பாண்டிச்சேரியின் பல முக்கிய இடங்கள் பீச்சுக்கு அருகிலேயே நடக்கிற தூரத்தில் தான் உள்ளது. அவற்றில் சில இட ங்கள் இப்பதிவில் பார்ப்போம் :
காந்தி சிலை
சென்னையில் பீச் அருகே இருப்பது போல இங்கும் ஒரு காந்தி சிலை உள்ளது. பாண்டியன் படத்தில் ரஜினி போலிஸ் அதிகாரி என்கிற சஸ்பென்ஸ் தெரிய வரும் காட்சியில் இந்த காந்தி சிலைக்கு அருகில் தான் ஒரு குற்றவாளியை பிடித்து இழுத்து ஸ்டைலாக நடந்து வருவதை காட்டுவார்கள்.
பீச்சில் ஆங்காங்கு கடைகள் வைக்க அனுமதிக்காமல், காந்தி சிலைக்கு பின்னே வரிசையாக கடைகள் வைக்க பெர்மிஷன் தந்துள்ளனர். இங்கு கடைத்தெரு போல இரண்டு பக்கமும் கடைகள் ! இதனால் பீச் முழுதும் கடைகள் வைக்காமல், குப்பை கூளம் சேராமல் குறிப்பிட்ட இடத்துடன் அவை முடிவுறுகிறது.
காந்தி சிலைக்கு நேர் எதிரே சாலையின் மறுபுறம் உள்ளது பெரிய நேரு சிலை ! காந்தியும் நேருவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்கிற மாதிரி அமைத்துள்ளனர். நேரு சிலை இருக்கிற இடம் - ஒரு மைதானம் போல் பெரிதாக உள்ளது. இங்கு பல கண்காட்சிகள்/ சிறப்பு நிகழ்சிகள் நடத்தப்படுகிறது நாங்கள் சென்றபோதும் கூட அப்படி ஒரு கண்காட்சி நடந்து கொண்டிருந்தது
காந்தி சிலைக்கு அருகிலேயே பார்க்க வேண்டிய மற்றொரு இடம்- முதல் உலக போரில் இறந்தோருக்காக பிரென்ச்சு காரர்கள் கட்டி வைத்துள்ள நினைவு சின்னம் + தூண். இதனை சுற்றி ஒரு அழகிய தோட்டம் வடிவமைத்துள்ளனர் பச்சை பசேல் என Greenary - மனதை அள்ளுகிறது.
ஒவ்வொரு வருடமும் இந்த நினைவு தினத்தன்று பிரான்சை சேர்ந்த சில அரசு பிரதிநிதிகள் இந்த இடத்துக்கு வந்து மரியாதை செலுத்துவது இன்றும் நடக்கிறதாம்
பாண்டியின் தலைமை செயலகம் பீச் எதிரிலேயே அமைந்துள்ளது. சுனாமியின் போது இங்கு பாதிப்பு ஏதும் வந்ததா என கேட்டதற்கு "சுண்ணாம்பாறு அருகேயும், அதற்கு போகும் வழியில் உப்பங்கழி என்று சொல்லப்படும் ஒரு சதுப்புநிலகாடு ஆற்றிலும் தண்ணீர் உள்ளே வெகுதூரம் வந்ததால் (இந்த ஆறுகள் தண்ணீரை இழுத்துக்கொண்டதால்) நகர்புறங்களிலும் மற்றும் பல இடங்களில் அவ்வளவாக பாதிப்பு இல்லை" என்றார் நண்பர்.
தலைமை செயலகம் அருகே எடுத்த வீடியோ :
20 வருடத்துக்கு முன் பீச்சில் எல்லா இடத்திலும் இறங்கி கால் நனைக்க முடியுமாம். மணலில் நடந்து போக முடியுமாம். காந்தி சிலை எதிரே பீச்சுக்குள் இறங்கி மணலில் நடக்க இருபது படிக்கட்டுகள் இருந்திருக்கிறது. போக போக கடல் நீர் உள்ளே வர, வர பீச்சில் இறங்குவது முடியாமல் போனது
கடல் இன்னும் இன்னும் உள்ளே வருவதாக சொல்கிறார்கள். அப்படியானால் இன்னும் 15 அடி உள்ளே வந்தால் தலைமை செயலகத்தையே தொட்டு விடுமே என்றால் " அப்படி வரும்போது பார்த்துக்கலாம் " என்கிறார்கள் !
இதே பீச் ரோடின் மறுமுனைக்கு சென்றால் (துறைமுகத்துக்கு அருகே) அங்கு மட்டும் சிறிது இடத்திற்கு மணல் தெரிகிறது. இறங்கி நீங்கள் மணலில் நிற்கலாம் கால் நனைக்கலாம். இது பலருக்கும் தெரியாது என்று நினைக்கிறேன். கடற்கரை அருகில் வசிக்கும் சிறுவர்கள் தான் இந்த இடத்தை அதிகம் பயன்படுத்துவது போல் தெரிகிறது. நாங்கள் சென்ற ஞாயிறு காலை பள்ளி மாணவ, மாணவிகள் ஜாலியாக இங்கு நனைந்து கொண்டு, குளித்து கொண்டு இருந்தனர்.
பீச்சுக்கு எதிரே உள்ள தெருக்களில் பல பிரெஞ்சு பாணி கட்டிடங்கள் !
இங்கு மட்டும் தெருக்களும் மிக அகலமாக இருப்பதுடன் கட்டிடங்களும் அற்புதமாக, அழகாக உள்ளன.
இந்த இடம் முழுமையே பிரெஞ்சு மக்கள் குடியிருந்த பகுதி. இங்கு இன்னும் நிறைய சைக்கிள் ரிக்ஷா புழங்குகிறது.
பிரெஞ்சு மக்கள் அதில் பயணம் செய்வதை மிக விரும்புவார்களாம் !
***********
பீச்சுக்கு மிக அருகில் உள்ள முக்கியமான பிற இடங்கள்: மணக்குள விநாயகர் மற்றும் அரவிந்தர் ஆஷ்ரமம். மேலும் பாண்டிச்சேரி மியூசியம், பாண்டிச்சேரி அரசின் Emblem -ஆக இருக்கும் ஆயி நினைவு தூண், அது இருக்கும் பெரிய பூங்கா ஆகியவையும் பீச்சில் இருந்து நடந்து போகிற தூரம் தான்.
இங்கு எடுத்த வீடியோ :
***********
துறைமுகம்
துறைமுகம் - உள்ளே பொதுவாய் யாரையும் தற்போது அனுமதிப்பதில்லை. காரணம் இங்கு காலி இடம் அதிகம் என்பதால் - ஒரு ஓரமாய் சென்று தண்ணி அடிக்க ஆரம்பித்து விடுவது தான். இருந்தாலும் நாங்கள் ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி பார்த்தோம்.
Port Outer Video
நடுவில் ஒரு பெரிய பாலம், இரு புறமும் கடற்கரை.. பாலத்தின் ஓரத்தில் சற்று மணல் மற்றும் கரை தெரிகிறது. பீச்சில் இங்கு தான் கால் நனைக்க முடியும்.
வழக்கமாய் செல்லும் பீச்சின் முடிவில் துறைமுகம் உள்ளது. அங்கு நின்று மக்கள் செல்லாத மறுபுர கடற்கரையை ரசித்து கொண்டிருந்தோம். லைட் ஹவுஸ் இங்கிருந்து கொஞ்ச தூரம் தான். பாலம் இருக்கிற இடத்தின் கீழே பாலத்தை தாங்கி நிற்கும் தூண்கள் (பீம்கள்) இருக்கும் அல்லவா? அந்த இடத்துக்கு கூட்டி போனார் வரதராஜலு.. ஆஹா ..அசந்து போனேன் ! ஆங்காங்கு சிமின்ட் கட்டை இருக்க கீழே சற்று தூரத்தில் கடலின் தண்ணீர் - ஏரியில் உள்ளது போல் தெரிகிறது.

நண்பர் --பதிவர் வரதராஜலு உடன் |

இன்னொரு புறம் பெரிய சைஸ் அலைகளை மிக அருகில் பார்க்க முடிகிறது. மிக சிலர் இங்கு அமர்ந்து மீன் பிடித்து கொண்டிருந்தனர் மனதை கொள்ளை கொண்ட இடம் இது.
Port Beam
இங்கு கூட்டி வந்தமைக்கு நண்பருக்கு மறுபடி மறுபடி நன்றி சொன்னேன்.
கொஞ்ச நேரம் கடலை ரசித்த படி பல விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தோம். பாய்மரக்கப்பலில் சில மீனவர்கள் கடலுக்குள் சென்று கொண்டிருந்தனர். அவற்றை காமிராவில் கொஞ்சம் பதிவு செய்தேன்.
துறைமுகத்தில் கப்பல்கள் எதுவும் காண முடியவில்லையே என கேட்க கடலில் மிக அதிக தூரம் ஆழம் இல்லையென்றும், அதனால் கப்பல்கள் தொலைவில் நிற்பதாகவும் சொன்னார். மேலும் இதே போல் இன்னொரு துறைமுகமும் சற்று தொலைவில் இருக்கிறதாம்.

****
அரை அல்லது ஒரு நாள் செலவிட்டால் பீச் அருகே உள்ள அனைத்து முக்கிய இடங்களையும் பார்த்து விடலாம் !
****
அண்மை பதிவுகள்:
கும்கி விமர்சனம்
நீதானே என் பொன் வசந்தம் விமர்சனம்

ஏழெட்டு வருடங்கள் முன் சென்றிருக்கிறேன். துறைமுகம் பார்க்கவில்லை. படங்களும் பகிர்வும் அருமை.
ReplyDeleteநன்றி ராமலட்சுமி
Deleteஅங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில் என்கலூருக்கும் வந்து இருக்கீங்க ரொம்ப நல்லது ஆரோவில் பொனீங்கலா?
ReplyDeleteநேரில் பார்த்ததுபோல் ஒரு அனுபவம் கிடைத்தது நன்றி நண்பரே!
ReplyDeleteநன்றி செம்மலை ஆகாஷ்
Deletethanks mohan, nice naration .
ReplyDeleteநன்றி அஜீம்பாஷா
Deleteபடங்கள் அருமை...
ReplyDeleteநன்றி ஸ்கூல் பையன்
Deleteவரும் பிப்ரவரி மாதம் அந்தமான் போகலாமுன்னு இருக்கோம், போகும் போது கப்பலில் வரும் போது விமானத்தில் அண்ணன் ஊர்சுற்றி மோகன் குமாரும் வந்தால் நன்றாக இருக்கும். என்ன சொல்றிங்க?
ReplyDeleteஅழைப்புக்கு நன்றி நண்பா ; வேலை பொறுத்து பார்க்கலாம். தெரியப்படுத்துங்கள் நன்றி
Deleteஅருமையான அனுபவ பகிர்வு! நன்றி!
ReplyDelete//காந்தியும் நேருவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்கிற மாதிரி//
ReplyDeleteகாந்தி-நேரு ஜெயில் ஜோக் கேள்விப் பட்டிருக்கீங்களோ?!!
சுவாரஸ்யம் - படங்கள் அருமை.
Thanks
Deleteஅந்த ஜோக் தெரியாது; பொதுவில் சொல்ல கூடாதோ ? :)
அன்பின் மோகன் குமார் - ஜாலி ரவுண்ட் அப் அருமை- தூள் கெளப்பி இருக்கீங்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteசீனா ஐயா மிக மகிழ்ச்சி நன்றி
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபடங்களும் பதிவும் நேரடியாகப் பார்ப்பதைப் போன்ற
ReplyDeleteஉணர்வைத் தந்தன,பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
ரமணி சார்: நீண்ட நாளுக்கு பின் உங்கள் வருகைக்கு மகிழ்ச்சி நன்றி
Deletetha.ma 10
ReplyDeleteசிறப்பான படங்கள், காணொளிகள் மற்றும் வர்ணனை. நானும் பார்த்து ரசித்த ஊர். துறைமுகத்திற்குள் சென்றதில்லை!
ReplyDeleteநன்றி வெங்கட்
Deleteபாண்டிச்சேரி ல பார்க்க என்ன இருக்குனு இவ்ளோ நாள் நினைச்சேன். ஆனால் நீங்க போட்டிருக்க பதிவு படங்கள் வீடியோ பாக்கும் போது பாண்டி போக ரொம்ப ஆசைய இருக்கு.. நன்றி சார்..
ReplyDeleteநன்றி சமீரா மகிழ்ச்சி. பாண்டியில் இன்னும் நிறைய இருக்கு விரைவில் அவையும் பதிவாக வருது :)
Deleteரொம்ப என்ஜாய் பண்ணியிருக்கிங்க. நேரமிருந்திருந்தால் இன்னும் சில இடங்களுக்கு உங்களை அழைத்துச் சென்றிருப்பேன்.
ReplyDeleteபரவாயில்லை. நெக்ஸ்ட் டைம் வரும்போது போகலாம். முக்கியமா லைட்ஹவுஸ், லக்ஷ்மி நரசிம்மர் கோயில், சுண்ணாம்பாறு மணல்திட்டு, ஆரோவில் பீச்.
நன்றி வரதராஜலு சார்.நீங்கள் சொன்ன நல்ல இடங்கள் மிஸ் செய்து விட்டேன்
Deleteநிச்சயம் ஒரு முறை குடும்பத்துடன் வரும் யோசனை உள்ளது. பார்க்கலாம்
நல்ல சுற்றுலா.. பாலத்தின் கீழ் நல்ல அருமையான இடமா இருக்கும் போலிருக்கே. கைக்கெட்டும் தூரத்தில் தண்ணீர், பிச்சுக்கிட்டுப்போகும் கடல்காத்து. ஆஹா!! நினைக்கவே ஜில்லுன்னு இருக்கு.
ReplyDelete