Saturday, July 14, 2012

சுஜாதாவின் அன்புள்ள அப்பா

நாவல், சிறுகதை, கட்டுரை என எல்லா பக்கமும் சிக்சராய் அடித்தவர் சுஜாதா.

அவரது கட்டுரை தொகுப்புகளுள் ஒன்று அன்புள்ள அப்பா.

பல மனிதர்கள் பற்றி அவரது நினைவுகள் இந்த தொகுப்பில் பதிவாகி உள்ளது.குறிப்பாக அவர் தந்தை குறித்த நினைவுகள் நெகிழ்ச்சி


இறக்கும் நிலையில் இருக்கும் தனது தந்தையை சென்று சந்திக்கிறார் சுஜாதா. அவர் குறித்த நினைவுகள், அப்பா சீரியஸ் சீரியஸ் என்று அடிக்கடி சுஜாதாவை வரவழைத்தது ( என் அம்மாவுக்கும் சமீபத்தில் இதே நிலை வந்தது)... எல்லாம் சொல்லி சென்று கடைசி வரியில் " தன் தகனத்துக்கு பணம் அப்பா தயாராக வைத்திருந்தார் என சுஜாதா டைப் பஞ்ச உடன் தான் இந்த கட்டுரையும் முடிக்கிறார்

துக்க வீட்டு சம்பவங்களை சுஜாதாவின் வார்த்தைகளில் வாசியுங்கள் :

"பம்பாயிலிருந்து தம்பி வர காத்திருந்து மூன்று  பேரும் சுற்றி நின்று அவர் மார்பை கண்ணீரால் நனைத்தோம்

உறவுக்காரர்கள் வந்தார்கள். சினிமாவுக்கு போனார்கள். வாத்தியார் கருட புராணத்தின் பிரதியை என்னிடம் கொடுத்தார்.

சேலம் கடை தெருவில் பத்தாறு வேஷ்டிகளுக்கும் சொம்புகளுக்கும் அலைந்தோம். எல்லாரும் பந்தி பந்தியாக சாப்பிடுகிறோம். எட்டணா தட்சணை காசுக்கு வாசல் திண்ணையில் ஒன்பது பேர் காத்திருக்கிறார்கள். தொடர்கதையின் தலைப்பு கேட்டு எனக்கு டிரன்க் கால் வருகிறது "

மிக சுருக்கமாக ஆனால் அந்த சூழலை எப்படி கண் முன்னே கொண்டு வந்து விடுகிறார் பாருங்கள் !

தேர்தலில் ஒட்டு இயந்திரம் அறிமுக படுத்தியதில் சுஜாதாவின் பங்கு கணிசமானது. முதன் முதலாய் கேரளாவில் ஒரு கிராமத்தில் இதை அமல் படுத்திய போது நடந்த சம்பவங்களை தனக்கே உரித்தான பாணியில் சிறுகதை போல் சொல்லி செல்கிறார். செம சுவாரஸ்யம் !

விகடன் ஆசிரியர் பாலன் பற்றி சொல்லும் போது ஒரு முறை, சுஜாதா.சேலம் அண்ணன் வீட்டுக்கு சென்று இறங்கும்போது அங்கு அவருக்கு முன்னே ஒரு விகடன் நிருபர் அவரை பார்க்க காத்திருந்தாராம். "நான் சேலம் வருவது எனக்கே தெரியாதே ? விகடனுக்கு எப்படி தெரிந்தது?" என்கிறார் குறும்புடன் !

போலிஸ் அதிகாரி கார்த்திகேயன் பற்றி விவரிக்கும் சம்பவங்கள் சினிமா சம்பவங்கள் போலவே உள்ளன. குறிப்பாய் பல இடங்களுக்கு அவர் மாறு வேஷத்தில் சென்று குற்றங்களை கண்டு பிடிப்பதை விரிவாக சொல்லியுள்ளார் சுஜாதா. போலீஸ்காரர்களுக்கு வரும் கடிதங்களையும் பகிர்ந்துள்ளார்

சாவி இதழுக்கு ஒரு வாரம் ஆசிரியராய் இருந்தபோது சுஜாதாவுக்கு வந்த கடிதங்களில் இருந்து அவர் எடுத்து காட்டும் வரிகள் செம சிரிப்பு !

"கொஞ்சம் கதைகளில் கிராமத்து கிழவர்களும் அத்தைகளும் மறக்காமல் செத்து போகிறார்கள். ஆரம்ப எழுத்தாளர்களின் கதைகளில் கடைசி பாராவில் தூக்கத்தில் எழுந்து அவ்வளவும் கனவு தானா என்கிறார்கள். பெண்மணிகளின் கதைகளில் எல்லாம் ஆண்கள் காதலித்து ஏமாற்றுகிறார்கள். திருமதிகள் அனுப்பிய கதைகளில் பெண்கள் வரதட்சணை கொடுமையால் துன்புறுகிறார்கள்".

சுஜாதாவிடம் கேள்வி பதில்களும் உண்டு.

"படம் ஆரம்பித்ததும் சென்று சீட் தேடிய அனுபவம் உண்டா?"

"உண்டு நீல படங்களில்"

புத்தகத்தின் கடைசியில் கம்பியூட்டரை பற்றி என்ற அவரது நீண்ட கட்டுரை வாசிக்க பொறுமை இல்லை. அதை எழுதிய காலத்தில் நிச்சயம் புதிதாய் இருந்திருக்கலாம்.

அன்புள்ள அப்பா: சுஜாதா பிரியர்கள் நிச்சயம் ரசிப்பார்கள்

புத்தகம்: அன்புள்ள அப்பா
பதிப்பகம்:விசா பப்ளிகேஷன்ஸ்
விலை: 30
பக்கங்கள்: 96
###
வல்லமை ஜூலை 9, 2012  இதழில் வெளியான கட்டுரை 

35 comments:

  1. காலை வணக்கம்.புத்தகம் வாசிக்க ஆவலை தூண்டுகிறது..படிக்கணும்

    ReplyDelete
  2. இதுவரை படிக்காத புத்தகம்
    அருமையாக அறிமுகம் செய்துள்ளது
    படிக்கும் ஆவலைத் தூண்டிப்போகிறது
    மிக்க நன்றி

    ReplyDelete
  3. படித்திருக்கிறேன். சுவாரஸ்யமான கட்டுரைதான் அது.
    சுஜாதா மின் இதழில் எழுதிய கேள்வி பதில்கள் மூன்று பாகம் வாசித்திருக்கிறீர்களோ...?

    ReplyDelete
  4. புத்தக விமர்சனம் நன்று.

    ReplyDelete
  5. நல்ல அறிமுகம். மீண்டும் இந்நூலை வாசிக்கத் தூண்டியிருக்கிறீர்கள்.

    நீங்கள் சுஜாதாவுக்கென்றே ஸ்பெஷல் வலைப்பதிவு தொடங்கி, அதில் இந்த விமர்சனங்களை தொகுத்து வைக்கலாம். சுஜாதா வாசகர்களுக்கு உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  6. நல்ல அறிமுகம். மீண்டும் இந்நூலை வாசிக்கத் தூண்டியிருக்கிறீர்கள்.

    நீங்கள் சுஜாதாவுக்கென்றே ஸ்பெஷல் வலைப்பதிவு தொடங்கி, அதில் இந்த விமர்சனங்களை தொகுத்து வைக்கலாம். சுஜாதா வாசகர்களுக்கு உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  7. யுவகிருஷ்ணா: மிக நன்றி. சுஜாதா என்கிற தலைப்பின் கீழ் தான் அவர் அணைத்து புத்தகங்களும் இங்கு தொகுத்துள்ளேன். வேறு தனி ப்ளாக் மெயிண்டயின் செய்வது கடினம்.

    இதுவரை 15 சுஜாதா நூல்கள் இங்கு விமர்சனம் எழுதியுள்ளேன். ஐம்பது போல் சேர்ந்தால் தனி புத்தகமாக அவற்றை போடலாம் என்று கூட எண்ணம் :))

    ReplyDelete
  8. அருமை ஜீ :)

    ReplyDelete
  9. மோகன்... ஹெச்.எம்.டி தொழிற்சாலைக்கு சென்ற அவரது அனுபவம் இந்தப் புத்தகத்தில் நகைச்சுவை ததும்ப இருக்குமே.. அந்தக் கட்டுரையைக் குறிப்பிடலையே நீங்க... சுஜாதா அப்பா பற்றி எழுதிய கட்டுரையில் பாங்க் போன போது அவரது மீசை இல்லாத முகத்தைக் கண்டு சிரிப்பை அடக்க கஷ்டப்பட்டார்கள் என்று எழுதியிருப்பார் பாருங்கள்.. சான்ஸே இல்லை. சுஜாதான்னா சுஜாதாதான். நல்ல நினைவுகளை மீட்டெடுத்த உங்களுக்கு என் நன்றி.

    ReplyDelete
  10. நல்ல பகிர்வு. தலைவரின் ஒவ்வொரு புத்தகத்தினையும் ரசித்துப் படித்து பகிர்ந்து கொள்வதை தொடருங்கள்...

    த.ம. 7

    ReplyDelete
  11. அப்போது இருந்ததைவிட இப்போது அதிகமாக சுஜாதாவின் மீது மதிப்பும் மரியாதையும் உண்டாகிறது.

    ReplyDelete
  12. சுவாரஸ்யமா இருக்கும் போல...எடுத்து பத்திரமா வெச்சிருங்க..வரேன் :)

    ReplyDelete
  13. நன்றி கோவை நேரம் வாசியுங்கள்

    ReplyDelete
  14. ரமணி சார் : நன்றி மகிழ்ச்சி

    ReplyDelete
  15. ஸ்ரீராம். said...
    சுஜாதா மின் இதழில் எழுதிய கேள்வி பதில்கள் மூன்று பாகம் வாசித்திருக்கிறீர்களோ...?

    இல்லை ஸ்ரீராம். ஆங்காங்கு சிலர் அதனை கோட் செய்கிறார்கள் பார்க்கிறேன் அவ்வளவே

    ReplyDelete
  16. மாதேவி: நன்றிங்க

    ReplyDelete
  17. வரலாற்று சுவடுகள் நன்றி நண்பா

    ReplyDelete
  18. பாலகணேஷ் சார்: உண்மை தான் நன்றி

    ReplyDelete
  19. வெங்கட்: நன்றி நிச்சயம் செய்கிறேன்

    ReplyDelete
  20. முரளி சார்: மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  21. ரகு: உங்களுக்கு இல்லாமலா? நிச்சயம் எடுத்து வைக்கிறேன்

    ReplyDelete
  22. சார்,
    நான் "ராஜேஷ் குமார்", "சுபா" "ப.கோ.பி" இவங்க கிரைம் நாவல் மட்டும் தான் படிச்சிட்டு இருந்தேன்....இன்டர்நெட் பயன் படுத்த ஆரம்பிச்ச அப்புறமா தான் எனக்கு சுஜாதா சிறு கதைகளின் அறிமுகம் கிடைத்தது.....சுஜாதா சாரின் நிறைய சிறுகதைகள் தொகுப்பு படித்து உள்ளேன்.... அவர் வைக்கிற கடைசி பேரா ட்விஸ்ட் குடுக்கிற கிக் வேற எங்கேயும் கிடைக்காது... எப்ப மெட்ராஸ் வந்தாலும் சென்ட்ரல் பாகத்துல இருக்கிற பழைய புக் கடையில கண்டிப்பா அவர் புக் குறைஞ்சது நாளு வாங்கிருவேன்...இந்த புக் கூட ஒரு வாட்டி பார்த்துட்டு வாங்காம வந்துட்டேன்...இந்த கட்டுரையை படிச்ச அப்புறமா மிஸ் பண்ணிட்டேன்னு தோணுது... கண்டிப்பா அடுத்த வாட்டி போகும் போது வாங்கிற வேண்டியது தான்..

    ReplyDelete
  23. ithuvarai சுஜாதாவின் 53 நாவல்கள் வாசித்துளேன். இதில் ஏகப்பட்ட நாவல்கள் திருப்பி படித்தாலும் அலுக்காதவை. ஆனால் இந்த புத்தகம் மட்டும் இன்னும் வாசிக்கவில்லை.. இங்கு இலங்கையில் வாங்குவது என்றால் இந்தியாவில் 2 புத்தக விலை வரும்.. இந்தியா வந்த போதும வைப்பு கிடைக்கவில்லை.. உங்கள் பதிவு அருமை அண்ணா.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  24. விமர்சனத்துக்கு நன்றி மோகன்.
    ஹாரி பாட்ட்ர் சுஜாதாவின் 53 நாவல்கள் வாசித்து விட்டாரா? கொஞ்சம் பொறாமையாக உள்ளது நான் இன்னும் நிறைய வாசிக்கவேண்டும்

    ReplyDelete
  25. நல்ல பகிர்வு.

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. Anonymous7:31:00 PM

    Really appreciate your efforts in showcasing Sujatha’s writings...

    ReplyDelete
  28. ராஜ்: விரிவாக தங்கள் அனுபவம் பகிர்ந்தமைக்கு மிக நன்றி மகிழ்ச்சி

    ReplyDelete
  29. ஹாரி பாட்டர்: அடேங்கப்பா சுஜாதா நூல்கள் ஏராளம் வாசித்து விட்டீர்களா? மிக மகிழ்ச்சி நானும் அவரின் 90 % நூல்கள் படிச்சிருப்பேன்

    ReplyDelete
  30. நன்றி உமா மேடம்

    ReplyDelete
  31. நன்றி காஞ்சனா மேடம்

    ReplyDelete
  32. நன்றி பாலஹனுமான்

    ReplyDelete
  33. ஹாரி பாட்டர், உமா போன்ற அடுத்த தலைமுறையினரையும் ஈர்ப்பது தான் சுஜாதாவின் எழுத்தின் வீச்சை மேலும் எடுத்துரைக்கிறது. புத்தகவிமர்சனத்தைத் தொகுத்து வெளியிட இருக்கும் எண்ணம் ஈடேற வாழ்த்துகள்.

    ReplyDelete
  34. //வெங்கட ஸ்ரீநிவாசன் said...
    ஹாரி பாட்டர், உமா போன்ற அடுத்த தலைமுறையினரையும் ஈர்ப்பது தான் சுஜாதாவின் எழுத்தின் வீச்சை மேலும் எடுத்துரைக்கிறது. //

    உண்மைதான் சீனி நன்றி

    ReplyDelete
  35. Anonymous5:57:00 PM

    அவர் வீட்டு பலசரக்கு பேப்பர் கூட விடாமல் படித்திருக்கிறேன்...நீங்களும் தொடருங்கள்...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...