடந்தது. நம்மை ஏமாற்றும் விஷயத்தில் எல்லா ஆப்பரேட்டர்களும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  16. எல்லா நெட்ஒர்க்கிலும் ஏதாவது குளறுபடிகள் இருக்கும். ஆனா நாம படுற பாடு படுதிண்டாட்டம் தான்....

    நான் ஏர்டெல் இருந்தும் வீடியோகான் சிம் ரெண்டு வருசமா அவுட்கோயிங்க்காக யூஸ் பண்றேன்....
    கடந்த மூணு மாசமா டவர் சரியா கிடைக்க மாட்டிங்குது. அதாவது சிட்டியில் மட்டும் டவர் கிடைக்குது. ஆனா முன்னாடி எங்கனாலும் எடுக்கும்.
    அப்போ டொக்கமோ டைஅப் இருந்துச்சுன்னு சொல்றாங்க.
    இப்போ அந்த டைஅப் காணோம்... டவர் எடுக்கல....
    இதனால நிறைய நபர்கள் தொடர்பு கொள்ள முடியல..

    கஸ்டமர்கேர் கால் செய்தால் அவங்க பிஸியா இருப்பதாக சொல்றாங்க. இந்த மூணு மாசத்துல ஒருமுறை கூட என்னால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை....

    யாராவது லைனில் கிடச்சா தாளிக்கலாம்னு முடிவோட இருக்கேன்....

    ReplyDelete
  17. அப்படியே இந்த உண்மை நிகழ்ச்சி பதிவை படிங்க....

    http://www.tamilvaasi.com/2011/03/blog-post.html

    ReplyDelete
  18. அந்த சிம்மை வாங்கி நீங்கள் சில நாட்களாவது உபயோகித்திருப்பீர்கள் என தெரிகிறது. எந்த விதமான ஆதாரங்களும் என்னிடம் பெறாமல் இயங்கும் நிலையில் உள்ள சிம் கார்டை எப்படி கொடுத்திருக்க முடியும் என்று அவர்களை மடக்கியிருக்கலாமே சார்!! அந்த மாதிரி குடுத்தேன் என்று சொன்னாலே அவன் மாட்டிக்குவான். இல்லை என்றால் உங்களிடமிருந்து தேவையான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டைதை ஒப்புக் கொண்டு அப்பாவும் மாட்டுவான்.

    அல்லது இன்னொரு வேலை செய்யலாம். நீங்கள் வாங்கிய கடையில் நிச்சயம் உங்களுக்கு அந்த சிம் கார்டின் நம்பரோடு ரசீது கொடுத்திருப்பார்கள் தானே, அதை வைத்து என்னக்கு எல்லா ஃ பார்மாளிடிசும் முடித்த பின்னர் எனது இணைப்பை துண்டித்து என்னை வெளியூரில் தவிக்க விட்டுவிட்டார்கள், நண்பர்கள், கும்பத்தினர் என்னை தொடர்பு கொள்ள முடியாமல் போனது, மன உளைச்சலுக்கு ஆளானேன்.... அது இதுன்னு சொல்லி ஐம்பது லட்சம் நஷ்ட ஈடு கேட்டு கேசு போடுங்க சார். வழக்கு ஜெயிச்சு உங்களுக்கும் நியாயம் கிடைக்கும், அவனுங்களும் திருந்துவாங்க. வக்கீலான நீங்க தான் இதைச் செய்ய முடியும்!!!

    ReplyDelete
  19. நீங்க வாங்கின சிம் கார்டு விளம்பரத்தில் வரும் நாய் மட்டும் தான் கூடவே வரும், ஆனால் சினால் வருமா என்பது கேள்விக்குறி தான். மற்ற எல்லா நிருவனகலுமே ஏதாவது ஒரு விதத்தில் தில்லாலங்கை வேலைகளைத்தான் செய்கிறார்கள், BSNL அவ்வ்வரு அல்ல, ஆனால் கனெக்டிவிடி ஒரு பிரச்சினை. நான் ஆரம்பத்தில் இருந்தே Idea என்று இன்று சொல்லப் படும் SPICE இணைப்பைத்தான் பயன் படுத்தி வருகிறேன், மேற்கு வங்காளம், உத்திர பிரதேசம் மாநிலங்களில் தோலை தூர கிராமங்களுக்கும் சென்ற போது கூட இணைப்பு ஒருபோதும் இல்லாமல் போனதில்லை. கண்ட கண்டத்துக்கு பணம் பிடுங்குவதில்லை. இந்தியா முழுவதும் எந்த கனெக்ஷனுக்கு போன் செய்தாலும் வினாடிக்கு 1.2 பைசா தான். அதற்க்கு வருடத்துக்கு இருபது ரூபாய் மட்டுமே கூடுதல் கட்டணம். [சத்தியமா இது விளம்பரம் இல்லீங்கோவ்!!]

    ReplyDelete
  20. பி.எஸ்.என்.எல் லே பரவாயில்லை போலிருக்கிறது.

    ReplyDelete
  21. Anonymous8:17:00 PM

    Can you hear me now?

    ReplyDelete
  22. போஸ்ட் பேயிட் திட்டத்திற்கு மாறினால் இவர்கள் செய்யும் தில்லுமுல்லுகளிடமிருந்து கொஞ்சம் தப்பிக்கலாம்

    ReplyDelete
  23. எல்லா செல் கம்பெனிகளுமே இப்படித்தான் மோசடி செய்கின்றன. இதுக்கு பி.எஸ்.என்.எல் எவ்வளவோ தேவலைதான்!

    ReplyDelete
  24. உண்மைதான்...வோடபோன் செய்வது மிக கொடுமையான வேலை....

    நானும் மிக கடுமையாக இவர்களால் பாதிக்கபட்டுள்ளேன்....

    இதுவரை ஒரு நம்பருக்கு மட்டும் ஐந்து முறை ஐ.டி கொடுத்துள்ளேன்...
    கடந்த பதினைந்து நாட்களில்...
    :((((((((((((
    இவர்களை விலக்கி வைப்போம்....

    ReplyDelete
  25. ரமணி சார்: விரிவாய் உங்கள் அனுபவம் பகிர்ந்தமைக்கு நன்றி. உங்கள் பிரச்சனைக்கு நீங்கள் ஒரு லேட்டர் எழுதி அவர்கள் கஸ்டமர் கேரில் கொடுத்து அதற்கு ஒரு அக்னாலேட்ஜ்மென்ட் வாங்கலாம். அதன் பிறகாவது திருந்துவார்கள் என நினைக்கிறேன்

    ReplyDelete
  26. சுரேஷ்: நெடுந்தூரம் - ஹில் ஸ்டேஷன் போன்றவை போகும் போது BSNL மட்டுமே வேலை செய்வதை பார்த்துள்ளேன்;

    ReplyDelete
  27. வெங்கட்: இப்படி சிலர் மற்ற கம்பனியும் இப்படி தான் என சொல்லும் போது ஆறுதலாக உள்ளது :)

    ReplyDelete
  28. ஷங்கர்: மிக விரிவான அருமையான பின்னூட்டம் நன்றி இருந்தாலும் போட்டோ எடுப்பதெல்லாம் முடியுமா பாசு ? (ஜோக்குக்கு சொன்னீங்களோ?)

    ReplyDelete
  29. ஸாதிகா said...
    நானும் ஏழெட்டு வருடமாக ஹட்ச் வைத்துள்ளேன்.இதுவரை ஒரு பத்து முறையாவது ஐடி புரூஃப்,போட்டோ சப்மிட் பண்ணி இருப்பேன்.

    கொடுமை இதே அனுபவம் தான் என் மனைவிக்கும்

    ReplyDelete
  30. அமைதிச்சாரல் said...
    ஒண்ணு நல்லால்லைன்னு இன்னொரு கம்பெனிக்கு மாத்தினா முதலாவதே பரவால்லைன்னு நினைக்கச் செய்துருவாங்க.

    மிக சரியா சொன்னீங்க

    ReplyDelete
  31. மாதவா : உன் அனுபவம் சொன்னதற்கு நன்றி

    ReplyDelete
  32. வவ்வால் said...

    //ஐடி புரூஃப்னு இம்சைலாம் செய்யலை, ஹி..ஹி நான் எதுமே கொடுக்காம சிம் வாங்கி இருக்கேன், கடைக்காரனே எல்லாம் பார்த்துப்பான்,50 ரூ கொடுக்கணும் :-))

    என்னாங்க இது ! கடை காரனுக்கு காசு குடுத்தால் எப்படி வோடபோன் காரன் பேசாம இருக்கான்?

    ***
    10 லட்சம் கஸ்டமர்ல 1% இப்படி காசு அடிச்சா கூட நல்ல லாபம் வரும் போல.

    ஆம் இப்படி மக்களிடம் சிம் போச்சு என அவர்கள் காசை சாப்பிட்டாலே கோடி கணக்கில் சம்பாதிக்கலாம்

    ReplyDelete
  33. சரவணன்: நாலு பேர் கன்சியூமர் கேஸ் போட்டு இவர்களை நாற அடித்தால் திருந்துவார்கள்

    ReplyDelete
  34. தக்குடு: உண்மை தான்

    ReplyDelete
  35. நன்றி ஹுசைனம்மா

    ReplyDelete
  36. நன்றி விதூஷ். அதிசயமா இந்த பக்கம்

    ReplyDelete
  37. வரலாற்று சுவடுகள் : உண்மை தான் நண்பா

    ReplyDelete
  38. திருடர்கள்.
    We have to show them our other side of our face. If we create Scene they will fear. I used to get service from ICICI Bank like this; so I have changed my account to Tamilnad Mercantile Bank - fantastic service.

    ReplyDelete
  39. நன்றி திரு மோகன் குமார்.
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

    ReplyDelete
  40. உருப்படாதவர்கள் குறித்து ஒரு பயனுள்ள
    பதிவு கொடுத்தமைக்கு மனமார்ந்த நன்றி//

    எங்க குரு சொன்ன கருத்துதான் என் கருத்தும்...!

    ReplyDelete
  41. Anonymous4:11:00 AM

    காலையில் இட்ட மாமொழி மிஸ்ஸிங்...
    //இந்தியாவில் இருந்த வரை மொபைல் வைத்ததே இல்லை மோகன்...இப்ப வந்தாலும் வச்சுக்கிறது இல்லை..அப்படியே பழகிவிட்டதால் இந்த பிரச்னை எனக்கு இல்லை மோகன்...தொடர்ந்து அசத்துங்கள்...//

    ReplyDelete
  42. This comment has been removed by the author.

    ReplyDelete
  43. சக்திவேல்: பூர்விகாவை விடுங்கள். இரண்டு முறை வோடபோன் ஷோ ரூமில் தந்தவையே அவர்கள்
    சிஸ்டமுக்கு போகலையே ! இதை என்ன சொல்றது !

    ReplyDelete
  44. உங்கள் அனுபவம் பகிர்ந்தமைக்கு நன்றி பிரகாஷ், உங்கள் பதிவின் உள்ளே போக முடியலை. உளவோ அல்லது வேறு சைட்டோ இருப்பதால் பதிவை படிக்க முடியலை. பின்னர் முயல்கிறேன்

    ReplyDelete
  45. தாஸ்: கேசா? வீட்டம்மா இந்த பதிவு போட்டதுக்கே திட்டுறாங்க. வோடபோன் மக்கள் ஆள் வச்சு அடிச்சா என்ன பண்றதுன்னு... இதுலே கேஸ் எங்க போடுறது?

    //எந்த விதமான ஆதாரங்களும் என்னிடம் பெறாமல் இயங்கும் நிலையில் உள்ள சிம் கார்டை எப்படி கொடுத்திருக்க முடியும் என்று அவர்களை மடக்கியிருக்கலாமே சார்!! //

    சொல்லாம இருப்பேனா? சொன்னேன். அவனும் ஒத்துக்கிறான். ஆனாலும் எதையும் மாத்திக்கலை

    ReplyDelete
  46. முரளி சார்: அப்படியா? நன்றி

    ReplyDelete
  47. அரவிந்தன்: ஆம். போஸ்ட் பேயிடில் இவ்வளவு பிரச்சனை இல்லை என நினைக்கிறேன்

    ReplyDelete
  48. நன்றி சுரேஷ்

    ReplyDelete
  49. நக்கீரர்: உங்களுக்கும் இதே போல் செய்தாங்களா? இவங்களை என்ன தான் பண்றதோ தெரியலை

    ReplyDelete
  50. ரத்னவேல் ஐயா : முக நூலில் பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  51. நன்றி மனோ

    ReplyDelete
  52. நன்றி ரெவரி

    ReplyDelete
  53. Vodafone is not responsible for getting id proof. The Distributors, retails, Mobile Shops etc, they did not submit your Form correctly. Me also scold this vodafone company. But Now i working in airtel, then only i know..

    ReplyDelete
  54. கோபி: தங்கள் கருத்துக்கு நன்றி

    ஆனால் இரண்டு விஷயங்கள். பூர்விகா போன்ற நிறுவனம் ஐ. டி ப்ரூப் சரியாக சேர்ப்பிக்கா விடில் எதற்கு அவர்கள் மூலம் தொடர்ந்து சிம்கார்ட் தரனும்? நிறுத்தி விடலாமே?

    அடுத்தது: இரண்டு முறை வோடபோன் ஷோ ரூமில் தந்த ஐ. டி ப்ரூப் கூட சென்று சேரவே இல்லை; பதிவிலேயே இதை கூறியுள்ளேன் இது முழுக்க வோடபோன் தவறு தானே?

    ReplyDelete
  55. இந்த ஐடி பிரச்சினை எல்லா கம்பனியிலும் நடக்குது.
    இதுக்கு என்ன தீர்வுனா....

    நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட செண்டர்கள்ல நாம கொடுக்கிற ஐடி புருப் களை உடனடியா ஸ்கேன் செய்து அப்லோட் செய்யலாம் . இதனால் நேரம் மிச்சமாகும்...

    முடிந்த வரை நமக்கு நன்கு தெரிந்த நபர் வைத்துள்ள சென்டரிலோ அல்லது நம் நண்பர்கள் பயன்படுத்தும் கடைகளிலோ புது சிம் கார்டு வாங்கலாம்....

    ReplyDelete
  56. என்னுடைய பழைய ஏர்செல் சிம்கார்டை சில வருடங்களுக்கு முன்னர் தொலைத்து விட்டேன். தற்போது அதே நெம்பரை வேறு ஏதேனும் ஒரு நெட்வொர்க்கில் வாங்க முடியுமா

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...