காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா என இரண்டு குறும்பட இயக்குனர்கள் இவ்வருடம் ஹிட் படம் கொடுத்தனர். அவ்வரிசையில் இணையும் ஆசையில் இன்னொரு படம் !
குறும்படம் எடுத்து, பின் சினிமாவுக்கு வருவது நல்ல விஷயம் தான். குறும்படம் எடுப்பவர்களுக்கு ஒரு விஷயத்தை மனதில் தைக்கிற மாதிரி சுருங்க சொல்வது எப்படி எனத்தெரியும். ஆனால் இங்கு அது உல்ட்டாவாகி விட்டது. அரை மணி நேர குறும்படத்தை ரெண்டரை மணி நேர முழு நீள படமாக எடுக்க பார்த்தால்....... விளைவு ? இதோ இந்த படம் போல் இருக்கும் !
கதை
இரண்டு நாளில் கல்யாணத்தை வைத்து கொண்டு நண்பர்களுடன் கிரிக்கெட் ஆடுகிறார் பிரேம் (விஜய் சேதுபதி). கேட்ச் பிடிக்க போய் கீழே விழுந்து அடிபட, ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் ஆகிறது. (விழுந்து அடுத்த அஞ்சாவது நிமிடமே தனக்கு ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் என அவரே சொல்ல ஆரம்பிசிடுறார்). அடுத்த நாள் ரிசப்ஷன் அதற்கடுத்த நாள் கல்யாணம்- நண்பர்கள் நினைவு திரும்பாத ஹீரோவை வைத்து கொண்டு எப்படி சமாளித்தனர் - கல்யாணம் நடந்ததா- நினைவு திரும்பியதா என்பது க்ளைமாக்ஸ் !
முதலில் நல்ல விஷயங்களை பார்த்து விடுவோம்
வழக்கத்தை விட வித்யாசமான plot கதையில் இருக்கு. நாலு நண்பர்கள் கதை என்பது இன்று தியேட்டருக்கு வரும் இளைஞர்களை எளிதாக ஒன்ற வைக்கிறது.
துவக்க கிரிக்கெட் காட்சி அட்டகாசம். பல முறை அவுட் ஆகியும், நோ பால், Reached என்றெல்லாம் சொல்லி Bat -டை தராமல் மறுபடி மறுபடி விளையாடும் நண்பனை, படம் பார்க்கும் ஒவ்வொருத்தரும் நிஜ வாழ்வில் பார்த்திருப்பார்கள். டைரக்டர் நம்மை மாதிரியே கிரிக்கெட்பிரியர் என்பது தெளிவா அழகா தெரியுது.
விஜய் சேதுபதி தவிர மற்ற அனைவருமே புதியவர்கள் என்பதால் நிஜ சம்பவம் போல் நினைக்க வாய்ப்பு அதிகம் (பின் முழு நீள டிராமா ஆக்கி, அதை கெடுக்கின்றனர்)
படம் முழுதும் விரவி கிடக்கும் ஹியூமர் தான் மிக பெரிய பலம். சின்ன சின்ன விஷயத்திலும் சிரிக்க வைக்கிறார்
படம் முடியும் போது எந்த நண்பருக்கு அப்படி ஆனதோ அவரது கல்யாண போட்டோ காட்டி, பகவதி (பக்ஸ்) ஆக படத்தில் நடித்தவர் நிஜ நண்பர் என்று சொல்லி முடிக்கும் போது நெகிழ்வு (ஆனா அதுவரை பார்க்க, முதலில் தியேட்டரில் இருந்தோரில் பாதி தான் இருந்தனர்)
இனி எங்கு சொதப்பினார்கள் என்று பார்ப்போம்
இது நிஜத்தில் நடந்த சிறு சம்பவமாய் இருக்கலாம் ஆனால் படமாக எடுக்கையில் நிச்சயம் பல கற்பனை கலந்திருப்பார்கள். அப்படி செய்த போது, கல்யாணம் அடுத்த இரண்டு நாளில் என காட்டியது தான் பெரும் தவறு. இதனால் ஒவ்வொரு சிறு சம்பவத்தையும் இழு இழுன்னு இழுத்து நீட்டி முழக்குகிறார்கள் உதாரணத்துக்கு ரெண்டு:
ஹீரோ ஆஸ்பத்திரி கட்டிலில் படுத்திருக்கார். எதிரில் உள்ள இரு நர்ஸ்களில் ஒருவரை கூப்பிடுறார்; ரெண்டு நர்சும் நீ போ - நீ போ என சொல்லிக்கிட்டே போகாம இருக்காங்க அப்புறம் ஒருத்தர் போறார். இந்த சீன அதிகபட்சம் எவ்ளோ நேரம் எடுக்கலாம்? அஞ்சு நிமிஷம் ஆக்குறாங்க சார் !
இதே போல் தான் ரிசப்ஷனின் போது மேடையில் இருந்து ஒரு நண்பர் கீழே இருப்பவரை போன் செய்து மேலே வா என கூப்பிடுறார் ; வர மாட்டேன் வர மாட்டேன் என சொல்லிட்டு அப்புறம் அவர் மேடைக்கு வர்றதை அஞ்சு நிமிஷம் ஆக்குறாங்க (அடங்கப்பா ! சாமி !)
ஆஸ்பத்திரி, வீடு, கல்யாண மண்டபம் இப்படி சில இடங்களிலேயே கதையை நடத்த வேண்டிய இக்கட்டு இரண்டு நாள் கதை என்பதால் தான் வந்தது. இதுவே நாலு நாள் எனில் சம்பவங்களை இழுக்காமல், சுருக்கமா வச்சு இன்னும் வெவ்வேறு சீன் வச்சிருக்கலாம். அல்லது வழக்கமான விஷயம் தான் என்றாலும் இருவருக்கும் எப்படி காதல் வந்தது, காதலர் சண்டை என கொஞ்சம் பிலாஷ்பேக் காட்சிகள் வைத்திருக்கலாம்.
மண்டையில் அடிபட்டதில் ஹீரோ தான் பேசினதையை பேசுறார்ணா, படத்தில் எல்லாருமே திரும்ப திரும்ப பேசுறாங்க. அடுத்து என்ன பேச போறாங்க என்பதை படம் பார்க்கும் யாரும் சொல்லலாம் !
ஹீரோ அடிக்கடி நடந்ததை மறந்து "என்ன ஆச்சு ? " என பேச ஆரம்பித்து பேசிய சில வரிகளையே பேசுறார். அப்படி பேசிய சில வரியை எத்தனை முறை காட்டலாம்? பத்து? இருபது? அம்பது தடவையாவது பேசுன அஞ்சு வரியையே பேசுறார். சற்று அமைதி நிலவினாலே தியேட்டரில் என்ன ஆச்சு என அலறுகிறார்கள் அதே போல் அவர் என்ன ஆச்சு என பேச ஆரம்பிக்கிறார் (முடியலை)
ஹீரோயினை கெஸ்ட் ரோல் மாதிரி கடைசி அரை மணி நேரம் காட்டியது, விசு படம் மாதிரி டிராமா, கல்யாண வீட்டுக்கு செஞ்ச ஜோடனை & சேர்கள் முப்பது, நாப்பது மட்டுமே காட்டியதில் தெரியும் பட்ஜெட், மற்ற நண்பர்கள் பேரே ரொம்ப நேரம் உத்து பார்த்தால் தான் தெரிய, எல்லாரும் எப்போதும் பக்ஸ் பக்ஸ் என்று சொல்லி திரிவது இப்படி நிறைய சொல்லலாம்.
தியேட்டர் நொறுக்ஸ்
பாண்டிச்சேரி ராஜா ஏ. சி DTS -ல் பார்த்தேன். டிக்கெட் விலை -அங்கு 20,50 , 70, 100. நைட் ஷோ ஒன்பதரைக்கு ஆரம்பித்து பன்னிரண்டு மணிக்கு முடிச்சுடுறாங்க இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் நிறைய பேர் தியேட்டருக்கு வந்ததை பார்க்க முடிந்தது (சென்னையில் நைட் ஷோ போகும் குடும்பங்களை விட இங்கு நிறைய வர்றாங்க)
படம் துவங்கிய கொஞ்ச நேரம் நிறைய சிரிப்பு. செமையா என்ஜாய் பண்ணாங்க ஆனா அப்புறம் இடைவேளை வரை கதை எதுவும் நகரலை. இடைவேளையில் நிறைய கடுப்பான ரசிகர்களை காண முடிந்தது "ஏ.சி ஓவர் ! பயங்கரமா குளிருது " என ஒருத்தர் சொல்ல, "வந்ததுக்கு ஏ.சி மட்டுமாவது என்ஜாய் பண்ணுங்க என நிறைய வைக்கிறாங்க போல " என்றார் இன்னொருத்தர்.
ஒரு வெளிநாட்டு பெண் தன பாய் பிரன்ட் உடன் வந்திருந்தார். வெளியே போகணும் என அவர் கேட்க, அவர் பேசும் ஆங்கிலம் தியேட்டர் ஊழியர்களுக்கு புரியலை. பின் அவர்களிடம் பேசிட்டு "மறுபடி படம் போட்டவுடன் தான் கேட் ஓபன் செய்வார்கள்; அந்த கதவு அருகே சென்று நில்லுங்கள் " என அந்த பெண்மணியிடம் சொல்ல, அவர் அங்கு செல்லும்போது அந்த கதவு அருகே இருபது பேர் திறந்தவுடன் ஓட தயாராய் இருந்தார்கள் !
மறுபடி அந்த பெண்ணிடம் பேச (ஆணுக்கு ஆங்கிலம் தெரியலை பாஸ் !) " ரொம்ப பேசுறாங்க வீ டோன்ட் அண்டர்ஸ்டான்ட் அனிதிங் " என்றார். அவருக்கு கதையை சுருக்கமா சொன்னதும் " ஓ ! ரியல்லி ?" என சொல்லிட்டு தன் பாய் பிரண்டுக்கு அவர்கள் மொழியில் மொழி பெயர்க்க ஆரம்பித்தார் !
இரவு காட்சி - துவங்கிய போது 90 % புல். ஆனால் அதில் பாதி கூட்டம் இடைவேளைக்கு பின் இல்லை ! அதிலும் இன்டர்வெல் முடிந்ததும் அவர்கள் Promo சாங்க் என போட்ட மொக்கையில் தியேட்டர் தெறித்து கிளம்பி வெளியே ஓடியது !
ஓவர் ஆல் ரிவியூ
இயக்குனருக்கு நல்லா காமெடி வருது. ஆனா திரைக்கதை இப்படி ஜவ்வு மாதிரி இழுக்க கூடாது. சலூன் காட்சி, கிரிக்கெட் காட்சி மாதிரி நிறைய காமெடி காட்சிகளால் படத்தை நிறைதிருந்தா சூப்பர் ஹிட் ஆகிருக்கும்.
சென்னையில் படம் பார்த்தவர்கள் படம் நல்லாருக்குன்னு ரிவியூ எழுதுறாங்க ( A செண்டர் !) நான் B சென்டரில் படம் பார்த்து அவர்கள் மனநிலையை பிரதிபலிதிருக்கிறேன்; படம் சென்னையில் மட்டும் தான் ஓடும். B & C சென்டரில் தோல்விக்கு வாய்ப்பு அதிகம்.
இன்னும் பெட்டரா செய்திருக்கலாம் பாலாஜி தரணிதரன் ! "உங்ககிட்டே நாங்க இன்னும் எதிர்பாக்குறோம் :)

ஹா ஹா ஹா !!!
ReplyDeleteநான் காதலில் சொதப்புவது எப்படி என்ற படம் பார்த்துவிட்டு, இன்னும் அந்த படத்தின் கதை புரியாமல் குழம்பி கிடக்குறேன், இது வேறையா???
ம்ம்ம்ம்ம்ம்ம்.
வாங்க செம்மலை நன்றி
Deleteரொம்ப அருமையான அலசல்..படத்தை பற்றிய உங்க பார்வை நல்லாருக்கு..நன்றி.
ReplyDeletehttp://kumaran-filmthoughts.blogspot.com/2012/11/color-of-paradise-1999.html
நன்றி தவகுமரன் உங்கள் விமர்சனங்கள் உங்கள் ப்ளாகில் படிதேன் நன்றாய் இருந்தது தொடர்ந்து எழுதுங்கள்
Deleteபடத்தை பற்றிய வித்தியாச அலசல்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஷ்
Deleteசினிமா விமர்சனமா?!
ReplyDeleteஓக்கே ரைட்டு
வாங்க ராஜி நன்றி
Deleteகாதலில் சொதப்புவது எப்படி-படம் ஹிட்டா? சார் என்ன சொல்றீங்க?
ReplyDeleteகேபிள் மாதாந்திர ரிப்போர்ட்டில் அப்படி தான் சொன்ன நியாபகம் ; இல்லியா தோழரே படம் நல்லா தான் இருந்தது
Deleteநல்ல விமர்சனம். பார்க்க முயல்கிறேன் மோகன்.
ReplyDeleteநன்றி வெங்கட்
Deleteவித்தியாசமான முயற்சி ஒருமுறையாவது பார்க்க வேண்டும்.
ReplyDeleteஆம் இக்பால் செல்வன் நன்றி
Deletepondyla irukeengla?
ReplyDelete2 நாள் ஒரு கல்யாணத்துக்கு வந்து விட்டு திரும்பினேன் கோகுல் உங்கள் போன் நம்பர் இல்லை அதான் தொடர்பு கொள்ளலை
Deleteநல்லதொரு விமர்சனம்...
ReplyDeleteஎல்லோரும் நகைச்சுவை நன்றாக இருந்தது என்றார்கள் வாழ்க்கையில் மற்ற எல்லா சுவைகளும்தான் கிடைக்கிறதே நகைச்சுவையைத் தேடி (நம்பி) செல்லலாமில்லையா
ReplyDeleteவிமர்சனத்துக்கு நன்றி.
ReplyDelete