Wednesday, December 26, 2012

வானவில்: சச்சின்: ஷாலினி : Max கடை அக்கிரமம் !

பார்த்த படம் : டாடி கூல்

அப்பா குறித்த கதை என்பதாலும் மம்மூட்டி நடித்ததாலும் இந்த பட DVD வாங்கி வந்தேன்.

சி.ஐ. டி யாக இருக்கும் மம்மூட்டி வேலையில் அதிக சிரத்தை இன்றி பையனோடு விளையாடியவாறே இருக்கிறார். ஒரு குற்றவாளியை பிடிக்கும் நேரம் டிவியில் கிரிக்கெட் மேட்ச் பார்த்த படி தப்ப விட்டதால் சஸ்பெண்டு ஆகிறார். பின் இன்னொரு சாகசம் செய்து வேலையில் சேர, கொஞ்ச நாளில் அவரது மகன் கடத்தப்படுகிறார். மகனை எப்படி மீட்டார் கடத்தியது யார் என்பதை இறுதி பகுதிகள் சொல்கின்றன.

கதைக்களன் நன்றாயிருந்தாலும் எடுத்த விதத்தில் சொதப்பி விட்டனர். ஏனோ படத்தில் ஒரு விறுவிறுப்பே இல்லை. வில்லன் கூட்டம் முழுமையும் தமிழ் பேசும் ஆட்களாய் காட்டுவது உறுத்துகிறது.

சூப்பர் ஸ்டாராக இருந்த மம்மூட்டியின் சமீபத்து படங்கள் எதுவும் சொல்லி கொள்கிற மாதிரி இல்லாதது வருத்தமே !

அழகு கார்னர் 

ஷாலினி ! தமிழ் சினிமாவில் பிடித்த நடிகைகள் என்று பட்டியலிட்டால் அவசியம் இவர் பெயரையும் சொல்வேன் ! நடிப்பு, அழகு, டான்ஸ், புன்னகை என எல்லா விதத்திலும் கவர்ந்தவர். குறிப்பாக அவரது கண்கள்... மகிழ்ச்சி,
சோகம், பரிவு, காதல் அனைத்தையும் பேசி விடும். குழந்தை நட்சத்திரமாக ரொம்ப காலம் நடித்தாலும், ஹீரோயின் ஆனபின், மிக குறுகிய காலமே இருந்து, நல்லதொரு மனிதரை மணந்து சினிமாவிலிருந்து ஒதுங்கி விட்டார்.

அவரது கண்களையும் அழகையும் இந்த பாடலில் ரசியுங்கள் !

நமக்கு பிடித்த நடிகையும், மனைவிக்கு பிடித்த நடிகரும் இப்பாடலில் இருப்பதால், எப்போது டிவியில் போட்டாலும் இருவரும் சேர்ந்து ரசிக்கும் பாட்டு இது !



மேக்ஸ் கடையில் செய்யும் அக்கிரமம்

MAX -  நமக்கு பிடித்த கடை என்று அவ்வப்போது சொல்லி வந்துள்ளேன். ஆனால் சமீபமாய் அவர்கள் செய்யும் வியாபார தந்திரம் எரிச்சலூட்டுகிறது. எப்பவும் ரெண்டாயிரம் வாங்கினால் ஐநூறு ரூபாய் பரிசு கூப்பன் இலவசம் என்கிறார்கள். அது எப்படி வருஷம் முழுக்க இப்படி தர முடியுமோ தெரியலை. ஆயிரம் ரூபாவுக்கு பர்ச்சேஸ் செய்பவரை ரெண்டாயிரத்துக்கு இழுத்து விடும் ஐடியா தான் இது.

அதை விட கொடுமை.. ஐநூறுக்கு கிப்ட் கூப்பன் என்கிறார்களே .. அதுக்கு அவர்கள் சொல்லும் பொருள் மட்டுமே வாங்க முடியும். எல்லாவற்றையும் வாங்க முடியாது. மட்டமான ஷூ, அல்லது செருப்பை காட்டி இது ஆயிரம் ரூபாய். ஐநூறு உங்க கிப்ட் கூபனுக்கு கழிச்சுக்குறோம்.. மீதம் ஐநூறு குடுத்து இந்த ஷூவை வாங்கிக்கலாம் என்கிறார்கள். அட பாவிகளா ! இந்த ஷூ ஐநூறுக்கு கூட வொர்த் இல்லியே .. இதை போயி வாங்க சொல்றீங்களே என நொந்தவாறு திரும்பினோம். எப்டி எல்லாம் ஏமாத்துறாங்க !

போஸ்டர் கார்னர் 


நாகர்கோவில் -கன்யாகுமரி - திருநெல்வேலி-குற்றாலம் பயணம் 

ஐந்து நாள் பயணமாக குடும்பத்துடன் நாகர்கோவில் -கன்யாகுமரி - திருநெல்வேலி - குற்றாலம் சென்று வந்தோம். மிக இனிய பயணம். பல வித்தியாச இடங்கள். ஏகப்பட்ட தகவல்கள் - நிறைய புது மனிதர்கள். நண்பர்கள். ("ஆஹா அடுத்த பயண கட்டுரை ஆரம்பிச்சிடுவானே இந்த ஆளு " என்ற உங்க மைண்ட் வாய்ஸ் இங்கே கேட்குது... )

நண்பன் டாக்டர் வெங்கடப்பன்- டாக்டர் மல்லிகா தம்பதியினர் அன்பில் திக்கு முக்காடி விட்டோம். வேலைகளை எல்லாம் ஒதுக்கி விட்டு இரு டாக்டர்களும் மூன்று நாட்கள் எங்களுடன் பல இடங்கள் வந்து ஒவ்வொரு இடத்தின் சிறப்பையும் பொறுமையாய் கூறினர்.

 பதிவர் உணவு உலகம் அவர்களுடன் திருநெல்வேலியில் 
திருநெல்வேலியில் ரயில் ஏறும்போது பதிவர் உணவு உலகம் சாரை பார்த்தேன். இனிமையான, இளமையான மனிதர். அதிகம் பேச முடிய வில்லை. நிச்சயம் இனி தொடர்ந்து தொடர்பில் இருப்போம் என நினைக்கிறேன்.(புகைப்படம் அவர் Facebook -ல் பகிர்ந்தது)

நான் ஊரில் இல்லாத 5 நாளும், (Draft -ல் இருந்து) வீடுதிரும்பலில் பதிவுகள் வெளியிட்ட நண்பர் ரகுவுக்கும் ஸ்பெஷல் நன்றிகள் !

சச்சின்

சச்சின் ஒரு நாள் போட்டியில் 49 சதத்துடன் (ஒரு வழியாய்) ஓய்வு பெற்றுள்ளார். என்னை பொறுத்த வரை இது Too little and Too late !

இந்தியாவில் தொடர்ந்து நடந்த ஏழு டெஸ்ட் மேட்ச்களில் (மூன்று மேட்ச் நியூசிலாந்து என்கிற ஓட்டை டீமுடன் ; நான்கு சுமாரான இங்கிலாந்து டீமுடன்) - 13 இன்னிங்க்ஸ்களில் தலைவர் அடித்தது ஒரே ஒரு 70 + மட்டுமே ! மற்ற அனைத்து இன்னிங்க்ஸ்சிலும் வழிசலோ வழிசல் ! இப்படி ஏழு மேட்சில் ஒருவர் வழிந்தும் இன்னும் தொடர்ந்து டெஸ்ட் அணியில் அவர் இடம் பெற்றால் அதை விட அசிங்கம் வேறேதும் இல்லை. "No individual is bigger than the game " என்பார்கள். ஆனால் BCCI, " Sachin is bigger than the game" என்று நினைக்கிறது;

சச்சினின் தீவிர ரசிகனான என்னை போன்றோரே வெறுக்கும் நிலைக்கு பின் அவர் ரிட்டயர் ஆவது கொடுமை ! இப்படி 13 இன்னிங்க்ஸ் வழிந்ததை மறைக்க தான், "டெஸ்ட்டை விட்டு துரத்தாதீர்கள்" என ஒன் டே மேட்ச்சில் ரிட்டயர் ஆகியுள்ளார் போலும் :((

விரல்கள் நன்றாக இருக்கையில் வீணையை விற்று விடு என்று துவங்கும் அழகிய கவிதை ஒன்று இருக்கிறது. அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சச்சினுக்கு அனுப்பினால் நன்றாயிருக்கும்.

வருடாந்திர அலசல்கள் 

வீடுதிரும்பலில் இன்று மாலை முதல் துவங்குகிறது வருடாந்திர டாப் 10 அலசல்கள் ! வழக்கமாய் வீடுதிரும்பலில் வெளிவரும் டாப் 10 (சினிமா, பாடல்கள்,etc ) தவிர்த்து, பதிவர் நண்பர்கள் சிலர் பல்வேறு துறை குறித்தும் டாப் 10 எழுத உள்ளனர். வருட  முடிவுக்கு 5 நாட்களே உள்ள நிலையில்,  ஒரே நாளில் இரண்டு பதிவுகளும் கூட சில நேரம் வெளிவரலாம் ! பொருத்தருள்க ! 

20 comments:

  1. எழுதுங்க i am waiting

    ReplyDelete
    Replies
    1. சக்கர கட்டி : நன்றி ; எழுதிடுவோம்

      Delete
  2. ஷாலினி அருமையான நடிகைதான்.

    பயன தொடர் எப்போழுது?

    ReplyDelete
    Replies
    1. பாண்டி பயணகட்டுரையே இன்னும் முடியலை நண்பா; அது முடிந்ததும் ஆரம்பிச்சிடலாம்

      Delete
  3. அது ஒன்னும் இல்ல சார் சச்சின் ரன் அடிக்காமல் அவுட் ஆகும்போது ஓய்வு பெற்றால் ரசிகர்கள் மனதில் அதுவே பதிந்துவிடும்.பின் அவரை பற்றி பேசும்போதெல்லாம் கடைசி காலத்தில் சச்சின் சரியா ஆடவில்லை என்போம்.அதனால் ஏதாவது 100 அடித்து வெல்லும் போட்டியோடு கிளம்புவார் என்று நினைக்கிறன்.அதுவும் கூட விரைவிலேயே

    ReplyDelete
    Replies
    1. ம்ம். பாப்போம் சீன கிரியேட்டர்

      Delete
  4. ஒரே நாளில் இரண்டு பதிவுகளும் கூட சில நேரம் வெளிவரலாம் ! பொருத்தருள்க !

    போட்டுத்தாக்குங்க தோழரே..

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழரே நன்றி

      Delete
  5. டிரைனில் திரும்பும்போது யாரோ உங்களைக் கூப்பிட்டு வாழ்த்து சொன்னாங்களே? :)

    ReplyDelete
    Replies
    1. அப்து அண்ணே: ஏற்கனவே எல்லாத்தையும் நாம எழுதுறோம்னு நிறைய பேர் ஓட்டுறாங்க. அதான் எழுதலை :)

      நீங்க, கேபிள், ORB ராஜா , KRP செந்தில் எல்லாரும் நிகழ்ச்சி பார்த்துட்டு சேர்ந்து பேசியது ரொம்ப மகிழ்ச்சியாய் இருந்தது அண்ணே!

      Delete
  6. Waiting for the top 10 popular posts of the year!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆதி வந்துகிட்டே இருக்கு பாருங்க

      Delete
  7. ஹீரோயின் ஆனபின், மிக குறுகிய காலமே இருந்து, நல்லதொரு மனிதரை மணந்து சினிமாவிலிருந்து ஒதுங்கி விட்டார்.\\ She is intelligent.

    ReplyDelete
  8. சுவையான பகிர்வு! சச்சின் ரிடையர் சரிதான்! எனக்கும் பிடித்த நடிகைதான் ஷாலினி.நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுரேஷ் நன்றி

      Delete
  9. சாலினி பற்றி பதிவிட்டமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜி .நன்றி

      Delete
  10. தென் தமிழக பதிவுக்காக காத்திருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க சீக்கிரம் ஆரம்பிச்சிடுவோம் !

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...