Thursday, December 13, 2012

பாண்டிச்சேரி பயணம்-புகைப்படங்கள்- டிரைலர்

பாண்டிச்சேரி சென்றது ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள ! சென்று வந்ததும் மனைவி கேட்டார் " கல்யாணத்துக்கு போன மாதிரி தெரியலியே ! பதிவு தேத்த போன மாதிரி இல்லே இருக்குது !"

எந்த பதிலும் சொல்லாமல் நான் பம்மியதிலேயே அது உண்மை என்று அவருக்கு புரியாதா என்ன?

கல்யாணத்தில் இருந்த மூன்று மணி நேரம் தவிர 2 நாளில் பாண்டிச்சேரியை அட்டகாசமாய் ரவுண்ட் அடிச்சாச்சு ! நான்கைந்து பதிவுகளாய் அடுத்த ஒரு வாரத்திற்குள் பாண்டிச்சேரி பயணக்கட்டுரை வெளியாகி நிறைவுறும். இப்பதிவு படங்கள் அதிகம் கொண்ட டிரைலர் மட்டும் !
நம்மை முக்கிய இடங்களுக்கு கூட்டி சென்ற பாண்டி பதிவர். யார்னு ஊகிக்க முடியுதா ?

பாண்டிச்சேரி பீச்சுன்னா தண்ணியில் காலே நனைக்க முடியாதுன்னு சொல்லுவாங்க..அதே பீச் மணலில் இந்த பசங்க வெளையாடுறாங்களே ..எப்படி?  

போட் ஹவுசில் உட்கார்ந்து நிறைய பேர் அப்படி என்ன வரையுறாங்க?

சாய்ந்து சாய்ந்து.. உன்னை பார்க்கும்போது அடடா !

பாண்டியின் மிகச்சிறந்த காபி ஷாப் ! சுவை இன்னும் நினைவில்  நிக்குது ! என்னா காப்பிடே !
சர்ச்சில் கொலு கொண்டாடுறாங்க !

பாண்டியின் மிக மிக முக்கிய இடம் இது ! விரிவான பல Special தகவல்கள் உங்களுக்காக !


இதுல அய்யாசாமி இருக்கறா பாருங்க. புது அனுபவம்னு போயிருக்க போறார் !

பிரென்ச்சு பாணி கட்டிடம் + தெரு

கம்யூனிஸ்ட்டுகள்   ஒரு மனிதருக்கு கல்லறை கட்டியுள்ளனர்; அப்படி என்ன  அவர் செய்தார்? ஜூலை 30-ல் என்ன  விசேஷம் தெரியுமா? 
புகழ் பெற்ற சண்டே மார்க்கெட்டில் ஒரு ரவுண்டு

நம்ம நண்பர் அஜித் ரசிகரா இருப்பாரோ?

யாருமே வழக்கமாய் செல்லாத அழகான இந்த இடம் உங்களுக்காக எக்ஸ்க்ளூசிவ்

இது போன்ற அழகிய சர்ச் இதுவரை கண்டதில்லை.  சர்ச்சின் முழு அழகையும் பிரதிபலிக்கும் நமது 4  நிமிட வீடியோவை தவற விடாதீர்கள் ! 

என்னா ஷூட்டிங் ஸ்பாட் இது ? இங்கு அய்யாசாமி ஏன் மூட்  அவுட் ஆனார்?
கோர்டுக்கு முன்னாடி வக்கீலு போட்டுட்டு நிக்குற ட்ரேஸ்ஸாய்யா  இது !

150 நாட்டு மக்கள் சேர்த்து துவக்கிய இடம். நாற்பது நாட்டு மக்கள் இன்றும் சேர்ந்து வாழும் இடம். அது எது ?
பிரென்ச்சு Embassy வெளியே....

என்ன இடம் இது? யார் இவர்கள்? பாண்டி சென்றாலும், நீங்கள் நிச்சயம் பார்க்க முடியாத இந்த இடத்துக்கு உங்களை கூட்டி செல்கிறோம் !

ஆஹா ! யானையின் காலருகே அமர்ந்து யானை பாகனிடம் பேட்டியா ? கிழிஞ்சுது கிருஷ்ணகிரி ! யானை கால் கொலுசையும், அந்த குழந்தைகளையும் கவனித்தீர்களா?
*********
விரிவான பயணக்கட்டுரை விரைவில் துவங்கும் !
*********
தொடர்புடைய பதிவுகள் :


பாண்டிச்சேரி பீச் ஒரு ஜாலி ரவுண்ட் அப்

தமிழக மின்வெட்டுக்கு பாண்டி ஆட்டோ காரர் சொன்ன தீர்வு

39 comments:

  1. புகைப்படங்கள் அருமை!

    ReplyDelete
  2. பாண்டி போயிட்டு எங்களோட கடை பத்தி எதுவும் இல்லாத தால் புறக்கணிக்கிறேன்...ஹி ஹி ஹி

    ReplyDelete
    Replies
    1. என்ன கடைங்க ஜீவா :))

      Delete
  3. வாவ்!!!! வெயிட்டிங்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க டீச்சர் நன்றி

      Delete
  4. Anonymous9:52:00 AM

    சொக்கா! ட்ரைலரே கண்ணைக் கட்டுதே... அப்ப மெயின் பிக்சர் ??

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாலஹனுமான்

      Delete
  5. பாண்டிச்சேரில காபியும் பார்லதான் குடிக்கிறாய்ங்களா! :)

    ReplyDelete
  6. \\பதிவு தேத்த போன மாதிரி இல்லே இருக்குது !\\ நான் கூட அந்தமான் போயிருந்தப்போ வீட்டிலுள்ளவர்களை விட்டுவிட்டு இயற்கையை படமெடுத்து தள்ளினேன். எங்களை விட உனக்கு பிளாக்கு தான் முக்கியமா போச்சான்னு ஏன் ஹவுஸ் பாஸ் கரித்துக் கொட்டினார்!!

    \\இதுல அய்யாசாமி இருக்கறா பாருங்க.\\ என்னது தண்ணீரில் மூழ்கி படமெடுக்கச் சொன்னீர்களா? சத்தியமா ஐயாசாமியைத் தெரியலையே?

    ReplyDelete
    Replies
    1. குடும்பத்தோட போனா பெரும்பாலும் வீட்டம்மா தான் படம், வீடியோ எடுப்பாங்க; நான் புதுசா தகவல் தெரிஞ்சுக்குவதில் தான் கவனமா இருப்பேன்; தனியா போனா படமும் நாம எடுக்க வேண்டியிருக்கு

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. படங்கள் சூப்பர்.. நாளைக்கே ரிலீஸ் பண்ணிடுங்க. நாம ஹிட் கொடுத்துடலாம். நாளைக்கு செம போட்டி கும்கி, நீதானே என் பொன்வசந்தம் மற்றும் மோகன்ஸ் பாண்டி பயணக்கட்டுரை ... ஐயம் வைட்டிங்...

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ! நன்றி ராகவாச்சாரி

      Delete
  9. ஆவலைத் தூண்டுகிறது டிரைலர். படங்கள் அருமை. காத்திருக்கிறோம் பதிவுகளுக்கு:)!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராமலட்சுமி

      Delete
  10. //நாளைக்கு செம போட்டி கும்கி, நீதானே என் பொன்வசந்தம் மற்றும் மோகன்ஸ் பாண்டி பயணக்கட்டுரை ...//

    இப்படி ஆகிப்போச்சே....!!!

    :-)))))

    ReplyDelete
    Replies
    1. ஹுசைனம்மா : இன்னிக்கு ஆதிமனிதன் பதிவு அனுப்பிட்டார் புது படங்கள் விமர்சனத்துடன் அவர் பதிவு மோதட்டும் :)

      Delete
  11. Replies
    1. நன்றி ஸ்ரீ விஜி

      Delete
  12. படங்களை பார்க்கும் போதே உங்கள் பயணக்கட்டுரை படிக்கும் ஆவல் வருகிறது.. சீக்கிரம் எழுதுங்கள் சார்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி சமீரா நன்றி

      Delete
  13. அந்த இடத்துக்கு ஒரு முறை நானும் போயிருக்கேன்.நிறைய படங்களோட படப்பிடிப்பு அங்கே நடந்திருக்கு.இப்போ அனுமதிக்குறாங்களா?

    ReplyDelete
    Replies
    1. படகில் போனபோது பார்த்ததோடு சரி கோகுல்; அந்த இடத்துக்கு அனுமதிக்கிறாங்களா என தெரியலை ; அடுத்த முறை வந்தால் உங்களை சந்திக்கிறேன்

      Delete
  14. "பாண்டி சென்றாலும் பார்க்க முடியாத இடம்"... எங்கோ ஒரு படத்தில் பார்த்த நினைவு.

    படங்கள் அருமையாக இருக்கின்றது ஆவலுடன்.....

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க மாதேவி

      Delete
  15. டிரைலர் பிரமாதம். மெயின் பிக்சருக்காக வெயிட்டிங்...:)

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரோஷினி அம்மா

      Delete
  16. Replies
    1. வெங்கட்: நன்றி

      Delete
  17. பெஸ்ட் கண்ணா பெஸ்ட்டு
    பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அஜீம் பாஷா; மகிழ்ச்சி

      Delete
  18. நன்றி ஸ்கூல் பையன்

    ReplyDelete
  19. தெளிவான படங்கள். முன்னோட்டங்கள் படிக்கும் ஆவலைத் தூண்டுகின்றன!

    ReplyDelete
  20. மூன்று வருடம் தொடர்ந்தும் .ஆறு வருடம் போய்வந்து பழக்கப்பட்ட ஊர் .ஆனால் தெரியாத இடம்தான் நீங்கள் போய் இருக்கிறீர்கள் .எங்களுக்காக சகோதரியிடம் திட்டு வாங்கியதற்கு பொறுத்துக்கொள்ளவும் .

    ReplyDelete
  21. நான் 6 வருடங்களாக அடிக்கடி போன் இடங்கள்!சில இடங்கள் புதிதாக உள்ளன! ஆவலோடு காத்திருக்கிறேன் கட்டுரைக்காக!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...