Monday, July 16, 2012

நீயா நானா : விஜய் டிவி இப்படி செய்யலாமா?

மிழர்கள் சில விஷயத்தை பிடிக்காவிட்டால் கூட, திட்டி கொண்டே தொடர்ந்து செய்வார்கள்.   "கிரிக்கெட் மக்களை கெடுக்கிறது" என்று சொல்லிகொண்டே மேட்ச் பார்ப்பார்கள். சினிமாவை திட்டி கொண்டே, சினிமா செய்தி ஒன்று விடாமல் படிப்பார்கள். 

அந்த வரிசையில் இணையத்தில் மிக அதிகம் விமர்சிக்கப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று நீயா நானா ! என்ன தான் இந்நிகழ்ச்சியையும் கோபியையும் இணையத்தில் திட்டினாலும்  நிறைய பேர் நிகழ்ச்சி பார்க்கின்றனர் என்பது நிதர்சனம் 

சரி விஷயத்துக்கு வருவோம் 

நீயா நானாவில் பங்கு பெற வேண்டுமெனில் உங்களின் அரை நாளை நீங்கள் இதற்கு செலவழிக்கணும் என முன்பே இந்த பதிவில் கூறியிருந்தோம். 


ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கு கொள்வது எதற்காக? நம் முகம் டிவியில் தெரியணும் என்கிற எண்ணம். மேலும் நமக்கு தெரிந்த எல்லோருக்கும் நாம் பேசியது தெரிந்தால் அதில் ஒரு மகிழ்ச்சி. ஒவ்வொரு மனிதருக்கும் நண்பர்கள், சொந்தக்காரர்கள் என இருநூறு பேரை தெரியும் என்றால் அனைவருக்கும் போன் செய்து சொல்ல முடியுமா? அல்லது மெசேஜ் தான் அனுப்ப முடியுமா? 

நாம் பேசி விட்டு வரும் நிகழ்ச்சி என்றைக்கு ஒளி பரப்பாகிறது என்ற தகவலை நீயா நானா அணி சொல்வது இல்லை. நீங்கள் பங்கேற்க உங்களை தொலை பேசியில் அழைத்த நபரை தொடர்ந்து விடாமல் அழைத்து கேட்டால், ஒருவேளை நீங்கள் பங்கு பெற்ற நிகழ்ச்சி என்று வரும் என சொன்னாலும் சொல்லலாம். 


இதை விட கொடுமை : இப்படி அரை நாள் செலவழித்து நீங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில், பேசுகிற உங்கள் பேரை அவர்கள் போடுவதே இல்லை ! 

ஒவ்வொரு டிவியிலும் ஒவ்வொரு டாக் ஷோ ஒளி பரப்பாகிறது. சன் டிவியில்  அரட்டை அரங்கம், ஜெயாவில் விசுவின் மக்கள் அரங்கம், ராஜில் அகட விகடம் என பல்வேறு டாக் ஷோக்கள் வருகின்றன. அவை அனைத்திலும் பேசுபவர் பெயரை போடவே செய்கிறார்கள். ஆனால் நீயா நானா மட்டும் பேச்சாளர் பெயரை போடுவதே இல்லை. 


இதற்கு என்ன காரணம் சொல்ல நினைக்கிறது நீயா நானா அணி? 


"இது ஒரு ரியாலிட்டி ஷோ; பேசுபவர் பெயர் போட்டால் பிரச்சனை" என்றா? எனில் அந்த வாதத்தை ஏற்க முடியாது. எப்போது ஒருவர் டிவியில் தன் முழு உருவம் காட்டுகிறாரோ அப்போதே அவர் பற்றிய முழு ஐடன்டிட்டி தெரிய வந்து விடுகிறது. எனவே பெயர் போடாவிட்டால், பேசியது நான் அல்ல என அவர் தப்பிக்க முடியாது 

எனக்கு தெரிந்த வரை இதற்கு நிஜமான காரணம், நீயா நானா அணி இதனை தனி வேலையாக எடுத்து செய்ய விரும்ப வில்லை என்பதே. ஏற்கனவே இருக்கும் பல வேலையில், பெயர்களை குறித்து வைத்து கொண்டு பேசுவோருக்கு நேரே பெயர் போட, சோம்பேறித்தனம் ..அது தான் நிஜ காரணம் ! 

ஆனால் அரட்டை அரங்கம், அகட விகடம் முதலிய ஆவேரேஜ் நிகழ்ச்சிகளில் இது முடிகிறது என்றால் தமிழின் நம்பர் ஒன் டாக் ஷோ என்று சொல்லி கொள்ளும் நீயா நானா இதனை செய்ய தவறுவது ஏன்? 

இதுவரை இருமுறை பேசியபோதும் நிகழ்ச்சி நடத்துவோரிடம் இந்த விஷயத்தை நான் எழுப்பியே வந்தேன். அப்போதெல்லாம் அவர்கள் " செய்றோம் சார். இது பத்தி பேசிக்கிட்டு இருக்கோம் " என்றார்களே ஒழிய, மறுக்கவே இல்லை. 

இந்த நிகழ்ச்சியில் பேசுவோருக்கு எந்த வெகுமதியும் கிடையாது ! வெற்றி பெற்றோர் என இருவருக்கு மட்டும்  பரிசு கொடுக்கபடுவதாக சொல்கிறார்கள். நிகழ்ச்சி அன்று அந்த பரிசு தரப்படுவது இல்லை. அதன் பின் பரிசு சென்று சேர்கிறது எனில் மகிழ்ச்சியே. ஆனால் நிகழ்ச்சியில் பேசும் மற்ற பேச்சாளர்களுக்கு பணம் அல்லது வேறு எந்த பரிசும் இல்லை. உணவு கூட வெகு அரிதாக சாப்பாட்டு நேரம் என்றால் மட்டுமே ஏற்பாடு செய்வார்கள். பெரும்பாலும் இல்லை. 

கடைசியில் பரிசு வழங்கும் போது கூட கோபி " ரெண்டாவது ரோவில் சிகப்பு சட்டை போட்டவருக்கு பரிசு" "முதல் ரோவில் ஜீன்ஸ் போட்ட பெண்ணுக்கு பரிசு" என்கிறாரே ஒழிய அவர்கள் பெயர் சொல்வதே இல்லை. 

ஒவ்வொரு மனிதனும் மிக அதிகம் விரும்பும் வார்த்தை அவரவர் பெயர்தான் என்பது சுய முன்னேற்ற நூல்களை எழுதிய கோபிக்கு தெரியவா இல்லை?என்ன கொடுமை சார் இது !


நீயா நானா நிகழ்ச்சியை பலரும் பார்க்க காரணம் அதில் பேசும் பல வித மக்களின் பேச்சு மற்றும் அனுபவம் தான். ஆனால் அதற்கு உரிய மரியாதையை , அவர்கள் பெயர் போட்டு செலுத்த நீயா நானா தவறுவது என்ன விதத்தில் நியாயம்?  

சமூக அவலங்களை தட்டி கேட்கும் நீயா நானா, தனது தவறை முதலில் திருத்தி கொள்ளட்டும் !


############

தமிழ் பேப்பர் ஜூலை 14, 2012 இதழில் வெளியானது  !

46 comments:

  1. Anonymous7:42:00 AM

    பூனைக்கு மணி கட்டியதற்கு நன்றி. உங்களை நீயா நானா நிகழ்ச்சிக்கு மீண்டும் அழைப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...

    ReplyDelete
  2. //நீயா நானா நிகழ்ச்சியை பலரும் பார்க்க காரணம் அதில் பேசும் பல வித மக்களின் பேச்சு மற்றும் அனுபவம் தான். ஆனால் அதற்கு உரிய மரியாதையை , அவர்கள் பெயர் போட்டு செலுத்த நீயா நானா தவறுவது என்ன விதத்தில் நியாயம்?
    சமூக அவலங்களை தட்டி கேட்கும் நீயா நானா, தனது தவறை முதலில் திருத்தி கொள்ளட்டும் !//
    சரியான நியாயமான கேள்வி.உண்மையில் நல்ல நோக்கத்துடன்தான் இந்த நிகழ்ச்சி நடத்தப் படுகிறதா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
    நீயா நானா நிகழ்ச்சியை நான் பார்க்க விரும்புவதில்லை. அதற்கு வேறொரு காரணம் உண்டு.

    ReplyDelete
  3. சார்,
    நான் நீயா நானா பார்க்கிறதை நிறுத்தி ஆறு மாசம் ஆச்சு...:) வீட்டுல சிரிப்பொலி, ஆதித்யா சேனல் மட்டுமே ஓடும், இல்லாட்டி ஜெயா மாக்ஸ்....
    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  4. சார்... சாட்டையடி.. பதிவு நச்...

    தொடருங்கள்... பகிர்வுக்கு நன்றி... (த.ம. 8)

    ReplyDelete
  5. இதில் அரட்டை அரங்கம் போன்ற ஷோ போல பெயர் போதுவது கடினம் தான். ஏனெனில், இதில் தொடர்ந்து ஒரு நபர் இத்தனை நேரம் பேசுவார் என்பது இல்லை. ஒரே நாளில் மொத்தமாக நான்கு-ஐந்து episode-களை எடுப்பதால் நிகழ்ச்சியை நடத்தும் கோபி-க்கு அனைவரின் பெயரும் நினைவில் நிறுத்திக் கொள்ள முடிவதில்லை என்று நினைக்கிறேன்.
    அதே நேரம், நீங்கள் சொல்வது போல் மூன்றாம் ரோ நான்காவது நபர் என்று குறிப்பிடுவது தவறு தான். குறைந்த பட்சம் பரிசு பெறுபவர்கள் பெயரையாவது அறிவிக்க வேண்டும்.

    ReplyDelete
  6. gud ...punch to neeya naana .....

    ReplyDelete
  7. சீனி:

    //தொடர்ந்து ஒரு நபர் இத்தனை நேரம் பேசுவார் என்பது இல்லை. //

    இது உண்மை தான். ஆனால் பல டாக் ஷோவிலும் வருவோரில் சிலர் பேசுவது மிக குறைவு. ஸ்டேஜ் பியரா என்று தெரியவில்லை மிக குறைவாய் பேசுவார்கள் . ஆனால் அவர்கள் தலை தெரிந்தவுடன் பெயர் போட்டு விடுவார்கள்.

    //ஒரே நாளில் மொத்தமாக நான்கு-ஐந்து episode-களை எடுப்பதால்//

    ஒரு நாளைக்கு மூன்று ஷோ எடுக்கிறார்கள். கோபியால் எல்லார் பெயரையும் நினைவு வச்சிக்க முடியாது. ஆனால் பரிசு தருவதை பிரேக்கில் இயக்குனர் ஆண்டனியுடன் பேசி தான் முடிவெடுக்கிறார்கள். அப்போது அந்த நபர் பெயர் என்ன என ஒரு அசிஸ்டன்ட் அனுப்பி கேட்கலாம்

    பேசுவோர் அனைவர் குறித்த விபரமும் அவர்களிடம் உண்டு. பல முறை நம் பெயர் சொல்லி அழைத்து தான் போன் பேசுகின்றனர். ஷூட்டிங்கின் போதும் நம்மை குறித்த பல தகவல்கள் வாங்குகின்றனர். கொஞ்சம் முயன்றால் அவர்கள் நிச்சயம் பெயர் போட முடியும்.

    ReplyDelete
  8. சமூக அவலங்களை தட்டி கேட்கும் நீயா நானா, தனது தவறை முதலில் திருத்தி கொள்ளட்டும் !

    repeat

    ReplyDelete
  9. vidunga boss, avanga enna theriyaamala intha thappa seiraanga!!

    ReplyDelete
  10. இதை நான் பார்க்கிரதேயில்லை :)

    ReplyDelete
  11. இந்த நிகழ்ச்சி பாக்கறதை நான் நிறுத்தி பல நாளாச்சு. சரியான விஷயத்தை சரியான முறைல சுட்டிக் காட்டியிருக்கீங்க. இனியேனும் பெயர்கள் அறிவிக்கப்பட்டால் மகிழ்ச்சி.

    ReplyDelete
  12. நிகழ்ச்சியை நான் ரெகுலராகப் பார்ப்பதில்லை. கவனித்த வரையில் நீங்கள் சொல்லியிருப்பது சரிதான்.

    /ஒவ்வொரு மனிதனும் மிக அதிகம் விரும்பும் வார்த்தை அவரவர் பெயர்தான் /

    உண்மைதான். இந்தக் கருத்தை முன் வைத்து சமீபத்தில் ஒரு கதை எழுதினேன்(இன்னும் பகிரவில்லை).

    உங்கள் பதிவு நிகழ்ச்சியில் மாற்றங்கள் கொண்டு வரட்டும்!

    ReplyDelete
  13. நீயா நானா நிகழ்ச்சியை நான் பார்ப்பதில்லை. இரண்டு காரணங்கள்! ஒன்று ஒன்பது மணிக்குத் தூங்கி விடும் பழக்கம்! இரண்டாவது எந்த ஒரு நிகழ்ச்சியையுமே தொடர்ந்து பார்க்கும் பொறுமை இல்லாதது. ஆனாலும் நீங்கள் சொல்லியிருப்பது எல்லாமே மிக மிக நியாயமான விஷயங்கள். சோம்பேறித்தனம் என்று சொல்வதை விட அலட்சியம் என்றே சொல்லலாமோ....!

    ReplyDelete
  14. ஹா ஹா ஹா ஹா இனி அழைப்பு வந்தாலும் நான் போகமாட்டேன் கொய்யால....

    ReplyDelete
  15. balhanuman said...

    உங்களை நீயா நானா நிகழ்ச்சிக்கு மீண்டும் அழைப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...//

    அடேங்கப்பா. இந்த கோணத்தில் நான் யோசிக்கவே இல்லை பாலஹனுமான் சார்

    ReplyDelete
  16. T.N.MURALIDHARAN said...

    உண்மையில் நல்ல நோக்கத்துடன்தான் இந்த நிகழ்ச்சி நடத்தப் படுகிறதா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.//

    *****

    இது நமது உணர்வுகளை spontaneous ஆக வெளிவர வைக்கும் நிகழ்ச்சி என்று தான் நினைக்கிறேன். அதுதான் இந்த நிகழ்ச்சி வெற்றிக்கு காரணம் என கருதப்படுகிறது

    ReplyDelete
  17. ராஜ்: சிரிப்பு காட்சிகள் உள்ள சேனல்கள் பார்ப்பது மிக நல்லது. குறிப்பாய் இரவு தூங்கும் முன். நாங்களும் பார்ப்போம்

    ReplyDelete
  18. தனபாலன் சார்: தொடர் ஆதரவுக்கு நன்றி

    ReplyDelete
  19. பால கணேசன்: கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  20. சரவணன்: நன்றி

    ReplyDelete
  21. ஷர்புதீன்: நிச்சயம் இந்த பதிவின் லிங்கை அவர்களுக்கு அனுப்பும் எண்ணம். அப்போதாவது பேசுவோர் பெயர் போடுவது குறித்து பரிசீலிக்கிறார்களா என பார்ப்போம்

    ReplyDelete
  22. பாலகணேஷ்: நன்றி சார். நம் கருத்தை பரிசீலிப்பார்கள் என நம்புவோம்

    ReplyDelete
  23. நன்றி ராமலட்சுமி மேடம்

    ReplyDelete
  24. ஸ்ரீராம். said...


    சோம்பேறித்தனம் என்று சொல்வதை விட அலட்சியம் என்றே சொல்லலாமோ....!

    உண்மை தான் ஸ்ரீராம்

    ReplyDelete
  25. மனோ: கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  26. வரலாற்று சுவடுகள்: நேரம் உங்களுக்கு தடையாய் இருக்கும் என நினைக்கிறேன்

    ReplyDelete
  27. பெரும்பாலும் டி.வி. நிகழ்ச்சிகள் பார்ப்பதே இல்லை மோகன்.

    ஆனால் நீங்கள் சொன்ன விஷயங்கள் சரிதான். பெயரைச் சொல்லி பரிசளித்தால் என்ன குறைந்துவிடப்போகிறார்கள்....

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. இந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்தமானது. இணையத்தில் பல தளங்கள் தமிழ் தொலைக் காட்சி நிகழ்சிகளை நமக்கு எப்போது வேண்டுமனாலும் பார்க்கும் வசதியை கொடுத்திருக்கிறார்கள், அந்த லிங்கை உங்கள் நண்பர்களுக்கு வழங்கலாம், அல்லது வீட்டிற்க்கே அழைத்து போட்டு காண்பிக்கலாம். இங்கே பலர் சொல்வது போல இந்த நிகழ்ச்சி பார்ப்பதை நிறுத்திவிடும் அளவுக்கு மோசமில்லை. கிரிக்கெட், சீரியல்கள், சன் TV நிகழ்சிகள் பார்ப்பதைக் காட்டிலும் இந்த நிகழ்ச்சி எவ்வளவோ மேல். மேலும் நிகழ்ச்சியில் பேசுபவர் பெயர் அவ்வளவு முக்கியமானதாகப் படவில்லை, அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதே முக்கியம், சுவராஸ்யம். மேலும் வாரா வாரம் நூறு புது ஆட்கள், அத்தனை பெயரும் நமக்கெதுக்கு? [அப்படின்னு எனக்குத் தோணுது. ஹி...ஹி...ஹி...]

    ReplyDelete
  30. இப்போதெல்லாம் ஷோவின் தலைப்பை பொறுத்தே பார்ப்பதா, வேண்டாமா என முடிவு செய்கிறேன். சில மாதங்களுக்கு முன் இருந்த ஆர்வம் இப்போது இல்லை. அதிலும் சமீபத்தில், அண்ணன் தங்கை உறவு குறித்தான நிகழ்ச்சி ஆரம்பித்தபோதே புரிந்துவிட்டது, எப்படியும் யாரையாவது அழ விட்டு வேடிக்கை பார்ப்பார்கள் என்று. தலைப்பு தெரிந்தவுடன் சேனலை மாற்றிவிட்டேன் ;)

    நீங்க கேட்டிருக்கிறது, சரியான கேள்விதான்...என்ன பண்றாங்கன்னு பார்ப்போம்..

    ReplyDelete
  31. ஆங்காங்கே கோபி எனக்கு எரிச்சலை கிளப்பினாலும் என்னை பொறுத்தவரை 60 -70 % ஒரு நல்ல ஷோ என்றே கூறுவேன்..

    ReplyDelete
  32. சமூக அவலங்களை தட்டி கேட்கும் நீயா நானா, தனது தவறை முதலில் திருத்தி கொள்ளட்டும் ! சாட்டையடி..

    ReplyDelete
  33. "நீயா நானா நிகழ்ச்சியை பலரும் பார்க்க காரணம் அதில் பேசும் பல வித மக்களின் பேச்சு மற்றும் அனுபவம் தான். ஆனால் அதற்கு உரிய மரியாதையை , அவர்கள் பெயர் போட்டு செலுத்த நீயா நானா தவறுவது என்ன விதத்தில் நியாயம்? "
    சார்.. நீயா நானாவில் பங்கேற்ற என்னுடைய டீச்சர் ஒருவரின் வாயிலாக நான் அறிந்த ஒன்று .... "அவர்கள் பேசுபவரின் தனிப்பட்ட (பர்சனல்) விஷயங்களை வெளிகொணர்ந்து அதன் மூலமாக தங்களின் நிகழ்ச்சிக்கு வரவேற்பினை அதிகரிக்கிறார்கள், குடும்பங்களின் தனிப்பட்ட ரகசியங்கள் அம்பலபடுத்தபடுகின்றன பேசுபவரின் வாயிலாகவே; இதன் மூலமாக வருவாய் என்னவோ விஜய் டிவி கு தான்.. பேசிவிட்டு பின் பாதிகபடுவது நம் போன்ற நடுத்தர மக்கள் மட்டுமே....நீங்கள் உன்னிப்பாக கவனித்தால் ஒன்று தெரியவரும், யாரெல்லாம் தங்களுடைய பர்சனல் குடும்ப அனுபவத்தை பற்றி விவரிக்கிறார்களோ அவர்களுக்கு மைக் ரொம்ப நேரம் தரப்படும்"
    நீங்கள் சொன்னதுபோல... பேச்சாளர்களுக்கு ஒரு காபி டீ கூட தருவதில்லை இந்த பெரிய நிறுவனம் !!! இதையும் நான் அறிந்தது என்னுடைய டீச்சர் வாயிலாகவே!!!

    ReplyDelete
  34. தாஸ்:
    //அத்தனை பெயரும் நமக்கெதுக்கு? //

    பார்ப்போருக்கு தேவை இல்லாமல் இருக்கலாம். பேசும் நபர்களுக்கு அவரவர் பெயர் முக்கியமே

    ReplyDelete
  35. ரகு: நன்றி பார்க்கலாம்

    ReplyDelete
  36. ஹாரி பாட்டர்: உங்கள் கருத்தோடு நான் ஒத்து போகிறேன்

    ReplyDelete
  37. ரவி சேவியர்: நன்றி முதல் வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  38. சமீரா: நீங்கள் எழுதியதில் நிறைய விஷயம் உண்மையே ! அழுகிற மாதிரி, emotional-ஆன விஷயங்கள் பேச அதிகம் ஊக்குவிப்பார்கள் ! எல்லாம் TRP செய்யும் வேலை தான்

    ReplyDelete
  39. Anonymous5:55:00 PM

    நல்ல ஆதங்கம் மோகன்...ஆனால் தமிழில் உருப்படியான சில நிகழ்ச்சிகளுள் இதுவும் ஒன்று என்றே நினைக்கிறேன்...

    ReplyDelete
  40. நான் அதிகம் டிவி பார்ப்பதில்லை யென்றாலும் ரெகுலராக பார்ப்பது ஜெயாவின் தேன்கிண்ணமும் விஜயின் நீயா நானா --வும்தான். இதுவரை பேசுபவர்களின் பெயர் பற்றி நினைக்கவில்லை. கலந்துகொள்ளும் VIP -க்களின் பெயர்கள் தெரிவிக்கப்ப்டுகிறது.என்னைப் போன்று டிவியில்பார்ப்பவர்களுக்கு அதுவே போதுமானதாக உள்ளது.
    ஆனால் அதில் கலந்துகொண்டு பேசுபவர்கள் தங்களின் பெயரும் வெளியிடப்படவேண்டும் என்ற மரியாதையை எதிபார்ப்பது நியாயம்தான்.

    ReplyDelete
  41. நீயா நானாவிற்கு சரியான கேள்வி கேட்டுள்ளீர்கள்! திருந்துவார்கள் என்று தோணவில்லை!

    ReplyDelete
  42. தமிழ் கவிதைகள் மற்றும் உலகம் தோன்றியது முதல் இன்று வரை நடந்த வரலாற்று சுவடுகளை அறிந்திட நம்ப ப்ளாக் வாங்க http://tamilkavithais.blogspot.in/

    ReplyDelete
  43. neengal kurai, nirai kooruvathil irunthe therikirathu ithu nalla nikalchi. nalla nikalchikaluku eppavume vimarsanam irukum. avarkal peyar poodurathu illai enru therinthu thane nikalchiku pooreenga? piraku ean intha kolai veri?

    ReplyDelete
  44. நல்ல கருத்து. நீயா நானா டீம் ஏற்றுக் கொள்ளட்டும். செயல்படுத்தட்டும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  45. every sunday must watch the only programme neeya naana, if i like the topic intresting, watch fully, but now a days not intrested on that programme because of gopinath attitute

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...