ரஜினியின் பிறந்த நாளை ஒட்டி அவரது சிறந்த 10 படங்களை பட்டியிலிட்டுள்ளேன். நான் ரஜினி ரசிகன் அல்ல. ஆனால் நல்ல சினிமா யார் தந்தாலும் ரசிப்பவன். (கமலின் சிறந்த பத்து படங்கள் இங்கு உள்ளது !)
இதோ நான் ரசித்த ரஜினியின் 10 படங்கள் :
ஆறிலிருந்து அறுபது வரை
இன்றளவும் ரஜினியின் நடிப்பு திறமைக்கு பேர் சொல்லும் படம். சற்று சோகம் அதிகம் என்றாலும் தம்பி தங்கைக்காக வாழும் இத்தகைய அண்ணன்கள் அன்றைக்கு சற்று அதிகமாகவும் இன்றைக்கு சற்று குறைவாகவும் இருக்கவே செய்கின்றனர்.
இத்தகைய கேரக்டர்கள் நடிக்கும் போது ஓவர் ஆக்டிங் செய்ய நேரும். ஆனால் ரஜினி கொஞ்சம் கூட ஓவர் ஆக்டிங் இல்லாமல் நடித்திருந்தார். இளையராஜா இசையில் கண்மணியே காதல் என்பது கற்பனையோ பாடல் இன்னும் கேட்க மிக இனிமை.
முள்ளும் மலரும்
இது வரை வெளி வந்த தமிழ் படங்களில் விகடன் அறுபதுக்கும் மேல் மதிப்பெண் தந்த படங்கள் 10 கூட இருக்காது. அவற்றுள் இது ஒன்று. மகேந்திரனின் அற்புதமான இயக்கத்தில் வந்த படம்.
பாசமான அண்ணனாகவும் ஒரு சாதாரண தொழிலாளியாகவும் ரஜினி மிக அழகிய நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். செந்தாழம் பூவில், ராமன் ஆண்டாலும் என இன்றைக்கும் கேட்க இனிய பாடல்கள். ரஜினியின் தேர்ந்த நடிப்புக்கு உதாரணமாய் என்றும் இந்த படம் இருக்கும்.
தர்ம யுத்தம்
சாதாரண பழி வாங்கும் கதை தான். இந்த படம் எடுக்கும் போது ரஜினி பெரிய stress-ல் இருந்தார். ஆனால் படத்து கேரக்டர் அதே போல் அமையவே அவர் நடிப்பு பிரகாசித்தது. இளைய ராஜா இசையில் ஆகாய கங்கை, ஒரு தங்க ரதத்தில் ஆகிய பாடல்களை மறக்க முடியுமா?
மூன்று முகம்
மூன்று முகம் என்று சொல்வதை விட ஒரு முகம் என சொல்லி விடலாம். அந்த ஒரு முகம் அலெக்ஸ் பாண்டியனுடயது. என்ன ஸ்டைல், ஸ்பீட்..
படத்தில் இந்த கேரக்டர் அரை மணிக்கும் குறைவாய் வந்தாலும் இன்றைக்கும் மனதில் நிற்கும் படி மாறி போனது. (ரஜினி இவ்வாறு கொஞ்ச நேரமே வந்தும் கலக்கிய கேரக்டர்கள் நிறையவே உண்டு. வேட்டையன் முதல் சிவாஜி மொட்டை வரை யோசித்து பாருங்கள்).
தில்லு முல்லு
ரஜினியின் சிறந்த காமெடிக்கு ஒரு உதாரணம். என் நண்பர்களில் சிலர் இன்றும் இந்த படம் டிவி யில் வந்தால் முழுதும் பார்க்க உட்கார்ந்து விடுவர். தேங்காய் சீனிவாசன் - ரஜினி என்ற அபூர்வ காம்பினேஷனில் அசத்திய படம்.
ஸ்ரீ ராகவேந்திரர்
இது ரஜினிக்கே மிக பிடித்த படம். பெரும்பாலும் ஜனங்களுக்காக படம் செய்யும் ரஜினி தன் திருப்திக்கு எடுத்த படம்.
தனது வழக்கமான பணியை விடுத்து மிக மெதுவாக பேசி நடித்திருந்தார். படம் பெரிதாக ஓட வில்லை என்றாலும் ரஜினியின் சிறந்த படங்களில் இது நிச்சயம் இடம் பெறும்.
பாஷா
ரஜினியின் மிக பெரிய வெற்றி படங்களில் இதுவும் ஒன்று. படத்தில் காமெடி almost இல்லை. ஆனால் எந்த தொய்வும் இல்லாமல் படம் அட்டகாசமாய் இருந்தது. ஒரு வெற்றி பெற்ற படத்தில் வெயிட்டாக சில காட்சியாவது இருக்கும். இந்த படத்தில் ரஜினி தங்கை கல்லூரி அட்மிஷனுக்காக போகும் போது நடக்கும் காட்சி ஒரு உதாரணம். "எனக்கு இன்னொரு பேர் இருக்கு" என்றவுடன் சத்தமில்லாமல் கண்ணாடி அறைக்குள் நடக்கும் காட்சிகள் பார்க்கும் ரசிகரை விசிலடிக்க வைக்கும்.
இந்த படத்தின் வெற்றி விழாவில் ரஜினி பேசியது பெரும் அரசியலானது. ரஜினியின் all time hits என யார் பட்டியலிட்டாலும் இந்த படம் இல்லாமல் போகாது.
படையப்பா
எனக்கு ரொம்ப பிடித்த ரஜினி படத்தில் இது ரொம்ப மேலே வரும். சில படங்கள் நாம் பார்க்கும் போது எந்த நிலையில் உள்ளோம் என்பதை பொறுத்து பிடிக்கும் அல்லது பிடிக்காமல் போகும். இந்த படம் மற்றும் அதன் பாடல்கள் எனக்கு மிக பிடித்தது அன்றைக்கு எனக்கு இருந்த மன நிலையும் ஒரு காரணம்.
ஒரு பெண்ணை powerful- வில்லியாக காட்டியிருந்தது அசத்தலாக இருந்தது. சொல்ல போனால் ஹீரோயின் விட எல்லோரும் ரம்யா கிருஷ்ணன் பற்றி தான் பேசினார்கள். அந்த அளவு இன்னொரு கேரக்டருக்கு scope -கொடுத்தது நிச்சயம் ரஜினியின் பெருந்தன்மை தான்.
A super hit film with excellent songs.
சந்திரமுகி
ரீமேக் என்றாலும் அதனை விட அதிக வியாபாரமும் வெற்றியும் பெற்ற படம். சென்னையில் 700 நாட்கள் ஓடிய படம். ஜோதிகாவிற்கு நடிக்க செம வாய்ப்பு இருந்தும் ரஜினியும் புத்தி சாலிதனமான நடிப்பால் நம்மை கவர்ந்தார்.
படத்தின் கடைசி 45 நிமிடங்கள் நாங்கள் DVD-ல் பல முறை பார்த்து ரசித்துள்ளோம்.
எந்திரன்
தமிழின் மாபெரும் வெற்றி படங்களில் இது ஒன்று என நினைக்கிறேன். தனிப்பட்ட முறையில் முதல் பாதியில் அசந்து போன நான், இரண்டாம் பாதியில் வன்முறை, கார் வெடிப்புகளை பார்த்து வெறுத்து போனேன்.
சென்னையில் ஒரு வாரம் காலை ஏழு மணி காட்சி நடந்தது இந்த படத்துக்கு மட்டும் தான் (தவறானால் திருத்துங்கள் !). சிட்டி தன்னை தானே கொல்லும் நெகிழ்வான கிளைமாக்ஸ், அதில் சுஜாதா வசனம் கிளாஸ். ரஜினியின் மகத்தான உழைப்பு, ஷங்கரின் புத்திசாலித்தனம், ரகுமான் இசை என சொல்லி அடித்த கில்லி இந்த படம்.
*********
எனது பத்து முடிந்து விட்டது. ஏதாவது படம் விடு பட்டு விட்டது என எண்ணுகிறீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!! இதே படங்களில் உங்களுக்கு பிடித்த படம் இருந்தாலும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நமக்கு entertaining சினிமா தரும் ரஜினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

முள்ளும் மலரும் நேற்று தான் பாலிமரில் பார்த்தேன்.. நல்ல நடிகனை பிற்காலத்தில் ரேஸ்குதிரை போல ஆக்கியதாய் பட்டது.
ReplyDeleteஆனால் பாட்ஷா படையப்பா வரா விட்டால் ரஜினியை இப்படி கொண்டாடி இருப்போமா என்றும் சந்தேகமும் வந்து போனது..
உங்க ரேடிங் கலக்கல் தல..
Deleteவாங்க ஹாரி. மிகைப்படுத்தல் இல்லாத இயல்பான நடிப்புக்கு ரஜினி சொந்தக்காரர் ஆனால் ஸ்டைல் தான் அதிகம் ரசிக்கப்படுவதால் அந்த பக்கமே அதிகம் போய் விட்டார் மகேந்திரன் போன்றோர் இயக்கத்தில் அவர் நடிப்பு முழுதாய் தெரியும்
\\தனிப்பட்ட முறையில் முதல் பாதியில் அசந்து போன நான், \\தியேட்டரில் தனியா உட்கார்ந்து படத்தை பார்த்த பொது அசந்து தூங்கிட்டீங்க, அதானே??!!
ReplyDelete\\சிட்டி தன்னை தானே கொல்லும் நெகிழ்வான கிளைமாக்ஸ், \\ இதுக்கு பேரு dismantle, அதை திரும்ப assemble செய்தால் மீண்டும் வேலை செய்யும், அதனால் சாவு மனிதனுக்கு மட்டும்தான் மெசீனுக்கு அல்ல!!
Deleteவாங்க தாஸ் ரைட்டு :)
நல்ல பகிர்வு. எங்கேயோ கேட்ட குரல் எனக்குப் பிடித்த படங்களில் ஒன்று. ‘பட்டு வண்ணச் சேலைக்காரி’ பாட்டிற்காகவே சில முறை பார்த்திருக்கிறேன். :)
ReplyDeleteத.ம. 2
நன்றி வெங்கட் ; ரஜினி மிக அமைதியாய் எந்த ஸ்டைல் இன்றி நடித்த படம் அது
Deleteநல்ல தொகுப்பு. முள்ளும் மலரும் படம் நான் இன்னும் பார்த்ததில்லை.
ReplyDeleteதில்லு முல்லு எப்போது பார்த்தாலும் ரசிக்கலாம்....
ரோஷினி அம்மா : முள்ளும் மலரும் அடிக்கடி டிவி யில் போடுறாங்க பாருங்க
Deleteதம்பிக்கு எந்த ஊரு... நல்ல படம்.
ReplyDeleteதர்மத்தின் தலைவனை விட்டுடீங்களே ரஜினியின் நகைச்சுவை நடிப்புக்கு சிறந்த உதாரணம்
ReplyDeleteபிரேம் குமார்: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteசிவாஜி, நான் அடிமை இல்லை, வேலைக்காரன், தர்மத்தின் தலைவன், இன்னும் எவ்வளவோ...
ReplyDeleteவாங்க ஸ்கூல் பையன்: நன்றி
Delete
ReplyDeleteமுள்ளும் மலரும் !!
அடே !!
எப்படிங்க அது எனக்கு பிடிச்ச படம் அப்படின்னு உங்களுக்கு தெரிஞ்சுச்சு !!
நாகைலே அந்த படத்தை பார்த்தோமில்ல....
அப்பறம் ஓ ப்ரியா அப்படின்னு பாடுவாரே !!
அது என்ன படமுங்க ... ? சட்ட்னு நினைவுக்கு வரமாட்டேங்குது...
அதுவும் நல்லா இருந்துச்சு. அது ஒரு இருபத்தி அஞ்சு முப்பது வருசம் முன்னாடி இருக்குமோ ?
ஆனா ஒண்ணு மோஹன் சாரே !
ராகவேந்திரா ஒரு படம் எடுத்தாருல்லே !!
அது வந்த சமயம் எங்க பாத்தாலும் எங்க ஊருலே ராகவேந்தர் படம் தானுங்க...
நானும் ஒரு நாளைக்கு கோவிலுக்கு போயிட்டு வந்தப்போ
கடைலேந்து ராகவேந்திரர் படம் வாங்கிக்கொண்டு வந்தேனுங்களா ?
அதப் பாத்துட்டு எங்க வூட்டு அம்மா கேட்குது...
என்னங்க...இது.... ரஜினி படத்தை வாங்கிட்டு வந்திருக்கீக ..?
நான் அப்ப தான் பார்த்தேன்.
ஆமாம். நான் ராகவேந்திரர்னு நினைச்சுலே வாங்கிவந்தேன்.
அப்படின்னு தலைய சொரிஞ்சுகிட்டென். எங்க ரைட்டும் லெஃப்ட்டுமா வாங்கிக்கட்டிக்கணுமோன்னு பயம் வேற....
ஆனா வூட்டு அம்மா அன்னிக்கு சொன்னது இன்னிக்கும் நினைவு இருக்குதுங்க...
அந்த ராகவேந்திரர் தாங்க நம்ம ரஜினிக்குள்ள வந்து இந்த மாதிரி படம் பண்ணச்சொல்லிருக்காரு.
இன்னிக்கும் ரஜினியை ராகவேந்தர் ஆக த்தாங்க பார்க்க முடியுது....
சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com
சூரி ஐயா: அடடா பதிவு உங்களுக்கு பழைய நினைவுகள் பல கிளறி விட்டது போலும் !
Deleteஎன்னோட லிஷ்டில முரட்டுக்காளை இருக்கு.
ReplyDeleteநன்றி ஷண்முகா நம்ம பள்ளி காலத்தில் வந்த படம் அது
Deleteமுள்ளும் மலரும் படம் பார்த்ததில்லை. உங்க வரிசையில உள்ள எல்லா படங்களும் பிடிக்கும். ரஜினியோட இந்த படம்னு இல்ல எல்லா படமும் பிடிக்கும். பொழுது போறதே தெரியாது..
ReplyDeleteஏனோ முதல் ஐந்து படங்கள் தவிர மற்றதில் விருப்பம் இல்லை. எனக்கு 80-90 ரஜினி தான் பிடிக்கும்...
ReplyDelete16 வயதினிலே விட்டுடீங்களே.. சூப்பர் வில்லன் ரஜினி....
ReplyDeletebest fils- mullum malarum, thalpathi, 16 vayathinile, ilamai oonjal adukirathu, moonru mudichu, padaiyappa
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்ட படங்கள் பெரும்பாலும் பார்த்திருக்கின்றேன். படையப்பா பேசப்பட்டபடம்.
ReplyDeleteபில்லா, நெற்றிக்கண் , படிக்காதவன் அண்ணாமலை, தளபதி
ReplyDeleteஜானி எனக்கு பிடித்த படத்தில் ஒன்று..
ReplyDelete