Saturday, December 8, 2012

கும்கி பாடல்கள் - இமான் அடித்த சிக்ஸர்

மீபத்து இசை அமைப்பாளர்களில் இமான் நிச்சயம் கவர்கிறார். ஆரம்பத்தில் பெரிதாய் பேசப்படாத இவருக்கு மைனாவிலிருந்து தான் இரண்டாவது இன்னிங்க்ஸ் துவங்கியது என நினைக்கிறேன். பிரபுசாலமனுடன் இணைந்து இசை அமைக்கும் அவரது படங்கள் பெரும்பாலும் நன்கு வொர்க் அவுட் ஆகிறது. இருவரும் இணைந்து வழங்கும் சமீபத்திய வரவு கும்கி ! டிசம்பர் 14 -வெள்ளியன்று ரிலீசாகிறது.



ஒவ்வொரு பாட்டாய் அலசி விடுவோம். அய்யாசாமியின் கமன்ட்  இறுதியில் !   

நீ எப்போ புள்ள சொல்ல போறே

முதல் முறை கேட்கும் போதே பிடிக்கிற ஒரு பாட்டு. ஆண் குரலில் வரும் ஒரு தனிப் பாடல். காதலியுடன் உள்ள சண்டை- சிறு பிரிவில் பாடும் பாட்டாக உள்ளது. வழக்கமான இமான் டெக்னிக் தான். ஒரு கேட்சி டியூன். மிக சாதாரண, ஆனால் தெளிவாய் புரியும் வரிகள்.. மெட்டுகேற்ற இசை. நிச்சயம் உங்களையும் கவரும் !

இதே பாட்டு வெறும் இசை வடிவிலும் ஒரு முறை வருகிறது (தீம் மியூசிக் போல)

ஐய்யய்யோ ஆனந்தமே

இந்த பாட்டை முதல் முறை கேபிளுடன் அவர் காரில் வரும் போது கேட்டேன். கேபிள் "இது எந்த பாட்டின் காப்பி தெரியுமா? " என கேட்டு விட்டு, " பிரம்மா படத்தில் எங்கிருந்தோ இளம் குயிலின் பாட்டு இருக்கு இல்லியா அதோட காப்பி" என்றார். சில நாள் கழித்து வீட்டில் இதே பாட்டை கணினியில் கேட்டு கொண்டிருக்கும் போது என் பெண் வந்து " என்னப்பா இது " எங்கிருந்தோ இசை குயிலின் பாட்டு மாதிரியே இருக்கு !" என்றாள். அவளுக்கு எங்கிருந்தோ பாட்டு தெரிவதே எனக்கு ஆச்சரியமாய் இருந்தது ! ((நம்ம ரத்தம் என்பதை அப்பப்ப இந்த மாதிரி நேரத்தில் காட்டுவா)

எங்கிருந்தோ இசை குயிலின் சாயல் தெரிந்தால் கூட, இதுவும் ரசிக்கிற மாதிரி தான் இருக்கு. "எங்கிருந்தோ " வந்த புதிதில் எனக்கு ரொம்ப பிடித்த பாட்டு. அதுவும் கூட இப்பாடலை பிடிக்க ஒரு காரணமா தெரியலை

சமீபத்தில் நான் அடிக்கடி கேட்கும் பாட்டில் இதுவும் ஒன்று. ஆண் குரல் சற்று புதிதாய் வித்யாசமாய் இருக்கிறது.

பாட்டு முடியும் போது வரும் இசை அட்டகாசம் ! இறுதியில் வயலின் விளையாடும் போது ராஜா நினைவு வருவதை தடுக்க முடியவில்லை. செம பாட்டு !

இந்த பாட்டுக்கும் கூட கரோகே டிராக் ஒன்று (வரிகள் இல்லாமல்) இருக்கிறது. அது ஆரம்பத்தில் சாதரணமாய் துவங்கினாலும் போக போக மிக வசீகரிக்கிறது.

ஒண்ணும் புரியல

துவங்கும் முதல் சில நொடிகள் ராஜாவின் "என் இனிய பொன் நிலா"வை நினைவு படுத்துது. உடனே மாறி மைனாவின் " கையை புடி" பாடல் போல பயணிக்கிறது.

சரணத்தில் தான் பாடலின் ஒரிஜினாளிட்டி தெரிகிறது. மெட்டை லேசாக மாற்றி பீட்டை மாற்றும் போது டிபிகல் இமான் ! சரணம் பாதி தூரம் மிக மெதுவாக போகிறது; திடீரென படபடக்கிறது ! இன்னொரு தனி ஆண் குரல் பாட்டு.

நான்கைந்து முறை கேட்டபின் இந்த பாட்டும் ரொம்பவே பிடித்து போய் விட்டது !

சொய்  சொய் 

ஒரு பக்கா கிராமத்து டப்பாங்குத்து பாட்டு !

படத்தில் துணை/ கவர்ச்சி நடிகை போடும் குத்து டான்சாக இருக்கலாம்.



பெண் தன் காதலன் மீதுள்ள அன்பை சொல்லும் வரிகள் மிக எளிமையாக அழகாக வந்துள்ளது இப்பாடலில் !

சொல்லிட்டாளே அவ காதலை

பெண் காதல் சொன்ன பின் வரும் பாட்டு. ஏனோ இந்த பாட்டின் ஊடாக ஒரு சோகம் இருக்கு. (பிரபு சாலமன் எல்லா படமும் சோகமாக தானே முடிப்பார். இதிலும் தொடருமோ என்ற சந்தேகம் வர வைக்கிறது)

இந்த சீ. டி யில் ஆண் - பெண் பாடும் ஒரே டூயட் இது தான்.

" அம்மா - அப்பா சொன்னாங்க கேட்கலை; நீ சொன்ன பின்தான் கேட்டேன் " என்று காதலன் சொல்லும் அரிய தத்துவங்கள் நிறைந்திருந்தாலும், பாட்டு கேட்க நல்லா தான் இருக்கு. இந்த பாட்டை கேட்டவுடனே இமான் இசை என சொல்லிடலாம்.

எல்லா ஊரும் எங்களுக்கு சொந்த ஊருங்க

கும்கி பட ஹீரோ யானை பாகன் இல்லையா? அதனால் யானையை வைத்து ஒரு பாட்டாவது வைக்காமல் இருக்க முடியுமா? படத்தின் முதல் பாடலாக இது இருக்கலாம். பாட்டின் இடையே அடிக்கடி ஒரு இசை ஒலிக்கிறது. இந்த இசைக்கு யானை நடப்பதை காட்டுவார்கள் என நினைக்கிறேன்.

இமானும் பென்னி தாளும் பாடிய சின்ன பாட்டு இது. யானை பற்றியும், யானை பாகன் வாழ்க்கையையும் சொல்கிறது. பாட்டு ஜஸ்ட் ஓகே

அய்யாசாமியின் பைனல் பன்ச்:

ஆறில் மூணு பாட்டு எடுத்தவுடனே ஹிட். கொஞ்ச நாள் கேட்டா ஆறு பாட்டுமே நல்லாதான் இருக்கு. இப்படி எல்லா பாட்டும் நல்லா அமையிற ஆல்பம் சமீபத்தில் ரொம்ப கம்மி தான். கொஞ்சம் காப்பி, கொஞ்சம் ரீப்பீட்டு இருந்தாலும் கூட கும்கி பாடல்கள் தான், கூடவே ரிலீஸ் ஆகும் நீதானே என் பொன் வசந்தத்தை விட நல்லாருக்கு !

ராஜாவின்  முப்பதாண்டு  ரசிகனான நான் நீதானேயை விடுத்து, கும்கி பாட்டுகளை தான் கடந்த சில மாதங்களாக திரும்ப திரும்ப கேட்கிறேன். இதை விட வேறு proof வேண்டுமா?

17 comments:

  1. youtube has removed the songs due to copyright claims :(

    ReplyDelete
    Replies
    1. கவனித்தேன் நன்றி பாஸ்கரன் கண்ணுசாமி

      Delete
  2. இன்று காலை தான் இப்படத்தின் சில பாடல்களைக் கேட்டேன். நீங்கள் சொன்னது போல், சில முறை கேட்டால் பாடல்கள் பிடிக்கலாம்.

    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. ஆம் வெங்கட். பாடல்கள் ஏற்கனவே பெரிய ஹிட்

      Delete
  3. ஆமாம் உண்மைதானுங்கோ

    ReplyDelete
    Replies
    1. வாங்க சார் நன்றி

      Delete
  4. //, கூடவே ரிலீஸ் ஆகும் நீதானே என் பொன் வசந்தத்தை விட நல்லாருக்கு //

    உண்மை....இன்னும் கூட நீ.எ.பொ.வ.வில் இரண்டு மூன்று பாடல்களுக்கு மேல் வேறெதுவும் பிடிக்கவில்லை.

    சொய் சொய் - விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் பாடும் கிராமியப் பாடல்கள் மாதிரியே இருக்கு

    ReplyDelete
    Replies
    1. ரகு: ஆம் ரெண்டு படமும் ஒரே நாள் ரிலீஸ் ஆகுது. எது நல்லா ஓடுதுன்னு பாக்கலாம்

      Delete
  5. இது இமான் இன்னிங்க்ஸோ! அருமையான பகிர்வு!

    ReplyDelete
    Replies

    1. ஆம் . நன்றி சுரேஷ்

      Delete
  6. பாடகர்கள் பெயர், எழுதியவர்கள் பெயரையும் சேர்த்திருக்கலாம்! 'அய்யய்யோ' பாடல் மட்டும் முன்னர் கேட்டிருக்கிறேன். மற்ற பாடல்கள் இனிமேல்தான்!

    ReplyDelete
    Replies
    1. அடடா பாடகர்கள் பெயர் சேர்த்தி ருக்கலாம் தான். இனி நிச்சயம் செய்கிறேன்

      Delete
  7. " கொஞ்சம் காப்பி, கொஞ்சம் ரீப்பீட்டு இருந்தாலும் கூட ...". Isn't it sad that we have come to the state of celebrating the mediocre?. The standards have gone to such low levels/1. Very very sad. We should think twice about celebrating "reproduced" films/music, otherwise people with talent will go unidentified, much worse, the original effort will vanish, everybody will be so comfortable with rehashed films/music!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்லும் பார்வையும் சரியே ஆனால் ராஜா தொடங்கி ஹாரிஸ் வழியே ரகுமான் வரை காப்பி அடிக்காமல் இங்கு யாருமே இல்லையே ! அதிக ஒரிஜினல் என்றால் ராஜா மற்றும் ரகுமானை சொல்லலாமோ?

      Delete
  8. கேட்டால் தெரியும்.... கேட்டுப் பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரோஷினி அம்மா

      Delete
  9. Very good, looking forward to hear after reading ur blog.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...