Sunday, December 23, 2012

உணவகம் அறிமுகம்: தலப்பாக்கட்டி வேளச்சேரி

லப்பாக்கட்டு என்கிற பிரியாணி கடை ஒவ்வொரு ஏரியாவிலும் நான்கைந்து இருக்கிறது. இவையெல்லாம் தாங்களாகவே அந்த பெயர் வைத்து கொள்ளும் கடைகள் ! ஆனால் தலப்பாக்கட்டி என்கிற பெயரில் உள்ளது நிஜ தலப்பாக்கட்டி க்ரூப் தான். சென்னையில் எக்மோர், வேளச்சேரி உள்ளிட்ட சில இடங்களில் இவர்கள் கடை உள்ளது. மேலும் சில மால்களிலும் கூட இவர்கள் பிரான்ச் இருப்பதாக அறிகிறேன்.


முதலிலேயே ஒன்றை சொல்லி விடுகிறேன்: நண்பர் கேபிளுக்கு தலப்பாக்கட்டி பற்றி பெரிதாய் நல்ல அபிப்ராயம் இல்லை. போலவே நமது நண்பர் மெட்ராஸ்பவன் சிவாவும் போரூரில் உள்ள ஒரு mall-ல் இவர்கள் பிரியாணி சாப்பிட்டு விட்டு " மட்டன் பிரியாணி என்று சொல்லி போடுறாங்க. காசு மட்டும் நிறைய வாங்குறாங்க; ஆனா உள்ளே மட்டன் பீசை இல்லை" என்று வருத்தப்பட்டார்.

நான் சாப்பிட்டது மூன்று முறை - வேளச்சேரி - தலப்பாக்கட்டியில். மூன்று முறையும் எனக்கு பிடித்தே இருந்தது. ஒவ்வொரு பிரான்ச்சுக்கும் சுவை, அளவு எல்லாம் மாறுமா என்று தெரியலை. இங்கு பார்ப்பது வேளச்சேரி தலப்பாக்கட்டியில் சாப்பிட்ட அனுபவம் மட்டுமே !
**
முதல்முறை நண்பர் - ரகுவுடன் சென்று சாப்பிட்டேன். கடை காலை பதினோரு மணிக்கு துவக்குகிறார்கள். மதியம் ஒரு மணிக்கு மேல் வார நாளிலும் கூட்டம் அதிகம் வந்துடுது என்பதால் பன்னிரெண்டரைக்கே சென்று விட்டோம்.

இருவருக்கும் அரை பிளேட் சிக்கன் பிரியாணி மற்றும் சிக்கன் க்ரேவி ஆர்டர் செய்தோம்.

பிரியாணி வருவதற்குள் அங்குள்ள ambience வெகுவாக கவர்ந்தது. முதன் முதல் 1957-ல் திண்டுக்கல்லில் இவர்கள் கடை துவக்கியது , அப்போது எப்படி பிரியாணி தயாரித்தார்கள் போன்ற பழங்கால படங்கள் பார்க்க சுவாரஸ்யமாய் இருக்கிறது.

நாகசாமி நாயுடு என்பவர் 1957-ல் துவக்கிய ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டல். நாகசாமி நாயுடு எப்போதும் தலையை சுற்றி "தலைப்பா " (டர்பன்) கட்டியிருப்பாராம். அதனால் இவர் துவக்கிய ஹோட்டல் பெயரும் பிற்காலத்தில் தலப்பக்காட்டி பிரியாணி ஆனது. இவர்கள் பறக்கும் சிட்டு என்கிற சீராக சம்பா அரிசியை வைத்து மட்டுமே பிரியாணி தயார் செய்கிறார்கள் போன்ற விபரங்கள் அங்கள்ள படங்கள் மற்றும் வரிகள் மூலம் அறிய முடிகிறது.

பிரியாணி மற்றும் க்ரேவி வந்து சேர்ந்தது. பிரியாணிக்கு தொட்டு கொள்ள அருமையான குருமா வேறு அவர்கள் தருகிறார்கள். எனவே நாங்கள் க்ரேவி வாங்கியிருக்கவே வேண்டாம் !

நிச்சயம் மற்ற கடை பிரியாணிகளை விட (இவர்களின் பிற பிரான்ச்சும் சேர்த்து சொல்கிறேன்) இவர்கள் சுவை வித்யாசமாகவும், அருமையாகவும் இருக்கிறது. பிரியாணி வரும் முன் சுவாரஸ்யமாய் பேசி கொண்டிருந்த நானும் ரகுவும் பிரியாணி சாப்பிட ஆரம்பித்ததும் காரியத்தில் கண்ணாய் இருந்தோம்.

சிக்கன் பீஸ்கள் எதுவும் சக்கையாக இல்லாமல் அற்புதமாய் இருந்தது. அவர்கள் இலவசமாய் தரும் க்ரேவி கூட சூப்பர் !

அரை பிளேட் பிரியாணியில் வயிறு நிரம்பி விடுகிறது. அதற்கு மேல் எதுவும் சாப்பிட வில்லை.

வேளச்சேரியில் இருக்கும் பதிவர் ரகு இங்கு அடிக்கடி சாப்பிட ஒரே ஒரு காரணம் சொன்னார் : " மத்த இடத்தில் பிரியாணி சாப்பிட்டா நைட்டு வரை வயிறு மந்தமா இருக்கும். நைட்டும் ஒழுங்கா சாப்பிட முடியாது. இங்கு சாப்பிட்டா நைட்டு வழக்கம் போல பசிக்க ஆரம்பிச்சுடும். அத்தோட எப்பவும் வயிறை பதம் பாத்ததே இல்லை "

உண்மை தான் ! அதன் பின் குடும்பத்துடன் இரு முறை சென்றபோதும் அவர்களும் மிக என்ஜாய் செய்தனர். அம்முறை மட்டன் பிரியாணி டேஸ்ட் செய்தோம். நன்றாகவே இருந்தது.

சிற்சில விமர்சனங்கள் இருந்தாலும் மக்கள் வெளியில் காத்திருந்து இடம் காலியான பின் சாப்பிட்டு செல்கிறார்கள்.

தலப்பாக்கட்டி பிரியாணி- வேளச்சேரியில் ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள் !
***
மேலதிக தகவல்கள்:

முகவரி :
38/1 பை பாஸ் ரோடு
வேளச்சேரி, சென்னை-42

Wesbite: http://www.thalappakatti.com

பிரியாணி விலை:

சிக்கன் அரை பிளேட் :  Rs.142  (Parcel: Rs. 150)
மட்டன் அரை பிளேட் :  Rs.155  (Parcel: Rs.165)
 ******************
டிஸ்கி 

கார்பரேட் கல்ச்சர் - நமக்கு நல்லது செய்கிறதா? கெடுதல் செய்கிறதா? இந்த வார நீயா நானா தலைப்பு -

நானும் அலவலக நண்பர்கள் சிலரும் பேசியுள்ளோம் ; இன்று இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் வரவுள்ளது (ப்ரோமோ வர ஆரம்பித்து விட்டதாக உடன் கலந்து கொண்ட நண்பர் சொன்னார்; பயணத்தில் இருப்பதால் ப்ரோமோ இன்னும் நான் பார்க்கலை )

ஒவ்வொரு அணியிலும் பேசிய ஒருவருக்கு Best participant - என பரிசு கொடுப்பார்கள்; கார்பரேட் கல்ச்சர் - நல்லது செய்கிறது என்று பேசிய அணியில் அப்பரிசு எனக்கு கிடைத்தது

ஷூட்டிங் அன்று மாலை ஊருக்கு போக வேண்டிய அவசரம்; பாதியில் கிளம்ப பார்த்தேன். Break விடாததால் தொடர்ந்து இருக்க வேண்டியதானது ; சீக்கிரம் கிளம்பினால் கிப்ட் கிடைச்சிருக்காது ! கிப்ட் - டேபிள் டாப் வெட் கிரைண்டர் என்று சொன்ன நினைவு ; அட்டை தான் அப்போது தருவர் ; கிப்ட் பின் அனுப்புவர் போலும்; நிகழ்ச்சி முடிந்து அவசரமாய் ஓடியவனை சட்டையை பிடித்து அட்ரஸ் கொடுத்துட்டு போங்க என்றதால் பரிசை நிஜமா அனுப்புவாங்கன்னு நினைக்கிறேன் :)

எங்கள் அணியில் பேசியதை விட எதிர் அணியில் பலர் நன்கு பேசியுள்ளனர் நான்கைந்து பேர் கணினி துறைக்கு முழுக்கு போட்டு விட்டு விவசாயம் செய்கிறார்கள்; எதிர் அணியில் பலரும் 10 வருடம் வேலை பார்த்த பின் கார்பரேட் வேண்டாம் என்று உதறி தள்ளி தற்போது விவசாயம் உள்ளிட்ட வேறு தொழில் செய்கிறார்கள். குறிப்பாய் கெளதம் என்ற இளைஞர் கதை அவசியம் கேளுங்கள் ! Inspirational !!

இப்போல்லாம் ரெண்டு மணி நேரம் ( 9 to 11) நீயா நானா ஓட்டுறாங்க. முடிந்த வரை மட்டுமாவது பாருங்க;

இணையத்தில் நிகழ்ச்சி லிங்க் கிடைத்தால் பின் பகிர்கிறேன்

இன்று இரவு 9 மணி - விஜய் டிவி பாருங்கள் ! உங்கள் கருத்துகளை பின் சொல்லுங்கள் !

நன்றி !

27 comments:

  1. தலப்பாகட்டின்னா ஏதோ ஊர் பேருன்னு நினச்சேன்.
    நீயா நானாவில் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.இன்று அவசியம் பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. நீயா நானாவில் பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள். இன்று திருச்சி கிளம்புவதால் நிகழ்ச்சியைப் பார்க்க முடியாது மோகன். பிறகு யூவில் பகிர்ந்தால் சொல்லுங்கள்.

    ReplyDelete
  3. Velachery Thalapakkati Divine Divine

    ReplyDelete
  4. வேறு எந்த ரெஸ்டாரண்ட்டுக்கும் அடிக்கடி சென்றதில்லை. Basera மட்டும் இரண்டு முறை என்று நினைவு. தலப்பாகட்டி இதுவரை ஐந்தாறு தடவை போயிருக்கிறேன்.

    கேபிளும், சிவாவும் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. நான் சென்ற ஒவ்வொரு முறையும் satisfiedஆகத்தான் உணர்ந்தேன்.

    வேளச்சேரியில் காரைக்குடி, நளாஸ், ஸ்னோ பார்க் என்று நிறைய இருந்தாலும், தலப்பாகட்டி அளவு வேறெதுவும் ஈர்க்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. பசெரா சாப்பிட போயிட்டு சொத்த எழுதி வச்சிட்டு வந்தோம் சார்

      Delete
  5. நல்ல பிரியாணி கடை இருப்பதாக சொன்னமைக்கு நன்றி.உங்களுக்கு பரிசு கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள்.கண்டிப்பாய் இண்டேறு விஜய்டிவி பார்கிறேன்

    ReplyDelete
  6. நீயா? நானா?வில் பரிசு பெற்றாமைக்கு வாழ்த்துக்கள். எனக்கும், என் பிள்ளைகளுக்கும் பிரியாணின்னா ரொம்ப இஷ்டம். அரை பரிட்சை லீவு வேற விட்டுட்டாங்க. அதனால, இன்னிக்கே சகோதரர் வீட்டுக்கு வரதுக்காக மூட்டை முடிச்சுலாம் கட்டியாச்சு, தலைப்பாக்கட்டி பிரியாணியை பத்து நாளைக்கும் ஒரு கை பார்த்துட வேண்டியதுதான்.

    ReplyDelete
  7. தலைப்பாகட்டி பிரியாணி ஒரு குறிப்பிட்ட இடத்தில் மொத்தமாகத் தயாராகி எல்லாக் கிளைகளுக்கும் அனுப்பப் படுகிறது என்று அறிந்தேன். அவற்றைக் கொண்டு செல்லும் வண்டிகள் நிறைய ஊர் முழுதும் சுற்றி வந்ததைப் பார்த்துக் கேட்டபோது கேள்விப்பட்டது!

    இரவு விஜய் டிவி பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  8. நீயா நானாவில் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!! இந்தியாவுக்கு வந்தவுடன் தலப்பாக்கட்டியில் ஒருநாள் புகுந்து விளையாட வேண்டியதுதான்.

    விஜய் டிவிக்கு youtube-ல் சேனல் உள்ளது. அதில் அவர்களுடைய அனைத்து நிகழ்ச்சிகளும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது. நாங்கள் அதில்தான் பார்க்கிறோம்.... விளம்பர இடைவேளைகள் இல்லாமல் :). என்ன சற்று நேரம் காத்திருக்க வேண்டும்..

    விஜய் டிவி http://www.youtube.com/user/STARVIJAY

    நீயா நானா: http://www.youtube.com/show/neeyanaana/videos?view=0

    ReplyDelete
    Replies
    1. Thanks for the info. This is very useful Thanks

      Delete
  9. தலைபாக்கட்டி பிரியாணி மோசமான சுவை. அநியாய விலை.

    ReplyDelete
  10. சென்னைக்காரர்களுக்கு இந்த பிரியாணி பிடிக்காது.ஆனாலும் தலப்பாக்கட்டி வென்றது. தக்காளி சாதம் போல் இருக்கும் பிரியாணியும் பெரிய பெரிய மட்டன்,சிக்கன் பீஸ்களும் இருந்தால் தான் பிரியாணி என்று ஒத்துக் கொள்வார்கள்.இந்த பிரியாணி செய்ய பயன்படும் பட்டை பொடி உடலிற்கு எந்த தீங்கும் செய்யாதது. அதனால் தான் வயிறு பிரச்சனைகள் வருவதில்லை. கல்யாண மண்டபம் வாடகைக்கு எடுத்து பிரியாணி மொத்தமாய் செய்து அங்கிருந்து அவர்களின் கிளைகளுக்கு அனுப்புகிறார்கள். ஓனர் தனபாலன் என் கணவருக்கு தோஸ்த்.எங்கள் சொந்தமும் கூட.திண்டுக்கல் வேணு பிரியாணியும் எங்கள் சொந்தக்காரங்களோடது தான்.நாங்களும் திண்டுக்கல் பங்காரு பிரியாணி என்று ஒரு ஹோட்டல் உஸ்மான் ரோடில் இரண்டு வருடங்கள் நடத்தி பிறகு நல்ல இடம் கிடைக்காததால்(அந்த இடம் காம்பெளக்ஸ் ஆனதால்)வாடகை மிக ஜாஸ்தி என்பதாலும் எடுத்து விட்டோம். கட்டுப்படி ஆகலை. திண்டுக்கல்லில் பிரியாணி தயாரிப்பு ஒரே மாதிரி இருக்கும்.
    விலை ஜாஸ்தி ஏனெனில் வாடகை மிக ஜாஸ்தி.

    ReplyDelete
  11. மற்ற டூப்ளிகேட் தலப்பாக்கட்டு ஹோட்டல்கள் மீது அந்த பெயரை எடுக்கும் படி கேஸ் போட்டு அதில் ஜெயித்தும் விட்டார்கள்.ஆனால் அந்த ஹோட்டல்கள் பெயரை எடுக்கவேயில்லை. சிங்கப்பூரில் இருக்கும் தலப்பாக்கட்டும் டூப்ளிகேட் தான்.

    ReplyDelete
  12. Congratulations Mohan. I also conveyed my interest to participate in this particular show. But I was not selected I believe. Thanks for sharing. Will definitely watch today's show.

    ReplyDelete
  13. //forgot to login//

    Congratulations Mohan. I also conveyed my interest to participate in this particular show. But I was not selected I believe. Thanks for sharing. Will definitely watch today's show.

    ReplyDelete
  14. அண்ணன் மெட்ராஸ் "பீஸ் வைப்பதில் ஏமாற்றுகிறார்கள், ஏன் என்று கேட்டல் மட்டுமே மேலும் தருவதாக கூறினார்". கேபிள் பதிவு படிக்கவில்லை படிக்கவில்லை....

    இருந்தும் தலப்பாகட்டி சுவை எனக்கு பிடித்து இருந்தது, காரணம் நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலானா கடைகளில் சுவை இப்படித் தான் இருக்கும், அதுவும் காரணமாக இருக்கலாம்.....

    கரண்டி என்று தருகிறார்கள், அதுவும் எனக்கு பிடித்துள்ளது

    ReplyDelete
  15. கலக்கல், அருமையான ஒரு உணவகத்தை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி. நிறைய வகைகளை அற்புதமாக வகை வகைகளாக பிரித்து எழுதி இருக்கிறீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  16. //கிப்ட் - டேபிள் டாப் வெட் கிரைண்டர் என்று சொன்ன நினைவு ;//

    It is a T.V. not a table top vet grinder?!?!?!

    ReplyDelete
    Replies
    1. TV only. Did not notice it correctly as I was in a hurry to catch train on that day

      Delete
    2. //vet grinder//

      Sorry I mean wet grinder. You did your job well. Anyhow got a subject matter for my next post.

      Delete
  17. Anonymous11:36:00 PM

    வேளச்சேரி தலப்பாகட்டி சென்னையில் உள்ள மற்ற தலப்பாகட்டிகளை விட பெஸ்ட் என்று என் நண்பன் கூறியுள்ளான். இதுவரை போனதில்லை. மவுண்ட் ரோடு புஹாரி ஹோட்டல் தம் பிரியாணி தற்போதைக்கு என்னுடைய பேவரிட்!!

    ReplyDelete
  18. Anonymous11:42:00 PM

    //சீனு said.

    கரண்டி என்று தருகிறார்கள், அதுவும் எனக்கு பிடித்துள்ளது//

    டீசண்ட் ஆன ஹோட்டல்ல போயி கரண்டி திருடிட்டு அதுல என்ன பெருமை வேண்டி கெடக்கு???

    ReplyDelete
  19. முன்னொருக்கா இவர்களைப்பற்றி ஒரு பத்திரிகையில் வாசித்த நினைவு. செய்முறையையும் அதில் பகிர்ந்திருந்தார்கள்.

    நீயா... நானா நிகழ்ச்சிக்கு உங்க பதிவுல லிங்க் கொடுங்களேன்.

    ReplyDelete
  20. நேற்று உங்கள் நிகழ்ச்சி பார்க்கணும் நினைச்சேன் சார், ஆனால் அதே நேரத்தில் மக்கள் தொலைகாட்சியில் நேர்முகம் ஒளிபரப்பியதால் வீட்டில் எல்லோரும் அதை பார்த்திட்டு இருந்தாங்க! சீக்கிரம் லிங்க் கிடைச்ச அனுப்புங்க சார். Youtube ல யாவது பார்கிறேன்...

    ReplyDelete
  21. நீயா நானாவில் பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள். தெரியாததால் நேற்று பார்க்காமல் விட்டு விட்டேன்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...