டில்லியிலிருந்து நாற்பது கிலோ மீட்டர் தொலைவில், ஹரியானா மாநிலத்தில் உள்ளது மானேசர் என்கிற ஊர். இங்கு தான் மாருதியின் தொழிற்சாலை உள்ளது. மாருதி Swift கார் இந்த தொழிற்சாலையில் தயார் ஆகிறது.
ஒன்பது மாதங்களுக்கு முன் இதே தொழிற்சாலையில் மிக பெரும் ஸ்ட்ரைக் நடந்து பல வாரங்கள் மூடப்பட்டிருந்தது. இம்முறை அதை விட பெரிய வன்முறை. காயம் பட்ட 26 ஊழியர்கள் மருத்துவமனையில் இருக்கின்றனர். இதில் ஒரு ஜப்பானியரும் அடக்கம். இரு காலும் பிராக்சர் ஆகி தீயில் சிக்கி ஒரு ஊழியர் இறந்தே விட்டார். வன்முறையில் ஈடுபட்ட தொண்ணூறு ஊழியர்கள் ஜெயிலில்...!
மாருதி நிறுவனத்துடன் ஜப்பானிய நிறுவனமான சுசுகி (Suzuki ) மோட்டார் நிறுவனம் இணைந்து Joint Venture முறையில் இந்த நிறுவனம் இயங்குகிறது.
வெளி நாட்டினரை பொறுத்த வரை எப்போதுமே ஊழியர்களின் safety-க்கு தான் மிக அதிக முக்கியத்துவம் தருவார்கள். ஒரு ஊழியர்க்கு தயாரிப்பில் அடிபட்டாலே, இனி யாருக்கும் இப்படி நடக்காமல் இருக்க என்ன செய்வது என பல வாரங்கள் பேசி, ஊழியர்களுக்கு அது பற்றி நிறைய டிரைனிங் தருவார்கள். இத்தகைய வன்முறை, அதுவும் ஒரே நேரத்தில் பல மேனஜர்கள் தாக்கப்பட்டது வெளி நாட்டு முதலீட்டாளர் களை பெரும் அளவு மனதை பாதித்திருக்கும்.
ஒரே ஒரு ஊழியர் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதில் துவங்கி உள்ளது எல்லா பிரச்சனையும் !
ஜியாலால் என்கிற ஊழியர் ஒரு வாய்ச்சண்டையில் ராம்கிஷோர் என்கிற மேனஜரை அன்று காலை அறைந்து விட்டார். இதனால் ஜியாலால் மீது நடவடிக்கை எடுக்க நிர்வாகம் பேசி உள்ளது. இதில் கோபமான ஊழியர்கள் production-ஐ நிறுத்தி விட்டு போராட்டம் நடத்தி உள்ளனர். பின் மதிய ஷிப்ட்டுக்கு வந்த ஊழியர் கூட்டமும் சேர்ந்து விட அனைவரும் சேர்ந்து 700 கம்பியூட்டர், மற்றும் சர்வர்(Server) -களை எரித்துள்ளனர்.
மெசனைன் பிலோர் என்று சொல்லப்படும் முதல் மாடியில் தான் உயர் அதிகாரிகள் அனைவரும் அமருவார்கள். அங்கு நுழைந்த கூட்டம் மேனேஜர்கள் அனைவரையும் சேர் மற்றும் இரும்பி கம்பியால் தாக்கி இருக்கிறது. பின் சில இடங்களுக்கு தீயும் வைத்து விட்டது. இவர்கள் அடித்ததில் இரு கால்களும் பிராக்ச்சர் ஆன அவனிஷ் குமார் தேவ் என்கிற மேனேஜர் தீயில் சிக்கி இறந்து விட்டார்.
இப்போது நிறுவனம் லாக் அவுட் செய்யப்பட்டுள்ளது.
லாக் அவுட் ஆன நிறுவனம் எப்போது திறக்கப்படும் என்பது தெரியவில்லை. குறைந்தது இரண்டு வாரம் முதல் ஒரு மாதம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நாளைக்கு இதனால் நிறுவனத்துக்கு 15 கோடிகள் நஷ்டம் ! ஆனால் நிறுவனம் இப்போது பணத்தை பெரிதாய் நினைக்காது. ஊழியர்களின் மனதில் உண்டான தாக்கம், பயம் சரியாவது தான் முக்கியம் !
ஊழியர்கள் நிர்வாக முடிவுகளுக்கு மேனஜர், வி.பி போன்றோரை காரணமாக நினைப்பது எவ்வளவு தவறான விஷயம் ! வன்முறை நிச்சயம் இப்பிரச்சனைக்கு தீர்வாகாது. இது போன்ற பிரச்சனையில் தாக்கியவர்கள் ஜெயிலுக்கு போய் விட முக்கிய பிரச்சனை திசை திரும்பி விடும்.
உண்மையில் இது போன்ற நேரத்தில் தான் காந்திய வழிகள் பயன்படும். ஊழியர்கள் தினமும் நிறுவனம் வந்து உள்ளேயே அவர்கள் தங்கள் போராட்டத்தை அமைதியாக தொடர்ந்திருந்தால் நிர்வாகம் இறங்கி வந்திருக்கும்.
இது பற்றி டில்லியில், இந்த தொழிற்சாலைக்கு சற்று அருகில் இருக்கும் என் நண்பர் ஒருவரிடம் கேட்ட போது பிரச்சனைக்கு அடிப்படை என அவர் கூறிய காரணங்கள் :
1. நிர்வாகம் தற்போது சுசுகி-யிடம் இருகிறது. அவர்களின் working culture வேறு; நமது working culture வேறு.
2. பொதுவாகவே ஆட்டோமொபைல் துறையில் உள்ள போட்டியினால் வேலை பளு ஊழியர்கள் மீது அதிகமாக இருப்பது மற்றும் அது இடைநிலை நிர்வாகிகளின் மேல் ஏற்படுத்தும் சுமை
3. இந்த பகுதியில் உள்ள தொழிலாளர்களின் ஒட்டு மொத்த மன நிலை. இவர்கள் அனைவரும் ’குஜ்ஜர்’ என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள். எளிதில் உணர்ச்சி வசப் படுபவர்கள். தேவர் மகன் படத்தில் சிவாஜி கூறுவது போல் வேல் கம்பு போன்றவற்றை விட்டு விட்டு வர சற்று காலம் ஆகலாம். அருகில் உள்ள (விவசாய!!) நில உரிமையாளர்கள் தொழிற்சாலைகளுக்கும் மற்றவர்களுக்கும் தங்கள் நிலங்களை விற்று பணம் சம்பாதித்தைக் கண்டு தாங்களும் அது போல அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களூக்கு வந்திருக்கும். அதை யூனியன் தலைவர்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
4. தற்போது இதில் மாவோயிஸ்டுகளின் தலையீடும் இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. (குறிப்பிட்ட நபர்களை சரியான தருணத்தில் தாக்கியிருப்பதால் இது உணர்ச்சி வசப்பட்டு நடக்கவில்லை; தாக்குதல் திட்டமிட்டது என்று போலிஸ் நினைக்கிறது)
5. இது ஒரு 'tip of a volcano' தான். அரசு ’குறைந்த பட்ச ஊதியத்தை’ உயர்த்த நீண்ட காலம் எடுப்பதும் ஒரு காரணம். (உதா 2008-2010 வரை கு.ப.ஊ.உயர்வு வெறும் 50 ரூபாய் தான். இந்த காலத்தில் விலைவாசி உயர்வோ மிகவும் அதிகம். இது அரசு தொழில் முத(லை)ல்வர்கள் இணைந்து நடத்தும் ஒரு கூட்டு சதி. ஊதிய உயர்வைத் தள்ளிப் போட்டால் முதலாளிகளூக்கு லாபம். அதில் ஒரு பகுதி அமைச்சருக்கும் கிட்ட கூடும் !
************
இது பற்றி இன்னொரு டில்லி நண்பர் இப்படி கூறுகிறார் :
மாருதி மானேசர் தொழிற்சாலையில் இது வரை மூன்று நான்கு முறை இம்மாதிரி பிரச்சனைகள் வந்திருக்கின்றன. இந்த முறை எல்லா எல்லையையும் தாண்டிவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். சாதாரணமாகவே ஒரு கும்பலாக இருக்கும்போது எதையும் செய்யலாம் என்ற துணிச்சல் [மாஸ் சைகாலாஜி] இருக்கும். இம்முறை நடந்தது, ஹரியானாவிற்கோ, இந்தியாவிற்கோ நிச்சயம் நல்லதல்ல. ஊழியர்களுக்குப் பாதுகாப்பில்லை எனும்போது எந்த நிர்வாகம் இங்கே முதலீடு செய்வார்கள்.?
************
நிறைவாக :
கடந்த ஒரு வருடத்தில் மூன்று முறை மாருதியின் மானேசர் பிளான்ட் மூடப்பட்டது (Lock Out) மிக பெரும் கருப்பு புள்ளி. மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நிலைமையை சரி செய்ய வேண்டும். அப்போது தான் வெளி நாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்தியா மீதான நம்பிக்கை குலையாமல் இருக்கும். எல்லா விஷயத்திலும் தூங்கி வழியும் மத்திய அரசு உடனே இதை செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் !
நிறைவாக :
கடந்த ஒரு வருடத்தில் மூன்று முறை மாருதியின் மானேசர் பிளான்ட் மூடப்பட்டது (Lock Out) மிக பெரும் கருப்பு புள்ளி. மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நிலைமையை சரி செய்ய வேண்டும். அப்போது தான் வெளி நாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்தியா மீதான நம்பிக்கை குலையாமல் இருக்கும். எல்லா விஷயத்திலும் தூங்கி வழியும் மத்திய அரசு உடனே இதை செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் !
********
வல்லமை ஜூலை 24, 2012 இதழில் வெளியான கட்டுரை
நல்ல அலசல்...
ReplyDeleteஇதன் பின்னணியில் அரசியலும் இருக்கிறது என இப்போது சந்தேகப் படுகிறார்கள்.... :(
நிலைமை சரியாக வேண்டும். இல்லையென்றால் மற்ற வெளிநாட்டு கார் நிறுவனங்களுக்கு கிராக்கி அதிகமாகி விடும்....
நிர்வாகமும் தற்காலிக [ஒப்பந்த] ஊழியர்களுக்கான ஊதியத்தினை உயர்த்த வேண்டும். மாதம் ஒன்றுக்கு 6000 ரூபாய் தான் சம்பளம் எனும்போது கஷ்டம் தானே - அதுவும் இப்போதிருக்கும் விலைவாசியில்...
இந்த மாதிரி ஒரு நிகழ்வு தென்னிந்தியாவில் ஒரு போதும் நடந்திருக்காது. வட இந்தியர்கள் கொஞ்சம் தைரியசாலிகள், தென்னிந்தியர்கள் பயந்தாங்கொள்ளிகள். [அதனால்தான் ராஜஸ்தானில் இருந்து இங்கே வந்து சேட்டு வட்டிக்கு விட்டு கோடி கோடியாய் சம்பாதிக்கிறான். நம்ம போலிஸ் உட்பட எல்லோரும் அவனுக்கு பல்லக்கு தூக்குகிறார்கள்.] அது நல்லதுக்கா இல்லையா என்று சரியாகச் சொல்ல முடியாது. ஆனால், குட்டக் குட்ட குனிந்து கொண்டே இருப்பேன் என்று இருப்பதும் நியாயம் இல்லையே??
ReplyDeleteகுஜராத்தில் மாருதி நிறுவனம் ஒரு புதிய தொழிற்சாலையை நிறுவ இருக்கிறது (மோதியின் தற்போதைய ஜப்பான் பயணம் இது தொடர்பாகத் தான்). சம்பள உயர்வைக் கேட்ட ஊதியர்கள் தொழிற்சாலையை குஜராத்தில் மாற்றிவிடுவோம் என்று இடைநிலை அலுவலர்களால் மிரட்டப்பட்டதாகவும் கூறுகிறார்கள். [தற்போது சுசுகி, குஜராத்தில் நிறுவ இருப்பத்து புதிய நிறுவனம் தான் இங்கு இருக்கும் தொழிற்சாலையை relocate செய்யத் திட்டம் இல்லை என்று விளக்கம் கூறியுள்ளது].
ReplyDeleteநேற்று இந்த கிராம மஹாபஞ்சாயத்து கூடி யூனியன் நிர்வாகிகளைச் சாடியுள்ளது. கம்பெனி நிர்வாகத்துடன் ஒத்துழைக்க சம்மதம் தெரிவித்துள்ளார்கள்.
எப்படியோ குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு, மீண்டும் தொழிற்சாலை இயங்கினால் நல்லது.
நல்ல அலசல்.
நம்ம ஊரில் இப்படி நடப்பதற்கு வாய்ப்பு குறைவுதான் என்று நினைக்கிறேன்...
ReplyDeleteஅருமையான அலசல் அண்ணே...
\\இது ஒரு 'tip of a volcano' தான். \\ Tip of the iceberg கேள்விப் பட்டிருக்கிறோம், கண்ணுக்குத் தெரிஞ்சது ஒரு பங்கு என்றால், ஒளிந்திருப்பது ஒன்பது பங்கு என்று அவ்வாறு சொல்வார்கள். இதென்னது புதுசா இருக்கே!! சொல்லப் போனா tip of the volcano ரொம்ப டேஞ்சர் ஆச்சே!!!
ReplyDelete//இந்த மாதிரி ஒரு நிகழ்வு தென்னிந்தியாவில் ஒரு போதும் நடந்திருக்காது.//
ReplyDeleteகோவை பிரிக்கால் தொழிற்சாலையில் HR மேலாளர் சென்ற வருடம் ஊழியர் பிரச்சினையினால் நிறுவனத்தினுள்ளேயே அடித்துக் கொல்லப்பட்டார்.
ஆனாலும் தமிழகத்தில் இது போன்ற நிகழ்வு ரொம்ப அரிதானது.
நல்ல பதிவு நண்பரே.
ReplyDeleteசமயம் கிடைக்கும் போது நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க நண்பரே
http://dohatalkies.blogspot.com/2012/07/schindlers-list_1072.html
நல்ல அலசல்! ஊழியர்கள் இந்த அளவிற்கு வன்முறையில் இறங்கியிருக்க வேண்டாம். இப்போது பாதிப்பு அவர்களுக்கும் தானே!
ReplyDeleteஊழியர்கள் நிர்வாக முடிவுகளுக்கு மேனஜர், வி.பி போன்றோரை காரணமாக நினைப்பது எவ்வளவு தவறான விஷயம் ! வன்முறை நிச்சயம் இப்பிரச்சனைக்கு தீர்வாகாது. உண்மைதான்.
ReplyDeleteவன்முறை நிச்சயம் இப்பிரச்சனைக்கு தீர்வாகாது.
ReplyDeleteநிலைமை விரைவில் சரியாகும் என்று நம்புவோம்!
ReplyDeleteமாருதி நிறுவன மேனேஜர்களுக்கு வெட்டு!...மோகன் தலையில ஒரு கொட்டு...-:)
ReplyDeleteவல்லமை இதழில் வெளியான கட்டுரை//
வல்லமை online magazine ஆ?
விரிவான கருத்துக்கு மிக நன்றி வெங்கட்
ReplyDeleteநித்ய அஜால் குஜாலானந்தா : தங்கள் கருத்துக்கு நன்றி
ReplyDeleteசீனி : சரியான கருத்துகள் மிக நன்றி
ReplyDeleteசங்கவி: ஆம். இவ்வளவு பெரிய வன்முறைக்கு வாய்ப்பு குறைவே
ReplyDeleteநன்றி குஜால். சரியான உதாரணம் கொடுத்தமைக்கு
ReplyDeleteதோஹா டாக்கீஸ் : நன்றி வாசிக்கிறேன்
ReplyDeleteநன்றி உமா மேடம்
ReplyDeleteநன்றி சரவணன் சார்
ReplyDeleteவரலாற்று சுவடுகள் : ஆம் நன்றி
ReplyDeleteரெவெரி said...
ReplyDeleteமாருதி நிறுவன மேனேஜர்களுக்கு வெட்டு!...மோகன் தலையில ஒரு கொட்டு...-:)
ஏஏஏஏன் கொட்டு?
//வல்லமை online magazine ஆ?//
ஆம் நீங்களும் கூட படைப்புகள் அனுப்பலாம் !
'700 கம்பியூட்டர்களையும் சர்வர்களையும் எரித்து, அதிகாரிகளைத் தாக்கி....'
ReplyDeleteஐயோ...இந்த வன்முறைக் கலாச்சாரம் என்றுதான் ஒழியுமோ?
அதிக வேலை, குறைவான சம்பளம் என்பதற்காக அனைவரும் வன்முறை பாதையை தேர்ந்தெடுத்தால், இங்கு பல மேனேஜர்கள் உயிரிழக்க வேண்டி வரும்.
ReplyDelete//பின் மதிய ஷிப்ட்டுக்கு வந்த ஊழியர் கூட்டமும் சேர்ந்து விட அனைவரும் சேர்ந்து 700 கம்பியூட்டர், மற்றும் சர்வர்(Server) -களை எரித்துள்ளனர். //
இந்த ஊழியர்களுக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு திமிரும், தைரியமும்? தவறு யார் மீது இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நீங்கள் சொல்லியிருப்பதுபோல், அந்நிய முதலீட்டார்கள் முதலீடு செய்வதற்கு முன் (அதுவும் வட இந்தியாவில்), கொஞ்சம் யோசிப்பார்கள் என்றே நினைக்கிறேன்.
ரொம்ப கவலைக்குள்ளாக்கிய சம்பவம்:(
ReplyDeleteவெளிநாட்டு கம்பெனிகள் நடத்தும் முறையில் ஒரு இந்தியக் கம்பெனியை ஆரம்பிச்சு நடத்துவது தலையாலே தண்ணி குடிப்பது போலதான்.
ரெண்டரைவருசம் ஹிமாச்சல ப்ரதேசத்தில் கம்பெனி வேலை ஆரம்பிசசு நிறையப்பட்டாச்சு.
கோபாலுக்கு போதும்போதுமுன்னு ஆகிப்போச்சு:(
ஸ்ரீராம். said...
ReplyDelete'700 கம்பியூட்டர்களையும் சர்வர்களையும் எரித்து, அதிகாரிகளைத் தாக்கி....'
ஐயோ...இந்த வன்முறைக் கலாச்சாரம் என்றுதான் ஒழியுமோ?
**
ஆம் உண்மை தான். நன்றி
ரகு
ReplyDelete//யார் மீது இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.//
உண்மை தான். ஆனால் எடுப்பார்களா என்பது சந்தேகம் :(
துளசி கோபால் said...
ReplyDeleteரெண்டரைவருசம் ஹிமாச்சல ப்ரதேசத்தில் கம்பெனி வேலை ஆரம்பிசசு நிறையப்பட்டாச்சு.
கோபாலுக்கு போதும்போதுமுன்னு ஆகிப்போச்சு:(
**
மேடம்; நிறுவனம் ஆரம்பிப்பது பற்றி உங்கள் புக்கில் சொல்லிருப்பீங்க. படிச்சிருக்கேன். ஆனா அது பிட்டர் ஆன அனுபவம் என இப்போ தான் தெரியுது :(