வேளச்சேரியில் குருநானக் கல்லூரிக்கு அடுத்து ஐ.ஐ.டியின் பின்புற கேட் உள்ளது. இதற்கு அருகில் உள்ளது சுப்ரீம் பேக்கரி. இங்கு மாலை வேளையில் பல முறை ஸ்நாக்ஸ் சாப்பிட்டுள்ளேன். எப்போதும் மாலையில் மட்டும் கூட்டம் அம்மும்.
பேக்கரிக்கு வெளியில் பெயர் இல்லாமல் ரோடு சைடு கடை போல் உள்ளது இந்த சின்ன ஸ்நாக்ஸ் கடை. மேலே உள்ள போட்டோவில் கடை போர்டுக்கு கீழே இடது புறத்தில் இரண்டு விளக்கு எரிகிறது பாருங்கள் ! அதுதான் நான் சொல்லும் கடை !
இம்முறை கடைக்கு பெயரே இல்லையே என்று விசாரிக்க, அப்புறம் தான் சொன்னார்கள் " பேக்கரி காரர்கள் தான் இதையும் நடத்துகிறார்கள்" என்று.
பேக்கரிக்குள் பல வித பேக்கரி ஐட்டம் மற்றும் ஸ்நாக்ஸ் கிடைக்கிறது. இங்கு கூட அதிக கூட்டம் வருகிற மாதிரி தெரியலை. ஆனால் மாலை மட்டும் திறக்கும் இந்த ஸ்நாக்ஸ் கடைக்கு எங்கிருந்து தான் அவ்வளவு கூட்டம் வருமோ?
போண்டா, வாழைக்காய் பஜ்ஜி, சமோசா என அனைத்தும் சுட சுட தயாராகி, சூடு முழுக்க ஆறும் முன்பே காலியும் ஆகி விடுவதை அங்கு பத்து நிமிடம் நின்றாலே நீங்கள் கவனிக்கலாம்.
நான் இங்கு விரும்பி சாப்பிடுவது பஜ்ஜி மற்றும் போளி தான். எப்போதும் ஏதாவது 1 வகை பஜ்ஜி , தேங்காய் அல்லது பருப்பு போளி ஒன்று சாப்பிட்டு விட்டு கிளம்பிடுவேன்.
முக்கியமான விஷயம் விலை தான்: போண்டா, வடை உள்ளிட்ட கார உணவுகள் எல்லாமே ஒன்று ஐந்து ரூபாய் தான் ! பருப்பு அல்லது தேங்காய் போளி ஆறு ரூபாய் ! ஒரு காரம் ஒரு இனிப்பு 11 ரூபாய்க்குள் சாப்பிட்டு மாலை ஸ்நாக்சை முடித்து விடலாம் !
இங்கு சாப்பிடுவதை விட, வீட்டுக்கு பார்சல் வாங்கி போவது தான் அதிகமாக உள்ளது !
சில பேர் ஒரே ஒரு போண்டா அல்லது வேறு ஒரு காரம் மட்டும் சாப்பிட்டு விட்டு செல்கிறார்கள். ஐந்து ரூபாய்க்கு சுட சுட அருமையான போண்டா, செவ்வக வடிவ அழகிய கிண்ணத்தில் தேங்காய் சட்னியுடன் ஐந்து ரூபாய்க்கு தந்தால் யார் தான் வேண்டாம் என்பார்கள்?
இப்படியும் கூட புட்டு சாப்பிடலாம் !
உணவு குறித்த பதிவு என்பதாலும், முழுமையான சாப்பாட்டு கடை அறிமுகப்படுத்தாமல், ஸ்நாக்ஸ் கடை அறிமுகம் செய்ததாலும் அடிஷனல் ஆக இதை பகிர்கிறேன்.
புட்டு சாப்பிட பிடிக்குமா உங்களுக்கு? நான் சொல்வது குழாய் புட்டு அல்ல; வெள்ளையாய் உதிரி உதிரியாய் இருக்குமே.. வீட்டில் செய்வார்கள.. அந்த புட்டு. சர்க்கரை, நெய் எல்லாம் போட்டு இதை செய்வார்கள். ஆனாலும் கொஞ்சம் சாப்பிட்டதும் திகட்டிடும்; அதனால் தனியே புட்டை மட்டும் சாப்பிடுவது சற்று சிரமம். எங்கம்மா எனக்கு சொல்லி கொடுத்த இந்த வழியை கேட்டால், திகட்டுதுன்னு சொல்லாம புட்டை ஒரு பிடி பிடிப்பீங்க.
முதல் ரவுண்டு
இரண்டு கரண்டி புட்டு எடுத்து தட்டில் போட்டுக்குங்க. அப்புறம் இரண்டு கரண்டி சுட வைத்த பால் அது மேலே ஊத்திக்குங்க. நல்லா பால் சாதத்துக்கு பிசையிற மாதிரி பிசைங்க. இப்போ சாப்பிட்டு பாருங்க..பஞ்சாமிர்தம் மாதிரி சூப்பரா இருக்கும் !
நெக்ஸ்ட் ரவுண்டு
மறுபடி இரண்டு கரண்டி புட்டு. ஆனால் இம்முறை பால் இல்லை. நல்லெண்ணெய் சில ஸ்பூன் ஊத்திக்குங்க.
பக்கத்தில் மனைவி நின்னுகிட்டு " கருமம் ! கருமம் ! அதிலே நெய் வேற போட்டிருக்கு ஏன் எண்ணை ஊத்தி சாப்பிடுறீங்க?" ன்னு கேள்வி கேப்பாங்க. மாமியார் கற்று தந்த பழக்கத்தை கேள்வி கேட்டா தானே மாட்டு பொண்ணுக்கு அழகு ! அதெல்லாம் கண்டுக்காதீங்க. உங்க காரியத்தில் மட்டுமே கண்ணா இருக்கணும்.
புட்டின் மேல் நல்லெண்ணெய் நிறையவும் ஊத்தாம, கொஞ்சமாவும் ஊத்தாம சரியா ஊத்தணும். பிசையும் போது வெள்ளை கலர் சற்று மாறி எண்ணையின் நிறம் லேசா வரும். இப்ப, நம்ம புட் தயார் ஆயிடுச்சு. மறுபடி ஆரம்பிங்க வேட்டையை !
அப்புறம்?
அப்புறமென்ன.. மறுபடி பால் போட்டு ஒரு ரவுண்டு. அப்புறம் எண்ணை ஊற்றி இன்னொரு ரவுண்டு.. இப்படியே உங்களால எவ்ளோ முடியுமோ அவ்ளோ வெளுத்து கட்டுங்க பாஸ் !
மனைவி, குழந்தை எல்லாம் இந்த மெதட்களை எவ்வளவோ கிண்டல் பண்ணாலும் நான் இப்படி தான் பல வருஷமா கண்டினியூ பண்ணிக்கிட்டு இருக்கேன்.
பின்னே? வெக்கம், மானம்லாம் பாத்தா நாக்கோட பொழப்பு நடக்குமா ? சொல்லுங்க !
****
டிஸ்கி: மக்கள் தொலை காட்சியின் காலை வணக்கம் பகுதியில் "நான் படித்த புத்தகம் " என்கிற பகுதியில் பேசியுள்ளேன். தமிழின் சில சிறந்த புத்தகங்கள் குறித்து வருகிற செவ்வாய் கிழமை துவங்கி ஒவ்வொரு நாளும் காலை சரியாக 8.45 க்கு பத்து நிமிடம் இது ஒளிபரப்பாகும். பார்க்க முயலுங்கள் நன்றி !
*********
உங்கள் ஆதரவால் இது தொடர்ந்து ஏழாவது வாரம். ...ஓடும் வரை ஓடும் ! நிரந்தரமல்ல என அறிவேன். பிற்காலத்தில் பார்த்து மகிழ மட்டுமே இங்கு பதிந்து வைக்கிறேன்
இதற்கு காரணமான அனைத்து நண்பர்களுக்கும் நெகிழ்வான நன்றி !

இன்னொரு விஷயம்: நீங்கள் என்னென்ன சாப்பிட்டீர்கள் என அவர்கள் கணக்கு வைத்து கொள்வதில்லை: நீங்களாக சொல்லும் கணக்கு தான். போலவே இருக்கும் கூட்டத்தில் சாப்பிட்டு விட்டு காசு தாராமல் போனால் கூட கேட்பார் இல்லை ( அனுபவமா என கேட்காதீர்கள் ! சாப்பாடு விஷயத்தில் ஏமாற்ற கூடாது என்பது நம்ம பாலிசி)
வேளச்சேரி பக்கம் மாலை நேரம் வந்தால் இந்த கடையில் ஒரு முறை நிச்சயம் சாப்பிட முயலுங்கள் !
***********வேளச்சேரி பக்கம் மாலை நேரம் வந்தால் இந்த கடையில் ஒரு முறை நிச்சயம் சாப்பிட முயலுங்கள் !
இப்படியும் கூட புட்டு சாப்பிடலாம் !
உணவு குறித்த பதிவு என்பதாலும், முழுமையான சாப்பாட்டு கடை அறிமுகப்படுத்தாமல், ஸ்நாக்ஸ் கடை அறிமுகம் செய்ததாலும் அடிஷனல் ஆக இதை பகிர்கிறேன்.
புட்டு சாப்பிட பிடிக்குமா உங்களுக்கு? நான் சொல்வது குழாய் புட்டு அல்ல; வெள்ளையாய் உதிரி உதிரியாய் இருக்குமே.. வீட்டில் செய்வார்கள.. அந்த புட்டு. சர்க்கரை, நெய் எல்லாம் போட்டு இதை செய்வார்கள். ஆனாலும் கொஞ்சம் சாப்பிட்டதும் திகட்டிடும்; அதனால் தனியே புட்டை மட்டும் சாப்பிடுவது சற்று சிரமம். எங்கம்மா எனக்கு சொல்லி கொடுத்த இந்த வழியை கேட்டால், திகட்டுதுன்னு சொல்லாம புட்டை ஒரு பிடி பிடிப்பீங்க.
முதல் ரவுண்டு
இரண்டு கரண்டி புட்டு எடுத்து தட்டில் போட்டுக்குங்க. அப்புறம் இரண்டு கரண்டி சுட வைத்த பால் அது மேலே ஊத்திக்குங்க. நல்லா பால் சாதத்துக்கு பிசையிற மாதிரி பிசைங்க. இப்போ சாப்பிட்டு பாருங்க..பஞ்சாமிர்தம் மாதிரி சூப்பரா இருக்கும் !
நெக்ஸ்ட் ரவுண்டு
மறுபடி இரண்டு கரண்டி புட்டு. ஆனால் இம்முறை பால் இல்லை. நல்லெண்ணெய் சில ஸ்பூன் ஊத்திக்குங்க.
பக்கத்தில் மனைவி நின்னுகிட்டு " கருமம் ! கருமம் ! அதிலே நெய் வேற போட்டிருக்கு ஏன் எண்ணை ஊத்தி சாப்பிடுறீங்க?" ன்னு கேள்வி கேப்பாங்க. மாமியார் கற்று தந்த பழக்கத்தை கேள்வி கேட்டா தானே மாட்டு பொண்ணுக்கு அழகு ! அதெல்லாம் கண்டுக்காதீங்க. உங்க காரியத்தில் மட்டுமே கண்ணா இருக்கணும்.
புட்டின் மேல் நல்லெண்ணெய் நிறையவும் ஊத்தாம, கொஞ்சமாவும் ஊத்தாம சரியா ஊத்தணும். பிசையும் போது வெள்ளை கலர் சற்று மாறி எண்ணையின் நிறம் லேசா வரும். இப்ப, நம்ம புட் தயார் ஆயிடுச்சு. மறுபடி ஆரம்பிங்க வேட்டையை !
அப்புறம்?
அப்புறமென்ன.. மறுபடி பால் போட்டு ஒரு ரவுண்டு. அப்புறம் எண்ணை ஊற்றி இன்னொரு ரவுண்டு.. இப்படியே உங்களால எவ்ளோ முடியுமோ அவ்ளோ வெளுத்து கட்டுங்க பாஸ் !
மனைவி, குழந்தை எல்லாம் இந்த மெதட்களை எவ்வளவோ கிண்டல் பண்ணாலும் நான் இப்படி தான் பல வருஷமா கண்டினியூ பண்ணிக்கிட்டு இருக்கேன்.
பின்னே? வெக்கம், மானம்லாம் பாத்தா நாக்கோட பொழப்பு நடக்குமா ? சொல்லுங்க !
****
டிஸ்கி: மக்கள் தொலை காட்சியின் காலை வணக்கம் பகுதியில் "நான் படித்த புத்தகம் " என்கிற பகுதியில் பேசியுள்ளேன். தமிழின் சில சிறந்த புத்தகங்கள் குறித்து வருகிற செவ்வாய் கிழமை துவங்கி ஒவ்வொரு நாளும் காலை சரியாக 8.45 க்கு பத்து நிமிடம் இது ஒளிபரப்பாகும். பார்க்க முயலுங்கள் நன்றி !
*********
உங்கள் ஆதரவால் இது தொடர்ந்து ஏழாவது வாரம். ...ஓடும் வரை ஓடும் ! நிரந்தரமல்ல என அறிவேன். பிற்காலத்தில் பார்த்து மகிழ மட்டுமே இங்கு பதிந்து வைக்கிறேன்
இதற்கு காரணமான அனைத்து நண்பர்களுக்கும் நெகிழ்வான நன்றி !
புதுப்பிக்கப்பட்ட நாள் : 2012-07-29
வலைப்பதிவுகளின் முன்னணி பட்டியில் ஒவ்வொரு ஞாயிறும் வெளியிடப்படும். கடந்த ஏழு நாட்களில் வலைப்பதிவுகள் வாசகர்களிடம் பெற்ற பார்வைகளை (ஹிட்ஸ்) முதன்மையாக கொண்டு இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது. மறுமொழிகள், வாசகர் பரிந்துரை வாக்குகள் போன்றவையும் ஒரு காரணியாக இருக்கும்
மிக மிக அழகாக ஒரு பதிவு.... எழுத்தின் தரம் மிக அருமையாக இருக்கிறது...
ReplyDeleteபகுதி / முழு நேரமாக பதிவு எழுத ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புகொள்க..
95 66 66 12 15
95 66 66 12 14
cpedenews@gmail.com
மோகன்,
ReplyDeleteஸ்னாக்ஸ் கடை மேட்டர்ல ஒன்னும் ஸ்பெஷலே இல்லையே.
புட்டுக்கு குருமா போட்டு நானெல்லாம் உப்புமா போல சாப்பிடுவேன்,திகட்டலாம் செய்யாது, இனிப்பு புட்டு சொல்லுறிங்க நீங்க, உப்பு ,தேங்காதுறுவிப்போட்டு செய்றப்புட்டு சட்னி, குருமா என சாப்பிட ஏற்றது.
தாம்பரம் முனிசிபல் ஆபீஸ் ரோட் பக்கம் வாங்க,ரோஜா ஸ்டோர் ஜங்க்ஷன். மிளகாபச்சி 2,வடை-1,சமோசா-1 ரூ , பக்கோடா ஒரு பிளேட்-5 ரூ என சல்லீசாக தள்ளுவண்டியில சுட சுட போட்டு விற்பாங்க. பக்கத்திலே மசலா பூரி ,பானிப்பூரி,சிக்கன் பகோட,இன்ன பிற வண்டிகள்னு வரிசையா நிக்கும்.
எல்லாம் சின்ன சின்ன தா தான் இருக்கும்,நல்லா இருக்கும். தையிலையில பார்சல் கட்டி பொட்டலமா கொடுப்பாங்க, நிறைய பேர் பார்சல் தான்.
நைட்-8-9 க்குள்ள காலியாகிடும்னா பார்த்துக்கோங்க.
அங்கே போய் கொஞ்ச நாளாச்சு போகணும் மீண்டும்.
வருகிற செவ்வாய் கிழமை அன்று பார்க்கிறேன்.
ReplyDeleteதமிழ்மண முன்னணிக்கு வாழ்த்துக்கள்.
நன்றி.
(த.ம. 4)
புட்டுக்குப் பல காம்பினேஷன்கள் உண்டு எங்கள் வீட்டில்:
ReplyDeleteபுட்டு-சீனி-பால்-பழம்
புட்டு-நெய்-பழம்
புட்டு-மட்டன்/சிக்கன் குழம்பு
புட்டு-தாளிச்சா/சாம்பார்
புட்டு-சுண்டவைத்த மீந்த குழம்புகள்
புட்டு-மீன் குழம்பு-ரசம்
புட்டு-சுண்டல் குழம்பு
ஆனாலும், நல்லெண்னெய்... இப்போத்தான் கேள்விப்படுறேன். கொஞ்சம் odd ஆகத்தான் இருக்கு... வெறும் நல்லெண்ணெய் மட்டுமா? பழம், சீனி எதுவும் கிடையாதா?
கேழ்வரகு மாவு புட்டுக்குத்தான் நல்லெண்ணேய் சரி வரும். என்னுடைய ஃபேவரிட்டும் கூட:-)
ReplyDeleteமற்றபடி புட்டுன்னா நம்ம வீட்டுலே கோபாலுக்கு புட்டு நெய் சக்கரை ஒரு துளி ஏலக்காய் பவுடர்.
எனக்கு நேந்திரம் பழம் கிடைச்சால் பழத்தை மைக்ரோவேவில் அஞ்சு நிமிசம் சுட்டெடுத்து புட்டுடன் கலந்து பிசைந்தால் போதும்.
பழம் இல்லைன்னா..... கோபாலை ஃபாலோ செஞ்சுருவேன்.
குழாய்ப்புட்டுன்னா..... வெறும் புட்டு மட்டும் சுடச்சுடத் தின்னுவேன். வெந்த தேங்காய்ப்பூவும் மாவுமா அது ஒரு தனி ருசி.
விஜய நகர்ல (towards Taramani), ராயல் ஷாப்பி சூப்பர் மார்க்கெட் பக்கத்துல, உடுப்பி போளி ஸ்டால்ன்னு ஒண்ணு இருக்கு. காலை டிபன், மதியம் வெரைட்டி ரைஸ், மாலை ஸ்நாக்ஸ், இரவு டிபன்னு எல்லாமே கிடைக்கும். இங்கு கிடைக்கும் போளி சாப்ட்டு பாருங்க. சிம்ப்ளி சூப்பர்ப்! தே./ப.போளி 7 ரூபாய்.
ReplyDeleteமக்கள் தொலைகாட்சி இங்கே தெரிவதில்லை. ரெகார்ட் செய்தும் பிறகு பகிர்ந்திடுவீர்கள் என நம்புகிறேன்.
ReplyDeleteபுட்டு அனுபவம் நல்லாருக்கு:)! தொடர்ந்தும் பின்னூட்டங்களில் பல டிப்ஸ்.
///வெக்கம், மானம்லாம் பாத்தா நாக்கோட பொழப்பு நடக்குமா ?///
ReplyDeleteசரியா சொன்னீங்க!
வாழ்த்துக்கள் பாஸ் தொடர்ந்து ஏழாவது வாரமாக முன்னனியில் இருப்பதற்கு! தற்போது அந்த இடத்திற்கு தகுதியானவர் தாங்கள் ஒருவர் தான்! தொடரட்டும் வேட்டை :)
நம்நாட்டிலும் புட்டு, இடியப்பம் பிரபலம்.
ReplyDeleteஇப்பவே போண்டா பஜ்ஜி சாப்பிடனும் போல இருக்கே....!
ReplyDeleteசென்னை அடுத்தமுறை வருகையில் உங்க்ள் பதிவுகளைப்
ReplyDeleteபடித்துவிட்டுத்தான் வரவேண்டும் என நினைக்கிறேன்
பயன்படும் அறிமுகம் பகிர்வுக்கு நன்றி
This comment has been removed by the author.
ReplyDeletetha.ma 12
ReplyDeletetha.ma 12
ReplyDeleteசிறப்பான உணவக அறிமுகம்! புட்டு சாப்பிட டிப்ஸ் என்று அள்ளி தந்தமைக்கு நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில் வாலி நாணி கூனியிருக்க வேண்டாமா? தினமணிக் கட்டுரை! அறிஞகளின் பொன்மொழிகள்!
http://thalirssb.blogspot.com.
ஹூம்....(பெருமூச்சுதான்!) பஜ்ஜி, போண்டா, போளி....! கலக்கறீங்க போங்க. அது போதாதுன்னு புட்டு விஷயத்தையும் புட்டுப் புட்டு வச்சுருக்கீங்க!
ReplyDeleteவட பழனி பக்கம் வெங்கடேஸ்வரா போளி கடை இருக்கே...அதுல நான் சாப்பிட்டு இருக்கேன்..நிறைய பக்கம் அந்த கடையோட கிளை இருக்குன்னு நினைக்கிறேன்..
ReplyDeleteபுட்டுக்கு எண்ணையா..?இதுவரைக்கும் கேள்வி பட்டதே இல்லியே...
///பல வருஷமா கண்டினியூ பண்ணிக்கிட்டு இருக்கேன்.///
ReplyDeleteஓஹோ ..உங்க அழகின் ரகசியம் இதுதானா...?
சூடான சுவையான பதிவு!!! புட்டு பத்தி புட்டு புட்டு வச்சிடீங்க சார். அருமையான பதிவு!!
ReplyDeleteநான் ரொம்ப புட்டு சாப்பிடமாட்டேன்.. கொஞ்சம் அளவு தான்... நெக்ஸ்ட் டைம் உங்க பால் மேட்டர் முயற்சி செய்யணும்!!!
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவவ்வால்: தாம்பரம் கடை பற்றிய அறிமுகத்துக்கு நன்றி, முயற்சிக்கிறேன்
ReplyDeleteநன்றி தனபாலன் சார். பாருங்கள்
ReplyDeleteஹுசைனம்மா & துளசி மேடம் : அட்டகாசம். என்னோட மேடமிடம் உங்கள் இருவரின் பின்னூட்டம் (காம்பிநேஷன்ஸ்) பற்றி சொல்லி உள்ளேன். அவசியம் படித்து பார்ப்பதாக சொன்னார்கள், நீங்கள் சொன்னவற்றில் சிலவாவது நாங்கள் முயற்சிப்போம், நன்றி !!
ReplyDeleteபதிவில் இவற்றை பகிர்வதில் நாம் எத்தனை விஷயம் கற்று கொள்ள முடிகிறது பாருங்கள் !
ரகு: உடுப்பி போளி ஸ்டால் நிச்சயம் சென்று பார்க்கிறேன்
ReplyDeleteராமலட்சுமி மேடம்: முயல்கிறேன். நிச்சயமாய் முடியுமா என தெரியலை பார்க்கலாம்
ReplyDeleteநன்றி வரலாற்று சுவடுகள் நண்பா; சற்று மிகைபடுதப்பட்டது என்றாலும் நீங்கள் சொல்வது மகிழ்வாக உள்ளது
ReplyDeleteமாதேவி அப்படிங்களா? நன்றி
ReplyDeleteமனோ: சென்னை வாங்க. சாப்பிட்டுடலாம்
ReplyDeleteரமணி சார்: மிக மகிழ்ச்சி நன்றி
ReplyDeleteநன்றி சுரேஷ் உங்கள் பதிவை வாசிக்கிறேன்
ReplyDeleteநன்றி ஸ்ரீராம் வொய் பெருமூச்சு? ஈசியா கிடைப்பவை தானே?
ReplyDeleteகோவை நேரம் said...
ReplyDelete///பல வருஷமா கண்டினியூ பண்ணிக்கிட்டு இருக்கேன்.///
ஓஹோ ..உங்க அழகின் ரகசியம் இதுதானா...?
********
கோவை நேரம்: நம்பளை இன்னும் நேரில் பாக்கலை இல்லை. அதான் இப்படி கேட்டுருக்கீங்க :)
சமீரா: உங்கள் போன்றோரின் மனம் திறந்த பாராட்டு தான் எழுத வைக்கிறது மிக மகிழ்ச்சி நன்றி
ReplyDeleteபதிவு அருமை மோகன் குமார். ரசித்து எழுதியிருக்கிறீர்கள். பஜ்ஜி போண்டா போன்ற சிற்றுண்டிகளை நான் அதிகம் சாப்பிடுவதில்லை. புட்டு நல்லெண்ணெயுடனா? வித்தியாசமாக இருக்கிறது. நான் பருப்பு சாதத்துக்கு நல்லெண்ணெய் இல்லாமல் சாப்பிடுவதே கிடையாது. சாம்பாருக்கும் நல்லெண்ணெயும் உரித்த சின்ன வெங்காயமும் அருமையாக இருக்கும். சின்ன வெங்காயம் சாப்பிடுவதே இந்தியா வரும் போது மட்டும்தான் என்றாகி விட்டது.
ReplyDeleteபதிவு நன்று.
ReplyDeleteமக்கள் தொலைகாட்சி நிகழ்ச்சியை வீட்டில் உள்ளவர்களையும் நண்பர்களையும் பார்க்கச் சொல்கிறேன். வாழ்த்துகள்!
பெரிய ரெஸ்டாரெண்ட் மட்டுமல்ல சிறிய ச்னாக்ச் விற்பனையாகும் பேக்கரிகளைக்கூட அறிமுகப்படுத்துவது அருமை.சென்னை வாசிகளுக்கு உதவிகரமாக இருக்க்கும்.
ReplyDeleteஅமரபாரதி said
ReplyDeleteநான் பருப்பு சாதத்துக்கு நல்லெண்ணெய் இல்லாமல் சாப்பிடுவதே கிடையாது. சாம்பாருக்கும் நல்லெண்ணெயும் உரித்த சின்ன வெங்காயமும் அருமையாக இருக்கும்.
வித்தியாச காம்பினேஷன்; முயற்சி பண்ணலாம் போல ; நீங்கள் வெளிநாட்டில் இருக்கீங்களா? ஈரோடில் இருக்கீங்க என நினைதேன்
அமைதி அப்பா: நன்றி நீங்கள் டியூட்டி சென்று விடுவீர்கள் என நினைக்கிறேன் :)
ReplyDeleteஸாதிகா: நன்றி ; சின்ன கடை பற்றி எழுத சற்று யோசனையாய் இருந்தது. இப்படி நிறைய பேர் சொல்லும்போது எழுத தோன்றுகிறது நன்றி
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமோகன் குமார், 14 வருடங்களாக அமெரிக்க வாசம்.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteநல்ல பகிர்வு... போளி, பஜ்ஜி.... ஏன் இந்த கொல வெறி...
ReplyDeleteIn dhandeeshwaram, opp to reliance super market, if you go towards the end of the road, you can see a small shop ( left hand side ) where they sell hot snacks ( vadai,bajji,bonda etc ) with bholi... I guess the name is "maamy mess"... Evening 4-6.. Give a try.. ( less than 1 km from your office :) )
ReplyDelete