Wednesday, December 19, 2012

வானவில் - வண்ணாரபேட்டை- ஸ்னேஹா- ஹார்ட் அட்டாக்

21 டிசம்பரில் உலகம் அழியுமா?

21 டிசம்பரில் உலகம் அழிஞ்சுடுமென மிக பெரிய டிராமா ஒண்ணு ஓடிக்கிட்டு இருக்கு. நம்ம மக்களுக்கு அப்பப்போ இது மாதிரி சமாசாரம் வேணும். நாசா மிக தெளிவாக அப்படி ஏதும் நடக்காது; இது வீணான வதந்தி என கூறிவிட்டது. சில ஒளிப்படங்களையும் அது வெளியிட்டது. ஆனால் - வாழ்க்கை இன்னும் கொஞ்ச நாள் தான் ஜாலியாக இருங்கள் என SMS களும், மெயில்களும் வந்த வண்ணம் உள்ளன. "கொஞ்ச நாளில் உலகம் அழிய போவுது; இருக்கிற காசையெல்லாம் மொத்தமா செலவு பண்ணிடு !"

நண்பர் ஒருவர் இதுபற்றி சமீபத்தில் மிக அழகாக சொன்னார் " உலகம் அழிகிறது எனில் அதற்கான சிக்னல்கள் மிக சீக்கிரமே வர துவங்கும். அமில மழை பொழிவது, அனைவருக்கும் தோலில் rashes வருவது, தட்பவெப்பம் கண்ணா பின்னாவென மாறுவது.. இப்படி நிச்சயம் சிக்னல்கள் இருக்கும். இவை எதுவும் நடக்காமல் சடாரென ஒரே நாளில் உலகம் அழிந்து விடாது. சொல்ல போனால் உலகத்தை மனிதனாக அழித்தால் தான் உண்டு. நியூக்ளியர் குண்டு போன்றவை போட்டு அழிந்தால் ஒழிய உலகம் தானாக அழிய வாய்ப்பு இல்லை "

மனதை வருத்திய சம்பவம் - கும்பகோணம் தீ விபத்து வழக்கு

கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து நடந்து 8 ஆண்டுகள் ஆகிறது இன்னும் பள்ளியின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அன்று அதே பள்ளியில் படித்த சில குழந்தைகளை சமீபத்தில் சாட்சி கூண்டில் ஏற்றி, கொடுமையான கேள்விகள் கேட்டு துன்புறுத்தியுள்ளனர் வழக்கறிஞர்கள். ஒரு பெண்ணிடம் " நீ அந்த பள்ளியிலேயே படிக்க வில்லை; உன்னை மட்டும் காப்பாற்ற என்ன அவசியம்? நீ அப்படி என்ன முக்கியமானவள் ? "என்ற ரீதியிலெல்லாம் கேள்விகள் கேட்டு நீதிபதி முன்பு அழவிட்டுள்ளனர். தன் தரப்பை (உரிமையாளர்) காப்பாற்ற எந்த அளவும் கீழ்த்தரமாக இறங்குவதையே இது காட்டுகிறது.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பது ஏட்டளவில் தான் உள்ளது. நீதிமன்றங்களில் நீதி மிக அரிதாக தான் கிடைக்கிறது. நான் வழக்கறிஞராய் கோர்ட் செல்லாமைக்கு இது போன்ற சம்பவங்களே காரணம்.

ஒரு  தமிழனாக, வக்கீலாக - வழக்கறிஞர்கள் இந்த விஷயத்தில் மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொள்வதற்கு நிச்சயம் வருந்துகிறேன். :((

படித்ததில் பிடித்தது - நாகூர் ரூமியின் ஹார்ட் அட்டாக் அனுபவம்

ஆல்பா தியானம் உட்பட பல்வேறு புத்தகங்கள் எழுதிய நாகூர் ரூமி அவர்களின் வலைத்தளம் - பறவையின் தடங்கள். நாகூர் ரூமி அவர்களுக்கு சமீபத்தில் ஹார்ட் அட்டாக் வந்து அதிலிருந்து மீண்டுள்ளார்.

ஹார்ட் அட்டாக் மற்றும் அதற்கு தரப்படும் சிகிச்சை குறித்து இவ்வளவு விரிவாய் தமிழில் யாரும் எழுதி வாசித்ததில்லை. பெரிய பதிவு என்பதால், வாசிக்க அரை மணி நேரம் கூட ஆகலாம். நேரம் கிடைக்கும் போது அவசியம் இப்பதிவை வாசியுங்கள்.

அழகு கார்னர்

2000 ல் நடிக்க வந்தவர் - 2012 ல் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார். அம்மணியின் முதல் பட ஷூட்டிங், நான் வேலை பார்த்த அலுவலகத்துக்கு அடுத்துள்ள ராம் கல்யாண மண்டபத்தில் நடந்தது. சற்று நேரம் ஷூட்டிங் வேடிக்கை பார்க்க சென்ற நண்பர்கள் இவர் அழகில் அசந்து போய் விட்டோம். அன்னிக்கே இவர் பெரிய ஆளாக வருவார் என பட்சி சொன்னது.


அதன் பின் சென்னையில் சில திருமணங்களில் அவரை பார்த்துள்ளேன். கடைசியாய் சென்ற வருடம் ஒரு திருமணத்தில் பார்த்த போது ஏகமாய்  வயதாகி விட்டது அப்பட்டமாய் தெரிந்தது.

ஸ்னேஹா போல மனைவி வேணும் என்று சொன்ன நான்கைந்து பேரையாவது எனக்கு தெரியும்.

என் நண்பன் ஒருவன் கூட  ஸ்னேஹா மாதிரி மனைவி வேணும் என பல ஆண்டுகள் சொல்லி திரிந்து, பின் மாமா பெண்ணையே மணந்து கொண்டான் :)

சென்னை ஸ்பெஷல் - வண்ணாரபேட்டை துணிக் கடை அல்ல துணிக்கடல்

சென்னையில் இருப்போர் பெரும்பாலும் துணி வாங்க தி. நகரையே மொய்க்கிறார்கள். சிலர் மயிலாப்பூர், வேளச்சேரி ரீடெயில் அவுட்லெட்டுகள் என்று செல்கின்றனர் ஆனால் சென்னையின் பாரம்பரிய ஹோல்சேல் விலை துணி கடைகள் வண்ணாரபேட்டையில் உள்ளது. MC ரோடு எனப்படும் தெரு துணிக்கடைகளுக்கு மிக புகழ் பெற்றது. உதாரணமாய் ரசக்களி, அனார்கலி போன்ற வகைகள் இங்கு ஐநூறு ரூபாய் முதல் கிடைக்கும். (தி. நகரில் இவை சில பல ஆயிரத்தில் தான் துவங்கும்) வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை வட சென்னை பக்கம் சென்று வண்ணாரபேட்டையை ஒரு ரவுண்ட் அடியுங்கள் !

போஸ்டர் கார்னர்



தஞ்சை ஷார்ட் விசிட்

கடந்த ஞாயிறு/ திங்கள் அவசர வேலையாக தஞ்சை மற்றும் மன்னை சென்று வந்தேன். இம்முறையும் சில தனி பதிவுகள் கிடைத்தது (பிறகு பகிர்கிறேன்)

படம் வெளியாகி 40 நாள் ஆகியும் துப்பாக்கி தஞ்சையில் 2 தியேட்டரில் ( பிக் சினிமாஸ் / ஜூபிடர் ) ஓடுவது ஆச்சரியமாய் இருந்தது. விஜய் மற்றும் சூர்யாவுக்கான ஒப்பீடு மனதுக்குள் ஓடியது. பிரண்ட்ஸ் படம் வெளியானபோது விஜய் மார்க்கெட் உச்சத்தில் இருந்தது. அப்படத்தில் சூர்யா கிட்டத்தட்ட இரண்டாம் ஹீரோவாய் நடித்திருந்தார். அடுத்த சுற்றில் காக்க- காக்க, கஜினி, பேரழகன் என சூர்யா செமையாய் பிக் அப் ஆக, விஜய் பல தோல்வி படங்களை தந்து கொண்டிருந்தார்

மீண்டும் சக்கரம் சுழன்று விட்டது. இப்போது விஜய் காவலன், நண்பன், துப்பாக்கி என உச்சத்துக்கு போக, சூர்யாவோ ஏழாம் அறிவு & மாற்றானில் அடி வாங்கி கொண்டு அமர்ந்துள்ளார்

வாழ்க்கை சக்கரம் மேலும், கீழும் போவது ஒவ்வொருவருக்கும் நடக்கிறது இல்லையா?

18 comments:

  1. \\ஸ்னேஹா போல மனைவி வேணும் என்று சொன்ன நான்கைந்து பேரையாவது எனக்கு தெரியும்.\\ மோகன், நான் கூட ஸ்னேஹா ரசிகன் தான். எப்படித் தெரியுமா? ஒரு சாயலில் அவங்களைப் பார்ப்பதற்கு என்னோட உயிருக்கு உயிரான ஃபிரண்டு மாதிரியே இருப்பதை உணர்ந்து, அவரை ரசிக்க ஆரம்பித்தேன். என்னோட ஃபிரண்டு இப்போ பார்க்க முடியாத இடத்தில் இருப்பதால் ஸ்னேஹாவைப் பார்க்கும் போதெல்லாம் அந்த ஃபிரண்டை பார்த்த குதூகலம். அவங்க என்னோட ஃபிரண்டு மாதிரி இருப்பதால் ஒரு போதும் மனிவி ஸ்தானத்தில் என்னால் வைத்துப் பார்க்க முடியாது!! ஹா......... ஹா......... ஹா......... ஹா......... இன்னொரு இரகசியம், நாங்க ரெண்டு பெரும் ஃபிரண்டு என்றாலும் இருவரும் ஒருபோதும் பேசிக்கிட்டதே கிடையாது!! இதை யாராலும் நம்பவும் முடியாது!! ஹா......... ஹா......... ஹா......... ஹா.........

    \\என் நண்பன் ஒருவன் கூட ஸ்னேஹா மாதிரி மனைவி வேணும் என பல ஆண்டுகள் சொல்லி திரிந்து, பின் மாமா பெண்ணையே மணந்து கொண்டான் \\ தரையில விழுந்து புரண்டு சிரிச்சுகிட்டு இருக்கேன்........ ஹா..........ஹா..........ஹா..........ஹா...........

    ReplyDelete
    Replies
    1. ஸ்னேஹா மாதிரி மனைவி வேண்டும் என்ற வக்கீல் நண்பனை மீசைக்காரன் என்ற பட்ட பெயரில் அழைப்போம். இன்றும் தொடர்பில் உள்ளான்

      உங்க மனைவியே ப்ளாக் படிப்பாங்க இருந்தாலும் நீங்க தைரியமா சில விஷயம் பின்னூட்டத்தில் சொல்றீங்க ரைட்டு !

      Delete
  2. Poster Corner: சூப்பர்.
    [உண்மை!!]

    ReplyDelete
  3. Replies
    1. நன்றி சௌந்தர்

      Delete
  4. //நியூக்ளியர் குண்டு போன்றவை போட்டு அழிந்தால் ஒழிய உலகம் தானாக அழிய வாய்ப்பு இல்லை "//

    ஒரு பேப்பரில் உலகம் என்று பென்சிலில் எழுதி ரப்பரால் அழித்தால் அழியும்! :)))

    உலகம் அழியாது என்று சொல்பவர்களால், உலகம் அழியா விட்டால் சனிக்கிழமை காலை, 'நான் அப்போதே சொன்னேன் இல்லே' என்று பேச முடியும். அழிந்து விட்டால் அழிந்து விடும் என்று சொன்னவர்களால் அப்படிப் பெருமை அடித்துக் கொள்ள முடியாதே..!!!!

    இரண்டாவது செய்தி.. குற்றவாளிகள் வக்கீல்களின் வாதத்தால் தப்பித்தல் கலிகாலம், ஜனநாயகம்!

    //ஸ்னேஹா போல மனைவி வேணும் //

    ஸ்நேஹமாய் இருந்தால் போதாதா?!!

    தஞ்சையில் 'பிக் சினிமாஸ்' எங்கு உள்ளது? ஜூபிடரில் நான் படங்கள் பார்த்துள்ளேன்.

    விஜய் பற்றிச் சொன்னால் சூர்யா பற்றியோ, சூர்யா பற்றிச் சொன்னால் விஜய் பற்றியோ சொல்லியே ஆகா வேண்டுமோ?!!

    ReplyDelete
    Replies
    1. விரிவான கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்

      ராணி பாரடைஸ் தான் இப்போ பிக் சினிமாஸ் !

      Delete
  5. நல்ல பகிர்வு!சினேகா விசயம் உண்மைதான்! நாலு பேரு என்ன நிறைய பேரு அந்த மாதிரி ஆசைப்பட்டிருக்கிறார்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா நன்றி சுரேஷ்

      Delete
  6. என் நண்பன் ஒருவன் கூட ஸ்னேஹா மாதிரி மனைவி வேணும் என பல ஆண்டுகள் சொல்லி திரிந்து, பின் மாமா பெண்ணையே மணந்து கொண்டான் :)


    அருமை. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா நன்றி

      Delete
  7. Anonymous10:28:00 PM

    இந்த வார வானவில் கலர்ஃபுல்... வாழ்த்துக்கள்.

    >>என் நண்பன் ஒருவன் கூட ஸ்னேஹா மாதிரி மனைவி வேணும் என பல ஆண்டுகள் சொல்லி திரிந்து, பின் மாமா பெண்ணையே மணந்து கொண்டான்.

    தப்பித்தார் உங்கள் நண்பர் :-)

    அந்தக்காலத்தில் அரவிந்த்சாமி மாதிரிதான் கணவன் வேண்டும் என்று சொன்ன சில பெண்களை எனக்குத் தெரியும்.

    அந்த அரவிந்த்சாமி இப்போது மணிரத்னத்தின் கடல் படத்தில் wig வைத்துக் கொண்டு இளமையாகத் தோற்றமளிக்க முயற்சிக்கிறார் :-)

    http://www.facebook.com/photo.php?fbid=322071014573981&set=a.310535115727571.72177.310532092394540&type=1&theater

    >>கடைசியாய் சென்ற வருடம் ஒரு திருமணத்தில் பார்த்த போது ஏகமாய் வயதாகி விட்டது அப்பட்டமாய் தெரிந்தது.

    உண்மை தான்... அதனால்தான் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார் போலும் :-)

    ஹார்ட் அட்டாக் / வண்ணாரப்பேட்டை - உபயோகமான தகவல்...

    த.ம. 6

    ReplyDelete
    Replies
    1. //தப்பித்தார் உங்கள் நண்பர் :-)

      சுஜாதா ரசிகர் என்பதை வார்த்தை சிக்கனத்தில்/ பிரயோகத்தில் நிரூபிக்கிறீர்கள் !

      Delete
  8. சென்னை யானைக் கவுணியில் ஹோல்சேல் துணி கடைகள் நிறைய உண்டு; ஒரே வித்யாசம் துணிகளை எடைக்கு குடுப்பார்கர்கள்; அவ்வளவு மலிவு!

    மருத்துவக் கல்லூரி கல்லூரி மாணவர்களுக்கு மருத்துவத்தைத் தவிற மீதி எல்லா விஷயத்திலும் அறிவு அதிகம்..! ஹி! ஹி!

    சில சமயம் ஒரே மாதிரி துணியை 10 மீட்டார் துணியாக மட்டும் கிடைக்கும் (விலை மேலும் மலிவு). என்ன நான்கு ஐந்து நண்பர்கள் ஒரே மாதிரி சட்டை போடவேண்டும்.

    முக்கியமாக பெண்களுக்கு புடைவைகளும் எடையில் கிடைக்கும்.என் பேர் சொன்னா மேலும் மலிவு விலையில் கிடைக்கும். அங்கு விற்பது நாம் சொந்ததங்கள் தானே; ஆம்..நிம்பள்கிகள்...!

    ReplyDelete
    Replies
    1. அடடா ! மலரும் நினைவுகளுக்கும் பயனுள்ள தகவல்களுக்கு நன்றி நம்பள்கி

      Delete
  9. கலர்ஃபுல் வானவில்

    ReplyDelete
  10. suppose ellorum "sneka" "iswarya Rai' mathiri wife venumena aasapadumpothu, 'sneka' / 'iswaryarai' husbandsellam 'yarai mathiri' wife venumnu asai pattiruppanga? (atleast ippa aasa paduvanga?):)

    ReplyDelete
  11. கலர்ஃபுல் வானவில்.....

    ஸ்னேஹா... :)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...