சென்னை எம். சி. சி. கல்லூரியில் தமிழ் துறை சார்பில் நடந்த "வனம்" கவிதை பட்டறை மூலம் உருவான கவிஞர்களில் ஒருவர் கல்பனா. கல்லூரியில் படிக்கும் போதே " பார்வையிலிருந்து சொல்லுக்கு" என்கிற அவரின் இந்த கவிதை தொகுப்பு வெளியாகி விட்டது. அவரின் இந்த புத்தகம் குறித்த பார்வையே இக்கட்டுரை .
இந்த புத்தகம் எழுதிய கவிஞரை சில முறை எம்.சி.சி கல்லூரியில் வனம் கவியரங்கில் சந்தித்துள்ளேன். முதல் முறை அவரை சந்திக்கும் முன்னே அவரின் இந்த கவிதை தொகுப்பை வாசித்திருக்க, அவரை பார்த்ததும் அவரது கவிதை வரிகளில் ஒன்றை நினைவு கூர்ந்தேன். அந்த வரிகள் " என் தலையணையை யாரேனும் எடுத்தால் கோபம் வருகிறது !" பெண்களுக்கே உண்டான possesiveness இந்த வரிகளில் எப்படி வெளிப்படுகிறது பாருங்கள் !
"மேய்ந்து திரும்பி வரும் மாடு " என்பது ஒரு கவிதை தலைப்பு. மேய்ச்சலுக்கு போகும் மாடு மாலை திரும்ப நேரமானால் கோபம் வருவதை பற்றி பேசுகிறது. உள்ளே சொல்லப்படுவது கல்லூரி செல்லும் பெண் வீடு திரும்ப தாமதமானால் வீட்டார் கோபிப்பதை தான் !
சென்னை வாழ்க்கை பற்றி " எறும்பை கூட மிதிக்க விரும்பாதவள் நான். ரயிலில் பலரை மிதித்தால் தான் இறங்கு முடிகிறது " என சொல்லி செல்கிறார்
கனவில் வருவாய்
எண்ணி படுத்தேன்
தூக்கமே வரவில்லை
இத்தகைய மீரா டைப் காதல் கவிதைகள் ஆங்காங்கு காண முடிகிறது
இன்னொரு கவிதையை பாருங்கள்
இருபுறமும் வழி நெடுக சாக்கடை
எப்புலனுக்கும் இசைவின்றி
முகம் சுளிக்க வேண்டும்
திறந்தவை நம்மை
கவனமாய் இருக்க செய்யும்
மூடிய சாக்கடைகளே ஆபத்தானவை
மூடியது போலுள்ளவை
இங்கு சாக்கடை ஒரு உவமையாக தான் பயன்படுத்த பட்டுள்ளது என்பதை வாசிக்கிற எவராலும் உணர முடியும்.
பார்வையிலிருந்து சொல்லுக்கு எனும் தலைப்பு கவிதை ஒரு பெண் போனில் பேசுவதை குடும்பம் எப்படி உன்னிப்பாய் கவனிக்கிறது, யாரிடம் பேசினாய், என்ன பேசினாய் என கேள்வி கேட்கிறது என்பது பற்றி வலியுடன் பகிர்கிறது.
கல்லூரியில் ஆட்டோகிராப் வாங்கும் கடைசி தினம் குறித்த கவிதையில் கல்லூரி இறுதி நாளில் பலருக்கும் இருக்கும் உணர்வுகளை பதிவு செய்கிறார்.
காதல் கடிதம் தந்து "செருப்பு பிஞ்சிடும்" என வசவு வாங்கியவன், ஒரு நாள் தன் தவறு உணர்ந்து, உண்மையாய் மன்னிப்பு கேட்டு விட்டு பதிலுக்கு காத்திராமல் நகர்ந்து செல்லும் போது மதிப்பில் உயர்வதை எளிய வார்த்தைகளில் பதிவு செய்துள்ளார்.
தந்தை போல மதிக்கும் பேராசிரியருக்கு பரிசு தர வேண்டுமென எடுத்து சென்று, பயத்தால் தராமலே திரும்பும் தயக்கத்தை இன்னொரு கவிதை சொல்கிறது.
" எப்படி நடப்பது உங்கள் செருப்பணிந்து ? " என தங்கள் வழிக்கு வர சொல்லி வறுபுறுத்தும் குடும்பத்தாரை கவிதையில் கேட்கும் கேள்வி செம சூடு !
இப்புத்தகத்தின் சிறப்பே பதினெட்டு-இருபது வயது பெண்ணின் உணர்வுகளை, எண்ணங்களை, வலியை, சமூகத்தின் பார்வையை, வீட்டார் கேட்கும் கேள்விகளை ஒரு சித்திரம் போல் வரைந்து காட்டியிருப்பது தான்.
இத்தகைய நல்ல கவிஞர்களை உருவாக்கிய எம். சி. சி. யின் "வனம்" கவிதை பட்டறை உண்மையில் பாராட்ட பட வேண்டிய ஒன்று !
முடிக்கும் போது தோன்றும் கேள்வி: கல்பனா: இன்றைக்கு எங்கே இருக்கிறீர்கள்? என்ன செய்கிறீர்கள்? கவிதை மனது இன்னும் உங்களிடம் உள்ளதா? கணவன், குழந்தைகள், சமையல் இவற்றின் இடையே தொலைந்து போனதா?
****
கல்பனா எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. இன்னும் கவிதை மனதை அவர் தொலைக்காமல் இருந்தால் மகிழ்ச்சி.
வாய்ப்பு கிடைத்தால் இந்த புத்தகத்தை வாசியுங்கள். கவிதையை ரசிக்கும் எவருக்கும் இப்புத்தகம் பிடிக்கும் !
****
டிஸ்கி: நண்பர்களே, மக்கள் தொலை காட்சியின் காலை வணக்கம் பகுதியில் "புத்தகம் அறிமுகம்" என்கிற பக்கத்தில் பேசியுள்ளேன். தமிழின் சில சிறந்த புத்தகங்கள் குறித்து ஒவ்வொரு நாளும் காலை சரியாக 8.45 க்கு பத்து நிமிடம் இது ஒளிபரப்பாகும். வரும் செவ்வாய் அல்லது புதன் முதல் தினமும் காலை 8.45 க்கு மக்கள் தொலை காட்சியில் இது ஒளி பரப்பாகும். நிகழ்ச்சி துவங்கும் சரியான நாள் தெரிந்த பின் மீண்டும் பகிர்கிறேன். பார்க்க முயலுங்கள் நன்றி !
மரங்கள் சூழ்ந்த கிறித்துவ கல்லூரி வளாகம் |

மிக அருமையான அறிமுகம்./எப்படி நடப்பது உங்கள் செருப்பணிந்து ?/ தலைப்பே சொல்லி விடுகிறது உணர்வுகளை. நிகழ்ச்சி நேரம் அறிய வந்ததும் தெரிவியுங்கள்.
ReplyDeleteநிகழ்ச்சி நேரம் எப்போது என்று தெரியபடுத்துங்கள் மோகன் சார் அவசியம் பார்க்கிறேன்
ReplyDeleteவாழ்த்துகள்...
ReplyDeleteஉங்கள் படைப்புகள் அனைத்துமே அருமை , முழுமையாக வாசிக்க குடியவாறு சுருக்கமாக தெளிவாக சொல்லியிருகிறீர்கள்
ReplyDeleteவானம் கண்மூடியதால்
மேகம் இருட்டானதோ
மேகம் கைவிட்டதனால்
மழை நீர் நிலம் தொட்டதோ
பூமி அணைக்காததால்
வெள்ளம் நதி சென்றதோ
நதிகள் வளைவென்றதால் - அது
வழுக்கி கடல் சென்றதோ
கடலில் அலை செல்வதால் - என்
காதலும் அலைகின்றதோ
அலைகள் கரை தட்டுவதால் - நான்
கரையில் காத்து நிற்பதோ
நல்லதொரு அறிமுகத்திற்கு நன்றி..
ReplyDelete(த.ம. 5)
நல்ல அறிமுகம் மோகன் ஜீ!
ReplyDeleteநல்ல அறிமுகம். காதல் தோன்றும் வயதில் கவிதை(யும்) தோன்றும் வயது!மக்கள் தொலைக் காட்சியில் பேசுவதற்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
ReplyDeleteநல்லதொரு புத்தக அறிமுகம்..
ReplyDeleteதொலைக்காட்சியில் காணுகிறேன்..
நல்ல கவிதை நூலை மிக மிக அருமையாக
ReplyDeleteவிமர்சனம் செய்துள்ளீர்கள்
கடைசியில் எழுப்பிச் செல்லும்
வினாக்கள் மிகவும் அர்த்த முள்ளவைவகளாக
எனக்குப்பட்டது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 11
ReplyDeleteஒரு கவிஞரை நினைவு கூர்ந்திருப்பது அருமை. இப்படி எத்தனை பெண் கவிஞர்கள் மறைந்திருக்கிறார்களோ?
ReplyDeleteநிச்சயம் இதைப் படிப்பார்
கழுதைக்கும் ............சாரி கவிதைக்கும் நமக்கும் ரொம்ப தூரமுங்க சாமியோவ்............ அப்ப நான் வாரனுங்க...........
ReplyDeleteராமலக்ஷ்மி said...
ReplyDeleteமிக அருமையான அறிமுகம்./எப்படி நடப்பது உங்கள் செருப்பணிந்து ?/ தலைப்பே சொல்லி விடுகிறது உணர்வுகளை.
ஆம் சரியாய் சொன்னீர்கள் மிக அருமையான தலைப்பு அது
நன்றி சரவணன் சார் நிகழ்ச்சி வரும் செவ்வாய் முதல் காலை 8.45-க்கு ஒளிபரப்பாகிறது பாருங்கள் நன்றி
ReplyDeleteநன்றி கோவை நேரம்
ReplyDeleteநன்றி கவி அழகன் உங்கள் வார்த்தைகள் மிக மகிழ்ச்சி தருகிறது
ReplyDeleteதனபாலன்: நன்றி சார்
ReplyDeleteவரலாற்று சுவடுகள் நன்றி நண்பரே
ReplyDeleteநன்றி ஸ்ரீராம்
ReplyDeleteநன்றி மதுமதி; அவசியம் பாருங்கள்
ReplyDeleteமுரளி சார்: நன்றி மகிழ்ச்சி
ReplyDeleteநன்றி முரளி சார் உண்மை தான்
ReplyDeleteநித்ய அஜால் குஜாலானந்தா : கவிதை பிடிக்காத போதும் attendance போட்டமைக்கு மிக நன்றி மகிழ்ச்சி
ReplyDeleteநல்ல தகவல்
ReplyDeleteநன்றி,
http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
சிறப்பான கவிதை நூலை அறிமுகம் செய்தமைக்கு நன்றி!
ReplyDeleteஎனக்கு கவிதை எழுதுபவர்களை கண்டால் மிக பொறாமையாக (பெருமித) இருக்கும் சார்.. ஏன்ன எனக்கு கவிதை எழுத மருந்துக்கு கூட வராது... அழகான கவிதை தொகுப்பினை படைத்த கல்பனா விற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!! அதை அழகுற தொகுத்து கொடுத்த உங்களுக்கு நன்றிகள்!!!
ReplyDeleteஎனக்கு எப்பவுமே presentation -ல ரொம்ப நம்பிக்கை (கவனமா இருப்பேன்) உண்டு சார்... உள்ளே மேட்டர் எப்படி இருந்தாலும் வெளிதோற்றமே கவர்ந்து இழுத்து படிக்கச் செய்யணும்... அப்படி இருக்கு உங்கள் தொகுப்புகள்....
அந்த பெண்கவி பற்றி அறிய நேர்ந்தால் பகிரவும்!!
அருமையான அறிமுகம் தோழர்.
ReplyDeleteஉங்களது வலையை என் முகப்பில் வைத்திருக்கிறேன். இனி தொடர்ந்து பார்க்கலாம்.
நன்றி சுரேஷ் சார்
ReplyDeleteசமீரா: உங்கள் பின்னூட்டம் எப்போதும் ரசிக்கும் படி உள்ளது. கல்பனா பற்றி தகவல் தெரிந்தால் சொல்கிறேன்
ReplyDeleteமிக நன்றி எட்வின் சார். ..தங்கள் ப்ளாகில் வீடுதிரும்பலை இணைத்தமைக்கும்
ReplyDelete