Wednesday, December 12, 2012

வானவில்- அம்மாவின் கைபேசி- த்ரிஷா- சென்னை கார்பரேஷன்

பார்த்த படம் - அம்மாவின் கைப்பேசி

தங்கர் பச்சானை எந்த விதத்தில் சேர்ப்பது என்று புரிய வில்லை. அழகி, சொல்ல மறந்த கதை போல நல்ல படம் எடுப்பவர்தான் தென்றல் மற்றும் அம்மாவின் கை பேசியும் எடுக்கிறார் ! டி . ராஜேந்தராய் மாறி, சினிமாவின் எல்லா துறையும் பார்க்கிறார்; நடிக்க வேறு செய்கிறார். ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக் மட்டுமல்ல படம் எந்த விதத்திலும் சிறு அதிர்வை கூட ஏற்படுத்தாமல் போகிறது. அழகி மற்றும் சொல்ல மறந்த கதை அழ வைத்தன என்றால் இது கிண்டல் செய்து சிரிக்கும் விதத்தில் தான் உள்ளது. கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு என எல்லா விதத்திலும் ஏமாற்றிய படம். சொல்ல சற்று வருத்தமாய் தான் இருக்கிறது. டிவியில் சில மாதங்கள் கழித்து போடும்போது கூட சானல் மாற்றி விடுவது உத்தமம்.

சென்னை கார்பரேஷன் - குறைகளை ஆன்லைனில் பதிவு செய்யலாம் !

சென்னை கார்பரேஷன்க்கு தனி இணைய தளம் உள்ளது. இதன் முக்கிய விஷயம் நமது குறைகளை இங்கு ஆன்லைனில் பதிவு செய்யலாம். எனது நண்பர் வழக்கறிஞர் பிரேம் குமார் பகிர்ந்தது இது :

பெருங்குடியில் எங்கள் தெருவில் குப்பை தொட்டி ஏதும் இல்லை. இதனை கார்பரேஷன் இணைய தளத்தில் குறையாக எழுதினேன். குறை பதிவு செய்த உடன் நமக்கு ஒரு மெயில் வருகிறது. அடுத்த இரு நாளில் எங்கள் தெருவில் குப்பை தொட்டி வைக்க பட்டதுடன், உங்கள் குறை நீக்கப்பட்டு விட்டது என்று மறுபடி மெயிலும் வருகிறது " என்றார் !

கேட்க நல்லா தான் இருக்கு. நீங்களும் இதே இணைய தளம் மூலம் உங்கள் குறைகளை பதிவு செய்து முயன்று பார்க்கலாம் !

அழகு கார்னர்

30 பிளஸ் வயது அம்மணிக்கு ! இன்னும் ஹீரோயினா நடிச்சிகிட்டு இருக்கார் ! குண்டா இல்லா விடில் வயதே தெரிவதில்லை பாருங்க !


பதிவர் பக்கம்

வல்லமை இதழின் ஆசிரியரும் பதிவருமான அண்ணா கண்ணன் அவர்கள் திருமண வரவேற்பு கடந்த ஞாயிறு சென்னையில் நடந்தது. இதில் வல்லமை குழுவினர் அனைவரையும் ஒன்றாய் பார்த்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. பதிவர் நண்பர்கள் ஆறரைக்கு துவங்கும் ரிசப்ஷனுக்கு நான்கு மணிக்கே வந்து ஒருவரோடு ஒருவர் கலந்து பேசி - ஒரு மினி பதிவர் சந்திப்பையே நிகழ்த்தி விட்டார்கள்.

வல்லமை பொறுப்பாசிரியர் பவளசங்கரி அவர்களின் கணவருடன் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தேன். மின்சார தட்டுப்பட்டால் ஈரோடு உள்ளிட்ட இடங்களில் பல நிறுவனங்களும் நான்கு மணி நேரம் மட்டுமே இயங்குவதாகவும், ஊழியர்களுக்கும் அந்த நான்கு மணி நேர ஊதியம் மட்டுமே வழங்குவதாகவும் வருத்ததோடு சொன்னார்.

மின் பிரச்சனை நிச்சயம் பாராளுமன்ற தேர்தலில் பெரிய அளவில் எதிரொலிக்கும். அ. தி. மு. க எந்த கூட்டணியில் இருந்தாலும், அக்கூட்டணிக்கு எதிராக மக்கள் வாக்களிப்பார்கள் என்றே தோன்றுகிறது


எங்க வீட்டு மீன்கள்

ஹவுஸ் பாஸ் மீன்கள் வளர்க்கிறார். வாங்கிய போது மூன்றே மீன்கள் தான். சில மாதங்களில் குடும்பம் பெரிதாகி சின்னதும் பெரியதுமாய் 23 மீன்கள் !

அல்லிச்செடி வளர்கிற அதே தொட்டியில் அதன் பாசிகளை சாப்பிட்டே வளர்கின்றன இம்மீன்கள் (பாசி தவிர மீனுக்கான உணவும் தருவதுண்டு !). தூரத்திலிருந்து பார்த்தால் மீன்கள் மேலேயே திரிவது தெரியும். அருகில் போனால் தண்ணீருக்குள் மூழ்கி விடும். அவ்வப்போது தண்ணீர் முழுதும் மாற்றி விட்டு வேறு தண்ணீர் வைக்கவேண்டும் அத்தகைய ஒரு சமயத்தில் எடுத்த படம் இது



போஸ்டர் கார்னர்

எவ்வளவு அழகான விஷயத்தை இது சொல்லிடுது ! முதல் இரண்டும் (Before getting it, When you have it) ஏற்கனவே உணர்ந்த ஒன்று தான். மூன்றாவதாய் சொல்வது நிச்சயம் யோசிக்க வைக்குது.



நம்மிடம் ஒரு பொருள்/ மனிதரின் அன்பு இருக்கும் போதே அதை மதிக்க பழக வேண்டும் என்று இதை பார்க்கும் போது தோன்றுகிறது !

எஸ். ரா வின் பேருரை அனுபவம்

உலக சினிமா குறித்து எஸ். ராவின் பேருரை கேட்க போகணும் என நினைத்து, நினைத்து இவ்வருடம் தான் சாத்தியமானது. அதுவும் சத்யஜித்ரே குறித்து அவர் பேசிய நிகழ்ச்சிக்கு மட்டுமே சென்றேன். இரண்டரை மணி நேரத்துக்கும் மேல் அருவி போல் பேசுகிறார். நடிகர் சிவகுமார் இலக்கிய உரை போல மிக சில குறிப்புகள் அடங்கிய தாளுடன் இருக்கிறது இந்த பேச்சு.

ஒவ்வொரு சிறந்த இயக்குனரின் நான்கைந்து மிக அற்புத படங்களை எடுத்து கொள்கிறார். ஒரு படத்தை பற்றி பேசினால் அதன் கதையை விரிவாக சொல்லி முடித்து விட்டு, சிறந்த காட்சிகளை விவரிக்கிறார். பின் அந்த காட்சிகளில் உள்ள குறியீடுகள், அந்த சம்பவங்கள் போலவே அவருக்கு வாழ்க்கையில் கிடைத்த அனுபவம் என சுவாரஸ்யமாய் உள்ளது பேச்சு ! அவர் பரிந்துரைக்கும் படங்களை தேடி தேடி பார்க்கும் ஆவல் உண்டாகிறது.

ஆயிரக்கணக்கில் அங்கிருந்த நண்பர்களில் நமக்கு தெரிந்த வலையுலக நண்பர்கள் நான்கைந்து பேர் தான். எஸ். ரா போன்ற நல்ல எழுத்தாளரை எவ்வளவு பேர் கொண்டாடுகிறார்கள்..அடுத்த வருடமாவது இன்னும் நிறைய நாட்கள் செல்லணும்..பார்க்கலாம் !
****
டிஸ்கி: இன்று நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள். இதையொட்டி, இன்று மாலை நம் ப்ளாகில் ஏற்கனவே வெளியான அவரது சிறந்த பத்து படங்கள் கட்டுரை மீள் பதிவாக வெளியாகும் !

17 comments:

  1. போஸ்டர் கார்னர்
    >>
    இது என் மருமக வரைந்ததா?!கையெழுத்து நல்லா இருக்கு.., இந்த ஆரணி அத்தை கையெழுத்தை விட:-(

    ReplyDelete
    Replies
    1. இணையத்தில் பார்த்த போஸ்ட்டர் தான் உங்கள் மருமகள் வரையலை (அவளும் நல்லா தான் வரைவா )

      Delete
  2. இன்னிக்கு திரிசாவா?!
    ஒக்கே ரைட்டு

    ReplyDelete
  3. எஸ்.ரா அவர்களின் கதைகள் படித்ததில்லை. நீங்கள் எழுதியதை படிக்கும் போது அவரின் படைப்புகள் படிக்க ஆவல் வருகிறது...
    போஸ்டர் கார்னர்- உண்மை சார்.. நாம் இழப்பது தான் அதிகம் எப்போதும்..

    ReplyDelete
    Replies
    1. எஸ். ரா அவசியம் வாசியுங்கள் சமீரா; வாழும் எழுத்தாளர்களில் தற்சமயம் எனக்கு பிடித்த எழுத்துக்களில் இவருடையதும் ஒன்று

      Delete
  4. Anonymous11:30:00 AM

    தங்கர் பச்சானை நினைத்து நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

    அவர் இங்கே கலிஃபோர்னியா வந்திருந்தார். NRI மக்களை வைத்து 'தொலைந்து போனவர்கள்' என்று ஒரு படம் எடுக்கப் போவதாக மிரட்டிச் சென்றார்.

    NRI - புது விளக்கம் - Not Required Indians :-)

    30+ வயது அம்மணிக்கு முகத்தில் முதிர்ச்சி தெரிகிறதே :-)

    போஸ்டர் கார்னர் மிக அருமை...

    மாலையில் வரும் உங்கள் மீள்-பதிவுக்காக waiting :-)

    த.ம.7

    http://www.thehindu.com/news/cities/chennai/thumbing-through-the-superstars-life/article4188864.ece

    ReplyDelete
    Replies
    1. NRI - புது விளக்கம் - Not Required Indians

      அட பாவி மனுஷா. இப்படியெல்லாம் சொல்றாரா :((
      //30+ வயது அம்மணிக்கு முகத்தில் முதிர்ச்சி தெரிகிறதே :-)

      எஸ் சார் !

      Delete
  5. //30 பிளஸ் வயது அம்மணிக்கு ! இன்னும் ஹீரோயினா நடிச்சிகிட்டு இருக்கார் ! //

    சௌகார் ஜானகி ஹீரோயினா அறிமுகமானப்போ, அவர் இரண்டு குழந்தைகளுக்குத் தாய் என்று கேள்வி. பத்மினி தில்லானாவில் நடித்தபோது அவர் மகனுக்கு ஏழு வயதாம்.

    அப்போ நடிப்பை மட்டும் ரசிச்சாங்க.

    //இன்று நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள். இதையொட்டி, இன்று மாலை நம் ப்ளாகில் ஏற்கனவே வெளியான அவரது சிறந்த பத்து படங்கள் கட்டுரை மீள் பதிவாக வெளியாகும்!//
    அபாய முன்னெச்சரிக்கை அறிவிப்புக்கு மிகமிக நன்றி. :-)

    ReplyDelete
    Replies
    1. வக்கீல் ஐயாவை டோட்டலா ஓட்டீட்டீங்க ; ரொம்ப கோவமா இருக்காரு. அடுத்த முறை ரொம்ப ஓட்டாதீங்க :))

      Delete
  6. அம்மாவின் கைபேசி நாவலை முன்பே படித்திருந்தேன், அது அற்புதமான படைப்பு அதையே படமாக எடுத்து தோல்வியடைந்து விட்டார் ....

    ReplyDelete
    Replies
    1. அப்படியா அரசன்? அந்த புத்தகம் படிக்கலையே ! இனி படிக்கிற மூட் வருவது கஷ்டம் தான்

      Delete
  7. போஸ்டர் கார்னர் அருமை..

    வானவில் அருமை...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரோஷினி அம்மா

      Delete
  8. சுத்தமா ஒண்ணுமே புரியலைங்க...

    முதல்லே ஒரு முப்பதே வயசான ஒரு இள வயதினள் படம்

    பிறகு மீன்கள் தண்ணித் தொட்டியிலே.

    பின்னாடி ஒரு க்ராஃப் .

    அதுலே ஆஃப்டர் லூசிங் இட் அப்படின்னு போட்டிருக்கீக...

    இட் அப்படின்னு நீங்க சொல்றது எது இரண்டுலே ?



    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. சார் வானவில் என எல்லாம் கலந்து புதனன்று பதிவு போடுறது வழக்கம் இன்னும் ஓரிரு வாரம் பார்த்தா உங்களுக்கு பழகிடும்னு நினைக்கிறேன்

      Delete
  9. Value of Something - SUPER
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
    Replies
    1. நன்றியும் மகிழ்ச்சியும் ஸ்ரீராம்

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...